Tuesday, October 5, 2010

நோபெல் பரிசு

எதவாது நல்ல பதிவா எழுதுங்க அப்படின்னு நிறைய பேரு சொல்லிகிட்டே இருகாங்க .நானும் என்னால் முடிந்த அளவு எழுதுகிறேன் அனாலும் எதாவது குறை வந்திருது .இப்பவும் அதே மாதிரி நல்ல பதிவு தாங்க இது தைரியமா எல்லோரும் வந்து படிக்கலாம் .படிச்சிட்டு எல்லோரும் கண்டிப்பாக vote போடுங்க .

மறுந்துராம எல்லோரும் கும்மி அடிக்கணும் அப்படி இருந்த இந்த பதிவா படிங்க ..........இல்லேன்னா படிக்காதீங்க எனக்கு என் தலைவர் சொன்னது ரொம்ப புடிக்கும்.சந்தோசம் தான் வாழ்க்கைங்க....................இந்த தத்துவத்தின் படி வாழுறேங்க .....நாளை என்ன நடுக்குமோ என்றே பயத்துடனே வாழுறேன்.........ஆனா இன்னைக்கு சந்தோசமாக இருக்கிறேன் .சரி விசயத்துக்கு வரேன் .........
                                          

 நோபெல் பரிசு இந்த தடவை சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த ராபர்ட் எட்வர்ட்ஸ் விஞ்ஞானிக்கு கொடுத்துருக்காங்க. மருத்துவத்துக்கான நோபெல் பரிசை பெறுகிறார் .இவர் இங்கிலாந்து நாட்டை சார்ந்தவர்.இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத கோடானு கோடி பேருக்கு இன்று பெரும் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது .இவர்களுக்கு சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த தந்தவர் .இன் விட்ரோ பெர்டிலைசேஷன் எனப்படும் IVF முறையைத்தான் சுருக்கமாக சோதனைக் குழாய் குழந்தை என்கிறோம் .

இதன் மூலம் 1978இல் முதல் சோதனை குழாய் பிறந்தது .இதன் மூலம் இன்று வரை 50லட்சத்திற்கும் மேலானவர்கள் பயன் அடைந்து உள்ளார்கள் .இன்று கோடானு கோடி பேருக்கு இந்த சோதனைக் குழாய் குழந்தை முறை மிகப் பெரிய வரப் பிரசாதமாக உள்ளது.தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் ராபர்ட். இவருக்கு 85 வயது ஆகிறது.

ராபர்ட்டுடன் சேர்ந்து இந்த ஆய்வு மற்றும் கருத்தரிப்பில் ஈடுபட்டவர் பாட்ரிக் ஸ்டெப்டோ. இவர் 1988ம் ஆண்டு இறந்து விட்டார்.பெண்ணின் கருமுட்டைகளை வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத்து, ஆணின் வி்ந்தனுவுடன் சேர்த்து அதை கருத்தரிக்கச் செய்து பின்னர் கருப்பைக்குள் செலுத்தும் முறைதான் இந்த சோதனைக் குழாய் குழந்தை முறை .

உலகம் முழுவதும் மலட்டுத்தன்மை, கருத்தரிக்க இயலாத சூழ்நிலை ஆகியவற்றால் பெரும் பாதிப்பை சந்திக்கும் மனித குலத்துக்கு மிகப் பெரிய வரப் பிரசாதம் ராபர்ட்டின் கண்டுபிடிப்பு என நோபல் பரிசுக் கமிட்டி தெரிவித்துள்ளது.


நம்ம தமிழ் நாட்டை பொறுத்தவரை டாக்டர் கமலா செல்வராஜ் அவர்கள் இதில் சிறந்து விளங்குகிறார் .இவர் நம்ம ஜெமினி கணேசன் பொண்ணு .இவர் மூலம் நிறைய பேர் இன்று குழந்தை பாக்கியம் பெற்று சந்தோசமாக வாழ்கின்றனர்.கமலா செல்வராஜை தொடர்ந்து நிறைய டாக்டர்கள்(யோவ் பன்னி குட்டி டாக்டர் தம்பி விஜய் இல்லை ) இப்பொழுது சோதனை குழாய் கருத்தரிப்பை செய்துவருகின்றனர்.


என்னை பொறுத்த வரை இவர்க்கு கொடுத்ததை நான் வரவேற்கிறேன். இதன் மூலன் எத்தனை விவாகரத்து நடைபெறாமல் தடுத்திருக்கிறார் என்பதை மட்டும் நான் யோசிக்கிறேன்.எத்தனை குடும்பத்தில் வாரிசுகள் வர காரணமாக இருந்திருக்கிறார்.


நல்ல காலம் அமைதிக்கான நோபெல் பரிசு ஒபாமாவுக்கு கொடுத்தது மாதிரி தவறான் ஒரு நபருக்கு கொடுக்க வில்லை என்பதில் ஒரு சந்தோசம்.

41 comments:

கருடன் said...

நல்ல பதிவு மக்க்கா

மங்குனி அமைச்சர் said...

மொதோ வெட்டு நான்தான்

மங்குனி அமைச்சர் said...

யோவ் சீரியஸ் ஆனா நல்ல பதிவு போட்டு கும்ம சொல்ற , இதுல கும்ம வேணாம் விடு

மங்குனி அமைச்சர் said...

வாடா போச்சே ?

இம்சைஅரசன் பாபு.. said...

//யோவ் சீரியஸ் ஆனா நல்ல பதிவு போட்டு கும்ம சொல்ற , இதுல கும்ம வேணாம் விடு //
யோவ் இதுல கும்முனா தான் நல்ல இருக்கும் ...........
சம்பதம் இல்லாம கும்மனும் .......................அதுக்கு தான் முதலையே சொல்லிருக்கேன் இல்ல ...........

dheva said...

இம்சை.....@ இது கண்ணீர் இல்ல ஆனந்த கண்ணீர்... நல்ல பயனுள்ள பதிவா இன்பர்மேட்டிவா.. இடைக்கு இடை போடுப்பா....!


ப்ளீஸ் தம்பிய டீசண்டா கும்முங்க.. இன்னிக்கு...!

கருடன் said...

@தேவா

//ப்ளீஸ் தம்பிய டீசண்டா கும்முங்க.. இன்னிக்கு...!//

டீசண்டானா?? கோட் சூட் எல்லாம் போட்டு வந்து கும்மனுமா??

கருடன் said...

@மங்கு

//மொதோ வெட்டு நான்தான்//

முடி வெட்டர பயலா நீ??

கருடன் said...

@மங்கு

//யோவ் சீரியஸ் ஆனா நல்ல பதிவு போட்டு கும்ம சொல்ற , இதுல கும்ம வேணாம் விடு//

அதுக்காக ஒரே நாள்ல இரண்டு பதிவு போட முடியுமா மங்கு??

கருடன் said...

@மங்கு

//வாடா போச்சே ?//

இங்கயே வெய்ட் பன்னு ஆம்மாவாசை ராத்திரி நில வந்ததும் திரும்பி வரும்...

இம்சைஅரசன் பாபு.. said...

//ப்ளீஸ் தம்பிய டீசண்டா கும்முங்க.. இன்னிக்கு//

"டீ"சண்டா கும்மாதீன்கப்பா குவாட்டர் செனட கும்முங்க ப்ப

வெங்கட் said...

// எதவாது நல்ல பதிவா எழுதுங்க அப்படின்னு
நிறைய பேரு சொல்லிகிட்டே இருகாங்க //

யாருப்பா சொன்னீங்க..?!!
யாருப்பா சொன்னீங்க..?!!

இப்படி எல்லாம் அபாண்டமா பேசுனா
அப்புறம் உங்க Blog பக்கமே வர
மாட்டோம்..

உங்க பேச்சு " கா "

வெங்கட் said...

// நல்ல காலம் அமைதிக்கான நோபெல் பரிசு
ஒபாமாவுக்கு கொடுத்தது மாதிரி தவறான்
ஒரு நபருக்கு கொடுக்க வில்லை //

தப்பா புரிஞ்சிக்கிட்டீங்களே..
அது அவருக்கு குடுத்தது எதுக்குன்னா..

இனிமே வாயை தொறந்து
தத்து பித்துன்னு., கண்டபடி உளறாம
" அமைதியா " இருக்கோணும்கறதுக்கு
கொடுத்த பரிசு அது..

சௌந்தர் said...

அட டா இது நல்ல விழிப்புணர்வு பதிவா இருக்கே யார் சொல்லி இப்படி மற்றம்

சௌந்தர் said...

இதன் மூலன் எத்தனை விவாகரத்து நடைபெறாமல் தடுத்திருக்கிறார் என்பதை மட்டும் நான் யோசிக்கிறேன்.எத்தனை குடும்பத்தில் வாரிசுகள் வர காரணமாக இருந்திருக்கிறார்./////

ரொம்ப நல்ல விசயம் மக்கா இது

செல்வா said...

//இதன் மூலம் 1978இல் முதல் சோதனை குழாய் பிறந்தது//
சோதனைக்குழாய் பிறந்ததா ..?

செல்வா said...

//"டீ"சண்டா கும்மாதீன்கப்பா குவாட்டர் செனட கும்முங்க ப்ப//
அட ச்சே . எல்லோரும் கேட்ட பசங்களா இருக்கீங்களே ..!! சரி சரி பதிவ பத்தி கமெண்ட் போட்டுட்டு வரேன் ..

செல்வா said...

நல்ல பதிவுங்க .. இதுக்கு மேல எனக்கு நல்ல கமெண்ட் போட தெரியாது ..!!

அருண் பிரசாத் said...

நல்ல பதிவு!

ஒரு கிசுகிசு: ஒரு தலைசிறந்த பிரபல நடிகருக்கும் இப்படிதான் குழந்தை பிறந்தது. நான் சென்னையில் பிரபல மருத்துவமனையில் பணியாற்றிய போது இது நடந்தது

செல்வா said...

///ஒரு கிசுகிசு: ஒரு தலைசிறந்த பிரபல நடிகருக்கும் இப்படிதான் குழந்தை பிறந்தது. நான் சென்னையில் பிரபல மருத்துவமனையில் பணியாற்றிய போது இது நடந்தது//

அட அட .. இப்படி எல்லாம் கிசு கிசுக்கறாங்க பாருங்க ..!!

Anonymous said...

ஆஹா என்ன ஒரு பொறுப்பு..கும்மி அடிக்க வருவாய்ங்களான்னு கவலையோடு இருக்கிற மாதிரி ஒரு ஃபோட்டோவை பார்த்தாதான் கடுப்பா இருக்கு..பதிவு கலக்கல்தான்

Anonymous said...

அருண்பிரசாத் யாரு அந்த நடிகரு..சொல்ல்யிருப்பா மண்டை வெடிச்சிரும் போலருக்கு....

Anonymous said...

நோபெல் பரிசு இந்த தடவை சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த ராபர்ட் எட்வர்ட்ஸ் விஞ்ஞானிக்கு கொடுத்துருக்காங்க//ஓ அவரு மூஞ்சியா இது நான் யாரோ மொக்க பதிவை போட்ட பதிவரோ ந்னு நினைச்சேன்

செல்வா said...

///அருண்பிரசாத் யாரு அந்த நடிகரு..சொல்ல்யிருப்பா மண்டை வெடிச்சிரும் போலருக்கு...//

வெடிச்சிரும் போல இருந்த கொஞ்சம் அப்படி போயிருங்க .. ஏன்னா வெடிக்கும் போது களிமண் பட்டு எங்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடதுள்ள .. ( இப்படி கமெண்ட் போட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்கல்ல சதீஸ் அண்ணா )

Anonymous said...

உலகம் முழுவதும் மலட்டுத்தன்மை, கருத்தரிக்க இயலாத சூழ்நிலை ஆகியவற்றால் பெரும் பாதிப்பை சந்திக்கும் மனித குலத்துக்கு //
இனிமே எல்லாம் அப்படித்தான்..அந்தளவு மன சோர்வுல வாழ வேண்டியிருக்கு..

Anonymous said...

வெடிச்சிரும் போல இருந்த கொஞ்சம் அப்படி போயிருங்க .. ஏன்னா வெடிக்கும் போது களிமண் பட்டு எங்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடதுள்ள//
ஹாஹா..எதுக்குப்பா பயம் நான் என்ன பிரபல பதிவரா

Anonymous said...

சோதனைக்குழாய் பிறந்ததா ..?//
செல்வா கிட்ட தப்பிக்கவே முடியாது போல இருக்கு..?

Anonymous said...

மொதோ வெட்டு நான்தான் //
பாபுவையா

Unknown said...

meeeeeeeeeee
the first..

nalla pathivuney..

ethukkey ungaluku nobel parisu kudukkalam..

but kudukamatanga..

eppadivathu
terror annakita
cholli
vangai thareney..

Anonymous said...

எங்கப்பா தமிழ்மணத்தை காணோம்..?உனக்கும் தமிழ்மணம் பிரச்சனையா?

செல்வா said...

///ஹாஹா..எதுக்குப்பா பயம் நான் என்ன பிரபல பதிவரா//
அப்படின்னா சரி , வாங்க நம்ம இரண்டு பேரும் வெளாடலாம் .. நல்ல பதிவு போட்ட கும்மி அடிக்க கூடாது அப்படிங்கிற விதிய இன்னிக்கோட தூக்கி eriyuvom ..!!

எஸ்.கே said...

மிக நல்ல பதிவு! சிறப்பான தகவல்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எதவாது நல்ல பதிவா எழுதுங்க அப்படின்னு நிறைய பேரு சொல்லிகிட்டே இருகாங்க //
நான் சொல்லலை.
===========================
//யோவ் பன்னி குட்டி டாக்டர், தம்பி விஜய் இல்லை//

பன்னிக்குட்டி டாக்டர் ஆ? அவர் தம்பி விஜய் ஆ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் பிரசாத் said...
நல்ல பதிவு!

ஒரு கிசுகிசு: ஒரு தலைசிறந்த பிரபல நடிகருக்கும் இப்படிதான் குழந்தை பிறந்தது. நான் சென்னையில் பிரபல மருத்துவமனையில் பணியாற்றிய போது இது நடந்தது

//
ஒ அதான் ஊர்ல தனியா மெடிக்கல் ஷாப் வச்சிருகீன்களோ. எல்லாம் அங்க சுட்டதுதானா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

////அருண் பிரசாத் said...
நல்ல பதிவு!

ஒரு கிசுகிசு: ஒரு தலைசிறந்த பிரபல நடிகருக்கும் இப்படிதான் குழந்தை பிறந்தது. //

நடிகருக்கு எப்படியா பிறக்கும். நடிகைக்குதான பிறக்கும்?

Unknown said...

very good post

சௌந்தர் said...

/அருண் பிரசாத் said...
நல்ல பதிவு!

ஒரு கிசுகிசு: ஒரு தலைசிறந்த பிரபல நடிகருக்கும் இப்படிதான் குழந்தை பிறந்தது. நான் சென்னையில் பிரபல மருத்துவமனையில் பணியாற்றிய போது இது நடந்தது////

அட ஏம்பா இப்படி பொய் சொல்றிங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னய்யா இது இப்பிடி எல்லாரும் சீரியசா எழுதிக்கிட்டு இருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த நடிகரு வடிவேலுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//எதவாது நல்ல பதிவா எழுதுங்க அப்படின்னு நிறைய பேரு சொல்லிகிட்டே இருகாங்க //
நான் சொல்லலை.
===========================
//யோவ் பன்னி குட்டி டாக்டர், தம்பி விஜய் இல்லை//

பன்னிக்குட்டி டாக்டர் ஆ? அவர் தம்பி விஜய் ஆ? ///

டாகுடரு தம்பியப் பத்தி வெளக்கமா சொல்லியாச்சு! இன்னும் ஏம்ல இப்பிடி சலம்புற?

Anonymous said...

::))