Saturday, July 14, 2012

ஆசைக்கு ஒரு பொண்ணு ஆஸ்த்திக்கு ஒரு பையன்


ஆசைக்கு ஒரு பொண்ணு  ஆஸ்த்திக்கு ஒரு பையன் எல்லோரும் நினைப்பது இது தான் .இது என் வாழகையிலும் நடந்தேறிவிட்டது .ஆம் இன்றோடு என் பையன் பிறந்து ஒரு மாதம் ஆகிறது .ஜூன் 14 காலை  10 .59 க்கு மகன் பிறந்தான் சந்தோசமான நாள்களில் இதுவும் ஒன்று .

முதலில் நன்றியை இருவருக்கு தெரிவித்து கொள்கிறேன் .உணவு உலகம் சார் மற்றும் பன்னிகுட்டி இருவருக்கும் .இரு குழந்தைகளுக்கு இடையே இடைவெளி தேவை என்று அரசு அறிவித்தாலும் நான் ரொம்ப நாள் கழித்து தான் மற்றொரு குழந்தை பெற்று கொண்டேன் .ஆம் 7 வருடங்கள் கழித்து முதலில் பெண்குழந்தை அதுவே ஒரு பயம் மறுபடியும் பெண் குழந்தை என்றால் நம்மோட பொருளாதாரத்தில் நல்ல விதமாக குழந்தை வளர்க்க முடியுமா என்ற பயம் .ஒவ்வொரு முறை உணவு உலகம் சாரை சந்திக்கும் பொழுது என் மனதை கரைத்த புண்ணியவான் அவரு .அதில் உள்ள நிறைகளை  பக்குவமாக என் மரமண்டைக்கு புரியும் படி எடுத்து கூறிய விதம் அப்படி .அதே மாதிரி பன்னிகுட்டி ஊருக்கு வரும் பொழுது இன்னொன்னு பெத்துக்கோ மக்கா நாளைக்கு அதுகளுக்கு கஷ்ட்டம் ன்னு வந்தா சொந்த பந்தம் இல்லாம நிக்கும்ன்னு சொல்லி இன்னொண்ண பெத்துக்க வச்சிட்டாங்க இந்த இருவரும் .
அதுவும் ரெண்டாவது பையன் என்ற பொழுது என் சந்தோசத்துக்கு அளவே இல்லை .நண்பர்களுக்கு எல்லார்கிட்டேயும் போன்ல தகவல் சொல்லிட்டேன் (நினைக்கிறேன் ).ஆனா உணவு உலகம் சார் கிட்ட மட்டும் இந்த நிமிடம் வர சொல்லலை .ஒவ்வொரு நாள் இன்னைக்கு சொல்லிடனும்ன்னு நினைச்சு போன் எடுத்தாலும் .அவர்  பொண்ணு  கல்யாணத்துக்கு நான் போக முடியாததை நினைத்து போன் பண்ணாம இருந்துவிடுவேன் .மனதுக்கு கஷ்ட்டமாக  இருக்குது  அதான் ஒரு முடிவோட இருக்கேன் .இனி பையனோட நேர்ல போய் ஆசிர்வாதம் வாங்குறதுன்னு முடிவு எடுத்துட்டேன் .அதுக்கு நாளும் நெருங்கிவிட்டது ,கூடிய விரைவில் அவர் வீட்டுக்கு குடும்பத்துடன் போய் காலில் விழுவது என்று முடிவு செய்தாகிவிட்டது .அனேகாமாக ஜூலை கடைசி வாரத்தில் காலில் விழும் வைபோகம் நடக்கும் .
இது எல்லாம் போக கடந்த மூன்று மாதங்களாக மன அழுத்தம் இருந்த சமையத்தில் போரம் ,கூகிள் ப்ளஸ் வராம அமைதியா இருந்த நேரத்துல  கும்மி நண்பர்கள் பதறி போய் போன் பண்ணி கேக்குறது .என் மன அழுத்ததை  வெகுவாக குறைத்தது என்றே சொல்லுவேன் (ஒவ்வொருவரையும் தனியா பேர் சொல்லலை சண்டைக்கு வர கூடாது ....).
சரி இவ்வளோ சந்தோசத்துக்கு காரணம் உணவு உலகம் சார் ,பன்னிகுட்டி மற்றும் கும்மி நண்பர்கள்ன்னு சொல்லுறீயே அவங்களுக்கு என்ன செய்தன்னு இந்த சிரிப்புபோலிஸ்  கேக்குறான் ..அதுக்காக பன்னிகுட்டி ,கும்மின்னு எல்லாம் என் பையனுக்கு பேர் விடமுடியாதுங்க ..ஜூலை 25 பையனுக்கு பேர் சூட்டும் விழா எங்கள் வீட்டில் தேரூர் ,கன்னியாகுமரி மாவட்டத்தில் வைத்து நடைபெறுகிறது அனைவரும் வர வேண்டும் என்று கட்டளை இடுகிறேன் ..
என்னாது ..என்ன பேரா ?அதான் சொல்லிட்டேன்ல பன்னிகுட்டி ,டெரர் கும்மின்னு பேர் வைக்க முடியாதுன்னு சொன்னேன்ல ...யோவ் பேர சொல்லுயான்னு டெரர் கேக்குறான் பாருங்க ..சரி இதாங்க பேரு
 ராம் பிரணவ் சங்கர் .
உணவு உலகம் சார் பேரு இதுல வருது .நான் அவர் பேர் வைக்கணும்ன்னு நினைச்சு வைக்கலை .ஆண் பிள்ளையாக இருந்தால்  சங்கரன்கோவில உள்ள சங்கர நாராயணர் பேரு விடுறேன்னு நினைத்து இருந்தேன் அதான் இந்த பேரு .
ஆனா கடவுளும் நீ இன்னொரு பிள்ளை வேணும்ன்னு முடிவு எடுக்க காரணமாக இருந்த அவர் பேரு வைக்கணும்ன்னு என்று தான் என் மனதில் இப்படி ஒரு எண்ணத்தை விதைத்தாரோ என்னவோ .? . 
அதில் எனக்கு முழு சந்தோசமே ...