சமகால கல்வி முறை பற்றி ஏற்கனவே
எஸ்.கே அவர்கள் எழுதி விட்டார்கள்.இருந்தாலும் இதை யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று கூறியதால் என் மனதில் பட்டதை இங்கு கூறுகிறேன் .
நம் மாநிலத்தில் கல்வி மேலோங்கி இருக்கிறது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தேர்ச்சி விகிதம் அதிகமாக தான் உள்ளது .இதை மறுப்பதற்கில்லை .ஆனால் கல்வி நிறுவனங்கள் கல்வியை மட்டும் தான் போதிக்கிறது. ஒழுக்கம் பண்பாடு ,கலாச்சாரம் என்பது எல்லாம் அடியோடு கிடையாது.
தமிழ் நாட்டை பொறுத்தவரை கல்வி என்பது சிறந்த வியாபாரமாகி விட்டது. அரசே பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயம் செய்தும் அதை செயல் படுத்த முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலைக்கு காரணம் வேறொன்றுமில்லை, அரசியல்வாதிகளே பெரும்பாலான கல்வி நிறுவனங்களை நடத்துவதால் தான். அவர்களே கட்டணத்தை நிர்ணயித்து கொள்கிறார்கள் அதில் கோடி கோடியாய் கொள்ளையும் அடிக்கிறார்கள் .நூற்றில் 80% MLAக்கு அல்லது MP க்கு எதாவது ஒரு கல்லூரி அல்லது ,பள்ளி கண்டிப்பாக இருக்கும் .
பள்ளிக்கூடங்களை பார்த்தோமென்றால் அதிலும் MATRICULATION ,CBSE ,ANGLO INDIAN என பல வகை. இவை அனைத்தும் பணம் மற்றும் அந்தஸ்த்தின் அடிப்படையில் தான் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் சமச்சீர் கல்வி என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. பிள்ளைகள் இப்பொழுது கூடுதல் பாட சுமை தான் பெறுகிறார்கள் .முதுகுகளில் அதிகமாக சுமக்கிறார்கள். வசதி படைத்தவர் ,வசதி இல்லாதவர் என்று அனைவருமே ஆங்கில வழி கல்விக்கு வந்து விட்டதனால் தான் அரசு சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது. இல்லையென்றால் இன்னும் சில காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களே இருக்க மாட்டார்கள் இது மறுக்க முடியாத உண்மை!!!!!!!
பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளிகளை வெறுத்தொதுக்க காரணம் நமது அரசாங்கமும், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் தான். அவர்கள் சரியான நபரை ஆசிரியராக பணி நியமனம் செய்யவில்லை. ஆசிரியர்களாவது ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை ,பெரு நகரங்கள் எப்படி என்று எனக்கு எனக்கு தெரியவில்லை. ஆனால் கிராமங்களிலும் ,சிறு நகரங்களிலும் அரசு ஆசிரியர்கள் பெரும்பாலானோர் தன் சம்பளத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள். இது நான் கண் கூடாக பார்த்த உண்மை .ஒழுங்காக பாடம் எடுப்பதும் இல்லை .சமீபத்தில் கூட ஒரு செய்தி ஒரு அரசு ஆசிரியர் அவராகவே ஒரு பெண் ஆசிரியயை பணியமர்த்தி அவளுக்கு மாதம் 2000 ரூபாய் சம்பளம் கொடுத்து பாடம் எடுத்து இருக்கிறார். இது மட்டுமல்லாமல் பள்ளியில் கல்வி பயில வரும் மாணவ மாணவிகளை வீட்டிற்கு வேலைக்கு அழைத்து செல்வது, முறைகேடாக நடந்து கொள்வது பல கேவலமான செயல்கள் நடந்து வருகின்றன.
மேலும் பள்ளியில் ஒழுங்காக பாடத்தை நடத்தாமல், அதே பாடத்தை மாலை 5 மணிக்கு மேல் தங்கள் வீட்டில் டியூஷன் என்று சொல்லி கொடுத்து அதற்கு வேறு தனியாக வசூலித்து விடுகிறார்கள். .அப்படி பிள்ளைகள் போக வில்லை என்றால் அவர்கள் பாடத்தில் பெயில் ஆக்கி விடுவார்கள்.இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. 8வது வகுப்பு வரை பெயில் ஆக்க கூடாது என்று சட்டம் வந்து விட்டது . 12வகுப்பு மாணவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும் .காலையில் 6 மணிக்கு டியூஷன் போக ஆரம்பிக்கிறான் அப்படியே பள்ளி செல்கிறான் பின்பு பள்ளி விட்டு வந்து அடுத்த டியூஷன் என அவனது பொழுது ஓய்வில்லாமல் கழிகிறது. இதற்க்கு பேசாம கேரளாவுக்கு அடிமடாக போய் இருக்கலாம் .இவ்வளவுக்கும் அரசு ஆசிரியர் யாரும் தனியாக டியூஷன் எடுக்க கூடாதுன்னு ஒரு சட்டம் வேறு இருக்கு .
காமராஜர் அந்த காலத்தில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரிய கூடாது என்பதற்காக பள்ளிகளில் ஒரே மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும் என்று கூறினார் .இப்பொழுது அதுவே வினையாக போய் விட்டது. திங்கள் கிழமை ஒரு கலர் துணி ,செவ்வாய் கிழமை ஒரு கலர் துணி .இப்படி தினம் ஒரு ஆடை போட வேண்டும் அதுவும் பள்ளிகளில் தான் வாங்க வேண்டும் என்று சட்டம் வேறு. அரசு பள்ளிகளில் இன்னும் இந்த முறை வராதது மகிழ்ச்சி.
18 வயது நிரம்பியவர்களுக்கு தான் இரு சக்கர ஓட்டுனர் உரிமம் கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியர் இரு சக்கர வாகனங்களில் தான் பள்ளிகளுக்கு வருகின்றனர். இதனை பள்ளி நிர்வாகமோ, ஆசிரியர்களோ கண்டு கொள்வதில்லை. பெரும்பாலான மாணவர்கள் சாலை விதிமுறைகளை மதிப்பதில்லை. பிறகு இவர்கள் வளர்ந்த பின் எப்படி நம் அரசு இயற்றும் சட்டத்தை மதிப்பார்கள் .மிதிக்கத்தான் செய்வார்கள் .இதில் வேறு அனைத்து +1மாணவர்களுக்கும் அரசு இலவச மிதிவண்டி வேற கொடுக்கிறது. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை ஆசிரியர்கள் கற்று கொடுக்க வேண்டும்.
+2படித்த மாணவனிடம் வங்கியில் விண்ணப்பபாரம் பூர்த்தி செய்ய சொன்னால் முழிக்கிறான். கல்வி என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு ஒரு மனப்பாட விசயமாகவே இருக்கிறது. ஆசிரியர் சொல்வதை அப்படியே தேர்வில் ஒப்பித்து விடுகிறான். அதே விசயங்கள் வாழ்க்கையின் தேவைகளில் வரும் பொது அவனால் சரிவர செயல் பட முடிவதில்லை.
பெரும்பாலான மாணவர்கள் பாடங்களை தேர்வு செய்து படிப்பதில்லை. எதோ படிக்க வேண்டுமென்று படிக்கிறார்கள். பின்னர் தகுந்த வேலை கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். இதற்க்கான தீர்வுகள் நாம் பள்ளிக்காலத்திலேயே எடுக்க வேண்டியது கட்டாயம்.. சரியான திட்டமிடுதலே இதற்கு சிறந்த வழி..வாழ்க்கைக்கு உகந்த பாட திட்டங்கள் வர வேண்டும் குழந்தைகள் ஆனாலும் சரி இளைஞர்கள் ஆனாலும் சரி நல்ல விளையாடி படிக்க வேண்டும் என்பது என் ஆசை .எப்பொழுதுமே பாட புத்தகங்களை கட்டி அழுவதற்கு பதில் வேறு துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் .கல்லூரி படிக்கும் பொழுதே "கை தொழில் ஒன்றை கற்று கொள் கவலை உனக்கில்லை ஒத்து கொள் "என்பதற்கு ஏற்ப ஏதாவது ஒரு தொழில் சார்ந்த படிப்பை கட்டாயமாக்க வேண்டும் .
குறிப்பு :இதில் எல்லா ஆசிரியர்களையும் குறை கூற வில்லை .நல்ல ஆசிரியர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.
இந்த சமகால கல்வி முறை பற்றி மேலும் நம் பதிவர்கள் எழுத வேண்டும் .யார் வேண்டும் என்றாலும் தொடரலாம் .