Monday, January 24, 2011

நானும் கவிதையும் ...!


எல்லோரும் பதிவுலகுல கவிதை எழுதுறாங்க ,நீயும் கவிதை எழுத்து மக்கா இல்லையென்றால் நீ பதிவு எழுதுறதே வேஸ்ட் ன்னு டெர்ரர் அண்ட் ரமேஷ் சொல்லிட்டாங்க..........அதனால் நானும் சில கவிதைகள் TYPE செய்து இருக்கேன் .கண்டிப்பா வாந்தி வரும் ....



அவள் வைத்து கொள்ளும் ரோஜா 
அவளை விட அழகு குறைவு தான் 
அதனால் தான் 
அவள் கூந்தலின் பின்னால்
ஒளிந்து கொள்கிறது 

பூ என்பது ஒரு எழுத்து
அதை சூடும் "பெண் " இரண்டெழுத்து
அந்த பெண்ணால் வரும் "காதல்" மூன்று எழுத்து
அந்த காதலால் வரும்" குழந்தை "நான்கு எழுத்து
அந்த குழந்தையால் வரும் "திருமணம்" ஐந்து எழுத்து
இதுவே இன்றைய இளைஞர்களின் தலை எழுத்து

நண்பா ரமேஷ்  நீ ஒரு K E P M  A R I
K - KILLAADI
E -  EN UYIR  NANBAN 
P - PORUMAYIN SIKARAM
M -MANMATHAN 
A - ANBULLAVAN 
R -RAMBO 
I -INIYAVAN
KEPMARI க்கு சிரிப்பா பாரு..........

விடிய விடிய நிலவை காதலித்து  விட்டு ..............
விடிந்தபின் சூரியனை மணக்கும் மணப்பெண் தான் 
"பனித்துளி "

12 வருடத்துக்கு ஒரு முறை பூக்கும் 
குறிஞ்சி  மலர் கூட உன் புனைகை பார்த்தால் 
கொய்யாலா ........பூக்கவே பூக்காது........

இது சௌந்தர்க்கு 
அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு ,
பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வில்லை .........
காரணம் .................
மூச்சு  விடாம இங்கிலீஷ் பேசுரா மக்கா  ............


மரணம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும் 
ஆனால் பிரிவு என்பது ஒவ்வொரு நொடியும் 
உயிர் போகும் 
அதனால் நட்பை இழக்காதீர்கள் 

என்றோ ஒருநாள் அழுததை நினைத்தால் சிரிப்பு வரும் (காதல்)
என்றோ சிரித்ததை நினைத்தால் இன்று அழுகை வரும் (நட்பு )

சிறுத்தை வசனம் :
ஏதோ ஒருநாள் நம்ம ரிசல்ட் வந்தே தீரும் ..........
நான் ரிசல்ட் பார்க்குற அந்த நாள் ................
என் நெஞ்சுல ஒரு சொட்டு பயம் இருக்க கூடாது .............
நான் பெயில் ன்னு தெரியும் போது என் உதட்டுல சிரிப்பு இருக்கணும் .........
என் கை மீசையை முறிக்கிட்டு இருக்கணும் .........

இது நண்பன் டெர்ரர்க்கு 
நீ நடக்கும் போது 
ஒரு 
கம்பீரம் தெரியுது 
நீ தூங்கும் போது 
ஒரு 
அமைதி தெரியுது 
நீ சாப்பிடும் போது 
ஒரு 
அழகு தெரியுது 
நீ ஓடும் போது 
ஒரு வேகம் தெரியுது ...........
இதெல்லாம் ஒகே ஏன் "DISCOVERY CHANNEL " ல மட்டும் தெரியுது 


டிஸ்க்கி :இதில் இருக்கும்  கவிதை நீ எழுதினதான்னு யாரும் கேக்க கூடாது...கேட்ட கம்பெனி பொறுப்பு ஏற்காது ................... 


Thursday, January 20, 2011

லவ் லெட்டர்

இந்த செல்வா தம்பி நேத்து ஒரு பதிவு போட்டான் .காதல் கடிதம் எழுத தெரியாம ரொம்ப கஷ்ட பட்டேன்னு சொன்னான் .அதான் அவனுக்கு எப்படி காதல் கடிதம் எழுதணும்ன்னு எனக்கு தெரிஞ்ச மாதிரி சொல்லி இருக்கேன் .செல்வா வுக்கு இந்த பதிவை சம்ர்பிக்குறேன் (காதல் பண்ணினா சமாதி தான் ஆகணும் மக்கா .......)

செல்வா தம்பி தொடர் பதிவுக்கு என்னை கூப்பிடல இருந்தாலும் நமக்கு தான் மானம் ,ரோசம் எதுவுமே கிடையாதே அதனால நானே இந்த பதிவை போடுகிறேன் .

காதல் கவிதை எழுதுறவங்க ,காதல் பத்தி கட்டுரை எழுதுறவங்க எல்லோரும் வந்து காறி துப்பிட்டு போகலாம் .குறிப்பாக தேவா அண்ணன் ,சௌந்தர் ,கௌசல்யா ...

மேலும் என் நண்பன் ரமேஷ் ,டெர்ரர் போன்ற கல்யாணம் ஆகாத நண்பர்கள் எல்லோருக்கும் இதை பார்த்து காதல் கடிதம் எழுத கற்று கொள்ளவும் .....


அன்புள்ள முன்னாள் காதலிக்கு

பொருள்: தங்களிடம் கொண்டிருந்த காதல் முறிந்ததின் பேரில் அனைத்து பரிமாற்றங்களை தீர்க்க வேண்டி எழுதப்படும் விண்ணப்பக் கடிதம்






தங்களிடம் இருக்கின்ற இந்த புகைப்படத்தை உடனடியாக திருப்பி அனுப்புமாறு கோரிக்கைசெய்கிறேன். இந்த புகைப்படத்தில் மட்டும் தான் நான் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிவேன் என்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.  மேலும் இந்த புகைப்படம் எனக்கு முதன் முதல் காதல் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது.

மேலும் 11/2 வருடம் நான்தங்களுடன் காதலில் ஈடுபட்டிருந்த போது தங்களை கவர்வதற்காக ஏராளமான பணம் செலவழித்திருக்கிறேன். நான்செலவழித்த தொகையின் பட்டியலை இத்துடன் இணைத்துள்ளேன்.  அதைகூடிய விரைவில் திருப்பி அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செலவழிந்த தொகையின் விவரம் பின்வருமாறு:

வ.
எண்
விவரம்
தொகை
(ரூபாய்களில்)
1
மதிய/இரவு உணவு     
895
2
கூல்ட்ரிங்ஸ்
2938
3
ஸ்நாக்ஸ்
5645
4
ஜூஸ்கள்
3845
5
சினிமா
1235
6
இண்டர்நெட் சாட்டிங்
1399
7
மொபைல் கட்டணம்
2546
8
பெட்ரோல்
4355
9
பரிசுப் பொருட்கள்
7850

மொத்தம்
30, 708

மொத்தத் தொகை ரூ.30,708(எழுத்தில்: முப்பது ஆயிரத்து எழுநூற்று எண்பது ரூபாய்).தயவுசெய்து மேற்கண்ட தொகை திருப்பி அளிக்க வேண்டுகிறேன். இதனால் நான் என் புது காதலிக்கு இந்த பணத்தை செலவு செய்ய ஏதுவாய்இருக்கும்.மேலும் உங்களிடம் என் பரிசுகள் ஏதாவது இருந்தால் அதை பாதி விலைக்குஎடுத்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அந்த பரிசுகளுக்கானவிலையை கணக்கிட்டு அதை மேற்கண்ட தொகையிலிருந்து கழித்துக்கொள்ளலாம்.

இத்துடன் நீங்கள் எனக்கு எழுதிய காதல் கடிதங்களை இணைத்துள்ளேன் (எடை 4 கிகி) எனவே நீங்கள் உங்கள் பாய் ஃபிரண்டுக்கு மீண்டும் எழுத வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்கள் ஃபோட்டோவையும் இணைத்துள்ளேன்.எனவே உங்களின் புதிய பாய்ஃபிரண்டிடம் அதை நீங்கள்அளிக்க உதவியாய் இருக்கும்.

                                 தங்களிடமிருந்து தொகையை எதிர்நோக்கும்
                                        தங்கள் உண்மையுள்ள
                                      முன்னாள் காதலன்



டிஸ்க்கி 1 : இந்த பதிவு எழுத உதவிய எஸ் கே அவர்களுக்கு நன்றி .

டிஸ்க்கி 2 :யாருக்கும் எதிர் பதிவு இல்லை ......இது ஆங்கிலத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல் ..


டிஸ்க்கி 3 :அழகான போட்டோ ஒன்னு வேணும் ரமேஷ்ன்னு கேட்டவுடன் தயங்காம அவனோட  போட்டோவ தந்து உதவிய ரமேஷுக்கு  நன்றி 

.



Thursday, January 13, 2011

பல்போ......!பல்பு ....!

                                                                     


"சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி" என்று ஒரு பழமொழி உண்டு .அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ எனக்கு பொருந்தும் .

பதிவுலகத்துல நிறய பதிவு இப்போ வரத்து இல்லை .அதனால நான் என் பொண்ணுக்கு  பாடம் சொல்லி கொடுப்போம்  என்று என் பொண்ணுகிட்ட போனேன் .என்ன படிக்கிறா என்று பார்த்தேன் .

SOCIAL சயின்ஸ் என் பொண்ணு படிச்சிட்டு இருந்தா .அதுல
HINDU WORSHIP IN TEMPLE 
CHRISTIAN WORSHIP IN CHURCH
MUSLIM WORSHIP IN MOSQUE
SIKHS WORSHIP IN GURUDVAR
இப்படி இருந்துச்சு நான் வாசித்து சொல்லி கொடுத்து கொண்டு இருந்தேன் .என் பொண்ணு என்னை பார்த்து

என் மகள்: அப்பா WHORSHIP னா என்னப்பா என்றால் ?.

நான்: உன்னை காலைல ஸ்கூல் போகும் முன்னாடி என்ன சொல்வேன் என்று கேட்டேன்

என் மகள்:  PRAY பண்ண சொல்லுவீங்கன்னு சொன்னாள்..!


நான்:அதை  தமிழ் சொல்லுன்னு சொன்னேன்


என் மகள்:  சாமி கும்பிட சொல்லுவீங்கன்னு சொன்னாள்..!


நான்: உடனே அது தான் நாம ஹிந்து அதுனால கோவில்ல போய் தானே சாமி கும்பிடுவோம் அதான் worship அப்படின்னு சொன்னேன்


என் மகள்: அப்போ prayer  சொல்ல கூடாதான்னு கேட்டா ?


                                           பல்பு !!!!!!


நான்:இல்லை மக்கா கோவில்ங்கறது எல்லோரும் போய் சாமி கும்பிடுறோம் அதனால WORSHIP.இங்க வீட்டுல கும்பிட்ட PRAYER இப்படி சொன்னேன் (சமாளித்தேன் )


என் மகள்:அப்போ ஸ்கூல் ல prayer song சொல்லுறாங்களே அது எப்படின்னு கேட்டா?
                                          
                                                 பல்பு !!!!!

முடியலை ....போ மக்கா இப்படி என்னையே குழப்பிட்டேயேன்னு சொல்லிட்டு எடத்தை காலி   பண்ணினேன்
ஐயோ.....ஐயோ ........(இப்படி தான் நானே வாயை கொடுத்து வாய்ல புண்ணோட போய் சேருகிறேன் ......)
ஆண்டாவா ஏன் என்னை இப்படி சோதிக்கிறன்னு PRAY பண்ணவா?WORSHIP பண்ணவா  ? யாராவது பதில் சொல்லுங்க ............!


எலேய் யாரும் ஓடி போக கூடாது ..........அங்க யாரோ ஓடி போறாங்க .........எலேய் நின்னு பதில் சொல்லிட்டு போ .............

டிஸ்க்கி 1 :சரி WORSHIP ,PRAYER இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு .ஆனால் அதை எப்படி சொல்லணும்ன்னு தெரியலை .உடனே பதிவுலகின் ஆன்மீக சக்கரவர்த்தி ,ஹிப்ப்று மொழி புலவர் தேவா அண்ணன் கிட்ட கேட்டேன் .ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சொன்னார் .ஆனால் எனக்கு எப்படி அவளுக்கு விளக்கி சொல்லன்னு இன்னும் தெரியலை .........!
டிஸ்க்கி 2 : எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ......
( பொங்கல் பொங்குவது போல .....நிறைய பல்பு வாங்க வாழ்த்துக்கள்ன்னு  சொல்ல கூடாது ஓகே  .......)

Tuesday, January 11, 2011

குட்டி பதிவு ....


                                                      


குழந்தைகள் முன்னாடி எதை செய்யணும் ?எதை செய்யகூடாது? எதை பேசணும்? எதை பேச கூடாது? என்று நேற்று தெரிந்து கொண்டேன்..! இவ்வளவு நாளும் பல்பு தான் வாங்கிட்டு இருந்தேன் ...நேத்துல இருந்து என் பொண்ணு என்னை ஊர்ல உள்ளவன் கிட்ட எல்லாம் அடி வாங்க வைச்சிருவா போல இருக்கே..!பல்பு வாங்குரது சுகம் தான்..! ஆனா இது கொஞ்சம் பயங்கரமான விஷயம் .


நான் எப்போதும் வண்டி மெதுவாக தான் ஓட்டுவேன் (மாட்டுவண்டி இல்லை மக்கா ..அது ரமேஷ்தான் ஓட்டுவான் ).நான் ஓட்றது இருசக்கர வாகனம் (டிவிஎஸ் விக்டர் ) .என் எதிரில் யாராவது செல்போன் பேசிகிட்டு வண்டி ஓட்டினா ."சரியான லூசு பய" வண்டிய நிப்பாட்டி பேச வேண்டியது தானே  அப்படின்னு அவனை திட்டுவேன் .அவன் பார்க்கும் போது திட்ட மாட்டேன் (யாரு அடி வாங்குறது பிறகு...! அதனால் கொஞ்சம் தள்ளி போன பின் திட்டுவேன் )

நேற்று வழக்கம் போல் காலையில் என் பொண்ணை பள்ளிக்கு கூட்டி சென்றேன் .எப்பொழுதும் என் முன் பெட்ரோல் டாங்கல தான் இருப்பாள். நான் வண்டியை மெதுவாக ஓட்டி சென்று கொண்டிருக்கும் பொழுது என் எதிரில் ஒருவன் இரு சக்கர வாகனத்தில் செல் போனில் பேசிய படிய வந்தான் .என் மகள் சட்டென்று "சரியான லூசு பய" என்று சத்தாமாக கையை நீட்டிய வாரே சொல்லி விட்டாள் .அவன் அப்படியே முறைத்து பார்கிறான் .நான் கண்டு கொள்ளாதது மாதிரி வந்து விட்டேன் .கொஞ்சம் தூரம் தள்ளி வந்து மக்கா ஏன் அப்படி சொன்னே என்று கேட்டேன் ...............அதற்கு அப்பா நீங்களும் இப்படி தானே  செல்போன்ல  பேசிட்டு போறவங்களை சொல்லுவீர்கள் என்றாள் .

அதான் சொல்லுறேன் மக்கா.இந்த அப்பாமார்கள் படும் பாடு இருக்கே ..முடியலை ......அருண் (சீனியர்) அதான் கமெண்ட்ஸ்லே போட்டேன் கூடிய விரைவில் அடி வாங்கும் நிலமைக்கு வந்திருவன்னு ...

என் மனைவியோ .என்னை சத்தம் போடுகிறாள். இது தான் குழந்தைகள் கிட்ட நல்ல வார்த்தைகள் உபயோக படுத்தனும்னு ..............கூடிய சீக்கிரம் அடி வாங்கிருவேன் மக்காஸ் (பாரு பய புள்ளைகளுக்கு என்ன சிரிப்புன்னு )

Thursday, January 6, 2011

திரும்பி பார்க்கிறேன்




                                                                
திரும்பி பார்க்கிறேன்..! இந்த தலைப்பே இதை படிக்கும் பதிவர்களுக்கு அத்தனை பேருக்கும் புடிக்கும் என்று நினைக்கிறன் .என்னை இந்த பதிவை தொடர்வதற்கு கௌசல்யா சகோதரி அழைத்திருந்தார்கள் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து  கொள்கிறேன் .

எல்லோரும் தன் வாழ்கையில்  நடந்தவற்றை திரும்பி பார்க்காமல் இருக்க முடியாது .திரும்பி பார்க்காதவர்கள் மனிதர்களாகவும் இருக்க முடியாது .

ஒவ்வொரு புது  வருடமும் அதுவும் ஒன்றாம் தேதி என்றால் அனைவருக்கும் குஷி தான் எனக்கும் இருந்தது ஆனால் அது 2007 ஜன 1 அன்று தவிடு பொடியாகியது.ஆம் அன்று எங்கள் ஊர் (சுசிந்திரம் )கோவில் தேர் திருவிழா அதற்கா முதல் நாளே அங்கு சென்றுவிட்டேன் காலையில்  எழுந்து குளித்து விட்டு எல்லோரும் சாப்பிட இருந்தோம் என் அருமை மகளும் என்  கூட இருந்தாள் .என் அம்மா, மனைவி இருவரும் காலை  உணவு ரெடி பண்ணிட்டு இருந்தாங்க .புட்டு எங்கள் ஊரில் ரொம்ப பேமஸ்  .என் பொண்ணு என்னிடம் இருந்து எந்திருச்சி ஓடி போய் அப்பளம்  எடுக்க போறேன்னு சொல்லிட்டு ஓடி போய் புட்டு அவியும் அந்த குழாயை தட்டி விட்டுட்டாள்.அதில் இருந்த கொதித்த நீர் அப்படியே அவள் இடது கன்னம் முழுவதும் பட்டு .துடித்து விட்டாள் அன்று உள்ளூர் விடுமுறை வேறு. ஓடினேன் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி நோக்கி.. ஒரு புண்ணியவான் டாக்டர் பார்த்தார் .பயப்பட ஒன்றும் வேண்டாம் புண்ணில் கை வைக்க மட்டும் கூடாது என்று கூறிவிட்டார் .அந்த ஒரு வார கொடுமை.. ஐயோ இப்பொழுது அதை நினைத்தாலும் கண்ணீர் வருகிறது .அப்பொழுது ஏன் மகளுக்கு இரண்டு வயது ...


அன்றோடு சரி எத்தனை  புது வருடம் வந்தாலும் என் நெஞ்சை  விட்டு மறையாத அந்த தருணங்களே  நினைவு வருகிறது .என்னடா ரொம்ப சோகமா எழுதிட்டேனோ??



பதிவுலகில் நான் இருப்பதிற்கு காரணமானவர்களை  மட்டும் இங்கே திரும்பி பார்கிறேன் .

சரி 2010  நான் வலை பூ எழுத ஆரம்பித்தேன் .தமிழ் சும்மா எழுதினாலே குத்து உயிரும் கொலை உயிராமாக இருக்கும்.  பதிவு எழுதுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்று தெரியும் .நண்பன்  ரமேஷ்(சிரிப்பு போலீஸ் ) தான் நீ எழுதுப்பா  என் நண்பர்களிடம் உன்னை அறிமுக படுத்துகிறேன் என்றான். சரி காசா  பணமா எழுதிருவோம் என்று ஆரம்பித்தேன் .அந்த இம்சையை இபொழுது நீங்கள் அனுபவிகீரீர்கள் (அதனால் ரமேஷ் ஐ அடியுங்கள் ).

2010 ஆகஸ்ட்ல ப்ளாக் எழுத ஆரம்பித்தேன் .நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் அதில் நண்பன் டெர்ரர் மறக்க முடியாதவர் எனனை ஊக்க படுத்தியவர் .நிறைய லிங்க் தந்து போய் படிங்க அப்படின்னு  தருவார் .எனக்கு பதிவுலகை பத்தி புரிய வைத்தவர் இன்று வரை அந்த நட்பு சீரான பாதையில் செல்கிறது .எனனை விட என் மகளுக்கு தான் அதிகமாக பிடிக்கிறது சாட்ல டெர்ரர் பேர் பார்த்தாலே அப்பா நான் பேசுகிறேன் என்று ஓடி வருவாள் .எந்த காரணத்தினால் என்று தெரியவில்லை .(ஆனால் அந்த லூசு டெர்ரர் பய எனனை பதிவு எழுத சொல்லி  விட்டு அவன் பதிவே எழுதாம இருக்கிறான் ).

அடுத்தது தேவா அண்ணா என்னை தம்பி என்று பாசத்துடன் கூப்பிடும் ஒரே பதிவர் இவரோட  தமிழ் எழுத்துக்கள் மீது எனக்கு ஒரு பொறாமை உண்டு .எப்படி  கோர்வையாக எழுதுகிறார் என்று ?எனக்கு இன்று வரைக்கும் வரவே மாட்டுது .வலை பூவில் தன்னிடம் இருக்கும் நண்பர்களை வைத்து  கருத்துசார்ந்த பதிவுகளை,சமூகத்திற்கு தேவையான பதிவுகள்  எழுத வேண்டும் என்பது இவரின் ஆசை (இந்த விஷயம் அவர் என்னிடம் சொல்ல வில்லை ...ஒரு யூகம் தான் ).ஆசை நிறை வேறும்  காலமும் அதற்கு கனிய வேண்டும் என்று எண்ணுகிறேன் .

அடுத்து சௌந்தர் இவரை பற்றி என்ன சொல்ல ஒரு சிறுவன் எனக்கு லிங்க் தந்து புது வலை பதிவர்களை அறிமுகமும் செய்வான் .அப்படி போய் அடி வாங்கிட்டு வந்து நின்ன காலமும் உண்டு (ஹி.ஹி .மக்க கோவிச்சுக்காத ).அப்புறம் என் நண்பன் டெர்ரர் வந்து காப்பாத்தினான்.ஆனால் என் மீது அன்பு கொண்டவன் .இது தப்பு வேண்டாம் என்று சொன்னால் சரி என்று என் சொல்லுக்கு மதிப்பு கொடுக்கும் நண்பன் .

இது போக நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் .ஹி ...ஹி.அது தான் ஊருக்கே தெரியுமே .இவர்கள் அனைவரும் கிடைத்ததே சந்தோஷமான விஷயம் தானே எனக்கு .ஒவ்வொருவரும் தனி தன்மை உடையவர்கள் பன்னிகுட்டி ,அருண் பிரசாத் ,செல்வா,எஸ் கே ,வெறும்பய (மக்காஸ் எல்லோர் பெயரும் சொல்லலைன்னு கோவிச்சுகிட்டு சண்டைக்கு வரணும் சரியா )இப்படி சொல்லி கொண்டே போகலாம் ...

பெண் பதிவர்கள் என்றால் கொஞ்சம் பயம் தான் யார் எந்த ரூபத்தில் இருக்கிறார்கள் என்று தெரியாது அதனால் போகவில்லை .கௌசல்யாவை தவிர .இவரோட வலை பூ முதலில் தெரிந்ததே ஒரு சண்டை போடுவதற்காக தான் அங்கு சென்றேன் . சண்டை இட்டு தான்  கமெண்ட்ஸ் போட்டேன் .அப்புறம் அப்படியே சகோ என்று கூப்பிடும் அளவுக்கு பழகிவிட்டேன் ஆனால் கவிதை எழுதி சாகடிச்சிருவாங்க .இவங்க கவிதையை படிச்சி படிச்சி நானும் கவிதை எழுதிவிட்டேன்ன பாருங்களேன் (எலேய் ரமேஷ் ,டெர்ரர் சிரிக்காதீங்க .நீ எழுதினது கவிதையான்னு ...)என் மகளிடம் பேசும் மற்றொரு பதிவர் .

இது போக ரொம்ப விரும்பி படிக்கும் பதிவு கே .ஆர்.பி .செந்தில் ,ஜெ அண்ணன் இவர்களின் பதிவு .இதில் இவர்கள் இருவரின் எழுத்து  எனக்கு ரொம்ப பிடிக்கும் .அதிலும் ஜெ அண்ணன் எழுத்து ரொம்ப பிடிக்கும் .என்ன காரணத்தினாலோ அவர் பதிவு எழுதவே இல்லை .

எல்லோருக்கும் ஒரு கனவு உண்டு நான் இப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு அவ்வகையில் யாரை போல் எழுத வேண்டும் என்றால் பட்டாப்பட்டி. மாதிரி தான் எழுதணும்ன்னு ஆசை .அவரோட ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும் .பெரும்பாலும் சில பதிவர்களுக்கு பிடிக்காது ஆனால் எனக்கு அவரோட பதிவுகள் பிடிக்கும் .சொல்ல வந்தத நச்சுன்னு நடு மண்டையில் ஆணி அடிச்ச மாதிரி சொல்லுவாரு .அது தான் எனக்கு பிடிச்சது .


என்ன வலைச்சரம் மாதிரி  பதிவுலகுல உள்ளவங்களை அறிமுக படுத்துறன்னு கேக்காதீங்க.2010 இவர்களிடம் பேசுவதும் வலைப்பூவை படிப்பது தான் என்னோட சந்தோசமா இருந்துச்சு அதனால் தான் இப்படி நான் திரும்பி பார்த்து இருக்கிறேன் 

எனக்கு அதிகமா பதிவர்கள் தெரியாது  .இருந்தாலும் என்னை ப்ளாக் எழுத  அறிமுக படுத்திய நண்பன் சிரிப்பு போலீஸ் ஐ எழுத அழைக்கிறேன்(நான் எழுத சொன்ன தொடர் பதிவு நீ எழுதலை அதனால் நான் எழுத மாட்டேன் ன்னு மட்டும் சொன்ன .......)

இந்த டெர்ரர் பயலை கூப்பிடலாம்ன்னு பார்த்தா அவனை ஏற்கனவே கணேஷ் என்பவர் அழைத்து இருக்கிறார் (அப்படியே எழுதி கிழிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான் )