Tuesday, February 8, 2011

தேர்தல்!!! குறை யார் மீது?                                                     


கழுகிர்க்ககாக இயந்திர வாக்கு பதிவு  பற்றி எழுதி இருந்தேன் .அதில் நான் உட்பட மற்ற பின்னூட்ட மிட்ட நண்பர்கள் எல்லோரும் இந்தியாவை பொறுத்த வரை தற்பொழுது மின்னணு வாக்கு பதிவு தான் தற்போதைக்கு ஒரே வழி என்று கூறினார்கள் இருந்தாலும் எனக்கு இதில் நடக்கும் தில்லுமுல்லு களை குறைக்க ஏதாவது வழி இருக்கா என்று சிந்திதித்த வண்ணம் இருந்தேன் .


ஏனென்றால் தமிழ் நாட்டை பொறுத்தவரையில் இந்த மாதிரி வேலைகள் எல்லாம் செய்வது அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் தான் என்று பரவலான பேச்சு இருக்கிறது .எனக்கும் இந்த சந்தேகம் உண்டு .பூத்துல இருக்கும் அரசு ஊழியர்களின் சம்மதத்துடன் தான் இந்த மாதிரி நடக்கிறது .நானும் கண்கூடாக பார்த்து இருக்கிறன் .

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் ஒரு கட்சி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வாரி இறைத்து உள்ளது .மற்ற மக்களின் வாயிலும் ,வயிற்றிலும் அடித்து விட்டு அரசு ஊழியர்களுக்கு மட்டும் இப்படி செய்திருக்கிறார்கள்  .இன்றைய விலை வாசி உயர்விலும் .அரசு ஊழியர்கள் மட்டும் தாக்கு பிடிக்கிறார்கள் .விலை வாசி உயர்ந்து விட்டது என்று சொன்னால் நம் நிதி அமைச்சர் .சம்பளம் எல்லாம் கூட்டி கொடுத்து இருக்கிறோம் அதனால் மக்களுக்கு வாங்கும் சக்தி இருக்கிறது என்கிறார் 
.
ஆம் அவர் கண்ணுக்கு 12லட்சம் அரசு ஊழியர்கள் மனுசனாக தெரிகிறார்கள் .மற்றவர்கள் எல்லோரும் மாடாக தான் நினைக்கிறார்கள் .எல்லாம் ஒட்டு வங்கி அரசியலுக்கு தான் .

இப்பொழுது நடந்த இடை தேர்தல்கள் எல்லாம் பார்த்தால் தேர்தல் ஆணையம் எவ்வளவு கெடுபிடியாக நடந்தாலும் .கடைசி ஒரு மணி நேரம் போலிங் மிகவும் அதிகமாக இருக்கு .
கேட்டால் அது ஒரு பிளான் என்று கூறுகிறார்கள் அதற்க்கு திருமங்கலம் பார்முலா என்று ஆளும் அரசே தம்பட்டம் அடிக்கிறது .(என்ன கொடுமை சார் இது ..........!)

இது எப்படி சாத்தியம் என்றே புரியவில்லை ஊடகங்களும் இதை பற்றி முதல் எழுதி விட்டு பின்பு அமைதியாக இருந்து விடுகிறார்கள் ......ஏன் இப்படி ?

இதில்  கள்ள ஒட்டு போடுவதர்க்கு உடந்தை இந்த ஆசிரியர்களும் ,அரசு ஊழியர்களும் தான் .கேட்டால் இந்த ஆட்சி வந்தா தான் நமக்கு நல்லது என்கிறார்கள் ...?

இதில் கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் இதிலடங்கும் .எல்லா அரசு ஊழியர்களும் ,ஆசிரியர்களும் இப்படி தான் என்று சொல்ல வில்லை ஆனால் நூற்றில் 90% இப்படி தான் இருக்கிறார்கள் .சில பேர் அங்கே போனால் நானும் குற்றவாளி ஆகிவிடுவேன் என்று எலெக்ஷன் பணி வேண்டாம் என்று கூறிவிடுகிரார்கள்.

கல்வி போதிக்கும் ஆசிரியர்களே இப்படி செய்தால் குழந்தைகளை எப்படி நல வழி படுத்துவார்கள் ..

இது தான் ஜனநாயகமா?........அரசு ஊழிர்கள் தான் ஒரு முதலமைச்சரை தேர்ந்து எடுக்க வேண்டுமென்றால் இவ்வளவு பொருள் செலவு செய்து ஏன் தேர்தல் நடத்த வேண்டும் .பேசாமல் அவர்களை மட்டும் ஒட்டு போட சொன்னாள் போதுமே ????

ரெண்டு நாள் முன்னாடி தான் தேர்தல் ஆணையம் இன்னொரு உருப்படியான விஷயம் ஒன்றை சொன்னது .இனி பூத் ஸ்லிப் கட்சிகாரர்கள் கொடுக்க வேண்டாம் என்றும் அந்த பணியை தேர்தல் ஆணையமே செய்யும் என்று கூறி இருக்கிறது 

.
இதே மாதிரி இந்த கடைசி நேர போலிங்க்கும் எதாவது மாற்று வழி உண்ட என்று தேர்தல் ஆணையம் சிந்தித்து நல்லதொரு முடிவை அறிவிக்கும் என்று ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்து இந்த பதிவை முடிக்கிறேன் .

Wednesday, February 2, 2011

மேம்பாலம்                                                                                                                                       


காலைல அவசரம் அவசரமாக  என் மகளை பள்ளிக்கு கூட்டி  செல்லும் அவசரத்தில் பைக்ல அவளை ஏற்றினேன் .முன்னாடி இருந்து கொண்டு

என் மகள் :அப்பா இந்த பாலம் ரொம்ப பெருசு இல்லையாப்பா என்றாள்

நான் :ஆமாம் கோவில்பட்டில   ரெண்டு பாலம் இருக்குன்னு சொன்னேன்

என் மகள் :ஆமாம் ரெண்டு பெரிய பாலம் நிறைய குட்டி பாலம் இருக்கு என்றாள்

நான் :இல்லையே குட்டி பாலமே இங்கே கிடையாது என்று சொன்னேன் .....

என் மனைவி :வண்டில இருந்துகிட்டு பேசாம அப்பாவும் ,மகளும் வாங்க என்று சத்தம் போட்டாள்(எலேய் உன் மண்டைல கொட்டினார்கள்ன்னு சொல்லு ன்னு கமெண்ட்ஸ் போடா கூடாது)
நானும் அமைதியா வண்டிய ஓட்டி  என்னோட ஆபீஸ் வந்துட்டோம் .

என் மகள் :அப்பா பாலம்ன  என்ன..........?(தொடர்ந்து விடாம கேள்வி கணைகள் என் மகள் ஆயிற்றே )

நான் :கீழ ட்ரைன்,ஆறு இப்படி போகும் நாம மேல போவோம் அப்படின்னு சொன்னேன்

என் மகள் :ரோடுல மேலே  ஏறி கீழ இறங்கனும் அப்படி தானே என்றாள் .(என்னை மாதிரி என் புள்ள ரொம்ப அறிவாளி டக்குன்னு பாயிண்டுக்கு  வந்துட்டாள் )

நான் :ஆமாம் என்றேன் .......

என் மகள் :நாம ஸ்கூல்க்கு  போகும் போது  மூணு குட்டி  பாலம் வரும் நான் கான்பிக்குறேன் பாருங்க என்றாள் ....

நான் :இல்லை மக்கா குட்டி பாலம் கிடையாது .என்றேன்

என் மனைவி :அவள் வேற எதையோ சொல்லுறா உங்களுக்கு தான் விளங்க மாட்டுது ன்னு சொன்னால்
நான் அதை பற்றி மறந்துவிட்டேன் அவளை பள்ளிக்கு அழைத்து சென்றேன் ...அவள் போகும் வழியில்

என் மகள் :அப்பா இந்த இருக்கு பாரு மூணு பாலம் என்றாள் .

நான் :அவள் கண்பித்ததை பார்த்து தலை சுற்றியது எனக்கு  இது பாலம் இல்லை மக்கான்னு சொன்னேன்

என் மகள் :பைக் ஏறி தானே இறங்குது ....அது பெரிய பாலம் .....இது குட்டி பாலம் ...நான் சொல்வது தான் சரி என்கிறாள்(என் தலைல லாரி யே ஏறி இறங்கினது மாதிரி ஒரு பீலிங் )

அப்படி அவள் என்னதாண்ட காண்பித்தாள்  என்று எல்லோரும் கேக்குறீங்களா .........?
SPEED BREAKER  மக்கா ....காலைலேயே .........ஆரம்பிச்சுட்டா இனி ஸ்கூல் விட்டு வந்து கேப்பா கரெக்ட் விடை சொல்லணும்

தம்பி எஸ் .கே வுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்