Friday, August 17, 2012

லவ் பண்ணுங்க சார்ர்ர்ர்!


லவ் பண்ணுங்க சார்ர்ர்ர்! 

காலைல எட்டு மணி வரை தூங்கிட்டு சரியா பல்லு கூட தேய்க்காம .குளிக்காம நிறைய செண்டா பீச்சு அடிச்சுகிட்டு நேர ஆபிஸ்ல போய்  உக்கார்ந்தா .நேத்து போட்ட வியர்வை நாற்ற சட்டைல  இருந்து சென்ட்டும் சேர்ந்து கப்பு  அடிக்கும் பாருங்க ...பக்கத்துல இருக்குற அட்டு பிகர் கூட உங்கள பார்த்து முறைச்சி கிட்டு தலையில் அடிக்குமே அந்த கொடுமைய பார்க்காம இருக்கணும்ன்ன லவ் பண்ணுங்க சார்!


இதே நீங்க லவ் பண்ணினீங்க வைச்சுக்குவமே, அதி காலைல 5 மணிக்கு குட்மார்னிங் டா செல்லம் காலைல 8 மணிக்கு ஷக்கிலா தெருல மீட் பண்ணுவோம்ன்னு ஒரு எஸ் எம் எஸ் தான் வரும் ! இவன் ஒரு நாளும் பல்லு தேய்க்காம இருக்கிறவன் அன்னைக்கு பினாயில் ஊத்தி வாயக் கழுவி, ஆசிட்ல குளிச்சு சென்ட் பீய்ச்சி அடிச்சுகிட்டுப் போய்  ஈ-ன்னு பல்லக் காண்பிச்சுக்கிட்டு 7.30 கே அங்க போய் அவளப் பிக்கப் பண்ணி, அவ போக வேண்டிய எடத்துல விட்டுகிட்டு, அபீஸ் போய் உக்கார்ந்தா அதே அட்டு பிகர் இவன பார்த்து ஒரு ரொமாண்டிக் லுக் விடுமே பாருங்க ..போங்க சார் அது எல்லாம் அனுபவிக்கனும் சார் ..அதான் சொல்லுறேன் லவ் பண்ணுங்க சார்!
படிச்சு முடிச்சு வெளிநாட்டுக்கு வேலைக்கு போகும்போது உங்க அட்டு பிகர் எண்ணெய் தலைல அடிச்சு சத்தியம் பண்ணிட்டு போவீங்க! போற இடத்துல எந்தப் பொண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்னு! அங்க போனதுக்கப்பறம்தான் உங்க மேலதிகாரியே உங்களுக்கு ப்ரபோஸ் பண்ணும்போதுதான் உறைக்கும்! அய்யய்யோ..தப்பு பண்ணிட்டோமோன்னு! அப்பிடி நீங்க நினைக்க மாட்டீங்களா? அப்ப நீங்க லவ் பண்ணுங்க சார்!


இல்ல நான் லவ் பண்ணமாட்டேன் அப்பா சொல்லுறதக் கேட்டு உருபடுவேன்னு சொன்னா என்னமோ பண்ணுங்க சார், ஆமா உறுப்படியா எதோ ஒரு டிகிரி முடிச்சு வீட்ட காப்பாற்ற வேலைக்கு போவ ..சம்பாதிச்சு அனுப்பினா அவங்களும் உன் பேர்ல போட்டு சேர்த்து வைப்பாங்க ..நீ ஒரு பீடி துண்டு கூட குடிக்காம் ..ஏன் எச்சி பீடி கூட குடிக்காம ,க்வாட்டர் அடிக்காம பணத்த அனுப்பி ஒன்னும் அனுபவிக்காம பணத்த அனுப்பி ..ஹையோ அந்த கொடுமையயும் அனுபவிக்கனும்ன்ன லவ் பண்ணாதீங்க சார்!


இதே நீங்க லவ் பண்ணினா டேய் இன்னைக்கு அந்த பொருக்கி கூட சேர்ந்து பஸ்ஸ்டாண்ட்ல ஒரே பீடியை ரெண்டு பெரும் குடிச்சீங்கலேன்னு என் ஜைன்தவி கேக்கும் போதே அது ஒன்னும் இல்லடி செல்லம்ன்னு பேச்ச மாத்தும் போதே ..டேய் இந்த 50 ரூபாய் பஞ்சு வச்ச சிகரட் குடிடா ன்னு சொல்லும் ..அதுக்கு தான் சொல்லுறேன் லவ் பண்ணுங்க சார்!


இல்ல எங்க அப்பா பார்த்த பொண்ண தான் கட்டிக்குவேன்னு சொன்னா அதுவும் ஒரு டிகிரி முடிச்சிருக்கும் .இப்ப இருக்கிற காலத்துல ரெண்டு பேர் வேலைக்கு போகணும் அதுக்கு ஒரு மாஸ்ட்டர் டிகிரி முடிக்கணும்ன்னு நீ உங்கப்பா கிட்டா சொன்னா ..அவரு அதை கேக்காம உனக்கு ஒரு டிகிரி முடிச்சத கட்டிவைப்பாறு கல்யாணம் முடிஞ்சு நீ அத படிக்க வைக்கணும்! காலைல அடுப்படில ரெண்டு பேருமா பாத்திரத்தப் போட்டு உடைச்சி சமையல் செய்து அரக்க பறக்க ஓடி அவளக் கொண்டு போய் காலேஜ்ல விட்டா! பக்கத்த்துல ஒரு குட்டு பிகரு அண்ணா ன்னு உன்ன கூப்பிட்டு கடுப்ப ஏத்தும் இது தேவையா!


சரி குழந்தை இருந்தா அது கூட விளையாடலாம்னா  காலேஜ் முடிக்கிற வரைக்கும் நோ குழந்தை ன்னு தடா ...அட பாவமே சரி காலேஜ் முடிஞ்சிது இனி குழந்தை பெத்துக்கலாம் ன்னு சொன்னா வேலை கிடைக்கட்டும் அதுக்கு தானே படிச்சேன் ன்னு சொல்லி வேலை தேடுவா ..அப்புறம் வேலை கிடைச்சா இன்னும் ஒரு வருஷம் ஆகிட்டா எனக்கு இன்க்ரீமென்ட் வந்திடும் வேலை பர்மனன்ட் ஆகிடும்ன்னு சொல்லுவா ..அப்போ எனக்கு 40 வயசு ...ஹையா இனி குழந்தை பெத்துக்கலாம்ன்னு சொன்னா ..ஏங்க கண்ணாடில உங்க மூஞ்சிய பார்க்கிறது இல்லையான்னு கேப்பா பாரு ஒரு கேள்வி ..நானும் போய்க் கண்ணாடிய பார்த்தா ..ஒரு முடிகூட தலைல இல்லை ..மீசை கூட வெள்ளை ஆகிடுச்சு ..என்ன கொடுமை பார்த்தீங்களா சார்!


இதே லவ் பண்ணின்னா ..நாங்க மீட் பன்னுவதர்க்காகவே  ஒரு மாஸ்ட்டர் டிகிரி படிக்க போவோம் .. காதல் முத்தி முதல குழந்தைக்கு ஏற்பாடு பண்ணிட்டு கல்யாணம் பற்றி வீட்டுல சொல்லுவோம் ..உங்களுக்கும் ஒரு ஜைன்தவி கிடைக்கட்டும் ..லவ் பண்ணுங்க சார்!


டிஸ்க்கி : இது யாருக்கும் எதிர் பதிவு இல்லை முக்கியமா நண்பன் டெரர் பாண்டியனுக்கு எதிர் பதிவு இல்லை

Saturday, July 14, 2012

ஆசைக்கு ஒரு பொண்ணு ஆஸ்த்திக்கு ஒரு பையன்


ஆசைக்கு ஒரு பொண்ணு  ஆஸ்த்திக்கு ஒரு பையன் எல்லோரும் நினைப்பது இது தான் .இது என் வாழகையிலும் நடந்தேறிவிட்டது .ஆம் இன்றோடு என் பையன் பிறந்து ஒரு மாதம் ஆகிறது .ஜூன் 14 காலை  10 .59 க்கு மகன் பிறந்தான் சந்தோசமான நாள்களில் இதுவும் ஒன்று .

முதலில் நன்றியை இருவருக்கு தெரிவித்து கொள்கிறேன் .உணவு உலகம் சார் மற்றும் பன்னிகுட்டி இருவருக்கும் .இரு குழந்தைகளுக்கு இடையே இடைவெளி தேவை என்று அரசு அறிவித்தாலும் நான் ரொம்ப நாள் கழித்து தான் மற்றொரு குழந்தை பெற்று கொண்டேன் .ஆம் 7 வருடங்கள் கழித்து முதலில் பெண்குழந்தை அதுவே ஒரு பயம் மறுபடியும் பெண் குழந்தை என்றால் நம்மோட பொருளாதாரத்தில் நல்ல விதமாக குழந்தை வளர்க்க முடியுமா என்ற பயம் .ஒவ்வொரு முறை உணவு உலகம் சாரை சந்திக்கும் பொழுது என் மனதை கரைத்த புண்ணியவான் அவரு .அதில் உள்ள நிறைகளை  பக்குவமாக என் மரமண்டைக்கு புரியும் படி எடுத்து கூறிய விதம் அப்படி .அதே மாதிரி பன்னிகுட்டி ஊருக்கு வரும் பொழுது இன்னொன்னு பெத்துக்கோ மக்கா நாளைக்கு அதுகளுக்கு கஷ்ட்டம் ன்னு வந்தா சொந்த பந்தம் இல்லாம நிக்கும்ன்னு சொல்லி இன்னொண்ண பெத்துக்க வச்சிட்டாங்க இந்த இருவரும் .
அதுவும் ரெண்டாவது பையன் என்ற பொழுது என் சந்தோசத்துக்கு அளவே இல்லை .நண்பர்களுக்கு எல்லார்கிட்டேயும் போன்ல தகவல் சொல்லிட்டேன் (நினைக்கிறேன் ).ஆனா உணவு உலகம் சார் கிட்ட மட்டும் இந்த நிமிடம் வர சொல்லலை .ஒவ்வொரு நாள் இன்னைக்கு சொல்லிடனும்ன்னு நினைச்சு போன் எடுத்தாலும் .அவர்  பொண்ணு  கல்யாணத்துக்கு நான் போக முடியாததை நினைத்து போன் பண்ணாம இருந்துவிடுவேன் .மனதுக்கு கஷ்ட்டமாக  இருக்குது  அதான் ஒரு முடிவோட இருக்கேன் .இனி பையனோட நேர்ல போய் ஆசிர்வாதம் வாங்குறதுன்னு முடிவு எடுத்துட்டேன் .அதுக்கு நாளும் நெருங்கிவிட்டது ,கூடிய விரைவில் அவர் வீட்டுக்கு குடும்பத்துடன் போய் காலில் விழுவது என்று முடிவு செய்தாகிவிட்டது .அனேகாமாக ஜூலை கடைசி வாரத்தில் காலில் விழும் வைபோகம் நடக்கும் .
இது எல்லாம் போக கடந்த மூன்று மாதங்களாக மன அழுத்தம் இருந்த சமையத்தில் போரம் ,கூகிள் ப்ளஸ் வராம அமைதியா இருந்த நேரத்துல  கும்மி நண்பர்கள் பதறி போய் போன் பண்ணி கேக்குறது .என் மன அழுத்ததை  வெகுவாக குறைத்தது என்றே சொல்லுவேன் (ஒவ்வொருவரையும் தனியா பேர் சொல்லலை சண்டைக்கு வர கூடாது ....).
சரி இவ்வளோ சந்தோசத்துக்கு காரணம் உணவு உலகம் சார் ,பன்னிகுட்டி மற்றும் கும்மி நண்பர்கள்ன்னு சொல்லுறீயே அவங்களுக்கு என்ன செய்தன்னு இந்த சிரிப்புபோலிஸ்  கேக்குறான் ..அதுக்காக பன்னிகுட்டி ,கும்மின்னு எல்லாம் என் பையனுக்கு பேர் விடமுடியாதுங்க ..ஜூலை 25 பையனுக்கு பேர் சூட்டும் விழா எங்கள் வீட்டில் தேரூர் ,கன்னியாகுமரி மாவட்டத்தில் வைத்து நடைபெறுகிறது அனைவரும் வர வேண்டும் என்று கட்டளை இடுகிறேன் ..
என்னாது ..என்ன பேரா ?அதான் சொல்லிட்டேன்ல பன்னிகுட்டி ,டெரர் கும்மின்னு பேர் வைக்க முடியாதுன்னு சொன்னேன்ல ...யோவ் பேர சொல்லுயான்னு டெரர் கேக்குறான் பாருங்க ..சரி இதாங்க பேரு
 ராம் பிரணவ் சங்கர் .
உணவு உலகம் சார் பேரு இதுல வருது .நான் அவர் பேர் வைக்கணும்ன்னு நினைச்சு வைக்கலை .ஆண் பிள்ளையாக இருந்தால்  சங்கரன்கோவில உள்ள சங்கர நாராயணர் பேரு விடுறேன்னு நினைத்து இருந்தேன் அதான் இந்த பேரு .
ஆனா கடவுளும் நீ இன்னொரு பிள்ளை வேணும்ன்னு முடிவு எடுக்க காரணமாக இருந்த அவர் பேரு வைக்கணும்ன்னு என்று தான் என் மனதில் இப்படி ஒரு எண்ணத்தை விதைத்தாரோ என்னவோ .? . 
அதில் எனக்கு முழு சந்தோசமே ...