Friday, October 29, 2010

பதிவர்களும் பட்டாசுகளும்

நம்ம பதிவுலக நண்பர்களையும்,பட்டாசுகளையும் இணைத்து  ஒரு பதிவு எழுத திடிர்னு  ஐடியா கிடைத்தது.  சரின்னு எழுத ஆரம்பிச்ச பட்டாசு பேரு வரமாட்டுது உடனே வண்டியை எடுத்துட்டு பட்டாசு கடைக்கு போனேன் போய் எல்லா பெயர்களையும் வாங்கி .எந்த எந்த பட்டாசுக்கள் நம்ம பதிவர்களுக்கு பொருந்தும் என்று கீழ போட்டு இருக்கிறேன் .

                                                                                                                                                 

                                             புஸ்வானம் முதலில் லைட்அ தான்  எறியும் அப்புறம்  நல்ல மெல்ல மெல்ல உயர போகும்.
நம்ம தேவா அண்ணாமாதிரி முதல்ல படிக்கும் பொழுது ஸ்லோவா புரியுற மாதிரி  இருக்கும் உள்ளே போக போக அதனின் அர்த்தம் தெரிந்ததும் நல்ல இருக்கும் .

பாம்பு மாத்திரை இது புகையும் ஒரு மாதிரி எறிந்த வாடை அடிக்கும் .ஆனால் இதனால் பயம் இல்லை .
நம்ம கோமாளி செல்வாமொக்கை என்கிற பெயரில் ஒரே புகைய கிளப்பி விட்ருவான் .யாருக்கும் பாதிப்பில்லாமல்.

டபுள் ஷாட் இது ரெண்டு தடவை சத்தம்  கொடுக்கும் ஒன்று கீழ இன்னொன்று மேல போய்  வெடிக்கும்
நம்ம அருண் சினிமா புதிர் போட்டு சாகடிக்கிறது.(கீழே காது கிழிய வெடிக்கிறது )மற்றொன்று தன அனுபவங்களை அழகாக எழுதி எல்லோரையும் ரசிக்க வைப்பது .(மேலே போய் வெடிக்கும் பொழுது காதுக்கு பாதிப்பு  இருக்காது ).

தரை  சக்கரம் இது எப்போதும் ஒரே மாதிரி தான் தரையில் சுற்றும் .இருந்தாலும் திடீர்னு வெடிச்சிரும்.
நம்ம பன்னி குட்டி ராமசாமி ஒரே மாதிரி எப்ப பார்த்தாலும் விஜய பத்தி அதிகமாக பதிவு எழுதுறது .ஆனாலும் திடீர்னு ராமர்பிள்ளை பற்றி எழுதி அசத்துவார் .

கம்பி மத்தாப்பு இதை பெண்களும் சிறுவர்களும் விரும்பி கொளுத்துவார்கள் பயமே இல்லாத ஒன்று
இது நம்ம சௌந்தர் (ரசிகன்)இவர் பதிவை எல்லோரும் படிக்கலாம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டார்

அணு குண்டு இது ஒன்னு வெடிச்சாலும் அந்த ஏரியாவே அதிரும் .காதில் ரத்தம் வரும் அளவுக்கு சத்தம்  இருக்கும் .
இது நம்ம டெர்ரர்.இவர் எப்பாவது ஒரு பதிவு தான் போடுவார் அந்த பதிவு பதிவுலகமே  இவரை பார்த்து பயப்படும் கமெண்ட்ஸ் ல எல்லோரையும் போட்டு அடிப்பார் .ஹி....ஹி ....சில சமயம் வேற ப்ளோக்ல போயும் காதுல ரத்தம் வர அளவுக்கு இவரு அடிவாங்குவாறு 

10000 வால சரவெடி ஒரு தடவ திரிய பத்த வச்சிட்டா போதும் சர சரவென வெடிச்சிகிட்டே இருக்கும் யாரும் கிட்ட போக முடியாது.
இது பட்டபாட்டி ஒரு பதிவு போடுவார் யாராவது  கமெண்ட்ஸ் எழுத கிட்ட போன அவ்வளவு தான் காதுல இருந்து ரத்தம் வரும் அளவுக்கு வசவு இருக்கும்

கேப் ரோல் இதை துப்பாக்கியில் லோட பண்ணியாச்சுன்ன அது பாட்டுக்கு டப்பு..... டப்பு ...ன்னு சுட்டு கிட்டே இருக்கும் .
இது நம்ம மங்குனி பதிவு மாதிரி சின்ன பதிவ தான் இருக்கும்.ஆனா கமெண்ட்ஸ் மட்டும் டப்பு..... டப்பு ...ன்னு சுட்டது மாதிரி விழுந்துகிட்டே இருக்கும்.

500 வால சரவெடி திரிய பத்த வச்சிட்டா சர சரவென வெடிக்கும் ஆனா உடனே அடங்கிடும் .
இது நம்ம வெங்கட் சின்ன பதிவா இருந்தாலும் நச்சுன்னு நல்ல இருக்கும் சீக்கிரம் எல்லோருக்கும் புரியும் படியான சிரிப்பு வெடியாகவும் இருக்கும்..

சாட்டை  இது மொத்தத்துக்கு  பயமே கிடையாது .யாருனாலும்  கொளுத்தலாம் அது பாட்டுக்கு எரிஞ்சிகிட்டே   இருக்கும்
இது நம்ம PSV இவர் பதிவ  எல்லோரும் படிக்கலாம்.யார் கமெண்ட்ஸ் போட்டாலும் சரி ,voteபோட்டாலும் சரி .அவர் கண்டுக்கவே மாட்டார்.அவரு பாட்டுக்கு எழுதிகிட்டே இருப்பார்.


புல்லெட் பாம் இது பார்க்குறதுக்கு சிறிய வெடி மாதரி தான் இருக்கும் ஆனா ரொம்ப பவர்புல் வெடி
இது நம்ம எஸ் .கே கமெண்ட்ஸ் எல்லாம் சும்மா பவர் புல்அ  இருக்கும் .கதை எழுதுவாரு பாருங்க .போரும்ல தான் எழுதுவார் செம ஹிட்(என் அன்பான வேண்டுகோள் எஸ்.கே நீங்க கண்டிப்பாக ப்ளாக்ல ஒரு கதை எழுதணும்).

ராக்கெட் இதுல திரிய பத்த வைச்ச விடனே வானத்தை நோக்கி போகும் அப்படியே காணமல் போய் விடும் .
இது நம்ம வெறும்பய பதிவ முதல் ரெண்டு பாரா நல்ல இருக்கும் கடைசி பார்த்தா சப்பை மேட்டர் மாதிரி பதிவ  முடிசிருவார்

சரி எல்லோருக்கும் தீபாவளி  வாழ்த்துக்கள் மக்கா ...

(எங்கேயோ இருந்து தேவா அண்ணா குரல் )டேய் தம்பி பாபு .ஏன்டா இப்படி இம்சை பண்ணுற .உன் "நண்பன்டாசிரிப்பு போலீஸ் அவனை பற்றி ஒன்னும் சொல்லாம போற ......

தேவா அண்ணா நீங்க சொல்லி நான் கேட்காம இருப்பேனா .இதோ

நமத்துபோன பட்டாசு இதுல  திரியா பத்தவச்ச உடனே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ன்னு சத்தம் கொடுக்கும் ஆனா வெடிக்காது
அதே மாதிரி தான் நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ்  (என்னத்த சொல்லுறது ) அதான் நமத்து போச்சே ........

Fancy shot  இது ரொம்ப காஸ்ட்லியான வெடிங்க .திரியா பத்த வச்சி விட்ட போதும் மேல போய் கலர்புல்அ வெடிக்கும் பாருங்க பார்த்துகிட்டே இருக்கலாம் ......
இது நம்ம இம்சை பாபு வோட பதிவு ....அத சொல்லுறதுக்குள்ள (ஏப்பா டெர்ரர் என் இப்படி கோவ படுற சரி விடுப்பா ...ஸ் ஸ் ஸ் ... அடிக்காதே ......பாருடா அதுக்குள்ள எவனோ கல் எடுத்து எரியுறான் .....சரி மக்கா விடுங்க .)

அடுத்து இந்த தீபாவளி ஸ்பெஷல் போன் வெடி. இது துபாய்ல இருந்து வெடிச்சாலும் இந்தியா வுக்கு கேக்கும் இதுல  என்ன ஸ்பெஷல்னா..............
ச்சே .து ...................இத நான் சொல்ல  கூடாதுன்னு பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொல்லிருக்கு .அவரே கமெண்ட்ஸ்ல வந்து சொல்லுவாரு .வா மக்கா நரி வந்து சொல்லு.

மீண்டும் ஒருவாட்டி எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

எல்லோரும் படித்து விட்டு கண்டிப்பாக ஓட்டு போடவும் . ஏக ஓட்டு பட்டைகள் நண்பர் அருண் எடுத்து வைத்து என்னோட ப்ளாக் அ அழகு படுத்தி தந்திருக்கார்.
Monday, October 25, 2010

நன்றி சொல்ல வந்தேன் ......

STUPID!! WILL YOU DO EVERYTHING THAT I SAID?!
மேல உள்ள வரியை  copy  செய்யவும்  .பின்பு notepad -இல் paste  செய்யவும்

என் அன்பார்ந்த பதிவுலக நண்பர்களே.  என்னையும் மனுசன்னு நினைத்து .எனக்கு ஆதரவளித்த அனைத்து அன்பர்களுக்கும் ,நண்பர்களுக்கும் முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் .

என்னை பதிவு எழுத சொல்லி மக்களாகிய நீங்கள் வற்புறுத்தி வந்தீர்கள் நானும் ஆண்டவன் இன்னும் எனக்கு கட்டளை இட வில்லை என்று சொல்லி வந்தேன் ஆண்டவன் கூறியதால் பதிவு எழுத வந்தேன் நாட்டை திருத்த வேண்டும் என்று தான் என் எண்ணம் ஆனால் இந்த ரமேஷ் இருக்கும் வரை அது நடக்காது என்று தெரியும் என்னைக்காவது ரமேஷை போட்டு தள்ளிவிட்டு என் கடமையை செய்வேன்...!


இருந்தாலும் எல்லோருக்கும் என் நன்றியை வித்தியாசமான முறையில் தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது .அதனால் மேல உள்ள line-ஐ copy செய்து notepad -இல் paste செய்யவும் ...

இது என் நண்பர்களுக்கு மட்டும் தான்.

என் முதல் எதிரியான terror இதை பார்க்க வேண்டாம் ....

முக்கியமாக  வயதில் மூத்தவரான தேவா அண்ணா,கே .ஆர் .பி,PSV.இவர்கள் இதை பரிசோதித்து பார்க்க கூடாது (புரிஞ்சிகோங்க ....)


Thursday, October 21, 2010

தீபாவளி வந்தாச்சு ..

                                                  
தீபாவளிக்கு இன்னும் ரெண்டு வாரங்களே உள்ளன எல்லோரும் புத்தாடை வாங்கியாச்சா?. தீபாவளி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் சந்தோசம் .சின்ன வயதில் தீபாவளி கொண்டாடியதை நினைத்து பார்கிறேன் .

                                                          
தீபாவளி ஒரு வாரம் இருக்கும் போதே தீபாவளி பற்றி தான் பேச்சு இருக்கும் அம்மா பலகாரம் எல்லாம் சுட்டு வைப்பார்கள் , பட்டாசு எல்லாம் வாங்கி வைத்து இருப்பாங்க அதை எடுத்து நாங்களும் பட்டாசு வாங்கிட்டோம்ன்னு சும்மா ரெண்டு வெடித்து காட்டுவோம்.காலையில் சர்வ சாதரணமாக 5.30மணிக்கு எழுதிருப்பேன் ஆனால்  தீபாவளி அன்று தூக்கமே வராது என்னோட நண்பர்கள் எழுந்திருக்கும் முன் நான் போய் முதலில் பட்டாசு வெடிக்கணும்னு ஒரு ஆவல் .நாலு மணிக்கே எந்திரிச்சு அம்மா எண்ணெய் தேய்கவா என்று கேட்பது .அம்மா இல்லைடா இன்னும் நேரம் இருக்கிறது என்பார்கள் . கடைசியில் காலையில் குளித்து பட்டாசு வெடிப்போம் அதுவும் சும்மா பந்தா பண்ண மிளகாய் வெடியை கையில் எடுத்து பற்ற வைத்து தூக்கி போடுவோம். நாங்க எல்லாம் யாரு டெரருக்கே டெரர் காட்டுவோம்

அதுவும் இல்லாமல் யார் வீட்டின் முன்பு அதிகமாக பட்டாசு பேப்பர் கிடக்கிறதோ அவர்கள் தான் நிறைய பட்டாசு வாங்கி இருகாங்கன்னு அர்த்தம்.அதனால் பட்டாசு வாங்கும் பொது லக்ஷ்மி அவுட் ,குருவி அவுட் இப்படி பேப்பர் நிறைய சேரும்லா அந்த பட்டாசுகளை வீட்டில் சண்டை போட்டு வாங்குவோம் அப்படி வீட்டு முன்னாடி சேர்ந்து இருக்கும் அந்த பேப்பரை எல்லாம் கொள்ளுதி நைட் 12மணி வரை அட்டகாசம் பண்ணுவோம் இது எல்லாம் 9ஆம் வகுப்பு வரை தான் அதற்கப்புறம் கொஞ்சம் பெரிய பையனாக ஆனவுடன் பட்டாசின் மீது ஆசை தீர்ந்து விடுகிறது

அப்புறம் விதம் விதமாக டிரஸ் எடுக்க வேண்டும் .வீட்டில் அப்பாவிடம் பட்டாசுக்குனு காசு வாங்கிட்டு போய் டிரஸ் வாங்கிட்டு வருவோம் .அப்புறம் அந்த டிரஸை போட்டு கிட்டு நண்பர்கள் வீட்டுக்கு அப்படியே ஒரு ரவுண்டு (எல்லோருக்கும் நாங்க போட்டு இருக்கும் டிரஸ் காட்டுவோம்) அவர்கள் வீட்டில் சுட்டு இருக்கும் பலகாரங்களை சாபிட்டுக்கிட்டு வெளியே வருவோம்  .

முன்பெல்லாம் எறி  பட்டாசு உண்டு இப்போது அது தடை செய்யப்பட்டு   உள்ளது அதை கொஞ்சம் பாக்கெட்ல  போட்டு கிட்டு நண்பர்கள் புடை சூழ அவங்க அவங்க பிடிச்ச தெரு வழிய போவோம்.அங்கு போய்  அதை சுவரில் எறிவோம் அப்ப தானே அவங்க வெளிய வருவாங்க (புரிஞ்சுகங்கப்பா ).இது 12 ஆம் வகுப்பு வரை .

 அதற்கப்புறம் காலேஜ் .பிரெண்ட்ஸ் கிட்ட அப்படியே ஒரு பொய் சொல்வோம் மக்கா நேத்து நைட் செம்ம பார்ட்டி சரியான டைட் (எல்லாம் ஒரு பில்டப் தான்).அதுக்கப்புறம் சின்ன பசங்க பட்டாசு வெடிக்கிறத    கேலி செய்ஞ்சு கிட்டு அவன் பத்தியை கிட்டே கொண்டு போகும் போது டமார்ன்னு சத்தம் போடுறது .அவன் அழுதுகிட்டே அம்மா கிட்ட போய் சொல்லுவான் .அவன் அம்மா வெளியே வந்து மக்கா புள்ளைய பயமுறுத்தாதே, தம்பி மக்கா என்பார்கள் சரி சித்தின்னு சொல்லிக்கிட்டு அப்படியே நண்பர்கள் புடை சூழ நம்ம தலைவர் நடிச்ச படத்த பார்க்க போறது மத்தியானம் வீட்டுக்கு வந்து பிரியாணியை ஒரு புடி ..ஹையோ ஐயோ தீபாவளின்ன அப்படி ஜாலியா இருக்கும் .ஊரில் தீபாவளி விழா கொண்டாடுவோம் விளையாட்டு போட்டி ,பாட்டு போட்டி இப்படி பலவிதமாக சந்தோஷ திருவிழா .இரவு திரைகட்டி படம் போடுவாங்க ஊரே வந்து படம் பார்க்கும் .

                                                  
ஒரு தடவை நான் 12வகுப்பு படிக்கும் போது ஒரு பெரிய ஆள் நல்ல தண்ணி அடிச்சிட்டு வந்தாரு  என் நண்பன்  ஒருத்தன் அனு குண்டு ஒன்னு கொளுத்தினான் அது சரியா வெடிக்கலா உடனே அதை காலால்  எட்டி மிதித்து தள்ளி விட்டான்.அந்த ஆள் அதை எடுத்து தன பேண்ட் பாக்கெட்ல போட்டுட்டான் . என் நண்பனும் அடுத்த குண்டை கொளுத்தினான் ஆனால் ரெண்டு சவுண்ட் கேட்டது .திரும்பி பார்த்தா அந்த ஆள் ஆ ........ஓஒ .....ன்னு சத்தம் போடுறாரு .பாக்கெட்ல இருந்த குண்டு  வெடிச்சிட்டு கற்பனை பண்ணி  பாருங்க. இப்ப நினச்சாலும் நெஞ்சு பதறது பிறகு எல்லோரும் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி நோக்கி ஓடினார்கள் . விளையாட்டு விபரீதம் ஆகிவிட்டது ....

இப்ப என்ன எல்லோரும் தீபாவளி கொண்டாடுறாங்க .எல்லாம் குளிச்சிட்டு பேருக்கு ரெண்டு பட்டாசு விட்டுகிட்டு தொலைகட்சி பெட்டி முன்பு இருகாங்க.அப்போ இருந்த தீபாவளி வேற இப்ப பசங்க கொண்டாடுற தீபாவளி வேற ............

சரி எல்லோருக்கும் தீபாவளி நல்  வாழ்த்துக்கள்.

குட்டீஸ் இருக்கும் வீட்டில் அப்பா மார்கள் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் பொழுது பக்கத்தில் இருந்து பார்த்து கொள்ளவும் .அத விட்டு போட்டு யாராவது தொலைகாட்சில பட்டிமன்றம் பார்த்தேன் ,திரிஷா சிரிச்சான்னு சொல்லாம குழந்தைகளுடன் சந்தோசமாக தீபாவளி கொண்டாடுங்கள் .. 

Wednesday, October 13, 2010

பிரபலபதிவர் தள்ளிக்கிட்டு வந்த புது பைக்

இது ஒரு பிரபல பதிவரின் பைக் .

இது எங்க வாங்கினாரு .எப்படி வாங்கினாரு என்பதல்லாம் எனக்கு தெரியாது .

இவரு தனியாக வீடு வாடகைக்கு புடிச்சு .வாஷிங் மிசின்,fridge ,A/C,இலவச காஸ் அடுப்பு ,இலவச கலர் T .V .ஊரில் இலவச வீட்டு  மனை பட்டா எல்லாம் வாங்கிட்டாரு .ஆனா..........................

இன்னும் கலயாணம் பண்ண பொண்ணு மட்டும் கிடைக்க வில்லை  .

அந்த பிரபல பதிவர் யாருன்னு உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறன்.பிரபல பதிவர் கிட்ட கால காலத்துல ஒரு பொண்ண பார்த்து மாலைய  கழுத்துல போடுடா ன்னு சொன்ன .பயபுள்ள பைக் கழுத்துல மாலையை போட்டு இருக்கான் பாருங்க ?

இதில் இன்னொரு காமெடி  வேற இருக்கு. கேட்ட எனக்கே தலை சுத்துது பிரபல பதிவருக்கு இன்னும் பைக் ஓட்ட தெரியாது .  அந்த  பைக் அ எங்க இருந்து எடுத்தாரோ ஆங்கே இருந்து தள்ளிகிட்டு வந்திருகார்னா   பாருங்களேன் .    அதான் நான்  சொன்னேன் ரெண்டு மாடு வாங்கி வண்டி ஓட்டுடான்னு  சொன்ன கேக்கமாட்டுறான் . பிரபல பதிவருக்கு வேற இன்னும்  கல்யாணம்   ஆகலை பைக் ஓட்டி  படிக்கும் பொது கீழ விழ வேண்டியது இருக்கும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்ய போறனோ .


இன்னொரு பிரபல பதிவர் தம்பி நீ கூடிய சீக்கிரம் கார் வாங்கனும்ன்னு வேற வாழ்த்தி இருக்கார்.(நீங்க தான் ஆஸ்பத்திரி செலவு செய்ய வேண்டியது வரும் )

யோவ்  மங்குனி , பன்னிகுட்டி ராமசாமி , terror , செல்வா , அருண்  இது என் பைக் ரெண்டு நாளா காணலை தேடிகிட்டு இருக்கேன் அப்படின்னு சொல்ல கூடாது . இது திருட்டு பைக்  இல்லை. இதுக்கு மேலயும் இல்ல என் பைக் காணலைன்னு சொன்ன சிரிப்பு போலீஸ் கிட்ட புகார் மனு கொடுக்கவும்

டிஸ்கி : அந்த பைக் வாங்கின பிரபல பதிவர பார்த்த விறைப்பா நிக்கிற போலீஸ்காரன் கூட சிரிப்பா சிரிப்பான்

Sunday, October 10, 2010

நண்பன்டா(சவால் சிறுகதை)

இடம் :HEB கிளினிக் சென்னை

A/C அறையில் மயக்கம் தெளிந்த நிலையில் இன்ஸ்பெக்டர் காமினி படுத்து இருக்கிறாள்.தன் சிந்தனை முழுவதும் அபர்ணாவை எப்படியாவது காப்பற்ற  வேண்டும் என்ற வேகம். மனதும் ,சிந்தனையும் படுத்து இருக்காதே விரைந்து செயல் படு என்று கூறுகிறது அனால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது .டாக்டரும் ,ரெண்டு நர்சுகளும்.காமினி அருகில் வந்து நிற்கிறார்கள் .

டாக்டர் காமினியை பார்த்து என்னாச்சு இன்ஸ்பெக்டர் ஏன் மயக்கம் போட்டு விழுந்தீர்கள் என்று கேட்டு கொண்டே ஊசி போடுகிறார் .

"காமினி ஒன்றுமில்லை டாக்டர் காலையில் சரியாக சாப்பிட வில்லை அதனால தான என்னோவோ தெரியலை "என்றாள்
ஆனால் மனம் முழுவதும் அபர்ணாவை எண்ணி கொண்டே இருக்கிறது.தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் ஆபத்து என்று மனம் கூறிக்கொண்டே இருக்கிறது

டாக்டர் "காமினி நீங்க ரெண்டு நாள் நல்ல ரெஸ்ட் எடுக்க வேண்டும்" .

காமினி சரி டாக்டர் .

டாக்டரும் ,நர்சுகளும் அறையை விட்டு சென்ற உடன்

காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
 
நேராக ஆட்டோ ஸ்டாண்டின் பக்கம் போய் ஆட்டோ என்றாள் .ஒரு ஆட்டோகாரன் வணக்கம அம்மா என்றான் .இவனுக்கு நான் இன்ஸ்பெக்டர் என்பது தெரிந்திருக்கிறது என்று மனதினுள் நினைத்து கொண்டாள்.

ஆமாம் .வீட்டுக்கு போப்பா என்றாள் காமினி ......

வீடு வந்தது காமினி பிறகு ஸ்டேஷன் க்கு  வந்து காசு வாங்கிகொள் என்றாள் .சரிம்மா என்று ஆட்டோகாரன் சென்று விட்டான்.

வீட்டிற்க்கு வந்து அழைப்பு மணியை அமுக்கினாள் .

தன் கணவர் பாஸ்கரன் வந்து கதவை திறந்தான்

என்னங்க எதாவது போன் வந்ததா   என்றாள் வீட்டினுள் வந்தவாறே.
கதவின் பின்னால் ஒருவன் நின்று கதவை மூடிக்கொண்டு 

 “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா."

சிவா வைர கடத்தல் கும்பலின் தலைவன் பரந்தாமனின் தம்பி ........காமினி மேடம் நீங்க நேற்று  பிடித்த வைரம் எங்கே என்றான் .

காமினி இது யாரு உன் நண்பர் என்று சொன்னான் .
"காமினி மேடம் வர சொன்னாங்க  வீட்டுக்கு என்றான்" இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவாய் என்று கூறினான் அதனால் தான்  உள்ளே இருக்க சொன்னேன் என்று எதுவும் தெரியாத தன் அப்பாவி கணவன் பாஸ்கரன் சொன்னார் .

என் மகள் அபர்ணாவை நான் பார்க்கணும் பார்த்தால் தான் நான் வைரத்தை உன்னிடம் ஒப்டைபேன் என்றாள் ....

பாஸ்கரன் "மகளை கடத்தி விட்டார்களா " என்றான் கண் கலங்கியபடி.

நீங்க அமைதியாக இருங்கள் யாருக்கும் எந்த தகவலும் கொடுக்கவேண்டாம் என் துறையையும் சேர்த்து தான் சொல்கிறேன் ....என்றாள் காமினி ....
சரி என்றான் பாஸ்கரன் ........

காமினி சிவாவுடன்  ஆட்டோ ஸ்டான்ட் நோக்கி நடந்து சென்றாள் .
"ஆட்டோ " என்றான் சிவா 
ஆட்டோ காரன் வந்தான், தான் வீடு வந்த அதே ஆட்டோகாரன் .வணக்கம் அம்மா என்றான்.

இவன் யாரு அந்த ஸ்டாண்டில் நின்றே அதே ஆட்டோகாரன் இங்கும் நிற்கிறான் என்று எண்ணினாள் .ஒரு வேளை இவனோட ஆளாகவே இருக்கலாம் .
"சிவா இடத்தை சொல்லுங்க என்றாள் " காமினி .
காமினியின் எண்ணம் முழுவதும் தான் செல்ல மகளுக்கு ஒன்றும் ஆகிற  கூடாது என்றே எண்ணமே வியாபித்திருந்தது .

ஆட்டோ சிவா சொன்ன வீட்டின் அருகில் போய் நின்றது .சிவா ஆட்டோவுக்கு 100 ரூபாய் நீட்டினான் .ஆட்டோகாரன் சென்றவுடன்  போய் கதவை தட்டினான் .

கதவை திறந்தவுடன்  உள்ளே இருவரும் சென்றனர் .

வீட்டினுள் பத்து பேர் இருந்தனர்.உள்ளே இருந்து  பரந்தாமன் வந்தான் .

"வாங்க இன்ஸ்பெக்டர் காமினி .வைரம் எங்கே என்றான் " பரந்தாமன்

தன் ஹான்ட்பாக்கில் இருந்த வைரத்தை எடுத்து காட்டினால் காமினி

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"என் மகளை முதலில் என்னிடம்  ஒப்பதைதால்  தான் வைரத்தை தருவேன் "என்றாள்

பரந்தாமன் சிரித்தான் .நீ என் இடத்தில் தன்னம் தனியாக இருக்கிறாய் .என்னால் உன்னை எதுவும் செய்ய முடியும் ஆனால் எனக்கு வைரம் தான்  முக்கியம் அது பல கோடி ரூபாய் மதிப்புள்ளது.என்றான்

உள்ளே இருந்து ஒருவன் அபர்ணாவை அழைத்து  கொண்டு வந்தான் ......
"அம்மா " என்று ஓடிவந்தாள் அபர்ணா

தன் குழந்தையை அழைத்து  கொண்டு வெளியே வரும் வேளையில்

கதவை உடைத்து கொண்டு 20போலீஸ் உள்ளே வந்து அனைவரயும் சுற்றி வளைத்து கைது செய்தது .

கூடவே அந்த ஆட்டோகாரனும் நின்றான் தன் கணவருடன் ............

பாஸ்கரன் தன் குழந்தையை தூக்கி கொண்டு .........
இவன் நம் பக்கத்துக்கு தெருவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுகிறான் .என் பள்ளி நண்பன்

உன்னை நன்றாக  தெரியும் .ஒரு சவாரியை  ஆஸ்பத்திரியில் இறக்கி விட வந்தவன் வேற சவாரி கிடைக்காத என்று பார்த்த பொழுது நீ கூப்பிட்டு இருக்கிறாய் .நேராக வந்து இறக்கி விட்டான். பின்பு அதே ஆட்டோவில் சிவாவும் ,நீயும் போய் இருக்கீங்க.
போகும் பொது உன் முகம் ரொம்ப சோகமாக இருப்பதாய் பார்த்து விட்டு நேரா  நம் வீட்டுக்கு வந்து விஷத்தை கேட்டான் .நான் சொல்லமாட்டேன் என்றேன் அவன் நான் உன் "நண்பன்டா"என்ன விசயம் என்று வற்புறுத்தினான் .நானும் சொல்லிவிட்டேன் .

உடனே அவன் என்னையும் அதே ஆட்டோவில் ஏற்றி கொண்டு உன் B2 போலீஸ் ஸ்டேஷன்ல போய் எல்லா  விசயத்தையும் கூறினான் .

அவர்கள் இடத்தை மட்டும் காட்டு மற்றதை நங்கள் பார்த்து கொள்கிறோம் என்றனர் .

இதோ அனைவரும் கைது செய்ய பட்டனர் .....

காமினி ஆட்டோ காரனிடம் உனது பேர் என்றாள்

"பாபு "என்றான்

பாபு இன்றில் இருந்து நீ என் உடன்பிறவா  சகோதரன் என்றாள் .

பாஸ்கரனுக்கு தன் நண்பனால் தன் குழந்தை பத்திரமாக கிடைத்தது ........


Friday, October 8, 2010

3 இடியட் ஹீரோ செலக்சன்?


                                                                     

3 idiots படத்துக்கு நம்ம டாக்டர் தம்பியா தூக்கிட்டு அந்த இடத்தில நம் பதிவுலகில் இருந்து யாரயாவது தேர்ந்து எடுக்கணும் னு சொல்லி சங்கர் நேத்து என் வீட்டுக்கு வந்து ஒரே தொந்தரவு .அதுவுமில்லாமல் நம்ம பன்னி குட்டி வேற விஜய் கூட யார் நடிகிரதுன்னு நேத்து ஒரு பதிவ போட்டு அதுல 200 கமெண்ட்ஸ் வந்து அவர் hospital அட்மிட் ஆகி குளுகோஸ் எத்துறாரு .PHANTOM மோகன் ,முத்து இவர்களை செலக்ட் பண்னி இருந்தாரு அனால் அவர்கள் இருவரும் விஜய் கூட நான் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் .டைரக்டர் ஷங்கர் க்கு கஷ்ட நிலைமை .

எதவாது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து பதிவுலகில் உள்ள எனக்கு தெரிந்த நபர்களின் பெயரை கொடுத்தேன் ,அவர் பார்த்து இத்தனை பேரா? இதில் இருந்து ஒரு ஆளை செலக்ட் பண்ணுவோம் .இன்னொருத்தர் ஆண்டெர்சன் என்று நேத்து பண்னி பதிவில் நிறைய பேர் சொல்லிவிட்டதால் அவர்தான். சரி இன்னொரு நபர் பதிவுலகில் இருந்து யார் என்று எல்லோரையும் ஒரு கணக்கு போட்டு கேளுங்கள் என்றார் .கீழே கணக்கு உள்ளது நீங்கள் உங்களுக்கு பிடித்தவரை நீங்களே தேர்வு செய்யலாம்

1 .தேவா அண்ணா

2 .terror

3 .சிரிப்பு போலீஸ் ரமேஷ்

4 .பன்னி குட்டி ராமசாமி

5 .மங்குனி அமைச்சர்

6 .சௌந்தர்

7 கோமாளி செல்வா

8 .ஜெ அண்ணன்

9 .இம்ம்சை அரசன் பாபுSTEP 1 :   1 -9 இதற்குள் ஒரு எண்ணை தேர்வு செய்யவும் ........STEP :2     அந்த எண்ணை 3 ஆல் பெருக்கவும்(multiply )STEP 3 :   பெருக்கிய  எண்ணை 3 ஆல் கூட்டவும்(add )STEP 4 :   கூட்டிய எண்ணை 3 ஆல் திரும்பவும்  பெருக்கவும்(multiply )பின்பு ஒரு இரட்டை இலக்க எண் அல்லது மூன்று இலக்க எண் வரும் அதை கூட்டவும் .அந்த எண் தான் உங்களுக்கு பதிவுலகில் ரொம்ப பிடித்த நபர்


@@@@@@@@@@@

@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@


@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@

@@@@@@@@@@@

@@@@@@@@@@@

@@@@@@@@@@@


@@@@@@@@@@@

@@@@@@@@@@@


அட என்ன ஆச்சரியம் எல்லோரும் விஜய் க்கு பதிலா  என்னை புடிக்கும் என்று எல்லோரும் சொல்லுறீங்க ....

எல்லோரும் பாசகார பயலுக ...........

ரொம்ப நன்றி :

குறிப்பு :எனக்கு இந்த தலைப்புல நடிக்க புடிக்கல அதனால என்னிடம் terror  நான் நடிக்கிறேன் அப்படி கேட்டதனாலே அவருக்காக இந்த ஹீரோ சான்ஸ் அ விட்டு கொடுக்கிறேன்

Wednesday, October 6, 2010

வாழ்த்துகள் அண்ணா..... நோ நோ.. வாழ்த்துகள் மாப்ஸ்

இவருதான் அவரு.....


சில வருடங்களுக்கு முன்னால் அக்டோபர் 7ஆம் தேதி இரவு நேரம் நல்ல மழை பெய்தது கொண்டு இருந்தது ஒரே பதட்டம் இரு உயிர் உள்ளே போராடி கொண்டு இருந்தது இன்னொரு உயிர் வெளியே சொல்ல முடியாதா தவிப்பில் இருந்தது மிகுந்த போராட்டத்திற்கு பின் அப்போது மெல்லிய ஒரு குரல் ஒலித்தது சுப்பையா குடும்பத்தில் அடுத்த வாரிசு பிறந்தது,

எப்படி கர்ணனுக்கு பிறக்கும் போதே கவச குண்டலங்கள் இருந்ததோ அதை போல் இவருக்கு கண்ணாடி இருந்தது

இருங்க இருங்க இப்போ தான் எனக்கு ஒரு பாட்டு நினைவுக்கு வருது.........

(இதை குணா படத்தில் வரும் பாடலை நினைத்து வாசிக்கவும் )

தேவா அண்ணனே, அன்போட தம்பி நான்......... நான்... எழுதும் ....

மடல் ......இல்ல லெட்டர் ..இல்ல .........கவிதைன்னு......இல்ல..... பிறந்தநாள் வாழ்த்துன்னு வச்சுக்கலாம்..........

இடை இடையே ..அன்புள்ளவரே ....கவிங்கனே .....போட்டுகோங்க...........

உன்னை நினச்சு பார்கைலே கவிதை அருவிய கொட்டுது (கருப்பு கண்ணாடி ஞாபகம் வருது ).......... ஆனா எழுத தான் அந்த வார்த்தை...

அதை நினைத்து  பார்கைலே கண்ணு சொக்குது.. எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது.......

அதே தான்....அதே தான் ...........

இடை இடையே ..அன்புள்ளவரே ....கவிங்கனே .....போட்டுகூங்க...........

தேவா......தேவா .........

உண்டான மொழிகள் எல்லாம் மறந்து போகும் தன்னாலே ......தன்னாலே ..........

மனிதர் உணர்ந்து கொள்ள இது தமிழ் மொழி .....அல்ல .........அல்ல ........அல்ல..........

அதையும் தாண்டி...............வ்ர்த்வுத்ட்ன்வ் .(கண்டுபிடிங்க பார்ப்போம் )..................

அது என்ன மாயோமோ தெரியலை நீங்கள் எழுதும் சில பதிவுகள் மட்டும் புரியவே மாட்டுது .....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா..........

என்னை பதிவுலகில் தம்பி...... என்று அழைப்பவர்கள் இருவர் ஒன்று தேவா மற்றொன்று ஜெ ...


பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா ........


அன்புடன்,
பாபு.


எலேய் இம்சை!!! என்னாது இது??? இவ்வளோ சின்ன போஸ்ட் கொடுத்து பப்ளிஷ் பண்ண சொல்லி இருக்க?? மாப்ஸ் யாரு... அவரு ரேஞ்சி என்ன (எவனுக்கு தெரியும்...). ஒரு நாலு பக்கம் எழுத வேண்டாம். அதை படிச்சி நாலு பேரு பைத்தியம் ஆக வேண்டாம்.... என்னா புள்ள நீங்க. இப்பொ நான் எழுதரேன் பாருங்க....

பாபு சொன்ன அதே இரவில்.. இரவின் நிசப்தத்தில் தவழ்ந்து வரும் ஒரு சிறிய இன்னிசை... அது வீனையின் நாதம் அல்ல, புல்லாங்குழலின் பிரவசத்தில் வந்த ஓசை அல்ல, ஒரு சிசுவின் கீதம்... ஆம் நமது பதிவுலகின் செல்ல பிள்ளை அவதரித்து விட்டான் (நேத்து பொறந்த பயலுக்கு என்ன மரியாதை...).

அந்த பிள்ளையின் பார்வையில் ஒரு தேடல் இருந்தது. பார்க்கும் விஷயம் எல்லாம் பாட்டாக மாற்றி பறக்க விட்டான். கேடில்லா விஷயங்களை கேட்டு பாடுபடாமல் பதிவாக்கி மக்களுக்கு கொடுத்தான் (ங்கொய்யால நல்ல கேப் விட்டு எழுதி இருக்கேன்.. இழுத்து போட்டு கும்முங்கட...). 

அவனது ஞானம் செருக்கில்லாமல் பலருக்கு பதிவுலகில் வழி காட்டியது. ஆன்மிகத்தில ஆழ சொன்று பல அறிய விஷயங்களை அள்ளி வந்தான். அதை அவரது அழகிய பதிவுகள் மூலம் எல்லாருக்கும் சொல்லி தந்தார் (இப்பொ வளந்துடாரு அதான் மருவாதி...).

கனவுகளையும், கற்பனைகளையும் கலந்து கவிதையாக்கினார். வார்த்தை உளி கொண்டு சிறுகதை சிற்பம் செதுக்கினார். காதலால் கசிந்து அதை சுவாசித்தார். இவர் ஜெய்க்க பிறந்தவர்.. பதிவுலகில் பல இதயங்களை ஜெய்த்தவர் (அட அவரு தம்பிகளை சொன்னேன்பா...). 

அட போ மாப்ஸ்!! இதை மாதிரி எல்லாம் மொக்கையா எழுதினா கடுப்பா இருக்கு. பிரிவியு பர்த்தா எனக்கே போர் அடிக்குது..... யாரயாவது நக்கல் அடிக்கனுமா சொல்லு செய்ரேன். ஹலோ பொது மக்களே!! மேல ஒரு போட்டோ பாத்திங்க இல்ல?? அவரு தான் தேவா. ரொம்ப நல்லவரு தினமும் ஒரு பதிவு எழுதர அளவு மூளை  இருக்க வல்லவரு. இதான் அவரு லிங்க். நீங்களே போய் படிச்சி பாருங்க (ஒரு நிமிஷம்... ரொம்ப பழைய பதிவு எல்லாம் படிக்காதிங்க புரியாது. நானே ரீசண்ட் பதிவு படிச்சி தான் இவர் விசிறி ஆனேன்).  நாளைக்கு அவருக்கு பிறந்த நாள் எல்லாரும் மறக்காம வாழ்த்துங்க.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மாப்ஸ்!! தொடர்ந்து கலக்குங்க!!

நன்தான் மாப்ஸ்
டெரர்

எல்லோரும் இங்கேயும் வந்து வாழ்த்துங்க

.

Tuesday, October 5, 2010

நோபெல் பரிசு

எதவாது நல்ல பதிவா எழுதுங்க அப்படின்னு நிறைய பேரு சொல்லிகிட்டே இருகாங்க .நானும் என்னால் முடிந்த அளவு எழுதுகிறேன் அனாலும் எதாவது குறை வந்திருது .இப்பவும் அதே மாதிரி நல்ல பதிவு தாங்க இது தைரியமா எல்லோரும் வந்து படிக்கலாம் .படிச்சிட்டு எல்லோரும் கண்டிப்பாக vote போடுங்க .

மறுந்துராம எல்லோரும் கும்மி அடிக்கணும் அப்படி இருந்த இந்த பதிவா படிங்க ..........இல்லேன்னா படிக்காதீங்க எனக்கு என் தலைவர் சொன்னது ரொம்ப புடிக்கும்.சந்தோசம் தான் வாழ்க்கைங்க....................இந்த தத்துவத்தின் படி வாழுறேங்க .....நாளை என்ன நடுக்குமோ என்றே பயத்துடனே வாழுறேன்.........ஆனா இன்னைக்கு சந்தோசமாக இருக்கிறேன் .சரி விசயத்துக்கு வரேன் .........
                                          

 நோபெல் பரிசு இந்த தடவை சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த ராபர்ட் எட்வர்ட்ஸ் விஞ்ஞானிக்கு கொடுத்துருக்காங்க. மருத்துவத்துக்கான நோபெல் பரிசை பெறுகிறார் .இவர் இங்கிலாந்து நாட்டை சார்ந்தவர்.இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத கோடானு கோடி பேருக்கு இன்று பெரும் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது .இவர்களுக்கு சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த தந்தவர் .இன் விட்ரோ பெர்டிலைசேஷன் எனப்படும் IVF முறையைத்தான் சுருக்கமாக சோதனைக் குழாய் குழந்தை என்கிறோம் .

இதன் மூலம் 1978இல் முதல் சோதனை குழாய் பிறந்தது .இதன் மூலம் இன்று வரை 50லட்சத்திற்கும் மேலானவர்கள் பயன் அடைந்து உள்ளார்கள் .இன்று கோடானு கோடி பேருக்கு இந்த சோதனைக் குழாய் குழந்தை முறை மிகப் பெரிய வரப் பிரசாதமாக உள்ளது.தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் ராபர்ட். இவருக்கு 85 வயது ஆகிறது.

ராபர்ட்டுடன் சேர்ந்து இந்த ஆய்வு மற்றும் கருத்தரிப்பில் ஈடுபட்டவர் பாட்ரிக் ஸ்டெப்டோ. இவர் 1988ம் ஆண்டு இறந்து விட்டார்.பெண்ணின் கருமுட்டைகளை வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத்து, ஆணின் வி்ந்தனுவுடன் சேர்த்து அதை கருத்தரிக்கச் செய்து பின்னர் கருப்பைக்குள் செலுத்தும் முறைதான் இந்த சோதனைக் குழாய் குழந்தை முறை .

உலகம் முழுவதும் மலட்டுத்தன்மை, கருத்தரிக்க இயலாத சூழ்நிலை ஆகியவற்றால் பெரும் பாதிப்பை சந்திக்கும் மனித குலத்துக்கு மிகப் பெரிய வரப் பிரசாதம் ராபர்ட்டின் கண்டுபிடிப்பு என நோபல் பரிசுக் கமிட்டி தெரிவித்துள்ளது.


நம்ம தமிழ் நாட்டை பொறுத்தவரை டாக்டர் கமலா செல்வராஜ் அவர்கள் இதில் சிறந்து விளங்குகிறார் .இவர் நம்ம ஜெமினி கணேசன் பொண்ணு .இவர் மூலம் நிறைய பேர் இன்று குழந்தை பாக்கியம் பெற்று சந்தோசமாக வாழ்கின்றனர்.கமலா செல்வராஜை தொடர்ந்து நிறைய டாக்டர்கள்(யோவ் பன்னி குட்டி டாக்டர் தம்பி விஜய் இல்லை ) இப்பொழுது சோதனை குழாய் கருத்தரிப்பை செய்துவருகின்றனர்.


என்னை பொறுத்த வரை இவர்க்கு கொடுத்ததை நான் வரவேற்கிறேன். இதன் மூலன் எத்தனை விவாகரத்து நடைபெறாமல் தடுத்திருக்கிறார் என்பதை மட்டும் நான் யோசிக்கிறேன்.எத்தனை குடும்பத்தில் வாரிசுகள் வர காரணமாக இருந்திருக்கிறார்.


நல்ல காலம் அமைதிக்கான நோபெல் பரிசு ஒபாமாவுக்கு கொடுத்தது மாதிரி தவறான் ஒரு நபருக்கு கொடுக்க வில்லை என்பதில் ஒரு சந்தோசம்.