Monday, December 26, 2011

டெரர் கும்மி விருதுகள் ..


அனைவருக்கும் வணக்கம்,

கொஞ்சம் இருங்க.. இது என் ப்ளாக்தானான்னு செக் பண்ணிட்டு வர்றேன்... ம்ம்... என்னோட ப்ளாக்தான், நல்லவேள ஆட்சி மாறிடுச்சு.. இல்லைனா இதையும் பட்டா போட்ருப்பாங்க. சரி.. அரசியல் பேச இங்க வரலை... லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கேன். எங்களோட டெரர் கும்மிய பத்தி நான் உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை. அதன் மணமும் அங்க உள்ளவங்களோட மனசும் உங்களுக்கு நல்லாவே தெரியும்.  கதை ,HUNT FOR HINT போட்டின்னு கலந்து கட்டி அடிச்சது  நாங்க தான் .

அதுக்கெல்லாம் ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி சொல்லிவிடுகிறேன்.இப்ப நாங்க விருதுகளோட வர்றோம். கண்டிப்பா அனைவரும் கலந்துக்கங்க. அந்த வெற்றியாளர் நீங்களாக கூட இருக்கலாம். மேலும் விபரங்களுக்கு தொடந்து படிங்க.
அனைவருக்கும் வணக்கம்,
ஒரு இனிமையான பொழுதில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முதல் முறையாக இதைப் படிப்பவர்கள் சிரமம் பாராமல் டெரர் கும்மி விருதுகள் அறிவிப்பு மற்றும் டெரர் கும்மி விருதுகள் போட்டி விதிமுறைகள் ஆகிய இரண்டு பதிவுகளையும்  படித்துவிட்டு இதை தொடருங்கள். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று டிசம்பர்  26-ம் தேதி உங்கள் பதிவுகளை இணைப்பதற்கான அறிவிப்போடு வந்துள்ளோம்.



முதலில் நாங்கள் கொடுக்கும் இணைப்பை தொடுத்து எங்கள் போட்டிக்கான தளத்தை திறந்துகொள்ளுங்கள். அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பதிவு ( ரெஜிஸ்டர் )ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் விரைவில் உங்களுக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும் என்ற தகவல் ( மெசேஜ் ) வரும். உங்கள் மின்னச்சல் முகவரிக்கு அந்த லிங்க் வரும்வரை தயவுசெய்து காத்திருங்கள். எதற்கும் உங்களுடைய ஸ்பேம் அல்லது ஜங்க் மெயிலையும் சோதனை செய்துகொள்ளு்கள். மின்னஞ்சலில் ஆக்டிவேசன் லிங்க் கிடைக்கப்பட்டு அதை அழுத்தினால் நீங்கள் இப்போது பதிவுகளை இணைப்பதற்கு தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
பதிவுகளை இணைப்பதற்கு இரண்டு பிரிவுகளாக வைத்துள்ளோம். பொதுப்பிரிவில் நீங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட மூன்று பதிவுகளை மட்டுமே இணைக்கமுடியும். அடுத்து புதுமுக பதிவர்களுக்கான பிரிவு. இதில் அவர்களின் சிறந்த பதிவாகக் கருதும் மூன்று பதிவுகளை இணைக்கலாம். மேலும் புதுமுக பதிவர்கள் மட்டும் பொதுப்பிரிவில் இணைத்த பதிவுகளையும் புதுமுக பிரிவில் இணைக்கலாம். பதிவுகளைஇணைக்க கடைசி தேதி 2012 ஜனவரி 6 என்று விதிமுறைகளில் அறிவித்தோம். பல வாசகர்கள் தொடர்புகொண்டு விடுமுறை நாட்கள் அதிகம் வருவதால் கால அவகாசத்தை நீட்டிக்க சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2012 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்க்கு பிறகு இணைக்கப்படும் பதிவுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுடைய விதிமுறைகள் பற்றிய பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். இதையும் மீறி ஏதேனும் சந்தேகம் அல்லது பதிவு செய்வதில் ( ரெஜிஸ்டர் ) பதிவுகளை இணைப்பதில் பிரச்னை அல்லது குழப்பம் இருந்தால் தயங்காமல் கருத்துரைகளில் கேளுங்கள் அல்லது  contest_2011@terrorkummi.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.உங்களுக்கு  உதவுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது சுலபமான  ஒன்றுதான். கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  இணைப்பை பயன்படுத்தி எந்த பிரிவில் உங்கள் பதிவுகளை இணைக்கப்போகிறீர்கள் என்று தேர்வு செய்து உங்கள்  பதிவுகளைஇணைக்கவும். இணைப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை சரியான பிரிவில் சரியான பதிவை இணைக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், ஏனென்றால் ஒருமுறை  இணைத்த பதிவை மறுமுறை மாற்ற இயலாது. மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு தொடர்ந்து உங்களோடு இணைந்திருக்கிறோம். நன்றி.
                                                                                      



Monday, July 11, 2011

ஊடகங்கள் மீது கோபம ஏன் ?





                                                                




தயாநிதி மாறன பதவி விலகியது பற்றி செய்தியாளர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கேள்வி கேட்ட பொழுது “இன்றைய உலகில், குறிப்பாக இந்தியாவில் ஊடகங்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்த முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல”என்று கூறியது நகைச்சுவையாக உள்ளதுதனது பேரன் தயாநிதி மாறன பதவி விலகியதற்கு ஊடகங்கள் தான் காரணம் என்று கருணாநிதி நேரடியாக குற்றம் சாட்டுகிறார். கலைஞர் இப்படி குற்றம் சாட்டுவது முதல் முறை அல்ல .இதற்க்கு முன்பும் நிறைய தடவை இந்த மாதிரி குற்றம்சாட்டி உள்ளார்.

தயாநிதி பற்றி ஊடகங்களில் வரும் செய்திகள் கடந்த ஆறு வாராமாக தான் வருகிறது .ஆனால் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்க தன் அதிகாரத்தை பயன்படுதியது 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தோடு தொடர்புடையதாகும். அப்பொழுதெல்லாம் இவரது குடும்ப ஊடகங்களை வைத்து என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று இவருக்குத் தெரியாதா? எத்தனையோ பிரச்சனைகளை உங்கள் டீவிகளில் போட்டு ஊதி ஊதி குளிர்காய்ந்தீர்களே, உங்கள் பேரன்கள் எடுக்கும் குப்பை படங்களைக்கூட டீவியில் விளம்பரம் செய்து செய்து ஓட்டி காசு பாத்தீர்களே, அப்போது வராத இந்த கோபம இப்ப மட்டும் ஏன் ஊடகங்கள் மீது வந்தது? குடும்பப்பாசம் கண்ணை மறைக்குதோ? தன் குடும்பத்திற்குள், சொத்தையும் கட்சியையும் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைகளை தமிழ்நாட்டில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒளிபரப்பியது நாறடித்தது சன் டிவி தான் என்பது கலைஞருக்கு வேண்டுமென்றால் மறந்திருக்கலாம், மக்களும் மறந்துவிடுவோமா என்ன?

ஆனால் இப்போதும் உண்மை எதுவென்றால் தயாநிதி மாறன் பிரச்சனையோ, ஸ்பெக்ட்ரம் பிரச்சனையோ, ஊடகங்களால் உருவாக்கப்படவில்லை. இது சாதாரண மக்களுக்கும் புரியும் .2G அலை கற்றையின் ஊழல நாயகன் ராசா என்று தன்னை ஊடகங்கள் வர்ணிப்பதை பொருக்க முடியாத தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசா ஒரு உண்மையை கூறினார். “எந்த வழிமுறைகளை பின்பற்றி எனக்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை செய்தார்களோ அதே வழியைத்தான் நானும் கடைபிடித்தேன” என்று கூறினார். அதுதான் தயாநிதி மாறனுக்கு வினையானது.

உண்மையில் கலைஞரின் ஆதங்கம் வேறு! அவர் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்துங்கள். “ஊடகங்கள் நினைத்தால” என்று அவர் கூறுவதற்குக் காரணம், தனது கட்சியினரின் ஊழலை மட்டுமே இந்த ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன” என்பதே அவருடைய ஆதங்கம். “நாட்டில் பல ஊழல்கள் நடந்து இருக்கிறது அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறீர்கள், எங்களை மட்டும் பெரிதாக ஊடகங்கள் சித்தரிகின்றன என்பதுதான் அவர் கோபம் என்று அவருடைய வார்த்தைகளில் தெரிகிறது. ஆனால், உங்களுக்கு நெருங்கியவர்கள் வேண்டுமென்றே கசியவிடும் ஆதாரத்தைக் கொண்டு நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிப்பது குற்றமா? இதே வேலையை உங்கள் குடும்ப தொலைக்காட்சிகள் முன்பு செய்யவில்லையா? ஆதாரங்களைக் கசியவிட்டவர்களிடம் அல்லவா நீங்கள் கோபப்பட வேண்டும்? அதைவிட்டுவிட்டு அதைச்சொன்ன ஊடகங்கள் மீது கோபப்படுவது நியாயமா? உங்களுடைய குடும்பத்தினர்தானே தமிழ்நாட்டில் ஊடக சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்கள்? நானும் ஒரு பத்திரிகையாளன் தான் என்று அடிகடி மார்தட்டி கொள்ளும் நீங்கள் இப்படி கூறலாமா..? 

இதற்கு ஊடகங்கள் என்ன செய்ய முடியும் ..? அவர்கள் தொழில் அது. நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் மைய அரசு தரும் தகவல்களைத்தான் அவர்கள் வெளியிடுகிறார்கள். ஆதாரத்தை அள்ளித்தரும் அந்த நபர்களை நீங்கள் கண்டு கொள்ளாதது ஏன்? நீரா ராடியா உரையாடல்களை பதிவை செய்தது யார்? அது எந்தத் துறை?அந்த ஒலிநாடாக்களை வெளியிட்டது யார்?அது எந்தத் துறை? இதை உங்கள் ஊடகங்களால் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லையா? உங்களுக்குத் தெரியாமலா இவ்வளவும் நடந்தது? முடிந்தால் இருந்தால் அதக் கண்டுபிடித்து உங்கள் குடும்ப டீவியில் ஒளிபரப்புங்களேன், தெரிந்து கொள்ள எங்களுக்கு ஆசையாக இருக்கிறது. 

Monday, May 30, 2011

பதிவர்களே நெல்லைக்கு வாங்க .....


                                                       

ஞாயிறு (29-05-11)மாலை ஐந்து மணிக்கு என் குடும்பத்தோட நண்பர் ...இல்ல .இல்ல... அன்பர் சங்கரலிங்கம் அவர்களை பார்க்க சென்றேன் .ரொம்ப எளிமையான மனிதர் .இவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்த கௌசல்யா சகோதரி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .நிறைய விழிப்புணர்வு கட்டுரைகள் இணைய உலகத்தில் கொட்டி கிடக்கிறது. சில சமயம் நானும் சொல்லி இருக்கிறேன் ,செயல் படுத்துவது ரொம்ப கடினம் .ஆனால் சங்கரலிங்கம் சார் அவர்கள் வாய் சொல்லில் மட்டும் வீரராக இல்லாமல் செயலிலும் காட்டி அசத்தி கொண்டு வருகிறார் என்பதை என் நண்பர்களுக்கு பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .


முதலில் நான் என் குடும்பத்தோடு நெல்லை போய் சேர்ந்தேன் .பிரபல பதிவர்கள் என்றால் கொஞ்சம் லேட் ஆக தான் வருவாங்க. அதே மாதிரி கௌசல்யா சகோதரி தன் கணவருடன் லேட் ஆக வந்து சேர்ந்தார் .மற்றொரு பதிவர் ராம்குமார் 2006 முதல் எழுதுகிறார் www.nellainanban.blogspot.com நெல்லை நண்பன் என்ற வலைபூவில் எழுதுகிறார் .அவர் என்னை ,கௌசல்யாவை விட சீனியர் அதனால் அதன் பிறகு தான் வந்தார் (சீனியர் என்றால் அப்படி தான் இருக்கணும் போல ...ஹி ..ஹி ..).
ஆனா ரொம்ப சின்ன பையன் 25வயது தான் .இவர்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி .
அப்படியே நெல்லையில் பதிவர் சந்திப்பு பற்றி பேச்சு திரும்பியது .நானும் என் பங்குக்கு நம்ம PSV சார் ,கோமாளி செல்வா இவர்களை கூப்பிட்டேன் .இருவரும் வருவதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளார்கள்.அப்புறம் சங்கரலிங்கம் சார் வாங்க மிதிலா ஹால் போய் பார்த்துட்டு வருவோம்ன்னு கூப்பிட்டார்கள் ..போய் பார்த்துவிட்டு ஜூன் 17 அன்று confirm பண்ணிவிட்டு வந்தோம் ...


திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. 'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் அவர்கள் தலைமையில் வரும்  17.06.2011 வெள்ளி அன்றுபதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.       

                        இடம்: மிதிலா ஹால்,A/C.
                        ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
                        நாள்: 17.06.2011 
                        நேரம்: காலை 10.00 மணி

10.06.2011 குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து விடலாம். 

அவரது  unavuulagam@gmail.com  mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.(தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..ஹையோ ..என்னோட ஸ்டைல்ல இருகரம்கூப்பி கேட்டு கொள்கிறேன் )
அவரது செல் எண் 9442201331.

என்னது ..டேய் சத்தம் போடாதீன்கப்பா... டெர்ரர் அண்ட் ரமேஷ் எதோ கேக்குறாங்க ...அல்வாவா..? கண்டிப்பா உண்டு மக்கா ...ஹி ஹி .....நேத்தே எனக்கு கிடைச்சிட்டு (அதுக்கு தானே போன அப்படின்னு எவனோ அங்க சொல்லுறான் பாரு ..)..

எலேய் ரமேஷ் சாப்பாடு ஓசூ தாண்டா(அப்ப தான் பய புள்ள முதல் ஆளாக வந்து நிப்பான் ..) .......உன்னால விடுப்பு எடுக்க முடிந்தால் வா ..

நம்ம சித்ரா அக்கா வாராக ..
நாஞ்சில் மனோ வாராக ..
கோமாளி செல்வா வாராக ..
சி .பி செந்தில் குமார் வாராக ..
சீனா ஐயா வாராக ..
வேடந்தாங்கல் கருண் வாராக ..மற்றும் நம் பதிவுலக நண்பர்கள் எல்லாம் வாராக ...வாம்மா மின்னல் ..சீ தூ ..ஒரு ப்ளோல அப்படியே வந்துட்டு ...நீங்களும் வரலாம் மக்காஸ் ..

ஏலே ஜெயந்த் நீ எப்போ ஊருக்கு வர ..அத சொல்லு ...

பதிவுலக நண்பர்கள் அனைவரையும் நேராக காண்பதில் ஆவலாக உள்ளேன் .எல்லோரும் கலந்து கொள்ளும் படி இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன் ...

என்னாது ..பார்ட்டியா ..?சோறு மட்டும் தான். அங்க வந்து தல சுத்துற மாதிரி இருக்கு ..கீழ போய் .பழரசம்(புரிஞ்சுக்கோன்கப்பா..!!) குடிக்க போனேன்னு யாராவது சொன்னா ..நான் திருநெல்வேலிகாரன் ..அருவாக்கு வேலை கொடுத்துராதீக ..இது ஒரு குடும்ப விழா ..அனைவரும் வருக ! விழாவை சிறப்பித்து தருக !!




Friday, May 6, 2011

மலரும் நினைவுகள் ..!!!

                                                                         

    

நான்காம் வகுப்பு முடித்து ஐந்தாம் வகுப்பு செல்லும் தன்  மகனை கூட்டிக்கொண்டு பள்ளி நோக்கி செல்கிறாள் தாய். ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் பையன் படிப்பு முக்கியம் என்று மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்தனர். அந்த குக்கிராமத்தில் ஆங்கில வழி கல்விக்கு போகும் முதல் சிறுவன் அவன் தான்.  சென்னையில் பணி புரியும் தனது கணவன் அனுப்பிய பணத்தினை  எடுத்துக்கொண்டு அந்த வருடத்திற்கான ஸ்கூல் பீஸ் கட்ட  எழுத்தாள் சொல்லிட முடியாத அளவு சந்தோசத்துடன் தன் கையை இறுகப்பற்றி பற்றிக்கொண்டு  வரும் மகனின் முகத்தை பார்த்து மனதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன்  சந்தோசத்துடன் கூட்டி கொண்டு செல்லும் அந்த தாயிடம்   

"புக் எல்லாம் வாங்கிருலாம் இல்லையா அம்மா ....!!  

"வாங்கிருவோம் செல்லம்" ..

"அம்மா அப்படியே கடைக்கு போய் பிரவுன் சீட் ..ஸ்டிக்கர் லேபிள் எல்லாம் வாங்குவோம் அம்மா" ..

இல்லடா அப்பா பீசுக்குக்கு மட்டும் தான் பணம் அனுப்பி இருக்காங்க.. இன்னும் 20 நாள் கழிச்சு அப்பா வந்து வாங்கி தருவாங்க  சரியா ..

பையன் வெடுக்கென்று அம்மாவின் கையை தட்டி விட்டு..... போன வாட்டியும் இப்படி தான் சொன்னீங்க கடைசில அப்பா ஸ்கூல் திறந்து ரெண்டு நாள் கழித்து தான் வந்தாங்க,  அப்புறம் தான் எனக்கு அட்டை எல்லாம் போட்டு தந்தாங்க .என் பிரெண்ட்ஸ் எல்லோரும் முதல் நாளே புதுபேக் ,வாட்டர் பாட்டில் எல்லாம் கொண்டு வந்தாங்க ..என்று கோவமாக கத்தினான் .

"சரிடா அப்பா சீக்கிரம் இந்த வாட்டி வந்திருவாங்க,  நீ ஏன் நடு ரோட்டில் இருந்து இப்படி கத்துற" என்று அம்மா கொஞ்சம் கடுஞ்சொற்களை வீசினாள் ..

அவனது மலர்ந்த முகம் வாடிப்போனது. அதன் பிறகு அவன் ஒன்றும் சொல்லவில்லை .. பேருந்து பிடித்து ஊர் வந்து சேர்ந்தார்கள் ..

அதே சிறுவனின் கால் நூற்றாண்டு வாழ்க்கைக்கு பிறகு 

 தன் மகளுக்கு பாட புத்தகம் வாங்கி வீட்டில் வைத்தான் ..

"அப்பா பைக் ஸ்டார்ட் பண்ணுங்க போய் பிரவுன் சீட் ,வாட்டர் பாட்டில் ,பேக்  ..எல்லாம் வாங்கி வருவோம்"  என்றாள் மகள் 

"குட்டிமா  இன்னைக்கு மே 7  தான் ஆகி இருக்கு இன்னும் நாள் இருக்கு பிறகு வாங்கலாம்" என்று கூறியதும் தான் தாமதம்  இன்றைக்கே வாங்க வேண்டும் என்று அழுது புரண்டு அடம பிடிக்க ஆரம்பித்தாள்.. 

அச்சமயம் அங்கே வந்த தாயின் நினைவில் பழைய நாட்கள் வந்து செல்ல அவனை பார்த்து "அப்பனுக்கு மகள் தப்பாம பிறந்து இருக்கிறாள் " என்று  சிரித்து விட்டு சொன்னாள்..

ஆம் ..அது ஒரு சந்தோசம் தான் புது புக் ,நோட்ஸ் எல்லாம் வாங்கி அட்டை போட்டு ..லேபிள் ஒட்டி,பேர் எழுதி வைக்கிறது ..கூடவே சோப்பு கவர் எடுத்து புக்குள்ள வைச்சு புக் திறக்கும் பொழுது வரும் வாசனை ..மயில் இறகு வைத்து அரிசி கொஞ்சம் வைக்கிறது ..ஏன் என்றால் மயில் இறகு குட்டி போடுமாம் ..(புக் அப்புறம் திறத்து பார்ப்பதே கிடையாது ..அது வேற விஷயம் ..)

பத்தாம் வகுப்புக்கு அப்புறம் மார்க் சீட் வீட்டில் காண்பிப்பதே கிடையாது .அம்மாவின் கையெழுத்தை எம்.சுப்புலெட்சுமின்னு அழகாக போடுவான் அந்த பையன் ....

இப்படி தன் கடந்த காலத்தை நினைத்தவன் .தன் மகளை பைக்கில் ஏற்றி கொண்டு கடை நோக்கி சென்று எல்லாம் வாங்கி வந்தான் ..

இன்று இரவு கச்சேரி இருக்குது ..அட்டை போடணும் லேபிள் ஓட்டனும் பேர் எழுதணும் ..ஹையோ ..ஹையோ ..

இந்த அப்பாவும் ,பொண்ணும்  யாருன்னு கேக்குறீங்க ...சாட்ச்சாத் பாபுவும் ..அவள் மகளும் தாங்க ..சின்ன பிளாஷ் பாக் ..நினைத்து பார்த்தல் சந்தோசம் மனதில் பரவி கிடக்கிறது ..


Thursday, March 17, 2011

அடை மொழி பேர்....!



                                  
                                                                     
                               (இவர்கள் வரிசையில் "இம்சை அரசன் பாபு "...)


தற்பொழுது நாட்டுக்கு ரொம்ப அவசியமான பதிவு ஒன்னு எழுதனம்ன்னு பதிவுலக நண்பர்கள் ..எல்லோரும் கெஞ்சி கேட்டு கொள்வதால் இந்த பதிவை எழுதுகிறேன் ..அதிலும் நம்ம சௌந்தர் என் காலில் விழுந்து கெஞ்சி கேட்டதால் வேறு வழி இல்லாமல் இதை எழுதுகிறேன் ,,ஹி ..ஹி ..புரட்சி தலைவி அம்மா மாதிரி என் மனது யாரவது காலில் விழுந்தால் உடனே அவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்யும் மனது உள்ளவன் ...
டேய் எதுக்கு இவ்வளவு பிலாகானம் கொடுக்குற ..முதல் ல நீ என்ன பதிவு எழுத போற அத சொல்லு  என்கிறீர்களா  ..அதாங்க எதோ பெயர் காரணம் சொல்லுனுமாம்லா ..அத பத்தி தான் ..

இப்ப இருக்குற ஹிந்தி நடிகர்கள் ஷாருக்கான் ..சல்மான் கான் ..அமிர்கான் ...பாராஹ் கான் ..அது மாதிரி தான் எனக்கு பேர் வைகனும்ன்னு நினைசிருப்பாங்க போல என் பெற்றோர்கள் ...நான் பிறக்கும் பொழுது இவர்கள் பிரபலம் ஆகவில்லை ..அதனால் ..

நேதாஜி ...நேருஜி ..மாதிரி பாபுஜி ...அது என்ன ஜி (சீ .அயோக்ய பயலே யார் கூட கம்பேர் பண்ணுற உன்னை )இல்லை மக்கா இப்படி நாட்டுக்காக உழைத்த நல்லவர்கள் போல ..என் மகனும் உழைக்கணும்ன்னு பாபுன்னு பேர் வெச்சாங்கன்னு ....நான் சொல்லுவேன் .!.ஆனா அதை நீங்க நம்ப மாட்டீங்க ...எதோ என் ஆச்சி (பாட்டி )பேர் பாப்பாத்தி அதனால தான் உன் பேரு பாபுன்னு விட்டுருக்காங்கன்னு யாரோ உங்க கிட்ட தவறான தகவல் தந்ததை தான் நீங்க நம்புவீங்க ...சரி விடுங்க .பாபு என்ற பேர் அப்படியே இருக்கட்டும்ன்னு விட வேண்டியது தானே என் அப்பா ...

அப்பவே எங்க அப்பா "பெண்கள் நாட்டின் கண்கள்"என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் ....பள்ளியில் சேர்க்கும் பருவம் வந்தவுடன் பள்ளிக்கு அழைத்து சென்று பேர் சொல்லி இருக்கிறார் ..அங்கு தான் தலைமை ஆசிரியர்( என் அப்பாவின் நண்பர் போல) ..முதல் குழந்தைக்கு உன் அப்பா(தாத்தா )பேர் வைச்ச ..இந்த பிள்ளைக்கு உன் மனைவியின் தந்தை பேர்  வைக்கலியான்னு கேட்டு இருக்கார் ...உடனே கூட முத்து குமார் என்று சேர்த்து விட்டார்கள் ..என் அம்மாவின் அப்பா பேர் முத்து சாமி ..

இப்படி பாபு என்று இருந்த நான் பாபு முத்து குமார் ஆகிவிட்டேன் ...எவ்வளோ..... நீள பேர் என்று ஆசிரியர் முதல் நண்பர்கள் வரை ஒரே கிண்டல் ..என் தந்தையிடம் இப்பொழுது கூட கேட்டேன் ..அட போட.....

கரம் சந்த் காந்தி ,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ,லால் கிஷந்த் அத்வானி ,அடல் பிஹாரி வாஜ்பாய் ,லாலு பிரசாத் யாதவ் ..பாரு எல்லாமே மூன்று பேர் உள்ளவர்கள் ..நீயும் ஒரு காலத்தில் இந்த நாட்டை ஆளுவாய் என்று கூறினார் ..சரி ..சரி நாட்டை ஆளுறேனோ இல்லையோ வீட்டை (ஒரிஜினல் வீ டுப்பா ) நன்றாக நிர்வகிக்க கத்துகொண்டேன் ..

பதிவுலகை பொறுத்த வரையில் எல்லோராலும் அன்பாக (?)இம்சை அரசன் பாபு என்று அழைக்க பெறுகிறேன் .எல்லோரும் தன் திருவாய் மலர இம்சை என்றும் அழைப்பார்கள் (எப்படி எல்லாம் பில்ட் அப் கொடுக்க வேண்டியது இருக்கு ).பதிவுலகம் வந்தவுடன் முதலில் என் பொண்ணு பேரில் தான் பதிவு எழுதினேன் ..சீ ..சீ ..பதிவு இல்ல பின் காலத்தில் பொன் ஏட்டில் பதிக்க கூடிய வரலாற்று நிகழ்வுகளை எழுதினேன் .

அப்பொழுது இரண்டு எதிரிகள் (நண்பர்கள் )"அடை மொழி பேர் வைச்ச்சவங்க யாரும் அழிஞ்சு போனதா சரித்திரம் இல்லை "அதனால் நீயும் அட மொழி பேர் வைன்னு சொன்னாங்க ...ஆமாங்க அந்த நண்பர்கள் ஒருத்தன் சிரிப்பு போலீஸ் ரமேஷ் ...!இன்னொர்த்தர் டெர்ரர் பாண்டி .இவங்க எல்லாம் பிரபல பதிவர்கள் நீயும் பிரபல பதிவர் ஆகணுமா வேண்டாமா என்று கேட்டாங்க .நானும் பதிவே எழுதாம பிரபலம் ஆக வழி இருக்கான்னு கேட்டேன் ..உடனே தான் இந்த பேர் எனக்கு ரொம்ப சரியாக இருக்கும் என்று இன்று முதல் நீ இம்சை அரசன் பாபு .என்று அழைக்கபடுவாய் என்று பேர் வைத்தார்கள் .இந்த ரெண்டு பேரும் தான் என் பேருக்கு முன்னாடி "இம்சை அரசன் "வைக்க சொன்னாக நானும் வைசுட்டேன் .இதுல இந்த டெர்ரர் பாண்டி என் வாய்ல அருவாள் ஒன்னு வைச்சு போட்டோ எடுத்து தந்தான் .

இந்த கத்தி குத்து கந்தன் ,வண்டு முருகன் ,நாய் சேகர்,வாரியர் தேவா மாதிரி ........எனக்கும் "இம்சை அரசன் "பாபுன்னு பேர் வந்து...... ..பேரும் புகழோடும் .....சீரும் சிறப்போடும் பதிவுலக நண்பர்கள் எண்ணை கூவி கூவி அழைகின்றனர் .

Tuesday, March 1, 2011

ஜைன்தவி..ஐ ..லவ் ..யூ ....


அண்ணன் லவ் மூடுல இருக்கேன் ..தக்காளி... பன்னிகுட்டி இன்னும் பல பேர் ஒரே காதல் கதை போட்டு தள்ளுறாங்க நானும் என் காதல கதைய எழுதுறேன் ..பார்த்து படிச்சு செத்து தொலைங்க ...

என் ஜைன்தவி ...(சைந்தவி இல்ல) என் பட்டு குட்டி ,என் செல்ல குட்டி காலைல எழுந்தவுடன்  டீ குடிக்கும் பொழுது..! நான் குடிச்சிட்டு கொஞ்சம் டீ உனக்கு தருவேனே..! அந்த எச்ச டீயை நீ குடிச்சுட்டு நீ என் மடி மீது வந்து படுத்து ..என் கன்னத்தில் வந்து ..சீ ..சீ எனக்கு வெக்கம் வெக்கமாக வருது அதை சொல்ல ..

சாபுவுக்கு லீவ்ன்னு சொல்லிட்டு ஜைன்தவியையும் கூட்டிட்டு போயீட்ட ..நான் எப்போதுமே ரெண்டு இட்லி சாப்பிட்டுகிட்டு ஒரு இட்லி தந்தாலும் அதை நல்ல வயிறு முட்ட சாப்பிட்டுகிட்டு ,நான் வேலைக்கு போகும் போது வெளியே வந்து வழி அனுப்பி வைப்பியே...இந்த 15 நாளும் எனக்கு ஒரே போர் ..எப்படி எனக்கு இனி நேரம் போகும் ..

வாழ்க்கை அழகு பாஸ்...அதுவும் ஜைந்தவிங்க கெடைச்ச எல்லா அப்பாகளுக்கும் வாழ்க்கை சொர்க்கம்.(இந்த வரி எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே ..டேய் இம்சை வெளிய வராத அப்படியே உள்ள இரு ..)

யார்கிட்டேயும் பேச பிடிக்கல ... ஜைன்தவி பார்க்காம கண்ணு ரெண்டும் பூத்து போச்சு ..என் கண்ணுகுள்ளே வந்து நிக்கிறியே ..உன் கூட செல்ல சண்டை போடணும் போல இருக்கு ..இப்படி தான் என் மாமனார் எனக்கு தீபவாளிக்கு வாங்கி தந்த பட்டாபட்டிய .நான் கழற்றி போட்டு இருந்த போது அதை நீ எடுத்து போத்திகிட்டு படுத்தியே..! குளிருக்கு இதமா இருக்குன்னு ..நான் கோவமா அதை புடுங்கும் போது ..நீ அதை இழுக்க ..நான் இழுக்க... கடைசில .பட்டாபட்டி பாதி உன்கிட்ட மீதி என்கிட்டே இருந்துச்சு ..கிளிச்சுட்டீயேன்னு நான் பொய் கோவ பட்ட போதும் என் மடில வந்து படுத்தியே... .இந்த பதினைந்து நாளும் என் மடில படுக்க ஆள் இல்லாமல் தலையணை தூக்கி வைச்சிக்கிட்டு இருக்கேனே இந்த கொடுமை ரொம்ப பயங்கரமானது . 

இப்படிதாங்க நானும் ஜைந்தவியும் எப்பொழுதும் மாலை நடை பயிற்சி போவோம் .அவளின் பிடி என் கைகுள்ளேயே இருக்கும் அது அன்பு பிடி..! .ஒரு நாள் இப்படி சேர்ந்து வாக்கிங் போகும் போது நாலு பேர் சேர்ந்து முறைச்சி பார்த்தாங்க .எனக்கு கோபம கொப்பளித்து கொண்டு வந்தது நான் அவர்களை அடிக்க போகும் முன் ..என் செல்லம் ,என் புச்சு குட்டி அவர்களை முறைத்து பார்த்து சத்தம் போட்டாளே பார்க்கணும் ..அது என் செவிக்குள்ளேயே நிக்குது ..

ஒரு நிமிஷம் இருங்க சாபுகிட்டே என் செல்ல குட்டி ,அம்முக்குட்டி ஜைன்தவி சாப்பிட்டாளா  என்னன்னு கேட்டு கிட்டு வரேன் ஏன்னா நான் சாப்பிட்ட மிச்சத்தை சாப்பிட்டே பழக்க பட்டவள் ..

ஜைன்தவி கிடச்ச அப்பாக்களுக்கு... நீங்களும் வீட்டுல இருக்கும் ஜைந்தவிக்கு ஒரு துண்டு இட்லி ,ரொட்டி, எச்ச டீ இப்படி டெய்லி கொடுத்து பாருங்க ..அதோட சுகமே தனி மக்கா ..

ஜைன்தவி கிடைக்காத பன்னாட பரதேசிகளுக்கு ..இழுத்து மூடிக்கிட்டு பொத்திகிட்டு படுத்து தூங்குங்க... ஒரு மாலதி ,ஒரு சந்தியா... இப்படி கெட்ட கெட்ட கனவு வரும் ...

இருங்க ..இருங்க ..டெர்ரர் எதோ கேக்குறான் ..

ஓ ...ஜைன்தவி யாருன்னு கேக்குறியா பாஸ் இதோ ....

                                                                  
                                                 (பட்டாபட்டி ப்ளாக்ல சுட்டது ...) 

ஜைன்தவி என் வீட்டு நாய்க்குட்டி ..நான் குடிச்ச எச்சி டீ குடிக்கலைனா அதுக்கு தூக்கம் வராது ,என் பட்டாபட்டி எடுத்து மூடிக்கிட்டு தான் அது படுத்து தூங்கும் ..மாதம் ஒரு பட்டாபட்டி என் மாமனார் அதுக்காகவே வாங்கி தருகிறார் ..வாக்கிங் போகும் போது நாலு தெருபொருக்கி நாய்கள் அத பின் தொடரும் போது அது விடும் சவுண்ட் ...ஹையோ ..ஹியூ ..அத சொல்ல முடியாது ..என் காதில் தேன் வந்து பாயுது .



டிஸ்க்கி :இது என் பதிவுலக ரோல் மாடல் பட்டாபட்டிக்கு சமர்பிக்குறேன் ...தலைவா நீ கோடு தான் போட்ட ..நான் ரோடே போட்டுட்டேன் . ஹி ..ஹி ..


கழுகின் இன்றைய பதிவு


Tuesday, February 8, 2011

தேர்தல்!!! குறை யார் மீது?



                                                     


கழுகிர்க்ககாக இயந்திர வாக்கு பதிவு  பற்றி எழுதி இருந்தேன் .அதில் நான் உட்பட மற்ற பின்னூட்ட மிட்ட நண்பர்கள் எல்லோரும் இந்தியாவை பொறுத்த வரை தற்பொழுது மின்னணு வாக்கு பதிவு தான் தற்போதைக்கு ஒரே வழி என்று கூறினார்கள் இருந்தாலும் எனக்கு இதில் நடக்கும் தில்லுமுல்லு களை குறைக்க ஏதாவது வழி இருக்கா என்று சிந்திதித்த வண்ணம் இருந்தேன் .


ஏனென்றால் தமிழ் நாட்டை பொறுத்தவரையில் இந்த மாதிரி வேலைகள் எல்லாம் செய்வது அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் தான் என்று பரவலான பேச்சு இருக்கிறது .எனக்கும் இந்த சந்தேகம் உண்டு .பூத்துல இருக்கும் அரசு ஊழியர்களின் சம்மதத்துடன் தான் இந்த மாதிரி நடக்கிறது .நானும் கண்கூடாக பார்த்து இருக்கிறன் .

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் ஒரு கட்சி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வாரி இறைத்து உள்ளது .மற்ற மக்களின் வாயிலும் ,வயிற்றிலும் அடித்து விட்டு அரசு ஊழியர்களுக்கு மட்டும் இப்படி செய்திருக்கிறார்கள்  .இன்றைய விலை வாசி உயர்விலும் .அரசு ஊழியர்கள் மட்டும் தாக்கு பிடிக்கிறார்கள் .விலை வாசி உயர்ந்து விட்டது என்று சொன்னால் நம் நிதி அமைச்சர் .சம்பளம் எல்லாம் கூட்டி கொடுத்து இருக்கிறோம் அதனால் மக்களுக்கு வாங்கும் சக்தி இருக்கிறது என்கிறார் 
.
ஆம் அவர் கண்ணுக்கு 12லட்சம் அரசு ஊழியர்கள் மனுசனாக தெரிகிறார்கள் .மற்றவர்கள் எல்லோரும் மாடாக தான் நினைக்கிறார்கள் .எல்லாம் ஒட்டு வங்கி அரசியலுக்கு தான் .

இப்பொழுது நடந்த இடை தேர்தல்கள் எல்லாம் பார்த்தால் தேர்தல் ஆணையம் எவ்வளவு கெடுபிடியாக நடந்தாலும் .கடைசி ஒரு மணி நேரம் போலிங் மிகவும் அதிகமாக இருக்கு .
கேட்டால் அது ஒரு பிளான் என்று கூறுகிறார்கள் அதற்க்கு திருமங்கலம் பார்முலா என்று ஆளும் அரசே தம்பட்டம் அடிக்கிறது .(என்ன கொடுமை சார் இது ..........!)

இது எப்படி சாத்தியம் என்றே புரியவில்லை ஊடகங்களும் இதை பற்றி முதல் எழுதி விட்டு பின்பு அமைதியாக இருந்து விடுகிறார்கள் ......ஏன் இப்படி ?

இதில்  கள்ள ஒட்டு போடுவதர்க்கு உடந்தை இந்த ஆசிரியர்களும் ,அரசு ஊழியர்களும் தான் .கேட்டால் இந்த ஆட்சி வந்தா தான் நமக்கு நல்லது என்கிறார்கள் ...?

இதில் கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் இதிலடங்கும் .எல்லா அரசு ஊழியர்களும் ,ஆசிரியர்களும் இப்படி தான் என்று சொல்ல வில்லை ஆனால் நூற்றில் 90% இப்படி தான் இருக்கிறார்கள் .சில பேர் அங்கே போனால் நானும் குற்றவாளி ஆகிவிடுவேன் என்று எலெக்ஷன் பணி வேண்டாம் என்று கூறிவிடுகிரார்கள்.

கல்வி போதிக்கும் ஆசிரியர்களே இப்படி செய்தால் குழந்தைகளை எப்படி நல வழி படுத்துவார்கள் ..

இது தான் ஜனநாயகமா?........அரசு ஊழிர்கள் தான் ஒரு முதலமைச்சரை தேர்ந்து எடுக்க வேண்டுமென்றால் இவ்வளவு பொருள் செலவு செய்து ஏன் தேர்தல் நடத்த வேண்டும் .பேசாமல் அவர்களை மட்டும் ஒட்டு போட சொன்னாள் போதுமே ????

ரெண்டு நாள் முன்னாடி தான் தேர்தல் ஆணையம் இன்னொரு உருப்படியான விஷயம் ஒன்றை சொன்னது .இனி பூத் ஸ்லிப் கட்சிகாரர்கள் கொடுக்க வேண்டாம் என்றும் அந்த பணியை தேர்தல் ஆணையமே செய்யும் என்று கூறி இருக்கிறது 

.
இதே மாதிரி இந்த கடைசி நேர போலிங்க்கும் எதாவது மாற்று வழி உண்ட என்று தேர்தல் ஆணையம் சிந்தித்து நல்லதொரு முடிவை அறிவிக்கும் என்று ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்து இந்த பதிவை முடிக்கிறேன் .

Wednesday, February 2, 2011

மேம்பாலம்



                                                                                                                                       


காலைல அவசரம் அவசரமாக  என் மகளை பள்ளிக்கு கூட்டி  செல்லும் அவசரத்தில் பைக்ல அவளை ஏற்றினேன் .முன்னாடி இருந்து கொண்டு

என் மகள் :அப்பா இந்த பாலம் ரொம்ப பெருசு இல்லையாப்பா என்றாள்

நான் :ஆமாம் கோவில்பட்டில   ரெண்டு பாலம் இருக்குன்னு சொன்னேன்

என் மகள் :ஆமாம் ரெண்டு பெரிய பாலம் நிறைய குட்டி பாலம் இருக்கு என்றாள்

நான் :இல்லையே குட்டி பாலமே இங்கே கிடையாது என்று சொன்னேன் .....

என் மனைவி :வண்டில இருந்துகிட்டு பேசாம அப்பாவும் ,மகளும் வாங்க என்று சத்தம் போட்டாள்(எலேய் உன் மண்டைல கொட்டினார்கள்ன்னு சொல்லு ன்னு கமெண்ட்ஸ் போடா கூடாது)
நானும் அமைதியா வண்டிய ஓட்டி  என்னோட ஆபீஸ் வந்துட்டோம் .

என் மகள் :அப்பா பாலம்ன  என்ன..........?(தொடர்ந்து விடாம கேள்வி கணைகள் என் மகள் ஆயிற்றே )

நான் :கீழ ட்ரைன்,ஆறு இப்படி போகும் நாம மேல போவோம் அப்படின்னு சொன்னேன்

என் மகள் :ரோடுல மேலே  ஏறி கீழ இறங்கனும் அப்படி தானே என்றாள் .(என்னை மாதிரி என் புள்ள ரொம்ப அறிவாளி டக்குன்னு பாயிண்டுக்கு  வந்துட்டாள் )

நான் :ஆமாம் என்றேன் .......

என் மகள் :நாம ஸ்கூல்க்கு  போகும் போது  மூணு குட்டி  பாலம் வரும் நான் கான்பிக்குறேன் பாருங்க என்றாள் ....

நான் :இல்லை மக்கா குட்டி பாலம் கிடையாது .என்றேன்

என் மனைவி :அவள் வேற எதையோ சொல்லுறா உங்களுக்கு தான் விளங்க மாட்டுது ன்னு சொன்னால்
நான் அதை பற்றி மறந்துவிட்டேன் அவளை பள்ளிக்கு அழைத்து சென்றேன் ...அவள் போகும் வழியில்

என் மகள் :அப்பா இந்த இருக்கு பாரு மூணு பாலம் என்றாள் .

நான் :அவள் கண்பித்ததை பார்த்து தலை சுற்றியது எனக்கு  இது பாலம் இல்லை மக்கான்னு சொன்னேன்

என் மகள் :பைக் ஏறி தானே இறங்குது ....அது பெரிய பாலம் .....இது குட்டி பாலம் ...நான் சொல்வது தான் சரி என்கிறாள்(என் தலைல லாரி யே ஏறி இறங்கினது மாதிரி ஒரு பீலிங் )

அப்படி அவள் என்னதாண்ட காண்பித்தாள்  என்று எல்லோரும் கேக்குறீங்களா .........?
SPEED BREAKER  மக்கா ....காலைலேயே .........ஆரம்பிச்சுட்டா இனி ஸ்கூல் விட்டு வந்து கேப்பா கரெக்ட் விடை சொல்லணும்

தம்பி எஸ் .கே வுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் 



Monday, January 24, 2011

நானும் கவிதையும் ...!


எல்லோரும் பதிவுலகுல கவிதை எழுதுறாங்க ,நீயும் கவிதை எழுத்து மக்கா இல்லையென்றால் நீ பதிவு எழுதுறதே வேஸ்ட் ன்னு டெர்ரர் அண்ட் ரமேஷ் சொல்லிட்டாங்க..........அதனால் நானும் சில கவிதைகள் TYPE செய்து இருக்கேன் .கண்டிப்பா வாந்தி வரும் ....



அவள் வைத்து கொள்ளும் ரோஜா 
அவளை விட அழகு குறைவு தான் 
அதனால் தான் 
அவள் கூந்தலின் பின்னால்
ஒளிந்து கொள்கிறது 

பூ என்பது ஒரு எழுத்து
அதை சூடும் "பெண் " இரண்டெழுத்து
அந்த பெண்ணால் வரும் "காதல்" மூன்று எழுத்து
அந்த காதலால் வரும்" குழந்தை "நான்கு எழுத்து
அந்த குழந்தையால் வரும் "திருமணம்" ஐந்து எழுத்து
இதுவே இன்றைய இளைஞர்களின் தலை எழுத்து

நண்பா ரமேஷ்  நீ ஒரு K E P M  A R I
K - KILLAADI
E -  EN UYIR  NANBAN 
P - PORUMAYIN SIKARAM
M -MANMATHAN 
A - ANBULLAVAN 
R -RAMBO 
I -INIYAVAN
KEPMARI க்கு சிரிப்பா பாரு..........

விடிய விடிய நிலவை காதலித்து  விட்டு ..............
விடிந்தபின் சூரியனை மணக்கும் மணப்பெண் தான் 
"பனித்துளி "

12 வருடத்துக்கு ஒரு முறை பூக்கும் 
குறிஞ்சி  மலர் கூட உன் புனைகை பார்த்தால் 
கொய்யாலா ........பூக்கவே பூக்காது........

இது சௌந்தர்க்கு 
அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு ,
பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வில்லை .........
காரணம் .................
மூச்சு  விடாம இங்கிலீஷ் பேசுரா மக்கா  ............


மரணம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும் 
ஆனால் பிரிவு என்பது ஒவ்வொரு நொடியும் 
உயிர் போகும் 
அதனால் நட்பை இழக்காதீர்கள் 

என்றோ ஒருநாள் அழுததை நினைத்தால் சிரிப்பு வரும் (காதல்)
என்றோ சிரித்ததை நினைத்தால் இன்று அழுகை வரும் (நட்பு )

சிறுத்தை வசனம் :
ஏதோ ஒருநாள் நம்ம ரிசல்ட் வந்தே தீரும் ..........
நான் ரிசல்ட் பார்க்குற அந்த நாள் ................
என் நெஞ்சுல ஒரு சொட்டு பயம் இருக்க கூடாது .............
நான் பெயில் ன்னு தெரியும் போது என் உதட்டுல சிரிப்பு இருக்கணும் .........
என் கை மீசையை முறிக்கிட்டு இருக்கணும் .........

இது நண்பன் டெர்ரர்க்கு 
நீ நடக்கும் போது 
ஒரு 
கம்பீரம் தெரியுது 
நீ தூங்கும் போது 
ஒரு 
அமைதி தெரியுது 
நீ சாப்பிடும் போது 
ஒரு 
அழகு தெரியுது 
நீ ஓடும் போது 
ஒரு வேகம் தெரியுது ...........
இதெல்லாம் ஒகே ஏன் "DISCOVERY CHANNEL " ல மட்டும் தெரியுது 


டிஸ்க்கி :இதில் இருக்கும்  கவிதை நீ எழுதினதான்னு யாரும் கேக்க கூடாது...கேட்ட கம்பெனி பொறுப்பு ஏற்காது ................... 


Thursday, January 20, 2011

லவ் லெட்டர்

இந்த செல்வா தம்பி நேத்து ஒரு பதிவு போட்டான் .காதல் கடிதம் எழுத தெரியாம ரொம்ப கஷ்ட பட்டேன்னு சொன்னான் .அதான் அவனுக்கு எப்படி காதல் கடிதம் எழுதணும்ன்னு எனக்கு தெரிஞ்ச மாதிரி சொல்லி இருக்கேன் .செல்வா வுக்கு இந்த பதிவை சம்ர்பிக்குறேன் (காதல் பண்ணினா சமாதி தான் ஆகணும் மக்கா .......)

செல்வா தம்பி தொடர் பதிவுக்கு என்னை கூப்பிடல இருந்தாலும் நமக்கு தான் மானம் ,ரோசம் எதுவுமே கிடையாதே அதனால நானே இந்த பதிவை போடுகிறேன் .

காதல் கவிதை எழுதுறவங்க ,காதல் பத்தி கட்டுரை எழுதுறவங்க எல்லோரும் வந்து காறி துப்பிட்டு போகலாம் .குறிப்பாக தேவா அண்ணன் ,சௌந்தர் ,கௌசல்யா ...

மேலும் என் நண்பன் ரமேஷ் ,டெர்ரர் போன்ற கல்யாணம் ஆகாத நண்பர்கள் எல்லோருக்கும் இதை பார்த்து காதல் கடிதம் எழுத கற்று கொள்ளவும் .....


அன்புள்ள முன்னாள் காதலிக்கு

பொருள்: தங்களிடம் கொண்டிருந்த காதல் முறிந்ததின் பேரில் அனைத்து பரிமாற்றங்களை தீர்க்க வேண்டி எழுதப்படும் விண்ணப்பக் கடிதம்






தங்களிடம் இருக்கின்ற இந்த புகைப்படத்தை உடனடியாக திருப்பி அனுப்புமாறு கோரிக்கைசெய்கிறேன். இந்த புகைப்படத்தில் மட்டும் தான் நான் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிவேன் என்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.  மேலும் இந்த புகைப்படம் எனக்கு முதன் முதல் காதல் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது.

மேலும் 11/2 வருடம் நான்தங்களுடன் காதலில் ஈடுபட்டிருந்த போது தங்களை கவர்வதற்காக ஏராளமான பணம் செலவழித்திருக்கிறேன். நான்செலவழித்த தொகையின் பட்டியலை இத்துடன் இணைத்துள்ளேன்.  அதைகூடிய விரைவில் திருப்பி அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செலவழிந்த தொகையின் விவரம் பின்வருமாறு:

வ.
எண்
விவரம்
தொகை
(ரூபாய்களில்)
1
மதிய/இரவு உணவு     
895
2
கூல்ட்ரிங்ஸ்
2938
3
ஸ்நாக்ஸ்
5645
4
ஜூஸ்கள்
3845
5
சினிமா
1235
6
இண்டர்நெட் சாட்டிங்
1399
7
மொபைல் கட்டணம்
2546
8
பெட்ரோல்
4355
9
பரிசுப் பொருட்கள்
7850

மொத்தம்
30, 708

மொத்தத் தொகை ரூ.30,708(எழுத்தில்: முப்பது ஆயிரத்து எழுநூற்று எண்பது ரூபாய்).தயவுசெய்து மேற்கண்ட தொகை திருப்பி அளிக்க வேண்டுகிறேன். இதனால் நான் என் புது காதலிக்கு இந்த பணத்தை செலவு செய்ய ஏதுவாய்இருக்கும்.மேலும் உங்களிடம் என் பரிசுகள் ஏதாவது இருந்தால் அதை பாதி விலைக்குஎடுத்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அந்த பரிசுகளுக்கானவிலையை கணக்கிட்டு அதை மேற்கண்ட தொகையிலிருந்து கழித்துக்கொள்ளலாம்.

இத்துடன் நீங்கள் எனக்கு எழுதிய காதல் கடிதங்களை இணைத்துள்ளேன் (எடை 4 கிகி) எனவே நீங்கள் உங்கள் பாய் ஃபிரண்டுக்கு மீண்டும் எழுத வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்கள் ஃபோட்டோவையும் இணைத்துள்ளேன்.எனவே உங்களின் புதிய பாய்ஃபிரண்டிடம் அதை நீங்கள்அளிக்க உதவியாய் இருக்கும்.

                                 தங்களிடமிருந்து தொகையை எதிர்நோக்கும்
                                        தங்கள் உண்மையுள்ள
                                      முன்னாள் காதலன்



டிஸ்க்கி 1 : இந்த பதிவு எழுத உதவிய எஸ் கே அவர்களுக்கு நன்றி .

டிஸ்க்கி 2 :யாருக்கும் எதிர் பதிவு இல்லை ......இது ஆங்கிலத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல் ..


டிஸ்க்கி 3 :அழகான போட்டோ ஒன்னு வேணும் ரமேஷ்ன்னு கேட்டவுடன் தயங்காம அவனோட  போட்டோவ தந்து உதவிய ரமேஷுக்கு  நன்றி 

.