Monday, August 30, 2010

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ?

இது கதையல்ல நிஜம் .அதனால் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் ,கர்ப்பிணி பெண்கள்,பல்லு போனவர்கள் ,பல்லு ஆடுதுன்னு சொன்னவர்கள் எல்லோரும் இந்த  பதிவை படிக்கலாம்.

அனு, புத்திசாலிகள்  MBA-வா,BEஆ என்று ரமேஷ் பதிவில் ஒரு விவாதம் இரண்டு நாள நடந்தது .இதில் terror -உம ,நீங்களும் comments போடுறோம் என்ற பேர்ல பதிவே போட்டிங்க.அதனால் நான் comments க்கு பதில் பதிவே போட்டிருக்கேன்.

ஒரு tooth paste கம்பெனயில் இருந்து sales manager-போஸ்டுக்கு ஆள் எடுத்தார்கள் எல்லோரும் பங்குபெறலாம் என்று சொன்னார்கள் .அதாவது salesஅ கூட்ட வேண்டும் எனபதுதான் கண்டிஷன் .எல்லோரும் அவரவர் ஐடியாவை கூறலாம் .சிறந்த யோசன்னைக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானமும் sales-மேனேஜர் post-உம.என்று விளம்பர படுத்தியது.

MBA student :ஆடி மாசத்துக்கு துணி தள்ளுபடி போட்டு  துணி வியாபாரம் பார்க்குறாங்க,அக்ஷ்ய திருதிக்கு  தங்கம் விக்குறாங்க.அதே மாதிரி நாமளும்.Monday-yellow,Tuesday-red ,wednesday -white இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு கலர் பேஸ்ட் அப்படின்னு போட்டு விளம்பரம் படுத்தலாம் அப்படின்னு சொன்னான்.

BE Student :200 gm ToothPaste Tube -ல 100 gm paste உம் பாக்கி 100 gm air - யும் அடைச்சி வச்சிட்ட Tooth Paste ஐ அமுக்கினா காற்று தான் வரும் .சீக்கிரம் பேஸ்ட் தீந்துறும் sales -உம் கூடிரும்.

ஒரு +2 முடிச்ச student எந்துச்சி Tooth Paste Tube -ல உள்ள mouth -அ கொஞ்சம் பெருசா ஆக்கிருங்க salesautomatic-அ கூடிரும்னு சொன்னான்.அந்த பையன் தான் select ஆனான்.பரிசும் வென்றான்(இன்று அதே formula தான் அத்தனை toothpaste tube - ல .மௌத் பெரிசாக இருக்கிறது).

BE ,MBA ,Degree -அ என்கிறது முக்கியமல தலையில  கொஞ்சம் (சட்டினி) மூளை இருந்தால் போதும்.அந்த பையன் வேறு யாரும் இல்லை நம்ம terrorதான் .(இது எப்படி இருக்கு ....).

இப்ப இன்னொரு கேள்வி உளுந்தம் வடை-ல ஏன் centre-ல ஓட்டை போடுறோம் மற்ற வடைல போடுறது கிடையாது சொல்லுங்க பார்க்கலாம் .

குறிப்பு :எனக்கும்,ஜெக்கும் இதில் இருந்து விதிவிலக்கு ஏன்னா நாங்க  ரெண்டு பேரும் இந்த கேள்விய எங்கள் மனைவி இடம்  கேட்டு பூரிகட்டைல அடி வாங்கினது எங்களுக்கு தான் தெரியும்.நீங்க யாரிடமாவது கேட்டு சொல்லுங்கள்.

Saturday, August 28, 2010

எமனாக மாறும் சில தேவதைகள்

முஸ்கி :இந்த பதிவு எழுதி ரொம்ப நாள் ஆகிடுச்சு .publish பண்ணவேண்டுமா? வேண்டாமா?என்று ரொம்ப நாள யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன்.பெண் பதிவர்கள் வருத்தபடுவர்களோ! என்று .யாருக்கும் என் பதிவில் வருத்தம் இருக்காது என்ற நம்பிக்கையில் இதை publishசெய்கிறேன்.(குருப்பா வந்து கும்மிடாதிங்க அம்மணிகளா).

மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பாடி வைத்த தமிழ்நாட்டில் பெண்களின் நிலை பெரும் மோசமாக மாறி வருகிறது.


இன்றைய மங்கைகள் சிலரால் , பெண்கள் வீட்டின் கண்கள் என்ற காலம் மாறி போய் விடுமே என்ற அச்சத்தை எற்படுத்துகின்றனர்.செய்தி தாள்களில் ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு கொலைகள் பற்றி செய்திகள் மிகவும் பிரபலமாக வந்தது.

1 .பூவரசி என்ற பெண் 5 வயது குழந்தையை கழுத்தை அறுத்து கொன்று suitcase -இல் வைத்து பஸ்ஸ்டாண்டில் தூக்கி எரிந்தது மற்றொன்று.

2 மந்திரவாதியின் துணையுடன் இரண்டு வயது குழந்தயின் தலையை அறுத்து ரத்தத்தை தூக்கு சட்டியில் கொண்டு சென்று பூஜைக்காக பத்திர படுத்தி பூஜை செய்தது .எப்படி முடிகிறது இவர்களால் .ஒரு குழந்தை தவறி கீழ விழுந்தால் இதயம் நொறுங்கிவிடும் பெண்களுக்கு  இடையில் (அப்போ எங்களுக்கு இரக்கம் இல்லையா கிளம்பி வந்துடாதிங்க மாப்பிள்ளை).இப்படிபட்ட பெண்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆண்டவன் இதயத்தை கல்லாக படைத்தது விட்டான் போல..

இப்படி கொலையில் ஈடுபடுகிறர்வர்கள் பெரும்பாலும் படித்த பெண்களாக தான்இருக்கிறார்கள்.ஒருவேளைதொலைகாட்சி தொடர்கள், சினிமாக்களில்  முழுவதும் பெண்களை கொலைகாரியாக,gang leader ஆக ,பெரிய ரவுடியாக சித்தரிப்பதால் இவர்கள் அதை பார்த்து இப்படி மாறிவிட்டார்களா என்று நினைக்க தோன்றுகிறது.

இத்தகைய பெண்கள் தவறு செய்வதருக்கு முன்னால் ஒரு நிமிடம் சிந்தித்து இருந்தால் அவர்களுக்குயுரிய பெண்மை அவர்களை  தவறு செய்ய விடாமல் தடுத்து இருக்கும் ... இனியாவது சிந்திப்பார்களா ?Thursday, August 26, 2010

இது நியாயமா ?

புதுசா ஏதாவது சொல்லனும்னு தோணுச்சு(டேய் யாருடா அது கல்லு எரியறது)வாங்க terror,வெங்கட்,அருண் ,ரமேஷ்,செல்வகுமார் ,சௌந்தர் மற்றும் ஜெ அண்ணன் ஆடு பலிபீடத்தில்  தலையை வைச்சாச்சு வந்து வெட்டிட்டு போங்க ...... 

நமது நாட்டில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் M.pகளுக்கு சம்பளம் போத வில்லை என்று பெரிய அமளி நடந்தது .அதாவது அவர்களுக்கு 16000 ருபாய் போதவில்லை அதை 80000 ரூபாயாக வேண்டும் என்று அமளி .உடனே நமது ஆளும் அரசு அவர்களுக்கு 50000 ருபாய் அதிகரித்து கொடுத்திருக்குது .நமது நாட்டில் இது ஒன்றும் புதுதிது இல்லை .அரசு உழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐந்து ஆண்டு திட்டம் என்று கூறி சம்பளம் அதிகரிக்கபடுகிறது .இது நடைமுறைல் நாம் பார்த்துவருகிறோம்.

என்னுடைய கேள்வி என்வென்றால் நாம் தேர்ந்தெடுக்கும் M .p களுக்கு இந்த 16000 ருபாய் போதெவில்லைஎன்றால், இந்த நாட்டில் ரூ.16,000 ஒரு குடும்பம் பிழைப்பதற்குப் போதுமானதல்ல என்றல்லவா பொருள்?.

இது ஒரு புறம் இருக்க இவர்களுக்கு வருடத்திற்கு விமானதில் பயணம் செய்ய இலவசம்,ஒருநாள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள ரூ.1000,அதுபோக ரூ .5000.அலுவலக பராமரிப்பு க்கு ,இலவச தொலைபேசி அழைப்புகள் ,தன்னுடன் இலவசமாக உதவியாளர் அல்லது மனைவியை அழைத்து செல்லலாம் எதற்காக இத்தனை சலுகைகள் ? நமது நாட்டின் பெரும்பான்மை M.p.கள் இந்த ஊதியத்தை நம்பித்தான் வாழ்ந்து வருகிறார்களா?


எத்தனை கோடி செலவு செய்து வெற்றி பெற்று வந்துள்ளார்கள் இவர்கள்? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள்,வாக்காளர்களை மகிழ்விக்க எத்தனை கோடிகளை அள்ளி வீசினார்கள் என்பது மக்களுக்கே தெரியும் .
நமது நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 37விழுக்காட்டினர்(நானும் விஜயகாந்த் மாதிரி சொல்ல நினைத்தேன் முடியல ) வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என்று அரசு அமைத்த டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர் இல்லை மக்கா ) குழு கூறியுள்ளது. அதாவது நாள் ஒன்றிற்கு ஒரு வேளை உணவிற்கு திண்டாடுபவர்கள்!.இப்படி இருக்கும் மக்கள் (வாக்காளர்கள் ).ஊடு போட்டு தான் இவரகள் நாடாளுமன்றத்திற்கு செனறார்கள் .ஆனால இவர்கள் நமது M.pகள் தங்களைத் தேர்ந்தேடுத்தனுப்பிய அவர்களின் வாழ்வைப் பற்றிச் சிந்திக்காமல், தங்களின் வசதியை அரசு செலவில் பெருக்கிக்கொள்ளத்தான் இந்தப் பாடு படுகிறார்கள்.

நம் அரசு M.pகளுக்கு சமபளத்தை அதிகரித்து கொடுப்பதால் ஏற்படும் செலவினால் ஒன்றும் மூழ்கிவிடப் போவதில்லை .ஆனால், மக்கள் பிரதிநிதிகள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் ஒரு பெரும் பிரிவினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதைப் பற்றி சற்றும் பொருட்படுத்தாமல்,ஊதியஉயர்வு கேட்பது நியாயமுமல்ல, ஜனநாயகமுமல்ல.


குறிப்பு:

சில புள்ளி விவரங்கள் உடகங்கள் வாயிலாக தேடி எடுக்கபட்டது .ஏனென்றால் விஜயகாந்த் என் பதிவை பார்பதாக கேள்விப்பட்டேன் அதனால் புள்ளிவிவரங்கள் தேட வேண்டியதாக போய்டுச்சி மத்தபடி இது என் சொந்த கருத்துகளே

Monday, August 23, 2010

என்ன கொடுமை

நான்கு பதிவுகள் போட்டாச்சு அடுத்த பதிவு எப்போ என்று சிரிப்பு போலீஸ் ,terror மற்றும் எனக்கு ஒட்டு போட்ட ,கமெண்ட்ஸ் அனுப்பின பதிவர்கள் எல்லோரும் கேட்டாங்க (நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் ........)

கோவில்பட்டில மொத்தம் 3 பொறியியல் கல்லூரிகள், 4 கலை கல்லூரிகள் ,2 Polytechnic (தமிழில் எப்படி எழுத தெரியலை ).இங்கு படிக்கும் மாணவர்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும்(நம்ம சிரிப்பு போலீஸ் படிச்ச ஊரு இது தான்).இங்கு படிக்கும் மாணவர்கள் ஸ்கூல் படிச்ச மாதிரி தான் கல்லூரிகளிலும் படிகிறார்கள் .அதாவது ஸ்கூலில் ஒரு period -க்கு ஆசிரியர் வரவில்லை என்றல் மற்றொரு ஆசிரியர் வந்து பாடம் எடுப்பார்கள் .இங்கு கல்லூரிகளிலும் அப்படி தான் படம் நடத்துகிறார்கள்.அதவிட கொடுமை polytechic -ன்னு ஒன்னு இருக்கு இங்கு படிக்கும் மாணவர்கள் பேசாம கேரளாவுக்கு அடிமாட போயிறலாம்

இந்த பசங்களை இரவு 7மணி வரைக்கும் வகுப்பு வைக்றாங்க .சில இன்ஜினியரிங் காலேஜ்ல sundayயும் கிளாஸ் வைக்றாங்க.இது போதாதுன்னு இன்னும் இரண்டு காலேஜ்ல காலேஜ் பஸ்ல பொண்ணுங்க மட்டும் தான் போகுனுமம் பசங்க எல்லாம் அரசு பேருந்து ல தான் போறாங்க(என்ன கொடுமை சார் இது)பசங்கள பார்த்த பாவமா இருக்கு.அதே மாதிரி பொண்ணுக அரசு பேருந்துல போககூடாது(கொடுமையை பற்றி sirippupolice அடுத்த பதிவில் எழுதுவார்).இதுபோதுன்னு Birthday ன யாருக்கும் cake கொடுக்ககூடாது (Cake க்கு தமிழில் எப்படி எழுத வேண்டும் ).பாடம் விசயமாக எதாவுது சந்தேகம் இருந்தால் போன் பண்ண கூடாது.ரொம்ப முக்கியமாக பொண்ணுக யாரும் இரு சக்கர வாகனத்தில் வரகூடாது.ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்துக்கு கொடியேற்ற வரவில்லை என்றால் 50 ரூபாய் அபராதம்.அப்புறம் முக்கியமாக பொண்ணுக யாரும் பசங்க கூட பேசக்கூடாது அதேமாதிரி பசங்க யாரும் பொண்ணுக கூட பேச கூடாது .அப்படி நடந்தால் பெற்றோர்களை அழைத்து வந்து apology எழுதித்தரவேண்டும் .

இப்படி காலேஜ் நடத்துறதுக்கு பதில் பேச பால்வாடி ஸ்கூல் வைத்து நடத்தலாம்

குறிப்பு

எல்லா காலேஜ்யும் vasவைத்து கும்ம வேண்டும்(அல்லது )chairman ,principal எல்லோரையும் தீ மிதிக்க வைக்க வேண்டும்

Tuesday, August 17, 2010

வேலை வாய்ப்பகம்

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது .எதற்காக செயல்படுகிறது ? வேலை கொடுபதற்காக என்று நினைத்தால் .இல்லை என்று தான் பெரும்பாலானவர்களின் பதிலாக உள்ளது .ஆட்சியாளர்கள் எல்லோரும் பணம் உள்ளவர்களுக்கே வேலை கொடுக்கிறார்கள்.ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் ஆசிரியராக பணிபுரிவதை நம் தெருவில் நம் பக்கத்து விட்டில் கூட பார்க்கிறோம் (உனக்கு ஏன் இந்த  பொறமை ).

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு பரீட்சை வைத்து தான் நபரை தேர்ந்து எடுகிறார்கள். உதாரணமாக T.N.P.S.C-1,T.N.P.S.C-2,T.N.P.S.C-3,T.N.P.S.C-4 இது R .d .o ,Revenue inspector,Executive officer,V.A.O .Block development officer போன்ற பணிகளுக்கு இந்த் பரீட்சை வைத்து ஒரு நபரை தேர்ந்து எடுக்கிறார்கள். ஆசிரியர் பணிகளுக்கு Teachers recuirement Board exam எழுதினால் அதிலிருத்து ஆசிரியராக பணியமர்த்த படுகிறார்கள் .

கல்லூரி பேராசிரியர்களுக்கு SLET ,NET exam தேவை என்று கூறுகிறார்கள். ரயில்வே வேலைக்கு railway exam எழுதணும். இப்படி அரசு போக்குவரத்து டிரைவர்களுக்கும் certificate course உண்டு.(பெயர் மறந்து போச்சு). முக்கியமாக என்னை மாதிரி collectorஆக (Billcollector) வரணும்ன்னா IAS பரீட்சை எழுதணும்

பின்பு ஏன் இந்த வேலை வாய்ப்பகம்?அதில் ஏன் இத்தனை பேர் வேலை பார்கிறார்கள்.அவர்களுக்கு வருடத்தில் இரண்டு மூன்று நாட்கள்தான் வேலையே இருக்கிறது அதாவது +2  மதிப்பெண் பட்டியல் பதிய மற்றும் ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்கள் பதியும் நாட்கள் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது .மற்ற நாட்கள் இவர்கள் என்ன வேலை பார்கிறார்கள்.(மயிரை புடுங்குகிரார்களா)என்று கேட்க தோன்றுகிறது .

எத்தனையோ பேர் ஊருவிட்டு ஊருவந்து ஆசிரியராகவும் பேராசிரியர் ஆகவும் குறைந்த ஊதியத்தில் வேலை பார்கிறார்கள் .இவர்கள் சொந்த ஊரில் வேலை பார்த்தால் குறைந்த ஊதியமாக இருந்தாலும் பணம் மிச்சமாகும் . இதில் வேறு கடைசி காலத்தில்  தாய் தந்தையரை பார்க்காத பிள்ளைகளுக்கு தண்டனை என்று ஒரு சட்டம்.

எப்படி பார்க்க முடியும்? சென்னையில் வேலைபார்க்கும் ஒருவன் தன மனைவி குழந்தையுடன் குடும்பம் நடத்துவதற்கே கஷ்டமாக இருக்கும் பொழுது தன தாயையும்  தந்தையும் கூட்டி சென்று கஷ்டப்பட வைக்க முடியுமா சொல்லுங்கள் இல்லை அவர்கள் தான்  ஊரை விட்டு சென்னை வருவார்களா என்று கேட்டால்  என் கடைசி காலம் என் ஊரில் முடிய வேண்டும்  என்பார்கள் .

ஓவ்வொரு வருடமும் 4 1 /2 லட்சம் மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள் .இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது.30 வயதிற்கு மேல் தான் ஒருவன் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஒரு வேலையில் அமர்கிறான். பின்பு எப்பொழுது கல்யாணம் பண்ணுவான்?

பின் குறிப்பு: 
அடுத்த வருடம் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்-கில்  வேலை செய்ய examஉண்டு ஒரு FULL-ஐ மூச்சு விடாம குடிக்கணும் அப்டின்னு practical exam வச்சாலும் வைப்பார்

Monday, August 16, 2010

சாதனை

சாதனை
ரொம்ப சீரியஸ் ஆக ஏதோ பதிவு போடுகிறேன் என்று நினைக்க  வேண்டாம் (ஆமா நீயே  ஒரு காமெடி பீஸ் )வேறொன்றும் இல்லை எனக்கு கல்யாணம் முடிந்து ஆறு வருடங்கள் முடிந்து விட்டது (இது தான் சாதனையா ).நிறைய குடுபங்கள் இன்று கல்யாணம் முடிந்து ஒருவருடத்திலேய விவாகரத்தில்   முடிகிறதை கண்முன்னால் பார்கிறேன்.
அதனால் தான் இதை பதிவில் எழுதுகிறேன் .கணவன் மனைவி  இடையே விட்டு கொடுக்கும் மனபாங்கு மிகவும் குறைந்து விட்டது என்றே தோன்றுகிறது
மேலும் பணம் சம்பந்திபதர்க்காக கணவன் ஒரு இடமும் மனைவி  ஒரு இடமும் இருக்கிறார்கள் .எங்கே போகிறது நம் உலகம் .பணம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்று தான் .ஆனால்  அதுவே அணைத்து சந்தோசத்தையும்  தந்து விடாது .என் கவலைகள் போக என் பொண்ணு  கூட ஒரு பத்து நிமிடம் விளையாடினால்  போதும் நான் சந்தோசம் அடைந்துவிடுவேன் .கல்யாணம் எனபது கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதற்காக தான் .இருவரும் ஒரே இடத்தில இருந்து பணம்  எட்டுவதை நான் குறை சொல்லவில்லை. .கணவன் மனைவி குழந்தை என்பது தான்  குடும்பம் .
சரி கணவன் இருக்குமிடத்தில் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தால் பட்ஜெட் இடிக்கிறது (நகரத்தில் மட்டும்).எனவே இன்றய தலைமுறைகள் தன சொந்த கிராமத்தில் மனைவி குழந்தைகளை விட்டு செல்கின்றனர் .இதற்க்கு எதுக்கு கல்யாணம் பேசாமல் பிரம்மசாரியாக  ஆக இருந்து விடலாம்.
இப்ப சொல்லுங்க இது சாதனை தானே .என்னை பொறுத்த வரை இது சந்தோஷ சாதனை .

Saturday, August 7, 2010

தமிழ் ஆர்வம்

தமிழ் மீது  மிகுந்த ஆர்வம்  இருந்தாலும் .நான் படித்தது ஆங்கிலதில் தான் .நான் பதிவுலகில் முதலில் எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருந்த இருவரை முதலில் இந்த பதிவில் கூற ஆசை படுகிறேன்
 முதல் நபர் ச .தமிழ்செல்வன் .இவரிடம் நான் நேரிடையாக  பேசியது கிடையாது ஆனால் இவரின் புத்தகம் ஒன்று படித்தேன் (பெண்மை ஒரு கற்பிதம் )அதன் பிறகு என் தம்பி பொன் கார்த்திக் மூலம் அவரது மகன் திருமணத்தின் பொழுது அவரை பார்த்தேன் அவரின் தமிழ் பேச்சை ரசித்தேன் பின்பு அவரது ப்ளாக்  மூலம் நானும் பதிவுலகில் கால் பதித்தேன்.ஆனால் இது அவருக்கே தெரியாது .

இரண்டாவது  நபர் இனொரு நண்பர் ரமேஷ் (sirippupolice  ப்ளாக் இன் பெயர் )நல்ல நண்பர் .சென்னைல சாப்ட்வேர் பொறியாளர் ஆக இருக்கிறார் .இவர் தான் எதாவுது பதிவை முதலில் போடு என்று கூறியவர் .
இவர்கள் தான் பதிவுலகில் நான் வர காரணமானவர்கள் 

Friday, August 6, 2010

நமது கல்வி முறை

மிகவும் ரொம்ப காலத்துக்கு அப்புறம் எதி பதிவு செயக்கிறேன்
இன்னும் நிறைய பதிவு போடணுமுன்னு ஆசைதான் ஆனால் நேரம் அதிகமாக கிடைபதில்லை (போதும் சொல்லவந்ததை சொல்லு.... உங்க மனதை ரீட்பண்ண முடியுது )
இன்றைய சமுதாயத்தை பெற்றோர் களும் நமது ஆட்சியாளர்களும் பணத்தை பேஸ் பண்ணியே சமுதாயத்தை ஏமாற்று கிறார்கள் .மனித பண்பும் ,மனித நேயமும் அடியோடு அழிந்து வருகிறது. நான் படிக்கும் பொழுது இந்த கோர்ஸ் படிச்சா வேலை வாய்ப்பு அதிகம் என்று சொல்லிகுடுக்க கூட ஆள்ல் கிடையாது .அனல் இப்பொழுது இதை படித்தல் இவள்ளவு சம்பளம் கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள் .எல்லோரம் பணத்தை தேடியே ஓடுகிறார்கள் .வீட்டில் உள்ள பெற்றோர் களே இப்படி இருக்கிறார்கள்.