Monday, May 30, 2011

பதிவர்களே நெல்லைக்கு வாங்க .....


                                                       

ஞாயிறு (29-05-11)மாலை ஐந்து மணிக்கு என் குடும்பத்தோட நண்பர் ...இல்ல .இல்ல... அன்பர் சங்கரலிங்கம் அவர்களை பார்க்க சென்றேன் .ரொம்ப எளிமையான மனிதர் .இவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்த கௌசல்யா சகோதரி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .நிறைய விழிப்புணர்வு கட்டுரைகள் இணைய உலகத்தில் கொட்டி கிடக்கிறது. சில சமயம் நானும் சொல்லி இருக்கிறேன் ,செயல் படுத்துவது ரொம்ப கடினம் .ஆனால் சங்கரலிங்கம் சார் அவர்கள் வாய் சொல்லில் மட்டும் வீரராக இல்லாமல் செயலிலும் காட்டி அசத்தி கொண்டு வருகிறார் என்பதை என் நண்பர்களுக்கு பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .


முதலில் நான் என் குடும்பத்தோடு நெல்லை போய் சேர்ந்தேன் .பிரபல பதிவர்கள் என்றால் கொஞ்சம் லேட் ஆக தான் வருவாங்க. அதே மாதிரி கௌசல்யா சகோதரி தன் கணவருடன் லேட் ஆக வந்து சேர்ந்தார் .மற்றொரு பதிவர் ராம்குமார் 2006 முதல் எழுதுகிறார் www.nellainanban.blogspot.com நெல்லை நண்பன் என்ற வலைபூவில் எழுதுகிறார் .அவர் என்னை ,கௌசல்யாவை விட சீனியர் அதனால் அதன் பிறகு தான் வந்தார் (சீனியர் என்றால் அப்படி தான் இருக்கணும் போல ...ஹி ..ஹி ..).
ஆனா ரொம்ப சின்ன பையன் 25வயது தான் .இவர்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி .
அப்படியே நெல்லையில் பதிவர் சந்திப்பு பற்றி பேச்சு திரும்பியது .நானும் என் பங்குக்கு நம்ம PSV சார் ,கோமாளி செல்வா இவர்களை கூப்பிட்டேன் .இருவரும் வருவதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளார்கள்.அப்புறம் சங்கரலிங்கம் சார் வாங்க மிதிலா ஹால் போய் பார்த்துட்டு வருவோம்ன்னு கூப்பிட்டார்கள் ..போய் பார்த்துவிட்டு ஜூன் 17 அன்று confirm பண்ணிவிட்டு வந்தோம் ...


திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. 'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் அவர்கள் தலைமையில் வரும்  17.06.2011 வெள்ளி அன்றுபதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.       

                        இடம்: மிதிலா ஹால்,A/C.
                        ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
                        நாள்: 17.06.2011 
                        நேரம்: காலை 10.00 மணி

10.06.2011 குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து விடலாம். 

அவரது  unavuulagam@gmail.com  mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.(தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..ஹையோ ..என்னோட ஸ்டைல்ல இருகரம்கூப்பி கேட்டு கொள்கிறேன் )
அவரது செல் எண் 9442201331.

என்னது ..டேய் சத்தம் போடாதீன்கப்பா... டெர்ரர் அண்ட் ரமேஷ் எதோ கேக்குறாங்க ...அல்வாவா..? கண்டிப்பா உண்டு மக்கா ...ஹி ஹி .....நேத்தே எனக்கு கிடைச்சிட்டு (அதுக்கு தானே போன அப்படின்னு எவனோ அங்க சொல்லுறான் பாரு ..)..

எலேய் ரமேஷ் சாப்பாடு ஓசூ தாண்டா(அப்ப தான் பய புள்ள முதல் ஆளாக வந்து நிப்பான் ..) .......உன்னால விடுப்பு எடுக்க முடிந்தால் வா ..

நம்ம சித்ரா அக்கா வாராக ..
நாஞ்சில் மனோ வாராக ..
கோமாளி செல்வா வாராக ..
சி .பி செந்தில் குமார் வாராக ..
சீனா ஐயா வாராக ..
வேடந்தாங்கல் கருண் வாராக ..மற்றும் நம் பதிவுலக நண்பர்கள் எல்லாம் வாராக ...வாம்மா மின்னல் ..சீ தூ ..ஒரு ப்ளோல அப்படியே வந்துட்டு ...நீங்களும் வரலாம் மக்காஸ் ..

ஏலே ஜெயந்த் நீ எப்போ ஊருக்கு வர ..அத சொல்லு ...

பதிவுலக நண்பர்கள் அனைவரையும் நேராக காண்பதில் ஆவலாக உள்ளேன் .எல்லோரும் கலந்து கொள்ளும் படி இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன் ...

என்னாது ..பார்ட்டியா ..?சோறு மட்டும் தான். அங்க வந்து தல சுத்துற மாதிரி இருக்கு ..கீழ போய் .பழரசம்(புரிஞ்சுக்கோன்கப்பா..!!) குடிக்க போனேன்னு யாராவது சொன்னா ..நான் திருநெல்வேலிகாரன் ..அருவாக்கு வேலை கொடுத்துராதீக ..இது ஒரு குடும்ப விழா ..அனைவரும் வருக ! விழாவை சிறப்பித்து தருக !!
Friday, May 6, 2011

மலரும் நினைவுகள் ..!!!

                                                                         

    

நான்காம் வகுப்பு முடித்து ஐந்தாம் வகுப்பு செல்லும் தன்  மகனை கூட்டிக்கொண்டு பள்ளி நோக்கி செல்கிறாள் தாய். ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் பையன் படிப்பு முக்கியம் என்று மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்தனர். அந்த குக்கிராமத்தில் ஆங்கில வழி கல்விக்கு போகும் முதல் சிறுவன் அவன் தான்.  சென்னையில் பணி புரியும் தனது கணவன் அனுப்பிய பணத்தினை  எடுத்துக்கொண்டு அந்த வருடத்திற்கான ஸ்கூல் பீஸ் கட்ட  எழுத்தாள் சொல்லிட முடியாத அளவு சந்தோசத்துடன் தன் கையை இறுகப்பற்றி பற்றிக்கொண்டு  வரும் மகனின் முகத்தை பார்த்து மனதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன்  சந்தோசத்துடன் கூட்டி கொண்டு செல்லும் அந்த தாயிடம்   

"புக் எல்லாம் வாங்கிருலாம் இல்லையா அம்மா ....!!  

"வாங்கிருவோம் செல்லம்" ..

"அம்மா அப்படியே கடைக்கு போய் பிரவுன் சீட் ..ஸ்டிக்கர் லேபிள் எல்லாம் வாங்குவோம் அம்மா" ..

இல்லடா அப்பா பீசுக்குக்கு மட்டும் தான் பணம் அனுப்பி இருக்காங்க.. இன்னும் 20 நாள் கழிச்சு அப்பா வந்து வாங்கி தருவாங்க  சரியா ..

பையன் வெடுக்கென்று அம்மாவின் கையை தட்டி விட்டு..... போன வாட்டியும் இப்படி தான் சொன்னீங்க கடைசில அப்பா ஸ்கூல் திறந்து ரெண்டு நாள் கழித்து தான் வந்தாங்க,  அப்புறம் தான் எனக்கு அட்டை எல்லாம் போட்டு தந்தாங்க .என் பிரெண்ட்ஸ் எல்லோரும் முதல் நாளே புதுபேக் ,வாட்டர் பாட்டில் எல்லாம் கொண்டு வந்தாங்க ..என்று கோவமாக கத்தினான் .

"சரிடா அப்பா சீக்கிரம் இந்த வாட்டி வந்திருவாங்க,  நீ ஏன் நடு ரோட்டில் இருந்து இப்படி கத்துற" என்று அம்மா கொஞ்சம் கடுஞ்சொற்களை வீசினாள் ..

அவனது மலர்ந்த முகம் வாடிப்போனது. அதன் பிறகு அவன் ஒன்றும் சொல்லவில்லை .. பேருந்து பிடித்து ஊர் வந்து சேர்ந்தார்கள் ..

அதே சிறுவனின் கால் நூற்றாண்டு வாழ்க்கைக்கு பிறகு 

 தன் மகளுக்கு பாட புத்தகம் வாங்கி வீட்டில் வைத்தான் ..

"அப்பா பைக் ஸ்டார்ட் பண்ணுங்க போய் பிரவுன் சீட் ,வாட்டர் பாட்டில் ,பேக்  ..எல்லாம் வாங்கி வருவோம்"  என்றாள் மகள் 

"குட்டிமா  இன்னைக்கு மே 7  தான் ஆகி இருக்கு இன்னும் நாள் இருக்கு பிறகு வாங்கலாம்" என்று கூறியதும் தான் தாமதம்  இன்றைக்கே வாங்க வேண்டும் என்று அழுது புரண்டு அடம பிடிக்க ஆரம்பித்தாள்.. 

அச்சமயம் அங்கே வந்த தாயின் நினைவில் பழைய நாட்கள் வந்து செல்ல அவனை பார்த்து "அப்பனுக்கு மகள் தப்பாம பிறந்து இருக்கிறாள் " என்று  சிரித்து விட்டு சொன்னாள்..

ஆம் ..அது ஒரு சந்தோசம் தான் புது புக் ,நோட்ஸ் எல்லாம் வாங்கி அட்டை போட்டு ..லேபிள் ஒட்டி,பேர் எழுதி வைக்கிறது ..கூடவே சோப்பு கவர் எடுத்து புக்குள்ள வைச்சு புக் திறக்கும் பொழுது வரும் வாசனை ..மயில் இறகு வைத்து அரிசி கொஞ்சம் வைக்கிறது ..ஏன் என்றால் மயில் இறகு குட்டி போடுமாம் ..(புக் அப்புறம் திறத்து பார்ப்பதே கிடையாது ..அது வேற விஷயம் ..)

பத்தாம் வகுப்புக்கு அப்புறம் மார்க் சீட் வீட்டில் காண்பிப்பதே கிடையாது .அம்மாவின் கையெழுத்தை எம்.சுப்புலெட்சுமின்னு அழகாக போடுவான் அந்த பையன் ....

இப்படி தன் கடந்த காலத்தை நினைத்தவன் .தன் மகளை பைக்கில் ஏற்றி கொண்டு கடை நோக்கி சென்று எல்லாம் வாங்கி வந்தான் ..

இன்று இரவு கச்சேரி இருக்குது ..அட்டை போடணும் லேபிள் ஓட்டனும் பேர் எழுதணும் ..ஹையோ ..ஹையோ ..

இந்த அப்பாவும் ,பொண்ணும்  யாருன்னு கேக்குறீங்க ...சாட்ச்சாத் பாபுவும் ..அவள் மகளும் தாங்க ..சின்ன பிளாஷ் பாக் ..நினைத்து பார்த்தல் சந்தோசம் மனதில் பரவி கிடக்கிறது ..