Monday, May 30, 2011

பதிவர்களே நெல்லைக்கு வாங்க .....


                                                       

ஞாயிறு (29-05-11)மாலை ஐந்து மணிக்கு என் குடும்பத்தோட நண்பர் ...இல்ல .இல்ல... அன்பர் சங்கரலிங்கம் அவர்களை பார்க்க சென்றேன் .ரொம்ப எளிமையான மனிதர் .இவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்த கௌசல்யா சகோதரி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .நிறைய விழிப்புணர்வு கட்டுரைகள் இணைய உலகத்தில் கொட்டி கிடக்கிறது. சில சமயம் நானும் சொல்லி இருக்கிறேன் ,செயல் படுத்துவது ரொம்ப கடினம் .ஆனால் சங்கரலிங்கம் சார் அவர்கள் வாய் சொல்லில் மட்டும் வீரராக இல்லாமல் செயலிலும் காட்டி அசத்தி கொண்டு வருகிறார் என்பதை என் நண்பர்களுக்கு பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .


முதலில் நான் என் குடும்பத்தோடு நெல்லை போய் சேர்ந்தேன் .பிரபல பதிவர்கள் என்றால் கொஞ்சம் லேட் ஆக தான் வருவாங்க. அதே மாதிரி கௌசல்யா சகோதரி தன் கணவருடன் லேட் ஆக வந்து சேர்ந்தார் .மற்றொரு பதிவர் ராம்குமார் 2006 முதல் எழுதுகிறார் www.nellainanban.blogspot.com நெல்லை நண்பன் என்ற வலைபூவில் எழுதுகிறார் .அவர் என்னை ,கௌசல்யாவை விட சீனியர் அதனால் அதன் பிறகு தான் வந்தார் (சீனியர் என்றால் அப்படி தான் இருக்கணும் போல ...ஹி ..ஹி ..).
ஆனா ரொம்ப சின்ன பையன் 25வயது தான் .இவர்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி .
அப்படியே நெல்லையில் பதிவர் சந்திப்பு பற்றி பேச்சு திரும்பியது .நானும் என் பங்குக்கு நம்ம PSV சார் ,கோமாளி செல்வா இவர்களை கூப்பிட்டேன் .இருவரும் வருவதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளார்கள்.அப்புறம் சங்கரலிங்கம் சார் வாங்க மிதிலா ஹால் போய் பார்த்துட்டு வருவோம்ன்னு கூப்பிட்டார்கள் ..போய் பார்த்துவிட்டு ஜூன் 17 அன்று confirm பண்ணிவிட்டு வந்தோம் ...


திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. 'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் அவர்கள் தலைமையில் வரும்  17.06.2011 வெள்ளி அன்றுபதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.       

                        இடம்: மிதிலா ஹால்,A/C.
                        ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
                        நாள்: 17.06.2011 
                        நேரம்: காலை 10.00 மணி

10.06.2011 குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து விடலாம். 

அவரது  unavuulagam@gmail.com  mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.(தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..ஹையோ ..என்னோட ஸ்டைல்ல இருகரம்கூப்பி கேட்டு கொள்கிறேன் )
அவரது செல் எண் 9442201331.

என்னது ..டேய் சத்தம் போடாதீன்கப்பா... டெர்ரர் அண்ட் ரமேஷ் எதோ கேக்குறாங்க ...அல்வாவா..? கண்டிப்பா உண்டு மக்கா ...ஹி ஹி .....நேத்தே எனக்கு கிடைச்சிட்டு (அதுக்கு தானே போன அப்படின்னு எவனோ அங்க சொல்லுறான் பாரு ..)..

எலேய் ரமேஷ் சாப்பாடு ஓசூ தாண்டா(அப்ப தான் பய புள்ள முதல் ஆளாக வந்து நிப்பான் ..) .......உன்னால விடுப்பு எடுக்க முடிந்தால் வா ..

நம்ம சித்ரா அக்கா வாராக ..
நாஞ்சில் மனோ வாராக ..
கோமாளி செல்வா வாராக ..
சி .பி செந்தில் குமார் வாராக ..
சீனா ஐயா வாராக ..
வேடந்தாங்கல் கருண் வாராக ..மற்றும் நம் பதிவுலக நண்பர்கள் எல்லாம் வாராக ...வாம்மா மின்னல் ..சீ தூ ..ஒரு ப்ளோல அப்படியே வந்துட்டு ...நீங்களும் வரலாம் மக்காஸ் ..

ஏலே ஜெயந்த் நீ எப்போ ஊருக்கு வர ..அத சொல்லு ...

பதிவுலக நண்பர்கள் அனைவரையும் நேராக காண்பதில் ஆவலாக உள்ளேன் .எல்லோரும் கலந்து கொள்ளும் படி இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன் ...

என்னாது ..பார்ட்டியா ..?சோறு மட்டும் தான். அங்க வந்து தல சுத்துற மாதிரி இருக்கு ..கீழ போய் .பழரசம்(புரிஞ்சுக்கோன்கப்பா..!!) குடிக்க போனேன்னு யாராவது சொன்னா ..நான் திருநெல்வேலிகாரன் ..அருவாக்கு வேலை கொடுத்துராதீக ..இது ஒரு குடும்ப விழா ..அனைவரும் வருக ! விழாவை சிறப்பித்து தருக !!




54 comments:

சௌந்தர் said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

பிரபல பதிவர் இம்சை அரசன் வாழ்க..!!!

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு வேளை தான் ஓசி சோறா? ஹி ஹி

மாணவன் said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள் மக்கா :)

மாணவன் said...

//ஏலே ஜெயந்த் நீ எப்போ ஊருக்கு வர ..அத சொல்லு ...
பதிவுலக நண்பர்கள் அனைவரையும் நேராக காண்பதில் ஆவலாக உள்ளேன் .எல்லோரும் கலந்து கொள்ளும் படி இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன் ...//


சிங்கப்பூர்லேருந்து வந்தா ப்ளைட் டிக்கெட் காசு குடுப்பீங்களா மக்கா...ஹிஹிஹி

அருண் பிரசாத் said...

மக்கா டிக்கெட்டுக்கு காசு அனுப்பிவிடுங்க... வந்து சேரறேன்...

இம்சைஅரசன் பாபு.. said...

@அருண் @மாணவன் ..

காசா முக்கியம் நான் உங்க மேல வைச்சிருக்கிற பாசம் அல்லவா முக்கியம் ..சரி ஊருக்கு கை காசு போட்டு வாங்க ..
ரமேஷ் வைச்சு பிச்ச எடுத்தாவது உங்களுக்கு காசு தாரேன் சரியா ...:)

sathishsangkavi.blogspot.com said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்....

நானும் வருகிறேன்....

இம்சைஅரசன் பாபு.. said...

@சங்கவி .
இரு கரம் கூப்பி வரவேற்கிறேன் ...மக்கா

Kousalya Raj said...

//பிரபல பதிவர்கள் என்றால் கொஞ்சம் லேட் ஆக தான் வருவாங்க. //

நான் லேட்டா வந்தேன்...ஓகே ! ஆனா அதுக்கு பிரபல பதிவர் என்ற அடைமொழி கொடுத்து வாரிவிடனுமா ?? :))

இம்சைஅரசன் பாபு.. said...

//அதுக்கு பிரபல பதிவர் என்ற அடைமொழி கொடுத்து வாரிவிடனுமா ?? :))//

இப்ப எல்லாம் கவிதை எழுதினா பிரபல பதிவர் தான்ன்னு சொல்லுறாங்க சகோ ..

செல்வா said...

//.என்னோட ஸ்டைல்ல இருகரம்கூப்பி கேட்டு கொள்கிறேன் )/

அண்ணன் பெரிய அரசியல் வாதியாக்கும் .. ஹி ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஐயா நான் வரலாமா... நெல்லைக்கு..

இம்சைஅரசன் பாபு.. said...

//ஐயா நான் வரலாமா... நெல்லைக்கு..//
குடும்பத்தோட வரலாம்டா ..ஆனா ஜோதிக்கு மட்டும் அனுமதி இல்லை ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவுன்னா என்ன? பதிவர்கள்ன்னா யாரு? பதிவுலகம் அப்டின்னா என்னது?# அப்பாவி ரமேஷ்

மாலுமி said...

/// என்னாது ..பார்ட்டியா ..?சோறு மட்டும் தான். ///

என்ன மச்சி இது நான் ஏமாந்துட்டேன்....
சரி...இது முடிஞ்ச பிறகு நான் எனக்கு பார்ட்டி வச்சுக்குறேன்....

நெல்லை பதிவர் சந்திப்புக்கு என் வாழ்த்துக்கள்......

MANO நாஞ்சில் மனோ said...

எல்லோருக்கும் வாழ்த்துகள்....

MANO நாஞ்சில் மனோ said...

பழரசம் பார்ட்டிகளுக்கு எச்சரிக்கை ஹே ஹே ஹே ஹே ஹே சூப்பர்....

MANO நாஞ்சில் மனோ said...

பதிவுலக நண்பர்கள் அனைவரையும் நேராக காண்பதில் ஆவலாக உள்ளேன் //

எலேய் முதல்ல அருவாளை பின்னாடி வச்சிட்டு கூப்புடுலெய், பிள்ளைங்க பயந்துற போறாயிங்க...

MANO நாஞ்சில் மனோ said...

.அருவாக்கு வேலை கொடுத்துராதீக ..இது ஒரு குடும்ப விழா ..அனைவரும் வருக ! விழாவை சிறப்பித்து தருக !!//

பயபுள்ளை இப்பிடி மிரட்டி கூப்புடுரானே அவ்வ்வ்வ்வ்வ்....

TERROR-PANDIYAN(VAS) said...

ரொம்ப பழைய ஹோட்டலா இருக்கும் போல. மேல செடி எல்லாம் வளர்ந்து இருக்கு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

//நண்பர் ...இல்ல .இல்ல...//

அப்போ ஆவரு நண்பர் இல்லை... சரி ரைட்டு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

//கௌசல்யா சகோதரி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .//

தேர்தல் முடிஞ்சி ரொம்ப நாள் ஆச்சி. மேல மேல... :)

TERROR-PANDIYAN(VAS) said...

//கௌசல்யா சகோதரி தன் கணவருடன் லேட் ஆக வந்து சேர்ந்தார் //

கௌசல்யா அப்படினு ஒரு பதிவர் தெரியும். அவங்க சகோதரியும் பதிவரா? அவங்களோட கணவரும் பதிவரா... பாருடா.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

/அவர் என்னை ,கௌசல்யாவை விட சீனியர் - ஆனா ரொம்ப சின்ன பையன் //

சீனியரா இல்லை சின்ன பையனா? கரைக்டா சொல்லுங்க.. :)

இம்சைஅரசன் பாபு.. said...

////கௌசல்யா சகோதரி தன் கணவருடன் லேட் ஆக வந்து சேர்ந்தார் //

கௌசல்யா அப்படினு ஒரு பதிவர் தெரியும். அவங்க சகோதரியும் பதிவரா? அவங்களோட கணவரும் பதிவரா... பாருடா.. :))//

அட பாவி பிட் பிட்டாக படிச்சு கமெண்ட்ஸ் போடுறான் .நான் பதிவு எழுதவே கஷ்ட்ட படுவேன் ..இப்படி குறை கண்டுபிடிச்ச எப்படிடா பதிவு எழுதுறது ..

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

என் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்காத பாபு அவர்களின் அடுத்த வரும் 50 பதிவுகளை நான் புறக்கனிக்கிறேன்.... :))

இம்சைஅரசன் பாபு.. said...

@டெர்ரர்
அடிங்.... கொய்யால நான் தான் உனக்கு ரிப்ளை போட்டு இருக்கேன்ல அப்புறம் என்ன ..?கண்ணு உனக்கு நொள்ளையாக போச்சு இன்னும் கொஞ்சம் பவர் ஏத்து ..கண்ணாடில

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதிவர் சந்திப்பு வெற்றியடைய என் வாழ்த்துக்கள்..

TERROR-PANDIYAN(VAS) said...

//அடிங்.... கொய்யால நான் தான் உனக்கு ரிப்ளை போட்டு இருக்கேன்ல அப்புறம் என்ன ..?கண்ணு உனக்கு நொள்ளையாக போச்சு இன்னும் கொஞ்சம் பவர் ஏத்து ..கண்ணாடில//

5 கமெண்ட்ல 1 கமெண்ட் மட்டும் ரிப்ளை போட்டா??? செல்லாது செல்லாது.. :)

இம்சைஅரசன் பாபு.. said...

//5 கமெண்ட்ல 1 கமெண்ட் மட்டும் ரிப்ளை போட்டா??? செல்லாது செல்லாது.. :) //

ஆமா இவரு கல்வெட்டுல வைக்க கூடிய கமெண்ட்ஸ் போட்டுட்டாரு ..டேய் ..பிச்சு போடுவேன்

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆமா இவரு கல்வெட்டுல வைக்க கூடிய கமெண்ட்ஸ் போட்டுட்டாரு ..டேய் ..பிச்சு போடுவேன்//

நெல்லையில் என் தொல்லையிலாமல் நடக்க போகும் எல்லையில்லா கொண்டாடத்துக்கு இந்த அன்பு பிள்ளையின் வாழ்த்துகள்!!

அப்படினு வைரமுத்து மாதிரி சொன்னா மட்டும் கல்வெட்டுல போட்டுதான் அடுத்த வேலை பார்ப்பிங்க.. :))

இம்சைஅரசன் பாபு.. said...

//நெல்லையில் என் தொல்லையிலாமல் நடக்க போகும் எல்லையில்லா கொண்டாடத்துக்கு இந்த அன்பு பிள்ளையின் வாழ்த்துகள்!! //

நெல்லையில் உன் அன்பு தொல்லை இல்லாமல் நடக்கும் பதிவர் சந்திப்புக்கு அண்ணன் நான் உனக்கும் சேர்த்து சாப்பிடுறேன் சரியா ...

TERROR-PANDIYAN(VAS) said...

//அண்ணன் நான் உனக்கும் சேர்த்து சாப்பிடுறேன் சரியா ...//

செல்லாது செல்லாது. அதுக்கு நண்பன் ரமேஷ் வருவான். இப்போ நீங்க கல்வெட்டு வைப்பிங்களா மாட்டிங்களா.. அதான் பேச்சி.. :))

இம்சைஅரசன் பாபு.. said...

//செல்லாது செல்லாது. அதுக்கு நண்பன் ரமேஷ் வருவான். இப்போ நீங்க கல்வெட்டு வைப்பிங்களா மாட்டிங்களா.. அதான் பேச்சி.. :))//

என்னடா கல்வெட்டு ..கல்வெட்டு ன்னு சொல்லிக்கிட்டு ..அத விட பெருசா உனக்கு கல்லறை கட்டி விடுகிறேன் ...என் உயிர் நண்பன் உனக்காக இது கூட செய்ய மாட்டேனா ...

TERROR-PANDIYAN(VAS) said...

//என்னடா கல்வெட்டு ..கல்வெட்டு ன்னு சொல்லிக்கிட்டு ..அத விட பெருசா உனக்கு கல்லறை கட்டி விடுகிறேன் ...என் உயிர் நண்பன் உனக்காக இது கூட செய்ய மாட்டேனா ...//

சரி. நான் வரும்வரை அது சும்ம கிடக்க வேண்டாம். நம்ம மாலுமிய அங்க தங்கிக்க சொல்லுங்க.. :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

//செல்லாது செல்லாது. அதுக்கு நண்பன் ரமேஷ் வருவான். இப்போ நீங்க கல்வெட்டு வைப்பிங்களா மாட்டிங்களா.. அதான் பேச்சி.. :))//

என்னடா கல்வெட்டு ..கல்வெட்டு ன்னு சொல்லிக்கிட்டு ..அத விட பெருசா உனக்கு கல்லறை கட்டி விடுகிறேன் ...என் உயிர் நண்பன் உனக்காக இது கூட செய்ய மாட்டேனா ...//

மலர்வளையம் என் செலவு. ஓகே வா?

இம்சைஅரசன் பாபு.. said...

//சரி. நான் வரும்வரை அது சும்ம கிடக்க வேண்டாம். நம்ம மாலுமிய அங்க தங்கிக்க சொல்லுங்க.. :)//

அது சரி படாது மக்கா ..மாலுமி ஆள் ஹைட் அண்ட் வெயிட் ஜாஸ்தி செலவு ஓவரா இருக்கும்

மாலுமி said...

/// //சரி. நான் வரும்வரை அது சும்ம கிடக்க வேண்டாம். நம்ம மாலுமிய அங்க தங்கிக்க சொல்லுங்க.. :)//
அது சரி படாது மக்கா ..மாலுமி ஆள் ஹைட் அண்ட் வெயிட் ஜாஸ்தி செலவு ஓவரா இருக்கும் ///

யோவ்....ரெண்டு புல்லு ரெண்டு பாகெட் ஊறுகாய் வாங்கி கொடுத்தா... ரெண்டு மாசம் தங்கி கிடப்பேன் மச்சி

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பதிவுன்னா என்ன? பதிவர்கள்ன்னா யாரு? பதிவுலகம் அப்டின்னா என்னது?# அப்பாவி ரமேஷ்///

தம்பி... கொடைக்கானல்ல அடிச்ச போதை இன்னும் தெளியலையா?

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
@அருண் @மாணவன் ..

காசா முக்கியம் நான் உங்க மேல வைச்சிருக்கிற பாசம் அல்லவா முக்கியம் ..சரி ஊருக்கு கை காசு போட்டு வாங்க ..
ரமேஷ் வைச்சு பிச்ச எடுத்தாவது உங்களுக்கு காசு தாரேன் சரியா ...:/

ஒரு திருத்தம்.. ரமேஷ் வச்சிருக்கிற பிச்சகாரிய வச்சாவது.....

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
//அதுக்கு பிரபல பதிவர் என்ற அடைமொழி கொடுத்து வாரிவிடனுமா ?? :))//

இப்ப எல்லாம் கவிதை எழுதினா பிரபல பதிவர் தான்ன்னு சொல்லுறாங்க சகோ .//

நான் கவிதையே எழுதறதில்லையே.. அப்ப நான் பிரபலம் இல்லையா?

வைகை said...

ஐயோ...சொல்ல மறந்திட்டேன்.....

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

பழரசம்(புரிஞ்சுக்கோன்கப்பா..!!) குடிக்க போனேன்னு யாராவது சொன்னா ..நான் திருநெல்வேலிகாரன் ..அருவாக்கு வேலை கொடுத்துராதீக ..இது ஒரு குடும்ப விழா ..அனைவரும் வருக ! விழாவை சிறப்பித்து தருக !!
///

சீ. சீ..... இந்த பழம் புளிக்கும்

மங்குனி அமைச்சர் said...

ஒட்டு போட்டேன் ..... ஒரு மீல்ஸ் பார்சல்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

ராம்குமார் - அமுதன் said...

நன்றி பாஸ் ... 17ம் தேதி சந்திப்போம்... கலக்கி புடுவோம்...

Madhavan Srinivasagopalan said...

நெல்லை சந்திப்பு (Nellai Junction ?) சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..

தினேஷ்குமார் said...

பதிவர் சந்திப்பு இனிமையாக நடக்க இறைவன் அருள் என்றும் உண்டு வாழ்த்துக்கள் ...

Sadhu said...

மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


http://www.verysadhu.blogspot.com/

உலக சினிமா ரசிகன் said...

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

இராஜராஜேஸ்வரி said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்....

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in