Thursday, January 20, 2011

லவ் லெட்டர்

இந்த செல்வா தம்பி நேத்து ஒரு பதிவு போட்டான் .காதல் கடிதம் எழுத தெரியாம ரொம்ப கஷ்ட பட்டேன்னு சொன்னான் .அதான் அவனுக்கு எப்படி காதல் கடிதம் எழுதணும்ன்னு எனக்கு தெரிஞ்ச மாதிரி சொல்லி இருக்கேன் .செல்வா வுக்கு இந்த பதிவை சம்ர்பிக்குறேன் (காதல் பண்ணினா சமாதி தான் ஆகணும் மக்கா .......)

செல்வா தம்பி தொடர் பதிவுக்கு என்னை கூப்பிடல இருந்தாலும் நமக்கு தான் மானம் ,ரோசம் எதுவுமே கிடையாதே அதனால நானே இந்த பதிவை போடுகிறேன் .

காதல் கவிதை எழுதுறவங்க ,காதல் பத்தி கட்டுரை எழுதுறவங்க எல்லோரும் வந்து காறி துப்பிட்டு போகலாம் .குறிப்பாக தேவா அண்ணன் ,சௌந்தர் ,கௌசல்யா ...

மேலும் என் நண்பன் ரமேஷ் ,டெர்ரர் போன்ற கல்யாணம் ஆகாத நண்பர்கள் எல்லோருக்கும் இதை பார்த்து காதல் கடிதம் எழுத கற்று கொள்ளவும் .....


அன்புள்ள முன்னாள் காதலிக்கு

பொருள்: தங்களிடம் கொண்டிருந்த காதல் முறிந்ததின் பேரில் அனைத்து பரிமாற்றங்களை தீர்க்க வேண்டி எழுதப்படும் விண்ணப்பக் கடிதம்


தங்களிடம் இருக்கின்ற இந்த புகைப்படத்தை உடனடியாக திருப்பி அனுப்புமாறு கோரிக்கைசெய்கிறேன். இந்த புகைப்படத்தில் மட்டும் தான் நான் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிவேன் என்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.  மேலும் இந்த புகைப்படம் எனக்கு முதன் முதல் காதல் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது.

மேலும் 11/2 வருடம் நான்தங்களுடன் காதலில் ஈடுபட்டிருந்த போது தங்களை கவர்வதற்காக ஏராளமான பணம் செலவழித்திருக்கிறேன். நான்செலவழித்த தொகையின் பட்டியலை இத்துடன் இணைத்துள்ளேன்.  அதைகூடிய விரைவில் திருப்பி அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செலவழிந்த தொகையின் விவரம் பின்வருமாறு:

வ.
எண்
விவரம்
தொகை
(ரூபாய்களில்)
1
மதிய/இரவு உணவு     
895
2
கூல்ட்ரிங்ஸ்
2938
3
ஸ்நாக்ஸ்
5645
4
ஜூஸ்கள்
3845
5
சினிமா
1235
6
இண்டர்நெட் சாட்டிங்
1399
7
மொபைல் கட்டணம்
2546
8
பெட்ரோல்
4355
9
பரிசுப் பொருட்கள்
7850

மொத்தம்
30, 708

மொத்தத் தொகை ரூ.30,708(எழுத்தில்: முப்பது ஆயிரத்து எழுநூற்று எண்பது ரூபாய்).தயவுசெய்து மேற்கண்ட தொகை திருப்பி அளிக்க வேண்டுகிறேன். இதனால் நான் என் புது காதலிக்கு இந்த பணத்தை செலவு செய்ய ஏதுவாய்இருக்கும்.மேலும் உங்களிடம் என் பரிசுகள் ஏதாவது இருந்தால் அதை பாதி விலைக்குஎடுத்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அந்த பரிசுகளுக்கானவிலையை கணக்கிட்டு அதை மேற்கண்ட தொகையிலிருந்து கழித்துக்கொள்ளலாம்.

இத்துடன் நீங்கள் எனக்கு எழுதிய காதல் கடிதங்களை இணைத்துள்ளேன் (எடை 4 கிகி) எனவே நீங்கள் உங்கள் பாய் ஃபிரண்டுக்கு மீண்டும் எழுத வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்கள் ஃபோட்டோவையும் இணைத்துள்ளேன்.எனவே உங்களின் புதிய பாய்ஃபிரண்டிடம் அதை நீங்கள்அளிக்க உதவியாய் இருக்கும்.

                                 தங்களிடமிருந்து தொகையை எதிர்நோக்கும்
                                        தங்கள் உண்மையுள்ள
                                      முன்னாள் காதலன்டிஸ்க்கி 1 : இந்த பதிவு எழுத உதவிய எஸ் கே அவர்களுக்கு நன்றி .

டிஸ்க்கி 2 :யாருக்கும் எதிர் பதிவு இல்லை ......இது ஆங்கிலத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல் ..


டிஸ்க்கி 3 :அழகான போட்டோ ஒன்னு வேணும் ரமேஷ்ன்னு கேட்டவுடன் தயங்காம அவனோட  போட்டோவ தந்து உதவிய ரமேஷுக்கு  நன்றி 

.60 comments:

செல்வா said...

vadai!

sathishsangkavi.blogspot.com said...

எனக்கு இந்த அனுபவம் எல்லாம் இல்லாமல் போச்சே....

செல்வா said...

//செல்வா வுக்கு இந்த பதிவை சம்ர்பிக்குறேன் (காதல் பண்ணினா சமாதி தான் ஆகணும் மக்கா .......)//

நீங்க போய் சொல்லுறீங்க , காதல் நல்லது

sathishsangkavi.blogspot.com said...

ஏம்பா சரக்குக்கு செலவ விட்டுட்ட...

செல்வா said...

// இதனால் நான் என் புது காதலிக்கு இந்த பணத்தை செலவு செய்ய ஏதுவாய்இருக்கும்.மேலும் உங்களிடம் என் பரிசுகள் ஏதாவது இருந்தால் அதை பாதி விலைக்குஎடுத்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.//

பாதிவிலைக்கா , நீங்க தரும்போதே பாதி விலைக்கு வாங்கித்தானே தந்திருப்பீங்க

செல்வா said...

//எனவே நீங்கள் உங்கள் பாய் ஃபிரண்டுக்கு மீண்டும் எழுத வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்கள் ஃபோட்டோவையும் இணைத்துள்ளேன்.எனவே உங்களின் புதிய பாய்ஃபிரண்டிடம் அதை நீங்கள்அளிக்க உதவியாய் இருக்கும்.///

ஐயோ சாமி , உண்மைலேயே நீங்க ஒரு பெரிய காமெடியர்தான் ..

சக்தி கல்வி மையம் said...

ரொம்ப அனுபவமோ?

சொல்ல வந்த விசயத்தை தெளிவா சொல்லியிருக்கீங்க....
நன்றி..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_20.html

செல்வா said...

//இல்லை ......இது ஆங்கிலத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல் .//

அட பாவமே , இப்படிஎல்லாமா மின்னசல்றாங்க.?

karthikkumar said...

டிஸ்க்கி 3 :அழகான போட்டோ ஒன்னு வேணும் ரமேஷ்ன்னு கேட்டவுடன் தயங்காம அவனோட போட்டோவ தந்து உதவிய ரமேஷுக்கு நன்றி///
அழகான போட்டோ வேணும்னா எதுக்கு அவர்கிட்ட போய் கேட்டீங்க? எங்கிட்ட கேட்டு இருக்கலாம்ல...

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா கலக்கல் பாபு

சௌந்தர் said...

காதல் கவிதை எழுதுறவங்க ,காதல் பத்தி கட்டுரை எழுதுறவங்க எல்லோரும் வந்து காறி துப்பிட்டு போகலாம் .குறிப்பாக தேவா அண்ணன் ,சௌந்தர் ,கௌசல்யா ...////

நாங்க எழுதுறது கவிதை சரி ஆமா இது யார் அது கௌசல்யா...தெரியாத பதிவரா இருக்காங்க அவங்க கண்டனம் தானே எழுதுவாங்க

எஸ்.கே said...

இதே மாதிரி காதலுக்கு அப்ளை பண்ணுறது எப்டின்னும் எழுதனும்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

இது நல்லாயிருக்கே.. நானும் ஒரு லிஸ்ட் ரெடி பண்றேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

இதே மாதிரி காதலுக்கு அப்ளை பண்ணுறது எப்டின்னும் எழுதனும்!

//

நல்ல ஐடியா.. நாளைக்கே எழுதிருவோம்...

Unknown said...

//ஏம்பா சரக்குக்கு செலவ விட்டுட்ட..//

இது லவ்வுக்கு அப்புறம் ...

தினேஷ்குமார் said...

ஆஹா இது நல்லாருக்கே

Unknown said...

//நான் என் புது காதலிக்கு இந்த பணத்தை செலவு செய்ய ஏதுவாய்இருக்கும்.மேலும் உங்களிடம் என் பரிசுகள் ஏதாவது இருந்தால் அதை பாதி விலைக்குஎடுத்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறே//
இனிமேல் உங்களா யாராவது தொடர்பதிவுக்கு கூப்பிடுவாங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கே.ஆர்.பி.செந்தில் said... 15

//ஏம்பா சரக்குக்கு செலவ விட்டுட்ட..//

இது லவ்வுக்கு அப்புறம் ...///

பாபுக்கு சரக்கு செலவெல்லாம் இல்லை. ஏன்னா அவனே வீட்டுல சாராயம் காய்ச்சுறான்

Unknown said...

//இல்லை ......இது ஆங்கிலத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல் .//

மூடி மறைக்கும் முயற்சி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அன்புள்ள முன்னாள் காதலிக்கு//

இது நம்ம ஊர் அப்டெக்குல கரக்ட் பண்ணின கவுன்சிலர் தான? (உங்க வீட்டம்மா இந்த கமெண்ட் படிபாங்களா?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மேலும் என் நண்பன் ரமேஷ் ,டெர்ரர் போன்ற கல்யாணம் ஆகாத நண்பர்கள் எல்லோருக்கும் இதை பார்த்து காதல் கடிதம் எழுத கற்று கொள்ளவும் .....///

பேசு மவனே பேசு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மேலும் 11/2 வருடம்=5.5 yrs?

இத்தன வருசமாவாடா லவ் பண்ணுவ?

Madhavan Srinivasagopalan said...

//அழகான போட்டோ ஒன்னு வேணும் ரமேஷ்ன்னு கேட்டவுடன்//

அழகு - ரமேஷ்
முரண்தொடை ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்க்கி 3 :அழகான போட்டோ ஒன்னு வேணும் ரமேஷ்ன்னு கேட்டவுடன் தயங்காம அவனோட போட்டோவ தந்து உதவிய ரமேஷுக்கு நன்றி ///

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Madhavan Srinivasagopalan said...

//அழகான போட்டோ ஒன்னு வேணும் ரமேஷ்ன்னு கேட்டவுடன்//

அழகு - ரமேஷ்
முரண்தொடை ?///

ரம்பா தொடை மாதிரியா?

இம்சைஅரசன் பாபு.. said...

//இதே மாதிரி காதலுக்கு அப்ளை பண்ணுறது எப்டின்னும் எழுதனும்//
இளவட்ட பசங்கள கெடுத்துற கூடாது இல்ல .அதனால் அதை போடா வில்லை

இம்சைஅரசன் பாபு.. said...

//இது நம்ம ஊர் அப்டெக்குல கரக்ட் பண்ணின கவுன்சிலர் தான? (உங்க வீட்டம்மா இந்த கமெண்ட் படிபாங்களா?)//

அட பாவி பயல அதை இன்னுமா நினைவு வச்சிருக்குற .....அவ கிட்ட செருப்படி நீ வாங்கினத மட்டும் நான் சொல்லவே இல்லை .என் நண்பன் இல்லையா நீ .?

இம்சைஅரசன் பாபு.. said...

//// இதனால் நான் என் புது காதலிக்கு இந்த பணத்தை செலவு செய்ய ஏதுவாய்இருக்கும்.மேலும் உங்களிடம் என் பரிசுகள் ஏதாவது இருந்தால் அதை பாதி விலைக்குஎடுத்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.//

பாதிவிலைக்கா , நீங்க தரும்போதே பாதி விலைக்கு வாங்கித்தானே தந்திருப்பீங்க//

ஹி ஹி ...நீ வேற அவங்க கிட்ட நான் வாங்கின பொருள் தான் ஜாஸ்த்தி மக்கா

இம்சைஅரசன் பாபு.. said...

//ஐயோ சாமி , உண்மைலேயே நீங்க ஒரு பெரிய காமெடியர்தான் .//

ஹ ....ஹா ...உன்னைவிடவா தம்பி ...இது சும்மா லுல்லுலாய் .....

இம்சைஅரசன் பாபு.. said...

//டிஸ்க்கி 3 :அழகான போட்டோ ஒன்னு வேணும் ரமேஷ்ன்னு கேட்டவுடன் தயங்காம அவனோட போட்டோவ தந்து உதவிய ரமேஷுக்கு நன்றி///
அழகான போட்டோ வேணும்னா எதுக்கு அவர்கிட்ட போய் கேட்டீங்க? எங்கிட்ட கேட்டு இருக்கலாம்ல...//

ஹி ,ஹி ......அடுத்தவாட்டி இதை விட கேவலம்மா ஒரு பதிவு எழுதிட்டு போட்டோ கேக்குறேன் சரியா ....

இம்சைஅரசன் பாபு.. said...

//ஏம்பா சரக்குக்கு செலவ விட்டுட்ட..//

இது லவ்வுக்கு அப்புறம் .//

ஹ .ஹா ...அது சரி ...

இம்சைஅரசன் பாபு.. said...

//நாங்க எழுதுறது கவிதை சரி ஆமா இது யார் அது கௌசல்யா...தெரியாத பதிவரா இருக்காங்க அவங்க கண்டனம் தானே எழுதுவாங்க//

எலேய் நீயே எழுத சொல்லுவா போல இருக்கே ...

இம்சைஅரசன் பாபு.. said...

//இது நல்லாயிருக்கே.. நானும் ஒரு லிஸ்ட் ரெடி பண்றேன்.//

உனக்கு செலவு கணக்கு ரொம்ப ஜாஸ்த்தியா வருமே மக்கா

இம்சைஅரசன் பாபு.. said...

////ஏம்பா சரக்குக்கு செலவ விட்டுட்ட..//

இது லவ்வுக்கு அப்புறம் ...///

பாபுக்கு சரக்கு செலவெல்லாம் இல்லை. ஏன்னா அவனே வீட்டுல சாராயம் காய்ச்சுறான்//

அதுக்கு மேனேஜர் நம்ம ரமேஷ் தான் .......சேல்ஸ் மேனேஜர் ......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது லவ்வு லெட்டரு இல்லியே தம்பி, மறுக்கா எழுதுமா ராஜா....!

இம்சைஅரசன் பாபு.. said...

//இது லவ்வு லெட்டரு இல்லியே தம்பி, மறுக்கா எழுதுமா ராஜா....//

இன்னொரு லவ் பண்ணனும் ......அதுக்காக கேன்சல் லெட்டர் மக்கா

மாணவன் said...

அந்த போட்டவுல இருக்குற அழகிய தமிழ்மகன் யாரு அவருதான் இளைஞனா????

இப்பதான் தெரியுது ஏன் ஒருத்தரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்கன்னு....ஹிஹிஹி

இம்சைஅரசன் பாபு.. said...

//அந்த போட்டவுல இருக்குற அழகிய தமிழ்மகன் யாரு அவருதான் இளைஞனா????

இப்பதான் தெரியுது ஏன் ஒருத்தரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்கன்னு....ஹிஹிஹி//

உனக்கும் புரிஞ்சு போச்சா ராசா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த ஃபேர் அண்ட் லவ்லிய மூஞ்சில அப்பு அப்புன்னு அப்புவியே, அந்த செலவை ஏன் சேர்க்கல ?(அப்போ அந்த கிரீம அப்பி, நெஜமாவே செகப்பாயிட்டியா?)

இம்சைஅரசன் பாபு.. said...

//இந்த ஃபேர் அண்ட் லவ்லிய மூஞ்சில அப்பு அப்புன்னு அப்புவியே, அந்த செலவை ஏன் சேர்க்கல ?(அப்போ அந்த கிரீம அப்பி, நெஜமாவே செகப்பாயிட்டியா?//

யாரை கேக்குறீங்க பன்னி.....ரமேஷ் செகப்பா தானே இருக்கான் ...அந்த கருப்பு கண்ணாடிய கழற்றி பருப்பா ...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
//இந்த ஃபேர் அண்ட் லவ்லிய மூஞ்சில அப்பு அப்புன்னு அப்புவியே, அந்த செலவை ஏன் சேர்க்கல ?(அப்போ அந்த கிரீம அப்பி, நெஜமாவே செகப்பாயிட்டியா?//

யாரை கேக்குறீங்க பன்னி.....ரமேஷ் செகப்பா தானே இருக்கான் ...அந்த கருப்பு கண்ணாடிய கழற்றி பருப்பா ...?//////

என்னது ரமேசு செகப்பா? எங்கே?

இம்சைஅரசன் பாபு.. said...

//இந்த ஃபேர் அண்ட் லவ்லிய மூஞ்சில அப்பு அப்புன்னு அப்புவியே, அந்த செலவை ஏன் சேர்க்கல ?(அப்போ அந்த கிரீம அப்பி, நெஜமாவே செகப்பாயிட்டியா?//


//யாரை கேக்குறீங்க பன்னி.....ரமேஷ் செகப்பா தானே இருக்கான் ...அந்த கருப்பு கண்ணாடிய கழற்றி பருப்பா ...?//////

என்னது ரமேசு செகப்பா? எங்கே? //

அட பாவி அப்போ என்னை பார்த்த கையால தேச்சு போட்டு வைசிருவீயே மக்கா

Chitra said...

funny!

ஆனந்தி.. said...

:))

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 18
கே.ஆர்.பி.செந்தில் said... 15

//ஏம்பா சரக்குக்கு செலவ விட்டுட்ட..//

இது லவ்வுக்கு அப்புறம் ...///

பாபுக்கு சரக்கு செலவெல்லாம் இல்லை. ஏன்னா அவனே வீட்டுல சாராயம் காய்ச்சுறான்///

தப்பா சொல்லாதிங்க எப்படி சாராயம் காய்ச்சனும் சொல்லிதாரார்

dheva said...

அதானே பாத்தேன்........தம்பி காதல் கடிதம் எழுதுறானே.......அதை படிச்சு பொண்ணுக மனசு என்ன ஆகப் போகுதோன்னு பார்த்தேன்.......

சரி என் தம்பி சி.போ கிட்ட பர்மிசன் வாங்கினியா போட்டோ போட....இல்ல தெரியாம கேக்குறேன்.சிங்கத்த கேக்காம விளையாண்டு இருக்க...இப்போ பாரு அவன் எதிர் பதிவு போட்டாலும் போடுவான் இன்னிக்கு நைட் 12 மணிக்கு...

அத விடு.. லிஸ்ட் போட்டு சொல்றியே.. நீ மெய்யாலுமே இம்புட்டு செலவு பண்ணி (பன்னி இல்ல தேவையில்லாம என் ஊர்ஸ வம்புக்கு இழுக்காத அவனுக்கு காதல் வரதாது...........பண்ணவும் தெரியாது)

எல்லாத்தையும் எழுதிபுட்டு மின்னஞ்சல்ல வந்துச்சா. இரு மகனே உன்னை ஹரிணி கிட்ட போட்டு கொடுக்குறேன்.....மிச்சத்த அவ பாத்துக்குவா!

அப்போ வர்ர்ர்ட்ட்டா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

48

வெங்கட் said...

ரமேஷ் கல்யாணத்துல நான் இந்த
பதிவை Print Out எடுத்து கல்யாணத்து
வர்ற எல்லோருக்கும் குடுப்பேனே..

ஹி., ஹி., ஹி..!!!

அருண் பிரசாத் said...

என்னா கொலவெறி......

அருண் பிரசாத் said...

சரி சரி.... உங்க வீட்டு போன் நம்பர் பிளீஸ்.....

மங்குனி அமைச்சர் said...

ஹா,ஹா,ஹா,............ அந்த படத்த அப்படியே உங்க பிளாக்குல ஓரமா வச்சிடுங்க கண்திருச்ட்டி படாம இருக்கும் ...

அமுதா கிருஷ்ணா said...

அட பாவிகளா?

மங்குனி அமைச்சர் said...

.30,708(எழுத்தில்: முப்பது ஆயிரத்து எழுநூற்று எண்பது ரூபாய்)///

ஹி.ஹி.ஹி......... பிழை உள்ளது
இப்படிக்கு
எப்படியாவது குற்றம் கண்டு பிடித்து பெயர் வாங்குவோர் சங்கம்

இம்சைஅரசன் பாபு.. said...

//30,708(எழுத்தில்: முப்பது ஆயிரத்து எழுநூற்று எண்பது ரூபாய்)///

ஹி.ஹி.ஹி......... பிழை உள்ளது
இப்படிக்கு
எப்படியாவது குற்றம் கண்டு பிடித்து பெயர் வாங்குவோர் சங்கம்//

நேத்து பதிவ போட்டு தான் பார்த்தேன் இந்த பிழை இருந்தது ....அதை மாத்துவதற்கு சோம்பேறி தனம் ....சரி யாரும் சொல்லவும் இல்லைன்னு நினைச்சேன் ......இன்னைக்கு வந்து கரெக்டா கண்டு பிடிசுட்டாறு .....

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//30,708(எழுத்தில்: முப்பது ஆயிரத்து எழுநூற்று எண்பது ரூபாய்)///

ஹி.ஹி.ஹி......... பிழை உள்ளது
இப்படிக்கு
எப்படியாவது குற்றம் கண்டு பிடித்து பெயர் வாங்குவோர் சங்கம்//

நேத்து பதிவ போட்டு தான் பார்த்தேன் இந்த பிழை இருந்தது ....அதை மாத்துவதற்கு சோம்பேறி தனம் ....சரி யாரும் சொல்லவும் இல்லைன்னு நினைச்சேன் ......இன்னைக்கு வந்து கரெக்டா கண்டு பிடிசுட்டாறு .....////


அடப்பாவிகளா , அப்போ எல்லாரும் பதிவ படிக்காம சும்மா கமன்ட் போட்டு எமாத்துரானுகளா ? நான் மட்டும் தான் பதிவ படிச்சிட்டனா ??? அவ்வ்வ்வ்வ்வ்....................

Anonymous said...

அந்த காதலியோட போட்டோவையும் போட்ருக்கலாம்ல..

அது சரி.. அழகான போட்டோனு சொல்லிட்டு ரமேஷ்கிட்ட கேட்ருக்கீங்களே.. இது உங்களுக்கே ஓவரா தெரியலயா?

பெசொவி said...

ai, me the 60!

Anonymous said...

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//30,708(எழுத்தில்: முப்பது ஆயிரத்து எழுநூற்று எண்பது ரூபாய்)///

ஹி.ஹி.ஹி......... பிழை உள்ளது
இப்படிக்கு
எப்படியாவது குற்றம் கண்டு பிடித்து பெயர் வாங்குவோர் சங்கம்//

நேத்து பதிவ போட்டு தான் பார்த்தேன் இந்த பிழை இருந்தது ....அதை மாத்துவதற்கு சோம்பேறி தனம் ....சரி யாரும் சொல்லவும் இல்லைன்னு நினைச்சேன் ......இன்னைக்கு வந்து கரெக்டா கண்டு பிடிசுட்டாறு .....////


அடப்பாவிகளா , அப்போ எல்லாரும் பதிவ படிக்காம சும்மா கமன்ட் போட்டு எமாத்துரானுகளா ? நான் மட்டும் தான் பதிவ படிச்சிட்டனா ??? அவ்வ்வ்வ்வ்வ்....................
//////////////////////

நாங்களாம் கிரேட் எசுகேப்பு.., நீங்கதான் விட்டில் பூச்சிப் போல போய் மாட்டிக்கிட்டீங்க சார்

MANO நாஞ்சில் மனோ said...

// தங்களிடமிருந்து தொகையை எதிர்நோக்கும்
தங்கள் உண்மையுள்ள
முன்னாள் காதலன்//


அவள் அண்ணன்களிடம் நீர் வாங்கிய அடிக்கு என்ன பதில் சொல்றீங்க....?
[[வந்துட்டேன்யா]]