Wednesday, February 2, 2011

மேம்பாலம்                                                                                                                                       


காலைல அவசரம் அவசரமாக  என் மகளை பள்ளிக்கு கூட்டி  செல்லும் அவசரத்தில் பைக்ல அவளை ஏற்றினேன் .முன்னாடி இருந்து கொண்டு

என் மகள் :அப்பா இந்த பாலம் ரொம்ப பெருசு இல்லையாப்பா என்றாள்

நான் :ஆமாம் கோவில்பட்டில   ரெண்டு பாலம் இருக்குன்னு சொன்னேன்

என் மகள் :ஆமாம் ரெண்டு பெரிய பாலம் நிறைய குட்டி பாலம் இருக்கு என்றாள்

நான் :இல்லையே குட்டி பாலமே இங்கே கிடையாது என்று சொன்னேன் .....

என் மனைவி :வண்டில இருந்துகிட்டு பேசாம அப்பாவும் ,மகளும் வாங்க என்று சத்தம் போட்டாள்(எலேய் உன் மண்டைல கொட்டினார்கள்ன்னு சொல்லு ன்னு கமெண்ட்ஸ் போடா கூடாது)
நானும் அமைதியா வண்டிய ஓட்டி  என்னோட ஆபீஸ் வந்துட்டோம் .

என் மகள் :அப்பா பாலம்ன  என்ன..........?(தொடர்ந்து விடாம கேள்வி கணைகள் என் மகள் ஆயிற்றே )

நான் :கீழ ட்ரைன்,ஆறு இப்படி போகும் நாம மேல போவோம் அப்படின்னு சொன்னேன்

என் மகள் :ரோடுல மேலே  ஏறி கீழ இறங்கனும் அப்படி தானே என்றாள் .(என்னை மாதிரி என் புள்ள ரொம்ப அறிவாளி டக்குன்னு பாயிண்டுக்கு  வந்துட்டாள் )

நான் :ஆமாம் என்றேன் .......

என் மகள் :நாம ஸ்கூல்க்கு  போகும் போது  மூணு குட்டி  பாலம் வரும் நான் கான்பிக்குறேன் பாருங்க என்றாள் ....

நான் :இல்லை மக்கா குட்டி பாலம் கிடையாது .என்றேன்

என் மனைவி :அவள் வேற எதையோ சொல்லுறா உங்களுக்கு தான் விளங்க மாட்டுது ன்னு சொன்னால்
நான் அதை பற்றி மறந்துவிட்டேன் அவளை பள்ளிக்கு அழைத்து சென்றேன் ...அவள் போகும் வழியில்

என் மகள் :அப்பா இந்த இருக்கு பாரு மூணு பாலம் என்றாள் .

நான் :அவள் கண்பித்ததை பார்த்து தலை சுற்றியது எனக்கு  இது பாலம் இல்லை மக்கான்னு சொன்னேன்

என் மகள் :பைக் ஏறி தானே இறங்குது ....அது பெரிய பாலம் .....இது குட்டி பாலம் ...நான் சொல்வது தான் சரி என்கிறாள்(என் தலைல லாரி யே ஏறி இறங்கினது மாதிரி ஒரு பீலிங் )

அப்படி அவள் என்னதாண்ட காண்பித்தாள்  என்று எல்லோரும் கேக்குறீங்களா .........?
SPEED BREAKER  மக்கா ....காலைலேயே .........ஆரம்பிச்சுட்டா இனி ஸ்கூல் விட்டு வந்து கேப்பா கரெக்ட் விடை சொல்லணும்

தம்பி எஸ் .கே வுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் 44 comments:

வைகை said...

புள்ள கரெக்டாத்தான் சொல்லியிருக்கு! ஹி ஹி

சௌந்தர் said...

நான் :ஆமாம் கோவில்பட்டில ரெண்டு பாலம் இருக்குன்னு சொன்னேன்////

ஆமா ரெண்டு பாலம் தான் இருக்கு ஒன்னு பாபு.....இன்னுமொன்னு யாரு யாரு

வைகை said...

நண்பர் எஸ்.கே வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சௌந்தர் said...

குழந்தை சரியா தான் சொல்லுது உங்களுக்கு தான் ஒன்னும் புரியலை போப்பா போய் குழந்தை கிட்ட டியூசன் போ...

Arun Prasath said...

அறிவிப்பு செய்யாமல் பதிவு போட்டு, வடை தராமல் இம்சை பண்ணிய இம்சை ஒழிக

வைகை said...

(என்னை மாதிரி என் புள்ள ரொம்ப அறிவாளி டக்குன்னு பாயிண்டுக்கு வந்துட்டாள்/////////////

நீங்க இப்பிடி சொல்றது புள்ளைக்கு தெரியுமா?

சௌந்தர் said...

நட்பு கரம் நீட்டியவன் நீ
தோள் கொடுத்தவன் நீ
நேசத்தை அள்ளி தந்தவன் நீ
பாசத்தை அள்ளி தந்தவன் நீ....
மேலும் நீ சிறப்பாக வளர வாழ்த்துக்கள் நண்பா....! எஸ்.கே...

NaSo said...

//வைகை said...

(என்னை மாதிரி என் புள்ள ரொம்ப அறிவாளி டக்குன்னு பாயிண்டுக்கு வந்துட்டாள்/////////////

நீங்க இப்பிடி சொல்றது புள்ளைக்கு தெரியுமா?//

அதானே!! பாபு எதுக்கும் கொஞ்சம் சூதனமா இருங்க!!

எஸ்.கே said...

பிறந்தநாள் வாழ்த்துக்கு மிக்க நன்றி!

அனைவருக்கும் மிக்க நன்றி!

எஸ்.கே said...

அப்ப ஸ்பீட் பிரேக்கர் அடியில என்ன போகும்?

எஸ்.கே said...

பாட்டெல்லாம் போட்டு ரொம்ப நெகிழ வெச்சிட்டீங்க பாபு அண்ணனுக்கு மிக்க நன்றி!

Srini said...

பாபு.. கலக்கல் பதிவு.. இதுக்கு புள்ள vs கைப்புள்ள அப்ப்டி டைட்டில் வெச்சிருக்கலாம்

மங்குனி அமைச்சர் said...

விதி வலியது பாபு .........

மங்குனி அமைச்சர் said...

குழந்தைங்க எப்பவுமே பொய் சொல்ல மாட்டாங்க பாபு

சி.பி.செந்தில்குமார் said...

ப கு ராம்சாமி வலை பாயுதே விகடன் ல உங்க ட்விட்டர் ட்வீட்ஸ் வந்திருக்கு.

அது

அ தி மு க ஆட்சியை விட குறைவான மீனவர்களையே பலி கொடுத்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா எப்போது?

கலக்கல் வாழ்த்துக்கள்

Unknown said...

அண்ணன் எஸ்.கே வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மாணவன் said...

//அப்படி அவள் என்னதாண்ட காண்பித்தாள் என்று எல்லோரும் கேக்குறீங்களா .........?SPEED BREAKER மக்கா ....காலைலேயே .........ஆரம்பிச்சுட்டா இனி ஸ்கூல் விட்டு வந்து கேப்பா கரெக்ட் விடை சொல்லணும்//

ஹிஹி செம்ம கலக்கல்......

மாணவன் said...

நண்பர் எஸ்.கே வுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

sulthanonline said...

.காலைலேயே .........ஆரம்பிச்சுட்டா இனி ஸ்கூல் விட்டு வந்து கேப்பா கரெக்ட் விடை சொல்லணும்

புள்ள கிட்ட பதில் சொன்னீங்களா இல்லயா!?

karthikkumar said...

பாபு அண்ணா இதே மாதிரி உங்க பொண்ணுகிட்ட பேசிகிட்டு இருந்தா உங்களுக்கு எந்த நோய் நொடியும் வராது... cho sweet :) உங்க பொண்ணு பேரு என்ன அண்ணா.....

சி.பி.செந்தில்குமார் said...

எஸ் கே வுக்கு பிறந்த நாளா? வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

சரியாத்தான் சொல்லிஇருக்கறீங்க...

sathishsangkavi.blogspot.com said...

சரியாத்தான் சொல்லிஇருக்கறீங்க...

MANO நாஞ்சில் மனோ said...

புள்ள சரியாதானைய்யா சொல்லுது..............
நீர்தான் :ங்கே"...................

MANO நாஞ்சில் மனோ said...

//நட்பு கரம் நீட்டியவன் நீ
தோள் கொடுத்தவன் நீ
நேசத்தை அள்ளி தந்தவன் நீ
பாசத்தை அள்ளி தந்தவன் நீ....
மேலும் நீ சிறப்பாக வளர வாழ்த்துக்கள் நண்பா....! எஸ்.கே//


நான் இதை வழி மொழிகிறேன்.....

MANO நாஞ்சில் மனோ said...

//அப்ப ஸ்பீட் பிரேக்கர் அடியில என்ன போகும்?//


மணியாச்சி ரயில் போகும்....

கணேஷ் said...

நீங்கள் சொன்ன விளக்கத்துக்கும் கேட்ட கேள்விக்கும் எந்த ஒரு தப்பும் இல்லையே..நல்லபடியாக யோசித்து தெளிவாக விளக்குங்கள்..))))))

MANO நாஞ்சில் மனோ said...

எலே எஸ் கே மக்கா பிறந்தநாள் வாழ்த்துக்கள் மக்கா.....
நீடூழி வாழ்வாங்கு வாழ என் வாழ்த்துக்கள்......

MANO நாஞ்சில் மனோ said...

//விதி வலியது பாபு ..//


ஒரு இம்சையே இன்னொரு இம்சையை சோதிக்குது பாரு....

Anonymous said...

குழந்தை பொய் சொல்லாதய்யா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் தலைல லாரி யே ஏறி இறங்கினது மாதிரி ஒரு பீலிங்//

உன் தலைல களிமன்னுதான இருக்கும். லாரி ஏறினா வழுக்காது?

செல்வா said...

//என் மகள் :ரோடுல மேலே ஏறி கீழ இறங்கனும் அப்படி தானே என்றாள் .(என்னை மாதிரி என் புள்ள ரொம்ப அறிவாளி டக்குன்னு பாயிண்டுக்கு வந்துட்டாள் )//

இதை வன்மையாக கண்டிக்கிறேன் .. உங்களை மாதிரி கிடையாது , அண்ணி மாதிரி !!

செல்வா said...

//அப்படி அவள் என்னதாண்ட காண்பித்தாள் என்று எல்லோரும் கேக்குறீங்களா .........?
SPEED BREAKER மக்கா ....காலைலேயே .........ஆரம்பிச்சுட்டா இனி ஸ்கூல் விட்டு வந்து கேப்பா கரெக்ட் விடை சொல்லணும்//

ஹி ஹி ஹி .. வச்சோம்ல ஆப்பு !!

Madhavan Srinivasagopalan said...

நாமலாம் ஒரே இனம் சார் (டா).. மொக்கை போடுறதுல..

Anonymous said...

இதுல யாரு புத்திசாலி????
பெரிய பாலம் சொன்னவரா? இல்ல குட்டி பாலம் காட்டினவரா??

Anonymous said...

ஹ ஹ ஹ ஹ
அண்ணா உங்கள விட பாப்பா ரொம்ப ரொம்ப அறிவாளி
அதுனால சொல்ல வர்றது என்னன்னா
பாப்பா சொல்லறத கேளுங்க
ஹ ஹ ஹ
பிறந்த நாள் வாழ்த்துகள் அருமை அண்ணா

Chitra said...

Speed Breaker!!! Super!

ha,ha,ha,ha,ha....


Our birthday wishes to S K!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹி..ஹி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேம்பாலம்ன உடனே ஏதோ மெசேஜ்தான் சொல்ல போறேன்னு பயந்துட்டேன்

ஆனந்தி.. said...

//அப்படி அவள் என்னதாண்ட காண்பித்தாள் என்று எல்லோரும் கேக்குறீங்களா .........?
SPEED BREAKER மக்கா ....காலைலேயே .........ஆரம்பிச்சுட்டா இனி ஸ்கூல் விட்டு வந்து கேப்பா கரெக்ட் விடை சொல்லணும்//

Harini..so..so..so cute..:))

அருண் பிரசாத் said...

பல்பு வாங்கறதையே பொழப்பா வெச்சி இருக்கீங்க....

அருண் பிரசாத் said...

படத்தை கடைசியா போட்டு இருக்கலாம்.....

தினேஷ்குமார் said...

சாரி தல கொஞ்சம் லேட்........

நண்பர் எஸ்.கே. அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பெசொவி said...

அப்போ உங்க ஸ்பீட் பிரேக்கர் உங்க மகதான்னு சொல்லுங்க!