Friday, December 3, 2010

சமகால கல்வி

சமகால கல்வி முறை பற்றி ஏற்கனவே எஸ்.கே அவர்கள் எழுதி விட்டார்கள்.இருந்தாலும் இதை யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று கூறியதால் என் மனதில் பட்டதை இங்கு கூறுகிறேன் .

                          
                                  
நம் மாநிலத்தில் கல்வி மேலோங்கி இருக்கிறது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தேர்ச்சி விகிதம் அதிகமாக தான் உள்ளது .இதை மறுப்பதற்கில்லை .ஆனால் கல்வி நிறுவனங்கள் கல்வியை மட்டும் தான் போதிக்கிறது. ஒழுக்கம் பண்பாடு ,கலாச்சாரம் என்பது எல்லாம் அடியோடு கிடையாது.

தமிழ் நாட்டை பொறுத்தவரை கல்வி என்பது சிறந்த வியாபாரமாகி விட்டது. அரசே பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயம் செய்தும் அதை செயல் படுத்த முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலைக்கு காரணம் வேறொன்றுமில்லை, அரசியல்வாதிகளே பெரும்பாலான கல்வி நிறுவனங்களை நடத்துவதால்  தான். அவர்களே கட்டணத்தை நிர்ணயித்து கொள்கிறார்கள் அதில் கோடி கோடியாய் கொள்ளையும் அடிக்கிறார்கள் .நூற்றில் 80% MLAக்கு அல்லது MP க்கு எதாவது ஒரு கல்லூரி அல்லது ,பள்ளி கண்டிப்பாக இருக்கும் .

பள்ளிக்கூடங்களை பார்த்தோமென்றால் அதிலும் MATRICULATION ,CBSE ,ANGLO INDIAN  என பல  வகை. இவை அனைத்தும் பணம் மற்றும்  அந்தஸ்த்தின் அடிப்படையில் தான் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் சமச்சீர் கல்வி என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. பிள்ளைகள் இப்பொழுது கூடுதல் பாட சுமை தான் பெறுகிறார்கள் .முதுகுகளில் அதிகமாக சுமக்கிறார்கள். வசதி படைத்தவர் ,வசதி இல்லாதவர் என்று அனைவருமே ஆங்கில வழி கல்விக்கு வந்து விட்டதனால் தான் அரசு சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது. இல்லையென்றால் இன்னும் சில காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களே இருக்க மாட்டார்கள் இது மறுக்க முடியாத உண்மை!!!!!!!

பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளிகளை வெறுத்தொதுக்க காரணம் நமது அரசாங்கமும், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் தான். அவர்கள் சரியான நபரை ஆசிரியராக பணி நியமனம் செய்யவில்லை. ஆசிரியர்களாவது ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை ,பெரு நகரங்கள் எப்படி என்று எனக்கு எனக்கு தெரியவில்லை. ஆனால் கிராமங்களிலும் ,சிறு நகரங்களிலும் அரசு ஆசிரியர்கள் பெரும்பாலானோர் தன் சம்பளத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள். இது நான் கண் கூடாக பார்த்த உண்மை .ஒழுங்காக பாடம் எடுப்பதும் இல்லை .சமீபத்தில் கூட ஒரு செய்தி ஒரு அரசு ஆசிரியர் அவராகவே ஒரு பெண் ஆசிரியயை பணியமர்த்தி அவளுக்கு மாதம் 2000 ரூபாய் சம்பளம் கொடுத்து பாடம் எடுத்து இருக்கிறார். இது மட்டுமல்லாமல் பள்ளியில் கல்வி பயில வரும் மாணவ மாணவிகளை வீட்டிற்கு வேலைக்கு அழைத்து செல்வது, முறைகேடாக நடந்து கொள்வது பல கேவலமான செயல்கள் நடந்து வருகின்றன.

மேலும் பள்ளியில் ஒழுங்காக பாடத்தை நடத்தாமல், அதே பாடத்தை மாலை 5 மணிக்கு மேல் தங்கள் வீட்டில் டியூஷன் என்று சொல்லி கொடுத்து அதற்கு வேறு தனியாக வசூலித்து விடுகிறார்கள். .அப்படி பிள்ளைகள் போக வில்லை என்றால் அவர்கள் பாடத்தில் பெயில் ஆக்கி விடுவார்கள்.இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. 8வது வகுப்பு வரை பெயில் ஆக்க கூடாது என்று சட்டம் வந்து விட்டது . 12வகுப்பு மாணவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும் .காலையில் 6 மணிக்கு டியூஷன் போக ஆரம்பிக்கிறான் அப்படியே பள்ளி செல்கிறான் பின்பு பள்ளி விட்டு வந்து அடுத்த டியூஷன் என அவனது பொழுது ஓய்வில்லாமல் கழிகிறது. இதற்க்கு பேசாம கேரளாவுக்கு அடிமடாக போய் இருக்கலாம் .இவ்வளவுக்கும் அரசு ஆசிரியர் யாரும் தனியாக டியூஷன் எடுக்க கூடாதுன்னு ஒரு சட்டம் வேறு இருக்கு .

காமராஜர் அந்த காலத்தில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரிய கூடாது என்பதற்காக பள்ளிகளில் ஒரே மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும் என்று கூறினார் .இப்பொழுது அதுவே வினையாக போய் விட்டது. திங்கள் கிழமை ஒரு கலர் துணி ,செவ்வாய் கிழமை ஒரு கலர் துணி .இப்படி தினம் ஒரு ஆடை போட வேண்டும் அதுவும் பள்ளிகளில் தான் வாங்க வேண்டும் என்று சட்டம் வேறு. அரசு பள்ளிகளில் இன்னும் இந்த முறை வராதது மகிழ்ச்சி.

18 வயது நிரம்பியவர்களுக்கு தான் இரு சக்கர ஓட்டுனர் உரிமம் கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியர் இரு சக்கர வாகனங்களில் தான் பள்ளிகளுக்கு வருகின்றனர். இதனை பள்ளி நிர்வாகமோ, ஆசிரியர்களோ கண்டு கொள்வதில்லை. பெரும்பாலான மாணவர்கள் சாலை விதிமுறைகளை மதிப்பதில்லை. பிறகு இவர்கள் வளர்ந்த பின் எப்படி நம் அரசு இயற்றும் சட்டத்தை மதிப்பார்கள் .மிதிக்கத்தான் செய்வார்கள் .இதில் வேறு  அனைத்து  +1மாணவர்களுக்கும் அரசு இலவச மிதிவண்டி வேற கொடுக்கிறது. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை ஆசிரியர்கள் கற்று கொடுக்க வேண்டும்.

 +2படித்த மாணவனிடம் வங்கியில் விண்ணப்பபாரம் பூர்த்தி செய்ய சொன்னால் முழிக்கிறான். கல்வி என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு ஒரு மனப்பாட விசயமாகவே இருக்கிறது. ஆசிரியர் சொல்வதை அப்படியே தேர்வில் ஒப்பித்து விடுகிறான். அதே விசயங்கள் வாழ்க்கையின் தேவைகளில் வரும் பொது அவனால் சரிவர செயல் பட முடிவதில்லை.

பெரும்பாலான மாணவர்கள் பாடங்களை தேர்வு செய்து படிப்பதில்லை. எதோ படிக்க வேண்டுமென்று படிக்கிறார்கள். பின்னர் தகுந்த வேலை கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். இதற்க்கான தீர்வுகள் நாம் பள்ளிக்காலத்திலேயே எடுக்க வேண்டியது கட்டாயம்.. சரியான திட்டமிடுதலே இதற்கு சிறந்த வழி..வாழ்க்கைக்கு உகந்த பாட திட்டங்கள் வர வேண்டும் குழந்தைகள் ஆனாலும் சரி இளைஞர்கள் ஆனாலும் சரி நல்ல விளையாடி படிக்க வேண்டும் என்பது என் ஆசை .எப்பொழுதுமே பாட புத்தகங்களை கட்டி அழுவதற்கு பதில் வேறு துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் .கல்லூரி படிக்கும் பொழுதே "கை தொழில் ஒன்றை கற்று கொள் கவலை உனக்கில்லை ஒத்து கொள் "என்பதற்கு ஏற்ப ஏதாவது ஒரு தொழில் சார்ந்த படிப்பை கட்டாயமாக்க வேண்டும் .

குறிப்பு :இதில் எல்லா ஆசிரியர்களையும் குறை கூற வில்லை .நல்ல ஆசிரியர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.


இந்த சமகால கல்வி முறை பற்றி மேலும் நம் பதிவர்கள் எழுத வேண்டும் .யார் வேண்டும் என்றாலும் தொடரலாம் .

81 comments:

சௌந்தர் said...

சமகால கல்வி முறையா இதோ படித்து விட்டு வரேன்

செல்வா said...

வட போச்சே ., சரி படிச்சிட்டு வரேன் அண்ணா ., நானும் இது பற்றித்தான் எழுதிட்டு இருக்கேன் ..!!

சௌந்தர் said...

என்ன மக்க எழுத்து எல்லாம் மாறி கொண்டே வருது என்ன இப்போ எல்லாம் ரொம்ப நல்ல பதிவ வருது

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
வட போச்சே ., சரி படிச்சிட்டு வரேன் அண்ணா ., நானும் இது பற்றித்தான் எழுதிட்டு இருக்கேன் ..!!////

அதுலே எப்படி ரெண்டு எழுத்தாவது இருக்குமா

இம்சைஅரசன் பாபு.. said...

//என்ன மக்க எழுத்து எல்லாம் மாறி கொண்டே வருது என்ன இப்போ எல்லாம் ரொம்ப நல்ல பதிவ வருது//

அப்படி எல்லாம் இல்லை ..சும்மா ஒரு மாற்றம் வேண்டும் இல்லையா .அதுக்கு தான்.......

சௌந்தர் said...

நீங்க சொல்றது சரி தான் கல்லூரி முடித்து வெளிய வந்தா அவனுக்கு எல்லாம் புதியது எந்த தொழிலுக்கு வேலைக்கு போக வேண்டும் என்றாலும் அவர்கள் கேட்பது முன் அனுபவம் அதுவும் நாம் படிதற்க்கும் அந்த வேலைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது கல்வி என்பது வெறும் அறிவை வளர்ப்பதற்கு ஒரு வழி அவ்வளவு தான்

மங்குனி அமைச்சர் said...

உண்மைதான் , அரசு பள்ளிகளில் சில தவறுகள் நடக்கின்றது

Chitra said...

குழந்தைகள் ஆனாலும் சரி இளைஞர்கள் ஆனாலும் சரி நல்ல விளையாடி படிக்க வேண்டும் என்பது என் ஆசை .எப்பொழுதுமே பாட புத்தகங்களை கட்டி அழுவதற்கு பதில் வேறு துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் .கல்லூரி படிக்கும் பொழுதே "கை தொழில் ஒன்றை கற்று கொள் கவலை உனக்கில்லை ஒத்து கொள் "என்பதற்கு ஏற்ப ஏதாவது ஒரு தொழில் சார்ந்த படிப்பை கட்டாயமாக்க வேண்டும் .


.......உண்மை. சரியான அணுகுமுறையில் உள்ள கருத்துதான்.

செல்வா said...

//இப்பொழுது அதுவே வினையாக போய் விட்டது. திங்கள் கிழமை ஒரு கலர் துணி ,செவ்வாய் கிழமை ஒரு கலர் துணி .இப்படி தினம் ஒரு ஆடை போட வேண்டும் அதுவும் பள்ளிகளில் தான் வாங்க வேண்டும் என்று சட்டம் வேறு.//

கலர் கலரா துனியா ..? தனியார் பள்ளிகளில் இந்த முறை இருக்கு ., அதுவும் திங்கள் மட்டும் வெள்ளை போடுவாங்க .. எங்க ஊர்ப் பக்கம் ..௧! மற்ற நாட்களில் வழக்கம் போல சீருடை தான் ..!!

சௌந்தர் said...

அப்படி எல்லாம் இல்லை ..சும்மா ஒரு மாற்றம் வேண்டும் இல்லையா .அதுக்கு தான்.......///

அது என்ன கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும் போட்டிங்களா

சௌந்தர் said...

அது எல்லாம் சரி பள்ளிக்கே போகாமல் இம்சை அரசனுக்கு அறிவு வந்ததை போல அனைவருக்கும் படிக்க வில்லை என்றாலும் அறிவு வளரும் அதற்க்கு இம்சை அரசன் ஒரு உதாரணம்

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் said...
உண்மைதான் , அரசு பள்ளிகளில் சில தவறுகள் நடக்கின்றது////

அமைசரே உண்மையை ஒப்புகொண்டு விட்டார் அவர் உடனடியாக பதவியை ராஜனாமா செய்யவேண்டும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆனால் கிராமங்களிலும் ,சிறு நகரங்களிலும் அரசு ஆசிரியர்கள் பெரும்பாலானோர் தன் சம்பளத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள்.///

எனக்கு தெரிந்து நகரத்தை விட கிராமங்களில் கல்வி முறை நன்று. ஆசிரியர்கள் அரசுக்கு பயப்படாட்டாலும் ஊர்க்காரங்களுக்கு கண்டிப்பாக பயந்து சரியாக பாடம் எடுக்கிறார் என்பதே உண்மை.

இம்சைஅரசன் பாபு.. said...

//அது எல்லாம் சரி பள்ளிக்கே போகாமல் இம்சை அரசனுக்கு அறிவு வந்ததை போல அனைவருக்கும் படிக்க வில்லை என்றாலும் அறிவு வளரும் அதற்க்கு இம்சை அரசன் ஒரு உதாரணம்//
அட பாவி பப்ளிக் ல போட்டு உடச்சிடேயே பரட்டை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது போல பேங்க் போஸ்ட் ஆபீஸ் படிவம் நிரப்புவதற்கு கல்லூரி மாணவனே முழிக்கிறான். இதெல்லாம் பள்ளியில் சொல்லி கொடுக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சௌந்தர் said...

அது எல்லாம் சரி பள்ளிக்கே போகாமல் இம்சை அரசனுக்கு அறிவு வந்ததை போல அனைவருக்கும் படிக்க வில்லை என்றாலும் அறிவு வளரும் அதற்க்கு இம்சை அரசன் ஒரு உதாரணம்//


இதெல்லாம் கேள்வி ஞானம்தான். காலைல எந்திச்சதும் பாபு ஓசி டீக்கு டீக்கடை வாசல்ல போய் நின்னுக்கிட்டு தலைய சொரிய வேண்டியது. அங்க எவனாவது இத பத்தி பேசிருப்பான். உடனே பதிவா போட்டுதான்

இம்சைஅரசன் பாபு.. said...

ஊர்க்காரங்களுக்கு கண்டிப்பாக பயந்து சரியாக பாடம் எடுக்கிறார் என்பதே உண்மை.//

ஊர்க்காரங்களுக்கு தான் பயந்து படம் எடுகிறார்கள் .தான் மனசாட்சிக்கு பயந்து .வாங்கும் சம்பளத்துக்கு பயந்து எவனும் இல்ல அப்படி தானே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் said...
உண்மைதான் , அரசு பள்ளிகளில் சில தவறுகள் நடக்கின்றது////

அமைசரே உண்மையை ஒப்புகொண்டு விட்டார் அவர் உடனடியாக பதவியை ராஜனாமா செய்யவேண்டும்///

அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பவர்கள் இந்த பதிவில் மைனஸ் ஓட்டு போடவும். வேணாம் என்பவர்கள் பிளஸ் ஓட்டு போடவும். ங் கொய்யால பாபு சாவுடி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 16


இதெல்லாம் கேள்வி ஞானம்தான். காலைல எந்திச்சதும் பாபு ஓசி டீக்கு டீக்கடை வாசல்ல போய் நின்னுக்கிட்டு தலைய சொரிய வேண்டியது. அங்க எவனாவது இத பத்தி பேசிருப்பான். உடனே பதிவா போட்டுதான்


//

எத்தனை தடவை சொல்றது.. உண்மையெல்லாம் வெளிய செல்ல கூடாதுன்னு... கேக்குறாங்களா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அமைசரே உண்மையை ஒப்புகொண்டு விட்டார் அவர் உடனடியாக பதவியை ராஜனாமா செய்யவேண்டும்///

அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பவர்கள் இந்த பதிவில் மைனஸ் ஓட்டு போடவும். வேணாம் என்பவர்கள் பிளஸ் ஓட்டு போடவும். ங் கொய்யால பாபு சாவுடி...

//

அமைச்சர் பதவி விலக வேண்டுமென்பதை நானும் வழி மொழிகிறேன்...

செல்வா said...

//8 வயது நிரம்பியவர்களுக்கு தான் இரு சக்கர ஓட்டுனர் உரிமம் கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியர் இரு சக்கர வாகனங்களில் தான் பள்ளிகளுக்கு வருகின்றனர். இதனை பள்ளி நிர்வாகமோ, ஆசிரியர்களோ கண்டு கொள்வதில்லை./


இது உண்மையான கேள்வி ..!

சௌந்தர் said...

அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பவர்கள் இந்த பதிவில் மைனஸ் ஓட்டு போடவும். வேணாம் என்பவர்கள் பிளஸ் ஓட்டு போடவும். ங் கொய்யால பாபு சாவுடி..////

இதை முதலே சொல்ல வேண்டி தானே நான் பிளஸ் ஓட்டு போட்டுட்டேன்

செல்வா said...

/+2படித்த மாணவனிடம் வங்கியில் விண்ணப்பபாரம் பூர்த்தி செய்ய சொன்னால் முழிக்கிறான். /

அப்படின்னா தூங்க சொல்லுறீங்களா ..?

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சௌந்தர் said...

அது எல்லாம் சரி பள்ளிக்கே போகாமல் இம்சை அரசனுக்கு அறிவு வந்ததை போல அனைவருக்கும் படிக்க வில்லை என்றாலும் அறிவு வளரும் அதற்க்கு இம்சை அரசன் ஒரு உதாரணம்//


இதெல்லாம் கேள்வி ஞானம்தான். காலைல எந்திச்சதும் பாபு ஓசி டீக்கு டீக்கடை வாசல்ல போய் நின்னுக்கிட்டு தலைய சொரிய வேண்டியது. அங்க எவனாவது இத பத்தி பேசிருப்பான். உடனே பதிவா போட்டுதான்/////

அதானே பாபுவுக்கா இவ்வளவு அறிவு பார்த்தேன் இப்போ தான் புரியது

செல்வா said...

//இந்த சமகால கல்வி முறை பற்றி மேலும் நம் பதிவர்கள் எழுத வேண்டும் .யார் வேண்டும் என்றாலும் தொடரலாம் .
//

நான் எழுதிட்டு இருக்கிறேறேன் .!!

இம்சைஅரசன் பாபு.. said...

/////அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பவர்கள் இந்த பதிவில் மைனஸ் ஓட்டு போடவும். வேணாம் என்பவர்கள் பிளஸ் ஓட்டு போடவும். ங் கொய்யால பாபு சாவுடி../

நைட் முழுவதும் கண்ணு முளிச்ச இப்படி தான் எதாவது போடுவான் ....பொதுமக்கள் யாரும் கண்டு கொள்ள வேண்டாம் என்று இரு கரம் கூடி கேட்டு கொள்கிறேன்

சௌந்தர் said...

வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 16


இதெல்லாம் கேள்வி ஞானம்தான். காலைல எந்திச்சதும் பாபு ஓசி டீக்கு டீக்கடை வாசல்ல போய் நின்னுக்கிட்டு தலைய சொரிய வேண்டியது. அங்க எவனாவது இத பத்தி பேசிருப்பான். உடனே பதிவா போட்டுதான்


//

எத்தனை தடவை சொல்றது.. உண்மையெல்லாம் வெளிய செல்ல கூடாதுன்னு... கேக்குறாங்களா..////

வெறும் பையன் உண்மையை பற்றி யார் சொன்னது

சௌந்தர் said...

மங்குனி அமைசர் பதவி விலக வேண்டும் என்பவர் மைனஸ் ஓட்டு போடுவும் பதவி விலக வேண்டாம் என்று சொல்பவர் பிளஸ் ஓட்டு போடவும்

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
அப்படின்னா தூங்க சொல்லுறீங்களா ..?////

இல்லை தினம் ஒரு மொக்கை சொல்ல சொல்றோம்

சௌந்தர் said...

பாபுவுக்கு ஒரு பெரிய சந்தேகம் இவ்வளவு பேரு கமெண்ட் போட்டுறாங்க ஆனா இவங்க பதிவை படித்தாங்களா என்று கேட்கிறார் மக்களே பதில் சொல்லுங்க

எஸ்.கே said...

நானும் அரசுப் பள்ளியில் படித்தவன்தான்! பெரும்பாலான அரசு பள்ளிகளில், சுகாதாரம், ஆசிரியர்கள் போன்றவை மோசமாகத்தான் உள்ளன். பல பேர் இப்படி அரசுப் பள்ளிகளின் குறைகளை மனதில் வைத்தே தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். ஆனால் அங்கேயோ பணம் ஒன்றே பெரும்பாலான குறிக்கோளாக உள்ளது.

ஆசிரியர்களை பொறுத்தவரை தாங்கள் சொன்னது போல் நல்ல ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆசிரியர் அமைவதெல்லாம் மாணவர் செய்த வரம்!

கருடன் said...

@ஆல்

இது ஒரு சீரியஸ் பதிவு என்பதால் ஓட்டு மட்டும் போட்டு. ஒரமாய் நின்று கமெண்ட் படிக்கிறேன். ப்ளாக் ஓனர் கும்மி அடிக்கலாம் என்று சொன்னால யாரும் நம்பி கும்மி அடிக்க வேண்டாம். தேவா அவர்கள் புயல் போல் வந்து எண்டா நல்ல போஸ்ட்ல கும்மி அடிக்கிறிங்க என்று கோவப்படுவார்.... :)

தினேஷ்குமார் said...

நல்ல பதிவு நண்பரே நல்ல பகிர்வும் கூட

செல்வா said...

//நின்று கமெண்ட் படிக்கிறேன். ப்ளாக் ஓனர் கும்மி அடிக்கலாம் என்று சொன்னால யாரும் நம்பி கும்மி அடிக்க வேண்டாம். தேவா அவர்கள் புயல் போல் வந்து எண்டா நல்ல போஸ்ட்ல கும்மி அடிக்கிறிங்க என்று கோவப்படுவார்.... :)
/

ஐயோ ., அப்படின்னா நானும் கிளம்புறேன் ..!!

கருடன் said...

@ஆல்

அரசு பள்ளி சரி இல்லை சொல்றவங்க எல்லாம் அரசாங்கம் சரி இல்லை சொல்லுங்க. அரசு பள்ளில உயிர கொடுத்து பாடம் நடத்தர ஆசிரியர் எல்லாம் இருக்காங்க. ஒரு லேப் ல புதுசா ஒரு சாதனம் வாங்கனும் சொன்னா அதுக்கு அப்ருவல் மண்ணு மண்ணாங்கட்டி சொல்லி நாலு மாசம் ஆக்குவான். அதுக்கா சொந்த காச போட்டு அதை வாங்கி பாடம் எடுக்கர ஆசிரியர் எல்லாம் இருக்காங்க. தனியார் பள்ளி மாதிரி வசதிகள் உடனடியா கிடைச்சா நம்ம அரசு பள்ளிகள் அருமையா மேல வரும்.

தினேஷ்குமார் said...

தற்சமயம் நிறையா பள்ளிகளில் கட்டாய டியுஷன் வகுப்பு எடுக்கப்படுகிறது அரசு பள்ளிகள் அல்லா பள்ளிகளில் நான் படிக்கும் போது டியூஷனே படிச்சதில்ல இப்ப என்ன வென்றால் எல்கேஜி முதலே டியுஷன் ஆரம்பமாகிவிடுகிறது

நம்ம கட பக்கமும் வந்துட்டு போங்க நண்பரே உங்களையும் தான்

மாணவன் said...

//"கை தொழில் ஒன்றை கற்று கொள் கவலை உனக்கில்லை ஒத்து கொள் "என்பதற்கு ஏற்ப ஏதாவது ஒரு தொழில் சார்ந்த படிப்பை கட்டாயமாக்க வேண்டும் .//

நிச்சயமாக இதுதான் சிறந்த வழி

சிறப்பாக எழுதியுள்ளீர்கள் நண்பரே

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது போல பேங்க் போஸ்ட் ஆபீஸ் படிவம் நிரப்புவதற்கு கல்லூரி மாணவனே முழிக்கிறான். இதெல்லாம் பள்ளியில் சொல்லி கொடுக்கலாம்//

ரமேஷ் அண்ணே இது உங்க சொந்த அனுபவமா...

ஹா ஹா ஹா........

எஸ்.கே said...

டெரர் அவர்கள் சொல்வது உண்மைதான்! அரசு பள்ளிகள் சரியில்லாததற்கு காரணம் முழுக்க அரசுதான்! ஏனெனில் நல்ல ஆசிரியர்கள் அங்கும் உண்டு! வசதிகள் கிடைத்தால் அரசு பள்ளிகளும் மிகச் சிறப்பானவைகளாக மாறும்! அரசின் கையில்தான் எல்லாமே உள்ளது!

எஸ்.கே said...

தொழிற்கல்வியின் அவசியத்தை மாணவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்!

கருடன் said...

என்ன கேட்டா தனியார் பள்ளிவிட அரசு பள்ளில நல்ல ஆசிரியர் இருக்காங்க சொல்லுவேன். தனியார் பள்ளி மாதிரி அவங்க பெத்தவங்களுக்கு பரீட்சை வைக்கிறது இல்லை. அவங்களால முடிஞ்சவரை பிள்ளைகளை படிக்க வைக்கராங்க. தனியார் பள்ளில படிக்கிர புள்ளை வீட்டுல அப்பா அம்மா பட்டம் வாங்கினவங்களா இருப்பாங்க. அதனால வீட்டுல சொல்லி கொடுப்பாங்க அதே சமையம் பள்ளில கோச்சிங்க இருக்கும் (நேரம் காலம் இல்லாம). சம்மதிக்க மாட்டேன் சொன்னா புள்ளை கூட்டிட்டு வெளிய போ சொல்லிடுவாங்க. நாமலும் பணம் போய்டும், புள்ளை நல்லா படிக்கனும் சொல்லி கண்டுக்கரது இல்லை. ஆன அரசாங்க பள்ளில லேச அடிச்சிடா ரோட்ல உக்காந்து ஸ்ட்ரைக் பண்றது. அப்புறம் எப்படி அவங்க ஆர்வமா பாடம் நடத்துவாங்க?

எஸ்.கே said...

டெரர் சார் நல்ல கருத்துக்கள் சொல்றீங்க நீங்களும் இதைப்பற்றி ஒரு பதிவு எழுதினா நல்லா இருக்கும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/சௌந்தர் said...

அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பவர்கள் இந்த பதிவில் மைனஸ் ஓட்டு போடவும். வேணாம் என்பவர்கள் பிளஸ் ஓட்டு போடவும். ங் கொய்யால பாபு சாவுடி..////

இதை முதலே சொல்ல வேண்டி தானே நான் பிளஸ் ஓட்டு போட்டுட்டேன்///


பாபுவை இந்த பதிவை டெலீட் பண்ணிட்டு திரும்ப போடா சொல்லலாம்

கருடன் said...

//பள்ளிக்கூடங்களை பார்த்தோமென்றால் அதிலும் MATRICULATION ,CBSE ,ANGLO INDIAN என பல வகை. இவை அனைத்தும் பணம் மற்றும் அந்தஸ்த்தின் அடிப்படையில் தான் நடத்தப்படுகின்றன.//

இவங்க எல்லாம் சேர்ந்து தமிழ கொஞ்சம் கொஞ்சமா அழிக்கிறாங்க. இங்க இருக்க புள்ளைங்க எல்லாம் பிரஞ்சி, ஹிந்தி இப்படி தான் படிக்குது. தமிழ் தெரியுமா கேட்டா பெருமையா தெரியாது சொல்லுதுங்க. இப்படியே போனா once upon a time there was a language called Tamil அப்படினு தான் படிக்கனும். :(

எஸ்.கே said...

தாய்மொழி கூட தெரியாமல் இருப்பது எவ்வளவு கொடுமைங்க! நான் கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் ஸ்கூல் பசங்கலுக்கு டியூசன் எடுத்திகிட்டு இருந்தேன். நிறைய பசங்களுக்கு சரியா தமிழே படிக்க தெரியலை. தப்பு தப்பா படிக்கிறாங்க! அதில் சில பேர் தமிழ் மீடியம் பசங்க! இத்தனைக்கும் அவங்கல்லாம் 10வது படிக்கிற பசங்க!

ஹரிஸ் Harish said...

மிக நல்ல பதிவு..

கருடன் said...

@எஸ்.கே

//டெரர் சார் நல்ல கருத்துக்கள் சொல்றீங்க நீங்களும் இதைப்பற்றி ஒரு பதிவு எழுதினா நல்லா இருக்கும்!//

ஏன்? இங்க கருத்த சொன்னா கேக்க மாட்டிங்களா? மவனே தூக்கி போட்டு மிதிச்சிடுவேன்... பதிவு எல்லாம் ரொம்ப போர் அடிச்சாதன் எழுதுவேன்.... :))

சி.பி.செந்தில்குமார் said...

பாபு பதிவு சூப்பர்.உங்களிடமிருந்து இப்படிப்பட்ட சமூக அக்கறை கொண்ட பதிவை நான் எதிர்பார்க்கலை,பின்னீட்டீங்க

எஸ்.கே said...

//ஆசிரியர் சொல்வதை அப்படியே தேர்வில் ஒப்பித்து விடுகிறான். அதே விசயங்கள் வாழ்க்கையின் தேவைகளில் வரும் பொது அவனால் சரிவர செயல் பட முடிவதில்லை//
இதுதான் இங்க நடக்குது! நானும் பள்ளியின் ஆரம்ப நாட்களில் இப்படித்தான் செய்தேன். ஆனால் ஒரு காலகட்டத்தில் மாற்றிக் கொண்டேன். ஒப்பிப்பவருக்கு அதில் என்ன விஷயம் உள்ளது என புரிவதே இல்லை!

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு போட்டா சொல்லவும்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது போல பேங்க் போஸ்ட் ஆபீஸ் படிவம் நிரப்புவதற்கு கல்லூரி மாணவனே முழிக்கிறான். இதெல்லாம் பள்ளியில் சொல்லி கொடுக்கலாம்

கரெக்ட்

எஸ்.கே said...

@ TERROR-PANDIYAN(VAS)
//ஏன்? இங்க கருத்த சொன்னா கேக்க மாட்டிங்களா? மவனே தூக்கி போட்டு மிதிச்சிடுவேன்... பதிவு எல்லாம் ரொம்ப போர் அடிச்சாதன் எழுதுவேன்.... :))//

கருத்தை எங்க சொன்னாலும் கேப்போங்க! ஆனால் உங்க கருத்தை தொகுத்தாலே ஒரு பதிவு வரும்! பல தரப்பட்ட கருத்துக்கள் உள்ளன!

(நான் சொன்னேன்ல உங்களுக்குள்ள ஒரு சீரியஸ் ஆள் இருக்கிறார்னு!!!:-))

சௌந்தர் said...

பள்ளி பக்கமே போகத டெரர்க்கே இவ்வளவு அறிவு வெளி நாட்டில் வேலை எல்லாம் பார்கிறார்....அவரின் அனுபவத்தை புத்தகமா போட்டா பலருக்கு உபோயாக இருக்கும்

எஸ்.கே said...

ஒரு கால கட்டத்தில் பள்ளிக்கு செல்வதே மதிய உணவுக்காகத்தான் என்ற நிலையும் இருந்துள்ளது! ஆனால் இப்போது வசதிகள் பெருகிய காலத்திலும் மாணவர்களின் கல்வி முழுமையடையாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்!

சௌந்தர் said...

சி.பி.செந்தில்குமார் said...
பதிவு போட்டா சொல்லவும்////

எல்லாம் அனுபியாச்சி நீங்க கும்மி குருப் இல்லையா

எஸ்.கே said...

பள்ளி என்பது கல்வியை மட்டுமில்லாமல், நட்பு, ஒழுக்கம், அன்பு, பண்பு போன்ற பல விஷயங்களை கற்றுக் கொள்ளும் இடம்! அங்கே எல்லா விஷயங்களும் மாணவருக்கு முழுமையாக கிடைத்தால் சிறந்த மாணவராவார்கள்!

கருடன் said...

@இம்சை

//காலையில் 6 மணிக்கு டியூஷன் போக ஆரம்பிக்கிறான் அப்படியே பள்ளி செல்கிறான் பின்பு பள்ளி விட்டு வந்து அடுத்த டியூஷன் என அவனது பொழுது ஓய்வில்லாமல் கழிகிறது. இதற்க்கு பேசாம கேரளாவுக்கு அடிமடாக போய் இருக்கலாம் .இவ்வளவுக்கும் அரசு ஆசிரியர் யாரும் தனியாக டியூஷன் எடுக்க கூடாதுன்னு ஒரு சட்டம் வேறு இருக்கு .//

இதுக்கு அரசு பள்ளிய மட்டும் குறை சொல்லி புண்ணியம் இல்லை. இப்பொ இருக்க போட்டி நிறைஞ்ச உலகத்துல ஒருத்தன் சாமளிக்கனும் சொன்னா அவனுக்கு அதிகபடியான பயிற்சி தேவைபடுது. உலகம்பூரா இந்தியன் சொன்னா தனி மரியாதை முக்கியமா நமக்கு சிந்திக்கும் திறன் அதிகம் நம்பராங்க. அதனால Accounts, Engineering, Software இப்படி பல துறைல நம கொடிகட்டி பறக்கறோம். அதுக்கு இந்த கல்வி முறைகூட ஒரு காரணமா இருக்கலாம்.

எஸ்.கே said...

@ALL

Montessori கல்வி முறை பற்றி அனைவரும் என்ன நினைக்கிறீர்கள்?

சௌந்தர் said...

ஹரிஸ் said...
மிக நல்ல பதிவு.////

பொய் சொல்லாதிங்க ஹரிஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// எஸ்.கே said...

டெரர் சார் நல்ல கருத்துக்கள் சொல்றீங்க நீங்களும் இதைப்பற்றி ஒரு பதிவு எழுதினா நல்லா இருக்கும்!///


ஏம்ப்பா உங்களுக்கு இந்த கொலை வெறி. இதுக்கு பேசாம விருதகிரி பாக்கலாம்

கருடன் said...

@இம்சை

//குழந்தைகள் ஆனாலும் சரி இளைஞர்கள் ஆனாலும் சரி நல்ல விளையாடி படிக்க வேண்டும் என்பது என் ஆசை .//

இது சரியான கருத்து. வேறு துறைல கவனம் செலுத்துபோது மன அழுத்தம் குறையும். ஆன விள்ளாடி முடிச்சதும் அவங்களுக்கு ஓய்வு தேவை. கடமைக்கு விள்ளாடு சொல்லிட்டு.. விளாடிட்டு வந்ததும் கிளம்பி டியுஷன் போ சொன்னா. அவன் அங்க போய் தூங்குவான். அடி வாங்குவான். அதைவிட வாரத்தில் ஒரு நாள் கட்டாய விளையாட்டு வைக்கலாம். ஆனா அதுக்கு முன்னாடி நாள் 100 வீட்டு பாடம் கொடுத்து அந்த விள்ளாட்டு நேரத்துல உக்காந்து செய் சொல்லகூடாது.

கருடன் said...

@எஸ்.கே

//Montessori//

அப்படினா??

எஸ்.கே said...

//குழந்தைகள் ஆனாலும் சரி இளைஞர்கள் ஆனாலும் சரி நல்ல விளையாடி படிக்க வேண்டும் என்பது என் ஆசை // கிட்டதட்ட இந்த கருத்தின் அடிப்படையில் அமைந்த கல்விமுறைதான் Montessori. அதாவது pre kg, lkg, ukgன்னு குழந்தைகளை வாட்டி வதைக்காமல்

செயல்முறைகள் மூலம் கல்வியை போதிக்கும் முறை இது. மாண்டிசோரி பள்ளிகள் என தனியாக இக்கல்வி முறையை போதிக்கும் பள்ளிகள் உள்ளன!

எஸ்.கே said...

மாண்டிசோரி பயிற்சி

http://ungalthambi.blogspot.com/2009/02/blog-post_3960.html

ஹரிஸ் Harish said...

சௌந்தர் said...
ஹரிஸ் said...
மிக நல்ல பதிவு.////

பொய் சொல்லாதிங்க ஹரிஸ்//

ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டம் போட விடமாட்டீங்களே..

Kousalya Raj said...

யதார்த்தமான நல்லதொரு பதிவு... பெரும்பாலானோர் இன்றைய பள்ளிகளை பற்றி சொல்லக்கூடிய கருத்துக்கள் இவை எல்லாம்....அனைவரும் இவற்றை ஒத்து கொண்டுதான் ஆகவேண்டும்...

மாண்டிசோரி முறை நல்ல முறை என்றே எனக்கு தெரிகிற்து...என் பதிவில் இதை பற்றி எழுதணும் என்று இருக்கிறேன். மாணவர்களும் வெறும் கடமைக்காக படிக்கணும் என்பது மாறவேண்டும். புத்தக படிப்பு மட்டும் இன்றைக்கு போதாது என்பதை பள்ளி நிர்வாகமும் உணர்ந்து செயல் பட்டால் நன்றாக இருக்கும்.

நம் மொழியை அழகாக மறந்து வருகிறார்கள்.....அம்மா மம்மி ஆனதை ரசித்தவர்கள், தமிழை மறுப்பதையும் மறப்பதையும் பாராட்டவே செய்கிறார்கள். தமிழ் மெல்ல சாகவில்லை...மிக வேகமாக செத்துகொண்டிருக்கிறது....!!

புத்தக சுமையால் பிள்ளைகள் சோர்வடைகிரார்கள் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

//அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியர் இரு சக்கர வாகனங்களில் தான் பள்ளிகளுக்கு வருகின்றனர். இதனை பள்ளி நிர்வாகமோ, ஆசிரியர்களோ கண்டு கொள்வதில்லை//

இந்த விஷயம் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.....இதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை அதைவிட இந்த பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்...? தங்கள் பிள்ளைகளை பற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லையா?? பெருமைக்காக இதை வாங்கி கொடுக்கிறார்களா என்று தெரிய வில்லை.

சமகால கல்வி பற்றி பதிவர்கள் அனைவரும் அவர்களுக்கு தெரிந்தை பதிவாக எழுதவேண்டும்.

இந்த பதிவை எழுதிய பாபுவிற்கு என் நன்றிகள்

பெசொவி said...

நல்ல பதிவு!
நீங்கள் சொன்ன விதம் அருமை! ஆனால் புரிய வேண்டியவர்களுக்குப் புரியுமா?

dheva said...

சமகால கல்வி...பிரச்சினைகள்..அலசல் சரி..........

குற்றம் சாட்டலும் சரி....

தீர்வு.... என்ன?

தீர்வு பற்றி அல்லது.. ஒவ்வொரு வீட்டிலும் எந்த மாதிரி விழிப்புணர்வு வேண்டும் என்ற்ர ரீதியில் கருத்துக்கள் வந்து இருந்தால்..இல்லை இனி வந்தால் சந்தோசம்....

அப்புறம் நிறைய பேரு எழுதுறேன்னு சொன்னாங்க...அவுக எல்லாம் டவுனுக்கு போய்ட்டாகளா...இல்லை உள்ளூரலேயேதானிருக்காகளா?

NaSo said...

//திங்கள் கிழமை ஒரு கலர் துணி ,செவ்வாய் கிழமை ஒரு கலர் துணி .இப்படி தினம் ஒரு ஆடை போட வேண்டும் அதுவும் பள்ளிகளில் தான் வாங்க வேண்டும் என்று சட்டம் வேறு.//

ஆமாங்க பாபு. இதை பற்றி ஒரு பதிவே எழுதலாம், அந்த அளவுக்கு அராஜகம் செய்யிராங்க. துணி மட்டுமல்ல பேனா, பென்சில், நோட்டு, புத்தகம் கூட அவர்களிடம் தான் வாங்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் சொன்ன கடையில் தான் வாங்க வேண்டும்.

பனித்துளி சங்கர் said...

/////குழந்தைகள் ஆனாலும் சரி இளைஞர்கள் ஆனாலும் சரி நல்ல விளையாடி படிக்க வேண்டும் என்பது என் ஆசை .எப்பொழுதுமே பாட புத்தகங்களை கட்டி அழுவதற்கு பதில் வேறு துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் .கல்லூரி படிக்கும் பொழுதே "கை தொழில் ஒன்றை கற்று கொள் கவலை உனக்கில்லை ஒத்து கொள் "என்பதற்கு ஏற்ப ஏதாவது ஒரு தொழில் சார்ந்த படிப்பை கட்டாயமாக்க வேண்டும் /////////////


விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிகவும் சிறப்பானப் பதிவு . ஒரு காலத்தில் கல்வி என்பது நல் ஒழுக்கத்தையும் வாழ்வியல் நெறிமுறைகளை நன்கு அறிந்துகொள்ளும் ஒரு கோவிலாகவும் திகழ்ந்தது . ஆனால் இன்று கல்வி என்பது நான்கு சுவற்றீர்க்குள் நேச்சில் குத்திக் குத்தி மனப்பாடம் செய்யும் ஒரு விபரித்த நிலை . எல்லாம் வளர்ச்சியின் மோகமா !? இல்லை . கல்வியின் தாகமா !? பகிர்வுக்கு நன்றி நண்பரே தொடரட்டும் தங்களின் சேவை

அன்பரசன் said...

//பெரும்பாலான மாணவர்கள் பாடங்களை தேர்வு செய்து படிப்பதில்லை. எதோ படிக்க வேண்டுமென்று படிக்கிறார்கள். பின்னர் தகுந்த வேலை கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். //

மிகச்சரி

வெங்கட் said...

// பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளிகளை
வெறுத்தொதுக்க காரணம் நமது அரசாங்கமும்,
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் தான்.
அவர்கள் சரியான நபரை ஆசிரியராக பணி
நியமனம் செய்யவில்லை. //

எப்படி சரியான நபரை பணி நியமனம்
செய்ய முடியும்.?!!

நல்லா படிச்சி நிறைய Mark எடுக்கறவங்க
எல்லாம் டாக்டர்., இஞ்சினியர்ன்னு
படிக்க போயிடறாங்க..

அப்புறம் சுமாரா படிக்கிறவங்க தான்
என்ன பண்றதுன்னு தெரியாம
ஆசிரியர் வேலைக்கு வர்றாங்க..

பேசாம ஆசிரியர் வேலைக்கு
சம்பளம் 50,000 ஆக்கிடணும்..
ஆனா பசங்களுக்கு நல்லா பாடம்
நடத்தணும்கிற Strict கண்டிசனோட..

ஆசிரியர் வேலைக்கு 50,000 மான்னு
மலைக்காதீங்க.. தப்பே இல்ல..

இளைய சமுதாயம் திறமையா.,
அறிவா வளர இவங்க தான் முதல் காரணம்.

Unknown said...

ஒன்றும் சொல்வதற்கில்லை ...

வார்த்தை said...

//அப்புறம் சுமாரா படிக்கிறவங்க தான்
என்ன பண்றதுன்னு தெரியாம
ஆசிரியர் வேலைக்கு வர்றாங்க.. //

காலேஜ்லயும் இதே தான்...

புத்திசாலி யுஜி முடிச்சிட்டு வேலைக்கு போயிடறான்.
அர வேக்காடு பிஜி முடிச்சிட்டு லெக்சரரா வந்து அருக்குறான்.
பெருங்காய டப்பா டாகுடர் பட்டம் வாங்கிட்டு வந்து HOD நு இம்ச பண்றான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

75

வைகை said...

ரெம்ப லேட்டா வந்துருக்கேன்!! இந்த பதிவபத்தி கொஞ்சம் படிச்சுருந்தா கருத்து சொல்லலாம்!! நான் எங்க சொல்றது? நமக்கு வியாபாரத்த பத்தியெல்லாம் தெரியாதுங்கோ?!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான் சொல்ல நினைத்ததுதான் நீங்களும் சொல்லியிருக்கீங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கல்வித்துறை மாற்றம் என்பது மிகக் கடினமான ஒன்று ஆனால், அது ஆச்சர்யத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்!

சாமக்கோடங்கி said...

//குறிப்பு :இதில் எல்லா ஆசிரியர்களையும் குறை கூற வில்லை .நல்ல ஆசிரியர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.//

சொன்னதையும் சொல்லீட்டு சரண்டர் ஆனா உட்டுடுவோமா....????

சாமக்கோடங்கி said...

ஒரு நாளில் பாதி நேரம் தான் புத்தகக் கல்வி வேண்டும். இரண்டாம் பாதி "சந்தோஷக் கல்வி", அதாவது ஆசிரியரும் மாணவர்களும் கலந்து சந்தோஷமாக உரையாடி, செயல்முறைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். நான் மேம்போக்காக சொல்லி இருக்கிறேன்.. இதைப் பற்றி பல அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள். பழங்கால குருகுலக் கல்வியில் கூட இது போன்ற முறை நடை முறையில் இருந்துள்ளது..

Sivakumar said...

இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.