நம்ம பதிவுலக நண்பர்களையும்,பட்டாசுகளையும் இணைத்து ஒரு பதிவு எழுத திடிர்னு ஐடியா கிடைத்தது. சரின்னு எழுத ஆரம்பிச்ச பட்டாசு பேரு வரமாட்டுது உடனே வண்டியை எடுத்துட்டு பட்டாசு கடைக்கு போனேன் போய் எல்லா பெயர்களையும் வாங்கி .எந்த எந்த பட்டாசுக்கள் நம்ம பதிவர்களுக்கு பொருந்தும் என்று கீழ போட்டு இருக்கிறேன் .
புஸ்வானம் முதலில் லைட்அ தான் எறியும் அப்புறம் நல்ல மெல்ல மெல்ல உயர போகும்.
நம்ம தேவா அண்ணாமாதிரி முதல்ல படிக்கும் பொழுது ஸ்லோவா புரியுற மாதிரி இருக்கும் உள்ளே போக போக அதனின் அர்த்தம் தெரிந்ததும் நல்ல இருக்கும் .
பாம்பு மாத்திரை இது புகையும் ஒரு மாதிரி எறிந்த வாடை அடிக்கும் .ஆனால் இதனால் பயம் இல்லை .
நம்ம கோமாளி செல்வாமொக்கை என்கிற பெயரில் ஒரே புகைய கிளப்பி விட்ருவான் .யாருக்கும் பாதிப்பில்லாமல்.
டபுள் ஷாட் இது ரெண்டு தடவை சத்தம் கொடுக்கும் ஒன்று கீழ இன்னொன்று மேல போய் வெடிக்கும்
நம்ம அருண் சினிமா புதிர் போட்டு சாகடிக்கிறது.(கீழே காது கிழிய வெடிக்கிறது )மற்றொன்று தன அனுபவங்களை அழகாக எழுதி எல்லோரையும் ரசிக்க வைப்பது .(மேலே போய் வெடிக்கும் பொழுது காதுக்கு பாதிப்பு இருக்காது ).
தரை சக்கரம் இது எப்போதும் ஒரே மாதிரி தான் தரையில் சுற்றும் .இருந்தாலும் திடீர்னு வெடிச்சிரும்.
நம்ம பன்னி குட்டி ராமசாமி ஒரே மாதிரி எப்ப பார்த்தாலும் விஜய பத்தி அதிகமாக பதிவு எழுதுறது .ஆனாலும் திடீர்னு ராமர்பிள்ளை பற்றி எழுதி அசத்துவார் .
கம்பி மத்தாப்பு இதை பெண்களும் சிறுவர்களும் விரும்பி கொளுத்துவார்கள் பயமே இல்லாத ஒன்று
இது நம்ம சௌந்தர் (ரசிகன்)இவர் பதிவை எல்லோரும் படிக்கலாம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டார்
அணு குண்டு இது ஒன்னு வெடிச்சாலும் அந்த ஏரியாவே அதிரும் .காதில் ரத்தம் வரும் அளவுக்கு சத்தம் இருக்கும் .
இது நம்ம டெர்ரர்.இவர் எப்பாவது ஒரு பதிவு தான் போடுவார் அந்த பதிவு பதிவுலகமே இவரை பார்த்து பயப்படும் கமெண்ட்ஸ் ல எல்லோரையும் போட்டு அடிப்பார் .ஹி....ஹி ....சில சமயம் வேற ப்ளோக்ல போயும் காதுல ரத்தம் வர அளவுக்கு இவரு அடிவாங்குவாறு
10000 வால சரவெடி ஒரு தடவ திரிய பத்த வச்சிட்டா போதும் சர சரவென வெடிச்சிகிட்டே இருக்கும் யாரும் கிட்ட போக முடியாது.
இது பட்டபாட்டி ஒரு பதிவு போடுவார் யாராவது கமெண்ட்ஸ் எழுத கிட்ட போன அவ்வளவு தான் காதுல இருந்து ரத்தம் வரும் அளவுக்கு வசவு இருக்கும்
கேப் ரோல் இதை துப்பாக்கியில் லோட பண்ணியாச்சுன்ன அது பாட்டுக்கு டப்பு..... டப்பு ...ன்னு சுட்டு கிட்டே இருக்கும் .
இது நம்ம மங்குனி பதிவு மாதிரி சின்ன பதிவ தான் இருக்கும்.ஆனா கமெண்ட்ஸ் மட்டும் டப்பு..... டப்பு ...ன்னு சுட்டது மாதிரி விழுந்துகிட்டே இருக்கும்.
500 வால சரவெடி திரிய பத்த வச்சிட்டா சர சரவென வெடிக்கும் ஆனா உடனே அடங்கிடும் .
இது நம்ம வெங்கட் சின்ன பதிவா இருந்தாலும் நச்சுன்னு நல்ல இருக்கும் சீக்கிரம் எல்லோருக்கும் புரியும் படியான சிரிப்பு வெடியாகவும் இருக்கும்..
சாட்டை இது மொத்தத்துக்கு பயமே கிடையாது .யாருனாலும் கொளுத்தலாம் அது பாட்டுக்கு எரிஞ்சிகிட்டே இருக்கும்
இது நம்ம PSV இவர் பதிவ எல்லோரும் படிக்கலாம்.யார் கமெண்ட்ஸ் போட்டாலும் சரி ,voteபோட்டாலும் சரி .அவர் கண்டுக்கவே மாட்டார்.அவரு பாட்டுக்கு எழுதிகிட்டே இருப்பார்.
புல்லெட் பாம் இது பார்க்குறதுக்கு சிறிய வெடி மாதரி தான் இருக்கும் ஆனா ரொம்ப பவர்புல் வெடி
இது நம்ம எஸ் .கே கமெண்ட்ஸ் எல்லாம் சும்மா பவர் புல்அ இருக்கும் .கதை எழுதுவாரு பாருங்க .போரும்ல தான் எழுதுவார் செம ஹிட்(என் அன்பான வேண்டுகோள் எஸ்.கே நீங்க கண்டிப்பாக ப்ளாக்ல ஒரு கதை எழுதணும்).
ராக்கெட் இதுல திரிய பத்த வைச்ச விடனே வானத்தை நோக்கி போகும் அப்படியே காணமல் போய் விடும் .
இது நம்ம வெறும்பய பதிவ முதல் ரெண்டு பாரா நல்ல இருக்கும் கடைசி பார்த்தா சப்பை மேட்டர் மாதிரி பதிவ முடிசிருவார்
சரி எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் மக்கா ...
(எங்கேயோ இருந்து தேவா அண்ணா குரல் )டேய் தம்பி பாபு .ஏன்டா இப்படி இம்சை பண்ணுற .உன் "நண்பன்டாசிரிப்பு போலீஸ் அவனை பற்றி ஒன்னும் சொல்லாம போற ......
தேவா அண்ணா நீங்க சொல்லி நான் கேட்காம இருப்பேனா .இதோ
நமத்துபோன பட்டாசு இதுல திரியா பத்தவச்ச உடனே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ன்னு சத்தம் கொடுக்கும் ஆனா வெடிக்காது
அதே மாதிரி தான் நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ் (என்னத்த சொல்லுறது ) அதான் நமத்து போச்சே ........
Fancy shot இது ரொம்ப காஸ்ட்லியான வெடிங்க .திரியா பத்த வச்சி விட்ட போதும் மேல போய் கலர்புல்அ வெடிக்கும் பாருங்க பார்த்துகிட்டே இருக்கலாம் ......
இது நம்ம இம்சை பாபு வோட பதிவு ....அத சொல்லுறதுக்குள்ள (ஏப்பா டெர்ரர் என் இப்படி கோவ படுற சரி விடுப்பா ...ஸ் ஸ் ஸ் ... அடிக்காதே ......பாருடா அதுக்குள்ள எவனோ கல் எடுத்து எரியுறான் .....சரி மக்கா விடுங்க .)
அடுத்து இந்த தீபாவளி ஸ்பெஷல் போன் வெடி. இது துபாய்ல இருந்து வெடிச்சாலும் இந்தியா வுக்கு கேக்கும் இதுல என்ன ஸ்பெஷல்னா..............
ச்சே .து ...................இத நான் சொல்ல கூடாதுன்னு பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொல்லிருக்கு .அவரே கமெண்ட்ஸ்ல வந்து சொல்லுவாரு .வா மக்கா நரி வந்து சொல்லு.
மீண்டும் ஒருவாட்டி எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
எல்லோரும் படித்து விட்டு கண்டிப்பாக ஓட்டு போடவும் . ஏக ஓட்டு பட்டைகள் நண்பர் அருண் எடுத்து வைத்து என்னோட ப்ளாக் அ அழகு படுத்தி தந்திருக்கார்.