Monday, September 6, 2010

வரம்பு மீறிய செயல்கள்

செப்டம்பர் 1தேதி கிருஷ்ண ஜெயந்தி என்பதால் ஆணி(வேலை)இல்லை வீட்டில் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து தொழிலுக்கு விடுமுறை விட்டு விட்டு வீட்டில் இருந்தேன்.இன்று evening-ஷோ குழந்தையை கூட்டிகொண்டு செல்வோம் என்று வீட்டம்மா கூறிவிட்டாள்(பேச்சை மீற முடியுமா பிறகு யாரு அடிவாங்குறது).சரி என்று குழந்தையை கூட்டி கொண்டு theatre-க்கு போய் மின்விசிறி  இருக்கும் இடம் பார்த்து இருந்தோம்.

ரொம்பவும் கூட்டமில்லை சுமாரான கூட்டம் தான்.போனவுடன் என் பொண்ணு அப்பா popcorn-வாங்கி கொடுப்பா என்றாள்.இப்ப தானே வந்தோம் அதுக்குள்ளவ பிற்கு வாங்கி தருகிறேன் என்றேன்.உடனே பொண்ணு அவ அம்மாவை பார்த்தாள்(அவளுக்கும் தெரியும் போல இது டம்மி பீஸ்-ன்னு).என் மனைவி என்னை பார்த்து குழந்தை ஆசையாக கேட்கிறது இல்லையா போய் வாங்கி கொடுங்கள் என்றாள்(இன்னிக்கி படம் பார்த்த மாதிரி தான்).போய் ஒரு பாக்கெட் வாங்கி வந்து கொடுத்தேன்.ஏன் நாங்கள் எல்லாம் மனுசனா தோணலையா?என்றாள்.திரும்பவும் மாடி இறங்கி வந்து வாங்கிட்டு இருக்கும் போதே மணி அடித்துவிட்டார்கள்.வாங்கிட்டு மேல போனால் லைட் எல்லாம் ஆப் செய்துவிட்டார்கள் .என் சீட்டுக்கு போகும் முன் நாலு பேர கால மிதித்து.அவர்கள் என்னை பார்த்துபோங்க சார் என்றார்கள் (திட்டினத எல்லாம் வெளிய சொல்ல முடியாது.அவ்வளவு கொடூரமான வார்த்தை என்ன செய்ய?).

வந்து ஒரு வழியா என் இருக்கையில் அமர்ந்து என் மனைவியிடம் கொடுத்தேன்.அப்பொழுது தான் பார்த்தேன் என் இருக்கையின் முன்னால் ஒரு புதுமணதம்பதிகளோ?அல்லது காதலர்களா?தெரியவில்லை இருந்தார்கள்.சரி விடு நாம படத்தை பார்போம் என்று screan-அ  பார்த்த லெட்டர் சீன் முடிந்து படம் ஓடுகிறது .என் மகளும் popcorn தின்றுவிட்டாள்.சரி அடுத்து மாடி இறங்க வேண்டியது தான் (ரெடி ஆகிகோடா கைப்புள்ள)என்று நினைத்தேன் ஒன்றும் கேட்கவில்லை தப்பித்தேன் .

என் பொண்ணு என்னிடம்    ஏனப்பா அந்த அங்கிள் அந்த ஆன்ட்டி  தோள்  மீது தலை வைத்திருக்கிறார் என்று என்னிடம் கேட்டாள்.அப்பொழுது தான் நன் பார்த்தேன் முன்னால் இருந்த ஜோடியில் அவள் தோள் மீது அவன் சாய்ந்திருபதை.நான்  என் மனைவியை  பார்த்தேன் என்ன பதில் சொல்ல என்று இருவரும் முழித்தோம் . உடனே சமாளித்து அந்த அங்கிள்-க்கு காய்ச்சல் அதன் என்று கூறி சமாளித்தேன். ஒருவாறு அமைதியாகிவிட்டாள்.
 
கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை என் மகள் என்னிடம் அப்பா பாத்ரூம் என்றாள்.வேற வழி இன்னும் எதனை பேர் கால மிதிக்க போறோனோ (திட்டு வாங்க போறதா கொஞ்சம் மாற்றிசொன்னேன்).பாத்ரூம் போயிட்டு வந்து திரும்பி என சீட்டில் வந்து உட்காருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.படம் ஓடியது என் மகள் உறங்கிவிட்டாள் (குழந்தைகள் சினிமா வுக்கு வருவது popcorn ,ice cream சாப்பிடத்தானே ).இடைவேளை வந்தது என் மகள் தூக்கத்தை கலைத்து விட்டாள் அப்பா icecream என்றாள்,போய் என் மனைவி,எனக்கும் சேர்த்து வாங்கி கொண்டேன் (யார் திரும்பி வாங்கி கட்டி கொள்வது.)

அப்பொழுது  என் குழந்தை என்னிடம் அப்பா இபொழுது அந்த ஆன்ட்டி-க்கு காய்ச்சல் வந்துட்டுப்பா?என்றாள்.முன்னிருக்கையில் பார்த்தால் இப்பொழுது அவன் தோள் மீது அவள் சாய்ந்திருபதை பார்த்தேன்.நானும் என் மனைவியும் முழித்தோம் பதில் கூற முடியாமல்.பிறகு பேசாம படத்தை பாரு அல்லது தூங்கு என் மனைவி சத்தம்போட பேசாமல் தூங்கிவிட்டாள்.

எங்க குடும்பத்துடன்  போனாலும்  இவங்க தொல்லைதாங்க முடியலை.மற்றவர்கள் முகம்சுளிக்கும் அளவுக்கு எல்லை மீறிய செயல்கள் தேவையா?அதுவும் பொதுஇடங்களில்.என்னை மாதிரி எத்தனைபெற்றோர்கள்  இப்படிகேள்விக்கு பதில் கூற முடியாமல் தவிப்பார்கள் (குறிப்பாக ஜெ-அண்ணன்   அவர்கள்).  

குறிப்பு:
நீ ஏன் முன்சீட்ட பார்த்த படத்த பார்க்கவேண்டியது தானே என்று கமெண்ட்ஸ் போடாதீர்கள்.சினிமாவில் நடப்பது போல நம் நிஜ வாழ்விலும் மரத்தை சுற்றி டூயட் பாட வேண்டும் என்று நினைகிரார்களோ என்னவோ ?சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்று இவர்களுக்கு புரிய  வைப்பது யாரோ?

23 comments:

செல்வா said...

இன்னிக்கும் நான்தான் முதல் ..!!

அருண் பிரசாத் said...

முதல் வெட்டு!

செல்வா said...

அட அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க. காலைல பார்க்க வேண்டியது , அப்புறம் உடனே லவ். அப்புறம் ரண்டுபேரும் என்ன பண்ணுறாங்க அப்படின்னு கூட தெரிஞ்சிக்கறது கிடையாது ..என்ன எழவெடுத்த லவ்வோ..?

அருண் பிரசாத் said...

ஆகா செல்வா நீ வெட்டிடியா ஓகே! வெட்டுனா சரி

இம்சைஅரசன் பாபு.. said...

அருண் வடை போச்சே..........

செல்வா said...

///அருண் பிரசாத் said...
முதல் வெட்டு!///
ஐயோ சாமி ..!! எங்க போனாலும் உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லாம போய்டுச்சு ..!!

அருண் பிரசாத் said...

பிழைக்க தெரியாத லவ்வர்ஸ்! இப்படி குடும்பமா பார்க்ககூடிய நல்ல படத்துக்கு வருவாங்க. ஒரு மொக்கை படமோ! விஜய் படமோ போய் ஆளே இல்லாத தியேடர்ல கார்னர் சீட்டை பிடிக்கனும்


இவங்க உருப்படமாட்டங்க

சௌந்தர் said...

சுமாரான கூட்டம் தான்.போனவுடன்/// அப்போ இது விஜய் படம் தான்

செல்வா said...

///ஒரு மொக்கை படமோ! விஜய் படமோ போய் ஆளே இல்லாத தியேடர்ல கார்னர் சீட்டை பிடிக்கனும்///
அது சரி .. நல்ல அறிவுரை .!!

சௌந்தர் said...

நல்லவேளை நீங்க சென்னை பீச் பக்கம் வரலை வந்துராதீங்க

சௌந்தர் said...

நல்ல பதிவு இவனுங்க திருந்தவே மாட்டானுங்க இனி தியேட்டர் பக்கம் போகாதிங்க கோவில் போங்க சினிமா பார்க்கணும் என்றால் கூட்டம் இருக்கும் படத்திற்கு மட்டும் போங்க

இம்சைஅரசன் பாபு.. said...

//நல்ல பதிவு இவனுங்க திருந்தவே மாட்டானுங்க இனி தியேட்டர் பக்கம் போகாதிங்க கோவில் போங்க சினிமா பார்க்கணும் என்றால் கூட்டம் இருக்கும் படத்திற்கு மட்டும் போங்க //
சௌந்தர் கோயிலுக்கு போன இதுக்கு மேல .ஐயோ இடி இடின்னு ........இடிகிரான்கப்பா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் படத்துக்கு தனியாதான் போறேன். எனக்கு ஒன்னும் சிக்க மாட்டேங்குதே. அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்

சௌந்தர் said...

செல்வா இனி மேல் சினிமாவுக்கு போன ஒழுங்கா இரு சின்ன பசங்க எல்லாம் வருது

செல்வா said...

//நானும் படத்துக்கு தனியாதான் போறேன். எனக்கு ஒன்னும் சிக்க மாட்டேங்குதே. அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்///

ஹா ஹா .. அவுங்களுக்கு ரசனை அப்படின்னு ஒண்ணு இருக்கு ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

//நானும் படத்துக்கு தனியாதான் போறேன். எனக்கு ஒன்னும் சிக்க மாட்டேங்குதே.//

சிக்கி இருந்தா தன எப்போவோ கல்யாணம் பண்ணி இருப்பியே.........

செல்வா said...

/// செல்வா இனி மேல் சினிமாவுக்கு போன ஒழுங்கா இரு சின்ன பசங்க எல்லாம் வருது ///
நானே இன்னும் சின்னப் பையன்தான் ..!!!

சௌந்தர் said...

முகம்சுளிக்கும் அளவுக்கு எல்லை மீறிய செயல்கள் தேவையா///

நியமான கேள்விகள்

எஸ்.கே said...

தியேட்டர் மட்டுமில்லீங்க கோயில்ல கூட இப்படியெல்லாம் நடக்குது!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் படத்துக்கு தனியாதான் போறேன். எனக்கு ஒன்னும் சிக்க மாட்டேங்குதே. அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்

//

அங்கிள் உங்களுக்கு இந்த வயசில இது தேவையா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

தியேட்டர் மட்டுமில்லீங்க கோயில்ல கூட இப்படியெல்லாம் நடக்குது!

//

என்ன சார் காமெடி பண்றீங்க... இது மட்டுமா நடக்குது... இன்னும் என்னனமோ நடக்குது...

இம்சைஅரசன் பாபு.. said...

//அங்கிள் உங்களுக்கு இந்த வயசில இது தேவையா...
.நல்ல காலம் ரமேஷ் uncle ன்னு கூபிட்டேன்களே மத்தவங்க எல்லோரும் தாத்தா ன்னு கூப்பிடுரங்கோ

கருடன் said...

@ரமேஷ், செல்வா, அருண், வெறும்பய
அட பாவிகளா!!

ஒரு நல்ல பதிவு போட்டா.. அதுக்கு மொதல்ல வந்து கருத்து சொல்லி இருக்கது எல்லாம் கே.டி பசங்க....