Monday, August 16, 2010

சாதனை

சாதனை
ரொம்ப சீரியஸ் ஆக ஏதோ பதிவு போடுகிறேன் என்று நினைக்க  வேண்டாம் (ஆமா நீயே  ஒரு காமெடி பீஸ் )வேறொன்றும் இல்லை எனக்கு கல்யாணம் முடிந்து ஆறு வருடங்கள் முடிந்து விட்டது (இது தான் சாதனையா ).நிறைய குடுபங்கள் இன்று கல்யாணம் முடிந்து ஒருவருடத்திலேய விவாகரத்தில்   முடிகிறதை கண்முன்னால் பார்கிறேன்.
அதனால் தான் இதை பதிவில் எழுதுகிறேன் .கணவன் மனைவி  இடையே விட்டு கொடுக்கும் மனபாங்கு மிகவும் குறைந்து விட்டது என்றே தோன்றுகிறது
மேலும் பணம் சம்பந்திபதர்க்காக கணவன் ஒரு இடமும் மனைவி  ஒரு இடமும் இருக்கிறார்கள் .எங்கே போகிறது நம் உலகம் .பணம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்று தான் .ஆனால்  அதுவே அணைத்து சந்தோசத்தையும்  தந்து விடாது .என் கவலைகள் போக என் பொண்ணு  கூட ஒரு பத்து நிமிடம் விளையாடினால்  போதும் நான் சந்தோசம் அடைந்துவிடுவேன் .கல்யாணம் எனபது கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதற்காக தான் .இருவரும் ஒரே இடத்தில இருந்து பணம்  எட்டுவதை நான் குறை சொல்லவில்லை. .கணவன் மனைவி குழந்தை என்பது தான்  குடும்பம் .
சரி கணவன் இருக்குமிடத்தில் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தால் பட்ஜெட் இடிக்கிறது (நகரத்தில் மட்டும்).எனவே இன்றய தலைமுறைகள் தன சொந்த கிராமத்தில் மனைவி குழந்தைகளை விட்டு செல்கின்றனர் .இதற்க்கு எதுக்கு கல்யாணம் பேசாமல் பிரம்மசாரியாக  ஆக இருந்து விடலாம்.
இப்ப சொல்லுங்க இது சாதனை தானே .என்னை பொறுத்த வரை இது சந்தோஷ சாதனை .

31 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

important post for now thanks for sharing

இம்சைஅரசன் பாபு.. said...

Thanks ramesh

சௌந்தர் said...

புதிய பதிவருக்கு வாழ்த்துக்கள்.... அடுத்த பதிவில் வந்து கும்மி அடிப்போம்

கருடன் said...

//ரொம்ப சீரியஸ் ஆக ஏதோ பதிவு போடுகிறேன் என்று நினைக்க வேண்டாம்//

பதிவா? எங்க ? எங்க? (படிக்க ஆரம்பிக்கும்போதே முடிஞ்சி போச்சி..)

கருடன் said...

ஐயா ராசா இந்த comment moderation எடுங்க... அப்போதான் நிறைய பெரிய மனுசங்க வீட்டுக்கு வருவாங்க... ஆடு வெட்ட...

கருடன் said...

@ரமேஷ்
//important post for now thanks for sharing //

சொல்லிடாருயா.... ரமேசு.... எல்லாரும் கேட்டுகோங்க...

கருடன் said...

இப்போ நான் சொல்றேன்... உண்மையில் நல்ல கருத்து... ஆனால் பதிவை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம்...

கருடன் said...

//எங்கே போகிறது நம் உலகம் //

சூரியன சுத்தி போகுது...

கருடன் said...

//எனவே இன்றய தலைமுறைகள் தன சொந்த கிராமத்தில் மனைவி குழந்தைகளை விட்டு செல்கின்றனர் //

இனி பக்கத்துக்கு கிராமத்துல விட்டுட்டு போங்க..

கருடன் said...

//என்னை பொறுத்த வரை இது சந்தோஷ சாதனை//

உங்கள் சாதனை தொடர வாழ்த்துகள்...

கருடன் said...

ரமேஷ் போல் தன் மனைவி, மக்களை கிராமத்தில் விட்டுவிட்டு இங்கு வந்து கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லும் விஷமிகளுக்கு... நல்ல சவுக்கடி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹரிணி, நல்லா எழுதுங்க, நம்ம கடைங்க பக்கமும் வாங்க, கருத்தச் சொல்லுங்க, சேர்ந்து கும்முவோம்!

இம்சைஅரசன் பாபு.. said...

எல்லோருடைய வருகைக்கும் நன்றி. தொடர்ந்து வாங்க.

இம்சைஅரசன் பாபு.. said...

//ஹரிணி, நல்லா எழுதுங்க, நம்ம கடைங்க பக்கமும் வாங்க, கருத்தச் சொல்லுங்க, சேர்ந்து கும்முவோம்! //

கண்டிப்பா வர்றேன் தல

செல்வா said...

நம்ம ரமேஷ் அண்ணா கூப்பிட்டார் .. அதான் வந்தேன் ..
நல்ல கருத்துதான் ..! அப்புறம் இம்சை அரசன் மாதிரியே இங்க ஒரு கோமாளி இருக்கார். அங்கயும் வாங்க .. சரியா ..?
அப்புறமா எங்க சங்க செயல TERROR-PANDIYAN(VAS) அவர்கள் கூறியது போல் ///ரமேஷ் போல் தன் மனைவி, மக்களை கிராமத்தில் விட்டுவிட்டு இங்கு வந்து கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லும் விஷமிகளுக்கு... நல்ல சவுக்கடி..///
ஆமோதிக்கிறேன் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
ரமேஷ் போல் தன் மனைவி, மக்களை கிராமத்தில் விட்டுவிட்டு இங்கு வந்து கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லும் விஷமிகளுக்கு... நல்ல சவுக்கடி... //

யோவ் ரமேசு, நீ ரொம்ப நல்லவன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்யா, இப்பிடி ஆப்பு வெச்சிட்டியேயா!

கருடன் said...

பன்னிக்குட்டி
//ஹரிணி, நல்லா எழுதுங்க, நம்ம கடைங்க பக்கமும் வாங்க, கருத்தச் சொல்லுங்க, சேர்ந்து கும்முவோம்! //

ஹி ஹி ஹி அவரு பெயர் பாபு... அவசர பட்டு தலைல மஞ்ச தண்ணி தெளிச்சிகிடிங்களே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இப்போ நான் சொல்றேன்... உண்மையில் நல்ல கருத்து... ஆனால் பதிவை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம்... //

அதுக்காக jey மாதிரி ஒருகுயர் நோட்டுலையா எழுதுறது....

//பதிவா? எங்க ? எங்க? (படிக்க ஆரம்பிக்கும்போதே முடிஞ்சி போச்சி..) ///

அதான

//
சூரியன சுத்தி போகுது... //

அறிய கண்டுபிடிப்பு. கோகுலத்தில் சூரியன் இல்லியே?

//இனி பக்கத்துக்கு கிராமத்துல விட்டுட்டு போங்க.. ///

பக்கத்து கிராமத்துல இவரை நாட்டாமை ஒதுக்கி வச்சிருக்கிறாராம்...

//ரமேஷ் போல் தன் மனைவி, மக்களை கிராமத்தில் விட்டுவிட்டு இங்கு வந்து கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லும் விஷமிகளுக்கு... நல்ல சவுக்கடி... //

யார் அந்த ரமேஷ்????

//யோவ் ரமேசு, நீ ரொம்ப நல்லவன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்யா, இப்பிடி ஆப்பு வெச்சிட்டியேயா! //

பன்னி.. வதந்திகளை நம்ம்பாதையா....

கருடன் said...

@ரமேஷ்
//பன்னி.. வதந்திகளை நம்ம்பாதையா.... //

ஆமாய வதந்திகளை நம்ம்பாதையா.... ஆனா இது உண்மை...

கருடன் said...

//யார் அந்த ரமேஷ்????//

அவன் ரொம்ப கெட்டவன் (சாமி சத்தியமா)..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

////யார் அந்த ரமேஷ்????//

அவன் ரொம்ப கெட்டவன் (சாமி சத்தியமா).. //

அப்பாட நான் இல்ல

Jey said...

எச்சூச்மீ , என்ன இங்க நம்ம பயபுள்ளக கூட்டமா இருக்கு....

Jey said...

//ரொம்ப சீரியஸ் ஆக ஏதோ பதிவு போடுகிறேன் என்று நினைக்க வேண்டாம் (ஆமா நீயே ஒரு காமெடி பீஸ் )வேறொன்றும் இல்லை எனக்கு கல்யாணம் முடிந்து ஆறு வருடங்கள் முடிந்து விட்டது (இது தான் சாதனையா ).//

சார் கல்யாணம் ஆகிட்டாலே காமெடி பீசுதானே..., சரி வாங்க... நீங்களும் உங்க அடி வாங்குற அனுபவத்தை எழுதுங்க , துனைக்கி ஆள் கிடச்ச ஆறுதலவது கிடைக்கு.

Jey said...

//அதனால் தான் இதை பதிவில் எழுதுகிறேன் .கணவன் மனைவி இடையே விட்டு கொடுக்கும் மனபாங்கு மிகவும் குறைந்து விட்டது என்றே தோன்றுகிறது//

ஆமாங்க, சரியாச் சொன்னீங்க... உண்மைய உறைக்கிரா மாறி சொல்லிருக்கீங்க சாரே.

Jey said...

@@ டெர்ரர்
@@ கோமாளி
@@ ரமேஷ்
@@ பன்னிகுட்டி ///

என்ன ராசா புதுசா ஆடு சிக்கிருக்கு போல... பாத்துப்பா, பயபுள்ள என்ன மாதிரி வூட்டாம்மாகிட்ட... அடிவாங்குர பச்சை மண்ணு மாதிரி தெரியுது..., எழுத ஆரம்பிக்கும்போதே வெரட்டிராதீக...

harini சார் நல்லா எழுதுரீங்க தொடர்ந்து எழுதுங்க....நாங்க படிச்சி ஊக்கப்படுத்துறோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்ன ராசா புதுசா ஆடு சிக்கிருக்கு போல... பாத்துப்பா, பயபுள்ள என்ன மாதிரி வூட்டாம்மாகிட்ட... அடிவாங்குர பச்சை மண்ணு மாதிரி தெரியுது..., எழுத ஆரம்பிக்கும்போதே வெரட்டிராதீக...//

Any Ulguththu.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//harini சார் நல்லா எழுதுரீங்க தொடர்ந்து எழுதுங்க....நாங்க படிச்சி ஊக்கப்படுத்துறோம் //

Jey நீங்க எப்படி ஊக்கப்படுத்டுவீங்கன்னு எனக்கு தெரியாதா. புது ஆடு. பார்த்து சூதானமா அருங்க...

இம்சைஅரசன் பாபு.. said...

ரமேஷ்,jey ,VAS ,சௌந்தர் ,பண்ணி குட்டி ராமசாமி ,செல்வா குமார் எல்லோருக்கும் வணக்கம் .
ரமேஷ் சொன்னது மாதிரி புது ஆடு கிடைச்சிருக்கு இன்னு கசப்பு கடைக்கு அனுப்பி ராதீங்க .கொஞ்சம் பார்த்தே கும்முங்க.
உங்க அளவுக்கு பதிவில் அனுபவம் இல்லை இருந்தாலும் உங்களோட ஆதரவு இருந்தால் எனக்கு தெரிந்ததை போடுகிறேன்..
என் முதல் பதிவிற்கு இத்தனை கமெண்ட்ஸ் வந்தலில் சந்தோசம் தான் (எதாவுது உள் குத்து இருந்தாலும் பார்த்து கும்மியடிங்க ).
இதுவும் சந்தோஷ சாதனை தன்.
நண்பர் ரமேஷ்க்கு ரொம்ப நன்றி .இவ்வளவு நண்பர்களை அறிமுக படுத்தியதற்கு .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நண்பர் ரமேஷ்க்கு ரொம்ப நன்றி .இவ்வளவு நண்பர்களை அறிமுக படுத்தியதற்கு . //

தம்பி நன்றி சொன்னாலும் கும்முறது உறுதிதான்.

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள் பாபு (எ) ஹிரினி

எல்லாரும் கும்மி முடிச்சாச்சா? ரைட்டு அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க, வந்து கும்மறேன்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இது அல்லவா சாதனை.
25 வருஷமா இது எனக்கு தெரியாம போச்சே!