Tuesday, March 1, 2011

ஜைன்தவி..ஐ ..லவ் ..யூ ....


அண்ணன் லவ் மூடுல இருக்கேன் ..தக்காளி... பன்னிகுட்டி இன்னும் பல பேர் ஒரே காதல் கதை போட்டு தள்ளுறாங்க நானும் என் காதல கதைய எழுதுறேன் ..பார்த்து படிச்சு செத்து தொலைங்க ...

என் ஜைன்தவி ...(சைந்தவி இல்ல) என் பட்டு குட்டி ,என் செல்ல குட்டி காலைல எழுந்தவுடன்  டீ குடிக்கும் பொழுது..! நான் குடிச்சிட்டு கொஞ்சம் டீ உனக்கு தருவேனே..! அந்த எச்ச டீயை நீ குடிச்சுட்டு நீ என் மடி மீது வந்து படுத்து ..என் கன்னத்தில் வந்து ..சீ ..சீ எனக்கு வெக்கம் வெக்கமாக வருது அதை சொல்ல ..

சாபுவுக்கு லீவ்ன்னு சொல்லிட்டு ஜைன்தவியையும் கூட்டிட்டு போயீட்ட ..நான் எப்போதுமே ரெண்டு இட்லி சாப்பிட்டுகிட்டு ஒரு இட்லி தந்தாலும் அதை நல்ல வயிறு முட்ட சாப்பிட்டுகிட்டு ,நான் வேலைக்கு போகும் போது வெளியே வந்து வழி அனுப்பி வைப்பியே...இந்த 15 நாளும் எனக்கு ஒரே போர் ..எப்படி எனக்கு இனி நேரம் போகும் ..

வாழ்க்கை அழகு பாஸ்...அதுவும் ஜைந்தவிங்க கெடைச்ச எல்லா அப்பாகளுக்கும் வாழ்க்கை சொர்க்கம்.(இந்த வரி எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே ..டேய் இம்சை வெளிய வராத அப்படியே உள்ள இரு ..)

யார்கிட்டேயும் பேச பிடிக்கல ... ஜைன்தவி பார்க்காம கண்ணு ரெண்டும் பூத்து போச்சு ..என் கண்ணுகுள்ளே வந்து நிக்கிறியே ..உன் கூட செல்ல சண்டை போடணும் போல இருக்கு ..இப்படி தான் என் மாமனார் எனக்கு தீபவாளிக்கு வாங்கி தந்த பட்டாபட்டிய .நான் கழற்றி போட்டு இருந்த போது அதை நீ எடுத்து போத்திகிட்டு படுத்தியே..! குளிருக்கு இதமா இருக்குன்னு ..நான் கோவமா அதை புடுங்கும் போது ..நீ அதை இழுக்க ..நான் இழுக்க... கடைசில .பட்டாபட்டி பாதி உன்கிட்ட மீதி என்கிட்டே இருந்துச்சு ..கிளிச்சுட்டீயேன்னு நான் பொய் கோவ பட்ட போதும் என் மடில வந்து படுத்தியே... .இந்த பதினைந்து நாளும் என் மடில படுக்க ஆள் இல்லாமல் தலையணை தூக்கி வைச்சிக்கிட்டு இருக்கேனே இந்த கொடுமை ரொம்ப பயங்கரமானது . 

இப்படிதாங்க நானும் ஜைந்தவியும் எப்பொழுதும் மாலை நடை பயிற்சி போவோம் .அவளின் பிடி என் கைகுள்ளேயே இருக்கும் அது அன்பு பிடி..! .ஒரு நாள் இப்படி சேர்ந்து வாக்கிங் போகும் போது நாலு பேர் சேர்ந்து முறைச்சி பார்த்தாங்க .எனக்கு கோபம கொப்பளித்து கொண்டு வந்தது நான் அவர்களை அடிக்க போகும் முன் ..என் செல்லம் ,என் புச்சு குட்டி அவர்களை முறைத்து பார்த்து சத்தம் போட்டாளே பார்க்கணும் ..அது என் செவிக்குள்ளேயே நிக்குது ..

ஒரு நிமிஷம் இருங்க சாபுகிட்டே என் செல்ல குட்டி ,அம்முக்குட்டி ஜைன்தவி சாப்பிட்டாளா  என்னன்னு கேட்டு கிட்டு வரேன் ஏன்னா நான் சாப்பிட்ட மிச்சத்தை சாப்பிட்டே பழக்க பட்டவள் ..

ஜைன்தவி கிடச்ச அப்பாக்களுக்கு... நீங்களும் வீட்டுல இருக்கும் ஜைந்தவிக்கு ஒரு துண்டு இட்லி ,ரொட்டி, எச்ச டீ இப்படி டெய்லி கொடுத்து பாருங்க ..அதோட சுகமே தனி மக்கா ..

ஜைன்தவி கிடைக்காத பன்னாட பரதேசிகளுக்கு ..இழுத்து மூடிக்கிட்டு பொத்திகிட்டு படுத்து தூங்குங்க... ஒரு மாலதி ,ஒரு சந்தியா... இப்படி கெட்ட கெட்ட கனவு வரும் ...

இருங்க ..இருங்க ..டெர்ரர் எதோ கேக்குறான் ..

ஓ ...ஜைன்தவி யாருன்னு கேக்குறியா பாஸ் இதோ ....

                                                                  
                                                 (பட்டாபட்டி ப்ளாக்ல சுட்டது ...) 

ஜைன்தவி என் வீட்டு நாய்க்குட்டி ..நான் குடிச்ச எச்சி டீ குடிக்கலைனா அதுக்கு தூக்கம் வராது ,என் பட்டாபட்டி எடுத்து மூடிக்கிட்டு தான் அது படுத்து தூங்கும் ..மாதம் ஒரு பட்டாபட்டி என் மாமனார் அதுக்காகவே வாங்கி தருகிறார் ..வாக்கிங் போகும் போது நாலு தெருபொருக்கி நாய்கள் அத பின் தொடரும் போது அது விடும் சவுண்ட் ...ஹையோ ..ஹியூ ..அத சொல்ல முடியாது ..என் காதில் தேன் வந்து பாயுது .



டிஸ்க்கி :இது என் பதிவுலக ரோல் மாடல் பட்டாபட்டிக்கு சமர்பிக்குறேன் ...தலைவா நீ கோடு தான் போட்ட ..நான் ரோடே போட்டுட்டேன் . ஹி ..ஹி ..


கழுகின் இன்றைய பதிவு


Tuesday, February 8, 2011

தேர்தல்!!! குறை யார் மீது?



                                                     


கழுகிர்க்ககாக இயந்திர வாக்கு பதிவு  பற்றி எழுதி இருந்தேன் .அதில் நான் உட்பட மற்ற பின்னூட்ட மிட்ட நண்பர்கள் எல்லோரும் இந்தியாவை பொறுத்த வரை தற்பொழுது மின்னணு வாக்கு பதிவு தான் தற்போதைக்கு ஒரே வழி என்று கூறினார்கள் இருந்தாலும் எனக்கு இதில் நடக்கும் தில்லுமுல்லு களை குறைக்க ஏதாவது வழி இருக்கா என்று சிந்திதித்த வண்ணம் இருந்தேன் .


ஏனென்றால் தமிழ் நாட்டை பொறுத்தவரையில் இந்த மாதிரி வேலைகள் எல்லாம் செய்வது அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் தான் என்று பரவலான பேச்சு இருக்கிறது .எனக்கும் இந்த சந்தேகம் உண்டு .பூத்துல இருக்கும் அரசு ஊழியர்களின் சம்மதத்துடன் தான் இந்த மாதிரி நடக்கிறது .நானும் கண்கூடாக பார்த்து இருக்கிறன் .

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் ஒரு கட்சி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வாரி இறைத்து உள்ளது .மற்ற மக்களின் வாயிலும் ,வயிற்றிலும் அடித்து விட்டு அரசு ஊழியர்களுக்கு மட்டும் இப்படி செய்திருக்கிறார்கள்  .இன்றைய விலை வாசி உயர்விலும் .அரசு ஊழியர்கள் மட்டும் தாக்கு பிடிக்கிறார்கள் .விலை வாசி உயர்ந்து விட்டது என்று சொன்னால் நம் நிதி அமைச்சர் .சம்பளம் எல்லாம் கூட்டி கொடுத்து இருக்கிறோம் அதனால் மக்களுக்கு வாங்கும் சக்தி இருக்கிறது என்கிறார் 
.
ஆம் அவர் கண்ணுக்கு 12லட்சம் அரசு ஊழியர்கள் மனுசனாக தெரிகிறார்கள் .மற்றவர்கள் எல்லோரும் மாடாக தான் நினைக்கிறார்கள் .எல்லாம் ஒட்டு வங்கி அரசியலுக்கு தான் .

இப்பொழுது நடந்த இடை தேர்தல்கள் எல்லாம் பார்த்தால் தேர்தல் ஆணையம் எவ்வளவு கெடுபிடியாக நடந்தாலும் .கடைசி ஒரு மணி நேரம் போலிங் மிகவும் அதிகமாக இருக்கு .
கேட்டால் அது ஒரு பிளான் என்று கூறுகிறார்கள் அதற்க்கு திருமங்கலம் பார்முலா என்று ஆளும் அரசே தம்பட்டம் அடிக்கிறது .(என்ன கொடுமை சார் இது ..........!)

இது எப்படி சாத்தியம் என்றே புரியவில்லை ஊடகங்களும் இதை பற்றி முதல் எழுதி விட்டு பின்பு அமைதியாக இருந்து விடுகிறார்கள் ......ஏன் இப்படி ?

இதில்  கள்ள ஒட்டு போடுவதர்க்கு உடந்தை இந்த ஆசிரியர்களும் ,அரசு ஊழியர்களும் தான் .கேட்டால் இந்த ஆட்சி வந்தா தான் நமக்கு நல்லது என்கிறார்கள் ...?

இதில் கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் இதிலடங்கும் .எல்லா அரசு ஊழியர்களும் ,ஆசிரியர்களும் இப்படி தான் என்று சொல்ல வில்லை ஆனால் நூற்றில் 90% இப்படி தான் இருக்கிறார்கள் .சில பேர் அங்கே போனால் நானும் குற்றவாளி ஆகிவிடுவேன் என்று எலெக்ஷன் பணி வேண்டாம் என்று கூறிவிடுகிரார்கள்.

கல்வி போதிக்கும் ஆசிரியர்களே இப்படி செய்தால் குழந்தைகளை எப்படி நல வழி படுத்துவார்கள் ..

இது தான் ஜனநாயகமா?........அரசு ஊழிர்கள் தான் ஒரு முதலமைச்சரை தேர்ந்து எடுக்க வேண்டுமென்றால் இவ்வளவு பொருள் செலவு செய்து ஏன் தேர்தல் நடத்த வேண்டும் .பேசாமல் அவர்களை மட்டும் ஒட்டு போட சொன்னாள் போதுமே ????

ரெண்டு நாள் முன்னாடி தான் தேர்தல் ஆணையம் இன்னொரு உருப்படியான விஷயம் ஒன்றை சொன்னது .இனி பூத் ஸ்லிப் கட்சிகாரர்கள் கொடுக்க வேண்டாம் என்றும் அந்த பணியை தேர்தல் ஆணையமே செய்யும் என்று கூறி இருக்கிறது 

.
இதே மாதிரி இந்த கடைசி நேர போலிங்க்கும் எதாவது மாற்று வழி உண்ட என்று தேர்தல் ஆணையம் சிந்தித்து நல்லதொரு முடிவை அறிவிக்கும் என்று ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்து இந்த பதிவை முடிக்கிறேன் .

Wednesday, February 2, 2011

மேம்பாலம்



                                                                                                                                       


காலைல அவசரம் அவசரமாக  என் மகளை பள்ளிக்கு கூட்டி  செல்லும் அவசரத்தில் பைக்ல அவளை ஏற்றினேன் .முன்னாடி இருந்து கொண்டு

என் மகள் :அப்பா இந்த பாலம் ரொம்ப பெருசு இல்லையாப்பா என்றாள்

நான் :ஆமாம் கோவில்பட்டில   ரெண்டு பாலம் இருக்குன்னு சொன்னேன்

என் மகள் :ஆமாம் ரெண்டு பெரிய பாலம் நிறைய குட்டி பாலம் இருக்கு என்றாள்

நான் :இல்லையே குட்டி பாலமே இங்கே கிடையாது என்று சொன்னேன் .....

என் மனைவி :வண்டில இருந்துகிட்டு பேசாம அப்பாவும் ,மகளும் வாங்க என்று சத்தம் போட்டாள்(எலேய் உன் மண்டைல கொட்டினார்கள்ன்னு சொல்லு ன்னு கமெண்ட்ஸ் போடா கூடாது)
நானும் அமைதியா வண்டிய ஓட்டி  என்னோட ஆபீஸ் வந்துட்டோம் .

என் மகள் :அப்பா பாலம்ன  என்ன..........?(தொடர்ந்து விடாம கேள்வி கணைகள் என் மகள் ஆயிற்றே )

நான் :கீழ ட்ரைன்,ஆறு இப்படி போகும் நாம மேல போவோம் அப்படின்னு சொன்னேன்

என் மகள் :ரோடுல மேலே  ஏறி கீழ இறங்கனும் அப்படி தானே என்றாள் .(என்னை மாதிரி என் புள்ள ரொம்ப அறிவாளி டக்குன்னு பாயிண்டுக்கு  வந்துட்டாள் )

நான் :ஆமாம் என்றேன் .......

என் மகள் :நாம ஸ்கூல்க்கு  போகும் போது  மூணு குட்டி  பாலம் வரும் நான் கான்பிக்குறேன் பாருங்க என்றாள் ....

நான் :இல்லை மக்கா குட்டி பாலம் கிடையாது .என்றேன்

என் மனைவி :அவள் வேற எதையோ சொல்லுறா உங்களுக்கு தான் விளங்க மாட்டுது ன்னு சொன்னால்
நான் அதை பற்றி மறந்துவிட்டேன் அவளை பள்ளிக்கு அழைத்து சென்றேன் ...அவள் போகும் வழியில்

என் மகள் :அப்பா இந்த இருக்கு பாரு மூணு பாலம் என்றாள் .

நான் :அவள் கண்பித்ததை பார்த்து தலை சுற்றியது எனக்கு  இது பாலம் இல்லை மக்கான்னு சொன்னேன்

என் மகள் :பைக் ஏறி தானே இறங்குது ....அது பெரிய பாலம் .....இது குட்டி பாலம் ...நான் சொல்வது தான் சரி என்கிறாள்(என் தலைல லாரி யே ஏறி இறங்கினது மாதிரி ஒரு பீலிங் )

அப்படி அவள் என்னதாண்ட காண்பித்தாள்  என்று எல்லோரும் கேக்குறீங்களா .........?
SPEED BREAKER  மக்கா ....காலைலேயே .........ஆரம்பிச்சுட்டா இனி ஸ்கூல் விட்டு வந்து கேப்பா கரெக்ட் விடை சொல்லணும்

தம்பி எஸ் .கே வுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் 



Monday, January 24, 2011

நானும் கவிதையும் ...!


எல்லோரும் பதிவுலகுல கவிதை எழுதுறாங்க ,நீயும் கவிதை எழுத்து மக்கா இல்லையென்றால் நீ பதிவு எழுதுறதே வேஸ்ட் ன்னு டெர்ரர் அண்ட் ரமேஷ் சொல்லிட்டாங்க..........அதனால் நானும் சில கவிதைகள் TYPE செய்து இருக்கேன் .கண்டிப்பா வாந்தி வரும் ....



அவள் வைத்து கொள்ளும் ரோஜா 
அவளை விட அழகு குறைவு தான் 
அதனால் தான் 
அவள் கூந்தலின் பின்னால்
ஒளிந்து கொள்கிறது 

பூ என்பது ஒரு எழுத்து
அதை சூடும் "பெண் " இரண்டெழுத்து
அந்த பெண்ணால் வரும் "காதல்" மூன்று எழுத்து
அந்த காதலால் வரும்" குழந்தை "நான்கு எழுத்து
அந்த குழந்தையால் வரும் "திருமணம்" ஐந்து எழுத்து
இதுவே இன்றைய இளைஞர்களின் தலை எழுத்து

நண்பா ரமேஷ்  நீ ஒரு K E P M  A R I
K - KILLAADI
E -  EN UYIR  NANBAN 
P - PORUMAYIN SIKARAM
M -MANMATHAN 
A - ANBULLAVAN 
R -RAMBO 
I -INIYAVAN
KEPMARI க்கு சிரிப்பா பாரு..........

விடிய விடிய நிலவை காதலித்து  விட்டு ..............
விடிந்தபின் சூரியனை மணக்கும் மணப்பெண் தான் 
"பனித்துளி "

12 வருடத்துக்கு ஒரு முறை பூக்கும் 
குறிஞ்சி  மலர் கூட உன் புனைகை பார்த்தால் 
கொய்யாலா ........பூக்கவே பூக்காது........

இது சௌந்தர்க்கு 
அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு ,
பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வில்லை .........
காரணம் .................
மூச்சு  விடாம இங்கிலீஷ் பேசுரா மக்கா  ............


மரணம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும் 
ஆனால் பிரிவு என்பது ஒவ்வொரு நொடியும் 
உயிர் போகும் 
அதனால் நட்பை இழக்காதீர்கள் 

என்றோ ஒருநாள் அழுததை நினைத்தால் சிரிப்பு வரும் (காதல்)
என்றோ சிரித்ததை நினைத்தால் இன்று அழுகை வரும் (நட்பு )

சிறுத்தை வசனம் :
ஏதோ ஒருநாள் நம்ம ரிசல்ட் வந்தே தீரும் ..........
நான் ரிசல்ட் பார்க்குற அந்த நாள் ................
என் நெஞ்சுல ஒரு சொட்டு பயம் இருக்க கூடாது .............
நான் பெயில் ன்னு தெரியும் போது என் உதட்டுல சிரிப்பு இருக்கணும் .........
என் கை மீசையை முறிக்கிட்டு இருக்கணும் .........

இது நண்பன் டெர்ரர்க்கு 
நீ நடக்கும் போது 
ஒரு 
கம்பீரம் தெரியுது 
நீ தூங்கும் போது 
ஒரு 
அமைதி தெரியுது 
நீ சாப்பிடும் போது 
ஒரு 
அழகு தெரியுது 
நீ ஓடும் போது 
ஒரு வேகம் தெரியுது ...........
இதெல்லாம் ஒகே ஏன் "DISCOVERY CHANNEL " ல மட்டும் தெரியுது 


டிஸ்க்கி :இதில் இருக்கும்  கவிதை நீ எழுதினதான்னு யாரும் கேக்க கூடாது...கேட்ட கம்பெனி பொறுப்பு ஏற்காது ................... 


Thursday, January 20, 2011

லவ் லெட்டர்

இந்த செல்வா தம்பி நேத்து ஒரு பதிவு போட்டான் .காதல் கடிதம் எழுத தெரியாம ரொம்ப கஷ்ட பட்டேன்னு சொன்னான் .அதான் அவனுக்கு எப்படி காதல் கடிதம் எழுதணும்ன்னு எனக்கு தெரிஞ்ச மாதிரி சொல்லி இருக்கேன் .செல்வா வுக்கு இந்த பதிவை சம்ர்பிக்குறேன் (காதல் பண்ணினா சமாதி தான் ஆகணும் மக்கா .......)

செல்வா தம்பி தொடர் பதிவுக்கு என்னை கூப்பிடல இருந்தாலும் நமக்கு தான் மானம் ,ரோசம் எதுவுமே கிடையாதே அதனால நானே இந்த பதிவை போடுகிறேன் .

காதல் கவிதை எழுதுறவங்க ,காதல் பத்தி கட்டுரை எழுதுறவங்க எல்லோரும் வந்து காறி துப்பிட்டு போகலாம் .குறிப்பாக தேவா அண்ணன் ,சௌந்தர் ,கௌசல்யா ...

மேலும் என் நண்பன் ரமேஷ் ,டெர்ரர் போன்ற கல்யாணம் ஆகாத நண்பர்கள் எல்லோருக்கும் இதை பார்த்து காதல் கடிதம் எழுத கற்று கொள்ளவும் .....


அன்புள்ள முன்னாள் காதலிக்கு

பொருள்: தங்களிடம் கொண்டிருந்த காதல் முறிந்ததின் பேரில் அனைத்து பரிமாற்றங்களை தீர்க்க வேண்டி எழுதப்படும் விண்ணப்பக் கடிதம்






தங்களிடம் இருக்கின்ற இந்த புகைப்படத்தை உடனடியாக திருப்பி அனுப்புமாறு கோரிக்கைசெய்கிறேன். இந்த புகைப்படத்தில் மட்டும் தான் நான் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிவேன் என்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.  மேலும் இந்த புகைப்படம் எனக்கு முதன் முதல் காதல் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது.

மேலும் 11/2 வருடம் நான்தங்களுடன் காதலில் ஈடுபட்டிருந்த போது தங்களை கவர்வதற்காக ஏராளமான பணம் செலவழித்திருக்கிறேன். நான்செலவழித்த தொகையின் பட்டியலை இத்துடன் இணைத்துள்ளேன்.  அதைகூடிய விரைவில் திருப்பி அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செலவழிந்த தொகையின் விவரம் பின்வருமாறு:

வ.
எண்
விவரம்
தொகை
(ரூபாய்களில்)
1
மதிய/இரவு உணவு     
895
2
கூல்ட்ரிங்ஸ்
2938
3
ஸ்நாக்ஸ்
5645
4
ஜூஸ்கள்
3845
5
சினிமா
1235
6
இண்டர்நெட் சாட்டிங்
1399
7
மொபைல் கட்டணம்
2546
8
பெட்ரோல்
4355
9
பரிசுப் பொருட்கள்
7850

மொத்தம்
30, 708

மொத்தத் தொகை ரூ.30,708(எழுத்தில்: முப்பது ஆயிரத்து எழுநூற்று எண்பது ரூபாய்).தயவுசெய்து மேற்கண்ட தொகை திருப்பி அளிக்க வேண்டுகிறேன். இதனால் நான் என் புது காதலிக்கு இந்த பணத்தை செலவு செய்ய ஏதுவாய்இருக்கும்.மேலும் உங்களிடம் என் பரிசுகள் ஏதாவது இருந்தால் அதை பாதி விலைக்குஎடுத்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அந்த பரிசுகளுக்கானவிலையை கணக்கிட்டு அதை மேற்கண்ட தொகையிலிருந்து கழித்துக்கொள்ளலாம்.

இத்துடன் நீங்கள் எனக்கு எழுதிய காதல் கடிதங்களை இணைத்துள்ளேன் (எடை 4 கிகி) எனவே நீங்கள் உங்கள் பாய் ஃபிரண்டுக்கு மீண்டும் எழுத வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்கள் ஃபோட்டோவையும் இணைத்துள்ளேன்.எனவே உங்களின் புதிய பாய்ஃபிரண்டிடம் அதை நீங்கள்அளிக்க உதவியாய் இருக்கும்.

                                 தங்களிடமிருந்து தொகையை எதிர்நோக்கும்
                                        தங்கள் உண்மையுள்ள
                                      முன்னாள் காதலன்



டிஸ்க்கி 1 : இந்த பதிவு எழுத உதவிய எஸ் கே அவர்களுக்கு நன்றி .

டிஸ்க்கி 2 :யாருக்கும் எதிர் பதிவு இல்லை ......இது ஆங்கிலத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல் ..


டிஸ்க்கி 3 :அழகான போட்டோ ஒன்னு வேணும் ரமேஷ்ன்னு கேட்டவுடன் தயங்காம அவனோட  போட்டோவ தந்து உதவிய ரமேஷுக்கு  நன்றி 

.



Thursday, January 13, 2011

பல்போ......!பல்பு ....!

                                                                     


"சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி" என்று ஒரு பழமொழி உண்டு .அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ எனக்கு பொருந்தும் .

பதிவுலகத்துல நிறய பதிவு இப்போ வரத்து இல்லை .அதனால நான் என் பொண்ணுக்கு  பாடம் சொல்லி கொடுப்போம்  என்று என் பொண்ணுகிட்ட போனேன் .என்ன படிக்கிறா என்று பார்த்தேன் .

SOCIAL சயின்ஸ் என் பொண்ணு படிச்சிட்டு இருந்தா .அதுல
HINDU WORSHIP IN TEMPLE 
CHRISTIAN WORSHIP IN CHURCH
MUSLIM WORSHIP IN MOSQUE
SIKHS WORSHIP IN GURUDVAR
இப்படி இருந்துச்சு நான் வாசித்து சொல்லி கொடுத்து கொண்டு இருந்தேன் .என் பொண்ணு என்னை பார்த்து

என் மகள்: அப்பா WHORSHIP னா என்னப்பா என்றால் ?.

நான்: உன்னை காலைல ஸ்கூல் போகும் முன்னாடி என்ன சொல்வேன் என்று கேட்டேன்

என் மகள்:  PRAY பண்ண சொல்லுவீங்கன்னு சொன்னாள்..!


நான்:அதை  தமிழ் சொல்லுன்னு சொன்னேன்


என் மகள்:  சாமி கும்பிட சொல்லுவீங்கன்னு சொன்னாள்..!


நான்: உடனே அது தான் நாம ஹிந்து அதுனால கோவில்ல போய் தானே சாமி கும்பிடுவோம் அதான் worship அப்படின்னு சொன்னேன்


என் மகள்: அப்போ prayer  சொல்ல கூடாதான்னு கேட்டா ?


                                           பல்பு !!!!!!


நான்:இல்லை மக்கா கோவில்ங்கறது எல்லோரும் போய் சாமி கும்பிடுறோம் அதனால WORSHIP.இங்க வீட்டுல கும்பிட்ட PRAYER இப்படி சொன்னேன் (சமாளித்தேன் )


என் மகள்:அப்போ ஸ்கூல் ல prayer song சொல்லுறாங்களே அது எப்படின்னு கேட்டா?
                                          
                                                 பல்பு !!!!!

முடியலை ....போ மக்கா இப்படி என்னையே குழப்பிட்டேயேன்னு சொல்லிட்டு எடத்தை காலி   பண்ணினேன்
ஐயோ.....ஐயோ ........(இப்படி தான் நானே வாயை கொடுத்து வாய்ல புண்ணோட போய் சேருகிறேன் ......)
ஆண்டாவா ஏன் என்னை இப்படி சோதிக்கிறன்னு PRAY பண்ணவா?WORSHIP பண்ணவா  ? யாராவது பதில் சொல்லுங்க ............!


எலேய் யாரும் ஓடி போக கூடாது ..........அங்க யாரோ ஓடி போறாங்க .........எலேய் நின்னு பதில் சொல்லிட்டு போ .............

டிஸ்க்கி 1 :சரி WORSHIP ,PRAYER இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு .ஆனால் அதை எப்படி சொல்லணும்ன்னு தெரியலை .உடனே பதிவுலகின் ஆன்மீக சக்கரவர்த்தி ,ஹிப்ப்று மொழி புலவர் தேவா அண்ணன் கிட்ட கேட்டேன் .ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சொன்னார் .ஆனால் எனக்கு எப்படி அவளுக்கு விளக்கி சொல்லன்னு இன்னும் தெரியலை .........!
டிஸ்க்கி 2 : எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ......
( பொங்கல் பொங்குவது போல .....நிறைய பல்பு வாங்க வாழ்த்துக்கள்ன்னு  சொல்ல கூடாது ஓகே  .......)

Tuesday, January 11, 2011

குட்டி பதிவு ....


                                                      


குழந்தைகள் முன்னாடி எதை செய்யணும் ?எதை செய்யகூடாது? எதை பேசணும்? எதை பேச கூடாது? என்று நேற்று தெரிந்து கொண்டேன்..! இவ்வளவு நாளும் பல்பு தான் வாங்கிட்டு இருந்தேன் ...நேத்துல இருந்து என் பொண்ணு என்னை ஊர்ல உள்ளவன் கிட்ட எல்லாம் அடி வாங்க வைச்சிருவா போல இருக்கே..!பல்பு வாங்குரது சுகம் தான்..! ஆனா இது கொஞ்சம் பயங்கரமான விஷயம் .


நான் எப்போதும் வண்டி மெதுவாக தான் ஓட்டுவேன் (மாட்டுவண்டி இல்லை மக்கா ..அது ரமேஷ்தான் ஓட்டுவான் ).நான் ஓட்றது இருசக்கர வாகனம் (டிவிஎஸ் விக்டர் ) .என் எதிரில் யாராவது செல்போன் பேசிகிட்டு வண்டி ஓட்டினா ."சரியான லூசு பய" வண்டிய நிப்பாட்டி பேச வேண்டியது தானே  அப்படின்னு அவனை திட்டுவேன் .அவன் பார்க்கும் போது திட்ட மாட்டேன் (யாரு அடி வாங்குறது பிறகு...! அதனால் கொஞ்சம் தள்ளி போன பின் திட்டுவேன் )

நேற்று வழக்கம் போல் காலையில் என் பொண்ணை பள்ளிக்கு கூட்டி சென்றேன் .எப்பொழுதும் என் முன் பெட்ரோல் டாங்கல தான் இருப்பாள். நான் வண்டியை மெதுவாக ஓட்டி சென்று கொண்டிருக்கும் பொழுது என் எதிரில் ஒருவன் இரு சக்கர வாகனத்தில் செல் போனில் பேசிய படிய வந்தான் .என் மகள் சட்டென்று "சரியான லூசு பய" என்று சத்தாமாக கையை நீட்டிய வாரே சொல்லி விட்டாள் .அவன் அப்படியே முறைத்து பார்கிறான் .நான் கண்டு கொள்ளாதது மாதிரி வந்து விட்டேன் .கொஞ்சம் தூரம் தள்ளி வந்து மக்கா ஏன் அப்படி சொன்னே என்று கேட்டேன் ...............அதற்கு அப்பா நீங்களும் இப்படி தானே  செல்போன்ல  பேசிட்டு போறவங்களை சொல்லுவீர்கள் என்றாள் .

அதான் சொல்லுறேன் மக்கா.இந்த அப்பாமார்கள் படும் பாடு இருக்கே ..முடியலை ......அருண் (சீனியர்) அதான் கமெண்ட்ஸ்லே போட்டேன் கூடிய விரைவில் அடி வாங்கும் நிலமைக்கு வந்திருவன்னு ...

என் மனைவியோ .என்னை சத்தம் போடுகிறாள். இது தான் குழந்தைகள் கிட்ட நல்ல வார்த்தைகள் உபயோக படுத்தனும்னு ..............கூடிய சீக்கிரம் அடி வாங்கிருவேன் மக்காஸ் (பாரு பய புள்ளைகளுக்கு என்ன சிரிப்புன்னு )