Tuesday, December 14, 2010

பல்போ பல்பு

                                                           

சண்டே என் பொண்ணு வீட்டுல இருந்தாள் (பெரிய கண்டுபிடிப்பு சண்டேன்னா. லீவ் தான் குழந்தைங்க வீட்டுல தான் இருப்பாங்க ).என் வீட்டுக்கு கெஸ்ட் வந்திருந்தாங்க .எல்லோரும் மத்தியானம் சாப்ட்டுட்டு போய்ட்டாங்க .என் பொண்ணு வீட்டுல இருந்த செம்பருத்தி செடியில் இருந்து பூ எடுத்து வைச்சு சில படங்கள் மேல சொருகி வைச்சிருந்தா .திடிர்னு ரெண்டு பேப்பரை சின்ன உருண்டையா உருட்டி தன்னோட தலைய மூணு தடவை சுத்தினாள் .பின்பு மூன்று முறை அதன் மீது துப்பினாள் பின்னர் அதை சாமிக்கு தீபாரதானை காண்பிப்பது போன்று காட்டினாள்


என் பொண்ணை பார்த்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் ..........

நான் : என்ன மக்கா செய்கிற ...........

என் மகள்:நீங்களும் அம்மாவும் சாமி கும்பிடும் பொழுது அந்த டப்பால இருந்து சூடம் எடுத்து என்ன செய்வீங்களோ அது தான் செய்யுறேன் ....

நான் :அப்பா சாமி கும்பிடும் போது சூடம் எடுத்து தலைய எப்ப மக்கா சுத்தினேன் அதுவும் நீ துப்புர. சாமிக்கு துப்பினதை யாராவது கொளுத்துவார்களா ?என்றேன்...........

என் மகள:(என் வீட்டமாவை பார்த்து)அம்மா நைட் சூடம் எடுத்து என் தலைய சுத்தி ....துப்ப சொல்லி தானே கொளுத்துவாங்க .......

நான் :  பல்பு!!!!!!!!!

இருந்தாலும் நான் புத்திசாலி ஆயீற்றே (டாய் எவண்டா அங்க சிரிக்கிறது)........திரும்பவும் அது அதுக்கு இல்ல மக்கா அது உனக்கு திருஷ்ட்டி விழுந்திர கூடாதுன்னு அம்மா அப்படி செய்வாங்க .....சாமிக்கு அப்படி செய்ய   கூடாது என்ன மக்கா .............

என் மகள்:சரிப்பா ..........திருஷ்ட்டின்னா என்னப்பா?

நான் :    பல்பு !!!!!!!!!!!

என் மனைவி:அது வந்து இன்னைக்கு வீட்டுக்கு கெஸ்ட் வந்தாங்க இல்ல....உன்னை பார்த்து முடி நல்ல இருக்கு ........நீ நல்ல பேசுற இப்படி கண்ணு போட்டுருவாங்க .....அதை தான் திருஷ்ட்டின்னு சொல்லுவாங்க

என் மகள்:கண்ணு எப்படி அம்மா போடா முடியும் .....அது தான் கீழ விழாதே.........

நானும் என் மனைவியும்:    பல்பு !!!!!!!!!!!

ஒரு நாள் வீட்டுல இருந்ததுக்கு எத்தனை பல்பு வாங்குறது.............. முடியாது சாமீ ...............

Friday, December 3, 2010

சமகால கல்வி

சமகால கல்வி முறை பற்றி ஏற்கனவே எஸ்.கே அவர்கள் எழுதி விட்டார்கள்.இருந்தாலும் இதை யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று கூறியதால் என் மனதில் பட்டதை இங்கு கூறுகிறேன் .

                          
                                  
நம் மாநிலத்தில் கல்வி மேலோங்கி இருக்கிறது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தேர்ச்சி விகிதம் அதிகமாக தான் உள்ளது .இதை மறுப்பதற்கில்லை .ஆனால் கல்வி நிறுவனங்கள் கல்வியை மட்டும் தான் போதிக்கிறது. ஒழுக்கம் பண்பாடு ,கலாச்சாரம் என்பது எல்லாம் அடியோடு கிடையாது.

தமிழ் நாட்டை பொறுத்தவரை கல்வி என்பது சிறந்த வியாபாரமாகி விட்டது. அரசே பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயம் செய்தும் அதை செயல் படுத்த முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலைக்கு காரணம் வேறொன்றுமில்லை, அரசியல்வாதிகளே பெரும்பாலான கல்வி நிறுவனங்களை நடத்துவதால்  தான். அவர்களே கட்டணத்தை நிர்ணயித்து கொள்கிறார்கள் அதில் கோடி கோடியாய் கொள்ளையும் அடிக்கிறார்கள் .நூற்றில் 80% MLAக்கு அல்லது MP க்கு எதாவது ஒரு கல்லூரி அல்லது ,பள்ளி கண்டிப்பாக இருக்கும் .

பள்ளிக்கூடங்களை பார்த்தோமென்றால் அதிலும் MATRICULATION ,CBSE ,ANGLO INDIAN  என பல  வகை. இவை அனைத்தும் பணம் மற்றும்  அந்தஸ்த்தின் அடிப்படையில் தான் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் சமச்சீர் கல்வி என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. பிள்ளைகள் இப்பொழுது கூடுதல் பாட சுமை தான் பெறுகிறார்கள் .முதுகுகளில் அதிகமாக சுமக்கிறார்கள். வசதி படைத்தவர் ,வசதி இல்லாதவர் என்று அனைவருமே ஆங்கில வழி கல்விக்கு வந்து விட்டதனால் தான் அரசு சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது. இல்லையென்றால் இன்னும் சில காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களே இருக்க மாட்டார்கள் இது மறுக்க முடியாத உண்மை!!!!!!!

பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளிகளை வெறுத்தொதுக்க காரணம் நமது அரசாங்கமும், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் தான். அவர்கள் சரியான நபரை ஆசிரியராக பணி நியமனம் செய்யவில்லை. ஆசிரியர்களாவது ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை ,பெரு நகரங்கள் எப்படி என்று எனக்கு எனக்கு தெரியவில்லை. ஆனால் கிராமங்களிலும் ,சிறு நகரங்களிலும் அரசு ஆசிரியர்கள் பெரும்பாலானோர் தன் சம்பளத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள். இது நான் கண் கூடாக பார்த்த உண்மை .ஒழுங்காக பாடம் எடுப்பதும் இல்லை .சமீபத்தில் கூட ஒரு செய்தி ஒரு அரசு ஆசிரியர் அவராகவே ஒரு பெண் ஆசிரியயை பணியமர்த்தி அவளுக்கு மாதம் 2000 ரூபாய் சம்பளம் கொடுத்து பாடம் எடுத்து இருக்கிறார். இது மட்டுமல்லாமல் பள்ளியில் கல்வி பயில வரும் மாணவ மாணவிகளை வீட்டிற்கு வேலைக்கு அழைத்து செல்வது, முறைகேடாக நடந்து கொள்வது பல கேவலமான செயல்கள் நடந்து வருகின்றன.

மேலும் பள்ளியில் ஒழுங்காக பாடத்தை நடத்தாமல், அதே பாடத்தை மாலை 5 மணிக்கு மேல் தங்கள் வீட்டில் டியூஷன் என்று சொல்லி கொடுத்து அதற்கு வேறு தனியாக வசூலித்து விடுகிறார்கள். .அப்படி பிள்ளைகள் போக வில்லை என்றால் அவர்கள் பாடத்தில் பெயில் ஆக்கி விடுவார்கள்.இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. 8வது வகுப்பு வரை பெயில் ஆக்க கூடாது என்று சட்டம் வந்து விட்டது . 12வகுப்பு மாணவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும் .காலையில் 6 மணிக்கு டியூஷன் போக ஆரம்பிக்கிறான் அப்படியே பள்ளி செல்கிறான் பின்பு பள்ளி விட்டு வந்து அடுத்த டியூஷன் என அவனது பொழுது ஓய்வில்லாமல் கழிகிறது. இதற்க்கு பேசாம கேரளாவுக்கு அடிமடாக போய் இருக்கலாம் .இவ்வளவுக்கும் அரசு ஆசிரியர் யாரும் தனியாக டியூஷன் எடுக்க கூடாதுன்னு ஒரு சட்டம் வேறு இருக்கு .

காமராஜர் அந்த காலத்தில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரிய கூடாது என்பதற்காக பள்ளிகளில் ஒரே மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும் என்று கூறினார் .இப்பொழுது அதுவே வினையாக போய் விட்டது. திங்கள் கிழமை ஒரு கலர் துணி ,செவ்வாய் கிழமை ஒரு கலர் துணி .இப்படி தினம் ஒரு ஆடை போட வேண்டும் அதுவும் பள்ளிகளில் தான் வாங்க வேண்டும் என்று சட்டம் வேறு. அரசு பள்ளிகளில் இன்னும் இந்த முறை வராதது மகிழ்ச்சி.

18 வயது நிரம்பியவர்களுக்கு தான் இரு சக்கர ஓட்டுனர் உரிமம் கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியர் இரு சக்கர வாகனங்களில் தான் பள்ளிகளுக்கு வருகின்றனர். இதனை பள்ளி நிர்வாகமோ, ஆசிரியர்களோ கண்டு கொள்வதில்லை. பெரும்பாலான மாணவர்கள் சாலை விதிமுறைகளை மதிப்பதில்லை. பிறகு இவர்கள் வளர்ந்த பின் எப்படி நம் அரசு இயற்றும் சட்டத்தை மதிப்பார்கள் .மிதிக்கத்தான் செய்வார்கள் .இதில் வேறு  அனைத்து  +1மாணவர்களுக்கும் அரசு இலவச மிதிவண்டி வேற கொடுக்கிறது. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை ஆசிரியர்கள் கற்று கொடுக்க வேண்டும்.

 +2படித்த மாணவனிடம் வங்கியில் விண்ணப்பபாரம் பூர்த்தி செய்ய சொன்னால் முழிக்கிறான். கல்வி என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு ஒரு மனப்பாட விசயமாகவே இருக்கிறது. ஆசிரியர் சொல்வதை அப்படியே தேர்வில் ஒப்பித்து விடுகிறான். அதே விசயங்கள் வாழ்க்கையின் தேவைகளில் வரும் பொது அவனால் சரிவர செயல் பட முடிவதில்லை.

பெரும்பாலான மாணவர்கள் பாடங்களை தேர்வு செய்து படிப்பதில்லை. எதோ படிக்க வேண்டுமென்று படிக்கிறார்கள். பின்னர் தகுந்த வேலை கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். இதற்க்கான தீர்வுகள் நாம் பள்ளிக்காலத்திலேயே எடுக்க வேண்டியது கட்டாயம்.. சரியான திட்டமிடுதலே இதற்கு சிறந்த வழி..வாழ்க்கைக்கு உகந்த பாட திட்டங்கள் வர வேண்டும் குழந்தைகள் ஆனாலும் சரி இளைஞர்கள் ஆனாலும் சரி நல்ல விளையாடி படிக்க வேண்டும் என்பது என் ஆசை .எப்பொழுதுமே பாட புத்தகங்களை கட்டி அழுவதற்கு பதில் வேறு துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் .கல்லூரி படிக்கும் பொழுதே "கை தொழில் ஒன்றை கற்று கொள் கவலை உனக்கில்லை ஒத்து கொள் "என்பதற்கு ஏற்ப ஏதாவது ஒரு தொழில் சார்ந்த படிப்பை கட்டாயமாக்க வேண்டும் .

குறிப்பு :இதில் எல்லா ஆசிரியர்களையும் குறை கூற வில்லை .நல்ல ஆசிரியர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.


இந்த சமகால கல்வி முறை பற்றி மேலும் நம் பதிவர்கள் எழுத வேண்டும் .யார் வேண்டும் என்றாலும் தொடரலாம் .

Friday, November 26, 2010

சிரி............ சிரி...............

நீங்க லவ் பண்ண இந்த msg அ படி .

1 .நீ மெலடி சாங் கேட்க்க ஆசை படுவ
2 .உன் லவர் நேம் எங்கயாவது பார்த்தா ஸ்டாப் ஆகிடுவ ...........
3 .உன் நண்பர்கள் உன்னை டீஸ் பண்ணினா கோப பட மாட்டாய்........
4 .மெதுவாக நடப்பாய்.............
6 .மழை துளி விழுவதை ரசிப்பாய்............

7 .இயற்கையை ரசிப்பாய் .............
8 .இந்த msg ல ஐந்தாவது பாயிண்ட் மிஸ் ஆனத கவனிச்சிருக்க மாட்ட..........
9 இப்போ உன் முகத்தில் ஒரு புன் சிரிப்பு தெரியும் ............
10 .கண்டிப்பாக நீ யாரையோ லவ் பண்ணுறீங்க ...........

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  
Question paper அ பார்த்து நம்ம அழுதா அது அவமானம் .............
Answer paper அ பார்த்து professor அழுதா அது சரித்திரம் ............
= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

MOTHER பிரச்சனையா ?
M .குமரன் S /O மஹாலக்ஷ்மி பாரு.
FATHER பிரச்சனையா ?
சந்தோஷ் சுப்ரமணியம் பாரு
SISTER பிரச்சனையா ?
பாச மலர் பாரு .
BROTHER பிரச்சனையா ?
வானத்தை போல பாரு .
லவர் அண்ணன் பிரச்சனையா ?
ரன் பாரு .
லவர் ஏ பிரச்சனையா ?
அவ தங்கச்சிய பாரு ............

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  
 STUDYING ,READING என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது..............
SLEEPING ,PLAYING என்று சொன்னால் உதடுகள் ஒட்டும் ......................
by
EXAM HALL இல் படுத்து யோசிப்போர் சங்கம்
= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

எறும்புக்கும் கொசுவுக்கும் கல்யாணம்
முதல் இரவில் கொசு வெளியே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருந்தது .....
அப்போ கொசுவோட freind வந்து
ஏன்டா மச்சி வெளிய வந்து இருக்குற ன்னு கேட்டுச்சு
அதுக்கு மாப்பள கொசு சொல்லிச்சு "சிறிக்கி மவ உள்ள GOOD NIGHT போட்டுட்டு
தூங்குறாட மச்சி "

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  
அப்பா :ஏன்டா சொல் பேச்சு கேட்க்க மட்டுற ...........
மகன் :நீங்க சொல்லுறதெல்லாம் கேட்க்க முடியாது
 இப்ப நானும் சம்பாதிக்கிறேன் ........
அப்பா :உனக்கு நாலு மாடு வாங்கி கொடுத்தது தப்பா போய்டுச்சி ...........
உன்னை எல்லாம் BSC ,BE ,MSC ,MBA ,MCA ன்னு படிக்க வைச்சு தெரு தெருவா
அலைய விட்டு இருக்கணும்
= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

பெண்களின் கண் அசைவுக்கு 1000 அர்த்தம் இருக்கும் ............
ஆனால் உண்மையான நண்பனின் கண் அசைவுக்கு ஒரே அர்த்தம் "மச்சி சூப்பர்
பிகுரு வருது டக்குன்னு திரும்பிறதே " HOW IS IT
= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

டெர்ரர் கவிதை :
சூரியனை சுற்றினால் வெந்து போவீர்கள் ...........
சுடிதாரை சுற்றினால் நொந்து  போவீர்கள் ..........

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

டீச்சர் : நீ பெரியவன் ஆகி என்ன பண்ண போற ?
மாணவன் :கல்யாணம்
டீச்சர் : அது இல்ல நீ என்னவா ஆக விரும்புற ?
மாணவன்: கணவன்
டீச்சர் : நோ . அது இல்லை வாழ்கையில் உனக்கு என்ன கிடைக்கும்னு எதிர் பார்க்குற
மாணவன்:மனைவி
டீச்சர் : நோ .உங்க பெற்றோர்களுக்கு என்ன பண்ண போற ?
மாணவன்:மருமகள் தேடுவேன்
டீச்சர் :ஸ்டுபிட் ,உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்க்கிறாங்க ?
மாணவன்: பேர குழந்தைகள்
டீச்சர் :ஐயோ .உன் வாழ்க்கை லட்சியம் தான் என்ன ?
மாணவன் : நாம் இருவர் .நமக்கு இருவர்

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

ஒரு பையன் பரீட்சை அறையில் question paper வாங்கி விட்டு பாடின பாட்டு

அந்த நேரம் அந்தி நேரம் ,கண் பார்த்து காதலாகி , போன நேரம் ஏதோ ஆச்சி ,
ஓஹ question பேப்பர் கையில் வந்தச்சு ,அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயே போச்சு ,
ஹோசன்ன ......
என் பெஞ்சை தாண்டி போனாளே ,ஹோசன்னே answer ஒன்றும் சொல்லாமலே ,
நான் மெண்டல் ஆகிறேன் ,சுக்கு நூராகிறேன் ,
த இட்
அவள் போன பின்பு ,எந்தன் பிட்டை தேடி போகிறேன்

= = = = = = = = = = = = = = = = = = = == = = == = = = = =

குறிப்பு :இந்த  SMS ஜோக்ஸ் எனக்கு வந்தது கிடையாது .............................

Sunday, November 21, 2010

காக்கா





இன்னைக்கு காலைல ஒரு 6மணி இருக்கும் எந்திருச்சி பல் துலக்கிட்டு இருந்தேன். என்னோட குட்டி பொண்ணும் பக்கத்துல இருந்தா .வீட்டுக்காரம்மா துணி துவச்சி கிட்டு இருந்தாங்க. நேத்து இரவு முழுவதும் நல்ல மழை. கரண்ட் கம்பில நிறைய காக்கா இருந்துச்சு. அந்த காக்கா கூட்டத்தில ஒரு குஞ்சு காக்கவும் இருந்துச்சு. நான் எப்பவுமே புத்திசாலின்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க (டேய் யாருடா அங்க சிரிக்கிறது ......பிச்சு புடுவேன் பிச்சு ).


நான் ஒரு ஆர்வகோளறு உள்ளவன்னு உங்க எல்லோருக்கும் தெரியும். அந்த ஆர்வக்கோளாறு காரணமா என் பொண்ண தூக்கி வச்சுக்கிட்டு. மக்கா அங்க பாரு ஒரு குஞ்சு காக்கா இருக்குன்னு என் பொண்ணுக்கு காண்பித்து கொடுத்தேன்.அவளும் இவ்வளவு நாளா பெரிய காக்கா தான் பார்த்திருக்கா ஆதனால குஞ்சு காக்காவ சந்தோசமா பார்த்திட்டிருந்தவ .. திடீர்ன்னு

என் மகள் : அப்பா அந்த பெரிய காக்கா என்ன செய்யுது ?

நான் :அது தன் குட்டி புள்ளைக்கு சோறு ஊட்டுதுடா செல்லம்..
(காக்கா தன்  அலகில் இருந்த உணவை குஞ்சு காக்காக்கு கொடுத்துட்டு இருந்துச்சு )

என் மகள் :அப்பா இது அப்போ அம்மா காக்கா தானே ?

நான் :ஏன் அப்படி கேக்குற மக்கா

என் மகள் :அம்மா தானே எனக்கு சோறு ஊட்டுவாங்க........ அதனால அதுவும் அம்மா காக்காவா தானே இருக்கும்..

நான் : ஆமாடா செல்லம்.


என் மகள் : ஆமாப்பா இதுல எது அப்பா காக்கா?..........


நான் :????????????பல்பு !!!!!!(யாராவது சிரிச்சிங்கன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் )


நான் என் வீட்டம்மாவ   பார்த்தேன்... என் வீட்டம்மாவ கோவமா என்னை பார்த்து.. ஏங்க உங்களுக்கு காலையிலையே இதெல்லாம் தேவையா... போங்க சீக்கிரம் போய் பல் தேச்சிட்டு எடத்த காலி பண்ணுங்க. அப்படீன்னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு உள்ள போயிட்டா........

எனக்கு இன்னும் சந்தேகம் தீரல.......காக்கால எது ஆண் காக்கா ....எது பெண் காக்கான்னு எப்படி கண்டு பிடிக்கிறது ...

யாருல அங்கே ஓடி போறது...ஒழுங்கா பதில் சொல்லிட்டு போங்க..

Tuesday, November 16, 2010

தி பாஸ்

சினிமா உலகத்தை பொறுத்த வரையில் இந்த தலைப்புக்கு உரியவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தான்.
இந்த பதிவை எழுத எனக்கு வாய்ப்பளித்த சிரிப்புபோலீஸ் க்கு முதல நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் அன்பு மிரட்டல் விட்ட நண்பர் அருண்பிரசாத் ,அடிகடி ஞாபக படுத்திய சௌந்தர் எல்லோருக்கும் நன்றி ......



நான் முதல் முதலில் ரஜினி படம்ன்னு பார்த்தது மாவீரன் தான் 5வகுப்பு படிக்கும் பொழுது பார்த்தது .இந்த படம் பார்த்தாலும்.வேலைக்காரன் படம் தான் நான் ரஜினி ரசிகனாக ஆகுவதற்கு முதல் காரணமாக இருந்தது .......பிடித்த படம் என்றால் maximum எல்லாமே பிடித்த படம் தான் ........

கொடிபறக்குது இந்த படம் பாரதிராஜா எடுத்தது படம் ரொம்ப நாள் ஓட வில்லை என்றாலும் எனக்கு பிடிக்கும் .இந்த படத்தில் இருந்து தான்  மணிவண்ணன் நடிகராக ரீ என்ட்ரி கொடுத்த படம் .மணிவண்ணனுக்கு பாரதிராஜா குரல் கொடுத்து இருப்பார் நன்றாக இருக்கும் .குறிப்பாக இந்த தாதா காரெக்டர் ரொம்ப நல்லா இருக்கும் .

எஜமான் இந்த படம் நான் ரஜினியை முதலில் ஒரு படம் முழுவதும் வேஷ்டி சட்டையோடு பார்த்தது.பாட்டு அவ்வளவும் சூப்பர் டுப்பர் ஹிட் .இதுல தலைவர் தோளில் துண்டை ஒரு சுற்று சுற்றி போடும் அழகே தனி அழகு தான்.

தர்மயுத்தம் இந்த படத்தில் ரஜினிக்கு பௌர்ணமி அன்னைக்கு பைத்தியம் பிடிக்கும் .ரெண்டு பாட்டு சூப்பர் ஹிட்."ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு ","ஆகாய கங்கை " இதில் ஆகாய கங்கை பாட்டுக்கு முழுவதும் ஸ்ரீதேவி உட்கார்ந்தே இருபாங்க காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் உட்கார வைத்தே ஷூட்டிங் முடித்தாக கேள்வி பட்டு இருக்கிறேன்.

பாபா இந்த படம் தோல்வி படம்னு எல்லோரும் சொல்லுவாங்க .ஆனா  எனக்கு இந்த படம் புடிக்கும் .மேக் அப் தான் சுத்தமாக நல்ல இருக்காது இந்த படத்தில் பாட்டு  அனைத்தும் ஹிட் .பாபா கவுன்ட்ஸ் ஸ்டார்ட் ன்னு சொல்லுற அழகே தனி தான்.

தர்மதுரை இந்த படத்தில் முதல் பாதி முழுவதும் காமெடியாக இருக்கும் அடுத்த பாதி ரொம்ப கதை அம்சம் உள்ளதாக இருக்கும் .இரு தம்பிகளுக்காக சொத்து ,குழந்தை எல்லாம் இழந்து விடுவார்.அதுலேயும் தம்பிகளை பார்பதற்காக சென்னை வரும் பொழுது அவர் டிரஸ் எல்லாம் போட்டு செம காமெடி யாக இருக்கும்.இந்த படத்தில் ரெண்டு சூப்பர் டுப்பர் பாட்டு"அண்ணன் என்ன தம்பி என்ன ",மாசி மாசம் ஆளான பொண்ணு " இந்த ரெண்டு பாட்டு ரொம்ப புடிக்கும் எனக்கு.

ராஜா சின்ன ரோஜா இந்த படத்துல தான் தலைவருக்கு ஒரு பாட்டு "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட "இந்த பாட்டு செம ஹிட் அதுக்கப்புறம் கார்டூன்ஸ் கூட நடனம் ஆடும் ஒரு பாட்டு .தலைவருக்கு அதற்க்கப்புறம் ஏகப்பட்ட குழந்தைகள் ரசிகர்களாக மாறிவிட்டனர் .....

வேலைகாரன் நான் ரஜினி ரசிகனாக ஆனதற்கு முக்கிய கரணம் இந்த படம் .நல்ல கமெடி குறிப்பாக நாசர் உனக்கு இங்கிலீஷ் தெரியுமா என்று கேட்டவுடன் தலைவர் சொல்லும் ஸ்டைல் தனி.பாட்டு அனைத்தும் ஹிட்.

சிவாஜி இந்த படத்தை பற்றி சொல்லவே வேண்டாம். பாட்டு அனைத்தும் ஹிட் ,பஞ்ச் வசனம் ஹிட், ரஜினி ரொம்ப இளமையா காண்பிச்சு இருபங்க .இது என் பொண்ணு கூட ரொம்ப ரசிச்சு பார்த்த படம் அப்போ அவள் LKG படிச்சா அப்போ தலைவரோட மகிமைய பார்த்துகோங்க ?படம் செம ஹிட் .பெரியோர் முதல் சிறியவர் வரை எல்லோரையும் ரீச் ஆனா படம் .

பாட்ஷா எல்லோருக்கும் முதல் இடம் இந்த படம் தான் .ஏன் தலைவருக்கே  இந்த படம் தான்னு அவரே சொல்லி இருக்கார். இதில் முதல்  சண்டை கட்சி ரொம்ப நல்லா  இருக்கு. பாட்டு ஹிட் .அதற்க்கப்புறம் ரஜினிக்கு ரகுவரன் தான் வில்லன் ரோல்க்கு ரொம்ப சரியான ஆள் இவர்தான்.

அண்ணாமலை என்னோட டாப் 10 இது தான் முதல் இடம் இதை தான் அதிகமாக பார்த்த படமும் கூட. இந்த படத்தில் இருந்து ரஜினி அரசியல் பஞ்ச் வசனம் வச்சு பேச ஆரம்பித்தார் .என்னோட செல் ரிங் டோன் கூட "வெற்றி நிச்சயம் இது வேத தத்துவம் "இந்த சாங் தான் ரொம்ப நாள் இது தான் இருந்தது .மலைடா அண்ணாமலை அப்படி சொல்ல வசனம் .ரொம்ப புடிக்கும் .அதற்கப்புறம்
"ஆமபளைங்க போடுறது மன கணக்கு
பொண்ணுங்க போடறது திருமண கணக்கு " இந்த வசனம் மனப்பாடம் .ரொம்ப புடிச்ச படம் இதை ஆடிக்க எந்த படமும் இல்லை என்னோட வரிசையில்

இது மட்டும் தான் என்னோட பிடித்த படம் இல்லை .தில்லுமுல்லு ,தம்பிக்கு எந்த ஊரு ,முள்ளும் மலரும் ,நெற்றிகண் ,மாப்பிளை ,போன்ற படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சரி அடுத்த தொடர் பதிவை யாரை எழுத சொல்லனம்னு யோசிச்ச பொழுது இருவரை தேர்ந்து எடுத்திருக்கிறேன்.

பிரபாகர்  .பிரபாகரனின் தத்துபித்துவங்கள்மற்றும்
அருண் பிரசாத்: சுற்றுலா விரும்பி
 

Wednesday, November 10, 2010

பதில் சொல்லுங்கப்பா ?

என்ன நடக்கிறது தமிழ் நாட்டில் ஒண்ணுமே புரியவில்லை .நேத்து மங்குனி பதிவில் என்கௌண்டர் பற்றி எழுதி இருக்கிறார் அதில் தமிழ் மலர் என்ற பதிவர் நானும் ஒரு பத்திரிகையாளர் என்று கூறி இருக்கிறார் .சரி அப்போ உண்மை என்பது பத்திரிகையில் வரவே வராதா ?........




போன வாரம் என்னடான்னா ஒரே கீர்த்திவாசன் கடத்த பட்ட செய்தி .......சரி கீர்த்திவாசன் அப்பா பேரு ரமேஷ் அவரோட போட்டோவ  ஒரு நாதாரிகளும் போடலை.கேட்டா privacyன்னு சொல்லுவாங்க ......ஆனா இந்த போலீஸ் 50 ரூபாய் திருடுறவன ஜட்டியோட  போஸ் கொடுத்து பத்திரிகையில் போடுவாங்க.ஒரே நாள் இரவோடு இரவாக ஒரு கோடி புரட்டின புண்ணியவான் அ  கண் குளிர பார்க்கலாம்னு நினைச்சா அவர் முஞ்சிய கடைசி வரைக்கும்  பார்க்கவே முடியல? இது தான் பத்திரிகைகாரங்க.ஒரு வேளை அவர் கோடிஸ்வரர் அதனால் தன் முகத்தை வெளி உலகத்திற்கு காண்பிக்க மாட்டார் போல இருக்கு .இதற்கு உடந்தை இந்த பத்திரிகை  இதுதான் பத்திரிகை தர்மமா? 

சரி இது எல்லாம் இருக்கட்டும் நான் இப்பொழுது இன்னொரு கேள்வி கேட்கிறேன் இதை அரசியல் தெரிந்த நபர்கள் யாராவது வந்து பதில் கூறுங்கள் .தமிழ் நாட்டில் கடந்த ஒரு மாதத்தில்  சிமெண்ட் விலை 160 ரூபாயில் இருந்து 300 ரூபாய்க்கு ஏறிவிட்டது .ஏன் இந்த திடீர் ஏற்றம்?.அரசும் மௌனம் சாதிக்கிறதே தவிர இதற்கு விடை சொல்ல வில்லை .

மத்திய மாநில அரசுகள் புதிய வரி எதுவும் விதிக்கவும் இல்லை.மூல பொருட்களின் விலையும்  ஏற வில்லை .ஒருமூடை சிமெண்ட்ன் அடக்கவிலை 140 முதல் 160 ரூபாய் தான் பின்பு ஏன் இந்த விலை ஏற்றம் ?

பத்திரிகை துறை ஏன் மௌனம் சாதிக்கிறது ?அவர்களுக்கு தெரியுமே ?.ஏன் அவர்கள் இதை பற்றி விரிவாக எழுத வில்லை ?..

எதற்கெடுத்தாலும் பக்கத்து மாநிலத்தை சுட்டி காட்டும் நமது முதல்வர் இந்த விசயத்தில் மௌனமாக இருக்கிறார் .ஏனென்றால் பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து கிட்டத்தட்ட 60 முதல் 75 ரூபாய் அதிகமாக நம் மாநிலத்தில் இருக்கிறது..

ஏன் இந்த பகல் கொள்ளை ? கட்டுமான வேலை ஸ்தம்பித்து நிற்கிறது ........நிறைய தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள் .இதற்கும் பதில் இல்லை .......

ஒருவேளை விவசாய நிலங்கள் எல்லாம் வீடுகளாக மாறுகிறது அதனால் எல்லா பொருட்களின் விலையை ஏற்றி விட்டால் நடுத்தர மக்களால் வீடு கட்ட முடியாது ........விவசாய நிலமும் விலை போகாது என்ற எண்ணமோ? தெரியவில்லை?சிமெண்ட் மட்டும் இல்ல செங்கல் 3.50 ரூபாயில்  இருந்து 6 ரூபாய் ஆகி இருக்கிறது (ஒரு செங்கல்).கம்பி 33000திலிருது 40000ஆகிவிட்டது (ஒரு டன்னுக்கு ).

ஏன் இந்த விலை ஏற்றம் புரியவே இல்லை .?

யாராவது வந்து சொல்லுங்க ..நானும் சீக்கிரம் வீடு கட்டனும் (ரமேஷும் பாவம் இப்ப தான் நிலத்தை வாங்கினான் அதுக்குள்ள இவங்களுக்கு பொருக்க முடியலை.இனி எப்ப வீட்ட கட்டி ?எப்ப கல்யாணத்தை பண்ண போறனோ ? )............

பன்னி வாங்க நீங்க தான் சரியா விளக்கம்(வில்லங்கம் வரகூடாது மக்கா) கொடுப்பீர்கள் ......

Friday, October 29, 2010

பதிவர்களும் பட்டாசுகளும்

நம்ம பதிவுலக நண்பர்களையும்,பட்டாசுகளையும் இணைத்து  ஒரு பதிவு எழுத திடிர்னு  ஐடியா கிடைத்தது.  சரின்னு எழுத ஆரம்பிச்ச பட்டாசு பேரு வரமாட்டுது உடனே வண்டியை எடுத்துட்டு பட்டாசு கடைக்கு போனேன் போய் எல்லா பெயர்களையும் வாங்கி .எந்த எந்த பட்டாசுக்கள் நம்ம பதிவர்களுக்கு பொருந்தும் என்று கீழ போட்டு இருக்கிறேன் .

                                                                                                                                                 

                                             



புஸ்வானம் முதலில் லைட்அ தான்  எறியும் அப்புறம்  நல்ல மெல்ல மெல்ல உயர போகும்.
நம்ம தேவா அண்ணாமாதிரி முதல்ல படிக்கும் பொழுது ஸ்லோவா புரியுற மாதிரி  இருக்கும் உள்ளே போக போக அதனின் அர்த்தம் தெரிந்ததும் நல்ல இருக்கும் .

பாம்பு மாத்திரை இது புகையும் ஒரு மாதிரி எறிந்த வாடை அடிக்கும் .ஆனால் இதனால் பயம் இல்லை .
நம்ம கோமாளி செல்வாமொக்கை என்கிற பெயரில் ஒரே புகைய கிளப்பி விட்ருவான் .யாருக்கும் பாதிப்பில்லாமல்.

டபுள் ஷாட் இது ரெண்டு தடவை சத்தம்  கொடுக்கும் ஒன்று கீழ இன்னொன்று மேல போய்  வெடிக்கும்
நம்ம அருண் சினிமா புதிர் போட்டு சாகடிக்கிறது.(கீழே காது கிழிய வெடிக்கிறது )மற்றொன்று தன அனுபவங்களை அழகாக எழுதி எல்லோரையும் ரசிக்க வைப்பது .(மேலே போய் வெடிக்கும் பொழுது காதுக்கு பாதிப்பு  இருக்காது ).

தரை  சக்கரம் இது எப்போதும் ஒரே மாதிரி தான் தரையில் சுற்றும் .இருந்தாலும் திடீர்னு வெடிச்சிரும்.
நம்ம பன்னி குட்டி ராமசாமி ஒரே மாதிரி எப்ப பார்த்தாலும் விஜய பத்தி அதிகமாக பதிவு எழுதுறது .ஆனாலும் திடீர்னு ராமர்பிள்ளை பற்றி எழுதி அசத்துவார் .

கம்பி மத்தாப்பு இதை பெண்களும் சிறுவர்களும் விரும்பி கொளுத்துவார்கள் பயமே இல்லாத ஒன்று
இது நம்ம சௌந்தர் (ரசிகன்)இவர் பதிவை எல்லோரும் படிக்கலாம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டார்

அணு குண்டு இது ஒன்னு வெடிச்சாலும் அந்த ஏரியாவே அதிரும் .காதில் ரத்தம் வரும் அளவுக்கு சத்தம்  இருக்கும் .
இது நம்ம டெர்ரர்.இவர் எப்பாவது ஒரு பதிவு தான் போடுவார் அந்த பதிவு பதிவுலகமே  இவரை பார்த்து பயப்படும் கமெண்ட்ஸ் ல எல்லோரையும் போட்டு அடிப்பார் .ஹி....ஹி ....சில சமயம் வேற ப்ளோக்ல போயும் காதுல ரத்தம் வர அளவுக்கு இவரு அடிவாங்குவாறு 

10000 வால சரவெடி ஒரு தடவ திரிய பத்த வச்சிட்டா போதும் சர சரவென வெடிச்சிகிட்டே இருக்கும் யாரும் கிட்ட போக முடியாது.
இது பட்டபாட்டி ஒரு பதிவு போடுவார் யாராவது  கமெண்ட்ஸ் எழுத கிட்ட போன அவ்வளவு தான் காதுல இருந்து ரத்தம் வரும் அளவுக்கு வசவு இருக்கும்

கேப் ரோல் இதை துப்பாக்கியில் லோட பண்ணியாச்சுன்ன அது பாட்டுக்கு டப்பு..... டப்பு ...ன்னு சுட்டு கிட்டே இருக்கும் .
இது நம்ம மங்குனி பதிவு மாதிரி சின்ன பதிவ தான் இருக்கும்.ஆனா கமெண்ட்ஸ் மட்டும் டப்பு..... டப்பு ...ன்னு சுட்டது மாதிரி விழுந்துகிட்டே இருக்கும்.

500 வால சரவெடி திரிய பத்த வச்சிட்டா சர சரவென வெடிக்கும் ஆனா உடனே அடங்கிடும் .
இது நம்ம வெங்கட் சின்ன பதிவா இருந்தாலும் நச்சுன்னு நல்ல இருக்கும் சீக்கிரம் எல்லோருக்கும் புரியும் படியான சிரிப்பு வெடியாகவும் இருக்கும்..

சாட்டை  இது மொத்தத்துக்கு  பயமே கிடையாது .யாருனாலும்  கொளுத்தலாம் அது பாட்டுக்கு எரிஞ்சிகிட்டே   இருக்கும்
இது நம்ம PSV இவர் பதிவ  எல்லோரும் படிக்கலாம்.யார் கமெண்ட்ஸ் போட்டாலும் சரி ,voteபோட்டாலும் சரி .அவர் கண்டுக்கவே மாட்டார்.அவரு பாட்டுக்கு எழுதிகிட்டே இருப்பார்.


புல்லெட் பாம் இது பார்க்குறதுக்கு சிறிய வெடி மாதரி தான் இருக்கும் ஆனா ரொம்ப பவர்புல் வெடி
இது நம்ம எஸ் .கே கமெண்ட்ஸ் எல்லாம் சும்மா பவர் புல்அ  இருக்கும் .கதை எழுதுவாரு பாருங்க .போரும்ல தான் எழுதுவார் செம ஹிட்(என் அன்பான வேண்டுகோள் எஸ்.கே நீங்க கண்டிப்பாக ப்ளாக்ல ஒரு கதை எழுதணும்).

ராக்கெட் இதுல திரிய பத்த வைச்ச விடனே வானத்தை நோக்கி போகும் அப்படியே காணமல் போய் விடும் .
இது நம்ம வெறும்பய பதிவ முதல் ரெண்டு பாரா நல்ல இருக்கும் கடைசி பார்த்தா சப்பை மேட்டர் மாதிரி பதிவ  முடிசிருவார்

சரி எல்லோருக்கும் தீபாவளி  வாழ்த்துக்கள் மக்கா ...

(எங்கேயோ இருந்து தேவா அண்ணா குரல் )டேய் தம்பி பாபு .ஏன்டா இப்படி இம்சை பண்ணுற .உன் "நண்பன்டாசிரிப்பு போலீஸ் அவனை பற்றி ஒன்னும் சொல்லாம போற ......

தேவா அண்ணா நீங்க சொல்லி நான் கேட்காம இருப்பேனா .இதோ

நமத்துபோன பட்டாசு இதுல  திரியா பத்தவச்ச உடனே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ன்னு சத்தம் கொடுக்கும் ஆனா வெடிக்காது
அதே மாதிரி தான் நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ்  (என்னத்த சொல்லுறது ) அதான் நமத்து போச்சே ........

Fancy shot  இது ரொம்ப காஸ்ட்லியான வெடிங்க .திரியா பத்த வச்சி விட்ட போதும் மேல போய் கலர்புல்அ வெடிக்கும் பாருங்க பார்த்துகிட்டே இருக்கலாம் ......
இது நம்ம இம்சை பாபு வோட பதிவு ....அத சொல்லுறதுக்குள்ள (ஏப்பா டெர்ரர் என் இப்படி கோவ படுற சரி விடுப்பா ...ஸ் ஸ் ஸ் ... அடிக்காதே ......பாருடா அதுக்குள்ள எவனோ கல் எடுத்து எரியுறான் .....சரி மக்கா விடுங்க .)

அடுத்து இந்த தீபாவளி ஸ்பெஷல் போன் வெடி. இது துபாய்ல இருந்து வெடிச்சாலும் இந்தியா வுக்கு கேக்கும் இதுல  என்ன ஸ்பெஷல்னா..............
ச்சே .து ...................இத நான் சொல்ல  கூடாதுன்னு பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொல்லிருக்கு .அவரே கமெண்ட்ஸ்ல வந்து சொல்லுவாரு .வா மக்கா நரி வந்து சொல்லு.

மீண்டும் ஒருவாட்டி எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

எல்லோரும் படித்து விட்டு கண்டிப்பாக ஓட்டு போடவும் . ஏக ஓட்டு பட்டைகள் நண்பர் அருண் எடுத்து வைத்து என்னோட ப்ளாக் அ அழகு படுத்தி தந்திருக்கார்.