Tuesday, November 16, 2010

தி பாஸ்

சினிமா உலகத்தை பொறுத்த வரையில் இந்த தலைப்புக்கு உரியவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தான்.
இந்த பதிவை எழுத எனக்கு வாய்ப்பளித்த சிரிப்புபோலீஸ் க்கு முதல நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் அன்பு மிரட்டல் விட்ட நண்பர் அருண்பிரசாத் ,அடிகடி ஞாபக படுத்திய சௌந்தர் எல்லோருக்கும் நன்றி ......நான் முதல் முதலில் ரஜினி படம்ன்னு பார்த்தது மாவீரன் தான் 5வகுப்பு படிக்கும் பொழுது பார்த்தது .இந்த படம் பார்த்தாலும்.வேலைக்காரன் படம் தான் நான் ரஜினி ரசிகனாக ஆகுவதற்கு முதல் காரணமாக இருந்தது .......பிடித்த படம் என்றால் maximum எல்லாமே பிடித்த படம் தான் ........

கொடிபறக்குது இந்த படம் பாரதிராஜா எடுத்தது படம் ரொம்ப நாள் ஓட வில்லை என்றாலும் எனக்கு பிடிக்கும் .இந்த படத்தில் இருந்து தான்  மணிவண்ணன் நடிகராக ரீ என்ட்ரி கொடுத்த படம் .மணிவண்ணனுக்கு பாரதிராஜா குரல் கொடுத்து இருப்பார் நன்றாக இருக்கும் .குறிப்பாக இந்த தாதா காரெக்டர் ரொம்ப நல்லா இருக்கும் .

எஜமான் இந்த படம் நான் ரஜினியை முதலில் ஒரு படம் முழுவதும் வேஷ்டி சட்டையோடு பார்த்தது.பாட்டு அவ்வளவும் சூப்பர் டுப்பர் ஹிட் .இதுல தலைவர் தோளில் துண்டை ஒரு சுற்று சுற்றி போடும் அழகே தனி அழகு தான்.

தர்மயுத்தம் இந்த படத்தில் ரஜினிக்கு பௌர்ணமி அன்னைக்கு பைத்தியம் பிடிக்கும் .ரெண்டு பாட்டு சூப்பர் ஹிட்."ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு ","ஆகாய கங்கை " இதில் ஆகாய கங்கை பாட்டுக்கு முழுவதும் ஸ்ரீதேவி உட்கார்ந்தே இருபாங்க காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் உட்கார வைத்தே ஷூட்டிங் முடித்தாக கேள்வி பட்டு இருக்கிறேன்.

பாபா இந்த படம் தோல்வி படம்னு எல்லோரும் சொல்லுவாங்க .ஆனா  எனக்கு இந்த படம் புடிக்கும் .மேக் அப் தான் சுத்தமாக நல்ல இருக்காது இந்த படத்தில் பாட்டு  அனைத்தும் ஹிட் .பாபா கவுன்ட்ஸ் ஸ்டார்ட் ன்னு சொல்லுற அழகே தனி தான்.

தர்மதுரை இந்த படத்தில் முதல் பாதி முழுவதும் காமெடியாக இருக்கும் அடுத்த பாதி ரொம்ப கதை அம்சம் உள்ளதாக இருக்கும் .இரு தம்பிகளுக்காக சொத்து ,குழந்தை எல்லாம் இழந்து விடுவார்.அதுலேயும் தம்பிகளை பார்பதற்காக சென்னை வரும் பொழுது அவர் டிரஸ் எல்லாம் போட்டு செம காமெடி யாக இருக்கும்.இந்த படத்தில் ரெண்டு சூப்பர் டுப்பர் பாட்டு"அண்ணன் என்ன தம்பி என்ன ",மாசி மாசம் ஆளான பொண்ணு " இந்த ரெண்டு பாட்டு ரொம்ப புடிக்கும் எனக்கு.

ராஜா சின்ன ரோஜா இந்த படத்துல தான் தலைவருக்கு ஒரு பாட்டு "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட "இந்த பாட்டு செம ஹிட் அதுக்கப்புறம் கார்டூன்ஸ் கூட நடனம் ஆடும் ஒரு பாட்டு .தலைவருக்கு அதற்க்கப்புறம் ஏகப்பட்ட குழந்தைகள் ரசிகர்களாக மாறிவிட்டனர் .....

வேலைகாரன் நான் ரஜினி ரசிகனாக ஆனதற்கு முக்கிய கரணம் இந்த படம் .நல்ல கமெடி குறிப்பாக நாசர் உனக்கு இங்கிலீஷ் தெரியுமா என்று கேட்டவுடன் தலைவர் சொல்லும் ஸ்டைல் தனி.பாட்டு அனைத்தும் ஹிட்.

சிவாஜி இந்த படத்தை பற்றி சொல்லவே வேண்டாம். பாட்டு அனைத்தும் ஹிட் ,பஞ்ச் வசனம் ஹிட், ரஜினி ரொம்ப இளமையா காண்பிச்சு இருபங்க .இது என் பொண்ணு கூட ரொம்ப ரசிச்சு பார்த்த படம் அப்போ அவள் LKG படிச்சா அப்போ தலைவரோட மகிமைய பார்த்துகோங்க ?படம் செம ஹிட் .பெரியோர் முதல் சிறியவர் வரை எல்லோரையும் ரீச் ஆனா படம் .

பாட்ஷா எல்லோருக்கும் முதல் இடம் இந்த படம் தான் .ஏன் தலைவருக்கே  இந்த படம் தான்னு அவரே சொல்லி இருக்கார். இதில் முதல்  சண்டை கட்சி ரொம்ப நல்லா  இருக்கு. பாட்டு ஹிட் .அதற்க்கப்புறம் ரஜினிக்கு ரகுவரன் தான் வில்லன் ரோல்க்கு ரொம்ப சரியான ஆள் இவர்தான்.

அண்ணாமலை என்னோட டாப் 10 இது தான் முதல் இடம் இதை தான் அதிகமாக பார்த்த படமும் கூட. இந்த படத்தில் இருந்து ரஜினி அரசியல் பஞ்ச் வசனம் வச்சு பேச ஆரம்பித்தார் .என்னோட செல் ரிங் டோன் கூட "வெற்றி நிச்சயம் இது வேத தத்துவம் "இந்த சாங் தான் ரொம்ப நாள் இது தான் இருந்தது .மலைடா அண்ணாமலை அப்படி சொல்ல வசனம் .ரொம்ப புடிக்கும் .அதற்கப்புறம்
"ஆமபளைங்க போடுறது மன கணக்கு
பொண்ணுங்க போடறது திருமண கணக்கு " இந்த வசனம் மனப்பாடம் .ரொம்ப புடிச்ச படம் இதை ஆடிக்க எந்த படமும் இல்லை என்னோட வரிசையில்

இது மட்டும் தான் என்னோட பிடித்த படம் இல்லை .தில்லுமுல்லு ,தம்பிக்கு எந்த ஊரு ,முள்ளும் மலரும் ,நெற்றிகண் ,மாப்பிளை ,போன்ற படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சரி அடுத்த தொடர் பதிவை யாரை எழுத சொல்லனம்னு யோசிச்ச பொழுது இருவரை தேர்ந்து எடுத்திருக்கிறேன்.

பிரபாகர்  .பிரபாகரனின் தத்துபித்துவங்கள்மற்றும்
அருண் பிரசாத்: சுற்றுலா விரும்பி
 

53 comments:

சௌந்தர் said...

பாபு என்ன தம் அடிக்கிறார்

ஜெயந்த் கிருஷ்ணா said...

சினிமா உலகத்தை பொறுத்த வரையில் இந்த தலைப்புக்கு உரியவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தான்.
இந்த பதிவை எழுத எனக்கு வாய்ப்பளித்த சிரிப்புபோலீஸ் க்கு முதல நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் அன்பு மிரட்டல் விட்ட நண்பர் அருண்பிரசாத் ,அடிகடி ஞாபக படுத்திய சௌந்தர் எல்லோருக்கும் நன்றி ......


//

ஒருவேளை ஞாபகப்படுத்தலன்னா எழுதியிருக்க மாட்டீங்களோ... ஒரு சின்சியாரிட்டி வேணும் தலைவா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

பாபு என்ன தம் அடிக்கிறார்

//

விடு நண்பா அது வீட்டுக்கு தெரியாம அடிக்கிற தம்மு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தொகுப்பு நண்பரே...

எல் கே said...

நல்ல தொகுப்பு பாபு

இம்சைஅரசன் பாபு.. said...

//ஒருவேளை ஞாபகப்படுத்தலன்னா எழுதியிருக்க மாட்டீங்களோ... ஒரு சின்சியாரிட்டி வேணும் தலைவா//

மக்கா நம்ம தமிழ் தான் ஊருக்கே தெரியுமே குத்துயிரும் கொலை உயிருமா எழுதுவேன் .........அதனால் மத்தவங்க எழுதினத கொஞ்சம் ரசிச்சேன் ...அதுவும் இல்லாம ஏகப்பட்ட function வீடு அதான்(சோம்பேறி அப்படி ன்னு நினைச்சிர கூடாதுன்னு சமாளிக்க வேண்டியது இருக்கு .........)

வெங்கட் said...

// இந்த பதிவை எழுத எனக்கு வாய்ப்பளித்த
சிரிப்புபோலீஸ் க்கு முதல நன்றியை
தெரிவித்து கொள்கிறேன். //

என்ன..? இந்த பதிவெழுத
சிரிப்புபோலீஸ் வாய்ப்பளித்தாரா..?

அவரு என்ன Google கம்பெனி M.D-யா..?
வாய்ப்பளிக்கறதுக்கு..??

உங்க நன்றியை Google -க்கு
சொல்லுங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா நம்ம தமிழ் தான் ஊருக்கே தெரியுமே குத்துயிரும் கொலை உயிருமா எழுதுவேன் .........அதனால் மத்தவங்க எழுதினத கொஞ்சம் ரசிச்சேன் ...அதுவும் இல்லாம ஏகப்பட்ட function வீடு அதான்(சோம்பேறி அப்படி ன்னு நினைச்சிர கூடாதுன்னு சமாளிக்க வேண்டியது இருக்கு .........)

//

பரிட்சையில பிட் அடிக்கிற பழக்கம் போகுதா பாரு.. அதை சமாளிக்க இப்படி வெளக்கென்ன தனமா வெளக்கம் வேற..

இம்சைஅரசன் பாபு.. said...

//பாபு என்ன தம் அடிக்கிறார்//

அட பாவி .......நம்ள மாட்டி விடுறதுல இந்த பய புள்ளைக்கு ஒரு சந்தோசம் ........

சௌந்தர் said...

பாபு அருமை பின்னிடிங்க நல்ல தொகுப்பு நல்ல காக்டெயில் ரஜினியின் படம்களில் மிகவும் சிறப்பான படம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

பாபு அருமை பின்னிடிங்க நல்ல தொகுப்பு நல்ல காக்டெயில் ரஜினியின் படம்களில் மிகவும் சிறப்பான படம்

//

என்ன நண்பா காலையிலையே காக்டெயில் பற்றி ஞாபகப்படுத்துற...

இம்சைஅரசன் பாபு.. said...

//பரிட்சையில பிட் அடிக்கிற பழக்கம் போகுதா பாரு.. அதை சமாளிக்க இப்படி வெளக்கென்ன தனமா வெளக்கம் வேற.. //
என் மானத்தை வாங்க இவன் ஒருத்தன் போதும் ...........

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

என் மானத்தை வாங்க இவன் ஒருத்தன் போதும் ...........

//

கவலையே வேண்டாம் எப்பவும் நான் உன் கூடவே இருப்பேன் உன் மானத்த வாங்க மட்டும்...

இம்சைஅரசன் பாபு.. said...

//என்ன..? இந்த பதிவெழுத
சிரிப்புபோலீஸ் வாய்ப்பளித்தாரா..?

அவரு என்ன Google கம்பெனி M.D-யா..?
வாய்ப்பளிக்கறதுக்கு..??

உங்க நன்றியை Google -க்கு
சொல்லுங்க//

என்ன செய்ய நண்பனாக ஆகிவிட்டன இல்லை என்றால் இதை கண்டித்து இன்னொரு பதிவ எழுதி தொலைப்பான் .........உனக்கும் கஷ்ட்டம் அதை நீங்களும் படிக்கணும் .....தேவையா இது ?

ஹரிஸ் Harish said...

super collection...

எஸ்.கே said...

உங்கள் தொகுப்பும் அருமையாக உள்ளது!

NaSo said...

//இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா நம்ம தமிழ் தான் ஊருக்கே தெரியுமே குத்துயிரும் கொலை உயிருமா எழுதுவேன் .........அதனால் மத்தவங்க எழுதினத கொஞ்சம் ரசிச்சேன் ...அதுவும் இல்லாம ஏகப்பட்ட function வீடு அதான்(சோம்பேறி அப்படி ன்னு நினைச்சிர கூடாதுன்னு சமாளிக்க வேண்டியது இருக்கு .........)//

எப்படியோ கஷ்டப்பட்டு எழுதிட்டீங்க. எல்லோரும் எழுதாம விட்ட பாபா படத்துக்கும் விமர்சனம் எழுதிட்டீங்க.

sathishsangkavi.blogspot.com said...

அருமையான தொகுப்பு....

Madhavan Srinivasagopalan said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்..

//உங்க நன்றியை Google -க்கு
சொல்லுங்க.. //

அவருக்கு(கூகிள் எம்.டி) 'தமிழ்' தெரியுமா ?.. இல்லேன்னா புரியாதே..
ஒருவேளை சிறுப்பு போலிஸ் அவருக்கு புரிய வேச்சிருப்பாரோ என்னவோ !

Arun Prasath said...

//என்ன செய்ய நண்பனாக ஆகிவிட்டன இல்லை என்றால் இதை கண்டித்து இன்னொரு பதிவ எழுதி தொலைப்பான் .........உனக்கும் கஷ்ட்டம் அதை நீங்களும் படிக்கணும் .....தேவையா இது ?//

என்ன பண்ணாலும் ஒரு தொலை நோக்கு பார்வை இருக்கு தல உங்க கிட்ட...

Arun Prasath said...

என்னை அழைத்ததுக்கு நன்றி... இன்னைக்கே எழுதிடறேன்.

karthikkumar said...

வந்துட்டேன் மேஹஹஹ

karthikkumar said...

என்ன செய்ய நண்பனாக ஆகிவிட்டன இல்லை என்றால் இதை கண்டித்து இன்னொரு பதிவ எழுதி தொலைப்பான் .........உனக்கும் கஷ்ட்டம் அதை நீங்களும் படிக்கணும் .....தேவையா இது ?////
உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு

Philosophy Prabhakaran said...

கண்டிப்பாக எழுதுகிறேன் நண்பரே... ஆனா நீங்க என்னோட பெயரை இந்த மாதிரி எல்லாம் எழுத்துப்பிழையோட வெளியிட்டா நான் அழுதுடுவேன்...

அருண் பிரசாத் said...

தர்மதுரைல - ஆண் என்ன? பெண் என்ன?னு ஒரு அருமையான பாட்டு இருக்கு... அத விட்டுட்ட்டு கில்மா பாட்டு மாசி மாசம் ஆளான பொன்னு கேக்குதோ!

அருண் பிரசாத் said...

பாபா பிடிக்கும்னு சொன்ன முதல் ஆள் நீங்கதான் இம்சை..
இம்சை பன்னுறீங்களே

இம்சைஅரசன் பாபு.. said...

@philosophy பிரபாகரன்

சாரி தல .......வேண்டும் என்றே எழுதவில்லை ..........தவறுக்கு மன்னிக்கவும் ..........இப்பொழுது திருத்தி விட்டேன்

இம்சைஅரசன் பாபு.. said...

இல்ல மக்கா visual ல தான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கும் இதுல ஜேசுதாஸ் வாய்ஸ் நல்லா இருக்கும் மக்கா .....

அருண் பிரசாத் said...

நல்ல தொகுப்பு

தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி

Kousalya Raj said...

//இதில் ஆகாய கங்கை பாட்டுக்கு முழுவதும் ஸ்ரீதேவி உட்கார்ந்தே இருபாங்க காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் உட்கார வைத்தே ஷூட்டிங் முடித்தாக கேள்வி பட்டு இருக்கிறேன்.//

அப்படியா ? இப்பதான் கேள்வி படுகிறேன்....அந்த இரண்டு பாட்டுகளும் எனக்கு மிக பிடித்த பாடல்கள்...

பட தொகுப்பு அருமை. ரசித்தேன்.

செல்வா said...

எங்க சண்டை எங்க சண்டை ..?

செல்வா said...

படையப்பா படத்த காணல ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் said...

// இந்த பதிவை எழுத எனக்கு வாய்ப்பளித்த
சிரிப்புபோலீஸ் க்கு முதல நன்றியை
தெரிவித்து கொள்கிறேன். //

என்ன..? இந்த பதிவெழுத
சிரிப்புபோலீஸ் வாய்ப்பளித்தாரா..?

அவரு என்ன Google கம்பெனி M.D-யா..?
வாய்ப்பளிக்கறதுக்கு..??

உங்க நன்றியை Google -க்கு
சொல்லுங்க..
//


பாவம் அவர யாரும் கூபிடலைஎன்னு வயித்தெரிச்சல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் பிரசாத் ஆரமித்து வைத்த இந்த தொடர்பதிவு ஹிட் ஆனாதால் அதை கொண்டாட அருண் அவர்கள் பூக்குழி இறங்குவார்.

கருடன் said...

@imsai babu

makka nalla irukku makka. comment pottu potttu bore adikudhu makka... :))

Anonymous said...

அடடா..சூப்பர் என்ன ஒரு காக்டெயில்...செமயா இருக்கு எல்லா பட விமர்சனமும்

Anonymous said...

எல்லாமே எனக்கு பிடிச்ச படங்கள்...

Anonymous said...

பாபு என்ன தம் அடிக்கிறார்//
யோவ் முத வட ந்னுதானே போடணும்..அதுதானே பிளாக் மரபு?

Anonymous said...

பதிவு போட்டதும் ஓட்டு போட்டுட்டேன்..இப்பதான் கமெண்ட் போடுறேன்..நம்புங்கப்பா

Anonymous said...

சினிமா உலகத்தை பொறுத்த வரையில் இந்த தலைப்புக்கு உரியவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தான்//
தி பாஸ் இதுக்கே ரெண்டு ஓட்டு போடணும்யா

Anonymous said...

மக்கா நம்ம தமிழ் தான் ஊருக்கே தெரியுமே குத்துயிரும் கொலை உயிருமா எழுதுவேன் //
அதுக்குத்தான் அரிவாளா

Anonymous said...

நான் முதல் முதலில் ரஜினி படம்ன்னு பார்த்தது மாவீரன் தான் //
ரொம்ப சின்ன பிள்ளையா இருக்கியேப்பா

சி.பி.செந்தில்குமார் said...

பாபு ,கொஞ்சம் அர்ஜெண்டா போகனும்,பாத்ரூம் இல்ல,கல்யாணம்.ஓட்டு போட்டாச்சு கால வர்றேன்

பெசொவி said...

Good Selection!

Hats off!

அன்பரசன் said...

நல்ல செலக்சன்.

elamthenral said...

அருமையான தொகுப்பு...

தமிழ் செல்வன் இரா said...

nice post

Ahamed irshad said...

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_18.html..

Unknown said...

தளபதி....?

Anonymous said...

குறிப்பிட்ட திரைப்படங்கள் அனைத்துமே நல்ல தேர்வுகள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எல்லா படமும் எனக்குப் பிடித்த படங்கள் தான்..!!

பகிர்வுக்கு நன்றி.. :-))

இம்சைஅரசன் பாபு.. said...
This comment has been removed by the author.
Unknown said...

கொஞ்சம் லேட்

தல அருமை...

அனைத்தும் நல்ல ரஜினி ரசிகனின் ரசனையான தேர்வு..

நன்றி