தயாநிதி மாறன பதவி விலகியது பற்றி செய்தியாளர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கேள்வி கேட்ட பொழுது “இன்றைய உலகில், குறிப்பாக இந்தியாவில் ஊடகங்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்த முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல”என்று கூறியது நகைச்சுவையாக உள்ளதுதனது பேரன் தயாநிதி மாறன பதவி விலகியதற்கு ஊடகங்கள் தான் காரணம் என்று கருணாநிதி நேரடியாக குற்றம் சாட்டுகிறார். கலைஞர் இப்படி குற்றம் சாட்டுவது முதல் முறை அல்ல .இதற்க்கு முன்பும் நிறைய தடவை இந்த மாதிரி குற்றம்சாட்டி உள்ளார்.
தயாநிதி பற்றி ஊடகங்களில் வரும் செய்திகள் கடந்த ஆறு வாராமாக தான் வருகிறது .ஆனால் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்க தன் அதிகாரத்தை பயன்படுதியது 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தோடு தொடர்புடையதாகும். அப்பொழுதெல்லாம் இவரது குடும்ப ஊடகங்களை வைத்து என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று இவருக்குத் தெரியாதா? எத்தனையோ பிரச்சனைகளை உங்கள் டீவிகளில் போட்டு ஊதி ஊதி குளிர்காய்ந்தீர்களே, உங்கள் பேரன்கள் எடுக்கும் குப்பை படங்களைக்கூட டீவியில் விளம்பரம் செய்து செய்து ஓட்டி காசு பாத்தீர்களே, அப்போது வராத இந்த கோபம இப்ப மட்டும் ஏன் ஊடகங்கள் மீது வந்தது? குடும்பப்பாசம் கண்ணை மறைக்குதோ? தன் குடும்பத்திற்குள், சொத்தையும் கட்சியையும் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைகளை தமிழ்நாட்டில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒளிபரப்பியது நாறடித்தது சன் டிவி தான் என்பது கலைஞருக்கு வேண்டுமென்றால் மறந்திருக்கலாம், மக்களும் மறந்துவிடுவோமா என்ன?
ஆனால் இப்போதும் உண்மை எதுவென்றால் தயாநிதி மாறன் பிரச்சனையோ, ஸ்பெக்ட்ரம் பிரச்சனையோ, ஊடகங்களால் உருவாக்கப்படவில்லை. இது சாதாரண மக்களுக்கும் புரியும் .2G அலை கற்றையின் ஊழல நாயகன் ராசா என்று தன்னை ஊடகங்கள் வர்ணிப்பதை பொருக்க முடியாத தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசா ஒரு உண்மையை கூறினார். “எந்த வழிமுறைகளை பின்பற்றி எனக்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை செய்தார்களோ அதே வழியைத்தான் நானும் கடைபிடித்தேன” என்று கூறினார். அதுதான் தயாநிதி மாறனுக்கு வினையானது.
உண்மையில் கலைஞரின் ஆதங்கம் வேறு! அவர் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்துங்கள். “ஊடகங்கள் நினைத்தால” என்று அவர் கூறுவதற்குக் காரணம், தனது கட்சியினரின் ஊழலை மட்டுமே இந்த ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன” என்பதே அவருடைய ஆதங்கம். “நாட்டில் பல ஊழல்கள் நடந்து இருக்கிறது அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறீர்கள், எங்களை மட்டும் பெரிதாக ஊடகங்கள் சித்தரிகின்றன என்பதுதான் அவர் கோபம் என்று அவருடைய வார்த்தைகளில் தெரிகிறது. ஆனால், உங்களுக்கு நெருங்கியவர்கள் வேண்டுமென்றே கசியவிடும் ஆதாரத்தைக் கொண்டு நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிப்பது குற்றமா? இதே வேலையை உங்கள் குடும்ப தொலைக்காட்சிகள் முன்பு செய்யவில்லையா? ஆதாரங்களைக் கசியவிட்டவர்களிடம் அல்லவா நீங்கள் கோபப்பட வேண்டும்? அதைவிட்டுவிட்டு அதைச்சொன்ன ஊடகங்கள் மீது கோபப்படுவது நியாயமா? உங்களுடைய குடும்பத்தினர்தானே தமிழ்நாட்டில் ஊடக சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்கள்? நானும் ஒரு பத்திரிகையாளன் தான் என்று அடிகடி மார்தட்டி கொள்ளும் நீங்கள் இப்படி கூறலாமா..?
இதற்கு ஊடகங்கள் என்ன செய்ய முடியும் ..? அவர்கள் தொழில் அது. நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் மைய அரசு தரும் தகவல்களைத்தான் அவர்கள் வெளியிடுகிறார்கள். ஆதாரத்தை அள்ளித்தரும் அந்த நபர்களை நீங்கள் கண்டு கொள்ளாதது ஏன்? நீரா ராடியா உரையாடல்களை பதிவை செய்தது யார்? அது எந்தத் துறை?அந்த ஒலிநாடாக்களை வெளியிட்டது யார்?அது எந்தத் துறை? இதை உங்கள் ஊடகங்களால் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லையா? உங்களுக்குத் தெரியாமலா இவ்வளவும் நடந்தது? முடிந்தால் இருந்தால் அதக் கண்டுபிடித்து உங்கள் குடும்ப டீவியில் ஒளிபரப்புங்களேன், தெரிந்து கொள்ள எங்களுக்கு ஆசையாக இருக்கிறது.
65 comments:
me the first!
பதிவுலக அதிமுக அல்லக்கை பாபு வாழ்க!
//“இன்றைய உலகில், குறிப்பாக இந்தியாவில் ஊடகங்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது.//
அது உண்மைதானே பாபு. என்ன அவர் முழுவதுமாக சொல்ல மறந்து விட்டார். நான் தொடர்கிறேன்.
“இன்றைய உலகில், குறிப்பாக இந்தியாவில் ஊடகங்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக சன் டிவி ராஜ்ஜியம் நடந்தது, இப்போது எதிரிகளின் ஊடகங்கள் ஆட்சி செய்கின்றன"
ஓ இது அதிமுக பத்தி இல்லியா?
//////துதனது பேரன் தயாநிதி மாறன பதவி விலகியதற்கு ஊடகங்கள் தான் காரணம் என்று கருணாநிதி நேரடியாக குற்றம் சாட்டுகிறார். ////////
பேரன்களையும் மகன்களையும் அரசியல்ல வெச்சுக்கிட்டு தமிழினத்தலைவர் படுற கஷ்டம் இருக்கே....... பாவம்பா... வயசானல காலத்துல கூட நிம்மதியா ரிட்டையர் ஆக முடியாம......
//நாட்டில் பல ஊழல்கள் நடந்து இருக்கிறது அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறீர்கள், எங்களை மட்டும் பெரிதாக ஊடகங்கள் சித்தரிகின்றன என்பதுதான் அவர் கோபம் என்று அவருடைய வார்த்தைகளில் தெரிகிறது.//
அவரைப் பாராட்டும்போது "நானும் பத்திரிக்கைக்காரன் தான்" என்று பெருமைப் பட்டுக் கொள்வதும், எதிராக எழுதும்போது "அவாள்" என்று சொல்லி பத்திரிக்கைகளுக்கு பூணுல் போட்டுவிடுவதும் அவருக்கு வழக்கம்தானே, பாபு!
////// எத்தனையோ பிரச்சனைகளை உங்கள் டீவிகளில் போட்டு ஊதி ஊதி குளிர்காய்ந்தீர்களே, //////
இது நித்தியானந்தா மேட்டருதானே?
//////“ஊடகங்கள் நினைத்தால” என்று அவர் கூறுவதற்குக் காரணம், தனது கட்சியினரின் ஊழலை மட்டுமே இந்த ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன” என்பதே அவருடைய ஆதங்கம். ////////
நல்ல கொள்கை... தலைவருக்கு!
//பதவி விலகியதற்கு ஊடகங்கள் தான் காரணம் என்று கருணாநிதி நேரடியாக குற்றம் சாட்டுகிறார். //
நானும் சொல்கிறேன். தயாநிதி பதவி விலகியதற்கு ஊடகங்கள் தான் காரணம். சன்டிவியின் அனைத்து மொழி ஊடகங்களும் (Sun, Gemini,Surya etc.)தான் காரணம். அந்த ஊடகங்களுக்கு (தவறான வழியில்) வசதி செய்து தந்ததுதான் தயாநிதி பதவி நீக்கத்துக்கு காரணம்.
////// ஆதாரத்தை அள்ளித்தரும் அந்த நபர்களை நீங்கள் கண்டு கொள்ளாதது ஏன்?///////
அவரு கண்டுக்கிட்டா நாமளும் கண்டுக்குவோமே?
அண்ணே ஊடகம் ஊடகம்ன்னு சொல்றீங்க்கனே. அது என்ன? வடகம், அப்பளம் மாதிரி அதுவும் ஒரு சாப்பிடுற ஐட்டமா?
அண்ணே ஊடகம் ஊடகம்ன்னு சொல்றீங்க்கனே. அது என்ன? வடகம், அப்பளம் மாதிரி அதுவும் ஒரு சாப்பிடுற ஐட்டமா?//
இல்லை நீர், வாயு போன்றவைதான் ஊடகம்!
அதெல்லாம் சரி, இந்த இடுக்கை நீங்க டைப் செய்ததுதானே ?! கலக்குங்க, நிறையவே
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அண்ணே ஊடகம் ஊடகம்ன்னு சொல்றீங்க்கனே. அது என்ன? வடகம், அப்பளம் மாதிரி அதுவும் ஒரு சாப்பிடுற ஐட்டமா?
//////////
அதெல்லாம் பெரிய மனுசங்க சமாச்சாரம், நீ ஏன் மூக்க விடுற?
/////ஷர்புதீன் said...
அதெல்லாம் சரி, இந்த இடுக்கை நீங்க டைப் செய்ததுதானே ?! கலக்குங்க, நிறையவே
///////
இடுக்கைன்னா என்னண்ணே?
//////முடிந்தால் இருந்தால் அதக் கண்டுபிடித்து உங்கள் குடும்ப டீவியில் ஒளிபரப்புங்களேன், தெரிந்து கொள்ள எங்களுக்கு ஆசையாக இருக்கிறது. ////////
பேராசை பேராசை....!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ஷர்புதீன் said...
அதெல்லாம் சரி, இந்த இடுக்கை நீங்க டைப் செய்ததுதானே ?! கலக்குங்க, நிறையவே
///////
இடுக்கைன்னா என்னண்ணே?//
உடுக்கை மாதிரி ஏதாச்சும் இருக்கும்..
"ஊடகங்கள் மீது கோபம ஏன் ?"//
டேய் தலைப்பையாவது சரியா எழுத கூடாதா?
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"ஊடகங்கள் மீது கோபம ஏன் ?"//
டேய் தலைப்பையாவது சரியா எழுத கூடாதா?////////
அத யாரு பாக்க போறாங்க, அது என்ன சேலைத்தலைப்பா?
சீரியல் பாக்குற பயலுக்கு இது தேவையா?
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சீரியல் பாக்குற பயலுக்கு இது தேவையா?///////
திருவிழாவுல கட்டுற சீரியல் செட்ட இவரு ஏன் பாக்குறாரு?
சாட்டையடி பதிவு .........
(டேய் யார அங்க சிரிக்கிறது )
சரியான நேரத்தில் வெளி வந்து இருக்கும் தேவையான பதிவு..
(யோ மங்கு! இப்பவும் யாரோ சிரிக்கிறாங்க)
TERROR-PANDIYAN(VAS) said...
சரியான நேரத்தில் வெளி வந்து இருக்கும் தேவையான பதிவு..
(யோ மங்கு! இப்பவும் யாரோ சிரிக்கிறாங்க)//
சரியான நேரம்ன்னா ராகு காலமா? எமகன்டமா?
//அதெல்லாம் சரி, இந்த இடுக்கை நீங்க டைப் செய்ததுதானே ?! கலக்குங்க, நிறையவே//
அஜித் சார் ..ச்சே ..சர்புதீன் சார் வரும்போது மனபத்துல எழுதி தந்தாங்க .ஹ ஹா ....
@ரமேஷ் ...
கர்ர்ர்ர்ர்ர் தூ ..தூ ......
////// இம்சைஅரசன் பாபு.. said...
@ரமேஷ் ...
கர்ர்ர்ர்ர்ர் தூ ..தூ ......
////////
பாபு அது 25 இல்லேன்னுதானே துப்புனீங்க?
//பாபு அது 25 இல்லேன்னுதானே துப்புனீங்க?//
அதுக்கே தான் ....
நான் என் வயச சொன்னேன்
@ரமேஷ்
அப்போ இன்னொரு ௨௦ கமெண்ட்ஸ் கழிச்சு போடு நாதாரி ...
அண்ணா இது நீங்கதான் எழுதினதா ? நம்பவே முடில :-)
இவரது குடும்ப ஊடகங்களை வைத்து என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று இவருக்குத் தெரியாதா?//
அதானே? செருப்பு வெளக்கமாத்தைஎல்லாம் போட்டோ புடிச்சு போட்ட பயலுகதானே இவெங்க?
கோமாளி செல்வா said...
அண்ணா இது நீங்கதான் எழுதினதா ? நம்பவே முடில :-)//
சத்திய சோதனை?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ஷர்புதீன் said...
அதெல்லாம் சரி, இந்த இடுக்கை நீங்க டைப் செய்ததுதானே ?! கலக்குங்க, நிறையவே
///////
இடுக்கைன்னா என்னண்ணே?//
உடுக்கை மாதிரி ஏதாச்சும் இருக்கும்.//
ஒருவேள இலியானாவோட இடுப்பு மாதிரி ஏதோ ஒண்ணா இருக்குமோ?
//கோமாளி செல்வா said...
அண்ணா இது நீங்கதான் எழுதினதா ? நம்பவே முடில :-)//
சத்திய சோதனை?//
ஏண்டா ..ஏன் ..ஒருத்தன் பதிவே எழுதாமல் எழுதினா இப்படி தான் கேக்கானுமா ..?எல்லோரும் ..
போங்கப்பா இனி மொக்கை தான் நானும் போடுவேன் .
@ரமேஷ்
அப்போ இன்னொரு ௨௦ கமெண்ட்ஸ் கழிச்சு போடு நாதாரி ...//
தூ
நல்ல போஸ்ட் பாபு !
சரமாரியா கேள்வி கேட்குறீங்க ! பதில் யார் வந்து சொல்ல போறாங்கனு தெரியல...! :)
ஊடகங்கள் யார் ஆட்சியில் செய்தி வெளியிட்டாலும் அது ஆளும்கட்சிக்கு சாதகமாக இருக்கின்றன என்று பேச்சு வருவது சகஜம்.
மிகைபடுத்தபட்ட செய்திகள் முன்பு வந்ததை யார் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை உண்மைதான்.
மக்கள் அன்று போல் இன்றும் வேடிக்கை பார்கிறார்கள் !
எப்படியோ ஊழல்கள் வெளிவந்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டனை அடைந்தால் சரி.
மத்தவங்களுக்கு வந்த அதே சந்தேகம் எனக்கும் வருகிறது...இந்த போஸ்ட் நீங்க எழுதியதுதானா ??? :)))
அடப்பாவிகளா ஒரு மனுசன் எவ்வளவு கஷ்டபட்டு அரசியல் பதிவு எழுதியிருக்காரு இப்படிபோட்டு கும்மியிருக்கீங்களே... :))
மக்கா சூப்பரா எழுதியிருக்கீங்க (யார்ரா அங்க சிரிக்கிறது) தொடர்ந்து இதுபோன்ற பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன் தாங்களிடமிருந்து.... :)
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி :)
உண்மையாலுமே இது நல்ல போஸ்ட்! ஆனா அரசியல்வாதிகள் இந்த மாதிரி பல கேள்விகளை கண்டவர்கள்! நாமெல்லாம் கேள்விகள் மட்டுமே கேட்கிறோம் பதில்கள் கிடைக்காது!
ஊடகங்கள் சில வேளைகளில் சைடு எடுக்கிறது உண்டு தான். ஆனால் மக்கள் இப்போது அதி புத்திசாலிகளாகிக் கொண்டு வருகிறார்கள். எல்லா ஊடகங்களையும் பார்த்து "நடந்தது என்ன" என்று புரிந்து கொண்டு விடுகிறார்கள். அது தான் பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியை இரண்டல்ல மூன்றாவது இடத்துக்கு தள்ளியது.
ஒரு மனுஷன் நல்ல காரியம் பண்ண விடுறதில்ல, நீங்களா எழுதுனீன்கன்னு ஆயிரம் கேள்வி. பாபு என்னிடம் மட்டும் சொல்லுங்க. மண்டபத்தில எழுதி வாங்கியாந்தது தானே?
//ஒரு மனுஷன் நல்ல காரியம் பண்ண விடுறதில்ல, நீங்களா எழுதுனீன்கன்னு ஆயிரம் கேள்வி. பாபு என்னிடம் மட்டும் சொல்லுங்க. மண்டபத்தில எழுதி வாங்கியாந்தது தானே?//
ஹ ..ஹா ..அம்மா நீங்களுமா ..?
எப்பவாச்சும் தோணும .கேள்விகள் நிறைய இடத்தில படித்து தான் அம்மா .இருந்தாலும் இப்படி எழுதி இருக்க கூடாதோ ..ஹ ஹா ...
“இன்றைய உலகில், குறிப்பாக இந்தியாவில் ஊடகங்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்த முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல”///
இவர் மட்டும் என்ன பண்ணாரம் ..,பேனாவில் அமிலத்தை ஊற்றி முரசொலியில் எழுதிய பக்கங்கள் எத்தனை ..,காமராஜர் ,பக்தவத்சலம் ,இந்திரா காந்தி போன்றோரை இழிவு படுத்தி எழுதிய பக்கங்கள் ..தனக்கு வந்த ரத்தம் ,மத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சூசு
எத்தனையோ பிரச்சனைகளை உங்கள் டீவிகளில் போட்டு ஊதி ஊதி குளிர்காய்ந்தீர்களே? /////
ஸ்பெக்ட்ரம் ன்னா என்னனு சன் டிவி சொல்லி தான் தெரியும் ..,புட்டு புட்டு வச்சான்
முத்தமிழ் வித்தவர் ச்சே ச்சே வித்தகர், செத்தாலும் காட்டுமிராண்டியாக ச்சே கட்டுமரமாக உதவுவதாக சொன்னவர், ஈழத்தமிழர்களை மொத்தமாக புதைத்தவர், ச்சே மறுக்கா தப்பா டைப்பாஇருச்சியா “காத்தவர்” , இவரைப் பற்றி குறைகூறி பதிவெழுதிய சின்னப்பயல் பாபுவை மங்குனி,பன்னிகுட்டி,டெர்ரர்,நரி மற்றும் பட்டாபட்டி சார்பாக வண்மையாக கண்டிக்கிறேன்.
“எந்த வழிமுறைகளை பின்பற்றி எனக்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை செய்தார்களோ அதே வழியைத்தான் நானும் கடைபிடித்தேன” ///
அந்த மனுஷன் கிடையா கிடந்து கத்தினான் யா ..,எல்லாரும் பா .ஜா. கா .அருண் ஷோரி மேல தான் ஏறுனாங்க ..,அந்த ஆள் கிளீனா சொல்லிட்டான் ..,அதுக்கு உண்டான டாகுமென்ட்ஸ் எல்லாம் ப்ரோடுஸ் பண்ணிடான் ..,அப்ப தான் அஸ்வினி குமார் என்ற மரமண்டைக்கு உதைச்சுது ..,
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நான் என் வயச சொன்னேன்//
இந்த பீசு தோலை வர வர ஓவராப் போய்ட்டிருக்கு..
சித்தப்பாவுக்கு வயசு 25-ஆம்.... ங்கொய்யாலே நம்பிட்டோம்...
வாக்காள பெருமக்களே ..,உங்களுக்கு இந்த பதிவு சார்பா நன்றி சொல்லிகிறேன் ..,இங்க நடந்த அட்டுழியும் கொஞ்ச நஞ்சமல்ல ..,தப்பு பண்ண தெரியாம தப்பு செய்ஞ்சி ராசா ,கனி ,மாட்டிகிட்டாங்க ,ஆணவமா தப்பு செய்ஞ்சி இப்போ தயா மாட்டிகிட்டார் ..,
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// எத்தனையோ பிரச்சனைகளை உங்கள் டீவிகளில் போட்டு ஊதி ஊதி குளிர்காய்ந்தீர்களே, //////
இது நித்தியானந்தா மேட்டருதானே?///
க க கொ போ......
Jey said...
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நான் என் வயச சொன்னேன்//
இந்த பீசு தோலை வர வர ஓவராப் போய்ட்டிருக்கு..
சித்தப்பாவுக்கு வயசு 25-ஆம்.... ங்கொய்யாலே நம்பிட்டோம்...///
யோவ் நீ பதிவ ஒன்னு போடுயா
// மங்குனி அமைச்சர் said...
சாட்டையடி பதிவு .........
(டேய் யார அங்க சிரிக்கிறது )///
மங்கு, பாபு சின்னப்பையனுதானே இப்படி லந்தடிக்கிரே... உன்னால முடிஞ்சா எங்க சிங்கம் சிரிப்பு போலீச அடிச்சிப் பாருயா பாக்கலாம்....
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவுலக அதிமுக அல்லக்கை பாபு வாழ்க!//
பயபுள்ள இப்பதான் இந்த ஏரியாவுக்குள்ள வந்திருக்கான்..., ஆரம்பத்திலேயே ஏதாவது பட்டம் கொடுத்து தொரத்திவிட்ராத பன்னி...
(லூசா கயித்த விட்டு கட்டிப் போட்ட ஆடு எங்க போய்டப் போவுது.... நமக்கு போரடிச்சா வந்து விருந்து சாப்டுக்கலாம்...)
/// பனங்காட்டு நரி said...
Jey said...
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நான் என் வயச சொன்னேன்//
இந்த பீசு தோலை வர வர ஓவராப் போய்ட்டிருக்கு..
சித்தப்பாவுக்கு வயசு 25-ஆம்.... ங்கொய்யாலே நம்பிட்டோம்...///
யோவ் நீ பதிவ ஒன்னு போடுயா//
போடலாம் போடலாம்..அதுவர ஏற்கனவே எழுதிவச்சத மறுக்கா... மறுக்காப் படிச்சிட்டிரு மக்கா...
jey அண்ணா வாங்க ..வாங்க .ரொம்ப நாள் ஆகிடுச்சு ..சீக்கிரம் பதிவ எழுதுங்க தூசி தட்டுங்க ..உங்க ப்ளாக் ஐ ..
போடலாம் போடலாம்..அதுவர ஏற்கனவே எழுதிவச்சத மறுக்கா... மறுக்காப் படிச்சிட்டிரு மக்கா...////
மக்கா எல்லாரும் வாங்க ..,ஜெ ..,பூக்குழி இறங்க போறாரு பாருங்க
உங்கள் கருத்துக்கள் நன்றாக மிக
இருக்கிறது. நீங்கள் ஏன் " டெரர் கும்மி " விவாத குழுவில் இணைந்து
டெரர் கும்மிக்காக ஒரு பதிவு எழுத கூடாது.?! :)
விடாதே... குத்து...
#பட்டாபட்டியாரின் சார்பில், வெளங்காதவன்....
விடு மாம்ஸ் வூரே அவர அடிச்சிட்டு இருக்கு நீங்களுமா :)
அவரைப் பாராட்டும்போது "நானும் பத்திரிக்கைக்காரன் தான்" என்று பெருமைப் பட்டுக் கொள்வதும், எதிராக எழுதும்போது "அவாள்" என்று சொல்லி பத்திரிக்கைகளுக்கு பூணுல் போட்டுவிடுவதும் அவருக்கு வழக்கம்தானே, பாபு!///
PSV அவர்கள் சொன்னதே .... ரிப்பீட்டு ..
பனங்காட்டு நரி said...
வாக்காள பெருமக்களே ..,உங்களுக்கு இந்த பதிவு சார்பா நன்றி சொல்லிகிறேன் ..,இங்க நடந்த அட்டுழியும் கொஞ்ச நஞ்சமல்ல ..,தப்பு பண்ண தெரியாம தப்பு செய்ஞ்சி ராசா ,கனி ,மாட்டிகிட்டாங்க ,ஆணவமா தப்பு செய்ஞ்சி இப்போ தயா மாட்டிகிட்டார் ///
இன்னும் பயிற்சி வேண்டுமோ ?.. :))
நல்ல பதிவு.
அன்பு நண்பா இன்று தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
நன்றி
http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_20.html
தங்களை தொடர்பதிவுக்கு அழைத்துளேன்... (மரியாதையா சொன்னா தான் நீங்க ஒத்துப்பீங்கன்னு சொன்னான்ன அது தான்)
இன்றைய வலைச்சரத்தல் தங்கள் பதிவுகள் பற்றிப் பகிர்ந்துள்ளேன்.
நேரமிருந்தால் வருகை தரளாமே..
http://blogintamil.blogspot.com/2011/08/3.html
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரா! இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
Post a Comment