Friday, May 6, 2011

மலரும் நினைவுகள் ..!!!

                                                                         

    

நான்காம் வகுப்பு முடித்து ஐந்தாம் வகுப்பு செல்லும் தன்  மகனை கூட்டிக்கொண்டு பள்ளி நோக்கி செல்கிறாள் தாய். ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் பையன் படிப்பு முக்கியம் என்று மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்தனர். அந்த குக்கிராமத்தில் ஆங்கில வழி கல்விக்கு போகும் முதல் சிறுவன் அவன் தான்.  சென்னையில் பணி புரியும் தனது கணவன் அனுப்பிய பணத்தினை  எடுத்துக்கொண்டு அந்த வருடத்திற்கான ஸ்கூல் பீஸ் கட்ட  எழுத்தாள் சொல்லிட முடியாத அளவு சந்தோசத்துடன் தன் கையை இறுகப்பற்றி பற்றிக்கொண்டு  வரும் மகனின் முகத்தை பார்த்து மனதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன்  சந்தோசத்துடன் கூட்டி கொண்டு செல்லும் அந்த தாயிடம்   

"புக் எல்லாம் வாங்கிருலாம் இல்லையா அம்மா ....!!  

"வாங்கிருவோம் செல்லம்" ..

"அம்மா அப்படியே கடைக்கு போய் பிரவுன் சீட் ..ஸ்டிக்கர் லேபிள் எல்லாம் வாங்குவோம் அம்மா" ..

இல்லடா அப்பா பீசுக்குக்கு மட்டும் தான் பணம் அனுப்பி இருக்காங்க.. இன்னும் 20 நாள் கழிச்சு அப்பா வந்து வாங்கி தருவாங்க  சரியா ..

பையன் வெடுக்கென்று அம்மாவின் கையை தட்டி விட்டு..... போன வாட்டியும் இப்படி தான் சொன்னீங்க கடைசில அப்பா ஸ்கூல் திறந்து ரெண்டு நாள் கழித்து தான் வந்தாங்க,  அப்புறம் தான் எனக்கு அட்டை எல்லாம் போட்டு தந்தாங்க .என் பிரெண்ட்ஸ் எல்லோரும் முதல் நாளே புதுபேக் ,வாட்டர் பாட்டில் எல்லாம் கொண்டு வந்தாங்க ..என்று கோவமாக கத்தினான் .

"சரிடா அப்பா சீக்கிரம் இந்த வாட்டி வந்திருவாங்க,  நீ ஏன் நடு ரோட்டில் இருந்து இப்படி கத்துற" என்று அம்மா கொஞ்சம் கடுஞ்சொற்களை வீசினாள் ..

அவனது மலர்ந்த முகம் வாடிப்போனது. அதன் பிறகு அவன் ஒன்றும் சொல்லவில்லை .. பேருந்து பிடித்து ஊர் வந்து சேர்ந்தார்கள் ..

அதே சிறுவனின் கால் நூற்றாண்டு வாழ்க்கைக்கு பிறகு 

 தன் மகளுக்கு பாட புத்தகம் வாங்கி வீட்டில் வைத்தான் ..

"அப்பா பைக் ஸ்டார்ட் பண்ணுங்க போய் பிரவுன் சீட் ,வாட்டர் பாட்டில் ,பேக்  ..எல்லாம் வாங்கி வருவோம்"  என்றாள் மகள் 

"குட்டிமா  இன்னைக்கு மே 7  தான் ஆகி இருக்கு இன்னும் நாள் இருக்கு பிறகு வாங்கலாம்" என்று கூறியதும் தான் தாமதம்  இன்றைக்கே வாங்க வேண்டும் என்று அழுது புரண்டு அடம பிடிக்க ஆரம்பித்தாள்.. 

அச்சமயம் அங்கே வந்த தாயின் நினைவில் பழைய நாட்கள் வந்து செல்ல அவனை பார்த்து "அப்பனுக்கு மகள் தப்பாம பிறந்து இருக்கிறாள் " என்று  சிரித்து விட்டு சொன்னாள்..

ஆம் ..அது ஒரு சந்தோசம் தான் புது புக் ,நோட்ஸ் எல்லாம் வாங்கி அட்டை போட்டு ..லேபிள் ஒட்டி,பேர் எழுதி வைக்கிறது ..கூடவே சோப்பு கவர் எடுத்து புக்குள்ள வைச்சு புக் திறக்கும் பொழுது வரும் வாசனை ..மயில் இறகு வைத்து அரிசி கொஞ்சம் வைக்கிறது ..ஏன் என்றால் மயில் இறகு குட்டி போடுமாம் ..(புக் அப்புறம் திறத்து பார்ப்பதே கிடையாது ..அது வேற விஷயம் ..)

பத்தாம் வகுப்புக்கு அப்புறம் மார்க் சீட் வீட்டில் காண்பிப்பதே கிடையாது .அம்மாவின் கையெழுத்தை எம்.சுப்புலெட்சுமின்னு அழகாக போடுவான் அந்த பையன் ....

இப்படி தன் கடந்த காலத்தை நினைத்தவன் .தன் மகளை பைக்கில் ஏற்றி கொண்டு கடை நோக்கி சென்று எல்லாம் வாங்கி வந்தான் ..

இன்று இரவு கச்சேரி இருக்குது ..அட்டை போடணும் லேபிள் ஓட்டனும் பேர் எழுதணும் ..ஹையோ ..ஹையோ ..

இந்த அப்பாவும் ,பொண்ணும்  யாருன்னு கேக்குறீங்க ...சாட்ச்சாத் பாபுவும் ..அவள் மகளும் தாங்க ..சின்ன பிளாஷ் பாக் ..நினைத்து பார்த்தல் சந்தோசம் மனதில் பரவி கிடக்கிறது ..


34 comments:

Anonymous said...

நல்லாருக்கு

Anonymous said...

அப்பனுக்கு மகள் தப்பாம பிறந்து இருக்கிறாள்//
இதை சொல்லாத வீடே இல்லையா

மாலுமி said...

ப்ரெசென்ட் சார்,
கொஞ்சம் ஆணி அப்புறமா வரேன்..........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கேக்குறவன் கேனை பையன்னா சன் பிக்சர்ஸ் படம் எல்லாம் சூப்பர் ஹிட்ன்னு சொல்லுவ போல. நீ ஸ்கூல் படிச்சியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பா பொண்ணுன்னு சொல்லிட்டு அம்மா பொண்ணு போட்டோ போட்டு ஏமாற்றும் பாபு ஒழிக

மாணவன் said...

நல்லாருக்கு மக்கா.... மலரும் நினைவுகள் :)

karthikkumar said...

மாலுமி said...
ப்ரெசென்ட் சார்,
கொஞ்சம் ஆணி அப்புறமா வரேன்..........

karthikkumar said...

மாணவன் said...
நல்லாருக்கு மக்கா.... மலரும் நினைவுகள் :)

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்பா பொண்ணுன்னு சொல்லிட்டு அம்மா பொண்ணு போட்டோ போட்டு ஏமாற்றும் பாபு ஒழிக///



பதிவை படிக்காமல் படத்தை மட்டும் பார்த்து கமென்ட் போடும் போலிஸ் ஒழிக...:))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசித்தேன்...

தொடர வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவு...

தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே..

செல்வா said...

பாபு அண்ணன் வாழ்க.. ஹி ஹி

செல்வா said...

//பதிவை படிக்காமல் படத்தை மட்டும் பார்த்து கமென்ட் போடும் போலிஸ் ஒழிக...:))/

நீங்க ரண்டுபேரும் கட்சி ஆரம்பிசிருக்கீங்களா ?

TERROR-PANDIYAN(VAS) said...

அருமையான பதிவு. ரசித்தேன்... கொஞ்சம் உப்பு சேர்த்து இருந்தால் சுவை கூடி இருக்கும். கடைசியில் ரவி என்ன ஆனான்? கொல்லபட்டான அல்லது அது ஒரு தற்கொலையா? :)

இம்சைஅரசன் பாபு.. said...

//கடைசியில் ரவி என்ன ஆனான்? கொல்லபட்டான அல்லது அது ஒரு தற்கொலையா? :)//

டேய் ..டேய் ..இதுல ரவி எங்க வர்றான் ...நேத்து சீரியல் பார்த்துகிட்டு இங்க வந்து கமெண்ட் போடாதடா

MANO நாஞ்சில் மனோ said...

//(புக் அப்புறம் திறத்து பார்ப்பதே கிடையாது ..அது வேற விஷயம் ..)///


விடுய்யா விடுய்யா நாம பாக்காததா....

MANO நாஞ்சில் மனோ said...

இது ஒரு சுய சரிதை....

MANO நாஞ்சில் மனோ said...

ம்ஹும் பதிவுலகம் கொஞ்சநாள் நிம்மதியா இருந்துச்சு, இனி சனி'தான்....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் எரர் காட்டுது...????

மாலுமி said...

/// என் பிரெண்ட்ஸ் எல்லோரும் முதல் நாளே புதுபேக் ,வாட்டர் பாட்டில் எல்லாம் கொண்டு வந்தாங்க ..என்று கோவமாக கத்தினான் ///

புது டிரஸ், புது பென்சில் பாக்ஸ், புது டிப்பன் பாக்ஸ், புது ஷூ அப்புறம் புது பிரண்டு இன்னும் பல...................
மலரும் நினைவுகள் மச்சி..............

சி.பி.செந்தில்குமார் said...

பாபு செண்ட்டிமென்ண்ட்டல் செம்மல் ஆகிறாப்ல.. ஹா ஹா

இம்சைஅரசன் பாபு.. said...

//பாபு செண்ட்டிமென்ண்ட்டல் செம்மல் ஆகிறாப்ல.. ஹா ஹா//

ஹ ..ஹா ..ஆமா சிபி வாழ்க்கைல கொஞ்சம் செண்டிமன்ட் வேனும்ம்னு நினைக்கிறவன் நான் ..அப்போ தான் பாசம் ,அன்பு ,விட்டு கொடுத்தல் எல்லாம் வரும் என்று எண்ணுகிறேன் ..நன்றி ..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அப்பனுக்கு மகள் தப்பாம பிறந்து இருக்கிறாள்//
பொய் சொல்லாதீங்க ..உங்க பொண்ணு நல்லாவே படிக்கிறாங்க இல்ல...

இம்சைஅரசன் பாபு.. said...

//பொய் சொல்லாதீங்க ..உங்க பொண்ணு நல்லாவே படிக்கிறாங்க இல்ல...//

ஹ ..ஹா ..நான் ரொம்ப மக்கு

இனி தான் பார்க்கணும் ..சின்ன வயதில் கழுதை குட்டி கூட பார்பதற்கு குதிரை மாதிரி தான் இருக்கும் ..போக போக தான் தெரியும் மணி அண்ணா ...

Nanjil Kannan said...

யதார்ர்தம் .. நிகழ்வாழ்வில் பலரும் தம மனதில் மருகி உருகி நினைக்கும் மலரும் நினைவுகளை அழகாய் எழுதி உள்ளீர்கள்.. அருமை .....

Madhavan Srinivasagopalan said...

ரொம்ப இயற்கையா இருக்கு..

எனக்கும் அந்தக் கச்சேரி இருக்கு.. அடுத்த மாசம் மோதா வாரத்துல..

செங்கோவி said...

எங்க நினைவையும் சேர்த்து கிளப்பி விடுறீங்களே..//கேக்குறவன் கேனை பையன்னா சன் பிக்சர்ஸ் படம் எல்லாம் சூப்பர் ஹிட்ன்னு சொல்லுவ போல.// இவரு எப்பவுமே இப்படித் தானுங்களா?

Anonymous said...

யதார்த்தமான பதிவு..

சௌந்தர் said...

டவுசரை போட்டுட்டு ஸ்கூல்க்கு போன பயபுள்ள பிளாஸ் பேக் சொல்லுது எல்லாம் நேரம்....

Anonymous said...

very gud one

மதுரை சரவணன் said...

அருமை..வாழ்த்துக்கள்.

Anonymous said...

அடுத்த போஸ்ட்?

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

Ponnarasi Kothandaraman said...

Lovely nostalgic experience :)

Cheers
PK!