"சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி" என்று ஒரு பழமொழி உண்டு .அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ எனக்கு பொருந்தும் .
பதிவுலகத்துல நிறய பதிவு இப்போ வரத்து இல்லை .அதனால நான் என் பொண்ணுக்கு பாடம் சொல்லி கொடுப்போம் என்று என் பொண்ணுகிட்ட போனேன் .என்ன படிக்கிறா என்று பார்த்தேன் .
SOCIAL சயின்ஸ் என் பொண்ணு படிச்சிட்டு இருந்தா .அதுல
HINDU WORSHIP IN TEMPLE
CHRISTIAN WORSHIP IN CHURCH
MUSLIM WORSHIP IN MOSQUE
SIKHS WORSHIP IN GURUDVAR
MUSLIM WORSHIP IN MOSQUE
SIKHS WORSHIP IN GURUDVAR
இப்படி இருந்துச்சு நான் வாசித்து சொல்லி கொடுத்து கொண்டு இருந்தேன் .என் பொண்ணு என்னை பார்த்து
என் மகள்: அப்பா WHORSHIP னா என்னப்பா என்றால் ?.
என் மகள்: அப்பா WHORSHIP னா என்னப்பா என்றால் ?.
நான்: உன்னை காலைல ஸ்கூல் போகும் முன்னாடி என்ன சொல்வேன் என்று கேட்டேன்
என் மகள்: PRAY பண்ண சொல்லுவீங்கன்னு சொன்னாள்..!
நான்:அதை தமிழ் சொல்லுன்னு சொன்னேன்
என் மகள்: சாமி கும்பிட சொல்லுவீங்கன்னு சொன்னாள்..!
நான்: உடனே அது தான் நாம ஹிந்து அதுனால கோவில்ல போய் தானே சாமி கும்பிடுவோம் அதான் worship அப்படின்னு சொன்னேன்
என் மகள்: அப்போ prayer சொல்ல கூடாதான்னு கேட்டா ?
பல்பு !!!!!!
நான்:இல்லை மக்கா கோவில்ங்கறது எல்லோரும் போய் சாமி கும்பிடுறோம் அதனால WORSHIP.இங்க வீட்டுல கும்பிட்ட PRAYER இப்படி சொன்னேன் (சமாளித்தேன் )
என் மகள்:அப்போ ஸ்கூல் ல prayer song சொல்லுறாங்களே அது எப்படின்னு கேட்டா?
பல்பு !!!!!
முடியலை ....போ மக்கா இப்படி என்னையே குழப்பிட்டேயேன்னு சொல்லிட்டு எடத்தை காலி பண்ணினேன்
ஐயோ.....ஐயோ ........(இப்படி தான் நானே வாயை கொடுத்து வாய்ல புண்ணோட போய் சேருகிறேன் ......)
ஆண்டாவா ஏன் என்னை இப்படி சோதிக்கிறன்னு PRAY பண்ணவா?WORSHIP பண்ணவா ? யாராவது பதில் சொல்லுங்க ............!
எலேய் யாரும் ஓடி போக கூடாது ..........அங்க யாரோ ஓடி போறாங்க .........எலேய் நின்னு பதில் சொல்லிட்டு போ .............
டிஸ்க்கி 1 :சரி WORSHIP ,PRAYER இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு .ஆனால் அதை எப்படி சொல்லணும்ன்னு தெரியலை .உடனே பதிவுலகின் ஆன்மீக சக்கரவர்த்தி ,ஹிப்ப்று மொழி புலவர் தேவா அண்ணன் கிட்ட கேட்டேன் .ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சொன்னார் .ஆனால் எனக்கு எப்படி அவளுக்கு விளக்கி சொல்லன்னு இன்னும் தெரியலை .........!
டிஸ்க்கி 2 : எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ......
( பொங்கல் பொங்குவது போல .....நிறைய பல்பு வாங்க வாழ்த்துக்கள்ன்னு சொல்ல கூடாது ஓகே .......)




