Friday, August 17, 2012

லவ் பண்ணுங்க சார்ர்ர்ர்!


லவ் பண்ணுங்க சார்ர்ர்ர்! 

காலைல எட்டு மணி வரை தூங்கிட்டு சரியா பல்லு கூட தேய்க்காம .குளிக்காம நிறைய செண்டா பீச்சு அடிச்சுகிட்டு நேர ஆபிஸ்ல போய்  உக்கார்ந்தா .நேத்து போட்ட வியர்வை நாற்ற சட்டைல  இருந்து சென்ட்டும் சேர்ந்து கப்பு  அடிக்கும் பாருங்க ...பக்கத்துல இருக்குற அட்டு பிகர் கூட உங்கள பார்த்து முறைச்சி கிட்டு தலையில் அடிக்குமே அந்த கொடுமைய பார்க்காம இருக்கணும்ன்ன லவ் பண்ணுங்க சார்!


இதே நீங்க லவ் பண்ணினீங்க வைச்சுக்குவமே, அதி காலைல 5 மணிக்கு குட்மார்னிங் டா செல்லம் காலைல 8 மணிக்கு ஷக்கிலா தெருல மீட் பண்ணுவோம்ன்னு ஒரு எஸ் எம் எஸ் தான் வரும் ! இவன் ஒரு நாளும் பல்லு தேய்க்காம இருக்கிறவன் அன்னைக்கு பினாயில் ஊத்தி வாயக் கழுவி, ஆசிட்ல குளிச்சு சென்ட் பீய்ச்சி அடிச்சுகிட்டுப் போய்  ஈ-ன்னு பல்லக் காண்பிச்சுக்கிட்டு 7.30 கே அங்க போய் அவளப் பிக்கப் பண்ணி, அவ போக வேண்டிய எடத்துல விட்டுகிட்டு, அபீஸ் போய் உக்கார்ந்தா அதே அட்டு பிகர் இவன பார்த்து ஒரு ரொமாண்டிக் லுக் விடுமே பாருங்க ..போங்க சார் அது எல்லாம் அனுபவிக்கனும் சார் ..அதான் சொல்லுறேன் லவ் பண்ணுங்க சார்!
படிச்சு முடிச்சு வெளிநாட்டுக்கு வேலைக்கு போகும்போது உங்க அட்டு பிகர் எண்ணெய் தலைல அடிச்சு சத்தியம் பண்ணிட்டு போவீங்க! போற இடத்துல எந்தப் பொண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்னு! அங்க போனதுக்கப்பறம்தான் உங்க மேலதிகாரியே உங்களுக்கு ப்ரபோஸ் பண்ணும்போதுதான் உறைக்கும்! அய்யய்யோ..தப்பு பண்ணிட்டோமோன்னு! அப்பிடி நீங்க நினைக்க மாட்டீங்களா? அப்ப நீங்க லவ் பண்ணுங்க சார்!


இல்ல நான் லவ் பண்ணமாட்டேன் அப்பா சொல்லுறதக் கேட்டு உருபடுவேன்னு சொன்னா என்னமோ பண்ணுங்க சார், ஆமா உறுப்படியா எதோ ஒரு டிகிரி முடிச்சு வீட்ட காப்பாற்ற வேலைக்கு போவ ..சம்பாதிச்சு அனுப்பினா அவங்களும் உன் பேர்ல போட்டு சேர்த்து வைப்பாங்க ..நீ ஒரு பீடி துண்டு கூட குடிக்காம் ..ஏன் எச்சி பீடி கூட குடிக்காம ,க்வாட்டர் அடிக்காம பணத்த அனுப்பி ஒன்னும் அனுபவிக்காம பணத்த அனுப்பி ..ஹையோ அந்த கொடுமையயும் அனுபவிக்கனும்ன்ன லவ் பண்ணாதீங்க சார்!


இதே நீங்க லவ் பண்ணினா டேய் இன்னைக்கு அந்த பொருக்கி கூட சேர்ந்து பஸ்ஸ்டாண்ட்ல ஒரே பீடியை ரெண்டு பெரும் குடிச்சீங்கலேன்னு என் ஜைன்தவி கேக்கும் போதே அது ஒன்னும் இல்லடி செல்லம்ன்னு பேச்ச மாத்தும் போதே ..டேய் இந்த 50 ரூபாய் பஞ்சு வச்ச சிகரட் குடிடா ன்னு சொல்லும் ..அதுக்கு தான் சொல்லுறேன் லவ் பண்ணுங்க சார்!


இல்ல எங்க அப்பா பார்த்த பொண்ண தான் கட்டிக்குவேன்னு சொன்னா அதுவும் ஒரு டிகிரி முடிச்சிருக்கும் .இப்ப இருக்கிற காலத்துல ரெண்டு பேர் வேலைக்கு போகணும் அதுக்கு ஒரு மாஸ்ட்டர் டிகிரி முடிக்கணும்ன்னு நீ உங்கப்பா கிட்டா சொன்னா ..அவரு அதை கேக்காம உனக்கு ஒரு டிகிரி முடிச்சத கட்டிவைப்பாறு கல்யாணம் முடிஞ்சு நீ அத படிக்க வைக்கணும்! காலைல அடுப்படில ரெண்டு பேருமா பாத்திரத்தப் போட்டு உடைச்சி சமையல் செய்து அரக்க பறக்க ஓடி அவளக் கொண்டு போய் காலேஜ்ல விட்டா! பக்கத்த்துல ஒரு குட்டு பிகரு அண்ணா ன்னு உன்ன கூப்பிட்டு கடுப்ப ஏத்தும் இது தேவையா!


சரி குழந்தை இருந்தா அது கூட விளையாடலாம்னா  காலேஜ் முடிக்கிற வரைக்கும் நோ குழந்தை ன்னு தடா ...அட பாவமே சரி காலேஜ் முடிஞ்சிது இனி குழந்தை பெத்துக்கலாம் ன்னு சொன்னா வேலை கிடைக்கட்டும் அதுக்கு தானே படிச்சேன் ன்னு சொல்லி வேலை தேடுவா ..அப்புறம் வேலை கிடைச்சா இன்னும் ஒரு வருஷம் ஆகிட்டா எனக்கு இன்க்ரீமென்ட் வந்திடும் வேலை பர்மனன்ட் ஆகிடும்ன்னு சொல்லுவா ..அப்போ எனக்கு 40 வயசு ...ஹையா இனி குழந்தை பெத்துக்கலாம்ன்னு சொன்னா ..ஏங்க கண்ணாடில உங்க மூஞ்சிய பார்க்கிறது இல்லையான்னு கேப்பா பாரு ஒரு கேள்வி ..நானும் போய்க் கண்ணாடிய பார்த்தா ..ஒரு முடிகூட தலைல இல்லை ..மீசை கூட வெள்ளை ஆகிடுச்சு ..என்ன கொடுமை பார்த்தீங்களா சார்!


இதே லவ் பண்ணின்னா ..நாங்க மீட் பன்னுவதர்க்காகவே  ஒரு மாஸ்ட்டர் டிகிரி படிக்க போவோம் .. காதல் முத்தி முதல குழந்தைக்கு ஏற்பாடு பண்ணிட்டு கல்யாணம் பற்றி வீட்டுல சொல்லுவோம் ..உங்களுக்கும் ஒரு ஜைன்தவி கிடைக்கட்டும் ..லவ் பண்ணுங்க சார்!


டிஸ்க்கி : இது யாருக்கும் எதிர் பதிவு இல்லை முக்கியமா நண்பன் டெரர் பாண்டியனுக்கு எதிர் பதிவு இல்லை

52 comments:

பட்டிகாட்டான் Jey said...

இந்தப் பதிவிற்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ துளியளவும் சம்பந்தம் இல்லை என்பதை தாழமையுடனும், பணிவன்புடனும் தெரிவித்துக் கொள்கிறேன்

பட்டிகாட்டான் Jey said...

// காலைல எட்டு மணி வரை தூங்கிட்டு சரியா பல்லு கூட தேய்க்காம .குளிக்காம நிறைய செண்டா பீச்சு அடிச்சுகிட்டு நேர ஆபிஸ்ல போய் உக்கார்ந்தா .நேத்து போட்ட வியர்வை நாற்ற சட்டைல இருந்து சென்ட்டும் சேர்ந்து கப்பு அடிக்கும் பாருங்க ..//

மிஸ்டர் டவுசர் பாண்டி அவர்கள் மேடைக்கி அழைக்கப்படுகிறார்கள்.

பட்டிகாட்டான் Jey said...

// என் ஜைன்தவி கேக்கும் போதே அது ஒன்னும் இல்லடி செல்லம்ன்னு பேச்ச மாத்தும் போதே ..//

டேய் இம்சை வெளியூரு ..திருவாரூர்ல குடும்பத்தோட செட்டிலாயிடான்...அவன ஏண்டா சொரிஞ்சிவிடுறே...

இம்சைஅரசன் பாபு.. said...

//டேய் இம்சை வெளியூரு ..திருவாரூர்ல குடும்பத்தோட செட்டிலாயிடான்...அவன ஏண்டா சொரிஞ்சிவிடுறே...//

ஆஹா ..கிளப்பிவிட்டாருயா ..கிளப்பி விட்டுட்டாரு ..........அண்ணே இது நண்பன் டெரர்க்கு ..

பட்டிகாட்டான் Jey said...

// அவரு அதை கேக்காம உனக்கு ஒரு டிகிரி முடிச்சத கட்டிவைப்பாறு கல்யாணம் முடிஞ்சு நீ அத படிக்க வைக்கணும்! காலைல அடுப்படில ரெண்டு பேருமா பாத்திரத்தப் போட்டு உடைச்சி சமையல் செய்து அரக்க பறக்க ஓடி அவளக் கொண்டு போய் காலேஜ்ல விட்டா! பக்கத்துல ஒரு குட்டு பிகரு அண்ணா ன்னு உன்ன கூப்பிட்டு கடுப்ப ஏத்தும் இது தேவையா! //

இது யாருக்குடா??? டேமேஜருக்கா??? ஓகே குத்துமதிப்பா கூப்பிடுவோம்... சிங்கம் சிரிப்பு போலீஸ் அர்ஜண்டா ஆஜராகவும்....

இம்சைஅரசன் பாபு.. said...

// இது யாருக்குடா??? டேமேஜருக்கா??? ஓகே குத்துமதிப்பா கூப்பிடுவோம்... சிங்கம் சிரிப்பு போலீஸ் அர்ஜண்டா ஆஜராகவும்... //

ஹ ..ஹா கரெக்கட்ட கண்டு பிடிச்சிட்டீங்களே ..!

பட்டிகாட்டான் Jey said...///சரி குழந்தை இருந்தா அது கூட விளையாடலாம்னா காலேஜ் முடிக்கிற வரைக்கும் நோ குழந்தை ன்னு தடா ...அட பாவமே சரி காலேஜ் முடிஞ்சிது இனி குழந்தை பெத்துக்கலாம் ன்னு சொன்னா வேலை கிடைக்கட்டும் அதுக்கு தானே படிச்சேன் ன்னு சொல்லி வேலை தேடுவா ..அப்புறம் வேலை கிடைச்சா இன்னும் ஒரு வருஷம் ஆகிட்டா எனக்கு இன்க்ரீமென்ட் வந்திடும் வேலை பர்மனன்ட் ஆகிடும்ன்னு சொல்லுவா ..///

இது யாருக்குடா?.. அப்பர்சண்டுக்கா????....செந்தாண்டா சேகரு.....

பட்டிகாட்டான் Jey said...

இம்சை தலையிலா முண்டம்(தலைஇல்லைனாலா அது முண்டம்தானே???!!!) விடிகாலை 3 மணிக்கிதான் தூங்கப் போயிருக்கு களட்ய்ஹ்துல எறங்கி கரகாட்டம் ஆட லேட் ஆகும்னு நினைக்கிறேன்...அதுக்குள்ள செம்ப எம்புட்டு நசுக்கனுமோ நசுக்கிட்டு ஓடிப்போயிரு....

Thozhirkalam Channel said...

தேவை தான்..

பட்டிகாட்டான் Jey said...

// ஹ ..ஹா கரெக்கட்ட கண்டு பிடிச்சிட்டீங்களே ..!//

குத்துமதிப்பா கேட்டது ஒர்க் அவுட்டாகுதே... யார்ரா சொன்னது குத்துக்கு மதிப்பில்லைனு.... ராஸ்க்கல்ஸ்......

Unknown said...

இம்சை இம்சை

இம்சைஅரசன் பாபு.. said...

@ஜெய்சங்கர்
இதுக்கெல்லாம் போய் சுவருல முட்டகூடாது ...

வைகை said...

பக்கத்துல இருக்குற அட்டு பிகர் கூட உங்கள பார்த்து முறைச்சி கிட்டு தலையில் அடிக்குமே அந்த கொடுமைய பார்க்காம இருக்கணும்ன்ன லவ் பண்ணுங்க சார்! ///

உங்களை பார்த்து தலைல அடிச்சிகிட்ட அட்டு பிகர் யார்னு எனக்கு தெரியுமே :-))

வைகை said...

இல்ல நான் லவ் பண்ணமாட்டேன் அப்பா சொல்லுறதக் கேட்டு உருபடுவேன்னு சொன்னா என்னமோ பண்ணுங்க சார்///

சார்.. நீங்க கூட உங்க அப்பா பேச்சுதான் கேட்டீங்க! ஆனா இன்னும் உருப்படளியே சார் :-))

மாலுமி said...

தக்காளி.................இரு ஒரு கோட்டர் வீசிட்டு வரேன் :)

என்னங்கடா...........நேத்து அவன் பொலம்பிட்டு ஒன்னு போட்டான்......இன்னைக்கு நீங்க எதிர் பதிவுன்னு ஒன்னு போடுறிங்க.........நாளைக்கு நான் ஒரு பதிவு போட்டா.........எனக்கு எதிர் பதிவு யாரோ ஒரு நாதாரி போடும்........அப்போ நான் எப்படி கோமணத்துல மகுட கள் வாங்கறது...........ராஸ்கல்ஸ்.........இருடி வரேன் :)))

மாலுமி said...

.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது நம்ம ஜிப்பு போலீஜு கத மாதிரியில்ல தெரியுது.....?

இம்சைஅரசன் பாபு.. said...

// இது நம்ம ஜிப்பு போலீஜு கத மாதிரியில்ல தெரியுது.....? //
இப்படியே ஆள் ஆளுக்கு கோர்த்து விடுங்கபா ..வெளங்கிடும் .. :)))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////காலைல எட்டு மணி வரை தூங்கிட்டு சரியா பல்லு கூட தேய்க்காம .குளிக்காம நிறைய செண்டா பீச்சு அடிச்சுகிட்டு நேர ஆபிஸ்ல போய் உக்கார்ந்தா .நேத்து போட்ட வியர்வை நாற்ற சட்டைல இருந்து சென்ட்டும் சேர்ந்து கப்பு அடிக்கும் பாருங்க ...பக்கத்துல இருக்குற அட்டு பிகர் கூட உங்கள பார்த்து முறைச்சி கிட்டு தலையில் அடிக்குமே //////


கருப்பா இருக்கறது சரி, அது என்ன பயங்கரமான்னு யோசிச்சிட்டு இருந்தேன், இதுதான் அந்த பயங்கரமா இருக்கறதா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இவன் ஒரு நாளும் பல்லு தேய்க்காம இருக்கிறவன் அன்னைக்கு பினாயில் ஊத்தி வாயக் கழுவி, ஆசிட்ல குளிச்சு சென்ட் பீய்ச்சி அடிச்சுகிட்டுப் போய் ஈ-ன்னு பல்லக் காண்பிச்சுக்கிட்டு 7.30 கே அங்க போய் அவளப் பிக்கப் பண்ணி, அவ போக வேண்டிய எடத்துல விட்டுகிட்டு, அபீஸ் போய் உக்கார்ந்தா அதே அட்டு பிகர் இவன பார்த்து ஒரு ரொமாண்டிக் லுக் விடுமே பாருங்க ..போங்க சார் அது எல்லாம் அனுபவிக்கனும் சார் ..////////

அது எல்லாம் அனுபவிக்கனும்னா..... அந்த அட்டு பிகரையுமா..... அட போங்க சார் உங்களுக்கு ரொம்ப குறும்பு....!

இம்சைஅரசன் பாபு.. said...

// அது எல்லாம் அனுபவிக்கனும்னா..... அந்த அட்டு பிகரையுமா..... அட போங்க சார் உங்களுக்கு ரொம்ப குறும்பு.... //
அதாவது கிடைக்குதேன்னு சந்தோஷ படுவீங்களா அத விட்டு போட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// அங்க போனதுக்கப்பறம்தான் உங்க மேலதிகாரியே உங்களுக்கு ப்ரபோஸ் பண்ணும்போதுதான் உறைக்கும்! அய்யய்யோ..தப்பு பண்ணிட்டோமோன்னு! அப்பிடி நீங்க நினைக்க மாட்டீங்களா? ////////

மேலதிகாரி ப்ரபோஸ் பண்றதா...? யோவ் எந்த ஊர்லயாவது கள்ளக்காதலுக்கு ப்ரபோஸ் பண்ணுவாங்களா? (பின்ன மேலதிகாரின்னா 18 வயசு பொண்ணா மேலதிகாரியா இருக்கும்? அதுக்கு 45 வயசாவது இருக்காதா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இதே நீங்க லவ் பண்ணினா டேய் இன்னைக்கு அந்த பொருக்கி கூட சேர்ந்து பஸ்ஸ்டாண்ட்ல ஒரே பீடியை ரெண்டு பெரும் குடிச்சீங்கலேன்னு என் ஜைன்தவி கேக்கும் போதே அது ஒன்னும் இல்லடி செல்லம்ன்னு பேச்ச மாத்தும் போதே ..டேய் இந்த 50 ரூபாய் பஞ்சு வச்ச சிகரட் குடிடா ன்னு சொல்லும் ..அதுக்கு தான் சொல்லுறேன் லவ் பண்ணுங்க சார்! //////

ஆக ஒரு ஓசி பில்டர் சிகரெட்டுக்காக லவ் பண்ண சொல்றீங்க? அதே பொண்ணு கல்யாணத்துக்கப்புறம் சிகரெட்டுன்னாலே சாப்பாட்ட கட் பண்ணிடுவாளே அப்ப என்ன பண்ணுவீங்க சார்.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// அரக்க பறக்க ஓடி அவளக் கொண்டு போய் காலேஜ்ல விட்டா! பக்கத்த்துல ஒரு குட்டு பிகரு அண்ணா ன்னு உன்ன கூப்பிட்டு கடுப்ப ஏத்தும் இது தேவையா! ///////

அண்ணான்னு கூப்புட்டாலும் அத இத பண்ணி கண்ணான்னு கூப்பிட வைச்சி ரொமான்ஸ் பண்ணனும்...... அதவிட்டுப்புட்டு கண்டபடி கடுப்பாகுனா பைல்ஸ்தான் வரும்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அப்போ எனக்கு 40 வயசு ...ஹையா இனி குழந்தை பெத்துக்கலாம்ன்னு சொன்னா ..ஏங்க கண்ணாடில உங்க மூஞ்சிய பார்க்கிறது இல்லையான்னு கேப்பா பாரு ஒரு கேள்வி ..நானும் போய்க் கண்ணாடிய பார்த்தா ..ஒரு முடிகூட தலைல இல்லை ..மீசை கூட வெள்ளை ஆகிடுச்சு ..என்ன கொடுமை பார்த்தீங்களா சார்! //////

இப்பல்லாம் அவனவன் பண்ற அயோக்கியத்தனத்தால 30 வயசுலயே நரைச்சிடுறானுங்க...... அதுனால இதுக்கெல்லாம் கவலப்படாம, டை அடிச்சிட்டு போய் ஆக வேண்டிய வேலைய பாக்க சொல்லுங்க சார்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இதே லவ் பண்ணின்னா ..நாங்க மீட் பன்னுவதர்க்காகவே ஒரு மாஸ்ட்டர் டிகிரி படிக்க போவோம் .. காதல் முத்தி முதல குழந்தைக்கு ஏற்பாடு பண்ணிட்டு கல்யாணம் பற்றி வீட்டுல சொல்லுவோம் ..உங்களுக்கும் ஒரு ஜைன்தவி கிடைக்கட்டும் ..லவ் பண்ணுங்க சார்! //////

லவ் பண்ண எல்லாரும் ரெடிதான், ஆளுக்கொரு ஜைந்தவி ஏற்பாடு பண்ணி கொடுத்துட்டீங்கன்னா... இப்பவே அடுத்த கட்டத்துக்கு போய்டுவாங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்க்கி : இது யாருக்கும் எதிர் பதிவு இல்லை முக்கியமா நண்பன் டெரர் பாண்டியனுக்கு எதிர் பதிவு இல்லை////

அது ஒரு பதிவு, அதுக்கு இது எதிர் பதிவு..... நாராய்ணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடிலடா.... மருந்த அடிச்சி விடுங்கடா......

TERROR-PANDIYAN(VAS) said...

:)

இம்சைஅரசன் பாபு.. said...

பாருடா ..இந்த நாதாரி ஸ்மைலி போட்டு கிட்டு போறத...தூ பரதேசி ..உனக்கு கோவம் வரலை .... என்கூட சண்டைக்கு வாடா

மாணவன் said...

லவ் பண்ணுங்க சார் ஃலைப் நல்லாருக்கும்..... :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
லவ் பண்ணுங்க சார் ஃலைப் நல்லாருக்கும்..... :-)/////


யாரு லைஃப் சார்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னாடை பதிவு எங்கடா?

இம்சைஅரசன் பாபு.. said...

//பன்னாடை பதிவு எங்கடா?//

வயசானாலே கண்ணு தெரியாது என்பது உண்மை தான் போல ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

//பன்னாடை பதிவு எங்கடா?//

வயசானாலே கண்ணு தெரியாது என்பது உண்மை தான் போல ...//

அப்படின்னா உன் வயசுக்கு இந்நேரம் நீ... சரி விடு வேணாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னாடை பதிவு எங்கடா?/////

பிகர் படம் போட்டா மட்டும் ஜூம் போட்டு பாக்குறீங்க,பாபு மாதிரி அப்பாவி ஆளுக பதிவு போட்டா கண்ணுல தெரியவே மாட்டேங்கிது.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இம்சைஅரசன் பாபு.. said...

//பன்னாடை பதிவு எங்கடா?//

வயசானாலே கண்ணு தெரியாது என்பது உண்மை தான் போல ...//

அப்படின்னா உன் வயசுக்கு இந்நேரம் நீ... சரி விடு வேணாம்///////

அவர் வயசுக்கு இன்னேரம் காது கேட்காதுன்னு சொல்றியா? கேட்டு மட்டும் என்ன பண்ண போறாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னாடை பதிவு எங்கடா?/////

பிகர் படம் போட்டா மட்டும் ஜூம் போட்டு பாக்குறீங்க,பாபு மாதிரி அப்பாவி ஆளுக பதிவு போட்டா கண்ணுல தெரியவே மாட்டேங்கிது.....?//

இந்தாளு பிளாக்கை என் விகடன்ல போட்ட நேரம் என் விகடனையே நிப்பாட்டிடாங்க

இம்சைஅரசன் பாபு.. said...

// இந்தாளு பிளாக்கை என் விகடன்ல போட்ட நேரம் என் விகடனையே நிப்பாட்டிடாங்க //

பொறமை பிடிச்ச பய .... கோவில்பட்டில அன்னைக்கு உங்க மாமா க்கு எவ்வளோ சேல்ஸ் ன்னு கேட்டு பாரு நாயே (முக்கிய குறிப்பு : ரமேஷ் மாமா தான் கோவில்பட்டி ஏஜென்ட் ...ஆனந்த விகடன் ஏஜென்ட் தான் ..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
// இந்தாளு பிளாக்கை என் விகடன்ல போட்ட நேரம் என் விகடனையே நிப்பாட்டிடாங்க //

பொறமை பிடிச்ச பய .... கோவில்பட்டில அன்னைக்கு உங்க மாமா க்கு எவ்வளோ சேல்ஸ் ன்னு கேட்டு பாரு நாயே (முக்கிய குறிப்பு : ரமேஷ் மாமா தான் கோவில்பட்டி ஏஜென்ட் ...ஆனந்த விகடன் ஏஜென்ட் தான் ..)//////

யோவ் பசங்களுக்கு கைல காசு கொடுத்து கோவில்பட்டி பூரா விகடனை வாங்க சொன்னீங்களாமே?

இம்சைஅரசன் பாபு.. said...

//யோவ் பசங்களுக்கு கைல காசு கொடுத்து கோவில்பட்டி பூரா விகடனை வாங்க சொன்னீங்களாமே?

August 17, 2012 11:43 PM //

நோ ..நோ ..உங்க சார் போட்டோ ஆனந்த விகன்ட்ல வந்திருக்கு ன்னு அவரா பசங்கள கூப்பிட்டு வித்துட்டாரு மக்கா ..வேலை பார்க்குற ஸ்டாப் கூட விடலை .......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
// இந்தாளு பிளாக்கை என் விகடன்ல போட்ட நேரம் என் விகடனையே நிப்பாட்டிடாங்க //

பொறமை பிடிச்ச பய .... கோவில்பட்டில அன்னைக்கு உங்க மாமா க்கு எவ்வளோ சேல்ஸ் ன்னு கேட்டு பாரு நாயே (முக்கிய குறிப்பு : ரமேஷ் மாமா தான் கோவில்பட்டி ஏஜென்ட் ...ஆனந்த விகடன் ஏஜென்ட் தான் ..)//////

யோவ் பசங்களுக்கு கைல காசு கொடுத்து கோவில்பட்டி பூரா விகடனை வாங்க சொன்னீங்களாமே?//

ஆனந்த விகடன் வாங்கிட்டு வர்ற வங்களுக்கு பீஸ்ல 10% discount ன்னு சொல்லிருக்கான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
// இந்தாளு பிளாக்கை என் விகடன்ல போட்ட நேரம் என் விகடனையே நிப்பாட்டிடாங்க //

பொறமை பிடிச்ச பய .... கோவில்பட்டில அன்னைக்கு உங்க மாமா க்கு எவ்வளோ சேல்ஸ் ன்னு கேட்டு பாரு நாயே (முக்கிய குறிப்பு : ரமேஷ் மாமா தான் கோவில்பட்டி ஏஜென்ட் ...ஆனந்த விகடன் ஏஜென்ட் தான் ..)//////

யோவ் பசங்களுக்கு கைல காசு கொடுத்து கோவில்பட்டி பூரா விகடனை வாங்க சொன்னீங்களாமே?//

ஆனந்த விகடன் வாங்கிட்டு வர்ற வங்களுக்கு பீஸ்ல 10% discount ன்னு சொல்லிருக்கான்/////////

அட்டைப்படத்துல இவரு போட்டோவ போட்டு ஒரு புக் ரெடி பண்ணா, 100% டிஸ்கவுண்ட் கிடைக்கும் போல? ஒரு புக் அடிக்க எவ்ளோ ஆகும்?

இம்சைஅரசன் பாபு.. said...

// அட்டைப்படத்துல இவரு போட்டோவ போட்டு ஒரு புக் ரெடி பண்ணா, 100% டிஸ்கவுண்ட் கிடைக்கும் போல? ஒரு புக் அடிக்க எவ்ளோ ஆகும்? //

அட்டைப்பட தலைப்பு ..இன்னொரு அஜித்குமார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

yes. Red movie ajith

MARI The Great said...

:D :D

செங்கோவி said...

காலம் போன காலத்துல லவ்வைப் பத்தி அண்ணன் ஏன் பேசறாரு? இது உண்மையிலேயே எதிர்பதிவு தானா..இல்லே, கடையைப் பார்த்துக்க வேற ஆள் தேடுறாரா..?

செங்கோவி said...

என்னது..என் விகடன்ல அண்ணனைப் பத்தி போட்டாங்களா? அதுல பதிவர்களைப் பத்தித்தானே எழுதுவாங்க?...எப்படி இது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// செங்கோவி said...என்னது..என் விகடன்ல அண்ணனைப் பத்தி போட்டாங்களா? அதுல பதிவர்களைப் பத்தித்தானே எழுதுவாங்க?...எப்படி இது...///

உங்க விகடன்ல மட்டுமில்ல, அவர் வாங்குன விகடன்லயும் அவரைப் பத்தி எழுதி இருந்தாங்களாம், அதான் ஒண்ணுமே புரியலைன்னாரு...

செங்கோவி said...

/பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// செங்கோவி said...என்னது..என் விகடன்ல அண்ணனைப் பத்தி போட்டாங்களா? அதுல பதிவர்களைப் பத்தித்தானே எழுதுவாங்க?...எப்படி இது...///

உங்க விகடன்ல மட்டுமில்ல, அவர் வாங்குன விகடன்லயும் அவரைப் பத்தி எழுதி இருந்தாங்களாம், அதான் ஒண்ணுமே புரியலைன்னாரு...//

யப்பா..சாமீ..முடியலைய்யா!

vinu said...

me the 50thuuuuuuuuu

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

Visit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_2.html

sury siva said...


இம்சை அரசனே !! வலைச்சர ஆசிரியர் என்னை இங்கே அனுப்பி வைத்தார்.


லவ் பண்ணுங்க ஸார் என்று கூரை உச்சியில் நின்று கூக்குரல் இடும்
உங்கள் குரலில் நிறையவே கருத்தும் நன்மையும் இருக்கிறது.

ஆகவே,
இன்று முதல் லவ் பண்ணத்துவங்குவேன்.
என் வூட்டுக் கிழத்தை.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in