Monday, December 26, 2011

டெரர் கும்மி விருதுகள் ..


அனைவருக்கும் வணக்கம்,

கொஞ்சம் இருங்க.. இது என் ப்ளாக்தானான்னு செக் பண்ணிட்டு வர்றேன்... ம்ம்... என்னோட ப்ளாக்தான், நல்லவேள ஆட்சி மாறிடுச்சு.. இல்லைனா இதையும் பட்டா போட்ருப்பாங்க. சரி.. அரசியல் பேச இங்க வரலை... லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கேன். எங்களோட டெரர் கும்மிய பத்தி நான் உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை. அதன் மணமும் அங்க உள்ளவங்களோட மனசும் உங்களுக்கு நல்லாவே தெரியும்.  கதை ,HUNT FOR HINT போட்டின்னு கலந்து கட்டி அடிச்சது  நாங்க தான் .

அதுக்கெல்லாம் ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி சொல்லிவிடுகிறேன்.இப்ப நாங்க விருதுகளோட வர்றோம். கண்டிப்பா அனைவரும் கலந்துக்கங்க. அந்த வெற்றியாளர் நீங்களாக கூட இருக்கலாம். மேலும் விபரங்களுக்கு தொடந்து படிங்க.
அனைவருக்கும் வணக்கம்,
ஒரு இனிமையான பொழுதில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முதல் முறையாக இதைப் படிப்பவர்கள் சிரமம் பாராமல் டெரர் கும்மி விருதுகள் அறிவிப்பு மற்றும் டெரர் கும்மி விருதுகள் போட்டி விதிமுறைகள் ஆகிய இரண்டு பதிவுகளையும்  படித்துவிட்டு இதை தொடருங்கள். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று டிசம்பர்  26-ம் தேதி உங்கள் பதிவுகளை இணைப்பதற்கான அறிவிப்போடு வந்துள்ளோம்.



முதலில் நாங்கள் கொடுக்கும் இணைப்பை தொடுத்து எங்கள் போட்டிக்கான தளத்தை திறந்துகொள்ளுங்கள். அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பதிவு ( ரெஜிஸ்டர் )ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் விரைவில் உங்களுக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும் என்ற தகவல் ( மெசேஜ் ) வரும். உங்கள் மின்னச்சல் முகவரிக்கு அந்த லிங்க் வரும்வரை தயவுசெய்து காத்திருங்கள். எதற்கும் உங்களுடைய ஸ்பேம் அல்லது ஜங்க் மெயிலையும் சோதனை செய்துகொள்ளு்கள். மின்னஞ்சலில் ஆக்டிவேசன் லிங்க் கிடைக்கப்பட்டு அதை அழுத்தினால் நீங்கள் இப்போது பதிவுகளை இணைப்பதற்கு தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
பதிவுகளை இணைப்பதற்கு இரண்டு பிரிவுகளாக வைத்துள்ளோம். பொதுப்பிரிவில் நீங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட மூன்று பதிவுகளை மட்டுமே இணைக்கமுடியும். அடுத்து புதுமுக பதிவர்களுக்கான பிரிவு. இதில் அவர்களின் சிறந்த பதிவாகக் கருதும் மூன்று பதிவுகளை இணைக்கலாம். மேலும் புதுமுக பதிவர்கள் மட்டும் பொதுப்பிரிவில் இணைத்த பதிவுகளையும் புதுமுக பிரிவில் இணைக்கலாம். பதிவுகளைஇணைக்க கடைசி தேதி 2012 ஜனவரி 6 என்று விதிமுறைகளில் அறிவித்தோம். பல வாசகர்கள் தொடர்புகொண்டு விடுமுறை நாட்கள் அதிகம் வருவதால் கால அவகாசத்தை நீட்டிக்க சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2012 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்க்கு பிறகு இணைக்கப்படும் பதிவுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுடைய விதிமுறைகள் பற்றிய பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். இதையும் மீறி ஏதேனும் சந்தேகம் அல்லது பதிவு செய்வதில் ( ரெஜிஸ்டர் ) பதிவுகளை இணைப்பதில் பிரச்னை அல்லது குழப்பம் இருந்தால் தயங்காமல் கருத்துரைகளில் கேளுங்கள் அல்லது  contest_2011@terrorkummi.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.உங்களுக்கு  உதவுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது சுலபமான  ஒன்றுதான். கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  இணைப்பை பயன்படுத்தி எந்த பிரிவில் உங்கள் பதிவுகளை இணைக்கப்போகிறீர்கள் என்று தேர்வு செய்து உங்கள்  பதிவுகளைஇணைக்கவும். இணைப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை சரியான பிரிவில் சரியான பதிவை இணைக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், ஏனென்றால் ஒருமுறை  இணைத்த பதிவை மறுமுறை மாற்ற இயலாது. மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு தொடர்ந்து உங்களோடு இணைந்திருக்கிறோம். நன்றி.
                                                                                      



12 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதிவு செய்து பதிவுகளையும் அனுப்பியாச்சி பாபு

இம்சைஅரசன் பாபு.. said...

நன்றி சௌந்தர் ...

MANO நாஞ்சில் மனோ said...

பாஸ்வேர்ட் ஏற்ருகொள்ளமாட்டேங்குது பாபு ஏன்...?

தினேஷ்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
பாஸ்வேர்ட் ஏற்ருகொள்ளமாட்டேங்குது பாபு ஏன்...?

வணக்கம் அண்ணே முதலில் தாங்கள் மெயில் ஐடி யை பதிவு(ரிஜிஸ்டர்) செய்யுங்கள் பின்பு தங்களுக்கு விரைவில் ஆக்டிவேஷன் மெயில் அனுப்பப்படும் அதன்பிறகே தாங்கள் உள்ளே நுழையமுடியும்

Starjan (ஸ்டார்ஜன்) said...

எனது இடுகைகளையும் இணைத்துள்ளேன். நன்றி நண்பர்களே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

நாய் நக்ஸ் said...

:))))))))))

நாய் நக்ஸ் said...

டெம்பிளேட் கமெண்ட் போடுவோர் சங்கம்....

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புது பதிவருக்கு வாழ்த்துக்கள்

Chitra said...

HAPPY NEW YEAR!!! HAPPY PONGAL!!!

:-)

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in