என்ன நடக்கிறது தமிழ் நாட்டில் ஒண்ணுமே புரியவில்லை .நேத்து மங்குனி பதிவில் என்கௌண்டர் பற்றி எழுதி இருக்கிறார் அதில் தமிழ் மலர் என்ற பதிவர் நானும் ஒரு பத்திரிகையாளர் என்று கூறி இருக்கிறார் .சரி அப்போ உண்மை என்பது பத்திரிகையில் வரவே வராதா ?........
போன வாரம் என்னடான்னா ஒரே கீர்த்திவாசன் கடத்த பட்ட செய்தி .......சரி கீர்த்திவாசன் அப்பா பேரு ரமேஷ் அவரோட போட்டோவ ஒரு நாதாரிகளும் போடலை.கேட்டா privacyன்னு சொல்லுவாங்க ......ஆனா இந்த போலீஸ் 50 ரூபாய் திருடுறவன ஜட்டியோட போஸ் கொடுத்து பத்திரிகையில் போடுவாங்க.ஒரே நாள் இரவோடு இரவாக ஒரு கோடி புரட்டின புண்ணியவான் அ கண் குளிர பார்க்கலாம்னு நினைச்சா அவர் முஞ்சிய கடைசி வரைக்கும் பார்க்கவே முடியல? இது தான் பத்திரிகைகாரங்க.ஒரு வேளை அவர் கோடிஸ்வரர் அதனால் தன் முகத்தை வெளி உலகத்திற்கு காண்பிக்க மாட்டார் போல இருக்கு .இதற்கு உடந்தை இந்த பத்திரிகை இதுதான் பத்திரிகை தர்மமா?
போன வாரம் என்னடான்னா ஒரே கீர்த்திவாசன் கடத்த பட்ட செய்தி .......சரி கீர்த்திவாசன் அப்பா பேரு ரமேஷ் அவரோட போட்டோவ ஒரு நாதாரிகளும் போடலை.கேட்டா privacyன்னு சொல்லுவாங்க ......ஆனா இந்த போலீஸ் 50 ரூபாய் திருடுறவன ஜட்டியோட போஸ் கொடுத்து பத்திரிகையில் போடுவாங்க.ஒரே நாள் இரவோடு இரவாக ஒரு கோடி புரட்டின புண்ணியவான் அ கண் குளிர பார்க்கலாம்னு நினைச்சா அவர் முஞ்சிய கடைசி வரைக்கும் பார்க்கவே முடியல? இது தான் பத்திரிகைகாரங்க.ஒரு வேளை அவர் கோடிஸ்வரர் அதனால் தன் முகத்தை வெளி உலகத்திற்கு காண்பிக்க மாட்டார் போல இருக்கு .இதற்கு உடந்தை இந்த பத்திரிகை இதுதான் பத்திரிகை தர்மமா?
சரி இது எல்லாம் இருக்கட்டும் நான் இப்பொழுது இன்னொரு கேள்வி கேட்கிறேன் இதை அரசியல் தெரிந்த நபர்கள் யாராவது வந்து பதில் கூறுங்கள் .தமிழ் நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் சிமெண்ட் விலை 160 ரூபாயில் இருந்து 300 ரூபாய்க்கு ஏறிவிட்டது .ஏன் இந்த திடீர் ஏற்றம்?.அரசும் மௌனம் சாதிக்கிறதே தவிர இதற்கு விடை சொல்ல வில்லை .
மத்திய மாநில அரசுகள் புதிய வரி எதுவும் விதிக்கவும் இல்லை.மூல பொருட்களின் விலையும் ஏற வில்லை .ஒருமூடை சிமெண்ட்ன் அடக்கவிலை 140 முதல் 160 ரூபாய் தான் பின்பு ஏன் இந்த விலை ஏற்றம் ?
பத்திரிகை துறை ஏன் மௌனம் சாதிக்கிறது ?அவர்களுக்கு தெரியுமே ?.ஏன் அவர்கள் இதை பற்றி விரிவாக எழுத வில்லை ?..
எதற்கெடுத்தாலும் பக்கத்து மாநிலத்தை சுட்டி காட்டும் நமது முதல்வர் இந்த விசயத்தில் மௌனமாக இருக்கிறார் .ஏனென்றால் பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து கிட்டத்தட்ட 60 முதல் 75 ரூபாய் அதிகமாக நம் மாநிலத்தில் இருக்கிறது..
ஏன் இந்த பகல் கொள்ளை ? கட்டுமான வேலை ஸ்தம்பித்து நிற்கிறது ........நிறைய தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள் .இதற்கும் பதில் இல்லை .......
ஒருவேளை விவசாய நிலங்கள் எல்லாம் வீடுகளாக மாறுகிறது அதனால் எல்லா பொருட்களின் விலையை ஏற்றி விட்டால் நடுத்தர மக்களால் வீடு கட்ட முடியாது ........விவசாய நிலமும் விலை போகாது என்ற எண்ணமோ? தெரியவில்லை?சிமெண்ட் மட்டும் இல்ல செங்கல் 3.50 ரூபாயில் இருந்து 6 ரூபாய் ஆகி இருக்கிறது (ஒரு செங்கல்).கம்பி 33000திலிருது 40000ஆகிவிட்டது (ஒரு டன்னுக்கு ).
ஏன் இந்த விலை ஏற்றம் புரியவே இல்லை .?
யாராவது வந்து சொல்லுங்க ..நானும் சீக்கிரம் வீடு கட்டனும் (ரமேஷும் பாவம் இப்ப தான் நிலத்தை வாங்கினான் அதுக்குள்ள இவங்களுக்கு பொருக்க முடியலை.இனி எப்ப வீட்ட கட்டி ?எப்ப கல்யாணத்தை பண்ண போறனோ ? )............
பன்னி வாங்க நீங்க தான் சரியா விளக்கம்(வில்லங்கம் வரகூடாது மக்கா) கொடுப்பீர்கள் ......
138 comments:
வாங்க வாங்க!!
விவசாய நிலங்கள் வீடுகளாக மாறுவதால் இப்போதெல்லாம் விவசாயம் செய்பவர்களும் காசுக்கு ஆசைப்பட்டு தங்கள் நிலங்களை விற்கிறார்கள்
பன்னி வாங்க நீங்க தான் சரியா விளக்கம்(வில்லங்கம் வரகூடாது மக்கா) கொடுப்பீர்கள் .////
வாங்க வாங்க...
நிலங்களில் விலை ஏறிப்போதால் நிலங்கள் வாங்குவதும் கடினமாகிறது. அப்படியே கஷ்டப்பட்டு வாங்கிட்டாலும் வீடுகட்டுறது ரொம்ப கஷ்டம்!
டெர்ரர் உனக்கு தான் இன்னைக்கு வடை எடுத்துக்கோ
ஏன் இந்த பகல் கொள்ளை ? கட்டுமான வேலை ஸ்தம்பித்து நிற்கிறது ........நிறைய தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள் .
..... வேதனையான விஷயம் தான்.
சில பேர் 2 வருசம் முன்னாடி வாங்கின நிலங்களை வீடுகட்ட முடியாம வச்சிருந்தாங்க. இப்போ அந்த நிலங்களை ரொம்ப அதிக விலைக்கு விற்றுட்டாங்க.
எனக்கு ஒரு சந்தேகம் இந்த நிலங்கள் விலை ஏறிப்போனதுக்கு என்ன காரணம்?
nalla kelvi.. vidaithaan illai
என்னுடைய புரிதலில் இது எல்லாம் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தின் விளைவாக இருக்கலாம். கட்டுக்குள் விலைவாசியை கொண்டுவர முடியாது...
ஏன் தெரியுமா தமிழ்நாட்டில் கவர்ச்சி அரசியல்தான் நடக்கிறது. இலவசங்கள் கொடுக்கும் போது அதாவது கொடுக்கிறார்களே என்று வாங்கிக் கொண்டு சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இலவசங்கள் எங்கே இருந்து வருகின்றன என்று யாரும் சிந்திப்பதில்லை...
அரசின் திட்டங்களின் மூலம் வருவாய் ஈட்டல் குறைவு...கடைசியில் எங்கே கை வைப்பார்கள்....விலைவாசியில்தான்.....! இதன் நேரடியான தவறு...எங்கே இருக்கிறது தெரியுமா..இலவசங்களை வாங்கும் போது....சந்தோசப்படும் மனிதர்களிடம் இருக்கிறது.
ஏன் என்ற கேள்வி..
இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை.....ஆனால்... யாரும் கேட்பதில்லை.. வீ ஆல் லுக்கிங் ஃபார் அவர் ஓவ்ன் பெனிஃபிட்....!
இன்னொரு விசயம்....
இப்டி அடிக்கடி எழுதுப்பா.....!
@dheva
சபாஷ் சரியான பதில் தேவா அண்ணா
என்ன பாபு வீடு கட்ட போறீங்களா
@ LK
உங்களுக்கு தெரிந்த பதிலை சொல்லுங்க ..தேவா அண்ணா போடுறாரு பாருங்க
@சௌந்தர்
கனவாகவே இருக்கு மக்கா........முடியாது போல இருக்கே
இந்த டெர்ரர் வாங்க .வாங்க ......சொல்லிட்டு ...க்வாட்டர் அடிச்சிட்டு ....மட்டை ஆகிட்டான் போல இருக்கே
கழுத குடிசையா இருந்தாலும் பரவாயில்லைனு இருந்துட வேண்டியதுதான்
//கழுத குடிசையா இருந்தாலும் //
கழுத குடிசை எங்கப்ப கட்டி கொடுக்குறாங்க
எங்க ஊர்ல செங்கல் விலை 7 ரூபாய்..கலைஞரின் இலவச வீடு கட்டி தரும் திட்டமே இதற்கான காரணம்..பெரிய ஆர்டர்கள் அரசு மூலமாக கிடைக்க இருப்பதால்..ஆத்து தண்ணிதானே நீ குடி நான் குடி நு எல்லா களவாணி பயலுகளும் ஒண்ணு செர்ந்துட்டாங்கா..பொன வாரம் சிமெண்ட் தொழிற்சாலை உரிமையாளர்கள் முதல்வர் சந்திப்பு நடந்தது..என்ன பேசினார்கள் என தெரியுமா..ம்ஹிம்..
கழுத குடிசை எங்கப்ப கட்டி கொடுக்குறாங்க//
கழுதைக்கு வேணும்னா கழுத தானே கட்டிக்கணும்..பயபுள்ளைக்கு சந்தேகத்த பாரு
நாங்க கூட வீடு கட்டலாம் அப்படின்னு இருக்கோம் . ஆனா ஜனவரி மாசத்துக்கு அப்புறம் சிமெண்ட் விளை குறையலாம் அப்படின்னு எதிர்பார்கிறாங்க. சிமென்ட் விலை மட்டும் இல்லைங்க , செங்கல் விளையும் ஏறிப்போச்சு .. எவ்ளோ அப்படின்னா 8 ,000 ரூபாய் பக்கம் இருந்த செங்கல் இப்போ 17 ,000 ஆகிடுச்சு.. எதனால இந்த விலையேற்றம் அப்படின்னு பார்த்தா கலைஞர் வீடு கட்டும் திட்டம் இப்போ நடந்துட்டு இருக்குல்ல அதனால தான் அப்படின்னு சொல்லுறாங்க ..எப்படி போனாலும் லாபம் பார்த்தே தீருவோம் அப்படின்ன்கறது அரசியல்வாதிகள். இதுலயும் பாக்குறாங்க. எப்ப இவுங்க எல்லாம் வீடு கட்டி முடிச்சு , சிமெண்ட் விலை குரயுறது .. நாங்களும் சிமெண்ட் விலை குறையட்டும் அப்படின்னுதான் காத்திருக்கிறோம். ஆனா அதுக்கு கலைஞர் வீடு கொடுக்கும் திட்டம் முடியனும் போல ..
இப்டி அடிக்கடி எழுதுப்பா.//
-இப்படிக்கு மண்டை உடைவதை வேடிக்கை பார்ப்போர் சங்கம்
கருத்து சொன்னது எல்லாம் போதும் .., கும்மி ஸ்டார்ட் பண்ணுங்க .. இன்னிக்கு பாபு அண்ணன் விருந்து வச்சிருக்காரு ..
. ஆனா ஜனவரி மாசத்துக்கு அப்புறம் சிமெண்ட் விளை குறையலாம் அப்படின்னு எதிர்பார்கிறாங்க. //
இப்படித்தான் பல பயலுக தங்கம் வாங்காம பத்துவருசமா பவுன் விலை குறையும்னு வெயிட் பண்றாங்க
தேர்தல் நேரத்தில மக்களுக்கு ரொம்பவே குழப்பம்....
கடைசில கம்மிய கொள்ளையடிக்கிற திருடன ஜெயிக்க வச்சுடுறாங்க.....! கம்மியா அடிச்சாலும் திருடன் திருடன் தான்....
ஒட்டு மொத்த மக்களும் அரசியல்வாதிக்கு நான் பயப்படமாட்டேன்னு ஸ்ட்ராஙக நிக்கணும் ஆன முடியாது...எப்டியோ வ்..அவன் அவன் தேவைக்கு தனித்தனியா சொறிஞ்சுக்க வேண்டியது ஆனா அடுத்தவங்கள குறை சொல்ல வேண்டியது....
இங்க சின்ன சின்ன மாற்றம் எல்லாம் ஒண்ணும் செஞ்சுடாது....புரட்சி வரணும் .. ! வரும்..கண்டிப்பா.. கடுப்பாகி கடுப்பாகி ஒரு நாள் என் இளைஞர் கூட்டம் கொந்தளித்து எழும்.....!
கருத்து சொன்னது எல்லாம் போதும்//
ஓ..இதுவரை சொன்னது எல்லாம் கருத்தா...
தமிழ்நாட்டின் தலைஎழுத்து அது... ஒண்ணும் பண்ண முடியாது.
தலைஎழுத்தை எழுதுபவர்கள் அரசியல்வாதிகள்...
இலவச டீவி வாங்கி கொண்டு தலையை கொடுப்பவர்கள் வாக்காளர்கள்
//கருத்து சொன்னது எல்லாம் போதும் .., கும்மி ஸ்டார்ட் பண்ணுங்க .. இன்னிக்கு பாபு அண்ணன் விருந்து வச்சிருக்காரு//
ஏன் தம்பி...ஏன்??? சீரியசான ஒரு வாழ்வாதாரம் பற்றிய பிரச்சினை பற்றி பேசும் போது எதுக்கு கும்மி அடிக்கணும்...
சாவு வீடா இருந்தா அழணும்...சிரிச்சா அது கேலி பண்ற மாதிரி போய்டும்....!
கடுப்பாகி கடுப்பாகி ஒரு நாள் என் இளைஞர் கூட்டம் கொந்தளித்து எழும்.....//
கடுப்பு ஆகுரவங்களுக்குத்தான் டாஸ்மாக் இருக்கே அங்க போனா எல்லா பயலும் பீஸ் ஆகிடுறான்...எல்லாத்துக்கும் ஆப்பு வெச்சிருக்கான்
பெண்களை மயக்க இலவச டிவி
இத எல்லாம் பாத்து பாத்து சலிச்சு போய் தான் எல்லா தமிழர்களும் வாழ்ந்துட்டு இருக்கோம்
சாவு வீடா இருந்தா அழணும்//
ஓகே..எல்லோரும் அழுங்க..நான் எஸ்கேப்..இவரு ஆட்டோ அனுப்பாம விட மாட்டாரு பொல..பாபு உனக்கு ஆப்புதாண்டி.
ஒரு டைம்ல கால்செண்டர் வேலை பாக்கிறவங்களாலதான் வீடு வாடகையெல்லாம் ஏறிப் போச்சு நிலம் விலையும் ஏறிப்போச்சுன்னாங்க!
அது உண்மையா? யாராவது சொல்லுங்க!
சதீஷ்...@
பேசக்கூட முடியாதா...? பாபு ஒரு சீரியஸ் பதிவு போட்டு இருக்கான்...! ஏன் அவன கமெடி பீசாவே பாக்குறீங்க...
எஸ்கேப் ஆனாலும் ஆட்டோ வரும்.. ஹா..ஹா..ஹா..!
எஸ்கேப் ஆனாலும் ஆட்டோ வரும்.. ஹா..ஹா..ஹா//
வேட்டிய அவுத்து போட்டுட்டு ஓடுறா கைப்புள்ள...
//சாவு வீடா இருந்தா அழணும்...சிரிச்சா அது கேலி பண்ற மாதிரி போய்டும்....!
///
நீங்க சொல்லுறதும் சரிதான் அண்ணா ..!!
சாதாரண பொது மக்கள் ஆகிய நாம் ஒன்றும் செய்ய முடியமால் இருக்கிறோம்
கட்டுமான தொழில் மட்டுமல்ல பல துறைகளும் இப்போது அபாய கட்டத்தில் பொது மக்களை நசுக்கும்படி உள்ளன...பத்திரிக்கைகள் பர்சனலாக நசுக்க படுகின்றன..அரசு விளம்பரம்,பெரிய நிருவனங்களின் விளம்பரத்தை எதிர்பார்த்து தான் அவை இயங்குகின்றன...சுய நல தலைவர்களே மாநிலத்திலும் மத்தியிலும் இருப்பதால் துணிச்சலான மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர் வரும் வரை நம் கஸ்டம் தீராது..கிடைச்சதை சுருட்டும் மனோபாவத்தில் ஆள்பவர்கள் இருப்பதால் மக்கள் காப்பாற்ற ஆள் இல்லாத அனாதைகளாக இருக்கின்றனர்
//நீங்க சொல்லுறதும் சரிதான் அண்ணா ..!!//
செல்வு..@ தம்பியுடையான் படைக்கு அஞ்சான்...!
நீங்க சொல்லுறதும் சரிதான் அண்ணா .//
யார் இது பப்ளிமாஸ் பனியன் போட்டுகிட்டு ..
சாதாரண பொது மக்கள் ஆகிய நாம் ஒன்றும் செய்ய முடியமால் இருக்கிறோம்//
நீ ஏன்எதுவும் செய்ய முடியாம நிற்குற..புது பதிவு போடு..கும்மி அடி
@தேவா
//செல்வு..@ தம்பியுடையான் படைக்கு அஞ்சான்...!//
இப்படியே சமாதனமா போனா எப்பொ தான் அடிச்சிபிங்க?? நீங்களே இலவச பொருள் வாங்கி நீங்களே அது தப்புனு பதிவு போடறிங்க. இந்த பதிவு உடனடியாக கலைஞ்ர் அவர்கள் பார்வைக்கு அனுப்படும்.. அனைத்து இலவச பொருட்களும் நிறுத்தபடும்...
மக்கள் இன்னும் திருந்தவில்லை நண்பரே மக்களாட்ச்சி தான் நடக்கிறது
ஆம் கருணாநிதியின் மக்கள் ஆட்சி......
பொதுமக்கள் நினைத்தால் ஆட்சியை மாற்றலாம் கொலைகாரக்கூட்ட அரசியலில் கேள்வி எழுந்தால் உடல் விழும் மண்ணிலே உயிரற்று இதை எண்ணியே மக்கள் மனம் தளருகின்றனர்
இதற்க்கு வதம் வரவேண்டும்
@terror
மக்கா டெர்ரர் நான் எதுவும் வாங்கலை......எனக்கு ரேஷன் கார்டே கிடையது மக்கா ................அதனால் தான் எனக்கு கோபம் வருகிறது ............இலவசம் வாங்கினவங்க யாருக்கும் கோபம் வராது.......
ரமேஷுக்கு கோபமே வராது இப்ப தான் இலவச வீடு மனை பட்ட வாங்கினான் .............
யார் யார் எல்லாம் இலவச டிவி வாங்கு நீங்க அவங்க எல்லாம் அதை திருப்பி கொடுங்க அப்படி கொடுத்தால் தான் அரசுக்கு புரியும்....இது வரை வாங்காதவர்கள் வேண்டாம் என்று சொல்லுங்கள்....
சிமேண்ட் விலையைப் பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை..
இதப்பத்தி பத்திரிக்கை மட்டுமல்ல பதிவுலகில் நீங்கள் தான் எழுதி இருக்கறீங்க வாழ்த்துக்கள்...
இதற்கான காரணத்தைப் ஆராய்ந்தால் ஏகப்பட்ட உள்குத்து இருக்கும்.. இன்று மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வீடு கட்டும் பணி அதிகமாக நடந்து வருகிறது... அதே போல் மற்ற மாநிலத்தை விட கட்டுமாணப் பொருட்களின் விலை அதிகம்... ஆனால் ஏன் விலை ஏற்றம் என்று பல பொருளாதார நிபுணர்களே பதில் சொல்ல தெரியாமல் முழிக்கின்றனர்...
(ரமேஷும் பாவம் இப்ப தான் நிலத்தை வாங்கினான் அதுக்குள்ள இவங்களுக்கு பொருக்க முடியலை.இனி எப்ப வீட்ட கட்டி ?எப்ப கல்யாணத்தை பண்ண போறனோ ? )............///
அத நினைச்சாத்தான் கண்ணக் கட்டுது. தமிழ் மலர் சீ தமிழ் மாதா அருள் புரியணும்...
ஓட்டு.. இதில் இருக்கு தீர்வு....! ஆனால்...............புரையோடிப் போயிருக்கு.....!
தெளிவான தொகுதி எம்.எல்.ஏ வ தேர்ந்தெடுக்கணும் மக்கா....!
சரியான கேள்வி தான் நண்பரே..
இனியெல்லாம் ஒரு வீடு கட்டுவது என்பது சாதரணமான காரியமே அல்ல... சிமெண்ட் விலை இப்படியென்றால் எங்கள் ஊருக்கு ஒரு லாரி மணல் வருவதற்கு கிட்ட தட்ட 75000 வரை ஆகிறது...
ரமேஷ்...@ வீடு கட்டி முடியுறதுக்குள்ள சிரிப்பு போலிஸ் சீரியஸ் போலிசா மாறிடுவான்
ஏண்டா தம்பி சரிதான???????
//ரமேஷுக்கு கோபமே வராது இப்ப தான் இலவச வீடு மனை பட்ட வாங்கினான் .............//
ஒரு பட்டாப்பட்டி வாங்க கூட வலி இல்லை. இதுல பட்டாவா?
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுனவன் மண்ணுக்குள்ள இந்த கத உனக்கு தெரியுமா.........
//ப.செல்வக்குமார் said...
கருத்து சொன்னது எல்லாம் போதும் .., கும்மி ஸ்டார்ட் பண்ணுங்க .. இன்னிக்கு பாபு அண்ணன் விருந்து வச்சிருக்காரு ..//
அட இதப் பாருடா இந்த அநியாயத்தை.. இவரு மட்டு சீரியஸா எழுதுவாரு, நாமெலாம் கும்மியடிக்கனுமாம்..
(பழனிக்கு அழைச்சிகிட்டு போவாராம்.. அனா மொட்டையெல்லாம் போடக் கூடாதாம்.. என்ன தெனாவெட்டு..)
இதை படிக்கிற....கமெண்ட் பண்ற... யோசிக்கிற அத்தனை பேரும் நம்ம நண்பர்கள் , உறவினர்கள்னு தெருக்குத் தெரு எல்லோர்கிட்டயும் பேசுங்க.. !
இலவசங்களுக்குப் பின்னால் இருக்கும் பேராபத்துகள் எப்படி நம்மள பாதிக்குதுன்னு விளக்கிச் சொல்லுஙக்...
அது முடியும்ல நம்மாள??????
//dheva said...
ரமேஷ்...@ வீடு கட்டி முடியுறதுக்குள்ள சிரிப்பு போலிஸ் சீரியஸ் போலிசா மாறிடுவான்
ஏண்டா தம்பி சரிதான???????
///
yes. avvvvvvvvvvvvvvvv
ஒண்ணுமே புரியல உலகத்துல ...
செந்தில் அண்ணா ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னோட வலை பதிவிற்கு வறீங்க..............உங்கள் கருத்துகளையும் பதிவு செய்க
@அருண்
இங்கு நடக்கும் விவாதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் ஆழமான கருத்துகள். இன்று இரவு எப்படியும் விலை குறையும் என்று நம்புகிறேன்...
//இங்கு நடக்கும் விவாதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் ஆழமான கருத்துகள். இன்று இரவு எப்படியும் விலை குறையும் என்று நம்புகிறேன்...//
தங்கம் விலை குறையுமாங்க?
@இம்சை
சதீஷ் கருத்து
------------
//பொன வாரம் சிமெண்ட் தொழிற்சாலை உரிமையாளர்கள் முதல்வர் சந்திப்பு நடந்தது..என்ன பேசினார்கள் என தெரியுமா..ம்ஹிம்..//
தேவா கருத்து
-------------
இலவச பொருள்கள் விலை அதிகரிக்க காரணம்..
என் கேள்வி
-----------
இப்பொ சிமெண்ட் விலையேர காரணம் சிமெண்ட் உரிமையாளர் சந்திப்பா இல்லை இலவச பொருள்களா?? இம்சை விளக்கம் ப்ளீஸ்...
டெரர்..@ மாப்ஸ் இன்னிக்கு நைட் மாறாது.....ஆனால்
இது போல எழுத ஆட்களும், வாசிக்க மனிதர்களும் சுதந்திரமான கருத்துக்களை பதிவு செய்யும் ஆரோக்கியமான களங்கள் ஒன்றூ 100 ஆகும் 100 லட்சம் ஆகும்...மாற்றம் வரும்...
இது ஒரு ஆரோக்கியமான நகர்வு அல்லது சிந்தனை...அந்த மட்டில் பார்க்கவேண்டும்...
வெறுமனே எழுதி குவித்துக் கொண்டு இருக்கும் கருத்துக்கள் மனிதர்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாய் பதியும்....விளைவுகள் தொலைதூரத்தில்...ஆனாலிது நேர்மறையான நகர்வு....
சுய புராணங்களையும் தங்களின் அருமை பெருமைகளையும், பேசும் மனிதர்கள் வாரம் ஒருமுறை ஒரு பொதுப்பிரச்சினைகளை அலசினால்....
மாறும்.. மாறூம்....இன்றில்லை எனிலும் நாளை.. நாளை இல்லையெனுனிலும் வேறு ஒரு நாள்.....
ஆனால் மாறூம்....சர்வ நிச்சயமாய்..!
டெரர் @ வெயிட் பண்ணு மாப்ஸ் வர்ற கருத்து எல்லாம் மொத்தமா தொகுத்து வேறு ஒரு போஸ்ட் போடச் சொல்லலாம்.. தம்பிய.....!
@ தேவா
நீங்க சொல்றது கரெக்ட்தான்! நம்ம காலத்தில் இந்த நிலைமை மாறலனாலும் பின்னாடி வருபவர்களுக்காகவாது உதவியா இருக்கும்!
கொஞ்சம் என் ஆசை நிறைவேறி இருக்கு தம்பி...
கருத்துக்கள் என்ற காலத்திற்கு கீழே... நிஜ கருத்துக்களையும் விவாதங்களையும் காண்கிறேன்....!
யெஸ் .. டெம்ளட் கமெண்ட்ஸ் மேக்ஸிமம் இல்ல...!
து போல எழுத ஆட்களும், வாசிக்க மனிதர்களும் சுதந்திரமான கருத்துக்களை பதிவு செய்யும் ஆரோக்கியமான களங்கள் ஒன்றூ 100 ஆகும் 100 லட்சம் ஆகும்...மாற்றம் வரும்//
எவண்டாவன் தேவா அண்ணனை உசுப்பி விட்டவன்..பாவம் தனியா புலம்ப வெச்சிட்டீங்களேடா
எஸ்.கே..@ எனக்கு எம்.ஜி.ஆர்.படத்துல வர்ற ஒரு லைன் தான் அடிக்கடி நினைவுக்கு வரும்
" நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை உண்டாக்கணும்...."
ஆடிப்பாடி மகிழ்விக்கும் ஜோக் சொல்லும் அதே நேரத்தில்.....ஒரு பொறுப்புணர்ச்சி இருக்கணும்...!
சதீஷ்.@ முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்றியா தம்பி..
ஹா.. சந்தோசமா பேசிகிட்டு தானே இருக்கோம்..அப்டியே ஊர் பிரச்சினைய பேசுறோம்...! உன்கிட்டதான் சொல்லிட்டு இருக்கேன்....ஹா..ஹா..ஹா..!
சிரு துளி பெருவெளி சிறு திப்பொறி பெரு நெருப்பாய் ஆட்சியாளரை பொசுக்கும் ..இது போன்ற வசனங்களை நம்பாதீர்கள்..இந்த எல்லைகளை தாண்டி எதார்த்தம் பிரம்மாண்டமானது...அதிகாரம் உள்ளவர்களுக்கு அறிவும் இருந்தால் எதுவும் சாதிக்க முடியும்..மக்களை ஆட்டு மந்தைகளாகவே வைத்திருக்க முடியும்...கம்ப்யூட்டர் பதிவர்களால் இது முடியாது..5லட்சம் சர்குலேசன் பத்திரிகைகாரனே முடங்கி கிடக்குறான்..வோட்டுக்கு 1000 கொடுத்தால் தமிழன் சொன்னபடி கேட்பான்...அடுத்தமுறையும் வோட்டு வேட்டைகான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன..தெர்தல் தேதி அறிவித்ததும் பாருங்கள்
நீங்க சொல்றது கரெக்ட்தான்! நம்ம காலத்தில் இந்த நிலைமை மாறலனாலும் பின்னாடி வருபவர்களுக்காகவாது உதவியா இருக்கும்//
அண்ணே நமக்கு 1000 ரூபாய் நா பின்னாடி வர்றவங்களுக்கு 2000 ரூபாய்..அவ்வலவுதான் வித்தியாசம்னே...
பெட்ரோல் விலையை நேரடியாக மொத்தமாக ஏற்றினால் எதிர்ப்பு வரும் என்று 15 நாட்களுக்கு ஒரு முறை 39 பைசா , 57 பைசா என்று கொஞ்ச கொஞ்சமாக ஏற்றுகிறார்கள். இந்த விவரம் எத்தனை பேருக்கு தெரியும் என்றே தெரியவில்லை....! பத்திரிக்கையிலும் இந்த செய்தி ஒரு ஓரத்தில்தான் வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொறுத்து இங்கே விலையை நிர்ணயிப்பதாக சொல்கிறார்கள். எங்களுக்கு தெரிந்த வரையில் அடுத்த பதினைந்தாவது நாளில் இன்னும் கொஞ்சம் விலை ஏறும், பொது மக்கள் அறியாமல்.....!!?
தமிழ் நாட்டில் மணல் விலை அதிகரிக்க காரணம் பக்கத்து மாநிலத்துக்கு (கேரளா) மணல் அதிக அளவில் கடத்த படுவதால் தான். அதை யார் தடுப்பது........? தினமும் லாரி லாரியாக நம் குடிநீர் தேவையை தீர்க்கிற ஆற்று பகுதிகளில் இருந்து மணல் சுரண்டப்பட்டு எடுத்து செல்லபடுகிறது. சிமெண்ட் விலையும் ஏறிபோச்சு....இனி நடுத்தர மக்களின் வீடு கட்டும் ஆசை கனவில் தான் நிறைவேறும் போல....!
@தேவா
//மாறும்.. மாறூம்....இன்றில்லை எனிலும் நாளை.. நாளை இல்லையெனுனிலும் வேறு ஒரு நாள்.....//
மாறினா மகிழ்ச்சி தான் மாப்ஸ். எனக்கு அரசியல் தெரியாது. நடைமுறை வாழ்க்கை கொஞ்சம் புரியும். இந்த விவாதங்களை படிச்சி யாராவது ஒரு ஆள் நாளைக்கு இலவச பொருள் வேண்டாம் சொன்னா நான் ரொம்ப சந்தோஷபடுவேன். நீங்க சொன்ன மாதிரி அந்த ஒன்னு 100 ஆகி 100 லட்சமாகி எதாவது மாற்றம் வந்தா அதை சத்தம் இல்லாமல் அனுபவிக்கிற ஒரு சாதரண சுயநலம் மிக்க குடிமகன் நான். அதனால ஓரமா நின்னு வேடிக்கை பாக்கறேன்... :))
சதீஷ்...@ எதார்த உண்மைகளா...எதுப்பா எதார்த்த உண்மை....
நம்மளால நம்ம வீட்ல உள்ளவங்க கிட்ட கூட எடுத்து சொல்ல முடியாதா???????
வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம் எல்லாம் பெரிய லெவல்ல ஆரம்பிக்கல தம்பி...! காங்கிரஸ் கட்சி ஆரம்பிச்சப்ப எத்தனை பேர் இருந்தாங்க.. யாரு ஆரம்பிச்சா????
அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிச்சப்ப காங்கிரஸோட ஆளுமை என்னனு தெரியுமா? அப்டி நினைச்சு பயந்து ஒதுங்கி இருந்தா.. திராவிட முன்னேற்ற கழகம் எப்டி வந்து இருக்கும்...
சரிப்பா நீ சொல்ற மாதிரி ஒதுங்கிடுவோம்.. ...எதுவும் பேசக்கூட வேணாம். வேற என்னதான் செய்யப்போறோம்....
பிஸினஸ் மேகஸீன்ல..... எடுத்த சர்வேல... வலைப்பூக்கல் வில் ரூல் இன் ஃப்யூச்சர்...... சிச்சுவேசன்ஸ்..... அப்டின்னு சொல்லி இருக்காஙக்.....
பத்திரிக்கைகள் வியாபார நோக்கம் உள்ளவை....ஆனால் வலைப்பூக்கள் எதார்த்த முகம் கொண்டவை...இது தனிமனித குரல்...இது வெல்லாதா?????வீ வில் ஹேவ் டூ வெயிட் அண்ட் சீ....!
@சதீஷ்
//எவண்டாவன் தேவா அண்ணனை உசுப்பி விட்டவன்..//
அண்ணே நான்தான். சும்மா டவுட்டு கேட்டேன்...
75
முடியாது.. நடக்காது....கிடைக்காது....இல்லை....எப்பவுமே இப்படித்தான்....மாறாது....
ஸ்டெர்ய்டா குப்பைத் தொட்டிக்கு போக வேண்டிய வார்த்தைகள் இவை.....!
அடுத்த நிமிசம் இருப்போமான்னு தெரியாது..ஆனா வாழ்ந்து ஜெயிப்போம்னு நகருது பாருங்க வாழ்க்கை...
அதுக்கு பின்னால் இருப்பது....
நம்பிக்கை....!
வீ வில் ஹேவ் டூ வெயிட் அண்ட் சீ....//
நம்பிக்கையுடன் முயற்சிப்போம்...18 லட்சம் பேருக்கு நடுவில் வைத்து ஜெயலலிதா இவர்கள் முகத்திரையை கிழித்தார்..ஆனாலும் பாமர மக்கள் ,வோட்டுரிமை உள்ளவர்கள்,பூத்துக்கு சென்று கடமையுடன் ஓட்டு போடும் படித்தவர்கள் இவர்களே அடுத்த ஆட்சி யாருடையது என தீர்மானிக்கிறார்கள்...மக்கலை உறிஞ்சுபவர்கள்,கொள்ளை அடிப்பவர்கள்,,,,நமக்கு மேல் வீதியில் இறங்கி வீடு வீடாக போய் மீண்டும் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்..
இதுதான் என் கடைசி தேர்தல் என கண்ணீர் விட்டு ஆட்சிக்கு வந்தவர் கருணாநீதி..
ராஜிவ் இறந்த அனுதாபத்தில் ஆட்சிக்கு வந்தவர் ஜெயலலிதா...
,மீண்டும் வளர்ப்புமகன் திருமண ஆடம்பரம்...சுடுகாட்டிலும் ஊழல் என மீண்டும் கருணா வந்தார் ..இப்போது அதே புகாரை சொல்லி அம்மையார் அமர போகிறாரா?
வலுவான மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் யார் இருக்கிறார்?
மாறும்.. மாறூம்....இன்றில்லை எனிலும் நாளை.. நாளை இல்லையெனுனிலும் வேறு ஒரு நாள்.....
ஆனால் மாறூம்....சர்வ நிச்சயமாய்..!///
என்ன மாறும் ஆட்சி மாறுமா..? நாம் தான் நமது சொந்தகார்கள் ளிடம் சொல்லி புரிய வைக்கணும் இலவசங்கள் வாங்க கூடாது என்று அவர்கள் இலவசங்கள் தருவேன் என்று சொல்லும் போது ஏன் மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டார்கள் அப்போ உங்களுக்கு இலவசங்கள் வேண்டாம் என்று உங்கள் வாக்குகளை ஏன் வீண் செய்திர்கள்....இப்போது வந்து அவர்கள் இலவசம் தருகிறார்கள் என்று சொல்லி கொண்டு இருக்கிறோம் இதே இவர்கள் தேர்தல் வாக்குறுதி சொன்னது போல் செய்ய வில்லை என்றால் அதையும் சொல்வார்கள் சொன்னதை இவர்கள் செய்யவில்லை என்று
சதீஷ்...@ வெல்டன் தம்பி....
இப்போ சொல்லியிருக்கியே.. இது உறைக்கிற மாதிரி இருக்கு.. ! ரோசம் வர்ற மாதிரி இருக்கு...
எல்லோரும் அப்டியே படிங்க.....சதீஷ் சொல்லியிருக்கத....
இப்போ சொல்லுங்க.... கும்மி அடிச்சே ஆகணுமா....? இளம் ரத்தம் எல்லாம்...கேளிக்கையிலும்....வேடிக்கையிலும் வீணாகனுமா?
சந்தோசமா நகைச்சுவை போஸ்டில் கும்மி அடிக்கலாம்....ஆனா...விவாதிக்க வேண்டிய விசயங்களை விட்டு விலகி ஏன் ஒடணும்
ப்ளீஸ்...டேர் டூ ஃபேஸ் த ட்ரூத்....!
அரசியல் பத்தி ஓபனா பேசினா அவேசப்பட்டா,சவுக்கு பதிவருக்கு நேர்ந்த கதிதான் உண்டாகும்..
புரட்சின்னு சொன்னாலே விடுதலை புலின்னு உள்ளே போட்டுடுவாங்க...
அப்புறம் எப்படி சாதிக்கிறது ரொம்ப டென்சன் ஆகாதீங்க தேவா அண்ணே..
அட, நாட்டாமைங்க தீர்பு சொல்லிட்டாங்க போல.... உடனே இந்த பதிவை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டியதுதான்
ஆர்.கே.சதீஷ்குமார் said...
அரசியல் பத்தி ஓபனா பேசினா அவேசப்பட்டா,சவுக்கு பதிவருக்கு நேர்ந்த கதிதான் உண்டாகும்..////
ஆம் அந்த பதிவரை கைது செய்த போது என்ன செய்தது இந்த பதிவுலகம்...?ஒன்றும் செய்யவில்லை
// இந்த விவாதங்களை படிச்சி யாராவது ஒரு ஆள் நாளைக்கு இலவச பொருள் வேண்டாம் சொன்னா நான் ரொம்ப சந்தோஷபடுவேன்.//
இது உண்மைதான் அண்ணா ., என்னதான் நாம எழுதினாலும் ஏதாவது இலவசம் தராங்க அப்படின்னு சொன்னா உடனே போய் வாங்கணும் அப்படின்னு தான் நினைக்கிறோம்.. அதற்க்கான காரணம் என்ன அப்படின்னா நாம வாங்களைனாலும் அத கொடுக்கத்தான் போறாங்க., அதனால நஷ்டம் நமக்குத்தான் அப்படிங்கிற எண்ணம் .. ஆனா எல்லோரும் ஒண்ணா சேர்ந்து எனக்கு இலவசம் வேண்டாம் அப்படின்னு சொன்னா கண்டிப்பா அத கொடுக்கணும்னு யாரும் நினைக்க மாட்டாங்க . ஆனா அதுக்கு நிறைய புரிதல் வேணும் .. அந்த புரிதலை எர்ப்படுத்துவதுதான் இங்கே சிரமமாக இருக்கிறது . இதற்குப் பதில் அரசியலில் வருவோரே அதனை செய்யாமல் விட்டுட்டா இத்தனை பிரச்சினைகள் வராது என்பதே எனது கருத்து ..!
சதீஷ்..@ இல்ல நான் நிதானமா இருக்கேன்....
நீங்க சொல்ற விசயத்தோட ஆழம் தெரியதவன் அல்ல நான்....! எப்படி எல்லாம் அரசியல் வஞ்சகங்கள் சமகாலத்தில் நடந்தேறும் எப்படி எப்படி சட்டங்கள் பாயும் என்றும் தெரியும். ஆக்ஸுவலி நான் இன்வஸ்டிகேட்டிங் ஜர்னலிசம் பண்ண சொல்லல...
ஆனா விழிப்புணர்வு பத்தி பேசவே பயமா இருக்குன்ற ஒரு சிசுவேசன்ல இருக்கோம்...! இதை சொல்லவைக்கதான் நான் இவ்ளோ பேசினேன்....
ப்ராப்ளம் எங்க ஆரம்பிக்கிது தெரியுமா....! அறிவற்ற சமுதாயம் அல்ல நாம்...எல்லாமே எல்லோருக்கும் தெரியுது....ஆனா....அதிகாரவர்க்கம்....நம்மை சும்மா பந்தாடிடும்...! நான் துபாய்ல உட்காந்து கிட்டு எழுதுற ஸ்பீட் ஊர்ல உக்காந்து எழுத வராதுன்றது உண்மைதான்....! ஏன்னா வட்டச் செயலாளரோ.. இல்லை லோக்கல் இன்ஸ்பெக்கடரோ நம்மாள சந்திக்க வந்துடு வாங்க>...இது நிதர்சனமான உண்மை...
கோபமோ....சண்டையோ எந்த தீர்வையும் தராது ஆனால்....வாக்களிக்கும் போது பணம் வேண்டாம் என்று மறுக்க நம்மால் முடியும்.....குறைந்த பட்ச அதுதான் இப்போதைய புரட்சி.....!
// அந்த பதிவரை கைது செய்த போது என்ன செய்தது இந்த பதிவுலகம்...?ஒன்றும் செய்யவில்லை//
இந்த கட்டுரையின் கருவும் போக்கும் மேலே சொல்லப்பட்டிருப்பதற்கு சம்பந்தம் இல்லாதது.
@சௌந்தர்
மக்கா அப்போ என்னையும் சவுக்கு மாதிரி உள்ளே தூக்கி போட்டுருவாங்களா.
dheva said...
// அந்த பதிவரை கைது செய்த போது என்ன செய்தது இந்த பதிவுலகம்...?ஒன்றும் செய்யவில்லை//
இந்த கட்டுரையின் கருவும் போக்கும் மேலே சொல்லப்பட்டிருப்பதற்கு சம்பந்தம் இல்லாதது.////
சம்பதம் இல்லை என்பது தெரியும் ஆனால் இந்த மாதிரி அரசை எதிர்த்து யார் தொடர்ந்து பதிவு போடுவார்கள்...?
இம்சைஅரசன் பாபு.. said...
@சௌந்தர்
மக்கா அப்போ என்னையும் சவுக்கு மாதிரி உள்ளே தூக்கி போட்டுருவாங்களா////
ஒரு பதிவுக்கு எல்லாம் போட மாட்டாங்க மக்கா நீ தொடர்ந்து போட்டு பார்....
@தேவா
//ப்ளீஸ்...டேர் டூ ஃபேஸ் த ட்ரூத்....!//
இதை தான் மாப்ஸ் நானும் சொல்றேன். இந்த பதிவை ஆயிரம் பேர் படிக்கிறாங்க வச்சிகலாம். அதுல எத்தனை பேர் அவங்க வீட்டுக்கு வர இலவச டி.வி. வேண்டாம் சொல்லுவாங்க? ஒரு இரண்டு பேர்? 10 பேர்? அந்த பத்து பேர பாத்து மீதி இருக்க 990 பேர் பொழைக்க தெரியாதவன் சொல்ல மாட்டாங்களா?? சும்மா டவுட் கேட்டேன். அதுக்காக சமுதாய நோக்குள்ள பதிவு போடாதிங்க சொல்லவில்லை. ஆன ரொம்ப சீரியஸ் ஆகிடாதிங்க சொன்னேன்....
//வாக்களிக்கும் போது பணம் வேண்டாம் என்று மறுக்க நம்மால் முடியும்.....குறைந்த பட்ச அதுதான் இப்போதைய புரட்சி.....!///
எங்க ஊர்ப் பக்கம் யாருக்கும் பணம் தரலை . ஆனா தந்திருந்தா எல்லோரும் வான்கிருப்பாங்க என்பது உண்மையே . எல்லோரும் பணம் வாங்கணும் அப்படின்னு நினைக்கும் போது நாம வேண்டாம்னு சொல்லுறது கொஞ்சம் முட்டாள்தனமாக கருதப்படும் .. ஆனா அந்த கொஞ்ச நேரம் மத்தவங்க முட்டாள் அப்படின்னு நினைப்பன்களேனு நினைச்சு நாம பணம் வாங்கினோம்னா மறுபடியும் நாம முட்டாள் ஆக்கப்படுவோம் .. ஆனா கூட நாம பணம் வாங்கத்தால உலகம் மாறிடப் போறது இல்ல .. அதே சமயம் அந்த விஷயம் நாலு பேருக்குத் தெரிஞ்சு அவுங்களும் வாங்கலேன்னா அடுத்து பத்து பேருக்கு தெரியும் .. இப்படி கொஞ்சம் கொஞ்சமாதான் மாற்றம் வரும் ..
செளந்தர்...@
நாம் எந்த அரசையும் எதிர்க்க வில்லை...! விலைவாசி ஏற்றம் என்பது மக்கள் பிரச்சினை...அதற்கான காராணங்களை விவாதிப்பது எந்த வகையுயிலும் அரசுக்கு எதிரானது அல்ல.....எந்த தனிமனிதரைப் பற்றியும் சொல்லவில்லை....!
மாறாக நமக்கு நாமே விழிப்புணர்வூட்டிக் கொள்கிறோம்.
TERROR-PANDIYAN(VAS) said...
@தேவா
//ப்ளீஸ்...டேர் டூ ஃபேஸ் த ட்ரூத்....!//
இதை தான் மாப்ஸ் நானும் சொல்றேன். இந்த பதிவை ஆயிரம் பேர் படிக்கிறாங்க வச்சிகலாம். அதுல எத்தனை பேர் அவங்க வீட்டுக்கு வர இலவச டி.வி. வேண்டாம் சொல்லுவாங்க? ஒரு இரண்டு பேர்? 10 பேர்? அந்த பத்து பேர பாத்து மீதி இருக்க 990 பேர் பொழைக்க தெரியாதவன் சொல்ல மாட்டாங்களா?? சும்மா டவுட் கேட்டேன். அதுக்காக சமுதாய நோக்குள்ள பதிவு போடாதிங்க சொல்லவில்லை. ஆன ரொம்ப சீரியஸ் ஆகிடாதிங்க சொன்னேன்...////
எங்க வீட்டுக்கு கிழே ஒருத்தர் இருக்கிறார் மக்கா அவர் இலவச டிவி வேண்டாம் என்று சொல்லி விட்டார் அதே போல் எல்லாம் செய்து இருந்தால் அந்த திட்டம் தோல்வி அடைந்து இருக்கும்...அப்போது அரசுக்கு தெரிந்து இருக்கும் மக்களுக்கு இலவசம் கொடுத்து ஏமாற்ற முடியாது என்று....
//வீட்டுக்கு வர இலவச டி.வி. வேண்டாம் சொல்லுவாங்க? ஒரு இரண்டு பேர்? 10 பேர்? அந்த பத்து பேர பாத்து மீதி இருக்க 990 பேர் பொழைக்க தெரியாதவன் சொல்ல மாட்டாங்களா??//
இந்த மாற்றம் வருவதுதான் சிரமம் அண்ணா ., சொல்லப்போனா நான் எங்க வீட்டுக்கு கலர் டிவி வேண்டாம்னு சொன்னாகூட எங்க வீட்டுல அப்பா அம்மா வாங்கனும்னு சொல்லுவாங்க. ஆனா நான் கொஞ்சம் எதிர்ப்பா பேசின நிருத்திரலாம் .. ஆனா நான் அப்படி செய்யல .. எல்லோரும் வாங்குறாங்க , நாமளும் வான்கும்வோம் அப்படின்னுதான் நினைப்பேன் , எங்க வீட்டுல கூட ஏற்கெனவே டிவி இருந்தாலும் இப்ப இலவச டிவி வாங்கிருக்கோம் .. நானும் இதையே தான் சொல்லுறேன் .. கொடுத்த வேண்டாம்னு சொல்லுறது சிரமம் .. கொடுத்த வேண்டாம்னு சொல்லுரக்கு அதிகமான புரிதல் வேணும் .. அதுக்கு பதில் அவுங்களே கொடுக்கலைனா நாம எதுக்கு வாங்கப்போறோம் ..?
@ deva
நான் ஏதும் தப்பா சொல்லிட்டனா?
உண்மையில் நான் இதுவரைக்கும் இந்த மாதிரி சமூக கருத்துக்களை அவ்வளவா பகிர்ந்துகிட்டதில்ல. நான் வீட்டுக்குள்ளேயே இருக்கிறதால வீட்ல இருக்கிறவங்க கிட்ட அதிகமாக இந்த மாதிரி பேச முடியாது.
அதனால் நான் ஏதும் தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க!
dheva said...
செளந்தர்...@
நாம் எந்த அரசையும் எதிர்க்க வில்லை...! விலைவாசி ஏற்றம் என்பது மக்கள் பிரச்சினை...அதற்கான காராணங்களை விவாதிப்பது எந்த வகையுயிலும் அரசுக்கு எதிரானது அல்ல.....எந்த தனிமனிதரைப் பற்றியும் சொல்லவில்லை....!
மாறாக நமக்கு நாமே விழிப்புணர்வூட்டிக் கொள்கிறோம்///
விலைவாசி என்பது ஊருக்கு ஊர் மாறுபட்டது ...விலை வாசியை பாதி உயர்த்துவது சிறு கடைகள் வைத்து இருப்பவர்கள் தான்
பாபு...@
தம்பி.. ரொம்ப நன்றி தம்பி..!!!! எனது கருத்துக்களை பதிவு செய்ய ஒரு களாமாக இது அமைந்ததில் கர்வமும், மகிழ்ச்சியிம் கொள்கிறேன்...!
என்னளவில் நான் சரி செய்து கொள்கிறேன்......
எதுவுமே மாறாவிட்டாலும் ......ஏதோ ஒரு எண்ணம் கொண்டு வாழ்ந்தவனாக ஏதோ ஒரு கருத்தை பதிவு செய்தவனாக.... கனவுகளோடு மரித்துப் போன மனிதனாக இருந்து விட்டுப் போகிறேன்.
என கனவுகளும் ஆசைகளும் என்னைச் சார்ந்தவை.....என்னளவில்..மற்றும் குடும்பம் மற்றூம் நண்பர்கள் அளவில் சப்தமின்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்......! இதில் வன்முறை இல்லை, அகங்காரம் இல்லை.....அது கண்டிப்பாய் என்னால் முடியும்...!
சரி தம்பி நான் இப்போ கிளம்புறேன்....மே... பீ கேட்ஸ் யூ அட் யுவர் நெக்ஸ் போஸ்ட்...!
வாழ்த்துக்கள் பா...!
@சௌந்தர்
//அதே போல் எல்லாம் செய்து இருந்தால் அந்த திட்டம் தோல்வி அடைந்து இருக்கும்...//
ஏன் மக்கா செய்யல?? இதை தான் நான் எதாற்த்தம் சொன்னேன்..
ரொம்ப நன்றி அண்ணா உங்களோட கருத்துகளை மற்ற என் வலை பூ நண்பர்களும் படிப்தற்கு உங்கள் நேரத்தை செலவிட்டதற்கு ரொம்ப நன்றி .............
99
100
@எஸ் .கே
இல்லை எஸ் .கே அப்படி யாரும் நினைக்க மாட்டார்கள் இதில் இருப்பது எல்லாம் உன் நண்பர்கள் ,என் நண்பர்கள் அவர் அவர் எண்ணங்களை தான் இதில் கூறி இருக்கிறார்கள் .........இதில் எங்கு இருந்து வந்தது தவறு ..................நோ சான்ஸ் ....யாரும் நினைக்க மாட்டார்கள்
எஸ். கே...@ அச் சோ என்ன பாஸ் இது.....
அப்டி எல்லாம் நான் நினைக்கலங்க.. நீங்க.. ஆரோக்கியமான கேள்விதானே கேட்டு இருக்கீங்க...!
நான் பொதுவான கருத்துக்கள் தான் பகிர்ந்து கிட்டேன்... ! சாரி எல்லாம் பெரியவார்த்தை பாஸ்....!
எனக்கு உங்க மேல நிறைய மரியாதை இருக்கு எஸ்.கே...! நன்றிங்க...!
TERROR-PANDIYAN(VAS) said...
@சௌந்தர்
//அதே போல் எல்லாம் செய்து இருந்தால் அந்த திட்டம் தோல்வி அடைந்து இருக்கும்...//
ஏன் மக்கா செய்யல?? இதை தான் நான் எதாற்த்தம் சொன்னேன்.////
நம்ம மக்கள் இப்படி தான் அதனால் தான் இந்த அரசியல் வாதிகள் ஏமாற்றுகிறார்கள்
@சௌந்தர்
//நம்ம மக்கள் இப்படி தான் அதனால் தான் //
அப்பொ பதிவுலை தாண்டி இருக்க எதாற்த்த வாழ்க்கை வேறு. அதனால ரொம்ப சீரியஸ விவாதிக்காம ஜாலியா விவாதிக்கலாம் அப்படினு நான் சொல்ற கருத்தை நீங்க ஆதரிக்கறிங்களா? சும்மா இதுவும் டவுட்டு...
இதை தான் மாப்ஸ் நானும் சொல்றேன். இந்த பதிவை ஆயிரம் பேர் படிக்கிறாங்க வச்சிகலாம். அதுல எத்தனை பேர் அவங்க வீட்டுக்கு வர இலவச டி.வி. வேண்டாம் சொல்லுவாங்க? ஒரு இரண்டு பேர்? 10 பேர்? அந்த பத்து பேர பாத்து மீதி இருக்க 990 பேர் பொழைக்க தெரியாதவன் சொல்ல மாட்டாங்களா?? சும்மா டவுட் கேட்டேன். அதுக்காக சமுதாய நோக்குள்ள பதிவு போடாதிங்க சொல்லவில்லை. ஆன ரொம்ப சீரியஸ் ஆகிடாதிங்க சொன்னேன்...////
நீங்க சொல்ற இந்த கருத்தை ஆதரிக்கிறேன்
//அப்பொ பதிவுலை தாண்டி இருக்க எதாற்த்த வாழ்க்கை வேறு. அதனால ரொம்ப சீரியஸ விவாதிக்காம ஜாலியா விவாதிக்கலாம் அப்படினு நான் சொல்ற கருத்தை நீங்க ஆதரிக்கறிங்களா? சும்மா இதுவும் டவுட்டு...//
டெரர்.. @ மாப்பு.....சரி ஒண்ணும் விவாதிக்க வேணாம்......
அப்போ எல்லோரும் வாங்க ஒளிஞ்சு புடிச்சு விளையாடுவோம்...திருடன் போலிஸ் விளையாட்டு....உனக்கு அது பிடிக்கலேன்னா...
கல்லாங்காய்னு ஒரு விளையாட்டு இருக்கு பெரும்பாலும் சிறுமிகள் விளையாடுவாங்க.. அதான் மாப்ஸ் கல்லா தூக்கிபோட்டு பிடிக்கணும்ம்
இன்னும் சொல்லப்போனால் தாயம் கூட பெஸ்ட்....!
ரெடி ஜுட்....!
@தேவா
//டெரர்.. @ மாப்பு.....சரி ஒண்ணும் விவாதிக்க வேணாம்......//
மாப்ஸ்!! கமண்ட்ட லைட்டா ஒருவாட்டி திருப்பி படிங்க. விவாதிக்க வேண்டாம் சொல்லவில்லை டென்ஷன் ஆகாம விவாதிங்க சொன்னேன். பாருங்க பட்டுனு செல்வா தூக்கி போட்டு மிதிச்சிட்டிங்க... :))
//கல்லாங்காய்னு ஒரு விளையாட்டு இருக்கு பெரும்பாலும் சிறுமிகள் விளையாடுவாங்க.. //
அட போங்க மாப்ஸ் ஒன்னு சண்டை போடறிங்க இல்லைனா கல்லாங்காய் விள்ளாட போறிங்க.. :)) மொதல்ல உடம்ப சொஞ்சம் லூஸ் விடுங்க. என்ன விறப்பா சண்டை போடபோற மாதிரி?? :)))
//இன்னும் சொல்லப்போனால் தாயம் கூட பெஸ்ட்....!//
ஐ!! இது நல்லா இருக்கே... மாப்ஸ் ஆடு புலி ஆட்டம் அதைவிட கஷ்ட்டம் இல்லாம விள்ளாடளாம்... :))
இப்போ இங்கே நடந்த விவாதம் நல்ல விவாதம் தான் இங்கே நன்றாகவே விவாதம் நடந்து இருக்கு....
@இம்சை
மக்கா என்ன சத்தமே இல்லை??? சொம்ப கைல எடு தீர்ப்பு சொல்லு. இல்லைனா மாமன், மச்சான் நடுவுல சண்டை மூட்டி விட்டான்னு நாளை சரித்திரம் உன்னை நக்கல் அடிக்கும்.
எங்களுக்கு நடுவுல யாராவது கருத்து சொல்ல வந்தா இரண்டு பேரும் சேர்ந்து அவங்கள போட்டு தள்ளிடுவோம் அப்படினு நான் சொல்ல மாட்டேன்...:)))
@சௌந்தர்
//இப்போ இங்கே நடந்த விவாதம் நல்ல விவாதம் தான் இங்கே நன்றாகவே விவாதம் நடந்து இருக்கு...//
ஆரம்பத்துல இருந்தே இந்த புள்ளை யார் பக்கம் பேசுது தெரியலையே.... :)))
மக்க டெர்ரர் இதுக்கு பேர் சண்டை இல்லை உன்னோட கருத்து.....இது .என்னால் யாருக்கும் எந்த பதிப்பும் வராது மக்கா.இனி சண்டை ன்னு உன் வாய்ல வந்துச்சு ந வாய் ல கொல்லி கட்டிய எடுத்து தேய்ச்சு விடுவேன் ....ஆமா .........
இந்த கருத்து பரிமாற்றதுல வேற ஏறாவது வந்து குண்டக்க மண்டக்க பதில் போட்ட நானே இழுத்து போட்டு வெட்டுவேன் .இது எல்லோரும் நம் நண்பர்கள் ......மேலும் உன்னுடன் கருத்தை பரிமாறியது யாரு நம்ம தேவா அண்ணா சரியா ..........
// எதற்கெடுத்தாலும் பக்கத்து மாநிலத்தை
சுட்டி காட்டும் நமது முதல்வர் இந்த
விசயத்தில் மௌனமாக இருக்கிறார் . //
புரியாம பேசறீங்களே..
இதுக்கெல்லாம் பதில் சொல்லவா
தலைவருக்கு நேரம் இருக்கு..??
அவரு எத்தனை சினிமா Function போகணும்.,
எத்தனை கல்யாணத்துக்கு போகணும்.,
பேரங்கள் கம்பெனி தயாரிக்கிற
படங்களை பாக்கணும்..,
பா.விஜய் நடிக்கிற படத்துக்கு வசனம்
எழுதணும்..
இதுக்கும் மேல ஸ்பெக்ட்ரம் ஊழல்
சமாச்சாரத்துல ராசாவை காப்பாத்த
பிளான் போடணும்..
இவ்ளோ வேலை இருக்கு..
இதை விட்டுட்டு சிமெண்ட் விலை
ஏறிடிச்சின்னு சின்னபிள்ள தனமா
பேசிட்டு இருக்கீங்க..
போங்க போயி பிள்ள குட்டிகள
படிக்க வைக்கிற வழிய பாருங்க..
1.தனியார் பள்ளிக்கு கல்வி கட்டணம்
நிர்ணயம் பண்ணினது என்ன ஆச்சு..?
2.சம்ச்சீர் கல்வி ஒழுங்கா நடக்குதா..?
இதப்பார்றா.. கம்முன்னு இருக்க மாட்டீங்க..
போங்கப்பா.. போயி.. வேற வேலை இருந்தா
போயி பாருங்க..
@இம்சை
//.மேலும் உன்னுடன் கருத்தை பரிமாறியது யாரு நம்ம தேவா அண்ணா சரியா ........//
என்னாது கருத்து பரிமாற்றமா?? இது சண்டை (ஆன எதுக்கு தெரியாது) நீங்க வேணும்னா தேவா கிட்ட கேட்டு பாருங்க.. :)) . தேவா அவர் பொண்ண வீட்டுல விட போய் இருக்காரு அதனால ரிப்ளை பண்ணல நினைக்காதிங்க. அவர் ஆள் கூப்பிட போய் இருக்காரு. நானும் சொல்லி விட்டு இருக்கேன். லாரில ஆள் வராங்க. இன்னைக்கு உங்க ப்ளாக் ரத்தகளரி ஆக போகுது போங்க போங்க... :))
டெரர்...@ கொய்யால.. மாப்ஸ்.. நீ வேற... சண்டை கிண்டனு சொல்லி உசுப்பேத்தி விடாத.. ஹா..ஹா..ஹா நம்பிட கிம்பிட போறாங்க...
சரி... சீரியசான விவாதம் முடிவடைந்தது..இனி கலை நிகழ்ச்சிகள் ஆரம்பம்...
@தேவா
// கொய்யால.. மாப்ஸ்.. நீ வேற... சண்டை கிண்டனு சொல்லி உசுப்பேத்தி விடாத.. ஹா..ஹா..ஹா நம்பிட கிம்பிட போறாங்க...//
ஏற்க்கனவே நம்பிட்டாங்க நினைக்கிறேன்.. பரு ஒரு பையல கானோம்... எல்லாம் வெளியா வாங்க மக்கா... இது சும்மா உலலாய்க்கு... :))
சாரி பாபு லேட் கமிங்க்
பாபு,நீங்க சீரியஸ் பதிவு போட்டு இப்போதான் பாக்கறேன்
டெரர்.. @ மாப்பு இங்க யாரோ சண்டை போட்டாங்களாமே..யாரு மாப்பு....????ஒருத்தரையும் காணோம்....??
மதியானம் சாப்பிடும் போது ஆசையா நீ சிக்கன் லெக் பீஸ் கொடுத்தியே..நான் கூட உனக்கு சோறு ஊட்டி விட்டேனே.....! உன்ன விட்டுட்டு நான் என்னிக்கு சாப்டேன்னு கண் கலங்கினியே மாப்ஸ்...
நீ கிரேட் மாப்ஸ்..நீதான்..... நண்பேண்டா...!
இந்தப்பதிவில் பாபுவின் கருத்தை விட தேவாவும் சதீஷும் கருத்து யுத்தம் நடத்துவது சூப்பர்
@தேவா
//மதியானம் சாப்பிடும் போது ஆசையா நீ சிக்கன் லெக் பீஸ் கொடுத்தியே..நான் கூட உனக்கு சோறு ஊட்டி விட்டேனே.....! உன்ன விட்டுட்டு நான் என்னிக்கு சாப்டேன்னு கண் கலங்கினியே மாப்ஸ்...//
இருந்தாலும் நீ ஒரு வார்த்தை கூட வேண்டாம் சொல்லாம புல்லா சாப்டு. அதுக்கு அப்புறம் நான் கண் கலங்கினத பார்த்து பக்கத்து இலைல இருந்து எடுத்து கொடுத்த அந்த நட்பு இந்த இம்சைக்கு புரியாது... :)))
@சி.பி.செந்தில்குமார்
//இந்தப்பதிவில் பாபுவின் கருத்தை விட தேவாவும் சதீஷும் கருத்து யுத்தம் நடத்துவது சூப்பர்//
அபச்சாரம் அபச்சாரம் கருத்து யுத்தம் இல்லை... கருத்து பறிமாற்றம். பாபு மக்கா சரியா சொல்லி இருக்கனா??
(செந்தில் சார் ரொம்ப நாள் அப்புறம் கண்ணுல படரவங்க எல்லாம் கலாய்க்கரேன்.. கண்டுக்காதிங்க..)
@இம்சை
கலாய்க்க யாரும் கிடைக்காத காரணத்தால் பதிவு படிக்க போறேன்... யாரும் தொந்தரவு பண்ணாதிங்க ப்ளீஸ்... :))
123
124
125
@இம்சை
//மத்திய மாநில அரசுகள் புதிய வரி எதுவும் விதிக்கவும் இல்லை.மூல பொருட்களின் விலையும் ஏற வில்லை .ஒருமூடை சிமெண்ட்ன் அடக்கவிலை 140 முதல் 160 ரூபாய் தான் பின்பு ஏன் இந்த விலை ஏற்றம் ?//
மக்கா எனக்கு ஒரு சந்தேகம். சிமெண்ட் அடக்கவிலை எப்படி கணக்கிட்டிங்க? ஒரு வேளை அரசு கட்டுப்பாடு காரணமா அவங்க குறைந்த இலாபத்துக்கு இவ்வளோ நாள் விற்று இப்பொ விலை ஏற்றி இருக்கலாம் இல்லையா??
>>>பத்திரிகை துறை ஏன் மௌனம் சாதிக்கிறது ?அவர்களுக்கு தெரியுமே ?.ஏன் அவர்கள் இதை பற்றி விரிவாக எழுத வில்லை ?..>>
துக்ளக்,தினமணி,டெக்கான் க்ரானிக்கல் 3ம் கட்டுரஃஇ எழுதி உள்ளது.
சாரி நண்பர்களே, நேற்றிலிருந்து, நெட் வேலை செய்யவில்லை!
சிமென்ட் விலை, மற்றும் மற்ற கட்டிட பொருட்களின் விலை உயர்வு பற்றி:
முதலாவது, கட்டிடப் பொருட்களின் விலை (குறிப்பாக சிமென்ட்) அரசால் கட்டுப்படுத்தப் படுவது இல்லை (தவறு என்றால் குறிப்பிடவும்)! (தமிழ்னாடு சிமென்ட்ஸ் நிறுவனர் சீனிவாசனுக்கும், கலைஞருக்கும் உள்ள நெருக்கம் அனைவரும் அறிந்ததே!
இரண்டாவது இந்த விலை உயர்வு ஒரு புதிராகவே உள்ளது. அதிலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் சிக்கலில் விழுந்த பொழுது, ரியல் எஸ்டேட் விலைகள் சரியும் என்று எதிர்பார்க்கப் பட்டது. வீட்டுக்கடன் கொடுப்பதும் பெருமளவில் குறைந்தது.ஆனால் வீடுகள் (அபார்ட்மென்ட்கள், மற்றும் நிலம்) விலை எதிர்பார்த்த அளவு குறையவே இல்லை. விற்பனை மிகக் குறைந்த போதும், விலை குறைக்படவே இல்லை. காரணம், இந்தமுறை, தமிழகத்தில் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் எல்லோரும், DLF போன்ற பிரம்மாண்ட கம்பெனிகள். அவர்களால் நஷ்டத்தைத் தாங்கிக் கொண்டு விலை ஏறும் வரை காத்திருக்க முடியும்!
சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது நான் பார்த்து ஆச்சர்யப்பட்டது, கண்டபடி அதிகரித்துள்ள பணப்புழக்கம்! விலைவாசி 3-4 மடங்கு ஏறியிருக்கும் நிலையில் மர்க்கெட்டுகளில் கூட்டம் கொஞ்சம் கூட குறைந்த மாதிரி தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் நடந்துகொண்டிருக்கும் கன்ஸ்ட்ரக்சன் களைப் பார்த்து அசந்து விட்டேன். இதுவரை இல்லாத அளவு நடந்துகொண்டிருக்கிறது. எங்கிருந்து இவ்வளவு பணம் வருகின்றது என்று விளங்கவில்லை. வரலாறு காணாத விலைவாசி உயர்வு கூட யாரையுமே பாதித்ததாகத் தெரியவில்லை!
இது அரசு இயந்திரத்தில் நடைபெற்றுவரும் பெரும் ஊழலையே எதிரொலிப்பதாகக் கருதுகிறேன். (அதிலிருந்து வரும் அளவில்லாத பணமே இப்படி ஆறாய் ஓடுகிறது)
மக்களே தங்கள் வீடுகளைச் சொந்தமாகக் கட்டிக்கொள்ள ஆரம்பித்தால் ரியல் எஸ்டேட் கபெனிகளின் நிலை என்னாவது?
பொருளாதாரத் தேக்கத்தால் விற்காமல் போன ப்ளாட்டுகளை எப்படி விற்பது? அதனால் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு செயற்கயாக பொருட்களின் விலையை உயர்த்துகிறார்களோ?
நன்றி! (நெட் வெலை செய்யாததால் விவாதத்தில் கல்ந்து கொள்ள முடியவில்லை!)
சாரி கமென்ட் மூன்று முறை வந்துவிட்டது
//யாராவது வந்து சொல்லுங்க ..நானும் சீக்கிரம் வீடு கட்டனும்//
:)
சரி இப்போ கடைசியா... பேசி முடிவு பண்ணியாச்சா? இல்லியா?
வீடு கட்ட ஆரம்பிச்சாச்சா? இல்லியா?? சொல்லுங்க.. சொல்லுங்க.. :-))
நமது நாட்டுக்கு இப்போதைய தேவை ராணுவ ஆட்சி ஒரு அஞ்சு வருஷம். அதிலயும் இந்த துட்ட எடுத்து வச்சவனுக்கெல்லாம் ஆப்படிச்சி எல்லா கருப்பு பணத்தையும் அரசாங்க கஜானாக்கு கொண்டுவந்து எல்லோருக்கும் கல்வி மற்றும் வேலை கொடுத்தா போதும். மக்கள் பணத்த சம்பாதிச்சி நல்ல வாழ்கைய உருவாக்கிப்பாங்க. ஆனா இது நடக்கனும்னா கொஞ்சம் வேலை இருக்கு .........................
ஐ .....நான் தான் லாஸ்ட்டு
ஐ .....நான் தான் லாஸ்ட்டு
@மங்கு
இல்லியே இல்லியே நான் தான் லாஸ்ட்...
நடுத்தர மக்கள் அனைவருக்கும் இருக்கும் கனவு சொந்த வீடு என்பதுதான். ஆனால் இந்த காலகட்டத்தில் அது கனவாகவே இருக்கும் போல பங்காளி
Post a Comment