Thursday, December 30, 2010

ஏறிபோச்சு....

                                                                                     

பத்தோடு பதினொன்று என்பது பழமொழி
இனி பத்து முடிந்து பதினொன்று...!

கொள்ளை அடிக்கும் பணத்தின் மதிப்பும் ஏறிபோச்சு
பண வீக்கமும் ஏறிபோச்சு...!
கொள்ளை கும்பலின் எண்ணிகையும் ஏறிபோச்சு...
விலை வாசியும் ஏறிபோச்சு....!

மண்ணுக்கு கீழ் விளையும்
வெங்காய
மதிப்பும் ஏறிபோச்சு...!

தங்கம் விலையும்
தலை கிரு கிறுக்கும் அளவுக்கு விலை ஏறிபோச்சு...!
பொன்னு விற்கும் விலையை பார்த்து 
பொண்ணை பெற்றவர்களின் மனம் பதறி போச்சு .....!


மது கடைகளில் மாணவர்களை பார்க்கும் போது 
மனம் நொடிந்து போச்சு ...!

ஏழை நாடு , ஏழை நாடு  என்று சொல்லி சொல்லி
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும்
அரசியல்வாதியின் ஊழல் பணமும் ஏறிபோச்சு....!

விவசாயம் குறைந்து போச்சு
விவசாய கூலி ஏறிபோச்சு...
விவசாய நிலத்தின் விலையும் ஏறிபோச்சு....!

அரசியல் விளையாட்டில்
அரசு ஊழியர்களின் சம்பளமும் ஏறிபோச்சு...!

கண்டு களிக்க  கலர் டி.வி தந்து
கரண்ட் பில்லும் ஏறிபோச்சு...!

குடிசை இல்லா தமிழகம்ன்னு சொல்லி
சிமெண்ட் ,மணல் விலையும் ஏறிபோச்சு...!

கல்வி கடன் கொடுத்து படிக்க  சொல்லி
வேலை இல்லா 
இளைஞர்
களின் எண்ணிக்கையும் ஏறிபோச்சு...!

வடைவேண்டும், வடை வேண்டும் என்று
நம்பர் போட்டு விளையாடும் பதிவர்களின்
எண்ணிக்கையும் ஏறிபோச்சு...!

பத்தை போல் இல்லாமல்
பதினொன்று நல்லா இருக்கணும் என்று இறைவனை வேண்டுகிறேன் .

அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் என்னோட ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மக்கா....

குறிப்பு :வருஷ கடைசில இப்படி ஒரு பதிவ போட்டு எல்லோரையும் இம்சை பண்ண வேண்டும் என்று ஒரு ஆசை அவ்வளவுதான் .

Thursday, December 23, 2010

பதில் சொல்லுங்கப்பா-2

                                                                             

நான் ஒரு அதி புத்திசாலின்னு எல்லோருக்கும் தெரியும். இந்த வருடத்தின் சிறந்த சந்தேகம் இல்லை என்றால்  சிறந்த கேள்வி அப்படின்னு கூட சொல்லலாம் என் இனிய பதிவுலக நண்பர்களே ,அன்பர்களே .

டவுட்டு   என்னன்னா இப்ப இத்தாலில இருந்து நம்ம ராஜீவ் காந்திய டாவு அடிச்சி கல்யாணம்  கட்டி நம்ம சோனியாஜி இந்திய நாட்டுக்கு வந்துட்டாங்க .அவர்களையும் நம்ம இந்திய பிரஜை என்று சொல்லுகிறோம் .....இதையும் கடந்து ஒரு பெரிய தேசிய கட்சியின் தலைவியாக இருக்குறார் ..அதாவது காங்கிரஸ் கட்சியின் தலைவியாக இருக்கிறார் .நாளும் பொழுதும் சேர்ந்து வந்தால் பிரதமராக கூட ஆகும் வாய்ப்பு உண்டு .


சரி அதனால் நம்ம நாட்டுக்கு வந்ததால் அவர் இந்திய பிரஜை சரி தானே ....
இப்போ என்னோட டவுட்டு  என்னன்னா நம்ம சானியா மிர்சா இருக்காங்களே  அதாங்க டென்னிஸ் பிளேயர் அவங்க பாகிஸ்தான் கிரிக்கெட் பிளேயர் சோயப்  மாலிக்கை கல்யாணம் செய்து கிட்டாங்க  ஒருவருடம் ஆகிவிட்டது ...ஆனாலும் சானியா மிர்சா இன்னும் இந்தியாவுக்காக  விளையாடுகிறார்   அவர் வீட்டுகாரர்  பாகிஸ்தான் நாட்டுக்காரர்.  ஆனா சானியா மிர்சா மட்டும் அந்த நாட்டுக்காக விளையாடமல்  ஏன் இந்திய நாட்டுக்காக விளையாடுறாங்க .இது தான் என் டவுட்டு  மக்கா .


இதை யாரிடம்மாவது கேட்டு தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சு யார்கிட்ட கேக்கலாம்னு நம்ம அருண் பிரசாத் (ஜூனியர்) அவர்கிட்ட கேட்டேன் .அவர் ஒரே வார்த்தைல இதை பத்தி கேக்கணும்னா ஒரே ஆள் நம்ம பட்டாப்பட்டிஜி தான்னு சொல்லிட்டார் .


இடுப்புல புள்ளைய வைச்சிகிட்டு  ஊர் எல்லாம் தேடுன கதை தான் .நம்ம பட்டாப்பட்டி இருக்க கவலை ஏன் க க போ ....சரி பதிவுலகின்  விடி வெள்ளி ,எதையும் நெற்றி பொட்டில் அடித்தார் போல் பதில் சொல்லும் அண்ணன் பட்டாப்பட்டியை  கேட்டேன் .

பட்டாபட்டி இந்த சந்தேகம் வந்ததும் என்கிட்டே வராம எங்க ம@#$ரூ புடுங்க போனீயான்னு கேட்டாரு .சரி விடு நான் சொல்லுறேன் அதுக்கு முன்னாடி "அது என்ன இம்சை அரசன் பாபு"ன்னு  பேரு வெச்சா போதாது எனக்கு சில சந்தேகம் இருக்கு அதை சொல்லுன்னு  கேட்டாரு சரி கேளுங்க மக்கா தெரிஞ்சா  சொல்லுகிறேன் என்றேன் .

சொல்லணும்!!!! அப்ப தான் மேல நீ கேட்ட கேள்விக்கு விடை  சொல்லுவேன்னு சொல்லிட்டார்.

பட்டாபட்டிக்கு இப்படி சந்தேகம் வரும்ன்னு நினைக்கவே இல்லை .கேட்டாரு பாரு ஒரு கேள்வி ...

சந்தேகம் என்னான்னு  .கீழே இருக்கு பாருங்க ........

"தட்டானுக்கு  சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்"

"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை"

இந்த ரெண்டுக்கும் விடை சொல்லு நான் உனக்கு விடை சொல்லுறேன் சொல்லிடாரு .. 

எனக்கு வயிறு கலக்கி போய்கிட்டே இருக்கு பதிவர்களே 

யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க ..

டிஸ்கி : இது சீரியஸ் பதிவா காமெடி பதிவான்னு கேட்க கூடாது 




Saturday, December 18, 2010

பப்ளிசிட்டி பக்கிரிசாமி




                                                                                                                                                                
நம்ம தமிழக முதல்வர் அவரர்கள் பல நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்கு செய்துவருகிறார்கள் (சந்தேகம் வந்தால் நம்ம பட்டாபட்டியை கேட்டு கொள்ளவும் ).சரி நான் என்ன சொல்ல போறேன்னா ......... இப்ப ரேஷன் கடைல 50 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் தருகிறார் இல்லையா .அதுல நம்ம முதல்வர் சிரித்து கொண்டு இருக்கிறார் .இலவச தொலைகாட்சி பெட்டியில் சிரித்து கொண்டு இருக்கிறார் (விட்டா இவர் ரூபாய் நோட்டில் கூட இவர் படத்தை போடுவார்) இலவச காஸ் அடுப்பு பெட்டியில் சிரித்து கொண்டு இருக்கிறார் இப்படி பல திட்டங்கள் தரும் கலைஞர் அவர்கள் ஏன் சிலவற்றில் மட்டும் சிரிக்க மாட்டுறாரு ? ஏன் இந்த ஓரவஞ்சனைன்னு தெரியல ?


எல்லா இடங்களிலும் திறந்து இருக்கும் டாஸ்மாக் கடைகளில் தரும் மது பாட்டில்களுக்கு ஏன் நமது கலைஞர் சிரிக்க மாட்றாரு?ஏன் இந்த விசயத்தில் விளம்பரம் வேண்டாமா அவருக்கு?  .ஏன் இந்த ஓரவஞ்சனை?இந்த அரசுக்கு மது விற்பனையில் தான் அதிக லாபம் வருகிறது அதில் சிரித்தால் என்ன..? இந்த அரசு இயங்குவதற்கு முழு முதல் காரணம் இதில் இருந்து வரும் அதிகபடியான லாபம் தானே .


நான் தான் 108  ஆம்புலன்சை கொண்டுவந்தேன் என்ற சண்டை இடுகிறார் .ஏன் 108 ஆம்புலன்சில் கலைஞர் சிரிக்க மாதிரி போட்டோ இல்லை? .ஏன் இதில் அவருக்கு விளம்பரம்  தேவை இல்லையா ?


ஆனால் ...................


பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய முக்கியத் தலைவர்களை தீர்த்துக் கட்டும் திட்டத்துடன் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளார்கள என்று இந்திய உளவு அமைப்பு அளித்துள்ள எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.அந்த தகவல் உண்மையானது தானா? என்பதையறிய தமிழக காவல் துறையின் உளவு‌ப் பிரிவு முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் லத்திகா சரண் கூறியதாக தமிழ் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது.




ஏன்  இந்த விசயத்தில் மட்டும் விளம்பரம் தேவையா???


உளவு துறைக்கு கிடைத்த தகவல் உண்மையானதாக இருந்தால் அதை ஏன் பத்திரிகைக்கும் ஊடகங்களுக்கும் தரவேண்டும்...?அவர்கள் எங்கு கூடுகிறார்களோ...! அங்கேயே போய் என்கௌன்ட்டர் பண்ணிற வேண்டியது தானே. இது நமக்கு ஏற்கனேவே ரொம்ப கை வந்த கலை ஆச்சே ..அல்லது இவர்கள் நாங்கள் எல்லாம் உஷாரா இருக்கோம்னு விடுதலை புலிகளுக்கு எச்சரிக்கை தருகிறீர்களா? ஏன் இந்த போலி விளம்பரம் தேவையா ?


இல்லையென்றால் மக்களை கொண்டு இந்த தீவீரவாதிகளை ஒடுக்க போகிறார்களா ஒன்றும் புரியவில்லை




Tuesday, December 14, 2010

பல்போ பல்பு

                                                           

சண்டே என் பொண்ணு வீட்டுல இருந்தாள் (பெரிய கண்டுபிடிப்பு சண்டேன்னா. லீவ் தான் குழந்தைங்க வீட்டுல தான் இருப்பாங்க ).என் வீட்டுக்கு கெஸ்ட் வந்திருந்தாங்க .எல்லோரும் மத்தியானம் சாப்ட்டுட்டு போய்ட்டாங்க .என் பொண்ணு வீட்டுல இருந்த செம்பருத்தி செடியில் இருந்து பூ எடுத்து வைச்சு சில படங்கள் மேல சொருகி வைச்சிருந்தா .திடிர்னு ரெண்டு பேப்பரை சின்ன உருண்டையா உருட்டி தன்னோட தலைய மூணு தடவை சுத்தினாள் .பின்பு மூன்று முறை அதன் மீது துப்பினாள் பின்னர் அதை சாமிக்கு தீபாரதானை காண்பிப்பது போன்று காட்டினாள்


என் பொண்ணை பார்த்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் ..........

நான் : என்ன மக்கா செய்கிற ...........

என் மகள்:நீங்களும் அம்மாவும் சாமி கும்பிடும் பொழுது அந்த டப்பால இருந்து சூடம் எடுத்து என்ன செய்வீங்களோ அது தான் செய்யுறேன் ....

நான் :அப்பா சாமி கும்பிடும் போது சூடம் எடுத்து தலைய எப்ப மக்கா சுத்தினேன் அதுவும் நீ துப்புர. சாமிக்கு துப்பினதை யாராவது கொளுத்துவார்களா ?என்றேன்...........

என் மகள:(என் வீட்டமாவை பார்த்து)அம்மா நைட் சூடம் எடுத்து என் தலைய சுத்தி ....துப்ப சொல்லி தானே கொளுத்துவாங்க .......

நான் :  பல்பு!!!!!!!!!

இருந்தாலும் நான் புத்திசாலி ஆயீற்றே (டாய் எவண்டா அங்க சிரிக்கிறது)........திரும்பவும் அது அதுக்கு இல்ல மக்கா அது உனக்கு திருஷ்ட்டி விழுந்திர கூடாதுன்னு அம்மா அப்படி செய்வாங்க .....சாமிக்கு அப்படி செய்ய   கூடாது என்ன மக்கா .............

என் மகள்:சரிப்பா ..........திருஷ்ட்டின்னா என்னப்பா?

நான் :    பல்பு !!!!!!!!!!!

என் மனைவி:அது வந்து இன்னைக்கு வீட்டுக்கு கெஸ்ட் வந்தாங்க இல்ல....உன்னை பார்த்து முடி நல்ல இருக்கு ........நீ நல்ல பேசுற இப்படி கண்ணு போட்டுருவாங்க .....அதை தான் திருஷ்ட்டின்னு சொல்லுவாங்க

என் மகள்:கண்ணு எப்படி அம்மா போடா முடியும் .....அது தான் கீழ விழாதே.........

நானும் என் மனைவியும்:    பல்பு !!!!!!!!!!!

ஒரு நாள் வீட்டுல இருந்ததுக்கு எத்தனை பல்பு வாங்குறது.............. முடியாது சாமீ ...............

Friday, December 3, 2010

சமகால கல்வி

சமகால கல்வி முறை பற்றி ஏற்கனவே எஸ்.கே அவர்கள் எழுதி விட்டார்கள்.இருந்தாலும் இதை யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று கூறியதால் என் மனதில் பட்டதை இங்கு கூறுகிறேன் .

                          
                                  
நம் மாநிலத்தில் கல்வி மேலோங்கி இருக்கிறது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தேர்ச்சி விகிதம் அதிகமாக தான் உள்ளது .இதை மறுப்பதற்கில்லை .ஆனால் கல்வி நிறுவனங்கள் கல்வியை மட்டும் தான் போதிக்கிறது. ஒழுக்கம் பண்பாடு ,கலாச்சாரம் என்பது எல்லாம் அடியோடு கிடையாது.

தமிழ் நாட்டை பொறுத்தவரை கல்வி என்பது சிறந்த வியாபாரமாகி விட்டது. அரசே பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயம் செய்தும் அதை செயல் படுத்த முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலைக்கு காரணம் வேறொன்றுமில்லை, அரசியல்வாதிகளே பெரும்பாலான கல்வி நிறுவனங்களை நடத்துவதால்  தான். அவர்களே கட்டணத்தை நிர்ணயித்து கொள்கிறார்கள் அதில் கோடி கோடியாய் கொள்ளையும் அடிக்கிறார்கள் .நூற்றில் 80% MLAக்கு அல்லது MP க்கு எதாவது ஒரு கல்லூரி அல்லது ,பள்ளி கண்டிப்பாக இருக்கும் .

பள்ளிக்கூடங்களை பார்த்தோமென்றால் அதிலும் MATRICULATION ,CBSE ,ANGLO INDIAN  என பல  வகை. இவை அனைத்தும் பணம் மற்றும்  அந்தஸ்த்தின் அடிப்படையில் தான் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் சமச்சீர் கல்வி என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. பிள்ளைகள் இப்பொழுது கூடுதல் பாட சுமை தான் பெறுகிறார்கள் .முதுகுகளில் அதிகமாக சுமக்கிறார்கள். வசதி படைத்தவர் ,வசதி இல்லாதவர் என்று அனைவருமே ஆங்கில வழி கல்விக்கு வந்து விட்டதனால் தான் அரசு சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது. இல்லையென்றால் இன்னும் சில காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களே இருக்க மாட்டார்கள் இது மறுக்க முடியாத உண்மை!!!!!!!

பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளிகளை வெறுத்தொதுக்க காரணம் நமது அரசாங்கமும், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் தான். அவர்கள் சரியான நபரை ஆசிரியராக பணி நியமனம் செய்யவில்லை. ஆசிரியர்களாவது ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை ,பெரு நகரங்கள் எப்படி என்று எனக்கு எனக்கு தெரியவில்லை. ஆனால் கிராமங்களிலும் ,சிறு நகரங்களிலும் அரசு ஆசிரியர்கள் பெரும்பாலானோர் தன் சம்பளத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள். இது நான் கண் கூடாக பார்த்த உண்மை .ஒழுங்காக பாடம் எடுப்பதும் இல்லை .சமீபத்தில் கூட ஒரு செய்தி ஒரு அரசு ஆசிரியர் அவராகவே ஒரு பெண் ஆசிரியயை பணியமர்த்தி அவளுக்கு மாதம் 2000 ரூபாய் சம்பளம் கொடுத்து பாடம் எடுத்து இருக்கிறார். இது மட்டுமல்லாமல் பள்ளியில் கல்வி பயில வரும் மாணவ மாணவிகளை வீட்டிற்கு வேலைக்கு அழைத்து செல்வது, முறைகேடாக நடந்து கொள்வது பல கேவலமான செயல்கள் நடந்து வருகின்றன.

மேலும் பள்ளியில் ஒழுங்காக பாடத்தை நடத்தாமல், அதே பாடத்தை மாலை 5 மணிக்கு மேல் தங்கள் வீட்டில் டியூஷன் என்று சொல்லி கொடுத்து அதற்கு வேறு தனியாக வசூலித்து விடுகிறார்கள். .அப்படி பிள்ளைகள் போக வில்லை என்றால் அவர்கள் பாடத்தில் பெயில் ஆக்கி விடுவார்கள்.இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. 8வது வகுப்பு வரை பெயில் ஆக்க கூடாது என்று சட்டம் வந்து விட்டது . 12வகுப்பு மாணவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும் .காலையில் 6 மணிக்கு டியூஷன் போக ஆரம்பிக்கிறான் அப்படியே பள்ளி செல்கிறான் பின்பு பள்ளி விட்டு வந்து அடுத்த டியூஷன் என அவனது பொழுது ஓய்வில்லாமல் கழிகிறது. இதற்க்கு பேசாம கேரளாவுக்கு அடிமடாக போய் இருக்கலாம் .இவ்வளவுக்கும் அரசு ஆசிரியர் யாரும் தனியாக டியூஷன் எடுக்க கூடாதுன்னு ஒரு சட்டம் வேறு இருக்கு .

காமராஜர் அந்த காலத்தில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரிய கூடாது என்பதற்காக பள்ளிகளில் ஒரே மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும் என்று கூறினார் .இப்பொழுது அதுவே வினையாக போய் விட்டது. திங்கள் கிழமை ஒரு கலர் துணி ,செவ்வாய் கிழமை ஒரு கலர் துணி .இப்படி தினம் ஒரு ஆடை போட வேண்டும் அதுவும் பள்ளிகளில் தான் வாங்க வேண்டும் என்று சட்டம் வேறு. அரசு பள்ளிகளில் இன்னும் இந்த முறை வராதது மகிழ்ச்சி.

18 வயது நிரம்பியவர்களுக்கு தான் இரு சக்கர ஓட்டுனர் உரிமம் கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியர் இரு சக்கர வாகனங்களில் தான் பள்ளிகளுக்கு வருகின்றனர். இதனை பள்ளி நிர்வாகமோ, ஆசிரியர்களோ கண்டு கொள்வதில்லை. பெரும்பாலான மாணவர்கள் சாலை விதிமுறைகளை மதிப்பதில்லை. பிறகு இவர்கள் வளர்ந்த பின் எப்படி நம் அரசு இயற்றும் சட்டத்தை மதிப்பார்கள் .மிதிக்கத்தான் செய்வார்கள் .இதில் வேறு  அனைத்து  +1மாணவர்களுக்கும் அரசு இலவச மிதிவண்டி வேற கொடுக்கிறது. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை ஆசிரியர்கள் கற்று கொடுக்க வேண்டும்.

 +2படித்த மாணவனிடம் வங்கியில் விண்ணப்பபாரம் பூர்த்தி செய்ய சொன்னால் முழிக்கிறான். கல்வி என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு ஒரு மனப்பாட விசயமாகவே இருக்கிறது. ஆசிரியர் சொல்வதை அப்படியே தேர்வில் ஒப்பித்து விடுகிறான். அதே விசயங்கள் வாழ்க்கையின் தேவைகளில் வரும் பொது அவனால் சரிவர செயல் பட முடிவதில்லை.

பெரும்பாலான மாணவர்கள் பாடங்களை தேர்வு செய்து படிப்பதில்லை. எதோ படிக்க வேண்டுமென்று படிக்கிறார்கள். பின்னர் தகுந்த வேலை கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். இதற்க்கான தீர்வுகள் நாம் பள்ளிக்காலத்திலேயே எடுக்க வேண்டியது கட்டாயம்.. சரியான திட்டமிடுதலே இதற்கு சிறந்த வழி..வாழ்க்கைக்கு உகந்த பாட திட்டங்கள் வர வேண்டும் குழந்தைகள் ஆனாலும் சரி இளைஞர்கள் ஆனாலும் சரி நல்ல விளையாடி படிக்க வேண்டும் என்பது என் ஆசை .எப்பொழுதுமே பாட புத்தகங்களை கட்டி அழுவதற்கு பதில் வேறு துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் .கல்லூரி படிக்கும் பொழுதே "கை தொழில் ஒன்றை கற்று கொள் கவலை உனக்கில்லை ஒத்து கொள் "என்பதற்கு ஏற்ப ஏதாவது ஒரு தொழில் சார்ந்த படிப்பை கட்டாயமாக்க வேண்டும் .

குறிப்பு :இதில் எல்லா ஆசிரியர்களையும் குறை கூற வில்லை .நல்ல ஆசிரியர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.


இந்த சமகால கல்வி முறை பற்றி மேலும் நம் பதிவர்கள் எழுத வேண்டும் .யார் வேண்டும் என்றாலும் தொடரலாம் .