Sunday, November 21, 2010

காக்கா

இன்னைக்கு காலைல ஒரு 6மணி இருக்கும் எந்திருச்சி பல் துலக்கிட்டு இருந்தேன். என்னோட குட்டி பொண்ணும் பக்கத்துல இருந்தா .வீட்டுக்காரம்மா துணி துவச்சி கிட்டு இருந்தாங்க. நேத்து இரவு முழுவதும் நல்ல மழை. கரண்ட் கம்பில நிறைய காக்கா இருந்துச்சு. அந்த காக்கா கூட்டத்தில ஒரு குஞ்சு காக்கவும் இருந்துச்சு. நான் எப்பவுமே புத்திசாலின்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க (டேய் யாருடா அங்க சிரிக்கிறது ......பிச்சு புடுவேன் பிச்சு ).


நான் ஒரு ஆர்வகோளறு உள்ளவன்னு உங்க எல்லோருக்கும் தெரியும். அந்த ஆர்வக்கோளாறு காரணமா என் பொண்ண தூக்கி வச்சுக்கிட்டு. மக்கா அங்க பாரு ஒரு குஞ்சு காக்கா இருக்குன்னு என் பொண்ணுக்கு காண்பித்து கொடுத்தேன்.அவளும் இவ்வளவு நாளா பெரிய காக்கா தான் பார்த்திருக்கா ஆதனால குஞ்சு காக்காவ சந்தோசமா பார்த்திட்டிருந்தவ .. திடீர்ன்னு

என் மகள் : அப்பா அந்த பெரிய காக்கா என்ன செய்யுது ?

நான் :அது தன் குட்டி புள்ளைக்கு சோறு ஊட்டுதுடா செல்லம்..
(காக்கா தன்  அலகில் இருந்த உணவை குஞ்சு காக்காக்கு கொடுத்துட்டு இருந்துச்சு )

என் மகள் :அப்பா இது அப்போ அம்மா காக்கா தானே ?

நான் :ஏன் அப்படி கேக்குற மக்கா

என் மகள் :அம்மா தானே எனக்கு சோறு ஊட்டுவாங்க........ அதனால அதுவும் அம்மா காக்காவா தானே இருக்கும்..

நான் : ஆமாடா செல்லம்.


என் மகள் : ஆமாப்பா இதுல எது அப்பா காக்கா?..........


நான் :????????????பல்பு !!!!!!(யாராவது சிரிச்சிங்கன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் )


நான் என் வீட்டம்மாவ   பார்த்தேன்... என் வீட்டம்மாவ கோவமா என்னை பார்த்து.. ஏங்க உங்களுக்கு காலையிலையே இதெல்லாம் தேவையா... போங்க சீக்கிரம் போய் பல் தேச்சிட்டு எடத்த காலி பண்ணுங்க. அப்படீன்னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு உள்ள போயிட்டா........

எனக்கு இன்னும் சந்தேகம் தீரல.......காக்கால எது ஆண் காக்கா ....எது பெண் காக்கான்னு எப்படி கண்டு பிடிக்கிறது ...

யாருல அங்கே ஓடி போறது...ஒழுங்கா பதில் சொல்லிட்டு போங்க..

106 comments:

வெறும்பய said...

online

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அது ரொம்ப ஈசி மக்கா, கொஞ்ச நேரம் காக்காக் கூட்டத்தையே பார்த்துக்கிட்டிரு எந்தக் காக்கா ஒண்ணுமே திங்காம, மத்தவங்க திங்கறதை மட்டும் பார்த்துக்கிட்டிருக்கோ, அதுதான் குடும்பத் தலைவன் அதாவது அப்பா காக்கா!

சௌந்தர் said...

மக்கா அந்த காக்கா எங்க போகுது உன்னை அடிக்க ஆல் கூப்பிட்டு வர போகுதா

நாகராஜசோழன் MA said...

எந்த காக்கா கால்ல மெட்டி போடுலியோ அந்த காக்கா ஆண் காக்கா. சரியா?

நாகராஜசோழன் MA said...

// வெறும்பய said...

online//

மச்சி நல்லாருக்கியா? சாப்பிட்டாச்சா?

நாகராஜசோழன் MA said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அது ரொம்ப ஈசி மக்கா, கொஞ்ச நேரம் காக்காக் கூட்டத்தையே பார்த்துக்கிட்டிரு எந்தக் காக்கா ஒண்ணுமே திங்காம, மத்தவங்க திங்கறதை மட்டும் பார்த்துக்கிட்டிருக்கோ, அதுதான் குடும்பத் தலைவன் அதாவது அப்பா காக்கா!//

ஏன் குடும்பத் தலைவன் ஒண்ணுமே சாப்பிடமாட்டாரா? சொல்லுங்க பெசொவி சொல்லுங்க!!

ஹரிஸ் said...

தொப்பி..தொப்பி...

Arun Prasath said...

நாட்டுக்கு மிக முக்கியமான பிரச்சனை பாபு சார்... இதை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேணும்... ஹி ஹி

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

// வெறும்பய said...

online//

மச்சி நல்லாருக்கியா? சாப்பிட்டாச்சா?


//

நமக்கு தெரியாத பய புள்ள ஒண்ணு தூக்கு மாட்டிக்க போகுதாம்.. அது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாகராஜசோழன் MA said... 4

எந்த காக்கா கால்ல மெட்டி போடுலியோ அந்த காக்கா ஆண் காக்கா. சரியா?
////

Exactly Exactly

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நாகராஜசோழன் MA said...
ஏன் குடும்பத் தலைவன் ஒண்ணுமே சாப்பிடமாட்டாரா? சொல்லுங்க பெசொவி சொல்லுங்க!!
//

அப்படியில்ல அரசியல்வாதி சார்,
தான் பட்டினி கிடந்தாவது குடும்பத்தைக் காப்பாதுறவர் குடும்பத் தலைவன் என்கிற கோணத்தில் எழுதப் பட்டது அது.
(ங்கொய்யால, கமெண்டுக்கெல்லாம் டிஸ்கி போடணும் போல இருக்கே!)

சௌந்தர் said...

.வீட்டுக்காரம்மா துணி துவச்சி கிட்டு இருந்தாங்க. நேத்து இரவு முழுவதும் நல்ல மழை. கரண்ட் கம்பில நிறைய காக்கா////

மக்கா மாத்தி சொல்லு நீ தான் துணி துவச்சிட்டு இருந்தே..?

Madhavan Srinivasagopalan said...

இந்த கேள்விய நா சாய்ஸ்ல விடுறேன்..
( ஓட்டு மட்டும் போட்டுட்டேன்..)

அருண் பிரசாத் said...

ரொம்ப ஈஸி மக்கா... உங்க போட்டோவை காட்டிடுங்க சரியா போச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு எந்தக் காக்கா பல்லு வெளக்கலியோ அதுதான் அப்பாக் காக்கா, சரியா?

இம்சைஅரசன் பாபு.. said...

////நாட்டுக்கு மிக முக்கியமான பிரச்சனை பாபு சார்... இதை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேணும்..//

நாட்ட பத்தி நான் கவலைபடல மக்கா .என் பொண்ணு கேட்ட கேள்விக்கு பதில் வேணும் .உங்களுக்கு தெரியுமா? தெரியாத ?.........
அத சொல்லுங்க பாராளுமன்ற வேலை 10 ௦ நாள் முடக்கம் அதுனால தானே உங்க கிட்ட கேக்குறேன்......(பய புள்ள நாட்டுக்கு மேல பழி போட்டுட்டு ஓடி ஒழிய பாக்குது )

இம்சைஅரசன் பாபு.. said...

////நாட்டுக்கு மிக முக்கியமான பிரச்சனை பாபு சார்... இதை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேணும்..//

நாட்ட பத்தி நான் கவலைபடல மக்கா .என் பொண்ணு கேட்ட கேள்விக்கு பதில் வேணும் .உங்களுக்கு தெரியுமா? தெரியாத ?.........
அத சொல்லுங்க பாராளுமன்ற வேலை 10 ௦ நாள் முடக்கம் அதுனால தானே உங்க கிட்ட கேக்குறேன்......(பய புள்ள நாட்டுக்கு மேல பழி போட்டுட்டு ஓடி ஒழிய பாக்குது )

வெறும்பய said...

இன்னைக்கு காலைல ஒரு 6மணி இருக்கும் எந்திருச்சி பல் துலக்கிட்டு இருந்தேன்.


//

அடபாவி இதென்ன புது கெட்ட பழக்கம்... ச்சீ bad boy .

Arun Prasath said...

(பய புள்ள நாட்டுக்கு மேல பழி போட்டுட்டு ஓடி ஒழிய பாக்குது )

என்ன சொன்னாலும் விட மாட்டாரு போலயே.....

இம்சைஅரசன் பாபு.. said...

ரொம்ப ஈஸி மக்கா... உங்க போட்டோவை காட்டிடுங்க சரியா போச்சு//மக்கா உங்க வீட்டுலயும் same blood ..........போ மக்கா .......

வெறும்பய said...

நான் ஒரு ஆர்வகோளறு உள்ளவன்னு உங்க எல்லோருக்கும் தெரியும்.

//

ஆமா ஆமா தெரியும்.. அது எதிலேன்னு தெரியும்... நீ நடத்து மக்கா...

அருண் பிரசாத் said...

//மக்கா உங்க வீட்டுலயும் same blood ..........போ மக்கா .......//

அதுக்கு தான் நான் காக்காவையே காட்டுறது இல்லை... எல்லாம் குருவி (விசய் படம் இல்லை) கிளிதான்

இம்சைஅரசன் பாபு.. said...

//மாப்பு எந்தக் காக்கா பல்லு வெளக்கலியோ அதுதான் அப்பாக் காக்கா, சரியா//காக்கா புடிக்குற பய நம்ம ரமேஷ அனுப்பி இருக்கேன் ..........இன்னைக்கு டெஸ்ட் பண்ணிற வேண்டியது தான் மக்கா .....(எலேய் ரமேஷ் துப்பாக்கி ,கவுட்டு எல்லாம் எடுத்துட்டு போ )

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

// வெறும்பய said...

online//

மச்சி நல்லாருக்கியா? சாப்பிட்டாச்சா?


//

நமக்கு தெரியாத பய புள்ள ஒண்ணு தூக்கு மாட்டிக்க போகுதாம்.. அது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு...///

அது யாருப்பா தூக்கு மாட்டுறது. நைட் சாப்பிட்டதுக்கு அப்புறம் தூக்கு மாட்டுங்க. ஏன்னா பொணம் இருக்கிற வீட்டுல சாப்பிடக்கூடாதாம்.

நாகராஜசோழன் MA said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நாகராஜசோழன் MA said...
ஏன் குடும்பத் தலைவன் ஒண்ணுமே சாப்பிடமாட்டாரா? சொல்லுங்க பெசொவி சொல்லுங்க!!
//

அப்படியில்ல அரசியல்வாதி சார்,
தான் பட்டினி கிடந்தாவது குடும்பத்தைக் காப்பாதுறவர் குடும்பத் தலைவன் என்கிற கோணத்தில் எழுதப் பட்டது அது.
(ங்கொய்யால, கமெண்டுக்கெல்லாம் டிஸ்கி போடணும் போல இருக்கே!)//

அப்போ நம்ம பாபு குடும்பத் தலைவன் இல்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வீட்டுக்காரம்மா துணி துவச்சி கிட்டு இருந்தாங்க.///

இப்பிடியெல்லாம் சொல்லிட்டா....நம்பிடுவோமா....?
காக்காயப் பத்தி சொல்றதுன்னா ஸ்ட்ரெயிட்டா சொல்ல வேண்டியதுதானே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// இம்சைஅரசன் பாபு.. said...
//மாப்பு எந்தக் காக்கா பல்லு வெளக்கலியோ அதுதான் அப்பாக் காக்கா, சரியா//காக்கா புடிக்குற பய நம்ம ரமேஷ அனுப்பி இருக்கேன் ..........இன்னைக்கு டெஸ்ட் பண்ணிற வேண்டியது தான் மக்கா .....(எலேய் ரமேஷ் துப்பாக்கி ,கவுட்டு எல்லாம் எடுத்துட்டு போ )////

அவரு புடிக்ககிறது அண்டங்காக்காவாச்சே, இது சரியா வரும்கறே?

நாகராஜசோழன் MA said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாகராஜசோழன் MA said... 4

எந்த காக்கா கால்ல மெட்டி போடுலியோ அந்த காக்கா ஆண் காக்கா. சரியா?
////

Exactly Exactly//

தொரை இங்க்லீஷ் எல்லாம் பேசுது?!!

நாகராஜசோழன் MA said...

/ இம்சைஅரசன் பாபு.. said...

//மாப்பு எந்தக் காக்கா பல்லு வெளக்கலியோ அதுதான் அப்பாக் காக்கா, சரியா//காக்கா புடிக்குற பய நம்ம ரமேஷ அனுப்பி இருக்கேன் ..........இன்னைக்கு டெஸ்ட் பண்ணிற வேண்டியது தான் மக்கா .....(எலேய் ரமேஷ் ,கவுட்டு எல்லாம் எடுத்துட்டு போ )//

அவருகிட்டே துப்பாக்கி இல்லையாம்.

TERROR-PANDIYAN(VAS) said...

//என்னோட குட்டி பொண்ணும் பக்கத்துல இருந்தா//

அப்பொ பெரிய பொண்ணு??

TERROR-PANDIYAN(VAS) said...

//நேத்து இரவு முழுவதும் நல்ல மழை. கரண்ட் கம்பில நிறைய காக்கா இருந்துச்சு. //

இரவா???

TERROR-PANDIYAN(VAS) said...

//ஒரு குஞ்சு காக்கவும் இருந்துச்சு.//

குஞ்சு காக்க கூட்டுல தான் இருக்கும்... அது எப்படி கரண்டு கம்பில?? அப்பொ அதுக்கு பறக்க தெரியும்.. அப்பொ அது Youth காக்கா...

இம்சைஅரசன் பாபு.. said...

////என்னோட குட்டி பொண்ணும் பக்கத்துல இருந்தா//

அப்பொ பெரிய பொண்ணு??//

அட பாவி ...எல்லாம் தெரிஞ்ச நீயுமா ?

TERROR-PANDIYAN(VAS) said...

//அம்மா தானே எனக்கு சோறு ஊட்டுவாங்க........ //

அப்பொ நிங்க வீட்டுல வேலை செய்ய மாட்டிங்க... இது ஆணாதிக்கம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
//ஒரு குஞ்சு காக்கவும் இருந்துச்சு.//

குஞ்சு காக்க கூட்டுல தான் இருக்கும்... அது எப்படி கரண்டு கம்பில?? அப்பொ அதுக்கு பறக்க தெரியும்.. அப்பொ அது Youth காக்கா...////

டேய்... அவரே ஏதோ கனவு கண்டுப்புட்டு எழுதியிருக்காப்புல, அதப் போயீ ஏண்டா ஏதோ மணிரத்னம் பட ரேஞ்சுக்கு டீல் பண்றிங்க?

TERROR-PANDIYAN(VAS) said...

//காக்கால எது ஆண் காக்கா ....எது பெண் காக்கான்னு எப்படி கண்டு பிடிக்கிறது ..//

காக்காவ கூப்பிட்டு அது ஐ.டி கார்டு வாங்கி பார்த்த தெரிய போகுது...

இம்சைஅரசன் பாபு.. said...

//டேய்... அவரே ஏதோ கனவு கண்டுப்புட்டு எழுதியிருக்காப்புல, அதப் போயீ ஏண்டா ஏதோ மணிரத்னம் பட ரேஞ்சுக்கு டீல் பண்றிங்க//

யோவ் பன்னி அன்ச்வேர் சொல் .சாய்ந்திரம் வந்து கேப்ப நான் பதில் சொல்லணும் ......கனவு இல்ல மக்கா நிஜம்

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...


அவருகிட்டே துப்பாக்கி இல்லையாம்.

துப்பாக்கி எல்லாம் தேவை இல்ல மச்சி காக்காவ கூட்டமா கூட்டு தலைல கொத்த சொல்லனும் நல்லா அழாமா மண்டைல எந்த காக்கா கொத்துச்சோ அதுதான் ஆண் காக்கா

ஆளு ரெடியானு கேட்டு சொல்லுப்பா

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//டேய்... அவரே ஏதோ கனவு கண்டுப்புட்டு எழுதியிருக்காப்புல, அதப் போயீ ஏண்டா ஏதோ மணிரத்னம் பட ரேஞ்சுக்கு டீல் பண்றிங்க?//

அது எப்படி மச்சி!! நமக்கு கருத்து முக்கியம். இந்த உலகத்துக்கு ஒரு தப்பான கருத்து போய் சேராம நாம தான் தடுக்கனும்... :)))

dineshkumar said...

இம்சைஅரசன் பாபு.. said...
//டேய்... அவரே ஏதோ கனவு கண்டுப்புட்டு எழுதியிருக்காப்புல, அதப் போயீ ஏண்டா ஏதோ மணிரத்னம் பட ரேஞ்சுக்கு டீல் பண்றிங்க//

யோவ் பன்னி அன்ச்வேர் சொல் .சாய்ந்திரம் வந்து கேப்ப நான் பதில் சொல்லணும் ......கனவு இல்ல மக்கா நிஜம்

ரொம்ப பீல் பண்ணாதிங்க கொத்த விட்டு பாத்துருவோம் சரியா

நாகராஜசோழன் MA said...

// TERROR-PANDIYAN(VAS) said...

//காக்கால எது ஆண் காக்கா ....எது பெண் காக்கான்னு எப்படி கண்டு பிடிக்கிறது ..//

காக்காவ கூப்பிட்டு அது ஐ.டி கார்டு வாங்கி பார்த்த தெரிய போகுது...//

@டெர்ரர் மச்சி,
ஐடி கார்டுல ஆணா பெண்ணான்னு போடலின்னா என்ன செய்யறது?

அருண் பிரசாத் said...

//காக்காவ கூப்பிட்டு அது ஐ.டி கார்டு வாங்கி பார்த்த தெரிய போகுது...//
மச்சி ஐ டி கார்டு வாங்க துபாய்க்குலாம் வரமுடியாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
//டேய்... அவரே ஏதோ கனவு கண்டுப்புட்டு எழுதியிருக்காப்புல, அதப் போயீ ஏண்டா ஏதோ மணிரத்னம் பட ரேஞ்சுக்கு டீல் பண்றிங்க//

யோவ் பன்னி அன்ச்வேர் சொல் .சாய்ந்திரம் வந்து கேப்ப நான் பதில் சொல்லணும் ......கனவு இல்ல மக்கா நிஜம்///

சரிப்பா நானும் கோதாவுல குதிக்கிறேன்!

நாகராஜசோழன் MA said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//டேய்... அவரே ஏதோ கனவு கண்டுப்புட்டு எழுதியிருக்காப்புல, அதப் போயீ ஏண்டா ஏதோ மணிரத்னம் பட ரேஞ்சுக்கு டீல் பண்றிங்க?//

அது எப்படி மச்சி!! நமக்கு கருத்து முக்கியம். இந்த உலகத்துக்கு ஒரு தப்பான கருத்து போய் சேராம நாம தான் தடுக்கனும்... :)))//

அப்போ இனிமேல் டாகுடரு படமே ரிலீஸ் ஆகாம தடுக்கணும்.

இம்சைஅரசன் பாபு.. said...

//அது எப்படி மச்சி!! நமக்கு கருத்து முக்கியம். இந்த உலகத்துக்கு ஒரு தப்பான கருத்து போய் சேராம நாம தான் தடுக்கனும்... ://

மக்கா பதில் தெரியுமா தெரியாத ?அத சொல்லு கருத்து என்ன வெளக்கெண்ணை கருத்து வேண்டியது கிடக்கு

dineshkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//டேய்... அவரே ஏதோ கனவு கண்டுப்புட்டு எழுதியிருக்காப்புல, அதப் போயீ ஏண்டா ஏதோ மணிரத்னம் பட ரேஞ்சுக்கு டீல் பண்றிங்க?//

அது எப்படி மச்சி!! நமக்கு கருத்து முக்கியம். இந்த உலகத்துக்கு ஒரு தப்பான கருத்து போய் சேராம நாம தான் தடுக்கனும்... :)))

அப்ப தடுக்க அணை கட்ட போறீங்களா பாஸ்

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
//டேய்... அவரே ஏதோ கனவு கண்டுப்புட்டு எழுதியிருக்காப்புல, அதப் போயீ ஏண்டா ஏதோ மணிரத்னம் பட ரேஞ்சுக்கு டீல் பண்றிங்க//

யோவ் பன்னி அன்ச்வேர் சொல் .சாய்ந்திரம் வந்து கேப்ப நான் பதில் சொல்லணும் ......கனவு இல்ல மக்கா நிஜம்///

சரிப்பா நானும் கோதாவுல குதிக்கிறேன்!//

வாங்க மாம்ஸ் வாங்க..

நாகராஜசோழன் MA said...

//dineshkumar said...

இம்சைஅரசன் பாபு.. said...
//டேய்... அவரே ஏதோ கனவு கண்டுப்புட்டு எழுதியிருக்காப்புல, அதப் போயீ ஏண்டா ஏதோ மணிரத்னம் பட ரேஞ்சுக்கு டீல் பண்றிங்க//

யோவ் பன்னி அன்ச்வேர் சொல் .சாய்ந்திரம் வந்து கேப்ப நான் பதில் சொல்லணும் ......கனவு இல்ல மக்கா நிஜம்

ரொம்ப பீல் பண்ணாதிங்க கொத்த விட்டு பாத்துருவோம் சரியா//

ஏன் இந்த கொலை வெறி?

இம்சைஅரசன் பாபு.. said...

//மச்சி ஐ டி கார்டு வாங்க துபாய்க்குலாம் வரமுடியாது//

அசிங்க பட்டான் டெர்ரர்

நாகராஜசோழன் MA said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு இனிய செய்தி
நம் மன்னரின் சந்தேகத்தைத் தீர்க்க ஒரு நல்ல ஐடியா கிடைத்து விட்டது. ஒரு 4-5 காக்காவப் புடிச்சிக்கிட்டு வந்து டீவிய ஆன் பண்ணீ, நல்ல செக்ஸ் படத்தப் போட்டுட்டோம்னா, மூடு வந்து எல்லாம் மேட்டர ஸ்டார்ட் பண்ணீடும், ஈசியா கண்டுபுடிச்சிடலாம்!

dineshkumar said...

காக்கா வ இனி சட்ட போட சொல்லுங்கப்பா

ப.செல்வக்குமார் said...

//எனக்கு இன்னும் சந்தேகம் தீரல.......காக்கால எது ஆண் காக்கா ....எது பெண் காக்கான்னு எப்படி கண்டு பிடிக்கிறது ...
///

சப்ப மேட்டர் ., இதுக்குப் போய் குழப்பம் ஆகிட்டு .,
ஆண் காக்கை கிட்டப் போய் கேட்டா சொல்லப் போகுது ..!!

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said... 31
//நேத்து இரவு முழுவதும் நல்ல மழை. கரண்ட் கம்பில நிறைய காக்கா இருந்துச்சு. //

இரவா??////

டெர்ரை யாரும் ஏமாற்ற முடியாது....எப்படி கண்டுபித்தார் பாரு

இம்சைஅரசன் பாபு.. said...

//டிச்சிக்கிட்டு வந்து டீவிய ஆன் பண்ணீ, நல்ல செக்ஸ் படத்தப் போட்டுட்டோம்னா, மூடு வந்து எல்லாம் மேட்டர ஸ்டார்ட் பண்ணீடும், ஈசியா கண்டுபுடிச்சிடலாம்!//

ஐடியா no .1 ஓகே ...ஆனா இந்த காக்கா புடிக்கிற பய ரமேஷ் இன்னும் காணோம் .....

இம்சைஅரசன் பாபு.. said...

//சப்ப மேட்டர் ., இதுக்குப் போய் குழப்பம் ஆகிட்டு .,
ஆண் காக்கை கிட்டப் போய் கேட்டா சொல்லப் போகுது ..!!//

காக்கா பாஷை உனக்கு தெரியுமா செல்லம் .....பயபுள்ள எப்படி அறிவ வளர்த்து வைச்சிருக்கு பாரேன் ......கேட்டு சொல்லு ராசா ஆண் காக்கா எப்படி இருக்கும் பெண் காக்கா எப்படி இருக்கும் ன்னு

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒரு இனிய செய்தி
நம் மன்னரின் சந்தேகத்தைத் தீர்க்க ஒரு நல்ல ஐடியா கிடைத்து விட்டது. ஒரு 4-5 காக்காவப் புடிச்சிக்கிட்டு வந்து டீவிய ஆன் பண்ணீ, நல்ல செக்ஸ் படத்தப் போட்டுட்டோம்னா, மூடு வந்து எல்லாம் மேட்டர ஸ்டார்ட் பண்ணீடும், ஈசியா கண்டுபுடிச்சிடலாம்!

யோவ் கவுண்டரே இது நியாயமா

dineshkumar said...

காகா ன்னு கத்தனா அது பெண் காக்கா
கக்கரகா ன்னு கத்தனா அதான் ஆண் காக்கா

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//மச்சி ஐ டி கார்டு வாங்க துபாய்க்குலாம் வரமுடியாது//

அப்பொ உன் கார்ட FAX அனுப்பிடு மச்சி... :)))

TERROR-PANDIYAN(VAS) said...

@Dinesh

//அப்ப தடுக்க அணை கட்ட போறீங்களா பாஸ்//

இல்லை.. குறுக்க படுத்து மறியல் பண்ண போறன்...

இம்சைஅரசன் பாபு.. said...

//காகா ன்னு கத்தனா அது பெண் காக்கா
கக்கரகா ன்னு கத்தனா அதான் ஆண் காக்கா//

சபாஷ் அறிய கண்டுபிடிப்பு ............(போ மக்கா ..கோழி தன கொக்கரக்கோ ன்னு கூவும் )

அதுவில்லாம காக்கா கத்தாது மக்கா கரையும்

நாகராஜசோழன் MA said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@Dinesh

//அப்ப தடுக்க அணை கட்ட போறீங்களா பாஸ்//

இல்லை.. குறுக்க படுத்து மறியல் பண்ண போறன்...//

@டெர்ரர், யார் கூட மச்சி??

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
//TERROR-PANDIYAN(VAS) said...

@Dinesh

//அப்ப தடுக்க அணை கட்ட போறீங்களா பாஸ்//

இல்லை.. குறுக்க படுத்து மறியல் பண்ண போறன்...//

@டெர்ரர், யார் கூட மச்சி??

என்ன மச்சி இது கூட தெரியாதா

ப.செல்வக்குமார் said...

//கேட்டு சொல்லு ராசா ஆண் காக்கா எப்படி இருக்கும் பெண் காக்கா எப்படி இருக்கும் ன்னு///

ஆண் காக்கா இன்னொரு ஆண் காக்கை மாதிரி இருக்கும் .,

எஸ்.கே said...

ஆண் காக்கையின் இறகு, வால், உடல் எல்லாமே பெரிதாக இருக்கும். இதை வைத்து கண்டு பிடிக்கலாம்.

இதைவிட எளிய வழி:
1)Catch a crow
2)Pick some blood
3)Send the blood in a Laboratory for a DNA test
4)Ask for its gender
5)Pay money
6)Get report
7)See the report and you will find it there......

கே.ஆர்.பி.செந்தில் said...

கா..கா..கா... ராகத்த வச்சி கண்டு பிடிக்கலாம் .. ஹி ..ஹி ..

இம்சைஅரசன் பாபு.. said...

@எஸ் .கே
உங்களை தான் மலை போல் நம்பி இருந்தேன்.................கவுத்தி போட்டியே மக்க

எஸ்.கே said...

என்ன இப்படி சொல்லீட்டீங்க உங்களுக்காக ஐந்து யோசனைகள்!


ஐடியா 1:
அந்த குஞ்சுக் காக்காவோட உண்மையான அம்மா அப்பா எங்கேயோ தொலைஞ்சு போய்ட்டாங்க! இந்த அம்மா காக்கா வளர்ப்பு அம்மா! அதனால அப்பா இல்ல!

ஐடியா 2:
அந்த அம்மா காக்காவா யாரோ ஏமாத்திட்டாங்க! அதனால தனியா குஞ்சுக் காக்காவ வளர்ப்பாங்க!

ஐடியா 3:
அந்த குஞ்சுக் காக்கா ஒரு டெஸ்ட் டியூப் பேபி!

ஐடியா 4:
அப்பா காக்கா வேலைக்காக வெளிநாடு போயிருக்கு!

ஐடியா 5:
அதுங்க லிவிங் டு கெதர் காக்கா! அப்பா காக்கா இப்ப பிரிஞ்சு போயிருச்சு!

ஐடியாக்கள் போதுமா!!!!

வார்த்தை said...

எஸ்.கே said... 68
என்ன இப்படி சொல்லீட்டீங்க உங்களுக்காக ஐந்து யோசனைகள்!

போங்கய்யா...போங்க‌
மறுமடியும் ஒழுங்கா போய் பன்னிகுட்டியோட
கலாச்சார பதிவை 100 வாட்டி இம்போசிசன் எழுதிட்டு வாங்க..

ஐடியாவ பாரு...

அங்க ஒரு புள்ள உசுர கொடுத்து பதிவு போட்டு கலாச்சாரத்த காப்பாத்த பாக்குது
(pannikutti i mean you TRULY, no feelings, dont cry)
இங்க என்னடான்னா.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காக்கா பயங்கர கருப்பா இருக்கும். பாபு கருப்பா பயங்கரமா இருப்பான்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

உங்க காக்கா சிந்தனை அபாரம்..எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வருது..சரி பாப்பா கேட்டுச்சுன்றதால உன்னை ச்சி போன்னு விட்டுடறேன்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

காக்கா உங்கலையே பார்த்தா பொம்பள காக்கா தான் ஹிஹி

Madhavan Srinivasagopalan said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said "ஒரு இனிய செய்தி
நம் மன்னரின் சந்தேகத்தைத் தீர்க்க ஒரு நல்ல ஐடியா கிடைத்து விட்டது. ஒரு 4-5 காக்காவப் புடிச்சிக்கிட்டு வந்து டீவிய ஆன் பண்ணீ"......,//

"சீரியலு போட்டுவிட்டா, எதெல்லாம் பறந்து போகுதோ அதெல்லாம் ஆண்.. ஒக்காந்துகிட்டு டி.வி பாக்குரதேல்லாம் பெண்.."

அப்படி சொல்லுவீங்கன்னு எதிர்பாத்தா.. அடச் சீ நீயும் ஒன் புத்தியும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வார்த்தை said...
எஸ்.கே said... 68
என்ன இப்படி சொல்லீட்டீங்க உங்களுக்காக ஐந்து யோசனைகள்!

போங்கய்யா...போங்க‌
மறுமடியும் ஒழுங்கா போய் பன்னிகுட்டியோட
கலாச்சார பதிவை 100 வாட்டி இம்போசிசன் எழுதிட்டு வாங்க..

ஐடியாவ பாரு...

அங்க ஒரு புள்ள உசுர கொடுத்து பதிவு போட்டு கலாச்சாரத்த காப்பாத்த பாக்குது
(pannikutti i mean you TRULY, no feelings, dont cry)
இங்க என்னடான்னா.....////

மாப்பு நீ பொங்கியிருக்கறதப் பாத்தா எனக்கே பயமா இருக்கு, இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Madhavan Srinivasagopalan said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said "ஒரு இனிய செய்தி
நம் மன்னரின் சந்தேகத்தைத் தீர்க்க ஒரு நல்ல ஐடியா கிடைத்து விட்டது. ஒரு 4-5 காக்காவப் புடிச்சிக்கிட்டு வந்து டீவிய ஆன் பண்ணீ"......,//

"சீரியலு போட்டுவிட்டா, எதெல்லாம் பறந்து போகுதோ அதெல்லாம் ஆண்.. ஒக்காந்துகிட்டு டி.வி பாக்குரதேல்லாம் பெண்.."

அப்படி சொல்லுவீங்கன்னு எதிர்பாத்தா.. அடச் சீ நீயும் ஒன் புத்தியும்..////

யோவ் இப்பல்லாம் ஆம்பளைகளே சீரியல் பாக்க ஆரம்பிச்சிட்டானுங்க, அப்புறம் என்ன பண்றது?

karthikkumar said...

ரொம்ப ஈஸி மக்கா... உங்க போட்டோவை காட்டிடுங்க சரியா போச்சு///
பாபு சார் இதுதான் சரி நானும் பண்ணோட PHD மூளைய வெச்சு யோசிச்சதுல இதுதான் சரி அப்டின்னு படுது.

இம்சைஅரசன் பாபு.. said...

//மக்கா மாத்தி சொல்லு நீ தான் துணி துவச்சிட்டு இருந்தே..?//
மக்கா பப்ளிக் ......பப்ளிக் ...............

சி.பி.செந்தில்குமார் said...

பாபு,லேபிள்ல ஏதாவது டைட்டில் வைங்க.அது தமிழ்மணத்துல ரொம்ப நேரம் நிக்க உதவும் ,ஹிட்ஸ் அதிகம் கிடைக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

இம்சை அரசன்னு ஏன் உங்களுக்கு பேரு வந்துச்சுன்னு இப்போ தெரிஞ்சுக்கிட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு போட்ட 7 மணி நேரத்துல இண்ட்லில 22 ஓட்டு வாங்கிட்டீங்களே சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கு ஆஃபீஸ் டைம் 9 டூ 6 அதனால ரமேஷ் மாதிரி வட சுட முடியரதில்லை

சி.பி.செந்தில்குமார் said...

சரி ,ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வர்றேன்,100 வது கமெண்ட் நான் தான் போடுவேன்

Ravi kumar Karunanithi said...

tube light'ah.. ha ha ha ha....

வெங்கட் said...

இதென்ன சிம்பிள் மேட்டரு..

எந்த காக்காவுக்கு மூக்குக்கு
மேல மீசை இருக்குதோ
அதான் அப்பா காக்கா..!!

THOPPITHOPPI said...

காக்காவோட கால தூக்கிப்பார்த்துட்ட தெரியபோகுது

வார்த்தை said...

@ THOPPITHOPPI said...
//காக்காவோட கால தூக்கிப்பார்த்துட்ட தெரியபோகுது//

அடப்பாவிகளா...
பூம்பூம் மாட்டுக்கு துணிய தூக்கி பாத்தது பத்தாதா?
காக்காய்க்கு வேற கால தூக்கி பாக்கணுமா?

வார்த்தை said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
...ஒரு 4-5 காக்காவப் புடிச்சிக்கிட்டு வந்து டீவிய ஆன் பண்ணீ, நல்ல செக்ஸ் படத்தப் போட்டுட்டோம்னா, மூடு வந்து எல்லாம் மேட்டர ஸ்டார்ட் பண்ணீடும், ஈசியா கண்டுபுடிச்சிடலாம்...

அடப்பாவி...

அங்க உன்ன "கலாச்சார காவலனா" உலகமே கண்ணீர் விட்டு பாத்துகிட்டு இருக்கு,

நீ என்னடான்னா இங்க வந்து "அனிமல்ஸ் மேட்டர்" பண்றத பாக்குறதுக்கு அலஞ்சிகிட்டு இருக்க....?

உனக்கு மனசாட்சியே இல்லையா.....?

நீயே இப்படி இருந்தா இந்த "நாட்ட" யாரு காப்பாத்துறது....?

Chitra said...

:-))

மங்குனி அமைச்சர் said...

நான் :????????????பல்பு !!!!!!(யாராவது சிரிச்சிங்கன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் )///

இதெல்லாம் நமக்கு புதுசா என்ன ???

மங்குனி அமைச்சர் said...

காக்காவ பாடச்சொல்லு , ஆம்பள குரல்ல அது பாடுச்சுன்னா அது ஆம்பள காக்கா , இல்ல பொம்பள குரல்ல பாடிச்சுன்ன அது பொம்பள காக்கா ...............சிம்பிள்

Anonymous said...

டெஸ்ட் கமெண்ட்

siva said...

meeeeeeee
the first.....

siva said...

கொஞ்சம் லேட்

சாரி பாஸ் ஆண் காக்க எப்படி இருக்கும்னு ஆராய்ச்சி பண்ண போய்ட்டேன்..

siva said...

94...

siva said...

95...

siva said...

96...

siva said...

97

siva said...

98

siva said...

99

siva said...

hey mee the 100.....

siva said...

சரி ,ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வர்றேன்,100 வது கமெண்ட் நான் தான் போடுவேன்--

sorry boss...

mee the 100...

பாலா said...

காக்கா டவுசர் போட்டிருந்தா அத தூக்கி பாத்து சொல்லிடலாம். அதுவும் போடலயே என்ன பன்றது?

பட்டாபட்டி.. said...

யாராவது சரியா சொல்லியிருக்காங்களா?...
( எப்படி ஆண் காக்காவை கண்டுபிடிப்பதென?)

பட்டாபட்டி.. said...

சோற்றை வைத்ததும் ஓடி வந்து சாப்பிடுவது ஆண் காக்கா...

அதை வேடிக்கை பார்த்துவிட்டு. அந்த காக்கைக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால், வந்து வாய் வைப்பது பெண் காக்கா..

இன்னும் சந்தேகம் தீரவில்லை என்றால், சுப்ரமணிசாமியை அணுகவும்..

இடம்: முருகன் இட்லிகடை
மதுரை..

சாமக்கோடங்கி said...

நான் இவ்வளவு நாள் கருங்காக்கா தான் ஆம்பள காக்கான்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்.. இல்ல போல..

இங்கயும் தேடித் பாத்திட்டேன்.. கெடைக்கல.. //http://in.answers.yahoo.com/question/index?qid=20090112231953AAXAN4G//
மாப்பு பின்னூட்டத்தைக் கூட பிட் அடிப்பாங்க போல இருக்கு...

அன்பரசன் said...

//நான் :????????????பல்பு !!!!!!(யாராவது சிரிச்சிங்கன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் )//

ஹே ஹே தேவையா???
:)