Thursday, January 6, 2011

திரும்பி பார்க்கிறேன்




                                                                
திரும்பி பார்க்கிறேன்..! இந்த தலைப்பே இதை படிக்கும் பதிவர்களுக்கு அத்தனை பேருக்கும் புடிக்கும் என்று நினைக்கிறன் .என்னை இந்த பதிவை தொடர்வதற்கு கௌசல்யா சகோதரி அழைத்திருந்தார்கள் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து  கொள்கிறேன் .

எல்லோரும் தன் வாழ்கையில்  நடந்தவற்றை திரும்பி பார்க்காமல் இருக்க முடியாது .திரும்பி பார்க்காதவர்கள் மனிதர்களாகவும் இருக்க முடியாது .

ஒவ்வொரு புது  வருடமும் அதுவும் ஒன்றாம் தேதி என்றால் அனைவருக்கும் குஷி தான் எனக்கும் இருந்தது ஆனால் அது 2007 ஜன 1 அன்று தவிடு பொடியாகியது.ஆம் அன்று எங்கள் ஊர் (சுசிந்திரம் )கோவில் தேர் திருவிழா அதற்கா முதல் நாளே அங்கு சென்றுவிட்டேன் காலையில்  எழுந்து குளித்து விட்டு எல்லோரும் சாப்பிட இருந்தோம் என் அருமை மகளும் என்  கூட இருந்தாள் .என் அம்மா, மனைவி இருவரும் காலை  உணவு ரெடி பண்ணிட்டு இருந்தாங்க .புட்டு எங்கள் ஊரில் ரொம்ப பேமஸ்  .என் பொண்ணு என்னிடம் இருந்து எந்திருச்சி ஓடி போய் அப்பளம்  எடுக்க போறேன்னு சொல்லிட்டு ஓடி போய் புட்டு அவியும் அந்த குழாயை தட்டி விட்டுட்டாள்.அதில் இருந்த கொதித்த நீர் அப்படியே அவள் இடது கன்னம் முழுவதும் பட்டு .துடித்து விட்டாள் அன்று உள்ளூர் விடுமுறை வேறு. ஓடினேன் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி நோக்கி.. ஒரு புண்ணியவான் டாக்டர் பார்த்தார் .பயப்பட ஒன்றும் வேண்டாம் புண்ணில் கை வைக்க மட்டும் கூடாது என்று கூறிவிட்டார் .அந்த ஒரு வார கொடுமை.. ஐயோ இப்பொழுது அதை நினைத்தாலும் கண்ணீர் வருகிறது .அப்பொழுது ஏன் மகளுக்கு இரண்டு வயது ...


அன்றோடு சரி எத்தனை  புது வருடம் வந்தாலும் என் நெஞ்சை  விட்டு மறையாத அந்த தருணங்களே  நினைவு வருகிறது .என்னடா ரொம்ப சோகமா எழுதிட்டேனோ??



பதிவுலகில் நான் இருப்பதிற்கு காரணமானவர்களை  மட்டும் இங்கே திரும்பி பார்கிறேன் .

சரி 2010  நான் வலை பூ எழுத ஆரம்பித்தேன் .தமிழ் சும்மா எழுதினாலே குத்து உயிரும் கொலை உயிராமாக இருக்கும்.  பதிவு எழுதுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்று தெரியும் .நண்பன்  ரமேஷ்(சிரிப்பு போலீஸ் ) தான் நீ எழுதுப்பா  என் நண்பர்களிடம் உன்னை அறிமுக படுத்துகிறேன் என்றான். சரி காசா  பணமா எழுதிருவோம் என்று ஆரம்பித்தேன் .அந்த இம்சையை இபொழுது நீங்கள் அனுபவிகீரீர்கள் (அதனால் ரமேஷ் ஐ அடியுங்கள் ).

2010 ஆகஸ்ட்ல ப்ளாக் எழுத ஆரம்பித்தேன் .நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் அதில் நண்பன் டெர்ரர் மறக்க முடியாதவர் எனனை ஊக்க படுத்தியவர் .நிறைய லிங்க் தந்து போய் படிங்க அப்படின்னு  தருவார் .எனக்கு பதிவுலகை பத்தி புரிய வைத்தவர் இன்று வரை அந்த நட்பு சீரான பாதையில் செல்கிறது .எனனை விட என் மகளுக்கு தான் அதிகமாக பிடிக்கிறது சாட்ல டெர்ரர் பேர் பார்த்தாலே அப்பா நான் பேசுகிறேன் என்று ஓடி வருவாள் .எந்த காரணத்தினால் என்று தெரியவில்லை .(ஆனால் அந்த லூசு டெர்ரர் பய எனனை பதிவு எழுத சொல்லி  விட்டு அவன் பதிவே எழுதாம இருக்கிறான் ).

அடுத்தது தேவா அண்ணா என்னை தம்பி என்று பாசத்துடன் கூப்பிடும் ஒரே பதிவர் இவரோட  தமிழ் எழுத்துக்கள் மீது எனக்கு ஒரு பொறாமை உண்டு .எப்படி  கோர்வையாக எழுதுகிறார் என்று ?எனக்கு இன்று வரைக்கும் வரவே மாட்டுது .வலை பூவில் தன்னிடம் இருக்கும் நண்பர்களை வைத்து  கருத்துசார்ந்த பதிவுகளை,சமூகத்திற்கு தேவையான பதிவுகள்  எழுத வேண்டும் என்பது இவரின் ஆசை (இந்த விஷயம் அவர் என்னிடம் சொல்ல வில்லை ...ஒரு யூகம் தான் ).ஆசை நிறை வேறும்  காலமும் அதற்கு கனிய வேண்டும் என்று எண்ணுகிறேன் .

அடுத்து சௌந்தர் இவரை பற்றி என்ன சொல்ல ஒரு சிறுவன் எனக்கு லிங்க் தந்து புது வலை பதிவர்களை அறிமுகமும் செய்வான் .அப்படி போய் அடி வாங்கிட்டு வந்து நின்ன காலமும் உண்டு (ஹி.ஹி .மக்க கோவிச்சுக்காத ).அப்புறம் என் நண்பன் டெர்ரர் வந்து காப்பாத்தினான்.ஆனால் என் மீது அன்பு கொண்டவன் .இது தப்பு வேண்டாம் என்று சொன்னால் சரி என்று என் சொல்லுக்கு மதிப்பு கொடுக்கும் நண்பன் .

இது போக நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் .ஹி ...ஹி.அது தான் ஊருக்கே தெரியுமே .இவர்கள் அனைவரும் கிடைத்ததே சந்தோஷமான விஷயம் தானே எனக்கு .ஒவ்வொருவரும் தனி தன்மை உடையவர்கள் பன்னிகுட்டி ,அருண் பிரசாத் ,செல்வா,எஸ் கே ,வெறும்பய (மக்காஸ் எல்லோர் பெயரும் சொல்லலைன்னு கோவிச்சுகிட்டு சண்டைக்கு வரணும் சரியா )இப்படி சொல்லி கொண்டே போகலாம் ...

பெண் பதிவர்கள் என்றால் கொஞ்சம் பயம் தான் யார் எந்த ரூபத்தில் இருக்கிறார்கள் என்று தெரியாது அதனால் போகவில்லை .கௌசல்யாவை தவிர .இவரோட வலை பூ முதலில் தெரிந்ததே ஒரு சண்டை போடுவதற்காக தான் அங்கு சென்றேன் . சண்டை இட்டு தான்  கமெண்ட்ஸ் போட்டேன் .அப்புறம் அப்படியே சகோ என்று கூப்பிடும் அளவுக்கு பழகிவிட்டேன் ஆனால் கவிதை எழுதி சாகடிச்சிருவாங்க .இவங்க கவிதையை படிச்சி படிச்சி நானும் கவிதை எழுதிவிட்டேன்ன பாருங்களேன் (எலேய் ரமேஷ் ,டெர்ரர் சிரிக்காதீங்க .நீ எழுதினது கவிதையான்னு ...)என் மகளிடம் பேசும் மற்றொரு பதிவர் .

இது போக ரொம்ப விரும்பி படிக்கும் பதிவு கே .ஆர்.பி .செந்தில் ,ஜெ அண்ணன் இவர்களின் பதிவு .இதில் இவர்கள் இருவரின் எழுத்து  எனக்கு ரொம்ப பிடிக்கும் .அதிலும் ஜெ அண்ணன் எழுத்து ரொம்ப பிடிக்கும் .என்ன காரணத்தினாலோ அவர் பதிவு எழுதவே இல்லை .

எல்லோருக்கும் ஒரு கனவு உண்டு நான் இப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு அவ்வகையில் யாரை போல் எழுத வேண்டும் என்றால் பட்டாப்பட்டி. மாதிரி தான் எழுதணும்ன்னு ஆசை .அவரோட ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும் .பெரும்பாலும் சில பதிவர்களுக்கு பிடிக்காது ஆனால் எனக்கு அவரோட பதிவுகள் பிடிக்கும் .சொல்ல வந்தத நச்சுன்னு நடு மண்டையில் ஆணி அடிச்ச மாதிரி சொல்லுவாரு .அது தான் எனக்கு பிடிச்சது .


என்ன வலைச்சரம் மாதிரி  பதிவுலகுல உள்ளவங்களை அறிமுக படுத்துறன்னு கேக்காதீங்க.2010 இவர்களிடம் பேசுவதும் வலைப்பூவை படிப்பது தான் என்னோட சந்தோசமா இருந்துச்சு அதனால் தான் இப்படி நான் திரும்பி பார்த்து இருக்கிறேன் 

எனக்கு அதிகமா பதிவர்கள் தெரியாது  .இருந்தாலும் என்னை ப்ளாக் எழுத  அறிமுக படுத்திய நண்பன் சிரிப்பு போலீஸ் ஐ எழுத அழைக்கிறேன்(நான் எழுத சொன்ன தொடர் பதிவு நீ எழுதலை அதனால் நான் எழுத மாட்டேன் ன்னு மட்டும் சொன்ன .......)

இந்த டெர்ரர் பயலை கூப்பிடலாம்ன்னு பார்த்தா அவனை ஏற்கனவே கணேஷ் என்பவர் அழைத்து இருக்கிறார் (அப்படியே எழுதி கிழிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான் )

111 comments:

அருண் பிரசாத் said...

vadai

சௌந்தர் said...

அடுத்து சௌந்தர் இவரை பற்றி என்ன சொல்ல ஒரு சிறுவன் எனக்கு லிங்க் தந்து புது வலை பதிவர்களை அறிமுகமும் செய்வான்/////

ஆமா இவர் ப்ளாக் லிங்க் என்னிடம் கேட்ப்பார் அதையும் நான் எடுத்து தரனும்

சௌந்தர் said...

எல்லோரும் தன் வாழ்கையில் நடந்தவற்றை திரும்பி பார்க்காமல் இருக்க முடியாது .திரும்பி பார்க்காதவர்கள் மனிதர்களாகவும் இருக்க முடியாது ./////

பஞ்ச டைலாக் சொல்றாராம் ரெண்டு பஞ்ச விட்ட சரி ஆகும்

ஆனந்தி.. said...

குட்டி பாப்பா,உங்கள் வலைதள நண்பர்கள்..உங்கள் ஊர் பற்றிய பகிர்வு எல்லாமே நல்லா இருந்தது..

தினேஷ்குமார் said...

2007 நிகழ்வு கண்ணீர் துளியோடு வாசித்தேன் நண்பரே பச்சபுள்ள என்ன பாடு பட்டிருக்கும் வலியின் வேதனையில்

சௌந்தர் said...

ஆனந்தி.. said...
குட்டி பாப்பா,உங்கள் வலைதள நண்பர்கள்..உங்கள் ஊர் பற்றிய பகிர்வு எல்லாமே நல்லா இருந்தது.////

எங்க நல்லா இல்லை சொல்லி பாருங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி..
என்னைப்போல எழுதனுமுனு மட்டும் நினக்காதே..( உஷ்.. வாங்கின அடி அதுமாறி..!!)..

ஆமா..அது என்னாய்யா ’சில பதிவர்களுக்கு என்னைய பிடிக்காது’னு சொல்றே..

டோமரை கேட்டுப்பாரு... என்னைப்பார்க்காம, பல்கூட விளக்கமாட்டாரு.. ஹி..ஹி

சௌந்தர் said...

பட்டாபட்டி.... said...
ஹி..ஹி..
என்னைப்போல எழுதனுமுனு மட்டும் நினக்காதே..( உஷ்.. வாங்கின அடி அதுமாறி..!!)..///

சரி சரி நீங்க வாங்கிய அடியில் பாதி இவருக்கு கொடுங்க வாங்கிப்பார்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆமா யாருயா அந்த ரமேஸ்?>..

ஓ.. அவரா.. நம்ம சிங்கைக்கு சென்னைக்கும் ’குருவி’மாறி பறந்துவருவாரே.. அந்த நல்லவன்(னு சொன்னா சாமி கண்ண குத்தாதே?.. டவுட்....)னா?..

ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சரி சரி நீங்க வாங்கிய அடியில் பாதி இவருக்கு கொடுங்க வாங்கிப்பார்
//

ஏண்ணே.. இந்த பச்சமன்ணு அப்படியெல்லாம் செய்வனா? ஹி..ஹி..

No.. NO...

சௌந்தர் said...

இந்த டெர்ரர் பயலை கூப்பிடலாம்ன்னு பார்த்தா அவனை ஏற்கனவே கணேஷ் என்பவர் அழைத்து இருக்கிறார் (அப்படியே எழுதி கிழிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான் ////

யோவ் பட்டா பட்டியை தொடர் பதிவுக்கு கூப்பிட்டு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நண்பன் டெர்ரர் மறக்க முடியாதவர் எனனை ஊக்க படுத்தியவர் .நிறைய லிங்க் தந்து போய் படிங்க அப்படின்னு தருவார்
//

O..அதுவேற பண்ணிக்கிட்டு இருக்கா?.. சொல்லவேயில்ல..

நான்கூட, தோ கம்பெனில பொட்டி தட்டிக்கிட்டு இருக்குனு நினச்சேன்..
ம்..ம்..’லிங்க்’ கொடுத்துக்கிட்டு இருக்கு போல.. பாவம்....

:-)

இம்சைஅரசன் பாபு.. said...

விடுங்கா பாஸ் அடி வாங்கனும்னு முடிவு பண்ணியாச்சு ......(விதி வலியது .......பட்டா .....).உங்கள மாதிரி எழுத ட்ரைனிங் வேணுமே ......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ சௌந்தர் said...

யோவ் பட்டா பட்டியை தொடர் பதிவுக்கு கூப்பிட்டு
//


பெருமாளே..பெருமாளே.. எதுக்கு உங்களுக்கு, இந்த விபரீத ஆசை?

தினேஷ்குமார் said...

தலைவரே சுசீந்திரமா தங்கள் ஊர் எனக்கு மிகவும் பிடித்த கோவில் "முழு நிலவு முகம் கண்டேன் இறைவா பதினான்கு திரையடுக்கில் கருநாகம் குடைபிடிக்க " என்று ஒரு பாடல் காசட் அங்கிருந்து பலவருடங்களுக்கு முன்னாள் தற்சமயம் என்னிடம் இல்லை அந்த பாடல் கிடைத்தால் மெயில் அனுப்புங்க நண்பரே mp3 ஆகா

jemdinesh@gmail.com

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
விடுங்கா பாஸ் அடி வாங்கனும்னு முடிவு பண்ணியாச்சு ......(விதி வலியது .......பட்டா .....).உங்கள மாதிரி எழுத ட்ரைனிங் வேணுமே ......////

யோவ் நீ முதலே பட்டாபட்டி போடு அப்பறம் அவரை மாதரி எழுதலாம்

Arun Prasath said...

அருமையான பதிவு ஆழ்ந்த கருத்துக்கள்... யோசிக்க தூண்டும் எழுத்து நடை....

ஹி ஹி template போட்டு தான் ஆரம்பிக்கணும்ன்னு இன்னைக்கு வேண்டுதல்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உங்கள மாதிரி எழுத ட்ரைனிங் வேணுமே ..
//


என்ன எழுதுவதுனு தெரியாம.. ஒவ்வொரு ப்ளாக்க போய் வாந்தி எடுத்திட்டு இருக்கேன்..

ஹி..ஹி..இன்னுமாய்யா என்னை நம்பிக்கிட்டு இருக்கே..

மங்குனி அமைச்சர் said...

குழந்தைகளுக்கு அடிபட்டால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் ........

இம்சைஅரசன் பாபு.. said...

கண்டிப்பாக தினேஷ் குமார் ..ஊருக்கு போகும் போது வாங்கி வந்து உங்களுக்கு அனுப்புகிறேன் .....

சௌந்தர் said...

@@@@இம்சை போ பட்டா பட்டி ப்ளாக் போய் அங்கே இருந்து ஒரு பதிவை காபி பண்ணிட்டு வந்து இங்க போடு....

ஆனந்தி.. said...

/ஆனந்தி.. said...
குட்டி பாப்பா,உங்கள் வலைதள நண்பர்கள்..உங்கள் ஊர் பற்றிய பகிர்வு எல்லாமே நல்லா இருந்தது.////

எங்க நல்லா இல்லை சொல்லி பாருங்க//
..இப்ப உனக்கு என்ன பிரச்சனை டா சௌந்தர்:))) நீ நல்லவன் வல்லவனு தான் சொல்லிட்டாங்க தானே..:)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி அமைச்சர் said...

குழந்தைகளுக்கு அடிபட்டால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் ........
//

ஓ..அதுவரக்கும் படிச்சிட்டியா?..பலே..பலே...

மீதிய சீக்கிரமா படிச்சுமுடி..

ஹி..ஹி

மங்குனி அமைச்சர் said...

இவனுக கூடத்தான் சேன்துட்டிங்கள்ள .................... விளங்கிடும் ............ வாழ்த்துக்கள்

Arun Prasath said...

குழந்தைகளுக்கு அடிபட்டால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் ........//

எனக்கும் கூட அடி பட்டுச்சு... நானும் இம்சை அண்ணன் பாப்பாவும் ஒன்னு..

Madhavan Srinivasagopalan said...

எஸ்.கே, பெ.சோ.வி. , வெங்கட், மாதவன் -- அவங்களெல்லாம் ஒங்களுக்கு அறிமுகம் ஆகலியோ ?

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

மங்குனி அமைச்சர் said...

குழந்தைகளுக்கு அடிபட்டால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் ........
//

ஓ..அதுவரக்கும் படிச்சிட்டியா?..பலே..பலே...

மீதிய சீக்கிரமா படிச்சுமுடி..

ஹி..ஹி///////////


வாடா ..................... ஆரம்பிச்சிட்டியா ..........நடத்து நடத்து

சௌந்தர் said...

ஆனந்தி.. said...
/ஆனந்தி.. said...
குட்டி பாப்பா,உங்கள் வலைதள நண்பர்கள்..உங்கள் ஊர் பற்றிய பகிர்வு எல்லாமே நல்லா இருந்தது.////

எங்க நல்லா இல்லை சொல்லி பாருங்க//
..இப்ப உனக்கு என்ன பிரச்சனை டா சௌந்தர்:))) நீ நல்லவன் வல்லவனு தான் சொல்லிட்டாங்க தானே..:)))////

ஒரு பிரச்னையும் இல்லை சரி சரி என்னை அடிக்காதீங்க.....மீ பாவம்

எஸ்.கே said...

நானும் உங்கள் நண்பர்களில் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்!

இம்சைஅரசன் பாபு.. said...

//
யோவ் நீ முதலே பட்டாபட்டி போடு அப்பறம் அவரை மாதரி எழுதலாம்//



குரு துரோகம் ....கூண்டோடு கைலாசம் ......

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

குழந்தைகளுக்கு அடிபட்டால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் ........//

எனக்கும் கூட அடி பட்டுச்சு... நானும் இம்சை அண்ணன் பாப்பாவும் ஒன்னு..///


குயந்த அப்படி ஓரமா போயி உட்காரு அடிகிடி பட்ரபோகுது

karthikkumar said...

அப்படியே எழுதி கிழிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான் ///
இதுக்காகவே டெரர் கண்டிப்பா எழுதுவார் பாருங்க...:)

தினேஷ்குமார் said...

எச்சுச்மி ஜென்டில் மென் அன்ட் லேடிஸ் தத்துவம் சொல்லிருக்கேன் வாங்க வந்து பாருங்க பாபு சார் உங்களையும் தான்

http://marumlogam.blogspot.com/2011/01/blog-post_06.html

Arun Prasath said...

@மங்கு
குயந்த அப்படி ஓரமா போயி உட்காரு அடிகிடி பட்ரபோகுது//

எனக்கு அடிபட்டா தான் கவலை பட மங்கு இருக்காரே

தினேஷ்குமார் said...

karthikkumar said...
அப்படியே எழுதி கிழிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான் ///
இதுக்காகவே டெரர் கண்டிப்பா எழுதுவார் பாருங்க...:)

பங்கு நீதான் எழுதவே மாட்டுற அவராவது எழுதுறாரே *** சரி இன்னும் ரெண்டு நாள்ல நீ ஒரு பதிவு எழுதணும் ஓகே வா ***

karthikkumar said...

பங்கு நீதான் எழுதவே மாட்டுற அவராவது எழுதுறாரே *** சரி இன்னும் ரெண்டு நாள்ல நீ ஒரு பதிவு எழுதணும் ஓகே வா **///
ஆணி தொல்லைங்க என்னால கமென்ட் மட்டும்தான் போட முடியுது...

தினேஷ்குமார் said...

karthikkumar said...
பங்கு நீதான் எழுதவே மாட்டுற அவராவது எழுதுறாரே *** சரி இன்னும் ரெண்டு நாள்ல நீ ஒரு பதிவு எழுதணும் ஓகே வா **///
ஆணி தொல்லைங்க என்னால கமென்ட் மட்டும்தான் போட முடியுது...

அதெல்லாம் முடியாது எங்களுக்கெல்லாம் ஆணி இல்லையா என்ன? நீ எழுதற அவ்வளவுதான் இல்ல பஞ்சாயத்துல நிக்க வச்சுடுவோம் ok vaa

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

ஹி..ஹி..


டோமரை கேட்டுப்பாரு... என்னைப்பார்க்காம, பல்கூட விளக்கமாட்டாரு.. ஹி..ஹி///


அதான பாத்தேன் ........நீ இப்படியே அந்தாளுக்கு விளம்பரம்பன்னிக்கிட்டு இரு

அமுதா கிருஷ்ணா said...

பொண்ணு இப்ப எப்படி இருக்கா?

dheva said...

திரும்பிப் பார்க்கிறேன்...........

நிஜமாவே ஒரு பொண்ணு திரும்பி பாக்குது.......போட்டோல......அது யாருலே..?

கட்டுரை முழுதும் ஜூனுன் (தெரியும்ல?) தமிழ்ல எழுதி கலக்கி இருக்கப்பா?

கெளசல்யாவோட சகோதரிய உனக்கு தெரிஞ்சு இருக்கு...? அவுங்களும் வலைப்பூ வச்சி இருக்கங்களோ....?(இந்த இடத்துல் வச்சிருக்க பாரு டிஞ்ச் )

dheva said...

சுசீந்திரம்......மறக்க முடியாத அனுபவம்தான்.......குட்டிக்கு இப்போ எதுவும் தழும்பு இருக்கா என்ன?

அப்புறம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலாப்பா? (இது பத்தி பாலகுமாரன் எழுதி இருக்காரு)

dheva said...

வலையுல உறவுகளோடு தொகுத்து கொடுத்திருக்கும் கட்டுரையில் ..........கருத்து தாண்டி உன் குழந்தை மனம் எட்டிப்பார்க்கிறது தம்பி............ செம...!!!!!! செம!!!!!

இம்சைஅரசன் பாபு.. said...

@தேவா @ அமுதா



தழும்பு ஒண்ணும் இல்லை ...ட்ரீட்மென்ட் நல்ல இருந்ததுனால பிரெச்சனை இல்லை .நான் கூட PLASTIC SURGERY பண்ணணுமோ ன்னு நினைச்சேன் .அப்படி பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று டாக்டர் கூறிவிட்டார்கள்

இம்சைஅரசன் பாபு.. said...

//அப்புறம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலாப்பா? (இது பத்தி பாலகுமாரன் எழுதி இருக்காரு//



ஆமா அண்ணா .பிரம்மா(தாணு ),விஷ்ணு (மால் ),சிவா(அயன் ) மூன்றும் ஒரே சிலையில் இருக்கும் ...தாணுமாலயன்

அருண் பிரசாத் said...

திரும்பி பார்கிறேன் தலைப்பை விட அங்க திரும்பி பார்கற பொண்ணுதான் பிடிச்சி இருக்கு ஹி ஹி ஹி

இம்சைஅரசன் பாபு.. said...

//நிஜமாவே ஒரு பொண்ணு திரும்பி பாக்குது.......போட்டோல......அது யாருலே..?//

தம்பி மேல் சந்தேகம் கூடாது ....(வீட்டுல சோறு தண்ணி இல்லாம ஆக்கிறாதீங்க )

அருண் பிரசாத் said...

குழந்தைக்கு ஒன்றுன்னா... பெற்றோர்கள் தவிப்பது.... பெற்றோரான பின்னாடி தான் உணரமுடியுது

அருண் பிரசாத் said...

சுசூந்திரம் கோவில் என் வாழ்விலுன் ஒரு மறக்கமுடியாத இடத்தில் இருக்கு... அது டாப் சீக்ரெட்...


அங்கு நவகிரக வேண்டுதல்கள் எல்லாம் பண்ணி இருக்கேன்

அருண் பிரசாத் said...

சில வலைப்பதிவர்களை சொல்லிட்டு சிலரை சொல்லாம விட கூடாதுனுதான் நான் அதை பத்தியே எழுதலை

அருண் பிரசாத் said...

அட முதல் வடை, 50 வது எல்லாமே எனக்கு தானா!

அருண் பிரசாத் said...

தொடர்பதிவு எழுத பதிவரை கூப்பிய்யா...ஏன் போட்டோகிராபர் ரமெஷை கூப்புடுற

இம்சைஅரசன் பாபு.. said...

//

அங்கு நவகிரக வேண்டுதல்கள் எல்லாம் பண்ணி இருக்கேன்//



எல்லா கோவில்களயும் நவகிரகம் கீழ இருக்கும் .இந்த கோவில்ல மட்டும் மேலே இருக்கும் ...அருண் ..இது இந்த கோவிலின் சிறப்பு

Chitra said...

Thats sweet and neat! உங்கள் நட்பு வட்டத்துக்கு வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி 2010 நான் வலை பூ எழுத ஆரம்பித்தேன் .தமிழ் சும்மா எழுதினாலே குத்து உயிரும் கொலை உயிராமாக இருக்கும். பதிவு எழுதுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்று தெரியும் .நண்பன் ரமேஷ்(சிரிப்பு போலீஸ் ) தான் நீ எழுதுப்பா என் நண்பர்களிடம் உன்னை அறிமுக படுத்துகிறேன் என்றான். சரி காசா பணமா எழுதிருவோம் என்று ஆரம்பித்தேன் .அந்த இம்சையை இபொழுது நீங்கள் அனுபவிகீரீர்கள் (அதனால் ரமேஷ் ஐ அடியுங்கள் ).///

நீ ரொம்ப நல்லவன்டா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆனால் அந்த லூசு டெர்ரர் பய//

வாழ்கைலையே இன்னைக்குதான் உண்மை பேசிருக்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு அதிகமா பதிவர்கள் தெரியாது .இருந்தாலும் என்னை ப்ளாக் எழுத அறிமுக படுத்திய நண்பன் சிரிப்பு போலீஸ் ஐ எழுத அழைக்கிறேன்(நான் எழுத சொன்ன தொடர் பதிவு நீ எழுதலை அதனால் நான் எழுத மாட்டேன் ன்னு மட்டும் சொன்ன .......)///

நல்லவேளை நான் இந்த பக்கம் வரலை. இந்த வீணா போன பதிவை படிக்கலை. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டாபட்டி.... said...

ஹி..ஹி..
என்னைப்போல எழுதனுமுனு மட்டும் நினக்காதே..( உஷ்.. வாங்கின அடி அதுமாறி..!!)..

ஆமா..அது என்னாய்யா ’சில பதிவர்களுக்கு என்னைய பிடிக்காது’னு சொல்றே..

டோமரை கேட்டுப்பாரு... என்னைப்பார்க்காம, பல்கூட விளக்கமாட்டாரு.. ஹி..ஹி///


அதான பதிவர்களுக்காக உயிரையே கொடுக்கும் பட்டா அண்ணனை அவமான படுத்திய இம்சைக்கு தேன் பாட்டில் கிடையாது. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் பிரசாத் said...

தொடர்பதிவு எழுத பதிவரை கூப்பிய்யா...ஏன் போட்டோகிராபர் ரமெஷை கூப்புடுற////

ம் விளங்கிடும்

மாணவன் said...

நானும் உங்கள் நண்பர்களில் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்!

மாணவன் said...

தொடர்பதிவு எழுத பதிவரை கூப்பிய்யா...ஏன் போட்டோகிராபர் ரமெஷை கூப்புடுற////

ம்ம்ம் விளங்கிடும் வெளங்கிருச்சு........

மாணவன் said...

//அதான பதிவர்களுக்காக உயிரையே கொடுக்கும் பட்டா அண்ணனை அவமான படுத்திய இம்சைக்கு தேன் பாட்டில் கிடையாது. ஹிஹி//

என்னாது தேன் பாட்டில் கிடையாதா???
ஓ... இம்சைக்கா அதானே பார்த்தேன்

test said...

வாழ்த்துக்கள்! தொடருங்கள்! :-)

வைகை said...

மாணவன் said...
//அதான பதிவர்களுக்காக உயிரையே கொடுக்கும் பட்டா அண்ணனை அவமான படுத்திய இம்சைக்கு தேன் பாட்டில் கிடையாது. ஹிஹி//

என்னாது தேன் பாட்டில் கிடையாதா???
ஓ... இம்சைக்கா அதானே பார்த்தேன்/////////////

போலிஸ் கொண்டு வரலைனா உள்ள விடமாட்டோம்ல...

வைகை said...

நமக்கு ஒரு சின்ன நெருப்பு சுட்டாலே தாங்க முடியாது! பச்ச புள்ளை எப்படி தாங்கியதோ? காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி!!

Anonymous said...

அடேயப்பா பிரம்மாண்டமான திரும்பி பார்க்கிறேன் ஸ்வாரஸ்யமா இருக்கு

செல்வா said...

//.பயப்பட ஒன்றும் வேண்டாம் புண்ணில் கை வைக்க மட்டும் கூடாது என்று கூறிவிட்டார் .அந்த ஒரு வார கொடுமை.. ஐயோ இப்பொழுது அதை நினைத்தாலும் கண்ணீர் வருகிறது .அப்பொழுது ஏன் மகளுக்கு இரண்டு வயது//

நல்ல வேளை .!

செல்வா said...

//.நண்பன் ரமேஷ்(சிரிப்பு போலீஸ் ) தான் நீ எழுதுப்பா என் நண்பர்களிடம் உன்னை அறிமுக படுத்துகிறேன் என்றான். சரி காசா பணமா எழுதிருவோம் என்று ஆரம்பித்தேன் .அந்த இம்சையை இபொழுது நீங்கள் அனுபவிகீரீர்கள் (அதனால் ரமேஷ் ஐ அடியுங்கள் ).
/

அவர்தான் இதுக்கெல்லாம் காரணமா .?

செல்வா said...

/எனக்கு பதிவுலகை பத்தி புரிய வைத்தவர் இன்று வரை அந்த நட்பு சீரான பாதையில் செல்கிறது///

எந்தப் பாதையில் செல்கிறது ..?

செல்வா said...

// மாதிரி தான் எழுதணும்ன்னு ஆசை .அவரோட ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும் .பெரும்பாலும் சில பதிவர்களுக்கு பிடிக்காது ஆனால் எனக்கு அவரோட பதிவுகள் பிடிக்கும் .சொல்ல வந்தத நச்சுன்னு நடு மண்டையில் ஆணி அடிச்ச மாதிரி சொல்லுவாரு .அது தான் எனக்கு பிடிச்சது///

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

(மக்காஸ் எல்லோர் பெயரும் சொல்லலைன்னு கோவிச்சுகிட்டு சண்டைக்கு வரணும் சரியா )

ok babu, 1st fight ,y u didnt mention my name.?

(mokkai padhivar enru ellaarukkum therinjuducho?)

சி.பி.செந்தில்குமார் said...

wat u mention about pattapatti 100% true, many of us like them.

சி.பி.செந்தில்குமார் said...

u mention ramesh and terror name. i like yr thankfull feeling.

சி.பி.செந்தில்குமார் said...

from new year onwards we r x pecting many post from u babu

சி.பி.செந்தில்குமார் said...

75 vada

ஜெயந்த் கிருஷ்ணா said...

கொக்க மக்கா எல்லாம் படமும் ஓடிருக்கே....

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லாவற்றையும் தாண்டி குழந்தையின் முகம் தான் மனதில் நிற்கிறது....

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

நீங்க திரும்பி பாக்கறாது இருக்கட்ம். அங்க திரும்பி பாக்கற பிகர் யாரு? ரோட்ட பார்த்து நடக்க சொல்லுங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//கௌசல்யா சகோதரி அழைத்திருந்தார்கள் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
//

எதுக்கு சரக்கு இல்லாத அப்போ எழுத மேட்டர் கொடுத்ததுக்கு... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//நண்பன் ரமேஷ்(சிரிப்பு போலீஸ் ) தான் நீ எழுதுப்பா என் நண்பர்களிடம் உன்னை அறிமுக படுத்துகிறேன் என்றான்.//

அந்த நாய் எழுதினாலே படிக்க ஆள் இல்லை. அவ்ரு உங்களை அறிமுக படுத்தரார... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//அதில் நண்பன் டெர்ரர் மறக்க முடியாதவர் எனனை ஊக்க படுத்தியவர்//

இப்படி எல்லாம் அநியாயமா பேசாதிங்க. இங்க பன்னிகுட்டி மாதிரி கேவலமான பசங்க எல்லாம் இருக்காங்க வேண்டம் போய்டுங்க நான் சொன்னேன் இல்ல.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//சாட்ல டெர்ரர் பேர் பார்த்தாலே அப்பா நான் பேசுகிறேன் என்று ஓடி வருவாள் .எந்த காரணத்தினால் என்று தெரியவில்லை .//

வேற என்ன அந்த அளவு ஒரு கமடி பீஸா இருக்கேன். ஆனா ரமேஷ் பேர பார்த்தா அம்மா பூச்சாண்டி மாம கிட்ட டாடி பேசிகிட்டு இருக்காங்க அப்படினு சொல்லுவாலே அதை நீங்க சொல்லாவே இல்லை.... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//.வலை பூவில் தன்னிடம் இருக்கும் நண்பர்களை வைத்து கருத்துசார்ந்த பதிவுகளை,சமூகத்திற்கு தேவையான பதிவுகள் எழுத வேண்டும் என்பது இவரின் ஆசை //

மொள்ளமாறி, கேப்மாறி, பிக்பாக்கேட் எல்லம் இங்க ஒன்னா இருக்கு அதுங்கள வச்சி நல்லது... வெளங்கிடும்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//(அப்படியே எழுதி கிழிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான் )//

இப்படி அன்போடு எழுத அழைத்த உங்களுக்கு நன்றி! :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பொழுது ஏன் மகளுக்கு இரண்டு வயது ...//

அட வெண்ணை உன் மகளுக்கு அப்போது ஏன் ரெண்டு வயசுன்னு எங்களுக்கு எப்படி தெரியும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//சாட்ல டெர்ரர் பேர் பார்த்தாலே அப்பா நான் பேசுகிறேன் என்று ஓடி வருவாள் .எந்த காரணத்தினால் என்று தெரியவில்லை .//

வேற என்ன அந்த அளவு ஒரு கமடி பீஸா இருக்கேன். ஆனா ரமேஷ் பேர பார்த்தா அம்மா பூச்சாண்டி மாம கிட்ட டாடி பேசிகிட்டு இருக்காங்க அப்படினு சொல்லுவாலே அதை நீங்க சொல்லாவே இல்லை.... :))/.//

tamil please

Kousalya Raj said...

என் அழைப்பை ஏற்று திரும்பி பார்த்த உங்களுக்கு என் நன்றிகள் பல...

ஹரிணிக்கு அப்போது ஏற்பட்ட அந்த நிகழ்வு, இப்போது ஏற்பட்டது போல மனம் பதைக்கிறது...சிறு குழந்தை அந்த வேதனையை எப்படி தாங்கியதோ...?!!

இப்போது தழும்பு இல்லை என்பது தெரிந்து நிம்மதியாக இருக்கிறது...ஆனால் ஒவ்வொரு புது வருடம் முதல் நாள் அன்றும் இந்த நினைவு வருவதை தவிர்க்க இயலாதுதான்.

Kousalya Raj said...

சண்டை போட வந்து சகோதர உறவை தொடங்கிய அந்த நாளை நினைவுபடுத்தி விட்டீர்கள்.

சண்டையும் நல்ல உறவுகளை கொண்டுவரும் என்பதை பதிவுலகத்தில் தான் நான் தெரிந்து கொண்டேன். அதற்காக மகிழ்கிறேன் பாபு.

Kousalya Raj said...

//ஆனால் கவிதை எழுதி சாகடிச்சிருவாங்க //

அட பாவமே, நான் எழுதுற கவிதையால் இப்படி பட்ட விபரீதம் கூட நடக்குதா...?!! :((

//இவங்க கவிதையை படிச்சி படிச்சி நானும் கவிதை எழுதிவிட்டேன்ன பாருங்களேன்//

ம்...பாத்தீங்களா உங்களை கவிஞரா மாத்தி இருக்கிறேன்... :))

(என் கவிதையை படிச்சி வெறுத்து போய் கவிதை எழுத தொடங்கி இருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்)

Anonymous said...

அரசே!~!
என்ன ஒரு தொடர் பதிவு கலக்கிடிங்க போங்க....
அருமை

இம்சைஅரசன் பாபு.. said...

@கல்பனா
அரசே என்றே கூறியதால் .........
க.... க.....க ..போ .....

Unknown said...

நாங்கல்லாம் எழுத்தாளர் அல்லது இலக்கியவாதிகள் என்று ஒத்துகொண்டமைக்கு என் வந்தனங்கள் ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

@கல்பனா
அரசே என்றே கூறியதால் .........
க.... க.....க ..போ .....///

எலேய் விளக்கெண்ணை கல்பனாவுக்கு முன்னாடியே நான் ஒரு கமென்ட் போட்டேன் அதுக்கு ரிப்ளை போடலை. டெரர் மச்சி உடனே வரவும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//நண்பன் ரமேஷ்(சிரிப்பு போலீஸ் ) தான் நீ எழுதுப்பா என் நண்பர்களிடம் உன்னை அறிமுக படுத்துகிறேன் என்றான்.//

அந்த நாய் எழுதினாலே படிக்க ஆள் இல்லை. அவ்ரு உங்களை அறிமுக படுத்தரார... :))///


மவனே என் பிளாக் பக்கம் வா மூஞ்சில சுடுதண்ணி ஊத்துறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

ஹி..ஹி..
என்னைப்போல எழுதனுமுனு மட்டும் நினக்காதே..( உஷ்.. வாங்கின அடி அதுமாறி..!!)..

ஆமா..அது என்னாய்யா ’சில பதிவர்களுக்கு என்னைய பிடிக்காது’னு சொல்றே..

டோமரை கேட்டுப்பாரு... என்னைப்பார்க்காம, பல்கூட விளக்கமாட்டாரு.. ஹி..ஹி///

டோமரின் கோ.பா.சே பட்டா வாழ்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

ஹி..ஹி..
என்னைப்போல எழுதனுமுனு மட்டும் நினக்காதே..( உஷ்.. வாங்கின அடி அதுமாறி..!!)..

ஆமா..அது என்னாய்யா ’சில பதிவர்களுக்கு என்னைய பிடிக்காது’னு சொல்றே..

டோமரை கேட்டுப்பாரு... என்னைப்பார்க்காம, பல்கூட விளக்கமாட்டாரு.. ஹி..ஹி///

டோமரின் கோ.பா.சே பட்டா வாழ்க
///
மன்னிக்கணும் டோமரின் பி.பா.சே(பிளாக் பரப்பு செயலாளர்) பட்டா வாழ்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

97

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

98

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

99

வெங்கட் said...

நல்லாவே திரும்பி பாத்து இருக்கீங்க..

NaSo said...

நீங்க திரும்பி பார்த்தது நல்லாருக்கு. (நான் அந்த பிகரை சொன்னேன்.)

அன்புடன் மலிக்கா said...

கடந்துவந்தவைகளை நிச்சயம் திரும்பிப்பார்க்கவேண்டும் அப்போதுதான் நம்முடைய பாதை எப்படியானது என்பதை நாமே உணர்ந்துகொள்ளமுடியும். அருமையானவைகள் திரும்பிபார்த்தவைகள். வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுவும் தொடர்பதிவுதானா? ங்கொய்யால, இதுக்கு கூடிய சீக்கிரமே ஒரு முடிவு கட்டுறேன்டியேய்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாத்தான்யா திரும்பிப் பார்க்குது..... உன்னச் சொல்லல, அந்தப் புள்ளைய சொன்னேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவி இப்பிடி சென்டிமென்ட்ட போட்டுத்தாக்கிட்டியே...... குழந்தைகளுக்கு ஏதாவதுன்னா மனசு என்னமோ ஆயிடுதுப்பா, நல்லவேள எல்லாம் நல்லபடி ஆயிடுச்சு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது சிரிப்பு போலீசுதான் உன்ன அறிமுகப்படுத்துனானா? அந்த ராஸ்கலுக்கு இப்பிடி நியூசன்ஸ் பண்றதே வேலையா போச்சு....! வரட்டும் இருக்கு இன்னிக்கு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டெர்ரரு ஊக்கப்படுத்துறாரோ? ங்கொய்யா அங்க அவரு ப்ளாக்கே விட்டாப்போதும்னு அனாமத்தா கெடக்கு, இதுல பொதுச்சேவை வேற......? இதுலாம் ஓவரு ஆமா....!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

// குழந்தைகளுக்கு ஏதாவதுன்னா மனசு என்னமோ ஆயிடுதுப்பா, நல்லவேள எல்லாம் நல்லபடி ஆயிடுச்சு.....!//

ஏண்டா!! புள்ளை மூஞ்சில சுடு தண்ணி ஊத்திகிச்சி சொல்றாரு உனக்கு எல்லாம் நல்லபடியா ஆயிடுச்சா? ராஸ்கள்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//மவனே என் பிளாக் பக்கம் வா மூஞ்சில சுடுதண்ணி ஊத்துறேன்//

அந்த தண்ணிய வச்சி இன்னைக்காவது பல்ல விளக்குடா!! கிட்ட வர முடியலை.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//டெர்ரரு ஊக்கப்படுத்துறாரோ? ங்கொய்யா அங்க அவரு ப்ளாக்கே விட்டாப்போதும்னு அனாமத்தா கெடக்கு, இதுல பொதுச்சேவை வேற......? இதுலாம் ஓவரு ஆமா....!//

டாய்! யார்டா அவன். ஒரு பிரபல பதிவர் ப்ளாக்க பத்தி தப்பா பேசறது. பிச்சிபுடுவேன் பிச்சி... :)

Jey said...

//அதிலும் ஜெ அண்ணன் எழுத்து ரொம்ப பிடிக்கும் //

ங்கொய்யாலே, நமக்கும் ஒரு அடிமை சிக்கியிருக்கான் , இத கவனிக்காம விட்டுட்டோமே!!!( வட போச்சே),

பாண்டி இந்த ஆட்டை, நான் வர்ற வரைக்கும் மேய்ய்ச்சி கிட்டு இருப்பா, நான் வந்தது விருந்து வச்சிக்கலாம்.