விளம்பரங்கள் நாம் அன்றாடம் தொலைகாட்சிகளில் பார்க்கிறோம் .எனக்கு சில விளம்பரங்கள் பார்க்கும் போது அதில் நடிக்கும் modelsஆண்ஆக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அந்த விளம்பரத்திற்கும் அந்த modelsக்கும் சம்பந்தமே இருக்காது.இவர்கள் மக்களை கவர்வதற்காக தான் விளம்பரம் போடுகிறார்கள். அதை கொஞ்சம் எந்த வகையான விளம்பரமோ அது சம்பந்தமாக models இருந்தால் நல்ல இருக்கும் என்பது என் கருத்து.எடுத்து காட்டாக சில விளம்பரங்களை கூறுகிறேன்.
1.KISKOL TMT கம்பிகள் இந்த விளம்பரத்திற்கு நமீதா வருகிறார் .முதலில் இந்த விளம்பரத்திற்கு பெண்கள் தேவையா .சரி இதை சொன்னால் பெண் பதிவர்கள் வருத்தபடுவார்கள் .ஆனால் நமீதா கூறும் வார்த்தைக்கும் அந்த விளம்பரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.வார்த்தை இது தான் மச்சான்ஸ் kiss kiss kiscol என்று கூறுகிறார் நமீதா இதற்கும் இந்த விளம்பரத்திற்கும் என்ன சம்பந்தம்.(நமீதா ரசிகர்கள் யாராவது பதிவுலகத்தில் இருந்தால் கோபபடவேண்டாம் )
2 .JK -சிமெண்ட் விளம்பரமும் இதே மாதிரி தான் .ஒரு பெண் கடலில் இருந்து நீச்சல் உடையில் அப்படியே எழுந்து வருகிறார் அதற்கப்புறம் ஒரு வார்த்தை கூட பேச மட்டங்க , JK -சிமெண்ட் என்று எழுத்து வடிவில் விளம்பரம் வரும்.என்னுடைய கேள்வி என்வென்றால் நீச்சல் உடை உடுத்து வரும் அந்த பெண்ணுக்கும் சிமெண்ட் க்கும் என்ன சம்பந்தம்
3 .JOS ALUKKAS இந்த விளம்பரத்தில் நம்ம இளைய தளபதி விஜய் வருகிறார் . நகை கடைக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்.பொதுவாக நாம் பார்க்கின்ற நகை கடை விளம்பரங்களில் பெண் modelsதான் நடிக்கிறார்கள் அவர்கள் அணிகிறார்கள் அதனால் அவர்கள் வருவதனால் தவறில்லை.விஜய் ஏன் இந்த விளம்பரத்திற்கு?(விஜய் ரசிகர்கள் கோப படவேண்டாம் )
axe விளம்பரத்தில் இந்த ஸ்ப்ரே அடித்தால் பெண்கள் எல்லாம் ஆண்கள் பின்னாடியே வந்து விடுவது போலவும் ஆடைகளை கழட்டுவது போலஇருக்கும்,இப்படி ஸ்ப்ரே அடித்தால் ஒரு பெண் பின்னால் வந்து விடுவாளா? இது பொய் என்று எல்லருக்கும் தெரியும் ஆனால் அந்த பெண்ணுக்கும் இந்த ஸ்ப்ரேவுக்கும் ஒரு சம்பந்தம் கிடையாது
இப்படி நிறைய விளம்பரங்கள் வருகிறது.ஒரு பொருள் வியாபாரம் அக விளம்பரம் தேவை தான் அதற்காக சம்பந்தம் இல்லாமல் நடிகைகள்,நடிகர்கள் வருவதும்,சம்பதமே இல்லாமல் ஆபாச உடை அணிந்து வருவதும் தேவையா?.அதற்க்கு பதிலாக அந்த பொருளின் தரத்தை பற்றி எடுத்துக்கூறும் படியான விளம்பரங்கள் வருமா?

30 comments:
மக்கா சூப்பர் பதிவு இவனுங்க திருந்தவே மாட்டானுங்க
யோவ் உனக்கு என்னையா நமீதா மேல அவ்வளவு கோபம்
ippadi oru vilamparam unakku thevaiyaa?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ippadi oru vilamparam unakku thevaiyaa?////
@@@ரமேஷ்
இப்படி ஒரு கமெண்ட் போட்டு உங்களுக்கு ஒரு விளம்பரம் தேவையா. பாபு இந்த போலீஸ் கிட்ட ஒரு 5 ரூபாய் கொடு
//அதற்க்கு பதிலாக அந்த பொருளின் தரத்தை பற்றி எடுத்துக்கூறும் படியான விளம்பரங்கள் வருமா?//
போங்க பாஸ், சும்மா காமெடி பண்ணிக்கிட்டு :)
//நகை கடைக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்.//
ஒரு டாக்குடர்ரைப் பத்தி இப்பிடி தரகுறைவாகப் பேசியதை வன்மையாகக்கண்டிக்கிறோம்!
கஞ்சா கருப்பும் தான் ராஜா ஸ்டீலு வெளம்பரத்துல வர்ராரு, அத நேக்கா விட்டுட்டு நமீதாவப் பத்தி மட்டும் போட்டிருக்கே? (மாட்டிக்கிட்டயா?) என்ன கொழுப்புய்யா உனக்கு? ஒழுங்கா நமீதா ரசிகர்கள்கிட்ட மன்னிப்பு கேட்டுரு, இல்லேன்னா நாளை முதல் டேமேஜர் தலைமைல மெரினா பீச்சுல உக்காந்து பிரியாணி உண்ணும் விரதம் நடக்கும் ஆமா!
நல்ல பதிவு நண்பா! நானும் இதை பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்... முடிந்தால் வாசிக்கவும்!
http://shiv-luck.blogspot.com/2010/08/18.html
இந்தப்பாழாப்போன டீவி புரோகிராம்களூக்கெடையில நாங்கள்லாம் பாத்து ரசிக்கிறதே இந்த குலுகுலு கிளுகிளு வெளம்பரங்கள்தான்! அதப்போயி....!
நல்ல பதிவு..
அந்த சிமெண்ட் விளம்பரம் தான் என்னால தாங்க முடியல ரொம்ப நாள் முன்னாடி கிரிக்கெட் பாத்துகிடிருக்கும் போது தான் அந்த விளம்பரம் பார்த்தேன்... அந்த நீச்சல் உடை அழகிக்கும் செமெண்டுக்கும் என்ன சம்மந்தமுன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியல... கொடுமைடா சாமி...
என்னத்த சொல்ல மூணு மணி நேர சினிமா எடுக்கிற புண்ணியவானுங்களே லாஜிக் இல்லாமே படம் எடுக்கிறப்போ.... பத்து செகண்ட்ஸ் வர விளம்பரத்தில எப்படி எதிர்பார்க்க முடியும்..
@பன்னிக்குட்டி ராம்சாமி
உங்களுக்கு எப்பவுமா காமெடி தான் போங்க
கஞ்சா கருப்பு கைல கம்பியா வச்சுக்கிட்டு வருவாரு .எதோ கம்பி நல்ல உழைக்கும்னு சொல்லுவர்
நமீதா சொல்லும் வர்த்த மச்சான்ஸ் KISS KISS KISCOL இது தேவையா என்பது தான் என் கேள்வி .
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்தப்பாழாப்போன டீவி புரோகிராம்களூக்கெடையில நாங்கள்லாம் பாத்து ரசிக்கிறதே இந்த குலுகுலு கிளுகிளு வெளம்பரங்கள்தான்! அதப்போயி....!
//
விடு வாத்தியாரே எதோ தெரியாம பண்ணிட்டாரு..
// kiss kiss kiscol என்று கூறுகிறார் நமீதா இதற்கும் இந்த விளம்பரத்திற்கும் என்ன சம்பந்தம்.//
நமிதாவிற்கும் அந்த விளம்பரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம் .. ஆனா நமிதாவிற்கும் கிஸ்க்கும் சம்பந்தம் இருக்குல்ல... ஹி ஹி ஹி ..!!
//
.JK -சிமெண்ட் விளம்பரமும் இதே மாதிரி தான் .ஒரு பெண் கடலில் இருந்து நீச்சல் உடையில் அப்படியே எழுந்து வருகிறார் அதற்கப்புறம் ஒரு வார்த்தை கூட பேச மட்டங்க , JK -சிமெண்ட் என்று எழுத்து வடிவில் விளம்பரம் வரும்.என்னுடைய கேள்வி என்வென்றால் நீச்சல் உடை உடுத்து வரும் அந்த பெண்ணுக்கும் சிமெண்ட் க்கும் என்ன சம்பந்தம் ///
ஐயோ சாமி , இதே மாதிரி ஒரு இந்த அது என்னமோ ஒரு சீயக்காய் விளம்பரம் .. அதுல கூட ஒரு சின்னப்பையன் ஒரு பொண்ண பார்பான் .. அவுங்களோட கூந்தல் அழகுல அவுங்க பின்னாடியே போவானாம் , அடுத்த நாள் அவுங்க இவனோட வாத்தியாரா வருவாங்களாம் . என்ன கொடுமைங்க இது .. யாராவது மயிறு நீளமா இருக்கு அப்படின்னு ரசிப்பாங்களா ..? இவுங்க தொல்லை தாங்க முடியலைங்க ..
//விஜய் ஏன் இந்த விளம்பரத்திற்கு?(//
இதுவும் அப்படித்தாங்க .. இவரு வருவாரு அப்புறம் ஒரு பையன் வருவான் .. ஒரு பெருசா தூக்கி விடுவான்னு நினைக்கிறேன் . அப்புறம் ஜோஸ் ஆலுகாஸ் அப்படின்பாங்க.. அப்படின்னா இவுங்க என்ன சொல்ல வராங்க ..!!
//.அதற்க்கு பதிலாக அந்த பொருளின் தரத்தை பற்றி எடுத்துக்கூறும் படியான விளம்பரங்கள் வருமா? //
இத விட இப்ப வோடபோன் விளம்பரம் சொல்லலாம் .. சத்தியமா நான் டிவி போடும் போதெல்லாம் இந்த விளம்பரம் வராதா அப்படின்னு பார்த்துட்டே இருப்பேன் .. அந்த கிளி வந்து நான் என் தலைய மொட்டை அடிச்சுக்கிட்டு இந்த கேக்க ப்ரீயா தரேன் அப்படின்னு சொல்லும் .. சத்தியமா ரொம்ப அருமையா இருக்கும் .. அந்த குரலும் அருமையா இருக்கும் .. அப்புறம் கொஞ்ச நாள் முன்னாடி icici விளம்பரம் .. அதுவும் கலக்கலா இருந்தது ..
அந்தக் kulan தை வந்து " நான் தங்கப் பல்லை விதைசிருக்கேன் " அப்படின்னு சொல்லும் போது ஐயோ சத்தியமா அருமையா இருக்கும் .. அந்த மாதிரி விளம்பரங்கள் நல்லா இருக்கும் .. அதே மாதிரி இந்த mentos விளம்பரங்களும் நல்லா இருக்கும் ..!!
நமிதாவிற்கும் அந்த விளம்பரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம் .. ஆனா நமிதாவிற்கும் கிஸ்க்கும் சம்பந்தம் இருக்குல்ல... ஹி ஹி ஹி ..!!///
@@@ செல்வா
பயபுள்ள எதை மட்டும் கவனிக்குது பாரு
//@@@ செல்வா
பயபுள்ள எதை மட்டும் கவனிக்குது பாரு//
ஹி ஹி .. எனக்கு நமிதா புடிக்காது . இங்க எழுதிருந்ததால சொன்னேன் .. அவ்ளோ தான் ..!!
@@@வெறும் பையன்
///விடு வாத்தியாரே எதோ தெரியாம பண்ணிட்டாரு..///
என்ன தெரியாம பண்ணிட்டார் கமெண்ட்???
@@@செல்வா
//ஹி ஹி .. எனக்கு நமிதா புடிக்காது . இங்க எழுதிருந்ததால சொன்னேன் .. அவ்ளோ தான் ..!///
நமீதா புடிக்காது சொன்னா நாங்க நம்பிடுவோமா அந்த விளம்பரம் வந்ததால் நீ தான் டிவி முன்னடி இருப்பாய்
நமீதா ரசிகர் மன்ற தலைவர் terror வாங்க நமீதா பற்றி எப்படி எழுதி இருக்கார் பாருங்கள்
நல்ல கருத்து. ஆன விளம்பரத்தின் முக்கிய நோக்கம் அவங்க பொருள் மக்களை சென்று அடையனூம். அதுக்கு மக்கள் முக்கியமா அந்த விளம்பரத்த பாக்கனும். மக்களோட கவனத்த கவர அவங்களுக்கு பிடிச்ச விஷயாம் மூலமா விளம்பரம் செய்ராங்க. நமீதா பதில் யாரோ ஒரு ஆள் (இஞ்சினியர்) வந்து பேசினா நான் மட்டும் இல்லை நீங்களே பாக்க மாட்டிங்க. :)
சௌந்தர் said...
TERROR-PANDIYAN(VAS) said...
நல்ல கருத்து. ஆன விளம்பரத்தின் முக்கிய நோக்கம் அவங்க பொருள் மக்களை சென்று அடையனூம். அதுக்கு மக்கள் முக்கியமா அந்த விளம்பரத்த பாக்கனும். மக்களோட கவனத்த கவர அவங்களுக்கு பிடிச்ச விஷயாம் மூலமா விளம்பரம் செய்ராங்க. நமீதா பதில் யாரோ ஒரு ஆள் (இஞ்சினியர்) வந்து பேசினா நான் மட்டும் இல்லை நீங்களே பாக்க மாட்டிங்க. :)////
@@@terror யார் சொன்னா நாங்க பார்க்காமாடோம் என்று இதே கம்பி விளம்பரத்தில் பிரகாஷ் ராஜ், ராஜேஷ் எல்லாம் வாரங்க அது பரவயில்லை ஆனா ஏன் நமீதாவை காடுடாறாங்க
@சௌந்தர்
//@@@terror யார் சொன்னா நாங்க பார்க்காமாடோம் என்று இதே கம்பி விளம்பரத்தில் பிரகாஷ் ராஜ், ராஜேஷ் எல்லாம் வாரங்க அது பரவயில்லை ஆனா ஏன் நமீதாவை காடுடாறாங்க//
சொன்ன விஷயத்தவிட்ட கரைக்டா நமீதா மட்டும் பிடிச்சிகிட்டு நிக்கிற... அப்பவும் சினிமா அக்டர்தான் வராங்க... ஒரு சாதாரன இஞ்சினியர் நடிச்சாலும் பார்ப்பேன் நீ வீம்புக்கு வேனும்னா சொல்லளாம். ஆன் ஹிட் ரேட் எடுத்து பாத்தா உண்மை தெரியும் ராஜா.... யாரு நடிச்சா அதிகாம் பாக்கராங்கனூ...
நீங்க சொல்றது சரிதான் அண்ணே...
வேதம், தெலுங்கு படம்...(தமிழ் ரீமேக் வானம்)
போஸ்டர் :அனுஷ்கா விபச்சாரியா காட்டி...
பிட் படம் ரேஞ்சுக்கு விளம்பரம் பண்ணினாங்க...
ஆனா, நல்ல கருத்துள்ள படம் அது...
சில விளம்பரம், எதுக்குன்னு கேட்க வைக்கத்தான் அண்ணாச்சி...
விளம்பரம் என்றாலே விளம்புவது தானே
டொக்கோமோ விளம்பரம்தான் பெஸ்ட்.... ஆனா இங்க மொரீசியஸ் வந்த பிறகு இவனுங்க போடுறாங்க பாருங்க விளம்பரத்தை. கொடுமையா இருக்கும். இதுக்கு நமிதா, விஜய் எவ்வளவோ மேல்...
உண்மை.. இப்ப வர்ற விளம்பரங்கள்
கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம
தான் இருக்கு..
அப்படியே டைம் இருந்தா
இதை கொஞ்சம் பாருங்க
எல்லாம் ஒரு விளம்பரம்தான்
இப்ப வர விளம்பரங்கள் பல அந்த பொருளுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லாத மாதிரிதான் வருது. சில விளம்பரங்கள் சம்பந்தமில்லாமல் இருந்தாலும் கொஞ்சம் பார்க்க நல்லாயிருக்கும்(ப.செல்வக்குமார் சொன்ன மாதிரி). ஆனால் சில விளம்பரங்கள் குழப்பும். சிலது ஆபாசமாகவோ இல்ல முட்டாள்தனமாகவோ இருக்கும். என்ன பண்ணுறதுன்னே தெரியலை. ஏன்னா நிகழ்ச்சிகளுக்கு இடையில் போடற இந்த விளம்பரங்கள் நிகச்சியோட அளவை விட அதிகமால்ல இருக்கு!
இதுவும் விளம்பரங்களில் ஒரு புது த்ரெண்டு.. என்ன செய்ய.. நமீதாவை புக் செய்த பிறகு தான் எப்படி விளம்பரம் எடுப்பதுன்னு யோசிக்கிறார்கள்.. அப்ப விளம்பரம் இந்த லக்ஷனத்தில் தான் இருக்கும்..
Post a Comment