Sunday, September 26, 2010

மானத்தை காப்பாற்றுமா நம் இந்திய அரசு ?

இந்திய மக்களின் வரிப்பணம் 70ஆயிரம் கோடியை வாரி இறைத்து காமன்வெல்த் போட்டியை நமது இந்திய அரசு நடத்த போகிறது .இதை நடத்துவதற்கு முன் நம் அரசுக்கு இந்த போட்டியை நடத்த தகுதியும் ,திறமையும் இருகிறதா என்பதை மத்திய அரசோ அல்லது விளையாட்டு அமைப்புகளோ யோசித்ததாக தெரியவேயில்லை.நமது அரசிடம் பணம் கொட்டி கிடக்கிறது அதனால் இந்த போட்டியை நடத்தினால் என்ன என்ற மேம்போக்கான எண்ணம் மட்டுமே இருக்கிறது .

நம் அரசு நம்ம தேவா அண்ணன், சௌந்தர்  , அருண் , ரமேஷ்  மற்றும் ஜெ அண்ணன் மாதிரி,அவர்கள் தான் தினமும் ஒரு கவிதை ,கட்டுரை போன்ற நல்ல விசயங்களை நமது பதிவுலகிற்கு தினமும் தருகிறார்கள் அவர்களிடம் கொட்டிகிடக்கும் தமிழ் புலமையும் ,அறிவு சார்ந்த விசயங்களையும் நாம் பதிவுலகில் தினமும் பார்க்கிறோம்.நமது நாட்டின் பணம் போல.

ஆனால் நமது இந்திய நாடோ என்னையும் ,terrorயும் மாதிரி என்ன தான் பணம் கொட்டி கிடக்கிறது என்றாலும் வறுமை ,வேலையின்மை போன்ற நிறைய விசயங்கள் இருக்கிறது.எனக்கும் , நம்ம terrrorக்கு இதே மாதிரி கவிதை,கட்டுரை,படைப்புகள்,சிறுகதை போன்றவைகள் எழுத தெரிந்தாலும் .தமிழை குத்உயிரும்,கொலை உயிருமாக தூக்கில் ஏற்றிவிடுவோம்.என்ன தான் அறிவு கொட்டி கிடந்தாலும் அப்ப அப்ப எதாவது பதிவு போடுவோம்.சரி விசயத்துக்கு வருவோம் .

இத்தனை கோடி செலவு செய்து நம் அரசு இந்தியாவின் பெருமையை சீர்குலைத்து உள்ளது.அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க உள்ள காமன் வெல்த் போட்டியை முதலில் பிரபல படித்தியது அதில் நடைபெற்ற ஊழல்கள் தான் .அதன் பின் தொடர்ச்சியாக முதலில்  நுழைவு வாயில் மேற்கூரை இடிந்து விழுந்தது ,அதற்க்கு பின் மேம்பாலம் இடிந்து விழுந்தது ,அதற்க்கு அடுத்த நாள் அலங்கார கூரைகளில் இருந்து ஓடுகள் சரிந்து விழுந்தன ,சுகாதார குறைவான வீரர்கள் தங்கும் அறைகள் உள்ளன இது எல்லாவற்றுக்கும் மேலாக தீவிரவாதிகளின் தாக்குதல் போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் இப்படி பல அதிர்ச்சிஊட்டூம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது .இன்று காலையில்  கூட (27-9-10)வீரர்கள் தங்கும் அறையில் பாம்பு இருப்பதாக சேதிகள் வருகின்றன .இதனால் பல வீரர்கள் போட்டியை புறகணிக்க போவதாக கூறி உள்ளனர் .சின்ன சின்ன நாடுகள் கூட இந்தியாவை கேள்வி கேட்கின்றன?.

இந்த அசிங்கத்திற்கு ஒருங்கினைபாளராக கல்மாடி இருக்கிறார் .இவர் மட்டுமே இதற்க்கு பொறுப்பல்ல தன்கடமையை செய்யாத M.S.கில் ,டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் ,இவர்களுக்கு மேலாக பிரதமர் மன்மோகன்சிங்க் உம் இந்த ஊழல்களுக்கும் ,சரி வர திட்டமிடாமல் இப்படியாய் நடத்துவதற்கு நிதி ஒதுக்கியது போன்ற காரணங்களால் இவர்களும் குற்றவாளிகளே .


என்னையும் ,terror-யும் இந்த அரசு அவமானம் இல்லாமல் காப்பாற்றுமா?(அதாங்க நம்ம நாட்டை மத்திய அரசு காப்பாற்றுமா நான்  ஏற்கனேவே நானும்,terror -உம இந்திய போல ன்னு சொல்லி இருக்கேன் இல்ல ).

41 comments:

சௌந்தர் said...

இத்தனை கோடி செலவு செய்து நம் அரசு இந்தியாவின் பெருமையை சீர்குலைத்து உள்ளது.அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க உள்ள காமன் வெல்த் போட்டியை///

எந்த அக்டோபர் 3 சொல்லுங்க அது சரி நம்ம இந்திய அரசுக்கே தெரியாது இம்சைக்கு எப்படி தெரியும்

இம்சைஅரசன் பாபு.. said...

@soundar
கண்டிப்பாக oct -3 -10 நடக்கும் ஆனால் மானம் பிழைக்குமான்னு தெரியல ?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கேவலப்பட்டு நிற்கிறான் இந்தியன்...ஒவ்வொரு இந்தியனுக்கும் காமென்வெல்த ஊழல் பெரும் தலைகுனிவு.உலகம் முழுவதும் லைட் அடித்து கான்பித்து விட்டார்கள் நம் அரசியல் வியாதிகள்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

,அதற்க்கு பின் மேம்பாலம் இடிந்து விழுந்தது //
அதற்கு பின் இந்தியா மானம் விழுந்ததா!!!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

,இவர்களுக்கு மேலாக பிரதமர் மன்மோகன்சிங்க் உம் இந்த ஊழல்களுக்கும் ,சரி வர திட்டமிடாமல் இப்படியாய் நடத்துவதற்கு நிதி ஒதுக்கியது //
அதை சொல்லுங்க முதல்ல..பொம்மை பிரதமர் இருந்தா பொம்மை பாலம் தான் கட்டுவாய்ங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

என்னையும் ,terror-யும் இந்த அரசு அவமானம் இல்லாமல் காப்பாற்றுமா?(//
அப்ப நாங்க எல்லாம் ஆப்ரிக்கனா அவ்..அவ்..அவ்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இன்று காலையில் கூட (27-9-10)வீரர்கள் தங்கும் அறையில் பாம்பு இருப்பதாக சேதிகள் வருகின்றன .//
வதந்திகளும் இறக்கை கட்டி பறக்கின்றன்...

சௌந்தர் said...

இந்தியா 72 நாடுகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த வாய்ப்பை பெற்று இருக்கிறது

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

நல்ல பதிவு.... வாழ்த்துகள்

(நாங்க ரொம்ப டிசெண்ட்....)

இம்சைஅரசன் பாபு.. said...

//வதந்திகளும் இறக்கை கட்டி பறக்கின்றன்//

இல்லை சதீஷ் இன்று சூர்ய(சன் ) தொலைகாட்சியில் சொன்னவை

சௌந்தர் said...

என்னையும் ,terror-யும் இந்த அரசு அவமானம் இல்லாமல் காப்பாற்றுமா?/////

அது சந்தேகம் தான்

TERROR-PANDIYAN(VAS) said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

//அப்ப நாங்க எல்லாம் ஆப்ரிக்கனா அவ்..அவ்..அவ்//

ஹாலோ நாங்க எல்லாம் ஒரிஜினல் இந்தியன்... எவ்வளோ வேனும்னா திட்டுங்க. எங்களுக்கு சூடு, சொரனையே வராது.... ஹி..ஹி... கூடிய சீக்கிறம் பிரபல பதிவர் அகிடுவோம்....

எஸ்.கே said...

ஒரு சிலரால் மொத்த இந்தியாவிற்கே அவமானம் ஏற்படுகிறதே என்று வருத்தமாக உள்ளது.

இம்சைஅரசன் பாபு.. said...

//அது சந்தேகம் தான் //

எங்கள் மானத்தை காப்பாத்த தன உங்கள் பெயர்,தேவ பெயர் எல்லா பேரையும் சேர்த்திருக்கேன்

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

ஹாலோ நாங்க எல்லாம் ஒரிஜினல் இந்தியன்... எவ்வளோ வேனும்னா திட்டுங்க. எங்களுக்கு சூடு, சொரனையே வராது.... ஹி..ஹி... கூடிய சீக்கிறம் பிரபல பதிவர் அகிடுவோம்.////

@@@terror
உங்களுக்கு கோபம் வராது சொல்லுங்க எங்களுக்கு வரும்

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்
//உங்களுக்கு கோபம் வராது சொல்லுங்க எங்களுக்கு வரும்//

அதனால தான் சௌந்தர் உங்கள இந்தியன் லிஸ்ட்ல பாபு சேர்க்கல..... :)

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@சௌந்தர்
//உங்களுக்கு கோபம் வராது சொல்லுங்க எங்களுக்கு வரும்//

அதனால தான் சௌந்தர் உங்கள இந்தியன் லிஸ்ட்ல பாபு சேர்க்கல..... :)////

@@@terror
ஆமா ஆமா நாங்க இந்தியா இல்லை தமிழ்நாடு

அருண் பிரசாத் said...

இது அரசின் கையாலாகதனத்தை தான் காட்டுகிறது. இந்த லட்சனத்தில் ஓலிம்பிக் போட்டிகள் நடத்த முயற்சிப்பார்களாம்...

கிரிக்கெட் உலக கோப்பைக்கு அனைத்து ஸ்டேடியங்களும் பெரும்பாலும் தயார். கிரிக்கெட்டை குறை சொல்லும் இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்வது இல்லை. அதனால் தான் மற்ற விளையாட்டுக்கள் இந்த நிலையில் இருக்கிறது.

அடுத்து, மீடியா வும் குறை சொல்வதையே முழுநேர வேலையாக செய்கின்றனர், அதை விடுத்து ஒரு தீர்வு சொன்னாலோ, செய்தாலோ நன்றாக இருக்கும்.

இதோ, இந்த மாதம் போட்டிகள் முடிந்துவிடும், அனைவரும் மீடியா உட்பட பொட்டிகட்டி சென்று விடுவர், அனைத்தையும் மறந்துவிடுவர். file closed. அயோத்தியா, நித்தியானந்தா என புது பிரிச்சினை வந்தவுடன் அதை கவனிக்க தொடங்கிவிடுவோம்... இது இந்தியாவின் தலை எழுத்து

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆமா ஆமா நாங்க இந்தியா இல்லை தமிழ்நாடு //

அடப்பாவிகளா இங்கேயும் பிரிவினையா ?
முதலில் நாம் இந்தியர்கள் அதற்கப்புறம் தான் தமிழன்!!!!!!!!!!
JAIHIND

இம்சைஅரசன் பாபு.. said...

@arun

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை .நான் மீடியா பற்றி எழுதலாம் என்று முதலில் நினைத்தேன்.நீங்கள் அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டீர்கள் நன்றி

dheva said...

//நம் அரசு நம்ம தேவா அண்ணன், சௌந்தர் , அருண் , ரமேஷ் மற்றும் ஜெ அண்ணன் மாதிரி,அவர்கள் தான் தினமும் ஒரு கவிதை ,கட்டுரை போன்ற நல்ல விசயங்களை நமது பதிவுலகிற்கு தினமும் தருகிறார்கள் அவர்களிடம் கொட்டிகிடக்கும் தமிழ் புலமையும் ,அறிவு சார்ந்த விசயங்களையும் நாம் பதிவுலகில் தினமும் பார்க்கிறோம்.நமது நாட்டின் பணம் போல.//

கட்டுரை எழுதின தம்பி சரி ஒத்துக்குறேன்...இடையில் இது என்னப்பு.........பில்டப்பு.......! மேட்டரா ஸ்ட்ரெய்டா சொல்லமா.. எதுக்கு தேவையில்லாம உலக தலைவர்களை எல்லாம் இழுக்குறா....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா....முடியலா...

சோடா ஒண்ணு சொல்லுங்கப்பா...பாபு அக்கவுண்ட்ல....!

சௌந்தர் said...

கட்டுரை எழுதின தம்பி சரி ஒத்துக்குறேன்...இடையில் இது என்னப்பு.........பில்டப்பு.......! மேட்டரா ஸ்ட்ரெய்டா சொல்லமா.. எதுக்கு தேவையில்லாம உலக தலைவர்களை எல்லாம் இழுக்குறா....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா....முடியலா...

சோடா ஒண்ணு சொல்லுங்கப்பா...பாபு அக்கவுண்ட்ல..../////

இதை பற்றி ப மு க. முடிவு எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன

சௌந்தர் said...

செயற்குழுவை கூப்பிடுங்கள்

dheva said...

நல்லா இருக்குடா.. ஒரு சோடவுக்கு செயற்குழுவா?


பப்பு...பப்பு..தம்பி இங்க வாடா.. என்ன என்னமோ சொல்றாங்கோ...!

ப.செல்வக்குமார் said...

//என்னையும் ,terrorயும் மாதிரி //

நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன் .., இங்கே எனது பெயரும் இடம்பெற்றிருக்க வேண்டும் ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

//பப்பு...பப்பு..தம்பி இங்க வாடா.. என்ன என்னமோ சொல்றாங்கோ//

உண்மையே சொன்ன இப்படி தான் தாகமா தவிக்கும்

சௌந்தர் said...

dheva said...
நல்லா இருக்குடா.. ஒரு சோடவுக்கு செயற்குழுவா?


பப்பு...பப்பு..தம்பி இங்க வாடா.. என்ன என்னமோ சொல்றாங்கோ...!/////

@@@தேவா
தலைவர் சொன்னா அதை செய்யணும் அவர் தான் செயலாளர்

சௌந்தர் said...

dheva said...
நல்லா இருக்குடா.. ஒரு சோடவுக்கு செயற்குழுவா?///

@@@dheva
இவர் சோட குடிக்க வா செயறகுழுவை கூப்பிட்டோம் இந்த காமன் வெல்த் பற்றி பேசுவதற்கு தான்

ப.செல்வக்குமார் said...

சத்தியமா இதப் பத்தி நானும் ஒரு பதிவு போடணும் அப்படின்னு நினைச்சேன்., இந்த கொடுமையா எங்க போய் சொல்லுறது.?
இந்தியாவோட மானத்த இப்படி கேடுதுட்டானுகளே ..
அது மட்டும் இல்லாம இதுக்கு செலவு செஞ்ச பணம் ஐயோ ..
இந்த போட்டில பங்கேற்குற ஒவ்வொரு நாட்டுக்கும் பணம் கொடுத்திருக்காங்க , அதோட அவுங்களோட போக்குவரத்து செலவு போன்ற செலவுகளையும் நாங்களே ஏத்துக்கறோம் அப்படின்னு சொல்லிருக்காங்க. இதெல்லாம் கூட ஏற்றுக்கொள்ளலாம் , ஆனா எதையுமே சரியா பண்ணாம இந்தியாவோட மானத்த உலக அளவுல கெடுத்துட்டாணுக..

அப்புறம் இங்க சுத்தமா இல்லை அப்படின்னு அவுங்க சொன்னதுக்கு சுத்தம் அப்படிங்கிறது நாட்டுக்கு நாடு வேறுபாடும் அப்படின்னு சொல்லிருக்காங்க . அத விட நேத்தைக்கு பாம்பு ஒண்ணு விளையாட்டு வீரர்கள் தன்குற அறைக்குள்ள போயிருக்கு .. என்ன கொடுமையோ ..?

இனிமே இந்தியாவுல ஏதாவது விளையாட்டு நடத்துறோம் அப்படின்னா கேவலமா சிரிப்பாங்க ..!!

Balaji saravana said...

//அப்புறம் இங்க சுத்தமா இல்லை அப்படின்னு அவுங்க சொன்னதுக்கு சுத்தம் அப்படிங்கிறது நாட்டுக்கு நாடு வேறுபாடும் அப்படின்னு சொல்லிருக்காங்க//
ஹி ஹி ஹி...
//அத விட நேத்தைக்கு பாம்பு ஒண்ணு விளையாட்டு வீரர்கள் தன்குற அறைக்குள்ள போயிருக்கு .. என்ன கொடுமையோ ..//
இத சமாளிக்க "இயற்கையோட இணைஞ்சு இருக்கிறோம்"னு சொல்லுவாங்களோ? :)

kavisiva said...

இந்தியாவை விட பின் தங்கிய நாடு இந்தோனேஷியா. இந்தோனேஷியர்கள் என்னிடம் இது பற்றி பேசும் போது என்ன பதில் சொல்லன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன் :(. மானம் போகுது

இம்சைஅரசன் பாபு.. said...

@kavi siva

முதல் வருகைக்கு நன்றி ......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

ஆனால் நமது இந்திய நாடோ என்னையும் ,terrorயும் மாதிரி என்ன தான் பணம் கொட்டி கிடக்கிறது///

கொய்யால நீங்கல்லாம் இன்னும் உயிரோடயா இருக்கீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

//ஆமா ஆமா நாங்க இந்தியா இல்லை தமிழ்நாடு //

அடப்பாவிகளா இங்கேயும் பிரிவினையா ?
முதலில் நாம் இந்தியர்கள் அதற்கப்புறம் தான் தமிழன்!!!!!!!!!!
JAIHIND
//

arjun's filim aa?

வெறும்பய said...

இந்த மாதிரி குற்றச்சாட்டுகளும்.. குறைபாடுகளும் நம்ம ஆட்களுக்கு சப்ப மேட்டரு... எவ்வளவோ சமாளிச்சாங்க இத சாமாளிக்க மாட்டாங்களா...

அன்பரசன் said...

நம்மாளுங்க போட்டிய நடத்துரேன்னு போயி நம்ம நாட்டுப்பேர கெடுத்துட்டாங்க.
இனிமே இந்தியாவுல ஏதாவது விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி கிடைக்குமான்னு தெரியல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆனால் நமது இந்திய நாடோ என்னையும் ,terrorயும் மாதிரி என்ன தான் பணம் கொட்டி கிடக்கிறது///

கொய்யால நீங்கல்லாம் இன்னும் உயிரோடயா இருக்கீங்க.. நாய் வண்டி வருது. போய் ஜாக்கிரதையா ஒளிஞ்சுக்கோங்க..

இம்சைஅரசன் பாபு.. said...

அன்பரசன் உங்கள் முதல் வருகைக்கு நன்றி ..........

Anonymous said...

//நானும்,terror -உம இந்திய போல ன்னு சொல்லி இருக்கேன் இல்ல//

அடக் கொடுமையே...

இம்சை பதிவு, நல்லாயிருக்கு..

அதாவது..
இம்சை, பதிவு நல்லாயிருக்குனு சொல்ல வந்தேன்.

மங்குனி அமைசர் said...

////நமது அரசிடம் பணம் கொட்டி கிடக்கிறது////

ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் காமடி சென்ஸ்

வெங்கட் said...

// இந்த அசிங்கத்திற்கு ஒருங்கினைபாளராக கல்மாடி இருக்கிறார். //

அந்த ஆள் பேர் தான் கல்மாடி.,
ஆனா படா " கேடி ".

இத்தனை நடந்தும்.,
இந்த அரசு எந்த நடவடிக்கையும்
எடுக்காம மௌனம் சாதிப்பது ஏன்னு புரியல..