இரண்டு மூன்று நாட்களாக வேலை அதிகம் என்பதால் பதிவு பக்கம் வர முடியவில்லை.கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் வந்து போகலம் என்று கணினியில் உட்காரும் நேரம் பார்த்து கரண்ட் போய்விடுகிறது.என்ன செய்ய.
யார் கேட்டார்கள் இலவசதொலைகாட்சி பெட்டியும்,இலவச வாயு அடுப்பும்?அதற்க்கு பதிலாக ஒவ்வொரு வீட்டிற்க்கும் மானியத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை கொடுத்தால் எவ்வளவுக்கு மின்சாரம் மிச்சம் பெரும்.இது ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை போலும்.நமது நாடு மற்ற நாடுகள் மாதிரி குளிர் பிரதேசமாகவோ,வெப்பம் மிகுந்த நாடோ இல்லை .நாம் ஏன் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையை பின்பற்றகூடாது?ஒரு பக்கம் புவி வெப்பம் அடைகிறது என்ற உலக நாடுகள் எல்லாம் கூறிவருகின்றன இதற்க்கு முக்கிய காரணமாக அணுமின் நிலையங்களை கூறுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க இலவசம் இலவசம் என்று கொடுத்து மக்களை சோம்பேறியாக்கிவிடுகிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்.அடுத்து இன்னும் சில மாதங்களில் பொது தேர்தல் வருகிறது இன்னும் பல இலவசங்கள் வர போகின்றன.மக்களும் துட்டை வாங்கி கொண்டு ஒட்டு போடதான் போகிறார்கள்.
ஒரு மனிதனுக்கு வாழ்க்கைக்கு தேவையானது உண்ணஉணவு ,இருக்க இடம்,உடுத்தி கொள்ள துணி இவைகள் அனைத்தும் இலவசமக கிடைத்து விட்டால் எப்படி வேலை பார்ப்பான்.இந்தியா 2020இல் வல்லரசாக இது தான் வழிமுறையோ?.மீனை இலவசமாக கொடுபதிற்கு பதில் மீன் பிடிக்க கத்து கொடுகும்மா நமது அரசு அல்லது வரபோகும் அரசு?.
நமது நாடு வல்லரசாக மாற முக்கிய காரணியாக இருப்பது மனித சக்தி (manpower).இவர்களை இலவசங்கள் கொடுத்து சோம்பேரியாக்கல்மா நமது ஆட்சியாளர்கள்?
இலவசங்கள் எதற்கு தேவையோ அதற்க்கு மட்டும் இலவசம் கொடுங்கள்.என்னை பொறுத்த வரை கல்வியை மட்டும் இலவசமாக கொண்டுங்கள்.லோன்(Education Loan ) கொடுத்து படிக்கும் போதே கடன்காரனாக மாற்றாதீர்கள்
குறிப்பு :
நீங்கள் இலவசதொலைகாட்சி பெட்டி வாங்கியாச்சான்னு?யாரும் comments போடாதிங்க.எனக்கு rationcard கிடையாது.(அதுதான் உங்கள்ளுக்கு வயிறு எரியுதுன்னு கமெண்ட்ஸ் போடதீங்க)
50 comments:
நான்தான் முதல் . படிச்சிட்டு வரேன்..!!
1வது வெட்டு
என்ன கொடுமை பாபு இது....
ஓ. மிஸ்ட்
சார் உங்க ஆபீஸ் ல இலவச கல்விங்களா?
டெரர் மாதிரி வயசானவங்களுக்கு இலவச கல்வி கொடுத்து கொஞ்சம் அறிவை வளர்த்து விடுங்கப்பா..
தமிழ்நாடு 2000 வருசமே வல்லரசாயிடுச்சே. அப்பத்தான புரட்சி கலைஞரின் வல்லரசு படம் ரிலீஸ் ஆச்சு....
எலேய்... இது செளந்தருக்கு எதிர் பதிவு மாதிரி இருக்கு?
(ஏதோ நம்மால முடிஞ்சது. நாராயணா... நாராயணா)
/எலேய்... இது செளந்தருக்கு எதிர் பதிவு மாதிரி இருக்கு?
(ஏதோ நம்மால முடிஞ்சது) //
அடப்பாவி அருண் நானும் இந்த கமென்ட் தான் போடணும்னு இருந்தேன். யோசிக்கும்போதே திருடுராங்கப்பா...
//அருண் பிரசாத் said...
This post has been removed by the author. ///
nice comment sir
// கணினியில் உட்காரும் நேரம் பார்த்து கரண்ட் போய்விடுகிறது.என்ன செய்ய//
ஆற்காடு சார்...நோட் பண்ணுங்க சார்...பாவம் நாங்க நேரத்துக்கு பதிவ போட முடுயாம கஷ்டப்படுறோம்..
//நாம் ஏன் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையை பின்பற்றகூடாது?//
நல்ல கேள்வி அதுக்கு துட்டு நெறய செலவாகுனு கேள்விபட்டேன் பாபு...அது எம்புட்டுனு பாத்து அதயும் சொல்லிப்புட்டீகன..., ஆற்காடு சார் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிடலாம்....:)
//ஒரு மனிதனுக்கு வாழ்க்கைக்கு தேவையானது உண்ணஉணவு ,இருக்க இடம்,உடுத்தி கொள்ள துணி இவைகள் அனைத்தும் இலவசமக கிடைத்து விட்டால் எப்படி வேலை பார்ப்பான்.//
இது பாயிண்டு..பிண்ணிட்டே ராசா...
நோட் பண்ணுங்கப்பா.... நோட் பண்ணுங்கப்பா
//இலவசங்கள் எதற்கு தேவையோ அதற்க்கு மட்டும் இலவசம் கொடுங்கள்.என்னை பொறுத்த வரை கல்வியை மட்டும் இலவசமாக கொண்டுங்கள்.லோன்(Education Loan ) கொடுத்து படிக்கும் போதே கடன்காரனாக மாற்றாதீர்கள்//
இதுவும் நல்லாத்தாம்ப்பா இருக்கு...
//.எனக்கு rationcard கிடையாது.//
அந்த கருமத்தை வாங்கித்தொலை..., டிவி வாங்குரதுக்காக இல்ல..., வேற கொல்ல விசயத்துக்கு அது பயன் படுது...
//அதுதான் உங்கள்ளுக்கு வயிறு எரியுதுன்னு கமெண்ட்ஸ் போடதீங்க//
யாருப்பா அது பாபுவப் பாத்து வயிறு எர்யுறது... பிச்சிப்புடுவேன்...பிச்சி..ராஸ்க்கல்ஸ்...
//மீனை இலவசமாக கொடுபதிற்கு பதில் மீன் பிடிக்க கத்து கொடுகும்மா நமது அரசு அல்லது வரபோகும் அரசு?.///
டயலாக் பழசுன்னாலும்...இப்பவும் அது பொருந்துதுப்பா...
அடச்சீ..மொள்ளமாறி...எழுதுரதுக்கா விசயம் இல்ல...நெறய எழுத வேண்டியதுதானே....ஆனியில்லாத நேரத்துல இனி எங்கபோயி....யாரைக் கும்முரது...., அடப் போயா...
ஒரு முதெலேர்ந்து வரேன்.. ஏதாவது விட்டுப் போயிருக்கானு...
//ப.செல்வக்குமார் said...
நான்தான் முதல் . படிச்சிட்டு வரேன்..!!//
முதக் கமென்ஸ் போட்டு எனக்கு பல்பு குடுத்த பயபுள்ளதானே நீயி...இருடி..ஒரு நாள் உன்னை போட்டுத்தள்ளுனாதான்..சரிப்படுவே....
//Jey said...
1வது வெட்டு //
இது எவண்டா தக்காளி 1வது,2வதுனு காமெடி பண்ணிகிட்டு...அடச்சீ ஓடிப் போயிரு...
//Jey said...
ஓ. மிஸ்ட்//
வெலக்கெண்னை அதான் ஒரு சின்னப் பயகிட்ட பல்பு வாங்கின இல்ல...அப்படியே போக வேண்டியதுதானே..., அத ஊருக்கு சொல்லி அசிங்கப் படனுமா?...உனக்கு மானம், ரோசம், பருப்பு,சாம்பார் எதும் கிடையதா வெம்ஹ்காயம்... போடா போய் புள்ளகுட்டிகள படிக்கப் போடுரா..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சார் உங்க ஆபீஸ் ல இலவச கல்விங்களா?
டெரர் மாதிரி வயசானவங்களுக்கு இலவச கல்வி கொடுத்து கொஞ்சம் அறிவை வளர்த்து விடுங்கப்பா..//
வந்துட்டாருய்யா....சித்தப்பு...வக்கனையா மென்ஸ் போடுரதுக்கு..., ஓட்டு போட்டியா????
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தமிழ்நாடு 2000 வருசமே வல்லரசாயிடுச்சே. அப்பத்தான புரட்சி கலைஞரின் வல்லரசு படம் ரிலீஸ் ஆச்சு....//
எந்த டாபிக்ல பதிவப் போட்டாலும்..ஏதாவது சினிமாப்படத்தை கோர்ர்த்துவிட்டு...கமென்ஸ் போடலைனா....#$%$%&*$#@%^%&^&^#$%^%#^&^%%$#$@#$^%^...
//அருண் பிரசாத் said...
This post has been removed by the author.//
ங்கொய்யாலே பாபு...போச்சி போ...உன்னை கண்டமேனிக்கி திட்டி கமென்ஸ் போட்டு அலிரப்பர் வச்சி அழிச்சிட்டு போயிட்டான்...ஒருத்தன்...எங்கய போன நீ...குச்சி மிட்டாயும்..குருவி ரொட்டியும்..வாங்கப்போனியா..., மானம் போகுதுய்யா..வந்து என்னானு பாரு...
//அருண் பிரசாத் said...
எலேய்... இது செளந்தருக்கு எதிர் பதிவு மாதிரி இருக்கு?
(ஏதோ நம்மால முடிஞ்சது. நாராயணா... நாராயணா)//
அடப்பாவி.....இது ஒரு பொழப்பு...இதுக்கு நீ டெல்லி எருமைய மேய்க்கப் போகலாம்..., இல்லீனா...பூக்குழில உருளலாம்...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/எலேய்... இது செளந்தருக்கு எதிர் பதிவு மாதிரி இருக்கு?
(ஏதோ நம்மால முடிஞ்சது) //
அடப்பாவி அருண் நானும் இந்த கமென்ட் தான் போடணும்னு இருந்தேன். யோசிக்கும்போதே திருடுராங்கப்பா...///
போடுர பதிவெல்லாம்...அடுத்தவங்ககிட்ட ஐடியாகேட்டு...இல்லினா..எழுதி வாங்கி போடுரது....இதுல இவுக யோசிக்கும்போதே திருடுராகலாம்.... சிப்பு...இர்ந்தாலும்..இவ்வளவு காமெடி..கூடாதுய்யா சாமி...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//அருண் பிரசாத் said...
This post has been removed by the author. ///
nice comment sir.//
ஐநா சபை தலிவரு சர்டிபிகேட் குடுக்குராஉ வந்து வாங்கிக்கிங்கப்பா..
இவ்வளவு கமென்ஸ் போடுறோம் இடையில எந்த நாதாரியாவது வந்து மாட்ரானா பாரு....ச்சீ... போரடிக்குதுயா இந்த இடம்...நான் கோச்சிகிட்டு போரேன்...
மகா ஜனங்களே இதிலிருந்து என்ன தெரியுது நம்ம jey ஆபீஸ் ல வேலை வெட்டி இல்லாம இருக்காரு. எப்படித்தான் வேலை பாக்காம சம்பளம் வான்குரீங்களோ. இதுக்கு ஏதாச்சும் மொக்கை படத்துக்கு போகலாம்...
இன்னிக்குத்தான் சிந்து சமவேளின்னு ஒரு 18+ படம் வந்திருக்காம். வாங்க போகலாம்.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மகா ஜனங்களே இதிலிருந்து என்ன தெரியுது நம்ம jey ஆபீஸ் ல வேலை வெட்டி இல்லாம இருக்காரு. எப்படித்தான் வேலை பாக்காம சம்பளம் வான்குரீங்களோ. இதுக்கு ஏதாச்சும் மொக்கை படத்துக்கு போகலாம்...///
அப்பகூட படத்துக்குதான் போகனுமா???
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இன்னிக்குத்தான் சிந்து சமவேளின்னு ஒரு 18+ படம் வந்திருக்காம். வாங்க போகலாம்//
யோவ் நீ வயசுக்கு வந்துடியா...இல்லினா உன்னை உள்ளார விட மாட்டாங்க...
//Jey said...
This post has been removed by the author.
September 3, 2010 4:16 AM//
மக்களே வேற ஒன்னும் இல்லை கமென்ஸ் ரிபீட்டாயிருச்சி அதாம் அலிரப்பர் வச்சி அழிச்சிட்டேன்...
அட நாதாரி பயலுகளா... ஒருத்தன் அக்கறையா ஒரு பதிவு போட்டா.. என்னமா சமந்தமே இல்லாம கும்மி அடிக்கிறாங்க....
ஹெலோ....ஹெலோ.... மைக் டெஸ்டிங்... யாராவது இருக்கீங்களா...
@வெறும்பய
சொல்லுங்க நீங்களும் வந்து கும்மிட்டு போங்க
என் இனிய பதிவர்களே சத்தியமா சௌந்தர் இது சம்பந்தமா பதிவு போட்டது எனக்கு தெரியாது
சௌந்தர்ரிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்
ஜெ இவ்வளவு கடுப்பா.............
எனக்கு இது தேவைதான் terror
//சார் உங்க ஆபீஸ் ல இலவச கல்விங்களா?//
யலெய் நீ இந்த மாதிரி கேட்பன்னு நினைச்சேன் போட்டுட
@வெறும்பய
நீங்க ஒருத்தராவது ஆறுதலா ஒரு வார்த்தை சொன்னீங்களே
//வெறும்பய said...
அட நாதாரி பயலுகளா... ஒருத்தன் அக்கறையா ஒரு பதிவு போட்டா.. என்னமா சமந்தமே இல்லாம கும்மி அடிக்கிறாங்க....
ஹெலோ....ஹெலோ.... மைக் டெஸ்டிங்... யாராவது இருக்கீங்களா...//
வாடி மாப்ல ஆட்டுக்குதான் வெயிட்டிங்க்...பாண்டி மண்சத்தண்ணிய ஸ்லோவா சத்தம் போடாம எடு..
//harini said...
@வெறும்பய
சொல்லுங்க நீங்களும் வந்து கும்மிட்டு போங்க//
அடப்பாவி,, ஏம்ப்பா வாண்டடா வந்து தலையக் குடுக்கிறே...ஏற்கனவே ஒரு ஆடு செட்டாயிருக்குப்பா...
//harini said...
என் இனிய பதிவர்களே சத்தியமா சௌந்தர் இது சம்பந்தமா பதிவு போட்டது எனக்கு தெரியாது
சௌந்தர்ரிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்//
ஏய் பாபு அடிச்சி ஆடு...இந்த சாரி கீரி..மோரெல்லாம்...இங்க க்கூடாது....:)
//harini said...
ஜெ இவ்வளவு கடுப்பா.............//
இதெல்லாம்...சும்மா உல்லுலாஇய்க்கி பாபு...போட்ட பதிவு சூப்பர்... நீ கண்டினியூ..., ஏய்ய் எய்ய், ஆடு நீ கண்டினியூ இல்ல...வா வா...
@ jey
இங்க என்னை நடக்குதுங்க அண்ணே ..
நீங்களே எல்லா கமெண்ட்டையும் போட்டுட்டா நான் என்னை பண்ணுறது ...?
@@@harini சாரி எல்லாம் எதுக்கு நண்பா உங்களுக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு
மக்கா உன் பதிவு இன்டிலில பிரபலம் ஆகிடுத்து.... வாழ்த்துகள்.... கலக்கறிங்க.....
சத்தியமான வார்த்தைகள் இம்சை.. உங்களைப் போன்ற பொது நல சிந்தனை உள்ளவர்கள் இளைஞர்கள் மாற்றத்தைக் கொண்டு வர முன் வர வேண்டும்.. மாற்றங்கள் நம்முள் இருந்தே ஆரம்பிக்கின்றன.. அதை வெளியில் தேடுவது சரியாகாது என்பது எனக்குள் எப்போதும் நான் சொல்லிக் கொள்ளும் வார்த்தைகள். இலவசங்கள் நம் நாட்டுக்கு முதல் எதிரி. அதை ஒழிப்பது அவசியம்.. ஆனால் மக்களை ஓட்டு இயந்திரங்களாகப் பயன்படுத்தும் அரசினால் இதனைச் செய்ய முடியாது. அதே போல, சோலார் பேனலை இலவசமாக உடனே செய்து அனைவருக்கும் கொடுத்து விட முடியாது. அதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. இதனை மக்களுக்கு இலவசமாக வழங்கும் சாத்தியக் கூறுகளை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன்.. கூடிய விரைவில் அறிக்கை வரும்.. நன்றி.. தற்போது சோலார் பேனல் பற்றிய என்னுடைய பதிவிற்கு பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். இதற்கு முன்னமே "இலவச சோலார் பேனலை கலைஞர் வழங்கினால்.." என்கிற தலைப்பில் ஒரு சிறு பதிவு இட்டிருந்தேன்.. நேரம் இருந்தால் அதையும் படிக்கவும். நன்றி..
Post a Comment