தமிழ்நாட்டில் உள்ள எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்குள்ள அரசு பொதுமருத்துவமனை அருகில் இருக்கிறது என்பது ஒரு 1/2 கிலோமீட்டர்- க்கு முன்பே கண்டுபிடித்து விடலாம் . அவ்வளவு தூரம் வாசனை ( நாற்றம்) வீசும்.சுகாதாரம் என்பது இங்கு இம்மி அளவு கூட கிடையாது .
அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் சிகிச்சைக்கு சென்றால்,அங்கு நடக்கும் அலைகழிப்பை வார்த்தைகளால் சொல்லமுடியாது.நேரில் பார்த்தால் உருகாத மனமும் உருகும்.காலையில் ஊசி போட வரிசையாக நிற்கும் நோயாளிகளை பார்த்தால் பாவமாக தான் இருக்கிறது.ஒரே ஊசியை பத்து அல்லது பதினைந்து பேருக்கு போடுகிறார்,சிலர் அப்படி ஊசி போடுவதால் ஏற்படும் சுகாதார கேட்டை அறிந்து diposable ஊசி கொண்டு வந்து கொடுத்தாலும் 10 ரூபாய் கொடுத்தல் தான் அவர் வாங்கி வந்த ஊசியை போடுவார்.
இதற்குமேல் ஒரு கொடுமை நடக்கிறது அரசு மருத்துவமனைகளில். விபத்திலோ அல்லது தற்கொலையோ செய்து இறக்கும் ஒரு மனிதனை பிரேத பரிசோதனை செய்து அவரது குடும்பத்தில்உள்ளவர்களிடம் கொடுக்கும் முன் அவர்களை படுத்தும் பாடு .இறைவன் நேரில் வரமாட்டனா என்று என்னும் அளவிற்கு மருத்துவர் முதல் கீழ்மட்டத்தில் வேலை பார்க்கும் வேலையாட்கள் அவர்களை அலைகழித்து சடலத்தை கொடுகின்றனர் .
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முதல் நகர்ப்புறங்களில் உள்ள பொது மருத்துவமனை வரை தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன.இவைகளில் எத்தனை மருத்துவமனைகள் நல்ல வசதியுடன் நல்ல சுகாதாரத்துடன் செயல்பட்டு வருகின்றன என்பது கேள்விக்குறிதான்.
கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் 6ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இந்த பணத்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர்தான் கர்ப்பிணி பெண்களுக்கு வாங்கிக் கொடுக்கிறார். அந்த பணத்தில் 1000 ரூபாய் தமக்கு தந்தே தீர வேண்டும் இல்லை என்றால் 6ஆயிரம் ரூபாய் வாங்கித் தரமாட்டேன் என்று முதலிலேயே அந்த ஏழை கர்ப்பிணி பெண்களை பயமுறுத்தி வைத்துக் கொள்கிறார் செவிலியர்.
தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்குகிறது.அரசு மருத்துவமனையோ மக்களின் உயிரை எடுக்கிறது. ஏன் இந்த அவல நிலை? .
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் நோயாளிகளை அன்போடும்,கனிவோடும் பார்த்துக் கொள்வது என்பது ஒரு கனவாகவே போய்விடுமா...!
49 comments:
:)
வேதனையான விஷயம்....
வேதனையான விஷயம்....
@வெறும்பய
//வேதனையான விஷயம்...//
என்ன கமெண்ட் போடறது தெரியலனா சும்மா :) போட்டு போ. முன்னாடி பாத்தூ காப்பி அடிக்கிற... #%&*@#$
என்ன பண்ண முடியும்ன்னு அவனுகளுக்கு தெனாவெட்டு...
என்ன கமெண்டு போடுறதுன்னு தெரில.. ஸோ வோட்டு மட்டும் ;)
ஐ! இதுவே ஒரு கமெண்டு ஆயிடுச்சு?!
அந்த கொடுமை சொல்லி மாளாதுங்க. நானும் கூட ஒரு தடவை போயிருக்கேன். அப்ப எங்க ஊர்ல சிக்கன் குனியா பரவிட்டு இருந்தது. அதனால அரசு மருத்துவ மாநில போய் ஊசி போட்டாதான் சீக்கிரம் குணமாகும் அப்படின்னு எங்க ஊர்ல சொன்னாங்க. ஆனா அங்க போனாத்தான் தெரியுது எவ்ளோ கொடுமைகள் நடக்குது அப்படின்னு. நான் 11 மணிக்கு போனேன். இப்ப எதுக்கு வந்தீங்க.? 10 .30 இக்கு முன்னாடி வரணும் அப்படின்னு அந்த டாக்டர் சொன்னார். அப்புறம் அவரு ஒண்ணுமே கேக்கலை "என்ன பண்ணுது" அப்படினார்.. எனக்கு செம கோவம் .. சரி என்ன பண்ணுறது ..? அப்புறம் நான் என்ன சொன்னேன் அப்படின்னு கூட கவனிக்கலை .. கலர் கலரா மாத்திரை கொடுத்தாங்க , ஊசி போட்டாங்க .. அவ்ளோ தான் ..!!
செல்வா நீங்க ஒருத்தர் தான் சரி யான முறையில் கமெண்ட்ஸ் போட்டிருக்கீங்க .
தேங்க்ஸ் மக்கா
பாக்கி எல்லோரும் வேஸ்ட்
//இம்சைஅரசன் பாபு.. said...
செல்வா நீங்க ஒருத்தர் தான் சரி யான முறையில் கமெண்ட்ஸ் போட்டிருக்கீங்க .
தேங்க்ஸ் மக்கா
பாக்கி எல்லோரும் வேஸ்ட் //
உன் ப்ளாக் படிக்கும்போதே தெரிய வேணாம் நாங்கெல்லாம் வேஸ்ட்டுன்னு
// உன் ப்ளாக் படிக்கும்போதே தெரிய வேணாம் நாங்கெல்லாம் வேஸ்ட்டுன்னு //
எப்பாடா ..........கரெட கண்டுபிடிச்சுட்ட ராசா .......எல்லோரையும் உசுபேத்தி விடாதப்ப
நானும் இந்த அரசு மருத்துவமனையில் இருந்து பார்த்து இருக்கிறேன் 5 ரூபாய் கேட்டு பிச்சை எடுப்பார்கள்
சரியான முறையில் கமெண்ட்
என்ன மக்கா நானூம் சரி யான முறையில் கமெண்ட் போட்டு இருக்கனா?
@ Terror
//சரியான முறையில் கமெண்ட் //
இப்படி தான் போடனுமா... அய்யோ இது தெரியாமா நான் சீரியசா கமெண்ட் போட்டுடேனே.
@ இம்சை
அதை ரப்பரால அழிச்சிடுங்க. இப்போ நானும் கமெண்ட் போடுறேன்
சரியான முறையில் கமெண்ட் - ஓகேவா?
மூன்று நான்கு வருடங்களுக்கு முன் நடந்தது, வேறு ஒரு மருத்துவமனையிலிருந்து ஒரு சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். நான் செல்ல வேண்டிய பகுதிக்கு சில வார்டுகள் தாண்டி போக வேண்டியிருந்தது. ஒரே நாற்றம். ஒழுங்காக பராமரிக்கப்படவே இல்லை. கசாமுசாவென நோயாளிகளும் அவர்களின் பொருட்களும் ஆங்காங்கே இருந்தது. ஒருவழியாக நான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றோம். நீண்ட நேரம் கழித்து மருத்துவர் வந்தார் இன்னும் நீண்ட நேரம் கழித்து மருத்துவர் கவனித்தார் எதையோ எழுதிக் கொடுத்தார். மீண்டும் நான் இருந்த மருத்துவமனைக்கு வந்து மருத்துவர் அறிக்கையை காண்பித்தால் அது டோட்டல் வேஸ்ட் என சொல்லிவிட்டார்கள்.
------------------
அந்த பகுதிக்கு நான் வீல்சேரில் செல்ல வேண்டியிருந்தது. அந்த வீல்சேரை பெற பணியாளருக்கு பணம் தர வேண்டியிருந்தது.
//செல்வா நீங்க ஒருத்தர் தான் சரி யான முறையில் கமெண்ட்ஸ் போட்டிருக்கீங்க .
தேங்க்ஸ் மக்கா
பாக்கி எல்லோரும் வேஸ்ட் //
@ இம்சை
எங்களுக்கு சீரியஸ் பதிவுக்கெல்லாம் கமெண்ட் போட தெரியாது. மொக்கை போஸ்ட் போடுங்க நல்லா கும்மறோம்
voted. kummi after the break...:)
தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...
http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html
இம்சைஅரசன் பாபு.. said...
செல்வா நீங்க ஒருத்தர் தான் சரி யான முறையில் கமெண்ட்ஸ் போட்டிருக்கீங்க .
தேங்க்ஸ் மக்கா
பாக்கி எல்லோரும் வேஸ்ட்/////
எல்லோரும் வந்து கமெண்ட்ஸ் எல்லாம் டெலிட் பண்ணுங்க நானும் டெலிட் பண்றேன்
TERROR-PANDIYAN(VAS) said...
என்ன கமெண்ட் போடறது தெரியலனா சும்மா :) போட்டு போ. முன்னாடி பாத்தூ காப்பி அடிக்கிற... #%&*@#$
//
வாயா வா... வர வர நமக்கு எதிராளியாவே மாறிட்டு வர... எதுவானாலும் நமக்குள்ள இருக்கட்டும்...பொதுவுல வேண்டாம்..
@வெறும்பய
//வாயா வா... வர வர நமக்கு எதிராளியாவே மாறிட்டு வர... எதுவானாலும் நமக்குள்ள இருக்கட்டும்...பொதுவுல வேண்டாம்..//
சீரியஸ் போஸ்ட் மச்சி... அதன் உன்ன கலாய்ச்சேன்..இப்போ கவனி.... ரஷ்ய புரட்சி தலமை தாங்கி நடத்திய வெறும்பய வாழ்க...
// தமிழ்நாட்டில் உள்ள எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்குள்ள அரசு பொதுமருத்துவமனை அருகில் இருக்கிறது என்பது ஒரு 1/2 கிலோமீட்டர்- க்கு முன்பே கண்டுபிடித்து விடலாம் //
அது என்ன வாசனை னு தெரியுமா உங்களுக்கு?
கிருமிகளை அழிக்கும் கிருமி நாசினி
//சுகாதாரம் என்பது இங்கு இம்மி அளவு கூட கிடையாது//
அதுக்கு காரணம் யார்னு தெரியுமா
ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் காலைல ஏழு மணிக்கு கூட்டி பெருக்கி
மாப் பண்ணுவாங்க அப்புறம் பிளீச்சிங் போடுவாங்க
அதுக்கு அப்புறம் நாம்ம மக்க வந்து அவங்க வேலைய காட்டுவாங்க
எங்க செடி இருக்குன்னு பாத்து எச்சி துப்புறது
சந்து கெடச்சா மூத்திரம் போறது
கொஞ்சம் நேரம் நடமாட்டம் இல்லான அங்கயே பேணு வைக்கறது
இதெல்லாம் மருத்துவமனை சுத்தம் பண்ணிட்டு தான் இருக்கு
உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க
அரசு மருத்துவமனைல இதுவரை உங்க பங்கா என்ன சுத்தம் பண்ணி இருக்கீங்க
அதிகமா வேணாங்க எச்சிய ஒழுங்கான இடத்தில துப்பி இருக்கீங்களா
இல்ல கக்கூஸ்ல தண்ணி ஊத்தி இருக்கீங்கள
மொதல்ல போனவன் தண்ணி ஊத்தலன அடுத்து வரவனுக்கு அக்கற இல்ல
அப்புறம் எப்படி பாஸ் நாம எல்லாம் பேசுறோம்
தனியார் மருத்துவ மனைக்கு போன மட்டும்
நாம கடைபிடிக்கிற சுத்தம் சுகாதாரம் அப்புறம் மயிறு மட்ட எல்லாம்
ஏன் அரசு மருத்துவமனைல கடைபிடிக்கிறது இல்ல
அங்க அப்பாயின்ட்மென்ட் வாங்கி போறீங்க இங்க சரியான நேரத்துக்கு வர மாட்டீங்க
//ஒரே ஊசியை பத்து அல்லது பதினைந்து பேருக்கு போடுகிறார்//
//10 ரூபாய் கொடுத்தல் தான் அவர் வாங்கி வந்த ஊசியை போடுவார்//
1990 கு பொறகு ஒரே ஊசியை சுத்த படுத்தி போடுவது இல்லை
சுத்த பொய்
நீங்கள் சரியாக ஊசி போடும் நபரிடம் சென்றால் ஒன்று எங்கள் ஊசியை பயன்படுத்துவோம் அல்லது நீங்கள் கொடுக்கும் ஊசியை போடுவோம்
வார்டு பாய், சானிடரி வோர்க்கர் கிட்ட போய் ஊசி போட்ட இந்த நிலை தான்
//கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் 6ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இந்த பணத்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர்தான் கர்ப்பிணி பெண்களுக்கு வாங்கிக் கொடுக்கிறார். அந்த பணத்தில் 1000 ரூபாய் தமக்கு தந்தே தீர வேண்டும் இல்லை என்றால் 6ஆயிரம் ரூபாய் வாங்கித் தரமாட்டேன்//
அந்த பணி முதலில் செவிலிய உதவியாளரிடம் (ANM) இருந்தது அங்கு இது போன்ற குற்றசாட்டு வரவே இப்போது செவிலியர்கள் மற்றும் ஆற்றுனர்கள் எனப்படும் கவுன்சிலர்கள் கவனிக்கிறார்கள்
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்ன பண்ண முடியும்ன்னு அவனுகளுக்கு தெனாவெட்டு...//
தேனவட்டுலாம் இல்ல பாஸ்
அஞ்சி பேருக்கு ஒருத்தர் இருக்க வேண்டிய இடத்துல ஐநூறு பேருக்கு ஒருத்தர் இருந்த இப்படி தான் போகும்
ப.செல்வக்குமார் said...
//அந்த கொடுமை சொல்லி மாளாதுங்க. நானும் கூட ஒரு தடவை போயிருக்கேன். அப்ப எங்க ஊர்ல சிக்கன் குனியா பரவிட்டு இருந்தது. அதனால அரசு மருத்துவ மாநில போய் ஊசி போட்டாதான் சீக்கிரம் குணமாகும் அப்படின்னு எங்க ஊர்ல சொன்னாங்க. ஆனா அங்க போனாத்தான் தெரியுது எவ்ளோ கொடுமைகள் நடக்குது அப்படின்னு. நான் 11 மணிக்கு போனேன். இப்ப எதுக்கு வந்தீங்க.? 10 .30 இக்கு முன்னாடி வரணும் அப்படின்னு அந்த டாக்டர் சொன்னார்.//
அய்யா செல்வகுமரு கவருமண்டு ஆஸ்பத்திரி தானே எப்ப போனாலும் எவனோ ஒரு மடையன் கவனிக்க போறன்னு போன இது தான் கதி
காலைல 7 மணிக்கு ஆஸ்பத்திரி தெறந்து 10.30 மணி வரை முத்த மருத்துவர்கள் வெளி நோயாளிபிரிவு என்ற பணி, 10.30 டு 1 கு மேல உள்நோயாளிய பாக்கணும்
நீங்கலே சொல்லுங்க ஒரு நேர்காணலுக்கு உங்கள வர சொல்லி ஒரு நேரம் சொன்ன உங்க இஷ்டத்துக்கு ஒரு நேரத்துக்கு போவிங்களா
tnhealth.org ல citizen charter la - op time என்ன ip time என்ன னு இருக்கு இணைய வசதி இருக்கற நீங்க பாக்கலாம் இல்லையா?
//சௌந்தர் said...
நானும் இந்த அரசு மருத்துவமனையில் இருந்து பார்த்து இருக்கிறேன் 5 ரூபாய் கேட்டு பிச்சை எடுப்பார்கள்//
பிச்சை எடுக்கற அளவுக்கு அரசு மருத்துவமனை வந்துடிசீங்களா
ஆமங்க சுகாதார துறைக்கு செலவு பண்ண அரசுக்கு நிதி இல்ல ஆனா தமிழ் வளர்ச்சி மாநாடு னு சொல்லி புகழாரம் சூட்டுவாங்க
அத நாமளும் பள்ளிளிச்சி பாப்போம், பத்திரிக்கை துறை முதல் பதிவர் வரை தமிழ் செம்மொழி மாநாடுனு கொண்டாடுவோம் அதெல்லாம் என்ன அரசாட்சி செய்றவரு சொந்த காச
இல்ல நாம யாராவது ஏன் இத இப்படி பண்றோம்னு கேட்டமா இல்ல?
பின்ன மருத்துவமனை மணக்குமா?
//நான் செல்ல வேண்டிய பகுதிக்கு சில வார்டுகள் தாண்டி போக வேண்டியிருந்தது. ஒரே நாற்றம். ஒழுங்காக பராமரிக்கப்படவே இல்லை. கசாமுசாவென நோயாளிகளும் அவர்களின் பொருட்களும் ஆங்காங்கே இருந்தது//
அஞ்சி பேருக்கு ஒருத்தர் இருக்க வேண்டிய இடத்துல ஐநூறு பேருக்கு ஒருத்தர் இருந்த இப்படி தான் போகும்
பொதுவாக சொல்ல வேண்டும் எனில் போது மருத்துவமனைகள், மருத்துவமனை ஊழியரால் மட்டுமே பராமரிக்க வேண்டியது அன்று, போது மக்களும் தமது கடைமையை செய்ய வேண்டும்
தனியார் மருத்துவமனை போல பொது மருத்துவமனை வரவேண்டுமானால் பொது மக்கள் ஒத்துழைப்பும் அவசியம்
@உமா பதி
உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
//எல்லோரும் வந்து கமெண்ட்ஸ் எல்லாம் டெலிட் பண்ணுங்க நானும் டெலிட் பண்றேன் //
ஏனப்பா உனக்கு இந்த கொலை வெறி
@சிவா
உங்கள் வருகைக்கு நன்றி
@அருண் பிரசாத்
//அதை ரப்பரால அழிச்சிடுங்க. இப்போ நானும் கமெண்ட் போடுறேன்//
ஹ........ ஹா..........ஹையோ .......ஐயோ
@எஸ் .கே
உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி
@ terror
//சீரியஸ் போஸ்ட் மச்சி... அதன் உன்ன கலாய்ச்சேன்..இப்போ கவனி.... ரஷ்ய புரட்சி தலமை தாங்கி நடத்திய வெறும்பய வாழ்க//
வெறும்பய உங்கள் மனசு இப்பொழுது சமதானமாக ஆகிவிட்டதா
@balaji
நன்றி உங்கள் ஒட்டு கிடைத்ததற்கு
அந்த கொடுமையில் சிக்கிய மக்களில் நானும் ஒருத்தி என்பதில் பெருமைக் கொள்கிறேன்... நம்மால் ஒன்றும் செய்யமுடியாத அவல நிலை இன்னும் இருந்துக்கொண்டுதானே இருக்கிறது...
அதிகம் கமெண்ட் போட்ட அன்புள்ள உமாபதிக்கு... நீங்களும் மருத்துவமனையில் பணிபுரிவதால் அதனுடைய நிறைகள் மட்டுமே உங்கள் கண்ணுக்கு படுகிறது... வெளியில் வது ஒரு சக மனிதனாய் நின்று பாருங்கள்.. அப்போது தெரியும் மருத்துவமனைகளின் நல்லது கேட்டது எது என்றும்.. ஏழை பணக்காரர்களின் வித்தியாசம் என்ன என்பதும்...
@@@@உமாபதி அரசு மருத்துமனையில் எதை செய்ய வேண்டும் என்றாலும் பணம் தர வேண்டும் ஒருவர் விபத்தில் இறந்து விட்டால்,அவரது உடலை வாங்க வரும் உறவினர்களிடம் பணம் கேட்க்கும் அரசு உழியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
// வெறும்பய said...
அதிகம் கமெண்ட் போட்ட அன்புள்ள உமாபதிக்கு... நீங்களும் மருத்துவமனையில் பணிபுரிவதால் அதனுடைய நிறைகள் மட்டுமே உங்கள் கண்ணுக்கு படுகிறது... வெளியில் வது ஒரு சக மனிதனாய் நின்று பாருங்கள்.. அப்போது தெரியும் மருத்துவமனைகளின் நல்லது கேட்டது எது என்றும்.. ஏழை பணக்காரர்களின் வித்தியாசம் என்ன என்பதும்//
அய்யா நானும் எங்கப்பாவுக்கு அடிபட்ட போது அரசு மருத்துவமனைல ஒரு நாள் பூர அலைஞ்சு எந்த வார்டு னு தெரியாம வீட்டுக்கு பூர நேரத்துல என் சித்தப்பா வந்து இந்த வார்டுனு சொல்லி கூட்டி போனாரு அப்ப எனக்கும் இந்த அளவு ஆதங்கம் இருந்தது தான், ஆனா அங்க பணியில சேர்ந்த போது இருக்குற நடைமுறை சிக்கல் என்னனு தெரிஞ்சது எனக்கு இருந்த அறியாமை என்னனு புரிஞ்சது
வெளிய இருந்து பார்த்தா கண்டிப்பா வெளங்காது உள்ள வந்து பாருங்க புரியும்
//சௌந்தர் said...
உமாபதி அரசு மருத்துமனையில் எதை செய்ய வேண்டும் என்றாலும் பணம் தர வேண்டும் ஒருவர் விபத்தில் இறந்து விட்டால்,அவரது உடலை வாங்க வரும் உறவினர்களிடம் பணம் கேட்க்கும் அரசு உழியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்//
இந்த நிலைமையை எண்ணி நானும் வருந்தி இருக்கிறேன்
என் பார்வைக்கு வரும் அனைத்தையும் தட்டி கேட்டு இருக்கிறேன்
நான் ஒரு இரண்டாம் நிலை ஊழியன் எனக்கு மேல் பலருக்கு இதில் தொடர்பு உண்டு
//உமாபதி said...//
நீங்க சொன்னதில் ஒரு விஷயம் நிச்சயம் மறுக்கப்பட முடியாதது.
அது அரசு மருத்துவமனைகள் பராமரிக்கப்படுவதற்கு பணியாளர்கள் எவ்வளவு ஒத்துழைக்கணுமோ அதே போல் அங்கு வரும் நோயாளிகளும் அவர்களை சார்ந்த பொது மக்களும் ஒத்துழைக்கனும். கொஞ்சம் நிர்வாகமும் எல்லாத்தையும் கட்டுப்பாட்டில் வைக்க அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும்.
உண்மைதான்..
நிச்சயம் இந்த நிலை
மாற வேண்டும்..!!
அதே மாதிரி தான் ரேஷன் கடையில்
ஏழை மக்கள் கால் கடுக்க நின்று
பொருட்கள் வாங்கும் நிலையும்..
இதிலெல்லாம் மாற்றம் கொண்டு வர
அரசு சிந்தனையாவது செய்யுமா..?????
ரொம்ப அவலாமாதான் இருக்கு..தம்பி... இன்னும் டெக்னாலஜியும், நாகரீகமும் வளர்ச்சியடைந்து இருந்தாலும் சுகாதரமும் பராமரிப்பும் கேள்விக்குறியாதன் இருக்கு....!
விடியணும் தம்பி எல்லாமே...!
@pushpa
முதல் வருகைக்கு நன்றி
உங்க கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
@dheva annan
நன்றி
@venkat
நன்றி
Post a Comment