Thursday, August 26, 2010

இது நியாயமா ?

புதுசா ஏதாவது சொல்லனும்னு தோணுச்சு(டேய் யாருடா அது கல்லு எரியறது)வாங்க terror,வெங்கட்,அருண் ,ரமேஷ்,செல்வகுமார் ,சௌந்தர் மற்றும் ஜெ அண்ணன் ஆடு பலிபீடத்தில்  தலையை வைச்சாச்சு வந்து வெட்டிட்டு போங்க ...... 

நமது நாட்டில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் M.pகளுக்கு சம்பளம் போத வில்லை என்று பெரிய அமளி நடந்தது .அதாவது அவர்களுக்கு 16000 ருபாய் போதவில்லை அதை 80000 ரூபாயாக வேண்டும் என்று அமளி .உடனே நமது ஆளும் அரசு அவர்களுக்கு 50000 ருபாய் அதிகரித்து கொடுத்திருக்குது .நமது நாட்டில் இது ஒன்றும் புதுதிது இல்லை .அரசு உழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐந்து ஆண்டு திட்டம் என்று கூறி சம்பளம் அதிகரிக்கபடுகிறது .இது நடைமுறைல் நாம் பார்த்துவருகிறோம்.

என்னுடைய கேள்வி என்வென்றால் நாம் தேர்ந்தெடுக்கும் M .p களுக்கு இந்த 16000 ருபாய் போதெவில்லைஎன்றால், இந்த நாட்டில் ரூ.16,000 ஒரு குடும்பம் பிழைப்பதற்குப் போதுமானதல்ல என்றல்லவா பொருள்?.

இது ஒரு புறம் இருக்க இவர்களுக்கு வருடத்திற்கு விமானதில் பயணம் செய்ய இலவசம்,ஒருநாள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள ரூ.1000,அதுபோக ரூ .5000.அலுவலக பராமரிப்பு க்கு ,இலவச தொலைபேசி அழைப்புகள் ,தன்னுடன் இலவசமாக உதவியாளர் அல்லது மனைவியை அழைத்து செல்லலாம் எதற்காக இத்தனை சலுகைகள் ? நமது நாட்டின் பெரும்பான்மை M.p.கள் இந்த ஊதியத்தை நம்பித்தான் வாழ்ந்து வருகிறார்களா?


எத்தனை கோடி செலவு செய்து வெற்றி பெற்று வந்துள்ளார்கள் இவர்கள்? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள்,வாக்காளர்களை மகிழ்விக்க எத்தனை கோடிகளை அள்ளி வீசினார்கள் என்பது மக்களுக்கே தெரியும் .
நமது நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 37விழுக்காட்டினர்(நானும் விஜயகாந்த் மாதிரி சொல்ல நினைத்தேன் முடியல ) வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என்று அரசு அமைத்த டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர் இல்லை மக்கா ) குழு கூறியுள்ளது. அதாவது நாள் ஒன்றிற்கு ஒரு வேளை உணவிற்கு திண்டாடுபவர்கள்!.இப்படி இருக்கும் மக்கள் (வாக்காளர்கள் ).ஊடு போட்டு தான் இவரகள் நாடாளுமன்றத்திற்கு செனறார்கள் .ஆனால இவர்கள் நமது M.pகள் தங்களைத் தேர்ந்தேடுத்தனுப்பிய அவர்களின் வாழ்வைப் பற்றிச் சிந்திக்காமல், தங்களின் வசதியை அரசு செலவில் பெருக்கிக்கொள்ளத்தான் இந்தப் பாடு படுகிறார்கள்.

நம் அரசு M.pகளுக்கு சமபளத்தை அதிகரித்து கொடுப்பதால் ஏற்படும் செலவினால் ஒன்றும் மூழ்கிவிடப் போவதில்லை .ஆனால், மக்கள் பிரதிநிதிகள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் ஒரு பெரும் பிரிவினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதைப் பற்றி சற்றும் பொருட்படுத்தாமல்,ஊதியஉயர்வு கேட்பது நியாயமுமல்ல, ஜனநாயகமுமல்ல.


குறிப்பு:

சில புள்ளி விவரங்கள் உடகங்கள் வாயிலாக தேடி எடுக்கபட்டது .ஏனென்றால் விஜயகாந்த் என் பதிவை பார்பதாக கேள்விப்பட்டேன் அதனால் புள்ளிவிவரங்கள் தேட வேண்டியதாக போய்டுச்சி மத்தபடி இது என் சொந்த கருத்துகளே

37 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the 1st

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வருங்கால நாகர்கோவில் ஜனாதிபதி பாபு வாழ்க.

harini said...

//me the 1st //
வாங்கோ... வாங்கோ...

harini said...

//வருங்கால நாகர்கோவில் ஜனாதிபதி பாபு வாழ்க//
பயபுள்ள என்னை வம்புல மாட்டி உடறுதுல குறியா இருக்கான்

எஸ்.கே said...

தங்கள் சமூக அக்கறை சார்ந்த பதிவு நன்றாக உள்ளது!

harini said...

@எஸ்.கே
ரொம்ப நன்றி !!!தாங்கள் புதியவரோ

எஸ்.கே said...

ஆமாம் பதிவுலகம் வந்து கொஞ்ச நாள்தான் ஆகிறது!

அருண் பிரசாத் said...

யோவ்.... Background கலரையும், Font கலரையும் மாத்துய்யா... கண்ணு அவிஞ்சி போகுது. மாத்தினாதான் வந்து கும்முவேண்

harini said...

//யோவ்.... Background கலரையும், Font கலரையும் மாத்துய்யா... கண்ணு அவிஞ்சி போகுது. மாத்தினாதான் வந்து கும்முவேண்//
அருண் கோபபடாதீங்க கொஞ்சம் கூல்

harini said...

கலரா முக்கியம் மேட்டர் தான் முக்கியம் நீங்க வெட்டுங்க அப்பு

அருண் பிரசாத் said...

மேட்டர் தெரியாத அளவுக்கு கண் அவிஞ்சி போச்சுப்பா, ஒரே ரத்த கலர், இது மஞ்சள் வேற எழுத்து

harini said...

இப்ப கண்ணுக்கு நல்ல இருக்க
அனல்லும் நீங்க ரொம்ப மோசம் சிப்பு போலிஸ் மட்டும் கலர் கலரா கொடுக்றார் அவரை ஒன்றும் சொல்வதில்லை
போலிஸ்ன பயமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இப்ப கண்ணுக்கு நல்ல இருக்க
அனல்லும் நீங்க ரொம்ப மோசம் சிப்பு போலிஸ் மட்டும் கலர் கலரா கொடுக்றார் அவரை ஒன்றும் சொல்வதில்லை
போலிஸ்ன பயமா///

உன்னை சொன்னா அதுக்கு பதில் சொல்லு. என்னை ஏன் வம்புக்கு இழுக்குற?

harini said...

//உன்னை சொன்னா அதுக்கு பதில் சொல்லு. என்னை ஏன் வம்புக்கு இழுக்குற?
ரெண்டு பேரும் சேர்ந்து வெட்டுங்க

TERROR-PANDIYAN(VAS) said...

புது புள்ளயா இருந்தாலூம் நல்ல விஷயாம் சொல்லி இருக்க மக்கா... சமுக அக்கறை நகைசுவையோட வெளிபடுத்தி இருக்கிங்க... வாழ்த்துகள்.

Jey said...

பாவம் ஒழச்சி ஒழச்சி ஓடா தெய்ஞ்சி போனவங்க கூடக் கொஞ்சம் சம்பளம் கேட்டா குடுங்கப்பா இதுக்கும் எதிர்ப்பா......, கஷ்டப் படுரவங்கள பாத்து மனசு இறங்குங்க ராசா....

harini said...

@TERROR-PANDIYAN(VAS)
மக்கா உன் ஸ்டைல்ல நாலு கும்மு கும்மு அப்ப தான் நல்ல இருக்கும்

harini said...

//பாவம் ஒழச்சி ஒழச்சி ஓடா தெய்ஞ்சி போனவங்க கூடக் கொஞ்சம் சம்பளம் கேட்டா குடுங்கப்பா இதுக்கும் எதிர்ப்பா......, கஷ்டப் படுரவங்கள பாத்து மனசு இறங்குங்க ராசா.... //

வாங்க ஜெ அண்ணன் ஏன் லேட்?

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆடு பலிபீடத்தில் தலையை வைச்சாச்சு வந்து வெட்டிட்டு போங்க ...... //

நாங்க சைவம்... அட கைல இருக்கது ரத்தம் இல்லபா... குங்கூமம்.. இப்போதான் என் ப்ளாக் கழுவி பொட்டு வச்சிட்டு வரேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

//இது ஒரு புறம் இருக்க இவர்களுக்கு வருடத்திற்கு விமானதில் பயணம் செய்ய இலவசம்,ஒருநாள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள ரூ.1000,அதுபோக ரூ .5000.அலுவலக பராமரிப்பு க்கு ,இலவச தொலைபேசி அழைப்புகள் ,தன்னுடன் இலவசமாக உதவியாளர் அல்லது மனைவியை அழைத்து செல்லலாம் //

MP ஆக என்ன செய்யனும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தன்னுடன் இலவசமாக உதவியாளர் அல்லது மனைவியை அழைத்து செல்லலாம் //

MP ஆக என்ன செய்யனும்...//

முதல்ல கல்யாணம் பண்ணனும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தன்னுடன் இலவசமாக உதவியாளர் அல்லது மனைவியை அழைத்து செல்லலாம்//

MP பொம்பளையா இருந்தாலுமா?

TERROR-PANDIYAN(VAS) said...

//நமது நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 37விழுக்காட்டினர்(//

நம்ம நாட்டு மொத்த மக்கள் தொகை எவ்வலோ சொல்லு... அதுல 37% எவ்வலோ கணக்கு போட்டு சொல்லிட்டு வீட்டுக்கு போ...

harini said...

//MP ஆக என்ன செய்யனும்...
நாலு ஆட வெட்டி கொலைகாரன் ஆகனும்

உனக்கு எல்லா தகுதியும் இருக்கு மக்கா

ரமேஷ் தான் பவம் இன்னும் கல்யாணம் ஆகல

harini said...

@TERROR-PANDIYAN(VAS)

கணக்கு அப்படி என்ன என்ன எந்த teachers எல்லாம் ஏமாத்திபுட்டங்க maths அப்படி ஒரு பாடம் உண்டு

TERROR-PANDIYAN(VAS) said...

//டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர் இல்லை மக்கா )//

ஏலேய்!!! யார பாத்து கிரிக்கெட் வீரர் இல்லை சொன்ன?? எடுங்கடா அறுவா...

TERROR-PANDIYAN(VAS) said...

//சில புள்ளி விவரங்கள் உடகங்கள் வாயிலாக தேடி எடுக்கபட்டது .ஏனென்றால் விஜயகாந்த் என் பதிவை பார்பதாக கேள்விப்பட்டேன் அதனால் புள்ளிவிவரங்கள் தேட வேண்டியதாக போய்டுச்சி மத்தபடி இது என் சொந்த கருத்துகளே//

அதை எல்லாம் விடு... உன் பதிவுல எத்தனை இடதுல புல்லி இருக்கு என்னி சொல்லு...

பனங்காட்டு நரி said...

பாஸ் ,
சூப்பர் பதிவு நான் நிறைய லிங்க் தேடி padithukondirukiraen இதை பத்தி ..,சீக்கிரம் அவுங்க முகத்திரையை கிழிப்போம் ..

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
அட நரி நக்கல் ஆடிக்காம போய் இருக்கு... திருந்தி இருப்பானே?? ச்ச இருக்காது...

harini said...

நரி நல்ல புள்ளயா மாறிடுச்சு

harini said...

//சூப்பர் பதிவு நான் நிறைய லிங்க் தேடி padithukondirukiraen இதை பத்தி ..,சீக்கிரம் அவுங்க முகத்திரையை கிழிப்போம் //
ரொம்ப நன்றி நீங்கள் வாருங்கள் நிறைய பேசலாம்

ரெட்டைச்சுழி said...

அலோ...பிரண்ஸ்....டெர்ரர் தாம்லே இந்த வீடு அத்ரஸ் சொல்லியனுப்புதான்...,என்னயும் ஆட்டயிலெ சேத்துக்கோங்கலே.....

harini said...

@ரெட்டைச்சுழி
வா மக்க வா ...........

ரெட்டைச்சுழி said...

//harini said...
@ரெட்டைச்சுழி
வா மக்க வா ...........//

எலேய் டெர்ரரு பொம்பள பூல வீட்டு விலாசம் குடுத்து என்னை மாட்டிவிடுருயாலே....ங்கொய்யாலே..

ரெட்டைச்சுழி said...

//harini said...//

அம்மா தாயீ..., தப்பா தகல் குடுத்துட்டாபுவ தாயீ...கோவப்படாதம்மா...போய் வரேன்.

harini said...

எலேய் ரெட்ட.. உன்ன எங்க எல்லம் தேடரது... இப்போ எனக்கு அலுப்பா இருக்கு... போய்ட்டு ஒரு 1 மணி நேரத்துல வா... நேத்துல இருந்து ஒரே ரத்த பசி....

TERROR-PANDIYAN(VAS) said...

@ரெட்ட
//எலேய் டெர்ரரு பொம்பள பூல வீட்டு விலாசம் குடுத்து என்னை மாட்டிவிடுருயாலே....ங்கொய்யாலே.. //

எலேய்!! ஓடத வா... அது அவரு பொண்னு பெயர்லே... இதும் நம்ம வீடுதான்...