Tuesday, December 14, 2010

பல்போ பல்பு

                                                           

சண்டே என் பொண்ணு வீட்டுல இருந்தாள் (பெரிய கண்டுபிடிப்பு சண்டேன்னா. லீவ் தான் குழந்தைங்க வீட்டுல தான் இருப்பாங்க ).என் வீட்டுக்கு கெஸ்ட் வந்திருந்தாங்க .எல்லோரும் மத்தியானம் சாப்ட்டுட்டு போய்ட்டாங்க .என் பொண்ணு வீட்டுல இருந்த செம்பருத்தி செடியில் இருந்து பூ எடுத்து வைச்சு சில படங்கள் மேல சொருகி வைச்சிருந்தா .திடிர்னு ரெண்டு பேப்பரை சின்ன உருண்டையா உருட்டி தன்னோட தலைய மூணு தடவை சுத்தினாள் .பின்பு மூன்று முறை அதன் மீது துப்பினாள் பின்னர் அதை சாமிக்கு தீபாரதானை காண்பிப்பது போன்று காட்டினாள்


என் பொண்ணை பார்த்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் ..........

நான் : என்ன மக்கா செய்கிற ...........

என் மகள்:நீங்களும் அம்மாவும் சாமி கும்பிடும் பொழுது அந்த டப்பால இருந்து சூடம் எடுத்து என்ன செய்வீங்களோ அது தான் செய்யுறேன் ....

நான் :அப்பா சாமி கும்பிடும் போது சூடம் எடுத்து தலைய எப்ப மக்கா சுத்தினேன் அதுவும் நீ துப்புர. சாமிக்கு துப்பினதை யாராவது கொளுத்துவார்களா ?என்றேன்...........

என் மகள:(என் வீட்டமாவை பார்த்து)அம்மா நைட் சூடம் எடுத்து என் தலைய சுத்தி ....துப்ப சொல்லி தானே கொளுத்துவாங்க .......

நான் :  பல்பு!!!!!!!!!

இருந்தாலும் நான் புத்திசாலி ஆயீற்றே (டாய் எவண்டா அங்க சிரிக்கிறது)........திரும்பவும் அது அதுக்கு இல்ல மக்கா அது உனக்கு திருஷ்ட்டி விழுந்திர கூடாதுன்னு அம்மா அப்படி செய்வாங்க .....சாமிக்கு அப்படி செய்ய   கூடாது என்ன மக்கா .............

என் மகள்:சரிப்பா ..........திருஷ்ட்டின்னா என்னப்பா?

நான் :    பல்பு !!!!!!!!!!!

என் மனைவி:அது வந்து இன்னைக்கு வீட்டுக்கு கெஸ்ட் வந்தாங்க இல்ல....உன்னை பார்த்து முடி நல்ல இருக்கு ........நீ நல்ல பேசுற இப்படி கண்ணு போட்டுருவாங்க .....அதை தான் திருஷ்ட்டின்னு சொல்லுவாங்க

என் மகள்:கண்ணு எப்படி அம்மா போடா முடியும் .....அது தான் கீழ விழாதே.........

நானும் என் மனைவியும்:    பல்பு !!!!!!!!!!!

ஒரு நாள் வீட்டுல இருந்ததுக்கு எத்தனை பல்பு வாங்குறது.............. முடியாது சாமீ ...............

52 comments:

சௌந்தர் said...

வடை எனக்கே

பெசொவி said...

tea enakku!

பெசொவி said...

புள்ளைங்க கிட்ட எல்லாம் பல்பு வாங்கிகிட்டு, வெக்கமா இல்லை? (இத வெளிய சொன்னதைச் சொன்னேன்)

Arun Prasath said...

vadai poachae

சௌந்தர் said...

இந்த அப்பாக்களுக்கு எல்லாம் பல்பு வாங்குறதே வேளை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சிறுசுகளை சமாளிப்பது என்ன , அவ்வளவு ஈஸியா பாஸ்?

ஹா.ஹா..

சௌந்தர் said...

Arun Prasath said...
vadai poachae///

ஹி ஹி ஹி ஹி ஹி

பெசொவி said...

//இருந்தாலும் நான் புத்திசாலி ஆயீற்றே (டாய் எவண்டா அங்க சிரிக்கிறது)//

எங்களுக்கு வேலை தராமல் தனன்னையே போட்டுக் கொள்ளும் இந்த இம்சையைக் கண்டிக்கிறேன்!

dheva said...

போஸ்ட் படிச்சுட்டு இன்னும் நிறைய பேரு பல்பு வாங்க போறாங்க.......ஹா.ஹா...ஹா...!

தம்பி குட்டிச் செல்லத்துக்கு எனது ப்ரிய முத்தங்கள்!

எஸ்.கே said...

நிறைய பல்பு! தாமஸ் ஆல்வா எடிசன் உங்க பொண்ணு!

Madhavan Srinivasagopalan said...

இன்னும் அஞ்சாறு கமெண்டு போட்டா வலைச்சரத்துல அம்பதாவது கேமேண்டு 'வடை' வைடிங்

சுபத்ரா said...

Ha Ha Ha... மொத்தம் எத்தனை வாட்ஸ் பல்ப் :)

TERROR-PANDIYAN(VAS) said...

இண்டலி சப்மிட் பண்ணவும்... உங்க மானம் ஊர் பூர போகட்டும்...

Arun Prasath said...

(டாய் எவண்டா அங்க சிரிக்கிறது)//

நான் தான்

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said... 13
இண்டலி சப்மிட் பண்ணவும்... உங்க மானம் ஊர் பூர போகட்டும்.///

சப்மிட் பண்ண முடியலை மக்கா

வைகை said...

விடுங்க பாஸ் நீங்க! இந்த புள்ளகளே இப்பிடித்தான்!!!

Madhavan Srinivasagopalan said...

//

சப்மிட் பண்ண முடியலை மக்கா //

Shall I help ?

மாணவன் said...

அய்யயோ அவங்க கேட்குற கேள்விக்கு நம்மால பதில் சொல்லவே முடியாது...

சூப்பர் தொடருங்கள்.....

//என் பொண்ணை பார்த்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் ..........//

எப்படி வடிவேலு மாதிரியா....

ஹிஹிஹி....

sathishsangkavi.blogspot.com said...

:)

Madhavan Srinivasagopalan said...

ஏதோ. நம்மளால முடிஞ்சது.. இன்ட்லில ஒட்டு போட்டுட்டேன்..

மாணவன் said...

20 ஆவது பஜ்ஜி போச்சே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

online..

மாணவன் said...

//Blogger வெறும்பய said...

online..//

வாங்க அண்ணே...

ஏதேனும் சிறப்பு செய்திகள்...

செல்வா said...

//என் மகள்:சரிப்பா ..........திருஷ்ட்டின்னா என்னப்பா?

நான் : பல்பு !!!!!!!!!!!/

திருஸ்டினா பல்பா ..? என்னே அறிய கண்டுபிடிப்பு ..?!

NaSo said...

அட விடுங்க பாபு. நமக்கு இது ஒன்னும் புதுசு இல்லயே??

NaSo said...

சரி சரி விடுங்க. டியூப்லைட்டா....... இருந்த உங்களை உங்க பொண்ணு பல்பா........ மாத்திட்டான்னு சந்தோஷப் படுங்க..

அருண் பிரசாத் said...

தினமும் பல்பு வாங்கறீயே மக்கா... பல்பு கடை வெச்சிடலாமோ?!

செல்வா said...

//என் மகள்:கண்ணு எப்படி அம்மா போடா முடியும் .....அது தான் கீழ விழாதே.........//

ஹி ஹி ஹி .!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா இந்த பல்புக எத்தன வாட்ஸ்னு சொல்லவே இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த பல்புக ஒயிடா இல்ல யெல்லோவா?

Kousalya Raj said...

பிடிச்ச சாங் கேட்டதில போஸ்டை இன்னும் படிக்க போகல....பாட்டு முடிஞ்சதும் படிக்கிறேன்... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது பிலிப்ஸ் பல்பா, சூரியா பல்பா?

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆமா இந்த பல்புக எத்தன வாட்ஸ்னு சொல்லவே இல்ல//
யோவ் ஒரு குத்து மதிப்பா போட்டுக்க மக்கா .........உங்களுக்கெல்லாம் இந்த நிலைமை வரலை போல இருக்கே

அன்பரசன் said...

இப்பல்லாம் குழந்தைங்கதான் அதிகமா பல்பு குடுக்குறாங்க..
உஷார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// இம்சைஅரசன் பாபு.. said...
//ஹலோ தேவா அண்ணே எங்க ஆளை காணோம் //
யோவ் ஒரு குத்து மதிப்பா போட்டுக்க மக்கா .........உங்களுக்கெல்லாம் இந்த நிலைமை வரலை போல இருக்கே/////

நாங்களே இன்னும் பச்சக் கொழந்தைங்க தானே?

Kousalya Raj said...

சூப்பர்....ஹரிணி ரொம்ப புத்திசாலின்னு தெரியுது, ஆனா இந்த மேட்டருக்கும் நிலா வானம் காற்று மழை பாட்டுக்கும் என்ன சம்பந்தம் ??

பாபு விளக்கவும்...!

(கவிதை புரியலைன்னு இனிமே சொல்வீங்க....??) :))

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல வேளை,பதிவுக்கு பல்புன்னு வெச்சீங்க,டியூப்லைட்னு வைக்கலை,வெச்சிருந்தா எல்லாரும் டியூப்லைட் பாபுன்னு கூப்பிட்டிருப்பாங்க

சி.பி.செந்தில்குமார் said...

paapu பாபு உங்க பிளாக்ல கிளாக் டைம் மாத்துங்க 13 மணீ நேரம் ஸ்லோவா காட்டுது

சி.பி.செந்தில்குமார் said...

ஸ்லோ பிக்கப்போ?

இம்சைஅரசன் பாபு.. said...

//சூப்பர்....ஹரிணி ரொம்ப புத்திசாலின்னு தெரியுது, ஆனா இந்த மேட்டருக்கும் நிலா வானம் காற்று மழை பாட்டுக்கும் என்ன சம்பந்தம் ??

பாபு விளக்கவும்...!

(கவிதை புரியலைன்னு இனிமே சொல்வீங்க....??) :))//

என் குட்டி பொண்ணு என்னை மாதிரி சகோ (சிரிக்க கூடாது .....இங்க வரைக்கும் கேக்குது)......
சாங் எப்பவுமே என் மனதை ப்ரீ யா வைச்சிருக்க உதவும் ........மெலடி சாங் ரொம்ப புடிக்கும் ...............கவிதை யாரவது எழுதினது புடிக்கும் நம்மக்கு எழுத வராது

இம்சைஅரசன் பாபு.. said...

//நாங்களே இன்னும் பச்சக் கொழந்தைங்க தானே//
ஓஹோ அப்பபோ பன்னிகுட்டி நீங்க பச்சை கலர் ல இருப்பீங்களோ .........

வெங்கட் said...

@ அருண்.,

// தினமும் பல்பு வாங்கறீயே மக்கா...
பல்பு கடை வெச்சிடலாமோ?! //

மொரிசியஸ்ல நீங்க வெச்சி
இருக்கிற மாதிரியா..? ஆனா
உங்களுது ரொம்ப பெரிய கடை ஆச்சே..

Chitra said...

she is smart!

இம்சைஅரசன் பாபு.. said...

//நல்ல வேளை,பதிவுக்கு பல்புன்னு வெச்சீங்க,டியூப்லைட்னு வைக்கலை,வெச்சிருந்தா எல்லாரும் டியூப்லைட் பாபுன்னு கூப்பிட்டிருப்பாங்//
எனக்கு இப்படி ஒரு பேரு கிடைக்கனும்னு எதனை நல நினைச்சீங்க மக்கா........

karthikkumar said...

ஒரு நாள் வீட்டுல இருந்ததுக்கு எத்தனை பல்பு வாங்குறது.............. முடியாது சாமீ ...///
கஷ்டம்தான்

karthikkumar said...

பேசாம வாங்குற பல்பைஎல்லாம் வித்துருங்க.

karthikkumar said...

பல்பு ச்சி வடை எனக்கே

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா.. உண்மையில் செம க்யூட்.. :-))

அதானே.. எத்தன தரம் தான் பல்ப் வாங்கறது...?? :D :D

Unknown said...

நீங்களுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said... 13

இண்டலி சப்மிட் பண்ணவும்... உங்க மானம் ஊர் பூர போகட்டும்...
////

யாரடா அவன் பாபுவை பத்தி தப்பா பேசுறது. அவனுக்கு ஏது மானம்...

மங்குனி அமைச்சர் said...

என்ன பண்றது ...... அந்த குழந்தையோட அப்பன் அப்படி . .... ;அதே புத்தி குழந்தைக்கும் வருது

Anonymous said...

பல்பு வாங்குறது தான நம்ம பொழப்பே..