Thursday, October 21, 2010

தீபாவளி வந்தாச்சு ..

                                                  
தீபாவளிக்கு இன்னும் ரெண்டு வாரங்களே உள்ளன எல்லோரும் புத்தாடை வாங்கியாச்சா?. தீபாவளி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் சந்தோசம் .சின்ன வயதில் தீபாவளி கொண்டாடியதை நினைத்து பார்கிறேன் .

                                                          
தீபாவளி ஒரு வாரம் இருக்கும் போதே தீபாவளி பற்றி தான் பேச்சு இருக்கும் அம்மா பலகாரம் எல்லாம் சுட்டு வைப்பார்கள் , பட்டாசு எல்லாம் வாங்கி வைத்து இருப்பாங்க அதை எடுத்து நாங்களும் பட்டாசு வாங்கிட்டோம்ன்னு சும்மா ரெண்டு வெடித்து காட்டுவோம்.காலையில் சர்வ சாதரணமாக 5.30மணிக்கு எழுதிருப்பேன் ஆனால்  தீபாவளி அன்று தூக்கமே வராது என்னோட நண்பர்கள் எழுந்திருக்கும் முன் நான் போய் முதலில் பட்டாசு வெடிக்கணும்னு ஒரு ஆவல் .நாலு மணிக்கே எந்திரிச்சு அம்மா எண்ணெய் தேய்கவா என்று கேட்பது .அம்மா இல்லைடா இன்னும் நேரம் இருக்கிறது என்பார்கள் . கடைசியில் காலையில் குளித்து பட்டாசு வெடிப்போம் அதுவும் சும்மா பந்தா பண்ண மிளகாய் வெடியை கையில் எடுத்து பற்ற வைத்து தூக்கி போடுவோம். நாங்க எல்லாம் யாரு டெரருக்கே டெரர் காட்டுவோம்

அதுவும் இல்லாமல் யார் வீட்டின் முன்பு அதிகமாக பட்டாசு பேப்பர் கிடக்கிறதோ அவர்கள் தான் நிறைய பட்டாசு வாங்கி இருகாங்கன்னு அர்த்தம்.அதனால் பட்டாசு வாங்கும் பொது லக்ஷ்மி அவுட் ,குருவி அவுட் இப்படி பேப்பர் நிறைய சேரும்லா அந்த பட்டாசுகளை வீட்டில் சண்டை போட்டு வாங்குவோம் அப்படி வீட்டு முன்னாடி சேர்ந்து இருக்கும் அந்த பேப்பரை எல்லாம் கொள்ளுதி நைட் 12மணி வரை அட்டகாசம் பண்ணுவோம் இது எல்லாம் 9ஆம் வகுப்பு வரை தான் அதற்கப்புறம் கொஞ்சம் பெரிய பையனாக ஆனவுடன் பட்டாசின் மீது ஆசை தீர்ந்து விடுகிறது

அப்புறம் விதம் விதமாக டிரஸ் எடுக்க வேண்டும் .வீட்டில் அப்பாவிடம் பட்டாசுக்குனு காசு வாங்கிட்டு போய் டிரஸ் வாங்கிட்டு வருவோம் .அப்புறம் அந்த டிரஸை போட்டு கிட்டு நண்பர்கள் வீட்டுக்கு அப்படியே ஒரு ரவுண்டு (எல்லோருக்கும் நாங்க போட்டு இருக்கும் டிரஸ் காட்டுவோம்) அவர்கள் வீட்டில் சுட்டு இருக்கும் பலகாரங்களை சாபிட்டுக்கிட்டு வெளியே வருவோம்  .

முன்பெல்லாம் எறி  பட்டாசு உண்டு இப்போது அது தடை செய்யப்பட்டு   உள்ளது அதை கொஞ்சம் பாக்கெட்ல  போட்டு கிட்டு நண்பர்கள் புடை சூழ அவங்க அவங்க பிடிச்ச தெரு வழிய போவோம்.அங்கு போய்  அதை சுவரில் எறிவோம் அப்ப தானே அவங்க வெளிய வருவாங்க (புரிஞ்சுகங்கப்பா ).இது 12 ஆம் வகுப்பு வரை .

 அதற்கப்புறம் காலேஜ் .பிரெண்ட்ஸ் கிட்ட அப்படியே ஒரு பொய் சொல்வோம் மக்கா நேத்து நைட் செம்ம பார்ட்டி சரியான டைட் (எல்லாம் ஒரு பில்டப் தான்).அதுக்கப்புறம் சின்ன பசங்க பட்டாசு வெடிக்கிறத    கேலி செய்ஞ்சு கிட்டு அவன் பத்தியை கிட்டே கொண்டு போகும் போது டமார்ன்னு சத்தம் போடுறது .அவன் அழுதுகிட்டே அம்மா கிட்ட போய் சொல்லுவான் .அவன் அம்மா வெளியே வந்து மக்கா புள்ளைய பயமுறுத்தாதே, தம்பி மக்கா என்பார்கள் சரி சித்தின்னு சொல்லிக்கிட்டு அப்படியே நண்பர்கள் புடை சூழ நம்ம தலைவர் நடிச்ச படத்த பார்க்க போறது மத்தியானம் வீட்டுக்கு வந்து பிரியாணியை ஒரு புடி ..ஹையோ ஐயோ தீபாவளின்ன அப்படி ஜாலியா இருக்கும் .ஊரில் தீபாவளி விழா கொண்டாடுவோம் விளையாட்டு போட்டி ,பாட்டு போட்டி இப்படி பலவிதமாக சந்தோஷ திருவிழா .இரவு திரைகட்டி படம் போடுவாங்க ஊரே வந்து படம் பார்க்கும் .

                                                  
ஒரு தடவை நான் 12வகுப்பு படிக்கும் போது ஒரு பெரிய ஆள் நல்ல தண்ணி அடிச்சிட்டு வந்தாரு  என் நண்பன்  ஒருத்தன் அனு குண்டு ஒன்னு கொளுத்தினான் அது சரியா வெடிக்கலா உடனே அதை காலால்  எட்டி மிதித்து தள்ளி விட்டான்.அந்த ஆள் அதை எடுத்து தன பேண்ட் பாக்கெட்ல போட்டுட்டான் . என் நண்பனும் அடுத்த குண்டை கொளுத்தினான் ஆனால் ரெண்டு சவுண்ட் கேட்டது .திரும்பி பார்த்தா அந்த ஆள் ஆ ........ஓஒ .....ன்னு சத்தம் போடுறாரு .பாக்கெட்ல இருந்த குண்டு  வெடிச்சிட்டு கற்பனை பண்ணி  பாருங்க. இப்ப நினச்சாலும் நெஞ்சு பதறது பிறகு எல்லோரும் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி நோக்கி ஓடினார்கள் . விளையாட்டு விபரீதம் ஆகிவிட்டது ....

இப்ப என்ன எல்லோரும் தீபாவளி கொண்டாடுறாங்க .எல்லாம் குளிச்சிட்டு பேருக்கு ரெண்டு பட்டாசு விட்டுகிட்டு தொலைகட்சி பெட்டி முன்பு இருகாங்க.அப்போ இருந்த தீபாவளி வேற இப்ப பசங்க கொண்டாடுற தீபாவளி வேற ............

சரி எல்லோருக்கும் தீபாவளி நல்  வாழ்த்துக்கள்.

குட்டீஸ் இருக்கும் வீட்டில் அப்பா மார்கள் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் பொழுது பக்கத்தில் இருந்து பார்த்து கொள்ளவும் .அத விட்டு போட்டு யாராவது தொலைகாட்சில பட்டிமன்றம் பார்த்தேன் ,திரிஷா சிரிச்சான்னு சொல்லாம குழந்தைகளுடன் சந்தோசமாக தீபாவளி கொண்டாடுங்கள் .. 

37 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the 1st

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் பதிவை காப்பி அடித்து பட்டி டிங்கரிங் செய்த பாபு ஒழிக


http://sirippupolice.blogspot.com/2009/07/blog-post.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

bonus kodu

இம்சைஅரசன் பாபு.. said...

போனஸ் யாருக்கு ..........சரி மீ தி பிரஸ்ட்.....சொன்னே இல்ல சரி போனஸ் தரேன் வடைய எடுத்துக்கோ ....அது தன உனக்கு போனஸ் .ஊசின வடைடா பார்த்து கடி நூலு வாய்ல சிக்கி கிட போகுது

இம்சைஅரசன் பாபு.. said...

//என் பதிவை காப்பி அடித்து //
எப்பொழுதுமே எனக்கு காப்பி புடிக்காதுடா ..........லூசு போலீஸ் ........

ஒன்லி டீ,காலைல ராவா ஒரு பெக் விஸ்க்கி .....அவ்வளவுதான் ........

மக்களே அவன் பதிவ படிச்சி பார்த்துட்டு வந்து சொல்லுங்க ........இது காப்பியா அல்லது விஸ்க்கியான்னு

மங்குனி அமைச்சர் said...

என்ன இப்பவே தீபாவளி வாழ்த்து சொல்ற , ஊருக்கு போறியா ? இல்ல உள்ள போகப் போறியா ?

இம்சைஅரசன் பாபு.. said...

//இல்ல உள்ள போகப் போறியா //
உள்ள அனுப்புறதுலேய குறியா இருக்கீங்க

மங்குனி அமைச்சர் said...

பட்டாசு பேப்பர் கிடக்கிறதோ அவர்கள் தான் நிறைய பட்டாசு வாங்கி இருகாங்கன்னு அர்த்தம்.அதனால் பட்டாசு வாங்கும் பொது லக்ஷ்மி அவுட் ,குருவி அவுட் இப்படி பேப்பர் நிறைய சேரும்லா அந்த பட்டாசுகளை///

நாங்கல்லாம் பக்கத்து வீட்டு பட்டாசு குப்பைய யாருக்கும் தெரியாம நைசா அள்ளி எங்க வீடு முன்னாடி போட்டுக்குவோம்

மங்குனி அமைச்சர் said...

அதற்கப்புறம் காலேஜ் .பிரெண்ட்ஸ் கிட்ட அப்படியே ஒரு பொய் சொல்வோம் மக்கா நேத்து நைட் செம்ம பார்ட்டி சரியான டைட் (எல்லாம் ஒரு பில்டப் தான்)///

same blood

இம்சைஅரசன் பாபு.. said...

//நாங்கல்லாம் பக்கத்து வீட்டு பட்டாசு குப்பைய யாருக்கும் தெரியாம நைசா அள்ளி எங்க வீடு முன்னாடி போட்டுக்குவோம் //
இந்த கூத்தும் நடக்கும் அமைச்சரே ரொம்ப கேவலமா இருக்குமேன்னு எழுதலை

அருண் பிரசாத் said...

உண்மை.... தீபாவளி என்றாலே அது ஒரு தனி சந்தோஷம் தான்

NaSo said...

//இப்ப என்ன எல்லோரும் தீபாவளி கொண்டாடுறாங்க .எல்லாம் குளிச்சிட்டு பேருக்கு ரெண்டு பட்டாசு விட்டுகிட்டு தொலைகட்சி பெட்டி முன்பு இருகாங்க.அப்போ இருந்த தீபாவளி வேற இப்ப பசங்க கொண்டாடுற தீபாவளி வேற ...//

ஆமாங்க. இப்ப டிவில தான் எல்லாரும் தீபாவளி கொண்டாடுறாங்க.

செல்வா said...

//காலையில் சர்வ சாதரணமாக 5.30மணிக்கு எழுதிருப்பேன் ஆனால் தீபாவளி அன்று தூக்கமே வராது என்னோட நண்பர்கள் எழுந்திருக்கும் முன் நான் போய் முதலில் பட்டாசு //

நானும் கூட அப்படித்தான் ..!!

செல்வா said...

// அவர்கள் வீட்டில் சுட்டு இருக்கும் பலகாரங்களை சாபிட்டுக்கிட்டு வெளியே வருவோம் .
//

அதுக்குத்தானே போறது .!!

சௌந்தர் said...

நாங்க இப்படி தான் ஒரு தீபாவளி அப்போ நைட் 12 மணிக்கு பெரிய யாணை வெடி வெடிச்சோம் தூங்கிட்டு இருந்த எல்லாம் எழுந்துடாங்க நாங்க போய் ஒளிச்சிகிட்டோம் அந்த தீபாவளி நாங்க எப்போவும் மறக்க மாட்டோம்

செல்வா said...

//சரி எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
//

உங்களுக்கும் வாழ்த்துக்கள் .. சத்தமில்லாம பட்டாசு வெடிக்க என்னோட ஐடியாவ எல்லோருக்கும் சொல்லிக்கொடுங்க .!!

செல்வா said...

//எப்பொழுதுமே எனக்கு காப்பி புடிக்காதுடா ..........லூசு போலீஸ் ........//

ஆமாங்க ..இவருக்கு டீ மட்டும் தான் பிடிக்கும் ..!!

Anonymous said...

தீபாவளி ஆட்டம் ஆரம்பிச்சிருச்சுய்யா..டிவி விளம்பரம் பார்த்து கடுப்பா இருக்கு சும்மா இருந்தாலும் விட மாட்டாய்ங்க போல

Anonymous said...

காலையில் சர்வ சாதரணமாக 5.30மணிக்கு எழுதிருப்பேன் ஆனால் தீபாவளி அன்று தூக்கமே வராது என்னோட நண்பர்கள் எழுந்திருக்கும் முன் நான் போய் முதலில் பட்டாசு//
நானும்தான்..அதுதான் தீபாவளி..

சௌந்தர் said...

இந்த பயபுள்ள சின்ன வயசில் என்ன என்னை வேலை செய்து இருக்கு...

dheva said...

தம்பி சுவாரஸ்யமா இருந்துச்சுப்பா பதிவு.....


எறி வெடின்னு சொன்னீல்ல அத நாங்க வெங்காய வெடின்னு சொல்லுவோம்....

தீபாவளி வாழ்த்துக்கள்!

சௌந்தர் said...

எறி வெடின்னு சொன்னீல்ல அத நாங்க வெங்காய வெடின்னு சொல்லுவோம்....////

ஆமா நாங்களும் வெங்காய வெடி தான் சொல்வோம்

வெங்கட் said...

// அதை சுவரில் எறிவோம் அப்ப தானே
அவங்க வெளிய வருவாங்க (புரிஞ்சுகங்கப்பா ). //

ஆமா அவங்கன்னா யாரு.. " மாமனாரா..? "
' மாமியார் வீட்டுக்கு ' ஒரு தடவை கூட
கூட்டிட்டு போகலையா..?!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எறி வெடின்னு சொன்னீல்ல அத நாங்க வெங்காய வெடின்னு சொல்லுவோம்....//

நாங்க எறியுற பாபுவத்தான் வெங்காயம்னு சொல்லுவோம்..

எஸ்.கே said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

எங்கே பாம்பு மாத்திரை, மத்தாப்பு, புஷ்வானம், சங்கு சக்கரம், பென்சில், ஜாட்டி, இதைப் பற்றியெல்லாம் எழுதலை!

ஜெயந்த் கிருஷ்ணா said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன மக்கா தீபாவளிக்கு போனஸ் உண்டா....

கருடன் said...

@பாபு

மக்கா வர வர உங்க எழுத்து நடை நல்லா இருக்கு. சுவாரசியமா எழுதறிங்க. கூடிய சீக்கிறம் பிரபல பதிவர் ஆகிடுவிங்க.

பெசொவி said...

ரொம்..............................ப அட்வான்சா தீபாவளி வந்துட்டாப்ல இருக்கு?

இருந்தாலும் நீங்க எழுதினதைப் படிச்சவுடனே என் இளமைக் கால தீபாவளி நினைவுகள் திரும்பி விட்டன.

(ஹையா, ஜாலி, தீபவளிய ஒட்டி ஒரு பதிவுக்கு ஐடியா கிடைச்சிடுச்சு!)

பெசொவி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@பாபு

மக்கா வர வர உங்க எழுத்து நடை நல்லா இருக்கு. சுவாரசியமா எழுதறிங்க. கூடிய சீக்கிறம் பிரபல பதிவர் ஆகிடுவிங்க.//

அப்ப பாபுவை வச்சு ஒரு புனைவு எதிர்பார்க்கலாம் :)

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் பதிவை காப்பி அடித்து பட்டி டிங்கரிங் செய்த பாபு ஒழிக


http://sirippupolice.blogspot.com/2009/07/blog-post.html
yoov யோவ்,ஏன் ? ஏன்யா?

சி.பி.செந்தில்குமார் said...

பாபு,நீங்க காமெடில கலக்குவீங்க,இப்படி சீரியஸா எழுதறீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

இப்ப என்ன எல்லோரும் தீபாவளி கொண்டாடுறாங்க .எல்லாம் குளிச்சிட்டு பேருக்கு ரெண்டு பட்டாசு விட்டுகிட்டு தொலைகட்சி பெட்டி முன்பு இருகாங்க.அப்போ இருந்த தீபாவளி வேற இப்ப பசங்க கொண்டாடுற தீபாவளி வேற .....


ஐ அக்ரீ

இம்சைஅரசன் பாபு.. said...

வருகைக்கு நன்றி செந்தில் காமெடி தான் புடிக்கும் இப்பொழுது என் குழந்தைக்கு வங்கி கொடுக்கும் பொழுது பழசு நினைவுக்கு வருகிறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்கூர்லேயும் அது வெங்காய வெடிதான்! அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

தினேஷ்குமார் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
என்ன இந்த வருஷம் தனியாதான் பஹ்ரைன்ல கொண்டாடபோறேன்