Sunday, October 10, 2010

நண்பன்டா(சவால் சிறுகதை)

இடம் :HEB கிளினிக் சென்னை

A/C அறையில் மயக்கம் தெளிந்த நிலையில் இன்ஸ்பெக்டர் காமினி படுத்து இருக்கிறாள்.தன் சிந்தனை முழுவதும் அபர்ணாவை எப்படியாவது காப்பற்ற  வேண்டும் என்ற வேகம். மனதும் ,சிந்தனையும் படுத்து இருக்காதே விரைந்து செயல் படு என்று கூறுகிறது அனால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது .டாக்டரும் ,ரெண்டு நர்சுகளும்.காமினி அருகில் வந்து நிற்கிறார்கள் .

டாக்டர் காமினியை பார்த்து என்னாச்சு இன்ஸ்பெக்டர் ஏன் மயக்கம் போட்டு விழுந்தீர்கள் என்று கேட்டு கொண்டே ஊசி போடுகிறார் .

"காமினி ஒன்றுமில்லை டாக்டர் காலையில் சரியாக சாப்பிட வில்லை அதனால தான என்னோவோ தெரியலை "என்றாள்
ஆனால் மனம் முழுவதும் அபர்ணாவை எண்ணி கொண்டே இருக்கிறது.தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் ஆபத்து என்று மனம் கூறிக்கொண்டே இருக்கிறது

டாக்டர் "காமினி நீங்க ரெண்டு நாள் நல்ல ரெஸ்ட் எடுக்க வேண்டும்" .

காமினி சரி டாக்டர் .

டாக்டரும் ,நர்சுகளும் அறையை விட்டு சென்ற உடன்

காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
 
நேராக ஆட்டோ ஸ்டாண்டின் பக்கம் போய் ஆட்டோ என்றாள் .ஒரு ஆட்டோகாரன் வணக்கம அம்மா என்றான் .இவனுக்கு நான் இன்ஸ்பெக்டர் என்பது தெரிந்திருக்கிறது என்று மனதினுள் நினைத்து கொண்டாள்.

ஆமாம் .வீட்டுக்கு போப்பா என்றாள் காமினி ......

வீடு வந்தது காமினி பிறகு ஸ்டேஷன் க்கு  வந்து காசு வாங்கிகொள் என்றாள் .சரிம்மா என்று ஆட்டோகாரன் சென்று விட்டான்.

வீட்டிற்க்கு வந்து அழைப்பு மணியை அமுக்கினாள் .

தன் கணவர் பாஸ்கரன் வந்து கதவை திறந்தான்

என்னங்க எதாவது போன் வந்ததா   என்றாள் வீட்டினுள் வந்தவாறே.
கதவின் பின்னால் ஒருவன் நின்று கதவை மூடிக்கொண்டு 

 “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா."

சிவா வைர கடத்தல் கும்பலின் தலைவன் பரந்தாமனின் தம்பி ........காமினி மேடம் நீங்க நேற்று  பிடித்த வைரம் எங்கே என்றான் .

காமினி இது யாரு உன் நண்பர் என்று சொன்னான் .
"காமினி மேடம் வர சொன்னாங்க  வீட்டுக்கு என்றான்" இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவாய் என்று கூறினான் அதனால் தான்  உள்ளே இருக்க சொன்னேன் என்று எதுவும் தெரியாத தன் அப்பாவி கணவன் பாஸ்கரன் சொன்னார் .

என் மகள் அபர்ணாவை நான் பார்க்கணும் பார்த்தால் தான் நான் வைரத்தை உன்னிடம் ஒப்டைபேன் என்றாள் ....

பாஸ்கரன் "மகளை கடத்தி விட்டார்களா " என்றான் கண் கலங்கியபடி.

நீங்க அமைதியாக இருங்கள் யாருக்கும் எந்த தகவலும் கொடுக்கவேண்டாம் என் துறையையும் சேர்த்து தான் சொல்கிறேன் ....என்றாள் காமினி ....
சரி என்றான் பாஸ்கரன் ........

காமினி சிவாவுடன்  ஆட்டோ ஸ்டான்ட் நோக்கி நடந்து சென்றாள் .
"ஆட்டோ " என்றான் சிவா 
ஆட்டோ காரன் வந்தான், தான் வீடு வந்த அதே ஆட்டோகாரன் .வணக்கம் அம்மா என்றான்.

இவன் யாரு அந்த ஸ்டாண்டில் நின்றே அதே ஆட்டோகாரன் இங்கும் நிற்கிறான் என்று எண்ணினாள் .ஒரு வேளை இவனோட ஆளாகவே இருக்கலாம் .
"சிவா இடத்தை சொல்லுங்க என்றாள் " காமினி .
காமினியின் எண்ணம் முழுவதும் தான் செல்ல மகளுக்கு ஒன்றும் ஆகிற  கூடாது என்றே எண்ணமே வியாபித்திருந்தது .

ஆட்டோ சிவா சொன்ன வீட்டின் அருகில் போய் நின்றது .சிவா ஆட்டோவுக்கு 100 ரூபாய் நீட்டினான் .ஆட்டோகாரன் சென்றவுடன்  போய் கதவை தட்டினான் .

கதவை திறந்தவுடன்  உள்ளே இருவரும் சென்றனர் .

வீட்டினுள் பத்து பேர் இருந்தனர்.உள்ளே இருந்து  பரந்தாமன் வந்தான் .

"வாங்க இன்ஸ்பெக்டர் காமினி .வைரம் எங்கே என்றான் " பரந்தாமன்

தன் ஹான்ட்பாக்கில் இருந்த வைரத்தை எடுத்து காட்டினால் காமினி

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"என் மகளை முதலில் என்னிடம்  ஒப்பதைதால்  தான் வைரத்தை தருவேன் "என்றாள்

பரந்தாமன் சிரித்தான் .நீ என் இடத்தில் தன்னம் தனியாக இருக்கிறாய் .என்னால் உன்னை எதுவும் செய்ய முடியும் ஆனால் எனக்கு வைரம் தான்  முக்கியம் அது பல கோடி ரூபாய் மதிப்புள்ளது.என்றான்

உள்ளே இருந்து ஒருவன் அபர்ணாவை அழைத்து  கொண்டு வந்தான் ......
"அம்மா " என்று ஓடிவந்தாள் அபர்ணா

தன் குழந்தையை அழைத்து  கொண்டு வெளியே வரும் வேளையில்

கதவை உடைத்து கொண்டு 20போலீஸ் உள்ளே வந்து அனைவரயும் சுற்றி வளைத்து கைது செய்தது .

கூடவே அந்த ஆட்டோகாரனும் நின்றான் தன் கணவருடன் ............

பாஸ்கரன் தன் குழந்தையை தூக்கி கொண்டு .........
இவன் நம் பக்கத்துக்கு தெருவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுகிறான் .என் பள்ளி நண்பன்

உன்னை நன்றாக  தெரியும் .ஒரு சவாரியை  ஆஸ்பத்திரியில் இறக்கி விட வந்தவன் வேற சவாரி கிடைக்காத என்று பார்த்த பொழுது நீ கூப்பிட்டு இருக்கிறாய் .நேராக வந்து இறக்கி விட்டான். பின்பு அதே ஆட்டோவில் சிவாவும் ,நீயும் போய் இருக்கீங்க.
போகும் பொது உன் முகம் ரொம்ப சோகமாக இருப்பதாய் பார்த்து விட்டு நேரா  நம் வீட்டுக்கு வந்து விஷத்தை கேட்டான் .நான் சொல்லமாட்டேன் என்றேன் அவன் நான் உன் "நண்பன்டா"என்ன விசயம் என்று வற்புறுத்தினான் .நானும் சொல்லிவிட்டேன் .

உடனே அவன் என்னையும் அதே ஆட்டோவில் ஏற்றி கொண்டு உன் B2 போலீஸ் ஸ்டேஷன்ல போய் எல்லா  விசயத்தையும் கூறினான் .

அவர்கள் இடத்தை மட்டும் காட்டு மற்றதை நங்கள் பார்த்து கொள்கிறோம் என்றனர் .

இதோ அனைவரும் கைது செய்ய பட்டனர் .....

காமினி ஆட்டோ காரனிடம் உனது பேர் என்றாள்

"பாபு "என்றான்

பாபு இன்றில் இருந்து நீ என் உடன்பிறவா  சகோதரன் என்றாள் .

பாஸ்கரனுக்கு தன் நண்பனால் தன் குழந்தை பத்திரமாக கிடைத்தது ........


25 comments:

மங்குனி அமைசர் said...

நீங்களும் போட்டில குதிச்சிடிகளா , வெற்றி பெற வாத்துக்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லாருக்கு தலைவரே....சவால்ல ஜெயிச்சிட்டீங்க..

மங்குனி அமைசர் said...

"பாபு "என்றான் ////

அந்த சிநிமாகாரவுங்க தான் இப்படி அவுங்களுக்கு அவுங்களே விளம்பரம் செய்துகிர்றாங்க , நமக்கு இந்த விளம்பரம் தேவையா , ஹி.ஹி.ஹி.

அருண் பிரசாத் said...

எல்லாம் ஓகேதான்.... ஆனா, பாபு அவ்வளவு அறிவாளியா?

ப.செல்வக்குமார் said...

அடடா வடை போச்சே ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துகள் இம்சை! கதை நன்றாக வந்திருக்கிறது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///காமினி ஆட்டோ காரனிடம் உனது பேர் என்றாள்


"பாபு "என்றான் ///


கொழுப்ப பாரு, எகத்தாளத்தப்பாரு!

ப.செல்வக்குமார் said...

எழுத்து நடை மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்க அண்ணா .,
நல்லா இருக்கு..!! அப்புறம் நான் வலது சொல்ல மாட்டேன் ..
ஏன்னா நானும் கலதுக்கறேன்ல.. ஹி ஹி ஹி .

சௌந்தர் said...

என்ன கதை எல்லாம் எழுத தெரியுமா உங்களுக்கு சொல்லவே இல்லை. கதை நல்லா இருக்கு பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்

ப.செல்வக்குமார் said...

/./நீங்களும் போட்டில குதிச்சிடிகளா , வெற்றி பெற வாத்துக்கள்//
என்னது குதிச்சீங்களா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உனக்குள்ள இவ்ளோ அறிவா? நான் எழுதி கொடுத்த இந்த கதைல ஆட்டோகாரன் பேரு பாப்பு அப்டின்னுதான் போட்டிருந்தேன். அதை திருடி பாபு ஆக்கிட்டியே. கள்ளா!!!

Balaji saravana said...

வாழ்த்துக்கள் பாபு!

இம்சைஅரசன் பாபு.. said...

@ மங்குனி அமைசர்
அமைசர் கையில் இருந்து பரிசு வாங்க வேண்டும் என்று ஒரு நப்பாசை தான்

இம்சைஅரசன் பாபு.. said...

//நல்லாருக்கு தலைவரே....சவால்ல ஜெயிச்சிட்டீங்க.. //
இந்த ஒரு வார்த்தை போதும் நன் ஜெயிச்சதுக்கு சமம்

இம்சைஅரசன் பாபு.. said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
//"பாபு "என்றான்
கொழுப்ப பாரு, எகத்தாளத்தப்பாரு!//

பாபு என்றாலே நல்ல நண்பன் என்று அர்த்தம்

இம்சைஅரசன் பாபு.. said...

@அருண் பிரசாத்
//எல்லாம் ஓகேதான்.... ஆனா, பாபு அவ்வளவு அறிவாளியா?//
என் திறமையின் மீது சந்தேகம் இருந்தால் சோதித்து பாருங்களேன் ,"உங்களுக்கு அறிவு இருந்தால் "(திரு விளையாடல் வசனம் ")

இம்சைஅரசன் பாபு.. said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// நான் எழுதி கொடுத்த இந்த கதைல ஆட்டோகாரன் பேரு பாப்பு அப்டின்னுதான் போட்டிருந்தேன். அதை திருடி பாபு ஆக்கிட்டியே. கள்ளா!!! //

புப்ளிச்ள போட்டு உடைசிட்டேய பரட்டை!!!!!
பாதி பரிசு உனக்கு தான்.(யார்கிட்டேயும் சொல்லிட்டு இருகிறதே )

siva said...

பாபு என்றாலே நல்ல நண்பன் என்று அர்த்தம்..

repeatu....

annaey kalakittenga ponga...

evlo theramaigalai engey olithu vaithu erunthenga?

enimey varam oru sirukathai eluthunga..

TERROR-PANDIYAN(VAS) said...

kadai nalla irukku.... parisu kidaikka vazthukal.... urgenta comment poda sonna ippadidhan poduven.. idhu thevaya idhu thevaya?? .... :)))))

siva said...

"(திரு விளையாடல் வசனம் ")
?????

வெறும்பய said...

அட இங்கயும் சவாலா... ம்ம் நடக்கட்டும்...

எஸ்.முத்துவேல் said...

super post nice

Madhavan said...
This comment has been removed by the author.
Madhavan said...
This comment has been removed by the author.
Madhavan said...

நல்லாத்தான் இருக்கு
என்னோட கதையையும் > படிச்சிட்டு கமெண்டு போடுங்க.. இன்ட்லில > ஒட்டு போடுங்க..
நன்றி