Thursday, January 13, 2011

பல்போ......!பல்பு ....!

                                                                     


"சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி" என்று ஒரு பழமொழி உண்டு .அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ எனக்கு பொருந்தும் .

பதிவுலகத்துல நிறய பதிவு இப்போ வரத்து இல்லை .அதனால நான் என் பொண்ணுக்கு  பாடம் சொல்லி கொடுப்போம்  என்று என் பொண்ணுகிட்ட போனேன் .என்ன படிக்கிறா என்று பார்த்தேன் .

SOCIAL சயின்ஸ் என் பொண்ணு படிச்சிட்டு இருந்தா .அதுல
HINDU WORSHIP IN TEMPLE 
CHRISTIAN WORSHIP IN CHURCH
MUSLIM WORSHIP IN MOSQUE
SIKHS WORSHIP IN GURUDVAR
இப்படி இருந்துச்சு நான் வாசித்து சொல்லி கொடுத்து கொண்டு இருந்தேன் .என் பொண்ணு என்னை பார்த்து

என் மகள்: அப்பா WHORSHIP னா என்னப்பா என்றால் ?.

நான்: உன்னை காலைல ஸ்கூல் போகும் முன்னாடி என்ன சொல்வேன் என்று கேட்டேன்

என் மகள்:  PRAY பண்ண சொல்லுவீங்கன்னு சொன்னாள்..!


நான்:அதை  தமிழ் சொல்லுன்னு சொன்னேன்


என் மகள்:  சாமி கும்பிட சொல்லுவீங்கன்னு சொன்னாள்..!


நான்: உடனே அது தான் நாம ஹிந்து அதுனால கோவில்ல போய் தானே சாமி கும்பிடுவோம் அதான் worship அப்படின்னு சொன்னேன்


என் மகள்: அப்போ prayer  சொல்ல கூடாதான்னு கேட்டா ?


                                           பல்பு !!!!!!


நான்:இல்லை மக்கா கோவில்ங்கறது எல்லோரும் போய் சாமி கும்பிடுறோம் அதனால WORSHIP.இங்க வீட்டுல கும்பிட்ட PRAYER இப்படி சொன்னேன் (சமாளித்தேன் )


என் மகள்:அப்போ ஸ்கூல் ல prayer song சொல்லுறாங்களே அது எப்படின்னு கேட்டா?
                                          
                                                 பல்பு !!!!!

முடியலை ....போ மக்கா இப்படி என்னையே குழப்பிட்டேயேன்னு சொல்லிட்டு எடத்தை காலி   பண்ணினேன்
ஐயோ.....ஐயோ ........(இப்படி தான் நானே வாயை கொடுத்து வாய்ல புண்ணோட போய் சேருகிறேன் ......)
ஆண்டாவா ஏன் என்னை இப்படி சோதிக்கிறன்னு PRAY பண்ணவா?WORSHIP பண்ணவா  ? யாராவது பதில் சொல்லுங்க ............!


எலேய் யாரும் ஓடி போக கூடாது ..........அங்க யாரோ ஓடி போறாங்க .........எலேய் நின்னு பதில் சொல்லிட்டு போ .............

டிஸ்க்கி 1 :சரி WORSHIP ,PRAYER இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு .ஆனால் அதை எப்படி சொல்லணும்ன்னு தெரியலை .உடனே பதிவுலகின் ஆன்மீக சக்கரவர்த்தி ,ஹிப்ப்று மொழி புலவர் தேவா அண்ணன் கிட்ட கேட்டேன் .ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சொன்னார் .ஆனால் எனக்கு எப்படி அவளுக்கு விளக்கி சொல்லன்னு இன்னும் தெரியலை .........!
டிஸ்க்கி 2 : எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ......
( பொங்கல் பொங்குவது போல .....நிறைய பல்பு வாங்க வாழ்த்துக்கள்ன்னு  சொல்ல கூடாது ஓகே  .......)

32 comments:

சௌந்தர் said...

WORSHIP...வழிபடுவது...

prayer ஒன்று கூடி பிரார்த்தனை செய்வது..இப்படி தான் நினைக்குறேன் இதற்கும் மேல் உங்க பொண்ணு என் கிட்ட கேள்வி கேட்டா நான் ஆல் இல்லை

ரஹீம் கஸ்ஸாலி said...

சௌந்தர் said...
WORSHIP...வழிபடுவது...
prayer ஒன்று கூடி பிரார்த்தனை செய்வது.

அதே....

அருண் பிரசாத் said...

Worship - வழிபாடு
Prayer - வேண்டுதல், பிரார்தனை


கடவுளை எதையும் கேட்காமல் மன திருப்தியுடன் கும்பிடுவது Worship

கடவுளிடன் தைரியம் கொடு, வல்லமை கொடு என கேட்டு செய்வது Prayer

சௌந்தர் said...

ஆனாலும் உங்க பொண்ணு நல்லா தான் கேள்வி கேக்குறா நான் இங்க கமெண்ட் வந்து சொன்னதால் தப்பித்தேன் நேரிலோ போன் சொன்ன அவ பதில் கேள்வி கேட்ப்பா...என்னால் பதில் சொல்ல முடியாது அப்பறம் நானும் பல்பு வாங்கினேன் பதிவு போடனும்

அருண் பிரசாத் said...

காலங்காத்தால wikipedia ல தேட வெச்சிட்டீங்களே மக்கா

இருந்தாலும் நீங்க ரொம்பத்தான் பாவம்

அருண் பிரசாத் said...

இப்படி கேள்வி கேட்டா நான் இந்தியாவுக்கே வரலை..... ஆளை விடுங்க

karthikkumar said...

sema palbu hi hi

ஆர்வா said...

பல்பானந்தா பல்பானந்தா பல்பானந்தா பல்பு..
பாபு பெற்ற பல்பு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பொங்கல் வாழ்த்துக்கள்..

சக்தி கல்வி மையம் said...

உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

dheva said...

ஆயிரம் பல்பு வாங்கிய அபூர்வ சிகாமணி என் அன்பு தம்பி பாபு...சமீப காலங்களாக பல்புகலை வாங்கி குவித்துக்கொண்டிருக்கிறார்...

தம்பியோடு நேற்று நடந்த உரையாடலின் முடிவில் ஒரு பல்பு கம்பெனி ஆரம்பித்தால் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ண்டு உடனே அரம்பிக்க ஒத்துக் கொண்டார்.

இந்த பல்பு கம்மெனியின் முக்கியஸ்தரான ஹரிணியும் நானும்....தம்பிக்கு வாரம்..10,000 பல்புகள் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். ஹரிணியின் கணிப்பு படி தம்பி இன்னும் கூட பல்புகள் கூடுதல் வாங்குவார் என்று கருதுகிறோம்.........!

பின் குறிப்பு: சிரித்து சிரித்து வயிறு வலிக்குது தம்பி..............சச் எ கிளவர் டார்லிங் பா ஹரிணி...!

Anonymous said...

tution teacher?

செல்வா said...

இரண்டுக்கும் வித்த்தியாசம் நான் சொல்லட்டுமா ?

Kousalya Raj said...

ரொம்ப நல்லா இருக்கு பாபு...! நம்ம பசங்க கிட்ட பல்பு வாங்கிறதே நமக்கு வேலையா போச்சு...

என்ன ஒரு புத்திசாலித்தனமா கேட்கிறா ?? ப்ச்...உங்க பொண்ணு உங்களை மாதிரி இல்லபா...

தொடரட்டும் அவஸ்தைகள்... பெருகட்டும் பல்புகளின் எண்ணிக்கை...!!

மாணவன் said...

// கோமாளி செல்வா said...
இரண்டுக்கும் வித்த்தியாசம் நான் சொல்லட்டுமா ?//

யப்பா ராசா போதும் நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்

வித்தியாசம் எல்லோரும் சொல்லிட்டாங்க....ஹிஹி

மாணவன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்க செல்லம் ஹரிணிக்கும் சொல்லிடுங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருண் சொன்னது சரியான விளக்கம். ஏண்டா மக்கா, உனக்கு தனியா ஒரு ட்யூசன் வெக்கனும் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாருங்க மக்களே... படிக்கற காலத்துல ஒழுங்கா படிச்சுடுங்க, இல்லேன்னா பாருங்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்குன்னு ......

எஸ்.கே said...

கடவுளே நான் இனிமே பல்பு வாங்க கூடாதுன்னு நீங்க வேண்டிகிட்டா அது Prayer!

கடவுளே நாங்க இனிமே பல்பே வாங்க கூடாது பல்பு வாங்குறவங்க எல்லோரும் சேர்ந்து வேண்டிகிட்டா அது Worship!

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
பல்பின் வெளிச்சம்போல் வாழ்க்கை பிரகாசிக்கட்டும்!

கருடன் said...

//அருண் சொன்னது சரியான விளக்கம். ஏண்டா மக்கா, உனக்கு தனியா ஒரு ட்யூசன் வெக்கனும் போல?//

பன்னிகுட்டி சொன்னது சரியான விளக்கம்... :)

Unknown said...

ஹாப்பி பொங்கல்
ஹாப்பி மாட்டுப்பொங்கல்
ஹாப்பி கண்னும் பொங்கல்

கடவுளை எதையும் கேட்காமல் மன திருப்தியுடன் கும்பிடுவது Worship..ok..

கடவுளிடன் தைரியம் கொடு, வல்லமை கொடு என கேட்டு செய்வது Prayer..ok..

Unknown said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
பல்பின் வெளிச்சம்போல் வாழ்க்கை பிரகாசிக்கட்டும்!//

"SURIYANAI POLAVUM-"

பிரகாசிக்கட்டும்

வெங்கட் said...

// கடவுளே நான் இனிமே பல்பு வாங்க கூடாதுன்னு நீங்க வேண்டிகிட்டா அது Prayer!

கடவுளே நாங்க இனிமே பல்பே வாங்க கூடாது பல்பு வாங்குறவங்க எல்லோரும் சேர்ந்து வேண்டிகிட்டா அது Worship!//

Repeattuuuuuuuuu..

சி.பி.செந்தில்குமார் said...

பாபு பொங்கல் அன்னைக்கு பதிவு போடலையா?பல்பா?

சுபத்ரா said...

பொங்கல் பொங்குவது போல .....நிறைய பல்பு வாங்க வாழ்த்துக்கள் அண்ணா.. :-)

சுபத்ரா said...

//கடவுளே நான் இனிமே பல்பு வாங்க கூடாதுன்னு நீங்க(ஒருவர்) வேண்டிகிட்டா அது Prayer!

கடவுளே நாங்க இனிமே பல்பே வாங்க கூடாது பல்பு வாங்குறவங்க எல்லோரும்(நிறையபேர்) சேர்ந்து வேண்டிகிட்டா அது Worship!//

மீ டூ ரிப்பீட்டூ :-)

Madhavan Srinivasagopalan said...

இது தேவையா..?
டவுட்டு கேட்டாலே கஷ்டம்தாம்..
இதுல இவரு தேடித் போயி டவுட்ட வாங்கிக் கட்டிக் கிட்டாராம்..

பெசொவி said...

சூரியன் கிழக்கே உதிக்கிறதும் பாபு பல்பு வாங்கறதும் ஒண்ணு, இதுக்கெல்லாம் போயி ஒரு போஸ்டு.
என்ன கமென்ட் போடுவது என்று தெரியாமல் எதையோ போடுவோர் சங்கம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

மறுபடியும் பல்பா.... போ மக்கா போய் நல்ல பள்ளிகூடத்தில சேர்ந்து நல்லா படிச்சு புள்ளைக்கு சந்தேகத்த தீர்க்கிற வழிய பரு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மறுபடியும் பல்பா.... போ மக்கா போய் நல்ல பள்ளிகூடத்தில சேர்ந்து நல்லா படிச்சு புள்ளைக்கு சந்தேகத்த தீர்க்கிற வழிய பரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Worship னா என்னனு தெரியாதா மூதேவி. டைடானிக் Ship மாதிரி அதுவும் ஒரு ship

ஜில்தண்ணி said...

bulb :)